என் மலர்
அழகுக் குறிப்புகள்
கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். நிறைய பேர் சன்ஸ்கிரீன் கிரீம்களை சரும பாதுகாப்புக்கு பயன்படுத்துவார்கள். சிலருக்கு அதிலிருக்கும் ரசாயனங்கள் ஒவ்வாமை பிரச்சினையை ஏற்படுத்தும். அதற்கு மாற்றாக இயற்கையாக கிடைக்கும் வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தி சருமத்தை சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கலாம்.
கற்றாழை ஜெல் மற்றும் கற்றாழை கிரீம் வகைகள் சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டவை. அவற்றுள் ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்திருப்பதால் வெயில் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பதோடு சூரிய கதிர்வீச்சுகளால் சருமத்தில் ஏற்பட்டிருக்கும் சேதங் களையும் சரி செய்ய உதவும்.
சருமத்தின் மென்மைத்தன்மையை தக்கவைப்பதற்கு ‘ஷியா பட்டர்’ பயன் படுத்தலாம். அதிலிருக்கும் எண்ணெய் பசையானது சருமத்தில் எளிதாக உறிஞ்சப்பட்டு ஈரப்பதத்தை தக்கவைக்கும். சருமத்திற்கும், வெளிப்புற சுற்றுச் சூழலுக்கும் இடையே கவசமாக செயல்பட்டு சரும பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயத்தையும் அது குறைக்கும்.
ராஸ்பெர்ரி பழத்தில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் சருமத்தை வளமாக்கும் தன்மை கொண்டவை. புற ஊதாக்கதிர்களை சிதறடிக்கும் தன்மை கொண்டவை. சரும தடிப்பு மற்றும் தோல் அழற்சி போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்தவும் செய்யும். சிவப்பு ராஸ்பெர்ரி கிரீம், ராஸ்பெர்ரி எண்ணெய் போன்றவற்றையும் சருமத்திற்கு பயன்படுத்தலாம்.
பாதாம் எண்ணெய்யில் புரதம், வைட்டமின் ஈ, பி உள்ளிட்ட சத்துக்கள், கொழுப்புகள் அதிகம் இருக்கின்றன. அது புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும் என்பது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்கி இளமையையும் தக்கவைக்கும்.

வீட்டில் இருக்கும் பொருள்களை எப்படி எத்தனை முறை பயன்படுத்துகிறோம் என்பதை உணர்ந்து பயன்படுத்த வேண்டும். முகத்துக்கு அடிக்கடி பயன்படுத்தகூடாத பொருள்கள் என்னவென்று பார்க்கலாம்.
பொதுவாகவே பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்களை அழகாக காட்டிகொள்வதில் சற்று அதிகமாகவே மெனக்கெடுகிறார்கள். ஒரு பக்கம் பியூட்டி பார்லர் சென்று அழகு படுத்திகொள்கிறார்கள். பிறகு வீட்டிலிருக்கும் போதும் அழகு பராமரிப்பு செய்கிறார்கள்.
குறிப்பாக வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு அழகுப்படுத்தி கொள்வது சாத்தியம் என்பதை ஒப்பு கொள்ள வேண்டும். ஆனால் அப்படி பயன்படுத்தும் பொருள்களுடன் கூடுதலாக கலக்கும் பொருள்கள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். சமயங்களில் அவை சருமத்தில் ஒவ்வாமையை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு
முகப்பருவுக்கு என்ன செய்யலாம் கரும்புள்ளி வந்தால் என்ன போட வேண்டும், கருவளையம் மறைய செய்ய வேண்டியது என்ன முகம் வெள்ளையாகுமா இப்படியான அழகு தரும் கேள்விகளை முன் வைக்கும் பெண்கள் அதிகரித்துவருகிறார்கள். ஆனால் அப்படி பயன்படுத்தும் பொருள்கள் சருமத்துக்கு நல்லதா? அவை நிச்சயம் பலன் தருமா? இதனால் சரும பிரச்சனைகள் உண்டாகுமா? இது குறித்து யாரும் கேட்பதில்லை.
சருமத்தில் அதிகப்படியான பிரச்சனைகள் வந்த பிறகு தான் சரும பராமரிப்பு நிபுணர்களை நோக்கி ஓடுகிறார்கள். வீட்டில் இருக்கும் பொருள்களை எப்படி எத்தனை முறை பயன்படுத்துகிறோம் என்பதை உணர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.
வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாறு ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் நல்லது. ஆனால் அதை அப்படியே பயன்படுத்தாமல் சம அளவு தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். முகத்தின் மினுமினுப்புக்கு ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்துவதும் உண்டு. அதே போன்று முகத்தில் இறந்த செல்களை அகற்ற ஸ்க்ரப் செய்ய பயன்படுத்தும் சர்க்கரை, பேக்கிங் சோடா இவையெல்லாம் எப்போதாவது பயன்படுத்த வேண்டியவை. அப்படியே பயன்படுத்தினாலும் கண்களுக்கு அருகில் வாய்ப்பகுதியில், மூக்கு துவாரங்களில் இதை அதிகம் பயன்படுத்தவோ கொண்டு செல்லவோ கூடாது. அந்த இடங்கள் எல்லாமே மிருதுவானவை. அப்படியானால் இதையெல்லாம் பயன்படுத்தகூடாதா என்று கேட்கலாம்.
அழகு பொருள்களுடன் கலந்து உரிய முறையில் பயன்படுத்தலாம். அதே நேரம் அடிக்கடி பயன்படுத்தாமல் வாரம் ஒருமுறை மாதம் இருமுறை பயன்படுத்துவது ஆபத்தில்லை. சர்க்கரை மாற்றாக கோதுமை தவிடு பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறை சம அளவு நீர் கலந்து ஃபேஸ் பேக் -போடும் போது கலக்கலாம். பேக்கிங் சோடா இயன்றவரை தவிர்ப்பது நல்லது என்பது சரும பராமரிப்பு நிபுணர்களின் அறிவுரை. ஆப்பிள் சீட வினிகரை பயன்படுத்தும் போது மேலாக அதன் நீரை பயன்படுத்தினாலும் கூட போதுமானது. எப்படியாக இருந்தாலும் தினமும் இதை பயன்படுத்தினால் சருமம் எரிச்சலுக்கு உள்ளாகும்.
சிலர் அடிக்கடி பேஸ் மாஸ்க் பயன்படுத்துவது உண்டு. இதை அடிக்கடி முகத்துக்கு பயன்படுத்தும் போது சருமத்தின் முதல் அடுக்கில் இருக்கும் தோல்களும் உரிந்து சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும். வெயில் காலங்களில் சற்று கூடுதலாக எரிச்சலை உண்டாக்கும்.
இவை எல்லாவற்றையும் விட அழகை பாதிக்காமல் தரும் எண்ணற்ற பொருள்கள் உண்டு. காய்கறிகள், பழங்கள், சந்தனம், பாசிப்பயறு, மஞ்சள் போன்றவை சருமத்துக்கு பாதிப்பை உண்டாக்காது. எலுமிச்சை சிட்ரஸ் குணங்கள் நிறைந்ததால் அதிகப்படியாக பயன்படுத்தும் போது அவை எரிச்சலை உண்டாக்ககூடும் அவ்வளவே.

சிகைக்காய் பயன்படுத்துவதால் கேசம் வளர்கிறதோ இல்லையோ... வளர்ந்த கேசம் உதிராமல் இருப்பதற்கு நிச்சயம் உத்தரவாதமுண்டு. வீட்டிலேயே நறுமணசிகைக்காய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

நறுமண சிகைக்காய் தயாரிக்கத் தேவையான பொருட்கள்....
சிகைக்காய் - அரை கிலோ
பூந்திக்கொட்டை - விதை நீக்கியது 30
சுருள் பட்டை - 2 சுருள்
சுக்கு - 2 சிறு துண்டு (உடல் சூட்டைக் குறைக்க)
பார்லி - 2 டேபிள் ஸ்பூன் ( இதில் செலினியம், அயர்ன்,காப்பர் இருப்பதால் கேசத்தைச் சுத்தம் செய்ய உதவும்)
ஆளி விதை - 2 டேபிள் ஸ்பூன் (நேச்சுரல் கண்டீசனராகச் செயல்பட்டு முடிக்கு பளபளப்பைத் தரும்)
கொத்தமல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
நெல்லிக்காய்கள் - 10 (விதை நீக்கி நன்கு காய வைத்த மலை நெல்லிக்காய்கள் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்)
மிளகு - 1 டீஸ்பூன் ( கூந்தலின் வேர்ப்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும், முடியில் பூஞ்சைத் தாக்குதல் அல்லது பொடுகு நீக்கியாகவும் இது உதவும்.)
நன்னாரி வேர் - 12 சிறு துண்டு (உடலைக் குளிர்விப்பதுடன் சிறந்த நறுமணத்தையும் தரக்கூடியது.
