என் மலர்
அழகுக் குறிப்புகள்
வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு முக அழகினைக் கூட்டும் வகையிலான உருளைக் கிழங்கு பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முக அழகினைக் கூட்டும் வகையில் பலவகையான மாஸ்க்குகளை நாம் பார்த்துள்ளோம். அந்தவகையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு முக அழகினைக் கூட்டும் வகையிலான உருளைக் கிழங்கு பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு- 3
பால்- 2 ஸ்பூன்
ஓட்ஸ்- 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
செய்முறை :
1. உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும். ஓட்ஸினை பொடித்துக் கொள்ளவும்.
2. அடுத்து இதனுடன் பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.
3. 30 நிமிடங்கள் இதனை ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.
இந்த மாஸ்க்கினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிட்டு மசாஜ் செய்யவும். அதன்பின்னர் முகத்தினை குளிர்ந்தநீரால் கழுவவும். முக அழகானது கூடும்.

ரோஜா மலர்கள் கூந்தலை அலங்கரித்து அழகை ஆராதிப்பதோடு அல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
ரோஜா மலர்கள் கூந்தலை அலங்கரித்து அழகை ஆராதிப்பதோடு அல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ரோஜாவின் அழகும், மணமும் மனதிற்கு உற்சாகம் தரும். நோய் தொற்றுக்களில் இருந்தும் பாதுகாக்கும். மலச்சிக்கல், கருவளையம், மாதவிடாய் போன்ற பிரச்சினைகளை சமாளிக்கவும் உதவும். சிவப்பு ரோஜா இதழ்களில் உள்ளடங்கி இருக்கும் ஐந்து ஆரோக்கிய நன்மைகள்:
ரோஜா இதழ்களில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினையை தவிர்க்கலாம். ரோஜா இதழ்கள் சிலவற்றை ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். இரவு தூங்க செல்லும்போது அதனை பாலுடன் கலந்து பருகவும். காலையில் எழும்போது வயிறு இதமாக இருக்கும். தொடர்ந்து சில நாட்கள் ரோஜா இதழ்கள் கலந்த பால் பருகிவந்தால் மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம்.
சிலர் சிறுநீர் பாதையில் நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவார்கள். ரோஜா இதழ்கள், பாக்டீரியா நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. யோனி அல்லது சிறுநீர் பாதையில் படிந்திருக்கும் பாக்டீரியாக்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி நோய் தொற்று பரவாமல் குணப்படுத்த உதவும். ரோஜா இதழ்களை கொதிக்கும் நீரில் வேகவைத்து வடிகட்டி பருகலாம்.
சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது. சில சமயங்களில் முன்கூட்டியோ அல்லது தாமதமாகவோ மாதவிடாய் சுழற்சி இருந்து கொண்டிருக்கும். மாதவிடாய் செயல்முறையை சீராக்கி இயல்பு நிலையை தக்கவைப்பதற்கு ரோஜா இதழ்கள் துணைபுரியும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குறைக்கவும் உதவும். தினமும் காலையிலும், மாலையிலும் ரோஜா இதழ்கள் சிலவற்றை சாப்பிட்டு வந்தால் போதும்.
கண்களுக்குக் கீழே தோன்றும் கருவளையங்களால் அவதிப்படுபவர்களுக்கும் ரோஜா இதழ்கள் நன்மை பயக்கும். இதில் இருக்கும் வைட்டமின் சி சிறந்த ஆக்சிஜனேற்றியை போல் செயல்படக்கூடியது. கண்களில் படர்ந்திருக்கும் கருவளையங்களை குணப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றும். ரோஜா இதழ்களை நன்றாக அரைத்து பசைபோல் குழப்பி கருவளையங்கள் மீது தடவி அரைமணி நேரம் உலர வைத்துவிட்டு கழுவலாம். ரோஜா இதழ்களை அரைத்து பாலில் கலந்து முகத்திலும் தடவலாம். சருமம் பளிச்சிடும்.
ரோஜா இதழ்களை உட்கொள்வதன் மூலம் சளி, இருமல் போன்ற பருவகால நோய் தொற்றுகளை தவிர்க்கலாம். ரோஜா இதழ்களை நன்றாக கழுவி தினமும் சாப்பிடலாம். மில்க் ஷேக்கில் கலந்தும் பருகலாம்.

பெண்களின் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி நிரந்தர தீர்வு காண முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு - 1
செய்முறை :
ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக் கருவை தனியாக எடுத்து, அதில், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் பிரகாசமாக இருக்கும்.
* எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.
* எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
* ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
* ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.

