என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    உதட்டை அழகாக காட்ட லிப்ஸ்டிக் போடும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மெல்லிய, தடிமனான, சொப்பு என உதடுகளின் அமைப்பு, நிறம் ஆகியவற்றை பொருத்து லிப்ஸ்டிக் பூசி மேலும் அழகாக்குங்கள். முகத்துக்கு ஏற்ற மாதிரி இல்லாமல்
    சிறிதாக சொப்பு போன்ற வாய் உள்ளவர்கள் லிப்ஸ்டிக்கை உதடுகளின் இரு முனைகளிலும் சற்று அதிகப்படியாக பூசுங்கள்.

    வாய் சற்று பெரிதாகத் தெரியும். தடித்த உதடுகள் உள்ளவர்கள் உதட்டுக்கு உட்புறமாக லிப்ஸ்டிக் போடுங்கள். இயற்கை நிற லிப்ஸ்டிக்கை லேசாகத் தடவினால் போதும். மெல்லிய உதடு உள்ளவர்கள் கீழ் உதட்டில் டார்க் நிறமும் லைட் நிறத்தை மேல் உதட்டிலும் பூசுங்கள். பிறகு உதட்டுக்கு வெளியில் பென்சிலால் கோடு போடுங்கள். தடித்த உதடு என்றால் உட்புறமாக போடுங்கள்.

    மாநிற பெண்கள் லைட் ஆரஞ்ச் கலர், கருப்பு நிற பெண்கள் லைட் சிவப்பு, சிவப்பு பெண்கள் லைட் ரோஸ் (பிங்க்) லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். உதடுகளின் ஈரப்பசையை நீக்கிவிட்டு லிப்ஸ்டிக் போட்டால் சீக்கிரம் அழியாது. காலையில் லைட் கலர் லிப்ஸ்டிக்கும், மாலையில் பளிச் நிறத்திலும் போடுங்கள். ஆடைக்கு ஏற்ற நிறத்தைத் தேர்ந்தெடுத்து போடலாம்.

    டார்க் கலர் போட்டால் வயது அதிகமாக காட்டும். லைட் கலர் கவர்ச்சியாக இருக்கும். வீட்டில் இருக்கும் போது லிப்ஸ்டிக் வேண்டாம். அடிக்கடி உபயோகித்தால் உதடுகள் கருமையாகி விடும்.

    தலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை.
    நல்ல ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்த பராமரிப்பு மிக அவசியமான ஒன்றாகிறது. இன்றைய அவசரமான வாழ்க்கை முறையில் கூந்தலுக்கு அக்கறை செலுத்த யாருக்கு நேரம் இருக்கிறது.   அதுவும், பெரும்பாலானவர்களுக்கு தலையை சீவுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை. ப்ரீ ஹேர் என்பது இன்றைய தலைமுறையினரின் ஸ்டைலாக மாறி விட்டது.

    தலைக்கு குளித்தோமா, ஹேர் ட்ரையர் யூஸ் பண்ணி முடியை காய வைத்தோமா அத்தோடு நமது வேலை முடிந்தது என்று பலர் இருக்கின்றனர். தலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை.

    கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்தால், எனக்கு முடி கொட்டுகிறது என்று பலர் புலம்புவதுண்டு. அதற்காக எண்ணெய் தேய்க்காமல் இருக்கக்கூடாது. கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பதில் பல விஷயம் உண்டு. இதை முழுவதுமாக படித்தால் நீங்கள் இனி முடி உதிர்வு பற்றி கவலை கொள்ளவே தேவையில்லை. கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது என்பது மிகவும் நல்லது.  அதுவே, அளவிற்கு அதிகமாக எண்ணெய் தேய்த்தால் அதுவே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தேவைக்கு அதிகமான எண்ணெயை தலையில் தடவும் போது, ஸ்கால்ப்பில் உள்ள சரும துளைகள் மூடிக்கொள்ளும்.

    அதனால், அந்த இடத்தில் முடி வளர்ச்சி என்பது தடைப்படக் கூடும். முக்கியமாக, வாரத்திற்கு 2 முறை தான் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். அதுவும், தலைக்கு குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்தால் தான் கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருப்பதோடு, ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்படும்.  கூந்தலை வலுவாக்குவதற்கு எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியம். அதுவே, நீண்ட நாட்களுக்கு தலையில் எண்ணெயை அப்படியே விட்டு விட்டால் அது கூந்தலை பாதிக்கக்கூடும்.

    தலையின் சருமமானது இயற்கையாகவே, தலையில் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்காக ஒருவித எண்ணெய் பசையை உற்பத்தி செய்யக்கூடியது.  ஆனால், நீங்கள் தலையில் தேய்க்கும் எண்ணெயை அப்படியே விடுவதால் தலையில் அதிகப்படியான எண்ணெய் பசை சேரக்கூடும். அதனால், முகப்பரு மற்றும் தடிப்புகள் ஏற்படக்கூடும்.