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பாதாம் பருப்பு - 15 (பாதாமில் இருக்கும் புரதம் கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களைத் தருவதோடு வேர்ப்பகுதி வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கவும் உதவும்)
வெந்தயம் - 6 டேபிள் ஸ்பூன் ( சிகைக்காயில் நுரை வருவதற்கும் உச்சந்தலையில் சூட்டைத் தணிக்கவும் உதவும்)
கடலைப் பருப்பு - 6 டேபிள் ஸ்பூன் (கூந்தலிலுள்ள அழுக்கைப் போக்கி கூந்தல் மென்மையாக உதவும்)
பச்சரிசி - 6 டேபிள் ஸ்பூன் (சிகைக்காயை வடிகஞ்சியில் கலந்து கூந்தலில் தடவுவதற்குப் பதிலாக நேரடியாக பச்சரிசியும் சேர்க்கலாம்.. இது கூந்தலை சுத்தப் படுத்துவதோடு பளபளப்பையும் தரும்)
உளுந்து - 6 டேபிள் ஸ்பூன்
பொதுவாக சிகைக்காய் பொடி தயாரிப்பில் பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள் அனைத்துமே உடலுக்குக் குளிர்ச்சி அளித்து உடல் சூட்டைக் குறைக்கக் கூடியவையாகவே இருக்கும். ஆனால், அது சைனஸ் பிரச்னை இருக்கக் கூடிய சிலருக்கு ஒத்து வராது. அப்படியான நேரங்களில் நாம் சிகைக்காய் பொடிக்கான அடிப்படைப் பொருட்களுடன் குளிர்ச்சியை சமப்படுத்தக்கூடிய வகையிலான சில பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை....
மேலே சொல்லப்பட்ட அளவு பொருட்களை எடுத்துக்கொண்டால் அரை கிலோவுக்கும் அதிகமான நறுமண சிகைக்காய்த் தூள் கிடைக்கும். இவற்றை நன்கு காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வாங்க வேண்டும். வீட்டில் மிக்ஸியில் அரைப்பது வேலைக்கு ஆகாது. அதோடு சிகைக்காய் அரைத்து வாங்கியதும் அதில் திரிபலா சூரணம் மூன்று டீஸ்பூன் சேர்த்துக் கொண்டால் வாதம், பித்தம், கபத்தினால் உண்டாகக் கூடிய தொல்லைகளையும் தவிர்க்கலாம். திரிபலா சூரணம் என்பது கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காயின் கலவையே! திரிபலாவை அடுத்து சிகைக்காய்த்தூளோடு அதிமதுரப் பொடியும் 1 டீஸ்பூன் சேர்த்தால் நேச்சுரல் ஹெர்பல் ஷாம்பூவான நறுமண சிகைக்காய்த்தூள் பயன்படுத்தத் தயாராகி விட்டது என்று அர்த்தம்.
அவரவர் கூந்தலின் நீளத்துக்கு ஏற்ப 1 ஸ்பூனோ, 2 ஸ்பூன்களோ நறுமண சிகைக்காய் எடுத்துக் கொண்டு அதை வெது வெதுப்பான வெந்நீரில் கரைத்து தலையில் கூந்தலின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை படும் படி நன்கு தேய்க்கவும். சுமார் 20 நிமிடங்கள் அப்படியே காய விட்டு சிகைக்காயில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகைகள் மற்றும் வாசனைப்பொருட்களின் சத்துக்கள் எல்லாம் கூந்தலில் இறங்கும் வண்ணம் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கூந்தலை நன்கு அலசி எடுக்கவும். அவ்வளவு தான் வேறு எதுவும் செய்யத் தேவை இல்லை.

ஆண்களின் சௌகரிய ஆடை டி ஷர்ட்ஸ். குறிப்பாக இந்த வகை டி ஷர்ட்ஸ்ஸ் வைத்திருந்தால் போதும் உங்கள் தோற்றத்தை நொடியில் அழகாக, கவர்ச்சியாக மாற்றலாம்.
ஆண்களின் சௌகரிய ஆடை டி ஷர்ட்ஸ். அதை அணியும் விதத்தில்தான் ஸ்டைலும் இருக்கிறது. குறிப்பாக இந்த வகை டி ஷர்ட்ஸ்ஸ் வைத்திருந்தால் போதும் உங்கள் தோற்றத்தை நொடியில் அழகாக, கவர்ச்சியாக மாற்றலாம். டி ஷர்ட்ஸ் அணியும்போது மற்றொரு சிறப்பு என்னவெனில் உங்கள் வயதான தோற்றத்தில் அல்லாமல் இளமையாக தெரிவீர்கள். அவை என்னென்ன பார்க்கலாம்.
பிளெயின் டி ஷர்ட்ஸ் : நீங்கள் ஃபிட்டானவர் எனில் உடல் தோற்றத்தை வெளிப்படுத்த பிளெயின் டி ஷர்ட்ஸ் பொருத்தமாக இருக்கும். இதற்கு ஏற்ற ஜீன்ஸ் அணிந்துகொள்ளுங்கள். பிளெயின் டி ஷர்ட்ஸ் அணிந்து அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் ஷர்ட் அணிந்தால் பெப்பியான தோற்றம் கிடைக்கும்.