அத்திப்பழம், ஆரோக்கியத்தை மட்டுமல்ல அழகையும் மெருகூட்டக்கூடியது. கூந்தலுக்கும் அத்திப்பழத்தை பயன்படுத்தலாம். எந்தெந்த வகைகளில் அத்திப்பழங்களை உபயோகப்படுத்துவது என்று பார்ப்போம்.
அத்திப்பழம், ஆரோக்கியத்தை மட்டுமல்ல அழகையும் மெருகூட்டக்கூடியது. சில அழகு சாதனப் பொருட்களில் அத்திப்பழம் பயன்படுத்தப்படுகிறது. அது சரும பிரச்சினைகளை சரி செய்வதோடு புத்துயிர் பெறச்செய்யும் தன்மையையும் கொண்டிருக்கிறது. கூந்தலுக்கும் அத்திப்பழத்தை பயன்படுத்தலாம். எந்தெந்த வகைகளில் அத்திப்பழங்களை உபயோகப்படுத்துவது என்று பார்ப்போம்.
சருமத்தில் சுருக்கம், கோடுகள், கருவளையம் போன்ற பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும்போது முகத்தின் அழகு பாதிப்புக்குள்ளாகும். சருமத்திற்கு பளபளப்பு ஏற்படுத்திகொடுக்கும் தன்மை அத்திப்பழத்திற்கு உண்டு. எப்போதும் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும். மெலனின் உற்பத்தியை குறைத்து சரும அழகை பேணிக்காக்கவும் வழிவகை செய்யும்.
சருமத்தில் திட்டுக்கள், முகப்பருக்கள், சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் அத்திபழத்தை பயன்படுத்தலாம். அத்தி பழம் ஒன்றை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பின்னர் விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் மூன்று சொட்டு பாதாம் எண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் மென்மையாக தடவிவிட்டு உலர்ந்ததும் நீரில் கழுவி விடவும். வாரத்திற்கு இருமுறை செய்துவந்தால் சருமம் பிரகாசிக்க தொடங்கும்.
முகத்தில் கொப்பளங்களோ, முகப்பருக்களோ இருந்தால் அத்திப்பழத்தை நேரடியாகவே உபயோகிக்கலாம். மருக்களை நீக்கும் தன்மை அத்திப்பழத்திற்கு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அத்தி பழத்தை நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து மருவில் தடவிவிட்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம்.
முகம் சட்டென்று பளபளப்புடன் மின்னுவதற்கு அத்திப்பழத்தை உபயோகப்படுத்தலாம். ஒரு அத்திப்பழத்தை நன்றாக அரைத்து அதனுடன் சிறிதளவு தயிர், தேன் கலந்து முகத்தில் பூச வேண்டும். கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வழக்கத்தை விட சருமம் பிரகாசத்துடன் காட்சியளிப்பதை உணரலாம்.
ஊட்டச்சத்து குறைபாடுகள்தான் முடி உதிர்வதற்கு முதன்மை காரணமாக இருக்கிறது. அத்திப்பழத்தில் மெக்னீசியம், வைட்டமின் சி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முடி வளர்ச்சிக்கு அவசியமானவை. உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்யும். கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் இந்த பழத்தை சாப்பிடலாம்.

மணப்பெண் அலங்காரத்திற்கு தயாராகும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி பிரபல அழகுக்கலை நிபுணர் அளித்திருக்கும் பதில்கள்...
திருமணத்திற்கு தயாராக இருக்கும் அனைத்து பெண்களுக்குமே மணப்பெண் அலங்கார கனவு ஒன்று மனதுக்குள் இருந்துகொண்டிருக்கும். திருமணம் பேசி முடித்து, அவர்கள் மணப்பெண்ணாகுவார்கள். முகூர்த்த நாளில் அந்த தனித்துவமான அலங்காரத்தில் ஜொலிக்க ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படுகிறார்கள்.
மணப்பெண் அலங்காரத்திற்கு தயாராகும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி பிரபல அழகுக்கலை நிபுணர் அளித்திருக்கும் பதில்கள்:
அலங்காரத்துக்கு தயாராகும் முன்பு மணப்பெண் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன?
திருமணத்திற்கு முன்பு வழக்கமாக செய்யும் பேஷியல், கிளன் அப் போன்றவைகளை செய்தால்போதும். வழக்கத்திற்கு மாறாக முகத்தில் ஏதாவது மேக்கப் முறைகளை கையாண்டால் அது பருவோ, வேறுவிதமான பாதிப்புகளோ உருவாக காரணமாகிவிடும். அதனால் திருமணத்திற்கு முன்பு தேவையற்ற அழகுப் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. மணப்பெண் அலங்காரம் செய்வதற்கு முன்பு முகத்தை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். ஒயிட் ஹெட்ஸ் போன்றவை இருந்தால் அதையும் சுத்தப்படுத்தவேண்டும்.
