என் மலர்
அழகுக் குறிப்புகள்
- முடிகளில் மட்டுமே ஹேர் ஜெல்லை பயன்படுத்த வேண்டும்.
- முடிக்கு ஹேர் ஜெல் பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
முடிக்கு ஹேர் ஜெல் பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். நீண்ட நேரம் கூந்தல் அலங்காரம் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக ஹேர் ஜெல் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் இது முடிக்கு நன்மை செய்யுமா என்பதை இதில் பார்ப்போம்.
ஹேர் ஜெல் பொருட்கள் உங்கள் கூந்தலை அழகுபடுத்தலாம், ஹேர் ஸ்டைல் கலையாமல் வைத்திருக்க உதவலாம். ஆனால் இதில் ஏராளமான கெமிக்கல்கள் உள்ளன என்பதை பற்றியும் அதனால் வரக்கூடிய பாதிப்புகள் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஹேர் ஜெல்களில் ஆல்கஹால் உள்ளிட்ட நச்சு இரசாயனங்கள் இருக்கிறது. இந்த ஆல்கஹால் உங்கள் கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை ஆவியாக்கி கூந்தலை வறண்டு போகச் செய்து விடும். இதனால் முடிகள் உடைந்து போக வாய்ப்பு உள்ளது.
இந்த ஹேர் ஜெல்கள் தலைமுடியின் இயற்கையான எண்ணெய் உற்பத்தியை தடுக்கிறது. இதனால் கூந்தல் வறண்டு போய் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படுகிறது.
ஹேர் ஜெல்களில் இருக்கும் இராசயனங்கள் காரணமாக உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு, எரிச்சல் போன்ற தொந்தரவுகளை உருவாக்குகிறது.
ஹேர் ஜெல்லில் இருக்கும் நச்சு இராசயனங்களால் உங்களின் கூந்தல் பொலிவிழந்து கூந்தல் நிறமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக சீக்கிரமே நரைமுடி பிரச்சினைக்கு தள்ளப்படுகின்றனர்.
அளவுக்கு அதிகமாக ஹேர் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது. அது உங்கள் கூந்தலை பாதிக்க வாய்ப்புள்ளது. முடிகளில் மட்டுமே ஹேர் ஜெல்லை பயன்படுத்த வேண்டும். வேர்க்கால்களில் படும் படி எப்போதும் அப்ளை செய்யக் கூடாது. உங்கள் கூந்தலுக்கு தகுந்த ஹேர் ஜெல்லை தேர்ந்தெடுப்பது அவசியம்.
- சர்க்கரை முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும் குணம் கொண்டவை.
- சர்க்கரை அழகுப் பராமரிப்பில் சிறந்த பொருளாக உள்ளது.
சர்க்கரை அழகுப் பராமரிப்பில் சிறந்த பொருளாக உள்ளது. எப்படியெனில், சர்க்கரையைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், சருமத்தின் மென்மைக்கு இடையூறாக இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகள் போன்றவற்றை எளிதில் வெளியேற்றிவிடும்.
அதற்கு சர்க்கரையை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது அதனை வேறு சில சரும பராமரிப்பு பொருட்களுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். இதனால் சருமம் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும். அதிலும் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமம் மிகவும் மென்மையாகிவிடும்.
சர்க்கரை முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும் குணம் கொண்டவை. எப்படியெனில் சர்க்கரையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்யும் போது, சருமத் துளைகள் திறந்து, அதிலுள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்குவதோடு, சரும செல்கள் எளிதில் பாதிக்காதவாறு பாதுகாக்கும்.
அவசரமாக பார்ட்டிக்கு கிளம்பும் போது, சர்க்கரையை தண்ணீரில் கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை 3-4 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், சருமம் சுத்தமாக பொலிவோடு காணப்படும்.
கிளின்சரில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, ஈரமான துணியால் துடைத்து, பின் நீரில் கழுவலாம். இதனாலும் சருமம் அழகாக ஜொலிக்கும்.
எலுமிச்சை சாற்றில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி, சருமம் பொலிவுறும்.
க்ரீன் டீயில் ஆன்டி-ஏஜிங் தன்மை அதிகம் இருப்பதோடு, அது சருமத்தில் பாதிக்கப்பட்டுள்ள திசுக்களை குணமாக்கும் தன்மை கொண்டவை. ஆகவே க்ரீன் டீயில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை சருமத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சரும சுருக்கம் நீங்கி, முதுமைத் தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.
தேங்காய் எண்ணெயில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தை ஸ்கரப் செய்யலாம். வேண்டுமெனில், தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
பாதாமை இரவில் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது சர்க்கரை மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தை ஸ்கரப் செய்தாலும், சருமம் அழகாக இருக்கும்.
- மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும்.
- சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள்.
வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள்.
சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, பேட்ச் , பேட்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.
மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். இதனைப் போக்க மிக எளிய வழி இதுதான். வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.