ஹென்லே டி ஷர்ட்ஸ் : ரவுண்ட் காலர் வைத்து பட்டன்கள் வைத்து வரும் இந்த டி ஷர்ட்ஸ் உங்களுக்கு மாஸ் தோற்றத்தை அளிக்கும். லாவண்டர், மஞ்சள் என லைட் ஷேட்ச் கொண்ட டி.ஷர்டுகளை அணியும்போது உங்கள் தோற்றமும் ரிச்சாக இருக்கும். இதற்கு ஜீன்ஸ், கார்கோ பேண்ட் அல்லது ஷார்ட்ஸ் அணிந்தாலும் எடுப்பாக இருக்கும்.
லாங் ஸ்லீவ் டி ஷர்ட்ஸ் : விண்டர் அல்லது டிராவலின் போது இந்த லாங் ஸ்லீவ் டி ஷர்ட்ஸ் எடுப்பாக இருக்கும். இதிலேயே பிரிண்டட், ஸ்ரைப்ஸ் கொண்ட டி ஷர்ட்ஸ்டுகளும் அணியலாம். இதனால் உங்கள் வயதும் குறைவாகத் தெரியும்.
பிரிண்டட் டி ஷர்ட்ஸ் : பிரிண்டட் டி ஷர்ட்ஸ்ஸ் ஒரு வகையான கம்யூனிகேஷன் சிக்னல் தரும். உங்களைப் பற்றிய ஸ்டேட்மெண்டை அளிக்கும். இதுவும் ஒருவிதத்தில் உங்களைப் புரிந்துகொள்ளவும், மற்றவர்களை சட்டென பார்க்க வைக்கவும் உதவும்.
ஸ்ட்ரிப் டி ஷர்ட்ஸ் : கிளாசிக் தோற்றத்தை அளிக்க ஸ்ட்ரிப் டி ஷர்ட்ஸ்தான் பெஸ்ட். இந்த டி ஷர்ட்ஸ் அணிந்து எந்த வகையான ஸ்டைலையும் பின்பற்றலாம். இந்த டி.ஷர்டுகளுக்கு மேல் ஓவர் கோட் அணிந்தாலும் கச்சிதமாக இருக்கும். இதற்கு மேட்சாக ஜீன்ஸ் அணிந்துகொள்ளலாம்.
காலர் டி ஷர்ட்ஸ் : இது சற்று செமி ஃபார்மல் தோற்றத்தை உண்டாக்கும். பலரும் அலுவலகத்தில் கேசுவல் ஆடைகள் அணியலாம் என்றதும் முதலில் தேர்வு செய்வது காலர் டி ஷர்ட்ஸ்டுகள்தான். இதற்கும் ஜீன்ஸ் அணியலாம். பீச் லுக்கிற்கும் பொருத்தமான சாய்ஸ்.

கோடைக்காலத்தில் பெண்களுக்கு ஸ்கர்ட் அணிவது சிறந்த சாய்ஸ். ஸ்கர்ட்டுக்கு மேட்சாக எந்த மாதிரியான டாப்ஸ் அணிந்து மிக்ஸ் மேட்ச் செய்யலாம் என்று பார்க்கலாம்
கோடைக்காலத்தில் பெண்களுக்கு ஸ்கர்ட் அணிவது சிறந்த சாய்ஸ். அதுவும் பருத்தித் துணியால் தைக்கப்பட்ட ஸ்கர்ட்டுகள் வெயிலுக்கு கச்சிதமான ஆடையாக இருக்கும். ஸ்கர்ட்டுக்கு மேட்சாக எந்த மாதிரியான டாப்ஸ் அணிந்து மிக்ஸ் மேட்ச் செய்யலாம் என்று பார்க்கலாம்.
ஷார்ட் டாப் மற்றும் ஸ்கர்ட் : முழு நீள ஸ்கர்ட் அல்லது ஷார்ட் ஸ்கர்ட் எதுவானாலும் அதற்கு இடுப்பு அளவு இருக்கும் ஷார்ட் டாப்ஸ் பொருத்தமாக இருக்கும். ஷார்ட் டாப்பும் பருத்தியாக இருக்க வேண்டும். மினிமல் டிசைன் அல்லது பிளெயின் டாப் அணியலாம்.
ஷார்ட் டாப்பிலேயே உங்களுக்கு பிடித்த ஸ்டைலில் ஸ்லீவ் இல்லாத டாப், ஷார்ட் ஸ்லீவ் அல்லது லாங் ஸ்லீவ் என விருப்பம்போல் மேட்ச் செய்துகொள்ளுங்கள். அதேபோல் இந்த டாப்ஸுகளுக்கு எம்பராய்டரி வேலைபாடுகள் கொண்ட ஓவர் கோட் அணிந்தால் முழுமையான தோற்றம் கிடைக்கும்.