மணநாள் மணப்பெண்ணுக்கு மிக முக்கியமான நாள் என்பதால் அன்று மேக்கப்பில் கூடுதலாக என்னவெல்லாம் செய்யலாம்?
மணமகளின் சருமத்தின்தன்மை மற்றும் அவரது விருப்பத்தை பொருத்தே அலங்கார முறைகளை தீர்மானிக்கவேண்டும். அழகுக்கலை நிபுணரின் தனிப்பட்ட விருப்பங் களுக்கு செவிசாய்த்துவிடக்கூடாது. முதலில் ஒரு முறை டிரையல் மேக்கப் செய்து பார்க்கலாம். மணப்பெண்ணின் முகம் மற்றும் முக உறுப்புகளின் தன்மைக்கு ஏற்ப டிரையல் மேக்கப்போட்டு நிறைகுறைகளை அறிந்த பின்பு, முழு அலங்காரத்திற்கு தயாராகலாம். மணப்பெண் அலங் காரத்தில் கூடுதலாக என்னவெல்லாம் செய்யலாம் என்பதைவிட சிறப்பாக எப்படி செய்யலாம் என்றுதான் சிந்திக்கவேண்டும்.
திருமண நாளன்று மேக்கப் அதிக நேரம் நிலைத்து நிற்க என்ன செய்யலாம்?
சீதோஷ்ணநிலை, நேரம் போன்றவைகளை கருத்தில்கொண்டு அதற்கு தக்கபடிதான் அழகுக்கலை நிபுணர் மேக்கப் செய்வார். பவுண்ட்டேஷன் ஸ்ட்ராங்காக கொடுத்து, மேக்கப் செய்து முடித்து ‘பிக்ஷிங் ஸ்பிரே’யும் கொடுத்தால் அதிக நேரம் மேக்கப் நிலைத்து நிற்கும்.
மணப்பெண் அலங்காரத்தில் புதிய டிரென்ட் என்ன?
காலத்திற்கு ஏற்ப டிரென்ட் மாறிக்கொண்டிருக்கிறது. இந்து மதத்தை சேர்ந்த மணப்பெண்கள் கண் அலங்காரத்தில் ‘டார்க்’கை கடைப்பிடிக்கிறார்கள். நியூடு லிப்ஸ் அலங்காரத்தை விரும்புகிறார்கள். கிறிஸ்தவ மணமகள்கள் நியூடு ஐ மேக்கப்பும், டார்க் லிப்ஸ் அலங்காரமும் செய்கிறார்கள். முஸ்லிம் சமூக மணப்பெண்கள் அரபிக் டச் கொண்ட மேக்கப்பை தேர்ந்தெடுக்கிறார்கள். முன்பு நீட் அண்ட் கிளன் ஆன ஹேர்ஸ்டைலை விரும்பினார்கள். இப்போது மெஸ்ஸி ஹேர்ஸ்டைலை பெண்கள் அதிகம் தேர்வுசெய்கிறார்கள்.
மணப்பெண் அலங்காரம் செய்யும்போது முக்கியமாக கவனிக்கவேண்டிய அம்சங்கள் என்ன?
அதிகம் வியர்க்கும் தன்மைகொண்ட பெண்களும், அலர்ஜியை ஏற்படுத்தும் சென்சிடிவ் ஸ்கின் கொண்ட பெண்களும் முதலிலே அழகுக்கலை நிபுணரிடம் கூறி தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் மேக்கப் போட்டு முடித்த பின்பும் தனிக்கவனம் செலுத்துவது அவசியம். அவர்களுக்கு வியர்த்தால், கைக்குட்டை வைத்து துடைத்துவிடக்கூடாது. அதற்குரிய ஸ்பான்ஞ் போன்றவைகளை அழகுக்கலை நிபுணரிடமும் கேட்டு வாங்கி பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
கண்களுக்கு எத்தகைய மேக்கப் சிறந்தது?
இப்போது கிளிட்டர் லுக்கை பெண்கள் விரும்புவதில்லை. மேட் பினிஷ் இன் ஐ ஷேடோவை பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். கண்மை தீட்டும்போது ஸ்மோக்கி லுக்கை விரும்புகிறார்கள். இவை சிறிய கண்களையும் சற்று பெரிதாக்கிக்காட்டும்.
முகத்திற்கு மேக்கப் செய்யும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன?