    தலைக்கு குளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக எண்ணெய் தேய்க்கவும் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து விட்டு காலை எழுந்தவுடன் குளித்து விடவும். இதற்கு மேல் எண்ணெய் பசை தலையில் இருக்குமேயானால், அவை கூந்தலுக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தக் கூடும். இது போன்ற அதிகப் படியான எண்ணெய் பசை தலையில் சேருவதால் தான் முகத்தில் பரு போன்ற பிரச்சனை உருவாகிறது.

    எண்ணெய் தேய்ப்பதற்கான நேரத்தை நிர்ணயித்து கொண்டால், தேய்க்கும் அளவையும் நிர்ணயிப்பது தான் சிறந்தது. போதுமான அளவு எண்ணெய் தேய்த்தால் மட்டுமே கூந்தல் ஈரப்பதத்தை ஈர்த்துக் கொள்ளும். ஒருவேளை எண்ணெய் அதிகமாகி விட்டால் உடனே துடைத்து விடுங்கள்.

    பெரும்பாலான பெண்கள், தலைக்கு எண்ணெய் தேய்த்த உடனேயே மசாஜ் செய்ய ஆரம்பித்து விடுவர். அப்படி செய்தால் முடி கொட்ட தான் செய்யும். முதலில் எண்ணெய் தேய்ப்பதற்கு முன்பு கூந்தலை சிக்கலின்றி சீவிக் கொள்ளவும். பின்னர், எண்ணெய் தொட்டு மெதுவாக கைகளால் தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் முடி கொட்டுவது குறையும் அல்லது முடி கொட்டாது. தலையை சீவி பிறகு எண்ணெய் தேய்ப்பதால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் சீராகி, வேர்கள் வலுபெற்று, கூந்தலையும் ஆரோக்கியமாக வளரச் செய்யும்.

    பெரும்பாலானோர், எண்ணெயை கையில் ஊற்றி உள்ளங்கைகளில் தேய்த்து அப்படியே தலையில் தேய்ப்பதை வழங்கமாக கொண்டிருப்பர். இப்படி செய்தால் முடி கொட்ட தான் செய்யும். எப்போதும், எண்ணெயை ஒரு பவுளில் ஊற்றி அதை விரல்களால் தொட்டு, மெதுவாக ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் முடி கொட்டாமல் இருப்பதோடு, அனைத்து ஊட்டச்சத்துக்களும், கூந்தலுக்கு முழுவதுமாக கிடைக்கப்பெறும்.

    மேலும். எண்ணெயால் கிடைக்கக்கூடிய ஈரப்பதமும் முழுமையாக கிடைத்திடும். அது மட்டுமல்லாது, இப்படி எண்ணெய் தேய்த்தால் பொடுகு தொல்லை எனும் பேச்சுக்கே இடமிருக்காது. எண்ணெய் தேய்த்து கூந்தலுக்கு மசாஜ் செய்தவுடன் முடியை தூக்கி கட்டிக் கொண்டு பிற வேலைகளை பார்க்க சென்று விடுவர்.  இது மிகவும் தவறான செயல். எண்ணெய் தேய்த்தவுடன் ஸ்கால்ப்பானது மிகவும் மிருதுவாக இருக்கும். அதுபோன்ற சமயத்தில் கூந்தலை இறுக்கமாக தூக்கி கட்டும் போது, கூந்தல் அதிகமாக உதிர தான் செய்யும்.

    தேய்க்கும் எண்ணெய் வேர்களால் உறிஞ்சப்பட்டு, கூந்தலை மிருதுவாக்க வேண்டு மென்றால், எண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டாமல் ஃப்ரீயாக விட்டு விடுங்கள்.
    பெட்ரோலியம் ஜெல்லி தடிப்புகள், சிறிய வெட்டுக்காயங்கள், பாத வெடிப்புகள், உதடு வெடிப்புகளை மட்டுமில்லாமல் தலை முதல் கால் வரை பல்வேறு அழகு பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுகிறது.
    எல்லா வீடுகளிலும் பெட்ரோலியம் ஜெல்லி தடிப்புகள், சிறிய வெட்டுக்காயங்கள், பாத வெடிப்புகள், உதடு வெடிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.  ஆனால் இவற்றை தவிர பெட்ரோலியம் ஜெல்லி தலை முதல் கால் வரை பல்வேறு அழகு பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுகிறது. அவற்றை குறித்து இங்கு பார்ப்போம்.

    மேக் அப் ரிமூவர் தீர்ந்து விட்டதா? பதட்டப்பட வேண்டாம். சிறிது பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் எடுத்து மேக் அப்பை சுலபமாக எடுத்துவிடலாம்.

    உங்களுக்கு பிடித்த ஐ ஷாடோவை சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியுடன் சேர்த்தால் உங்களுக்கு பிடித்தமான லிப் க்ளாஸ் தயார்.

    நீண்ட நேரம் வெளியே சுற்ற வேண்டுமா? கவலைப்பட வேண்டாம். சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியை உங்கள் கை கால் முட்டிகளில், கைகளில், கால்களில் தடவிக் கொள்ளுங்கள். அதன் மீது உங்களுக்கு பிடித்தமான வாசனை திரவியத்தை பூசுங்கள். நாள் முழுவதும் மணமாக இருக்கும்.