இரவு நீண்ட நேரம் படிப்பதாலும், வேலை செய்வதாலும் கண்களைச் சுற்றி கருவளையங்கள் தோன்றும். வாழைப்பழத்தோளை, கற்றாழை ஜெல்லுடன் கலந்து கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தின்மீது பூசிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் அப்படியே ஊறவிடுங்கள். குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரத்தில் இரண்டு முறை செய்து பாருங்கள். கண்களுக்கு புத்துணர்வு கிடைக்கும். மேலும், சருமத்தில் சுருக்கங்கள் வாராமல் தடுத்து, வயது முதிர்வை கட்டுக்குள் வைக்கும்.
வாழைப்பழத் தோளில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் ஏவில் உள்ள கரோடினோய்ட் வைட்டமின், தொற்று உள்ள இடத்தை சரி செய்து, பருக்களை குணப்படுத்தும். நன்றாக பழுத்த வாழைப்பழத் தோளை நறுக்கி, முகத்தில் பருக்கள் உள்ள இடங்களில், மெதுவாக தேய்க்கவும். பத்து நிமிடம் மசாஜ் செய்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருக்கப்போகிறீர்கள் என்றால், நாள் முழுவதும் கூட கழுவாமல் அப்படியே விட்டுவிடலாம். இரவு தூங்குவதற்கு முன் கூட இப்படி செய்து தூங்கி விடலாம். நீண்ட நேரம் சருமத்தில் (skin) இருந்து கொண்டு நன்றாக வேலை செய்யும்.
- தலைமுடியை பாதுகாக்கும் விஷயத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள்.
- இந்தப் பட்டை சரும தொற்றுகள் வராமல் தடுக்கக் கூடியது.
தலைமுடியை பாதுகாக்கும் விஷயத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். இருந்தபோதும் முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை, அரிப்பு உள்பட பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பார்கள். இதற்கு சிறந்த இயற்கை தீர்வாக விளங்குகிறது வேம்பாளம் மரத்தில் இருந்து எடுக்கப்படும் 'வேம்பாளம் பட்டை'. இது பட்டையாகவும், பொடியாகவும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
இந்தப் பட்டையை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலையில் பூசலாம். இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அனைத்து விதமான தலைமுடி பிரச்சினைகளும் தீரும். வேம்பாளம் பட்டை சிவப்பு வண்ண இயற்கை நிறமூட்டியாக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
களையிழந்த சருமத்தை, மீண்டும் பொலிவு நிறைந்ததாக மாற்றக்கூடிய ஆற்றல் வேம்பாளம் பட்டைக்கு உண்டு. இதை இயற்கை அழகுப் பொருட்கள் தயாரிப்பில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்தப் பட்டை சரும தொற்றுகள் வராமல் தடுக்கக் கூடியது. இதன் அழற்சி எதிர்ப்புத் தன்மை, தீக்காயங்களை விரைவாக ஆற்றும். சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்புகளையும் குணப்படுத்தும்.
'வெரிகோஸ் வெயின்' எனப்படும் நரம்பு சுருட்டல் பாதிப்பு, படுக்கைப் புண்கள் மற்றும் சரும வடுக்கள் போன்றவற்றுக்கு வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வாகும். இந்தப் பட்டையை தண்ணீரில் போட்டு காய்ச்சிக் குடித்தால் வயிற்றுப்போக்கு, அல்சர் மற்றும் நாள்பட்ட இருமல் குணமாகும். சிறுநீரகக் கற்கள், மஞ்சள் காமாலை, எலும்பு முறிவு போன்றவற்றுக்கும் இதனை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
வேம்பாளம் பட்டைப் பொடியை, வெண்ணெய்யுடன் கலந்து அழற்சி மற்றும் தீக்காயங்கள் உள்ள இடங்களில் பூசிவந்தால் விரைவாக குணமடையும். வேம்பாளம் பட்டை, பெருங்காயம், கருஞ்சீரகம் ஆகியவற்றை பொடித்து, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து காயங்களின் மேல் பற்று போட்டு வந்தால் அவை விரைவாக ஆறும். வேம்பாளம் பட்டையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், ரத்த ஓட்டத்தை அதிகரித்து தலை வலியைக் குறைக்கும். இதன் வேர் தலைவலிக்கு சிறந்த மருந்தாகும். வேம்பாளம் பட்டை எண்ணெய் தூக்கமின்மை பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும். இந்த எண்ணெய்யை தலை மற்றும் மூக்கின் மீது பூசிக் கொண்டால் மனம் அமைதி அடையும். நிம்மதியான தூக்கம் வரும் என்று ஆயுர்வேத மருத்துவம் தெரிவிக்கின்றது.
முடி உதிர்வை தடுக்கும் 'மூலிகைகளின் ராணி'
ஆயுர்வேத மருத்துவத்தில் 'மூலிகைகளின் ராணி' என்று துளசி குறிப்பிடப்படுகிறது. இது மயிர்க்கால்களை புத்துயிர் பெறச் செய்து முடி உதிர்வை தடுக்கும். இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோநியூட்ரியண்ட்டுகள் ஆகிய சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். துளசி எண்ணெய்யை தினமும் தலையில் தடவி வந்தால் தலைமுடி சார்ந்த பிரச்சினைகள் குணமாகும். இது எல்லா வகையான தலைமுடிக்கும் ஏற்றது. துளசி பொடியை கூந்தலுக்கு பேக் மற்றும் மாஸ்க் போன்று பயன்படுத்தலாம். இதனால் பொடுகு, பேன், இளநரை, அரிப்பு, வெடிப்பு போன்ற பிரச்சினைகள் தீரும்.