முகத்திற்கு மேக்கப் செய்யும்போது ஸ்கின் டோனுக்கு பொருத்தமான டோனை பயன்படுத்தவேண்டும். நல்ல நிறமாக தோன்ற விரும்பினால் ஒரு ஷேடை மட்டும் கூடுதலாக பயன்படுத்தலாம். யதார்த்தமான கலரைவிட அதிகமாக பளிச்சென்று காட்டினால் அது ஓவர் மேக்கப்ஆகிவிடும். சருமத்திற்கு பொருந்திவரக்கூடிய பவுண்ட்டேஷனை கொடுக்கவேண்டும். அதே ஷேடை கழுத்திற்கும், கைகளுக்கும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

இளம் வயதிலேயே ஒரு சிலருக்கு சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை ஏற்படுத்தி விடும். வறட்சியான தேகம், எண்ணெயில் பொரித்த உணவுகள். பாஸ்ட் புட் கலாச்சாரம் போன்றவைகள் இளமையிலேயே முகச்சுருக்கத்தை ஏற்படுத்திவிடும்.

அதேபோல் தேவையற்ற விசயங்களுக்கு கவலைப்படுவதும் முகச்சுருக்கம் ஏற்பட காரணமாகிறது. எனவே முகச்சுருக்கத்தைப் போக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள். காய்ச்சி ஆறவைத்த பால் உடன் இரண்டு டீஸ்பூன் அதனுடன் நான்கு துளி எலுமிச்சை சாறு கலந்து இரவு படுக்கும் முன்பு முகத்தில் சுருக்கம் உள்ள இடங்களில் பூசவும்.
காலை எழுந்த உடன் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சோப் போடக்கூடாது. இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு செய்து வர சுருக்கம் போகும். கேரட் சாறு, தேன் ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறுடன் ஒரு டீஸ்பூன் பால் சேர்த்து முகத்திலும் கழுத்திலும் தேய்க்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து கழுத்திலும் முகத்திலும் தேய்க்கவும்.
20 நிமிடத்திற்குப் பிறகு ஒரு பிஞ்ச் சோடா பை கார்பனேட் கலந்த சுடுநீரில் பஞ்சை முக்கி துடைத்தால் எப்படிப்பட்ட சுருக்கங்களும் மாயமாகி விடும். பப்பாளி, பாதம் எண்ணெய் பப்பாளிப்பழம் முகச்சுருக்கத்தைப் போக்கும் பழுத்த பப்பாளியை நன்கு கூழாக்கி அதனை முகத்தில் தேய்ப்பது நல்ல பலன் தரும்.
பப்பாளி சதையை சாப்பிட்ட பின் அதன் தோலின் உட்பகுதியில் உள்ள பகுதியை தேய்த்தால் போதும் நல்ல பலன் கிடைக்கும். இரவு படுக்கைக்குப் போகும் முன்பு பாதம் எண்ணெயை நன்றாக முகத்தில் தேய்த்து உறங்கவும். பின்னர் காலையில் எழுந்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவ சுருக்கம் போயே போச்சு.
வைட்டமின் ஈ முகச்சுருக்கத்தை நீக்குவதில் ஈ வைட்டமினுக்கு முக்கிய பங்கு உண்டு. வைட்டமின் மாத்திரையை உடைத்து, அதனுடன் கிளிசரின் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். முகச்சுருக்கம் நீங்கும். நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.
ஆரஞ்ச் ஜூஸ் முகச் சுருக்கம் வராமல் தடுக்க வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கேரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும். துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
தண்ணீர் குடிங்க தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதிக அளவு தண்ணீர் குடிப்பதன்மூலம் தோலில் ஈரப்பசை அதிகரித்து இளமை தோன்றும். அது முகச்சுருக்கத்தை நீக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக பெண்கள் தினமும் குறைந்தது 1 1/2 லிட்டர் தண்ணீர் பருக வேண்டுமாம் இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இயற்கையாகவே இளமையாகவும் அழகாகவும் ஜொலிப்பதற்கு மாம்பழ மசாஜ் உதவும். மாம்பழங்களை கூழாக்கி மசாஜ் செய்வது பற்றி பார்ப்போம்.

மாம்பழம், பாதாம், ஓட்ஸ் மூன்றையும் பயன்படுத்தி சருமத்திற்கு மசாஜ் செய்யலாம். இவை இறந்த சரும செல்களின் அடுக்கை அகற்றி, சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருப்பதற்கு வழிவகை செய்யும். ஒரு மாம்பழத்தை எடுத்து கூழாக்கிக்கொள்ளவும். அதனுடன் தலா ஒரு டேபிள்ஸ்பூன் பாதாம் தூள், ஓட்ஸ் சேர்த்து கலக்கவும். அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலரவிட்டு, காட்டன் துணியால் துடைக்கவும். பின்னர் நீரில் முகத்தை கழுவுங்கள்.
மாம்பழத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை பழத்தையும் பயன்படுத்தலாம். மாம்பழத்தை கூழாக்கி அதனுடன் தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவிவிட்டு நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். முகப்பரு பிரச்சினை கொண்டவர்களுக்கு இது பலன் தரும்.