குர்த்தா மற்றும் ஸ்கர்ட் : தற்போது குர்த்தாவிற்கும் ஸ்கர்ட் அணிவது டிரெண்டாக உள்ளது. எனவே முழு நீள குர்த்தா மற்றும் அதற்கு எதிர் நிறத்தில் ஸ்கர்ட் அணிந்தால் டிரெண்டியாக இருப்பீர்கள்.
ஷார்ட் குர்த்தா : ஷார்ட் குர்த்தா என்பது தொடை அளவு நீளம் இருக்கும். இதுவும் ஸ்கர்ட்டிற்கு ஏற்ற சாய்ஸ்.
ஷர்ட் மற்றும் ஸ்கர்ட் : ஸ்கர்ட்டிற்கு மேட்சாக பலரும் தற்போது ஷர்ட்தான் அணிகின்றனர். இதை சினிமா செலிபிரிட்டிகளும் புது டிரெண்டாகப் பின்பற்றி வருகின்றனர். இதை நீங்களும் முயற்சித்தால் செலிபிரிட்டி தோற்றத்தில் ஜொலிப்பீர்கள்.

சரும பிரச்சனைகளான எரிச்சல், வறட்சி, அதிகப்படியான எண்ணெய், கருமையான சருமம், மென்மையிழந்த சருமம் போன்றவற்றில் இருந்து ரோஸ் வாட்டர் எப்படி பாதுகாக்கிறது என தெரிந்துகொள்ளுங்கள்...
முகம் சோர்ந்து, பொலிவிழந்து காணப்படும் போது ரோஸ் வாட்டரை சருமத்தில் தெளித்தாலோ அல்லது முகத்தை துடைத்து எடுத்தாலோ, முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
ரோஸ் வாட்டர் ப்ரிட்ஜில் வைத்து, அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்கள் அழகாக காணப்படும்.
தினமும் குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க செய்யும். சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையாகவும் காட்டும்.
வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைத்து எடுத்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறும்.
கஸ்தூரி மஞ்சள் மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும். பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும். கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.
கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும். கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும். சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாராமல் தடுக்கும்.

வீட்டில் செய்யும் ஹெர்பல் ஃபேஸ்பேக் (Herbal Face Pack) சருமத்தில் ஏற்படும் கருத்திட்டுக்களை நீக்கும். முகத்தைப் பளிச்சிட வைக்கும்.
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 3/4 கப்
உலர்ந்த ரோஜா இதழ்கள் - 3/4 கப்
பாதாம் - 8
ஹெர்பல் பேஸ்பேக்(Herbal Face Pack) செய்முறை:
மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்சி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்து கொள்ளவும். பின்பு அவற்றை ஒரு கண்ணாடி ஜாரில் சேமித்து வைத்துக்கொள்ளவும். இந்த கலவையை தேவைப்படும் போது எடுத்து தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் பூசி சிறிது நேரம் நன்றாக தேய்த்து, பின்பு குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
ஹெர்பல் ஃபேஸ்பேக் பயன்கள்:
இந்த ஹெர்பல் ஃபேஸ்பேக்(Herbal Face Pack) போட்டால் வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகள் போகும். இயற்கையாகவே சருமம் பளிச்சிடும். சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.
ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் :
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - அரை கப்
பச்சை பயறு மாவு - அரை கப்
கடலைமாவு - அரை கப்
ஓட்ஸ் பவுடர் - அரை கப்
ஹெர்பல் ஃபேஸ்பேக் செய்முறை:
இந்த 4 பொருட்களை ஒரு பவுலில் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். தேவையான அளவு பவுடரை எடுத்து, தண்ணீருடன் கலந்து முகம், கழுத்து ஆகிய இடங்களில் தேய்த்து கழுவலாம்.
ஹெர்பல் ஃபேஸ்பேக் பயன்கள்:
இந்த ஹெர்பல் ஃபேஸ்பேக்(Herbal Face Pack) சருமத்தில் ஏற்படும் கருத்திட்டுக்களை நீக்கும். பருக்களின் வடு நீங்கும். முகத்தைப் பளிச்சிட வைக்கும். சருமம் முழுவதும் ஒரே பளிச் நிறத்தைக் கொடுக்கும். சீரான ஸ்கின் டோன் கிடைக்கும். சருமம் மிருதுவாகும்.