துளசி ஹேர் மாஸ்க்: 2 டேபிள் ஸ்பூன் துளசி பொடி, 2 டேபிள் ஸ்பூன் தேன் இவை இரண்டையும் சிறிய கிண்ணத்தில் ஊற்றி நன்றாகக் கலக்கவும். இதை தலைமுடி முழுவதும் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்.
- பொதுவாகவே காலில் உள்ள தோல் தடிமனாக இருக்கும்.
- பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.
தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு ஏற்படக்கூடும்.
பொதுவாகவே காலில் உள்ள தோல் தடிமனாக இருக்கும். அதற்குள் ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். அதோடு காலையிலும் இரவிலும் பாதத்தைத் தண்ணீரில் நன்றாக கழுவினால் வெடிப்பு வரும் வாய்ப்பு குறைவு.
கற்றாழை, தேங்காய் எண்ணெய் தடவலாம். ஆனால் ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதவெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தோல் முற்றிலுமாக கெட்டுவிடும்.
வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும். உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, உடல் பருமனாக இருப்பவர்கள், எடை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.
பாத வெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. கால்களில் நகங்களை வெட்டும்போது முழுமையாக வெட்டிவிடாமல் லேசாக நகம் இருக்குமாறு வெட்ட வேண்டும். முழுமையாக வெட்டினால், சதைப் பகுதிக்குள் நகம் வளர்ந்து வலி உண்டாகும். அதேபோல், நகங்களுக்கு இடையே காணப்படும் இடைவெளி எப்போதும் உலர்ந்த தன்மையோடு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரத்தன்மையோடு இருந்தால் தொற்றுகள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது.
- வைட்டமின் ஈ எண்ணெய் உங்கள் உடலுக்கு பல வழிகளில் பயனளிக்க உதவுகிறது.
- வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
வைட்டமின் ஈ என்பது தோல் பராமரிப்புப் பொருட்களில் காணப்படும் ஒரு பொதுவான மூலப்பொருள். வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் ஆன்லைனில் அல்லது மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன.
தலை முதல் கால் வரை வைட்டமின் ஈ எண்ணெயைப் பயன்படுத்தலாம். வைட்டமின் ஈ எண்ணெய் உங்கள் உடலுக்கு பல வழிகளில் பயனளிக்க உதவுகிறது. வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை அதன் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில வழிகள் பற்றி பார்க்கலாம்.
உங்கள் கைகள் நாள் முழுவதும் தொடர்ந்து பல்வேறு வகையான வேலைகளை செய்கின்றன. உங்கள் நகங்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் உங்கள் நகங்களைச் சுற்றியுள்ள தோலை மெதுவாக மசாஜ் செய்ய வைட்டமின் ஈ எண்ணெயைப் பயன்படுத்தவும். படுக்கைக்கு முன் இதை செய்யுங்கள். இதனால் உங்கள் நகங்கள் உகந்த ஈரப்பதத்தைப் பெறுகின்றன. உங்க நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
தலைமுடிக்கு அற்புதமான நன்மைகளை வழங்குவதற்காக அறியப்பட்ட வைட்டமின் ஈ எண்ணெய் கூந்தலுக்கு ஒரு அற்புதமான எண்ணெய். காப்ஸ்யூலில் இருந்து எண்ணெயை கசக்கி எடுத்து, உங்கள் வழக்கமான முடி எண்ணெயுடன் கலக்கவும். உங்கள் தலைமுடியில் இந்த கலவையை மெதுவாக மசாஜ் செய்து 2-3 மணி நேரம் விட்டு விடுங்கள். ஷாம்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை கழுவ வேண்டும். நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்தலாம். தொடர்ந்து இரண்டு வாரம் செய்துவந்தால், முடிவுகளை நீங்களே கவனிக்கத் தொடங்குவீர்கள்.
சருமத்தில் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உள்ளவர்கள் , வைட்டமின் ஈ எண்ணெயுடன் வயதானால் ஏற்படும் சுருக்கத்தை எதிர்க்கும் கிரீம் பயன்படுத்தலாம். இது ஆக்ஸிஜனேற்றத்தால் ஏற்றப்பட்டு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உங்கள் சருமத்தில் வைட்டமின் ஈ எண்ணெயை மசாஜ் செய்வது உங்கள் சரும அமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை உறுதியாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.
வைட்டமின் ஈ எண்ணெய் வறண்ட மற்றும் மெல்லிய சருமத்திற்கு சிகிச்சையளிக்கும். வெயிலின் விளைவாக உங்கள் தோல் எரிந்தால் அல்லது அரிப்பு ஏற்பட்டால், வைட்டமின் ஈ எண்ணெயை கூலிங் கிரீம் உடன் கலந்து பயன்படுத்தலாம். இருப்பினும், வெயிலில் நீங்கள் செல்லுவதற்கு முன் சன்ஸ்கிரீன் போடுவது நல்லது.