மாம்பழத்துடன் முல்தானி மெட்டியையும் உபயோகிக்கலாம். கோடைகாலத்தில் முல்தானி மெட்டியை நிறைய பெண்கள் பயன்படுத்துவார்கள். அது சருமத்தை மிருதுவாகவும் ஈரப்பத்தத்தன்மையை குறைய விடாமலும் பார்த்துக்கொள்ளும். மாம்பழக் கூழுடன் ஒரு டேபிள்ஸ்பூன் முல்தானி மெட்டியையும், சிறிதளவு தயிரையும் கலந்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி கால் மணி நேரம் உலரவிட்டுவிட்டு சாதாரண நீரில் கழுவிவிடலாம்.

ஆண்கள் அணியும் காதணிகளில் இத்தனை மாடல்களா? என்று நம் புருவத்தை உயர்த்தும் அளவுக்கு பல்வேறு மாடல்கள் தங்கம், வெள்ளி மற்றும் வைரத்தில் மட்டுமல்லாது இமிடேஷன் நகைகளிலும் வந்து விட்டன.

ஐம்பது ஆண்டுகள் முன்னோக்கி சென்றால் அனைத்து ஆண்களும் காதுகளில் காதணிகளை அணிந்து கொண்டுதான் இருந்தார்கள். நாகரீக வளர்ச்சியால் ஆண்கள் காதணிகளை அணிவதை முற்றிலும் நிறுத்தி விட்டார்கள். இந்தியாவில் ஒரு சில சமூகத்தில் மட்டும் ஆண்கள் இன்றளவும் காதணிகளை அணிகிறார்கள்.
எந்த நாகரீக வளர்ச்சியால் காதணிகளை அணிவதைத் தவிர்த்தார்களோ அதே நாகரீக வளர்ச்சியின் காரணமாக மறுபடியும் ஆண்கள் காதணிகளை அணியத் தொடங்கி விட்டார்கள்.

தங்கத்தில் ஹூப் மாடலானது முன்புறம் அரை வட்ட வடிவில் கட்டிங்குகளுடனும், டிசைன்களுடனும் அழகாக உள்ளன. சிறியதாகவும், பெரியதாகவும் பல்வேறு அளவுகளில் வருகின்றன.
பாலி மாடல் எனப்படும் வட்ட வடிவமானது ரிங் டைப்பில் அகலமாக உள்ளது. ஆண்களின் பாலி மாடல் காதணியானது காதை ஒட்டி இருப்பது போல் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. தங்கம் மற்றும் வெள்ளியிலும் இந்த மாடலானது கிடைக்கின்றது.
காதே குத்தாமல் அணியக்கூடிய டப்ஸ் மாடல் காதணிகளானது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் பல நிறங்களில் வருகின்றன.
ஒரே ஒரு கல் வைத்த ஸ்டட் மாடலும் பல ஆண்களாலும் விரும்பி அணியப் படுகின்றது. முதலில் கண்களுக்குத் தெரியாத ஒற்றைக் கல்லை மட்டுமே அணிந்து வந்தவர்கள் இப்பொழுது பெரிய ஒற்றைக் கல் (டைமண்ட், அமெரிக்கன் டைமண்ட்) கம்மலை அணியத் துவங்கி இருக்கிறார்கள்.
கோல்ட் இயர் ரிங்ஸ் மெலிதாகவும், அகலமான ஹ்யூஜி ஹூப் காதணிகள், தங்க முலாம் பூசப்பட்ட அலாய் பாலி இயர் ரிங்ஸ், வைரக் கற்கள் முழுவதுமாகப் பதித்த ஹூப் இயர் ரிங்ஸ், வொயிட் கோல்ட் மற்றும் நார்மல் கோல்ட் கலந்து வரும் இயர் ரிங்ஸ் எனப் பல மாடல்கள் வந்துள்ளன.
வட்ட வடிவில் முன்புறமும், பக்கவாட்டிலும் கற்கள் பதித்த ஹிப் ஹாப் காதணிகள் அருமையாக உள்ளன. வட்ட வடிவில் மட்டுமல்லாமல் டயமண்ட் ஷேப் மற்றும் சதுர வடிவத்திலும் ஒன்பது கற்கள், பதினாறு கற்கள் பதித்தது போன்ற காதணிகளும் கவர்ச்சிகரமாக உள்ளன. வெள்ளைக் கற்கள் மட்டுமல்லாது பல வண்ணக் கற்கள் மற்றும் நவரத்தினக் கற்கள் பதித்த காதணிகளையும் ஆண்கள் விரும்பி அணிகிறார்கள்.
டம்பில் காதணிகளை அணிந்து கொள்வதை சிறு வயது ஆண்கள் பெரிதும் விரும்புகிறார்கள். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் கோல்டு சில்வர் பூச்சுகளில் இந்தக் கம்மல்கள் நடுவில் கருமை நிற பட்டன் போன்ற அமைப்புடன் பார்க்க அழகாக உள்ளன.