புதிய கூந்தல் அலங்காரம் என்பது பெண்களுக்கு அழகை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் தருகிறது. அதனால் பெண்கள் வித்தியாசமான கூந்தல் அலங்காரங்களை விரும்புகிறார்கள்.
பெண்கள் கூந்தலை பேணிப் பாதுகாத்து, அடர்த்தியாக வளர்ப்பதே விதவிதமாக அலங்காரம் செய்துகொள்வதற்காகத்தான். புதிய கூந்தல் அலங்காரம் என்பது பெண்களுக்கு அழகை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் தருகிறது. அதனால் பெண்கள் வித்தியாசமான கூந்தல் அலங்காரங்களை விரும்புகிறார்கள். அது விரைவாக செய்து முடிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
1 முடியை நன்றாக சீவி ‘அயர்னிங் மெஷின்’ பயன்படுத்தி மென்மையாக ‘டச்’ செய்யுங்கள். நீளவாக்கிலான முடியைகொண்டவர்கள் ‘அயர்னர்’ பயன்படுத்தவேண்டியதில்லை. அகலமான பற்களைகொண்ட சீப்பைவைத்து நன்றாக சீவினாலே போதும். கூந்தலின் நுனிப் பகுதியில் மட்டும் பொருத்தமான நிறத்தில் ‘கலரிங்’ செய்திருந்தால், இந்த அலங்காரம் கூடுதல் அழகுதரும்.
2 கூந்தலின் அடிப்பகுதியில் மட்டும் சின்னச்சின்ன சுருள்களை உருவாக்கலாம். அடிப்பகுதி கூந்தலை சிறுசிறு பிரிவுகளாகப் பிரித்து அதன் நுனிப் பகுதிகளில் மட்டும் சுருளை வட்டங்களைவைத்து சுருள் உருவாக்கவேண்டும். நடுப் பகுதியில் குறைந்த அளவு முடிகளில் கூடுதல் சுருள்களை உருவாக்கினால் பார்க்க அழகாக இருக்கும்.
3 உருவாக்கிய சுருளுக்கு உள்ளே விரலைவிட்டு இழுத்து, அதை அலைபோல் ஆக்கவேண்டும். இயற்கையான அழகுக்காக இவ்வாறு செய்யவேண்டும். அதன் பின்பு மேலே இருந்து சுருளாக்கப்பட்ட அனைத்து முடியையும் சீப்பால் சீவிவிடவேண்டும். இதுவும் ஒரு வித்தியாசமான அழகைத்தரும்.
4, வழக்கம்போல் ஓரமாக வகிடு எடுத்தோ, நடுவில் வகிடு எடுத்தோ தலையை சீவிக்கொள்ளலாம். உங்கள் முகத்திற்கு அது பொருந்துமா என்றெல்லாம் யோசிக்காதீர்கள். ஒரு நாள் நடுவகிடும், இன்னொரு நாள் ஓர வகிடுமாக எடுத்து அசத்துங்கள். ‘ஏய் உன் முகத்தில் ஏதோ நல்ல மாற்றம் தெரிகிறதே!’ என்று உங்கள் தோழிகளே சொல்வார்கள்.

கழுத்து கருமையடைந்து அதன் பின் அதனைப் போக்க சகல வித்தையும் கையாள வேண்டியது இருக்கும். ஆகவே வந்தபின் காப்பதை விட எப்போதுமே கழுத்தை பராமரித்தால், அது கருமையடையாமல், அழகாக இருக்கும்.
பெரும்பாலான பெண்கள் தங்கள் முகம், கால் கை என பார்த்து பார்த்து அழகுப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் கழுத்தை மறந்துவிடுவார்கள். இன்னும் சிலர் கழுத்திற்கு சோப்பு கூட போட மாட்டார்கள்.
இப்படி கவனிப்பாரின்றி இருக்கும்போது, கழுத்து கருமையடைந்து அதன் பின் அதனைப் போக்க சகல வித்தையும் கையாள வேண்டியது இருக்கும். ஆகவே வந்தபின் காப்பதை விட எப்போதுமே கழுத்தை பராமரித்தால், அது கருமையடையாமல், அழகாக இருக்கும்.
உங்கள் கழுத்து கருமையடைய நிறைய காரணங்கள் உள்ளது. சரியான பராமரிப்பு இல்லாதிருத்தல், கர்ப்ப காலத்தில், ஹார்மோன் மாற்றங்களால், சூரிய கதிர்களால், தோலழற்சி, அலர்ஜி, தோல் கடினமாதல். ஆகியவற்றால் தோல் கருமையாகும். தோல் உங்களின் பழைய நிறத்திற்கு கொண்டு வர வீட்டிலேயே முயற்சிக்கலாம்.