வைட்டமின் ஈ முகப்பரு மற்றும் முகப்பரு வடுக்களுக்கு சிகிச்சையளிக்க உதவும். கடுமையான முகப்பரு உள்ளவர்களுக்கு குறைந்த வைட்டமின் ஈ பிளாஸ்மா அளவு இருப்பதாக மருத்துவ மற்றும் பரிசோதனை தோல் மருத்துவத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வைட்டமின் ஈ உங்கள் தோலை ஈரப்பதமாக்கி, ஒளிரும் மற்றும் நீரேற்றத்துடன் வைத்திருக்கும் டோகோபெரோல்கள் மற்றும் டோகோட்ரியெனோல்களைக் கொண்டுள்ளது. வைட்டமின் ஈ மேற்பூச்சு பயன்பாடு உங்கள் சருமத்தின் ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்புக்கு பங்களிக்கிறது. மேலும் இது உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
வைட்டமின் ஈ எண்ணெய் சாத்தியமான தோல் பராமரிப்பு நன்மைகளைக் கொண்டிருக்கலாம் என்றாலும், அதனுடன் தொடர்புடைய சில அபாயங்களும் உள்ளன. ஆதலால், வைட்டமின் ஈ பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை கேட்பது நல்லது.
- பெண்களிடையே துணி ஒட்டியாணம் அணிவது தற்போது பேஷனாக இருக்கிறது.
- இளம்பெண்கள் புடவை அல்லது கவுன் அணியும்போது 'ஹிப் பெல்ட்'அணிய விரும்புகிறார்கள்.
இளம்பெண்கள் புடவை அல்லது கவுன் அணியும்போது 'ஹிப் பெல்ட்' என்ற துணி ஒட்டியாணம் அணிவது தற்போது பேஷனாக இருக்கிறது. அதை எளிதாக வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே...
தேவையான பொருட்கள்:
சில்க் காட்டன் துணி - ¼ மீட்டர்
1.50 அங்குல லேஸ் - 19 அங்குலம்
1.25 அங்குலம் எலாஸ்டிக் - 9 அங்குலம் (2 துண்டுகள்)
கொக்கி செட் - 1
செய்முறை:
படம் 1: 36 அங்குல இடுப்பளவு உள்ள பெல்ட் தயாரிப்பதற்கு முதலில் துணியை 19 x 4 அங்குல நீள அகலம் கொண்ட 3 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். எலாஸ்டிக்கை 9 அங்குல நீளம் கொண்ட 2 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
படம் 2: மூன்று துண்டு துணிகளையும் ஒன்றோடு ஒன்று (நீளவாக்கில்) இணைத்து தையல் போடவும். இரண்டு தையல்கள் போட்டால் பிரியாமல் இருக்கும். (இதில் 1 மற்றும் 3-வது துண்டுகளின் உள்ளே எலாஸ்டிக்கை நுழைக்க வேண்டும். நடு துண்டின் மேலே 'லேஸ்' வைத்து தைக்க வேண்டும்).
படம் 3: படத்தில் காட்டி இருப்பதுபோல துணிகளை இரண்டாக மடித்து தையல் போட வேண்டும். இரண்டாவது துண்டை இணைத்து இருக்கும் ஜாயிண்ட் வரை தையல் போட்டால் போதும்.
படம் 4: அந்த துண்டை படத்தில் காட்டி இருப்பதுபோல லூப் டர்னர் அல்லது சேப்டி பின் கொண்டு வெளிப்புறமாக திருப்பவும்.
படம் 5: ஒரு துண்டு எலாஸ்டிக்கின் ஒரு முனையில் சேப்டி பின்னை இணைத்து இதற்குள் நுழைத்து உள்ளே தள்ளவும்.
படம் 6: இரண்டு துணி துண்டுகளை இணைப்பதற்காக போடப்பட்ட தையலின் மீது எலாஸ்டிக்கை வைத்து தையல் போடவும். இதே போல மற்றொரு பக்கமும் செய்ய வேண்டும்.
படம் 7: நடுதுண்டு துணியின் ஓரத்தை உள்புறமாக மடித்து மேலே தையல் போடவும்.
படம் 8: லேஸ் துணியை நடு துண்டின் மீது வைத்து, நீளவாக்கிலும், அகல வாக்கிலும் தையல் போடவும். அகலவாக்கில் தைக்கும்போது, லேஸ் முனைகளை உட்புறமாக மடித்து அதன் மேலே தையல் போடவும்.
படம் 9 & 10: இரண்டு முனைகளிலும் எலாஸ்டிக்கை துணியின் விளிம்பு வரை கொண்டு வந்து சேப்டி பின்னை அகற்றிவிட்டு, துணியோடு சேர்த்து சதுர வடிவில் தையல் போடவும்.
படம் 11: இரண்டு பக்கங்களிலும் உள்பக்கம், கொக்கி செட்டை பொருத்தவும். இதன்மூலம் இடுப்பு அளவுக்கு ஏற்றபடி ஹிப் பெல்ட்டை அணிந்துகொள்ள முடியும்.