ஓம் வடிவக் கம்மல், சிலுவைக் கம்மல், மேல் கம்மலிலிருந்து செயினானது தொங்க அதன் கடைசியில் சிலுவையானது இருப்பது போலவும், ட்ராகன் கோல்டு சர்ஜிகல் ஸ்டட், அமைதி அடையாளத்தைக் குறிக்கும் லோகோவுடன் வந்திருக்கும் ஸ்டட், ஸ்டர்லிங் சில்வர் பிளெயின் ஸ்மால் ஹூப் ஹ்யூஜி இயர் ரிங்ஸ், கோல்டு ஸ்டார் டிசைன் காதணிகள், ஸ்க்ரூ மாடல் கோல்டு ஸ்டார் டிசைன் காதணிகள், ஸ்க்ரூ மாடல் காதணிகள் எனப் பல கணக்கிலடங்காத டிசைன்களில் ஆண்களின் காதணிகள் வந்துள்ளன.
14 எம்.எம்., 12 எம்.எம்., 9 எம்.எம்., 7 எம்.எம். அளவுகளில் ஸ்க்ரூ டைப் காதணிகள் வருகின்றன. கோல்டு நக்கட் காதணிகள் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளன. இன்பைனைட் டிசைன் காதணிகள், ஏழு கல் வைரக்கம்மல், பர்சனாலிட்டி காதணிகள், ஸ்பைக் பங்க் காதணிகள், நாட்டிகல் இயர் ரிங்ஸ், வின்டேஜ் காதணிகள் எனப் பல மாடல்களில் பெண்கள் காதணிகளுடன் போட்டி போடும் அளவுக்கு ஆண்கள் காதணிகளும் வந்து விட்டன.
தொங்கும் காதணிகளை அணிந்து கொள்வதையும் ஆண்கள் விரும்புகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கம்மலிலிருந்து ருத்ராட்சம் தொங்கும் காதணியும், ரிங்கிலிருந்து சிறிய ஹார்ட்டின்கள் தொங்குவது போல் வந்திருப்பவையும் ட்ரெண்டியாக உள்ளன. கத்தரிக்கோல் வடிவக் கம்மலும், கைத்துப்பாக்கி வடிவக் கம்மலும் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன.
காது குத்துவதால் ஏற்படும் நன்மைகள், ஆரோக்கிய நலன்கள்
* காது குத்துவதால் கண் பார்வை கூர்மையாகின்றது.
* மூளை வளர்ச்சிக்கு காது குத்துவது பெருமளவில் உதவி புரிகின்றது.
* இனப்பெருக்க உறுப்புகளைப் பராமரித்து மாதவிடாய் சுழற்சியானது சரியாக வருவதற்கு உதவுகின்றது.
* காதுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
* பதட்டம் மற்றும் ஓசிடி போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன.
* செரிமான அமைப்புகளைத் தூண்டி அவற்றைச் சரியாக வேலை செய்ய உதவுகின்றன.
ஆண் குழந்தை என்றால் முதலில் வலது காதையும், பெண் குழந்தை என்றால் முதலில் இடது காதைக் குத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் வயதாகும் போது, உங்கள் சருமமும் வயதாகிறது. என்னென்ன மாற்றம் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

20களில்: உங்கள் சருமம் அதிகபட்ச பொலிவுடன் காணப்படும், பதின்பருவ பருக்களின் பாதிப்பு தொடரும். குழந்தை பிறப்புக் கட்டுப்பாடு அல்லது கருத்தரித்தல் சருமத்தைப் பாதிக்கலாம்.
30களில்: மரபுரீதியாக நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், பெரிதாக மாற்றம் இருக்காது, ஆனாலும் கண்ணின் கீழ் பைகள், வாயை சுற்றிலும் சிரிக்கும் கோடுகள் போன்றவை ஏற்படக்கூடும்.
40களில்: வயதாவதன் தெளிவான அறிகுறிகளை சருமம் காண்பிக்க தொடங்கும். நெற்றி சுருக்கங்கள், உள்ளங்கையின் பின்புறம் சுருக்கம், கழுத்து மற்றும் புறங்கைகளில் சுருக்கம், தொங்கும் சருமம் போன்றவை ஏற்படக்கூடும்.

வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும்.
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் மிகவும் பிரபலமான பல்வேறு க்ரீம்கள், ஆயின்மென்ட், சோப்புகள், லோஷன் மற்றும் பாடி ஸ்கரப் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
1 நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைத் தடுக்கும். அதற்கு தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும்.
2. பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. இந்த சரும வறட்சியைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணெயை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால், சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.அதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
3. நல்லெண்ணெய் உதடுகளுக்கு ஒரு நல்ல நிறத்தை வழங்கும். ஒருவர் தினமும் நல்லெண்ணெயை உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். அதற்கு நல்லெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லெண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே பலன் கிடைக்காது. தினமும் பயன்படுத்தி வந்தால் தான் பலனைக் காண முடியும்.
4. கெமிக்கல் கலந்த மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை வழியில் மேக்கப்பை நீக்க நினைத்தால், நல்லெண்ணெயைப் பயன்படுத்துங்கள். அதுவும் பஞ்சுருண்டையில் நல்லெண்ணெயை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.
5. நல்லெண்ணெயை ரோஸ் வாட்டருடன் சேர்த்து குதிகால் வெடிப்பை சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் எடுத்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவுங்கள். மறுநாள் காலையில் காலை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் விரைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.
6. கோடையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் சருமம் கருமையாவது. இதைத் தடுப்பதற்கு நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
7. உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா? அப்படியானால் உங்கள் தலைமுடியை நல்லெண்ணெய் பயன்படுத்தி பராமரியுங்கள். அதுவும் உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு நல்லெண்ணெயை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை தலைமுடிக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக இருக்கும்
8. உங்கள் கண்கள் சோர்வடைந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? இதை நல்லெண்ணெய் கொண்டு சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெயை ப்ரிட்ஜில் வைத்து குளிர செய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்.

முடி பாதிப்படைய பொதுவான காரணங்களை தெரிந்துகொள்வதன் மூலம் அவை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம்.
முடி உதிர்வதும், அது பாதிப்படையும் பொதுவான காரணங்கள் என்று சிலர் சொல்வதுண்டு. 3 பெண்களில் ஒருவர் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். முடி டேமேஜ் ஆவதும், முடி மெலிவு, முடிநுனி உடைதல், வழுக்கை, புழுவெட்டு, பொடுகு, முடி பிளவு, அதீத முடி உதிர்வு என்றும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். முடி பாதிப்படைய பொதுவான காரணங்களை தெரிந்துகொள்வதன் மூலம் அவை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். அன்றாட வாழ்க்கை முறையில் முடியை இழக்கும் ஒவ்வொருவரும் மன அழுத்தம் கொள்கிறார்கள். முடி டேமேஜ் ஆக்கும் பொதுவான காரணங்கள் குறித்து அறிவோம்.
தலைக்கு குளித்ததும் முதலில் கூந்தலை ஈரமில்லாமல் சுத்தமாக துடைத்து எடுக்க வேண்டும். கூந்தலில் ஈரம் தங்கியிருந்தால் முடி ஈரத்தை உறிஞ்சுக்கொள்ளும். இதனால் முடியின் ஸ்கால்ப் பகுதியில் வீக்கத்தை உண்டாக்கும். இவை கூந்தலில் தங்கியிருந்து அவை முடி சேதத்துக்கு வழி வகுக்க கூடும். எப்போதும் கூந்தலை ஈரப்பதமாக வைத்திருக்கும் போதும் முடி உதிர்வு நடக்கிறது.
எல்லோரும் கூந்தலை பராமரிக்கிறேன் என்று தொடர்ந்து தலைக்கு குளிப்பது உண்டு. இது கூந்தலுக்கு நல்ல வளர்ச்சியை தரக்கூடியது என்றாலும் கூட கூந்தலை நன்றாக உலர்த்துவதில் குறை இருக்க கூடாது. கோடையில் பலருக்கும் உச்சந்தலையில் அதிக வியர்வை சுரக்கும். அதனாலும் கூட கூந்தல் எப்போதும் ஈரப்பதம் இருக்கும்.
சருமம் போன்று கூந்தலுக்கும் நேரடியான வெயிலின் தாக்கம் ஒப்புகொள்ளாது. புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தால் முடி பலவீனமடைவதை தடுக்க முடியாது. அதிக நேரம் வெயிலில் சென்றால் மட்டும் தான் கூந்தல் பாதிப்படையும் என்றில்லை. சில மணிநேரம் சென்று வந்தாலும் கூட வெயிலின் தாக்கத்தால் முடி பலவீனமாக கூடும்.
அதோடு அதிகப்படியான மாசுவால் கூந்தலில் அழுக்குகளும் அதிகமாகவே சேர்ந்துவிடுகிறது. அவ்வபோது சுத்தம் செய்யாத போது கூந்தலில் பொடுகும், முடி உதிர்வும் சாத்தியமாகிறது.