தேவையானவை:
ஓட்ஸ் -2 டேபிள் ஸ்பூன்
தயிர் அல்லது யோகார்ட் -2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு சில சாறு
ஓட்ஸ் கழுத்திலுள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. கருமையை போக்கி நிறத்தினை கூட்டுகிறது. தயிர் ஒரு இயற்கையான ப்ளீச் ஆகும். கருமையையும் சருமத்தில் படியும் அழுக்குகளையும் சீக்கிரம் அகற்றிவிடும். கழுத்தில் தொற்று இருந்தாலும், கருமையாகும். தொற்றினை நீக்குவதில் தயிரின் பங்கு முக்கியமாகும். எலுமிச்சையும் இயற்கையான ப்ளீச் ஆகும். கருமை நிறத்தை போக்கி, அழுக்கு, எண்ணெய் பசையை போக்குகிறது.
மேற்கூறிய பொருட்களை நன்றாக ஒன்றுடன் ஒன்று கலந்து, கலவையாக கழுத்தில் போட்டு, சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு,வெதுவெதுப்பான நீரினில் கழுவவும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால், கருமையற்ற, மிருதுவான கழுத்து திரும்ப உங்களுக்கு கிடைக்கும். அதனுடன் கழுத்திற்கு முறையான பயிற்சி செய்தால், கழுத்தில் எக்ஸ்ட்ரா சதை தொங்காமல், அழகாய் வைத்திருக்கலாம்.

நாம் உட்கொள்ளும் உணவு நமது முடியின் வளர்ச்சி, அடர்த்தி மற்றும் உறுதி தன்மை ஆகியவற்றில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உங்கள் தோல் மற்றும் முடி ஆகியவை ஆரோக்கியமானதாக இருப்பதற்கு நீங்கள் உண்ணும் உணவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. நாம் உட்கொள்ளும் உணவு நமது முடியின் வளர்ச்சி, அடர்த்தி மற்றும் உறுதி தன்மை ஆகியவற்றில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முடி வேர்களிலிருந்து வளர்கிறது என்பது நாம் அனைவரும் மறக்க முனைகின்ற உண்மை, எனவே வேர்களை ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள நமது தலையின் மேற்பகுதி மற்றும் மயிர்க்கால்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
சில சத்துக்களால் நமது முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் முடியும். மயிர்கால்கள் தொடர்ந்து புதிய முடியை உருவாக்குகின்றன. நாம் உண்கின்ற உணவுகள் முடி வளர்ச்சியையும் அதன் தரத்தையும் பாதிக்கும். வலுவான மற்றும் ஆரோக்கியமான முடி வளர சில புரதங்கள், கொழுப்புகள், ஊட்டச்சத்துகள் மற்றும் கனிமச் சத்துகள் நமக்கு தேவை. மாறுபட்ட மற்றும் சத்தான உணவு உட்கொள்வது நகங்கள் மற்றும் தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நபர்களிடம் இந்த வகை மாற்றங்களை எளிதாக காணமுடியும்.
வயது முதிர்வின் காரணமாக முடி வளர்ச்சி குறைய துவங்கும் மேலும் அடர்த்தியும் குறையும். சில மயிர்க்கால்கள் புதிய முடி வளர்ச்சியை நிறுத்திக்கொள்வதால் அடர்த்தி குறைவது ஏற்படும். மன அழுத்தம் மற்றும் சில உடல்நிலை காரணங்களாலும் திடீர் முடி உதிர்தல் ஏற்படும்.
மாமிசம், முட்டை, பீன்ஸ், பயறு மற்றும் பருப்பு வகைகளில் புரதம் மற்றும் அமீனோ அமிலங்கள் நிறைந்துள்ளன.
மீன் உணவுகளில் இந்த வகை ஒமேகா 3 கொழுப்பும், வைட்டமின் டி சத்தும் அடங்கியுள்ளன. இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதயம், கண், முடி மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. சைவம் உண்பவர்கள் சோயா பீன்ஸ், வால் நட் போன்றவற்றின் மூலம் இந்த வகை ஒமேகா 3 கொழுப்பு சத்துக்களை பெறலாம்.
முடி உதிர்தல் மற்றும் அடர்த்தி குறைவு பிரச்சனைகளுக்கு காரணம் பயோட்டின் குறைபாடு. சர்க்கரை வள்ளி கிழங்கு, கீரைகள், மாமிசம், பருப்பு வகைகள், மீன் முதலியவற்றில் அடங்கியுள்ள பயோட்டின் சத்து இந்த பிரச்சனையை சரி செய்யும்.