படம் 12: இப்போது அழகான 'ஹிப் பெல்ட்' தயார்.
- அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
- வீட்டில் இருக்கும் சில இயற்கை பொருட்களை பயன்படுத்தியே நாம் அக்குள் கருமையை நீக்க முடியும்.
பெண்கள் பெரும்பாலும் வெளிப்புற அழகிற்கு கவனம் செலுத்தும் அளவிற்கு புறஅழகில் கவனம் செல்லுவதில்லை. குறிப்பாக அக்குள்களில் படிந்திருக்கும் கருமையை நீக்குவது அவசியம். அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இல்லை என்றால் மிகவும் கருப்பாக மாறிவிடும். வீட்டில் இருக்கும் சில இயற்கை பொருட்களை பயன்படுத்தியே நாம் அக்குள் கருமையை நீக்க முடியும். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
பேக்கிங் சோடா : உங்கள் கைகளின் அக்குள்களில் உள்ள கருமையை நீக்க பேக்கிங் சோடா உதவும். இதற்கு நீங்கள் பேக்கிங் சோடாவுடன், தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து அதனை அக்குள்களில் தடவி உலர விட்டு, ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சை சாறு : எலுமிச்சையில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே வாரம் 4 நாட்கள் அரை எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை கடலை மாவில் தொட்டு நன்கு ஸ்க்ரப் செய்யவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கருமை மறைந்துவிடும்.
உருளைக்கிழங்கு சாறு : உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. உருளைக்கிழங்கை வெட்டி சாறு எடுத்து அதனை அக்குள் கருமை பகுதியில் தடவி 5-10 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இரண்டு முறை செய்து வந்தால், கருமையானது விரைவில் நீங்குவதை கண்கூட காண்பீர்கள்.
கற்றாழை : கற்றாலையின் ஜெல்லை எடுத்து அக்குளில் தடவி மசாஜ் செய்யுங்கள். தினமும் 15 நிமிடங்கள் இதனை செய்து வந்தால் கருமை மறையும்.
தயிர் : தயிர் அக்குள் கருமையை நீக்க உதவும் முதன்மையான பொருளாகும். தயிருடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, சிறிது கடலை மாவு சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
- பொடுகுதானே என்று அலட்சியமாக இருக்க முடியாது.
- ஒருசில தோல் வியாதிகள் உருவாகவும் இது வழிவகுக்கும்.
பொடுகு... இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒன்று. அதிலும் குறிப்பாக, இளம் வயதினருக்கு பல நேரங்களில் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது இந்தப் பொடுகுத் தொல்லை.
பொடுகுதானே என்று அலட்சியமாகவும் இருக்க முடியாது. இதைக் கண்டுகொள்ளாமல்விட்டால், முடி உதிர்வு ஏற்படலாம். அதோடு ஒருசில தோல் வியாதிகள் உருவாகவும் இது வழிவகுக்கும். முகத்தில் பருக்கள் உருவாகலாம்; கழுத்திலும், காதின் பின்புறத்திலும் தோல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.
வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்கள்.
`இயற்கையாக மரம், செடி, கொடிகளிலிருந்து கிடைக்கக் கூடியவை, நம் வீட்டுச் சமையல் அறையில் இருக்கும் பொருள்களும்கூட பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு தரக்கூடியவை' என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். அப்படி பொடுகை விரட்ட உதவும் எளிதான 10 வழிகள் இங்கே....
* இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். மறுநாள் அதை அரைத்துக்கொள்ளவும். இதை தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து தலைக்குக் குளிக்கவும். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடி வளர்ச்சிக்கு உதவும்.
* ஆரஞ்சு தோல்களை நன்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.
* வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு தலைக்குக் குளித்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
* தயிரைத் தலையில் நன்றாகத் தேய்த்துக்கொள்ள வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சிறிது ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம். தயிர், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடிக்கு பளபளப்பையும் தரும். சைனஸ், ஒற்றைத் தலைவலி வரும் பிரச்னை இருப்பவர்கள், இதைத் தவிர்க்கவும்.
* ஈரமான தலைமுடியில் சிறிது பேக்கிங் சோடாவைத் தேய்க்கவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு தலையை அலசவும். பேக்கிங் சோடா பொடுகுக்கு மிகச் சிறந்த நிவாரணி. இது, தலையில் உள்ள இறந்த செல்கள் நீங்கவும், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடவும் உதவும். பேக்கிங் சோடாவை அதிக நேரம் தலையில் வைத்து இருந்தால் தலைமுடி வறண்டு விடும்... கவனம்!
* எலுமிச்சைச் சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை தலைமுடியில் மசாஜ் செய்வதுபோலத் தேய்த்து, 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ தேய்த்து, தலையை அலச வேண்டும். தேங்காய் எண்ணெய், முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சைச் சாறு பொடுகுத் தொல்லையை நீக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும்.
* ஆப்பிள் சிடர் வினிகர் பெரிய கடைகளில் கிடைக்கும். சிறிது ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்து, அதனுடன் சம அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். இதை தலையில் தேய்த்து ஊறவைக்க வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து தலையை அலசிவிட வேண்டும். இது பொடுகுக்கு சிறந்த மருந்து; முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.