மன அழுத்தத்தால் உடல் நலமும் கூடவே கூந்தலும் கூட பாதிக்கப்படுகிறது. உடல் மற்றும் உளவியல் ரீதியாக முடி சேதத்தை உண்டாக்கிவிடுகிறது. மன அழுத்தம் இருப்பவர்களுக்கு உடலில் ஹார்மோன் சுரப்பு தடுமாற்றம் அடையக்கூடும். அதனால் தான் முடி உதிர்வும் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. மன அழுத்தம் உண்டாகாமால் பார்த்துகொள்வது தான் மன அழுத்தம் இருந்தாலும் அதை தவிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அழுத்தத்தைக் குறைக்க முடியும்.
முடிக்கு ஹேர் கலரிங் செய்வது முடியின் அழகை அதிகரிக்கும் என்று நினைக்கலாம். ஆனால் இவை முடியின் அழகை கெடுக்கிறது என்பதே உண்மை. அவ்வபோது ஹேர் கலரிங் செய்வதன் மூலம் அவை முடி இழப்பை உண்டாக்கிவிடக்கூடும். கடுமையான முடி சேதத்தை உண்டாக்கும். ஏனெனில் கூந்தலுக்கு ஹேர் கலரிங் செய்யும் போது அதில் இருக்கும் இரசாயனங்கள் முடிக்குள் ஊடுருவதன் மூலம் அவை முடியை பலவீனப்படுத்துகின்றன.
ஹேர் கலரிங் செய்வது எல்லாமே தற்காலிக அழகுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாமல் ஹேர் கலரிங் செய்து கொண்டாலும் அடுத்து செய்வதற்கு முன்பு குறிப்பிட்ட இடைவெளி அவசியம். இயன்றவரை அதை தவிர்ப்பதே நல்லது.ஹேர் ப்ளீச் செய்வதும் கூட கூந்தலை பாதிப்புக்குள்ளாக்கும்.
முடியின் இறுக்கத்தால் முடியின் வேர்ப்பகுதி பலவீனமடையும். கூந்தலின் அடர்த்தி குறையும். இறுக்கமான பின்னலும், அதிகப்படியான அலங்காரமும் கூந்தலுக்கு தொடர்ந்து செய்யும் போது கூந்தலின் வேர்கள் இழுக்கப்படுவதால் விரைவில் அவை உடைக்கப்படுகின்றன. முடி வளர்ச்சியைத் தடுத்து உதிர்வை வேகமாக ஊக்குவிக்கின்றன. நாளடைவில் வழுக்கை பிரச்சனையையும் கூட இவை உண்டாக்கிவிடுகின்றன.
மேற்கண்ட ஐந்துமே கூந்தலை டேமேஜாக்குபவையே. இதில் கவனம் செலுத்தினாலே முடி டேமேஜ் ஆகாமல் பாதுகாக்க முடியும்.

தட்ப வெப்பச் சூழ்நிலை மாற்றத்தால் ஒரு சிலருக்கு உதடுகளில் வெடிப்புகள் ஏற்படும். இதற்கான சித்த மருத்துவம் சார்ந்த தீர்வுகளை இங்கு காண்போம்.
தட்ப வெப்பச் சூழ்நிலை மாற்றத்தால் ஒரு சிலருக்கு உதடுகளில் வெடிப்புகள் ஏற்படும். இது அனைத்து வயதினருக்கும் ஏற்படுகின்ற பொதுவான பாதிப்புதான். இதற்கான சித்த மருத்துவம் சார்ந்த தீர்வுகளை இங்கு காண்போம்.
* தினமும் காலை மாலை இருவேளை பசும்பாலின் பாலேட்டை உதடுகளின் மீது தடவ வேண்டும். மேலும் கரும்பின் இலைகளைச் சுட்டு சாம்பலாக்கி அதனுடன் பசுமாட்டின் வெண்ணையைக் குழைத்து தடவ உதடு வெடிப்பு நீங்கும்.
* நெல்லிக்காய்ச் சாற்றை அதன் சம அளவு தேனுடன் கலந்து தடவிவர நல்ல பலன் தெரியும். கேரட் சாறு, கிளசரின், பசும்பாலாடை ஆகிய மூன்றையும் கலந்து தடவ வேண்டும். இதன் மூலம் உதடு வெடிப்பு குணமாகும்.
* உதடுகளில் ஈரப்பதம் குறையாமலிருக்க அடிக்கடி நீரையும், பழச்சாறுகளையும் பருக வேண்டும் இது உதடு வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கும்.
* காலை, மாலை வேளைகளில் ரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து உதட்டில் பூசிவர வேண்டும். புண்ணாகிப்போன உதடுவெடிப்புகள் குணமாக நல்லெண்ணெயையோ, நெய்யையோ தடவ அப்புண்கள் விரைவில் குணமாகும்.
* எலுமிச்சையின் சாற்றை உதட்டுப்புண்கள் ஆறிய பிறகு தடவிவர உதடுகள் பழைய நிறத்தையும், பளபளப்பையும் பெரும்.