தானியங்களில் அடங்கியுள்ள செலீனியம் சத்து, காய்கறிகள், மாட்டிறைச்சி மற்றும் பழங்களில் நிறைந்துள்ள இரும்பு சத்து, அண்ணாச்சி பழம், தக்காளி போன்றவற்றில் அடங்கியுள்ள ஆண்டி ஆக்சிடண்ட்ஸ், முளை கட்டிய கோதுமை, கீரைகள், பூசணி விதைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள தத்தநாகம் சத்துகளும் முடி வளர்ச்சி, முடி உதிர்தல் ஆகிய பிரச்சனையை தீர்க்கும்.

தூங்க செல்லும் முன் சருமத்தை பராமரிக்க போதிய கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பகல் பொழுதில் சரும ஆரோக்கியத்தை பேணுவது பயனற்றதாகிவிடும்.
தூங்க செல்லும் முன் சருமத்தை பராமரிக்க போதிய கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பகல் பொழுதில் சரும ஆரோக்கியத்தை பேணுவது பயனற்றதாகிவிடும். இப்போது தூங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டியவை என்ன? என்பதை பற்றி இங்கு காண்போம்.
இரவில் தூங்க செல்லும் முன் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். ஆனால் முகத்தை அதிகமாக அழுத்தி தேய்த்து கழுவக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். அது சருமத்தில் உள்ள துவாரங்கள் திறக்க வழிவகுப்பதுடன் அதிலிருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றி விடும்.
மேக்கப் போட்டிருந்தால், எண்ணெய் தன்மை கொண்ட கிளிசரினை பயன்படுத்தி முதலில் மேக்கப்பை நன்கு நீக்க வேண்டும். அதன் பின் தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். வாரம் இருமுறை முகத்திற்கு நீராவி பிடிப்பது மிகவும் நல்லது. அது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் மற்றும் தூசுகளை நீக்கிவிடும்.
ஈரமான தலையுடன் தூங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தலைமுடி பிசுபிசுப்பு தன்மையுடன் மாறி, மயிர்கால்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். தலைமுடியை இறுக்கமாக கட்டிக்கொண்டு தூங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக நீளமான கூந்தல் உள்ளவர்கள்
தலைமுடியை தளர்த்தி கட்டிக்கொள்வது நல்லது.
தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். அது உடலுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. மேலும் கண்களுக்கு அடியில் கருவளையம் ஏற்படுவதை தவிர்க்கும். மேலும் முகம் சோர்வடைவதும் தடுக்கப்படும்.

இன்றைய அனைத்து அழகு சாதன பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது சோற்று கற்றாழை. இது சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன் சரும நோய்களையும் குணப்படுத்துகிறது.
சோற்றுக்கற்றாழை பல மருத்துவக்குணங்களை கொண்டு அழகு பொருட்கள் தயாரிப்பிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் ஒரு அற்புதமான இயற்கை பொருள் இது. சருமங்களில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை சோற்றுக்கற்றாழைக்கு உண்டு. இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள சோற்று கற்றாழை உடல்நல நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக தெரிந்துகொள்வோம்.
1. தலைமுடி வளர்ச்சி குறைவாக உள்ளவர்கள் சோற்று கற்றாழை மடலை நீக்கி, சாறெடுத்து அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 45 நாட்கள் வெயிலில் காய வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வந்தால் தலைமுடி நன்கு செழித்து வளரும்.
2. கற்றாழையில் உள்ள ஜெல்லை சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உங்கள் இளமை நீண்ட நாள் நிலைக்கும்.
3. சிலருக்கு முகம் வறண்டு வயதான தோற்றம் போல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் உங்கள் முகம் பளிங்கு போல ஜொலிக்கும்.
4. கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடித்தது வந்தாலே உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் முகத்தில் ஏற்படும் கருந்திட்டுகள் மறைந்து விடும்.
5. சிலருக்கு சருமம் வறண்டு உலர்ந்து காணப்படும். இப்படிப்பட்டவர்கள் கற்றாழை ஜெல்லை தொடர்ந்து முகத்தில் தேய்த்து வர சருமம் வறண்டு போகாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படும்.
6. பாத எரிச்சல் மற்றும் பாத வெடிப்பு உள்ளவர்கள் இரவு படுக்குமுன் கற்றாழையின் நுங்கு பாகத்தினை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுத்தால் இந்த நோய் குணமாகும்.
7. தழும்புகள், முகத்திலுள்ள கரும்புள்ளிகள், உலர்ந்த சருமம் என சரும நோய்கள் எதுவாக இருந்தாலும், சிறிது கற்றாழை சாற்றை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். இதனை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவி வேண்டும். அப்போது முகம் பொலிவு பெறும்.
8. இன்றைய அனைத்து அழகு சாதன பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது சோற்று கற்றாழை. இது சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன் சரும நோய்களையும் குணப்படுத்துகிறது.