* கைப்பிடி வேப்பிலைகளை பேஸ்ட்போல அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து ஊறவைத்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இதன் கசப்பு தன்மை, தலையில் உள்ள பாக்டீரியா போன்ற தலைமுடிக்குத் தீங்கிழைக்கும் நுண்ணியிரிகளை அழித்துவிடும்.
* டீ ட்ரீ எண்ணெய் பொடுகை உருவாக்கக்கூடிய கிருமிகளை எதிர்த்து போராடக்கூடியது. கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளித்து, முடி உதிர்வையும் தவிர்க்க உதவும். டீ ட்ரீ எண்ணெயைச் சில துளிகள் எடுத்து, தலை முழுக்கத் தடவி, ஐந்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம்.
* கைப்பிடி மருதாணி இலைகளை அரைத்து, அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலைமுடியில் நன்றாகத் தேய்க்கவும். இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் கூந்தலை அலசி, குளிக்கலாம். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்; நரை முடி பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். சைனஸ், ஒற்றைத் தலைவலி, சளி பிடிக்கும் பிரச்னை ஆகியோர் தவிர்க்கவும்.
குறிப்பு: பராமரிப்பின்மை, வியர்வை, அழுக்கு போன்ற வெளிப்புற காரணங்களால் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்கு இந்த வீட்டு வைத்தியம் கைக்கொடுக்கும். அதுவே, ஹார்மோன் பிரச்னை உள்ளிட்ட உடல்நிலைக் காரணங்களால் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்குத் தீர்வு பெற மருத்துவ ஆலோசனை அவசியம்.
- கோடையில் கொப்புளங்கள், வேர்க்குரு, கட்டிகள் ஏற்படுவது சகஜம் தான்.
- தினமும் கோடையில் பழச்சாறினை அருந்துவது நல்லது.
தினமும் இருமுறையாவது குளிக்கலாம். காலையில் குளித்த பின்பு மாலையில் தான் அடுத்த குளியல் அமைய வேண்டும். மாலைக் குளியலால் நாள் முழுவதும் ஏற்பட்ட வெயிலின் தாக்கம், அசதி, அலுப்பு குறையும். நாட்டு மருந்து கடையில் சந்தனாதி தைலம், பிருங்காமலாதி தைலம், திரிபலா தைலம் போன்ற தைல எண்ணெய்கள் கிடைக்கும். மேற்கூறிய தைல எண்ணெய்களில் ஏதாவது ஒன்றினைத் ( நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஓ.கே தான் ) தலையில் தடவிக் குளித்து வரலாம். காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு வெயிலில் அலைந்தால் தலைவலி ஏற்படும். மாலையில் செய்யும் எண்ணெய்க் குளியலால் தூக்கம் நன்றாக வரும். பாலில் அரைத்த வெள்ளை மிளகு, தேங்காய்ப் பாலில் அரைத்த சீரகம், நீரில் அரைத்த கசகசா இவற்றையும் உடலில் தேய்த்துக் கொண்டு குளிக்கலாம்.
கோடைக் காலத்திற்கு ஏற்ற உணவுகளான இளநீர், பனை நுங்கு, தர்ப்பூசணி, முலாம்பழம், வெள்ளரிப் பிஞ்சு போன்றவற்றை பகல் உணவுக்குப் பின் ஒன்றிரண்டு மணி நேரம் கழித்து உண்பது நல்லது. இந்த உணவுகள் கோடையில் உடலுக்கு நன்மை செய்வதால் தோலுக்கும் ( சருமம் ) மிகுந்த ஆரோக்கியத்தினை, பளபளப்பினைத் தருகின்றது. தினமும் கோடையில் பழச்சாறினை அருந்துவது நல்லது.
தினமும் நீராவி முகருவதினைச் செய்தால் முகத்துவாரங்கள் விரிவடைந்து அழுக்குகள் வெளியேறும். உலர்ந்த சருமம் உள்ளவர்கள் 5 நிமிடமும், எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் 10 நிமிடமும் கொதிக்கும் நீரிலிருந்து எழும் நீராவியை நுகருவது நல்லது.
கோடையில் கொப்புளங்கள், வேர்க்குரு, கட்டிகள் ஏற்படுவது சகஜம் தான். வெப்பத்தால் ஏற்படும் சரும அலர்ஜி, சருமம் வறண்டு போவதற்கு காரணங்கள் எண்ணெய் தேய்த்துக் கொள்ளாதது, மாங்காய், மாம்பழம் அதிகம் உண்பது போன்றவற்றாலும் சரும பாதிப்புகள் உருவாகும். இவற்றுக்கு சீரகம், ஓமம், கார்போக அரிசி இவற்றைத் தேங்காய் பாலில் அரைத்து உடலில் தடவி சிறிது நேரம் குளித்தால் நல்லது.
கோடையில் தோலில் அரிப்பும், சினப்பும் ஏற்பட்டால் முன்னிரவில் கசகசாவை ஸ்பூன் எடுத்து தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தேய்த்துக் குளித்தால் அரிப்பு குறையும்.
அருகம்புல் சாறு கொண்டு தயாரிக்கப்படும் அருகம் புல் தைலம் மேல் பூச்சாக பயன்படுத்தினால் அரிப்பு, உடல் சூடு குறையும்.
வெயிலில் பயன்படுத்த சில முகத் தேய்ப்புகள் (Scrubs):
1. உலர்ந்த ஆரஞ்சுத் தோல், சமைத்த ஓட்ஸ் + பாதாம் பருப்பு இவை ஒவ்வொன்றும் ஒரு கப் எடுத்து மிக்ஸியில் பொடித்து கலந்து கொள்ளவும். பொடியை சிறிது எடுத்து வெதுவெதுப்பான நீரில் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் அல்லது அரை மணி நேரம் கழித்து கழுவவும். இதனால் அழுக்குகள் நீங்கும்.
2. உலர்ந்த சருமத்திற்கேற்ற 'மாஸ்க்': இரண்டு தேக்கரண்டி அளவு பால் எடுத்துக் கொண்டு அத்துடன் இரண்டு மேஜைக் கரண்டி தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவவும். சம அளவு ரோஜா பன்னீர், கிளிசரின் எடுத்து இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் Moisturiser ஆக பயன்படுத்தலாம்.
3. எண்ணெய்ப் பசை உள்ள சருமத்திற்கு ஒரு தக்காளியிலிருந்து எடுக்கப்பட்ட கூழுடன், முல்தானி மட்டி சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவிக் கொள்ளவும். முகத்தில் இந்த கலவை உலர்ந்து போகும் வரை விட்டு, பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.
4. இயல்பான ( நார்மல் ) சருமத்திற்கு மஞ்சள் பொடியை பாலில் குழைத்துத் தடவி, அரை மணி அல்லது ஒரு மணி நேரம் கழித்துத் கழுவவும். சந்தனப் பொடியுடன் ரோஜா பன்னீர் சேர்த்து குழைத்து தடவி வரவும். கருமை திட்டுக்களையும் இந்த கலவை போக்கும். இரவு முழுவதும் இந்த கலவை முகத்தில் இருக்கட்டும்.
- மேக்கப் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வைத்துள்ளனர்.
- சிறந்த பிராண்ட் கொண்ட டோனர் வாங்குவதும் அவசியம்.
பெரும்பாலும் மேக்கப் பற்றிய தெளிவான புரிதல் அதிகப்படியான பெண்களுக்கு இருப்பதில்லை. மேக்கப் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வைத்துள்ளனர் என்றே சொல்லலாம்.
எனவே, நிபுணர்கள் இது குறித்து சில தெளிவான ஆலோசனைகளையே முன் வைக்கின்றனர். அதிலும் குறிப்பாக எந்த வகையான மேக்கப் போட வேண்டும், எது சருமத்திற்கு சிறந்த ஒன்று, மேக்கப் போடுவதற்கு முன் சருமத்தை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
கிளென்சிங்:
மேக்கப் போடுவதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது கிளென்சிங் தான். உங்கள் தோல் வகையுடன் நன்றாக பொருந்தும் கிளென்சிங்கை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். இது உங்கள் சருமத்தின் அனைத்து அசுத்தங்களையும் சுத்தப்படுத்தும். மேலும் இந்த செயல்முறையை மெதுவாக செய்தல் நல்லது. பிறகு உங்கள் சருமத்தை சிறிது நேரம் உலர வைக்கவும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எக்ஸ்போலியேஷன்:
இறந்த சரும செல்களை அகற்ற எக்ஸ்ஃபோலியேஷன் அவசியம். மேக்கப்-ஆனது வறண்ட சருமத் திட்டுகளை மட்டுமே வெளிப்படுத்துகிறது, எனவே மேக்கப்பிற்கு முன் எக்ஸ்ஃ போலியேஷன் உங்களுக்கு மென்மையான மேற்பரப்பைக் கொடுத்து மேக்கப்பை எளிதாக பயன்படுத்துவதற்கும் உதவும். குறிப்பாக நீங்கள் மேட் லிப்ஸ்டிக் பயன்படுத்தினால், உங்கள் உதடுகளையும் எக்ஸ்ஃபோலியேட் செய்ய மறக்காதீர்கள்.
டோனர்:
டோனிங் முறை என்பது துளைகளை சுருக்கி சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. மேக்கப் தோலின் ஆழமான அடுக்கில் நுழைவதற்கு இது ஒரு தடையாகவும் செயல்படுகிறது. டோனிங்கிற்கு குளிர்ந்த நீரையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
மேலும், இது சருமத்துளைகளை சுருக்கி, மேக்கப்பை மிருதுவாகப் பயன்படுத்துவதற்கு பெரிதும் உதவுகிறது. சிறந்த பிராண்ட் கொண்ட டோனர் வாங்குவதும் அவசியம்.
சீரம்:
சருமப் பராமரிப்பு சீரம்கள் மேக்கப்பிற்கு ஒரு சிறந்த வழியாகும். ஏனெனில் இது சருமத்திற்கு சிறந்த ப்ரைமராக செயல்பட உதவுகிறது. சீரம் சருமத்தை நன்கு ஹைட்ரேட் செய்து, நீண்ட நேரம் நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும் இது உங்கள் சருமத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்திருக்க வழி செய்கிறது.
மாய்ஸ்சரைசர்:
உங்கள் தோல் வகையைப் பொருட்படுத்தாமல், மேக்அப் பயன்பாட்டிற்கு உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். இது உங்கள் தோலின் மேல் மேக்கப் அழகாக இருப்பதையும், நாள் முழுவதும் வசதியாக இருப்பதையும் உறுதிசெய்கிறது. அதே போன்று, உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தாலும் இதை பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த செயல்முறையாகும்.
SPF அவசியம்:
சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிட வேண்டி இருந்தால், சன்ஸ்கிரீன் லோஷன் அல்லது கிரீம் பயன்படுத்துவதற்கு மறக்காதீர்கள். ஒருவேளை இதை பயன்படுத்திய பிறகு உங்கள் சருமம் க்ரீஸாக உணர்ந்தால், அதிகப்படியான எண்ணெயை சரிசெய்ய டிஷு பேப்பரை பயன்படுத்தவும்.
பிரைமர்:
ப்ரைமர் உங்களின் மேக்கப்பை நீண்ட நேரம் தக்க வைக்க உதவுகிறது. ப்ரைமர்கள் உங்கள் மேக்கப் பயன்பாட்டிற்கு ஒரு மென்மையான தளத்தை உருவாக்குவதோடு, உங்கள் மேக்கப்பையும் அழகாக எடுத்துக்காட்டுகிறது. ஒரு நல்ல தரமான ப்ரைமருக்கு, துளைகளை மங்கச் செய்து, மேக்கப்பிற்காக சருமத்தை தயார் செய்யவும், சருமத்தை நன்கு நீரேற்றமாக வைத்திருக்க கூடிய சக்தி உள்ளது
- இயற்கையான அழகு பெற, செயற்கையான சோப்புகளும் கிரீம்களும் எதற்கு?
- அழகை மேம்படுத்திக் கொள்ள இயற்கையாக இருக்கும் சில பொருட்களே போதுமானது.
பொதுவாகவே பெண்கள் தங்களுடைய முகம் அழகாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதற்காக பல வகையான சோப்புகளையும், ஃபேஸ் வாஷ் கிரீம்களை பயன்படுத்தி முகத்தை கழுவும் பழக்கம் இருக்கும். இயற்கையான அழகு பெற, செயற்கையான சோப்புகளும் கிரீம்களும் எதற்கு? நம்முடைய அழகு கெட்டுப் போகாமல் இருக்கவும், அந்த அழகை மேம்படுத்திக் கொள்ளவும், இயற்கையாக இருக்கும் சில பொருட்களே போதுமானது. இப்படிப்பட்ட இயற்கையான பொருட்களை எல்லாம் தவிர்த்துவிட்டு, செயற்கையான பொருட்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம்.
முகத்தை தினந்தோறும் சோப்பில் கழுவாமல், இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து கழுவி வாருங்கள். நல்ல வித்தியாசம் தெரியும். இது ஒரு சுலபமான முறையும் கூட. அது என்ன முறை என்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் முல்தானி மெட்டி தூள், தக்காளி பழம் அவ்வளவுதான். இரண்டு ஸ்பூன் முல்தானிமெட்டி தூளுடன், 2 மேசைக்கரண்டி தக்காளி பழ விழுதை நன்றாக கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும். நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த விழுதினை உங்களது முகத்தில் தடவி 5 நிமிடங்கள் லேசாக மசாஜ் செய்து விட வேண்டும். வட்ட வடிவில் மசாஜ் செய்வது சிறந்தது. கீழ் பக்கம் இருந்து மேல் பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின்பு 2 நிமிடங்கள் கழித்து லேசாக உலர்ந்தது வரும் நிலையில், தண்ணீர் போட்டு முகத்தை சுத்தமாக கழுவி விடலாம்.
இந்த முறைப்படி காலை ஒரு வேளை, மாலை ஒருவேளை சோப்புக்கு பதில் இந்த விழுதை பயன்படுத்தி உங்களது முகத்தை கழுவி வாருங்கள். உங்கள் முகத்தில் இருக்கும் தேவையில்லாத ஒயிட் டெட் செல்ஸ், பிளாக் டெட் செல்ஸ், முகப்பரு போன்ற பிரச்சனைகள் எல்லாம் நீங்கி, முகம் பொலிவு பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இந்த முல்தானி மெட்டியானது உங்களது முகத்தில் தேவையில்லாமல் எண்ணெய் வடியும் தன்மையைக் கட்டுப்படுத்தும். சருமத்தை மென்மையாக்கும். தக்காளிப் பழ விழுதானது, உங்கள் முகத்தில் படிந்திருக்கும் தேவையற்ற அழுக்குகளை நீக்க உதவியாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் இந்த தக்காளி பழ விழுதானது, உங்களது தோலின் நிறத்தை அதிகப்படுத்திக் காட்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. தினம்தோறும் இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்களது முகத்தில் கட்டாயம் வித்தியாசம் தெரியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.