    புருவங்கள் சரியான வடிவத்தில் இல்லையா? சிறிது பெட்ரோலியம் ஜெல்லி எடுத்து தடவி அழகான வடிவத்திற்கு கொண்டு வாருங்கள்.

    ஹேர் டை தடவும் பொழுது அது ஒழுகி உங்களின் நெற்றிக்கு வரலாம். எனவே, அதிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க, சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை உங்கள் நெற்றியில் தடவிகொள்ளுங்கள். இனி கறை படாது.

    தடிமனான முடி இருப்பவர்கள், அவர்களுக்கு பிடித்த ஹேர் ஸ்டைல் போடுவதில் பெரும் சிரமத்தை சந்திப்பார்கள். இந்த பிரச்சனைக்கும் சிறிது பெட்ரோலியம் ஜெல்லி தடவி, உங்களுக்கு பிடித்தமான ஹேர் ஸ்டைலை போட்டுக்கொள்ளுங்கள்.

    பழைய லிப்ஸ்டிக் உபயோகப்படுத்தி உங்களுக்கு சலிப்பாக இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்களின் பழைய லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவி, அதன் மீது சிறிது பெட்ரோலியம் ஜெல்லி தடவுங்கள். உதடுகள் பளபளப்பாக இருக்கும்.

    சிறிது சமையல் சோடா மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி சேர்த்து, முகத்தில் தடவ, சருமத்தில் உள்ள வறட்சியை போக்கி, ஈரப்பதத்தை வழங்கி, சருமத்தை மென்மையாக்குகிறது.

    சக்கரை மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி சேர்த்து சருமத்தில் தடவ, அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது.

    நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் இரவு கிரீம் உங்களுக்கு பிடிக்கவில்லையா? சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை முகத்தில் இரவு கிரீமாக தடவிக்கொள்ளுங்கள். காலையில் முகம் பளபளப்பாக இருக்கும்.

    நுனி முடியில் நிறைய பிளவுகள் உள்ளனவா? பார்லருக்கு சென்று முடி வெட்ட நேரமில்லையா? பதட்டப்பட வேண்டாம். சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை முடியில் தடவி உங்களுக்கு விருப்பமான ஹேர் ஸ்டைலை போட்டுக்கொள்ளுங்கள்.

    சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை கண் இமைகளில் படுக்க செல்வதற்கு முன் பூசுங்கள். இதனால் உங்கள் இமை முடிகள் ஈரப்பதத்துடனும் பளபளப்பாகவும் இருக்கும்.

    நெய்ல் பாலிஷ் வைக்கும் பொழுது, அது கை விரல்களில் படுகிறதா? இப்போது நெய்ல் பாலிஷை மிக சுலபமாக வைக்கலாம். சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை கை விரல்களில் சுற்றித்தடவி பின்பு நெய்ல் பாலிஷ் இடுங்கள். இப்போது நெய்ல் பாலிஷ் விரல்களில் படியாது.
    காபி நமக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமில்லாமல் நம் முகத்தை அழகூட்டவும் பயன்படுகிறது. இன்று காபி பொடியை வைத்து எப்படி சருமத்தை அழகாக்கலாம் என்று பார்க்கலாம்.
    காபி நமக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமில்லாமல் நம் முகத்தை அழகூட்டவும் பயன்படுகிறது. இன்று காபி பொடியை வைத்து எப்படி சருமத்தை அழகாக்கலாம் என்று பார்க்கலாம்.

    காபி தூள் 2 டீஸ்பூன் , ஏலக்காய் பொடி 2 ஸ்பூன் , தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை2 டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும்.

    2 டீஸ்பூன் காபி பொடியில் 1ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். இப்படி வாரம் ஒரு முறையாக செய்து பாருங்கள். நீங்களே ஆச்சரிய படும் அளவுக்கு உங்கள் முகம் பளிச்சிடும்.

    கற்றாழையை ஐந்து ஸ்பூன் எடுத்து மசித்துக்கொள்ளவும். அதோடு காபி பொடி கலந்து முகத்தில் 10 - 15 நிமிடங்களுக்கு ஸ்கர்ப் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

    4 ஸ்பூன் காபி தூளில் ஒரு கப் பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து முகம் கை , கால்கள் , கழுத்து போன்ற இடங்களில் தடவி 10 - 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

     4 ஸ்பூன் காபி தூள், 4 ஸ்பூன் பட்டர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கவும். முகத்தில் மட்டுமல்லாது கை கால் , கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து 10 - 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.

    சந்தனம், பருக்கள், முகப்பரு மற்றும் புண்கள் ஆகியவற்றைத் தடுக்கின்ற ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. சருமத்தில் தூசி மற்றும் மாசுபடும் போது பாக்டீரியா வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
    சந்தனம், பருக்கள், முகப்பரு மற்றும் புண்கள் ஆகியவற்றைத் தடுக்கின்ற ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. சருமத்தில் தூசி மற்றும் மாசுபடும் போது பாக்டீரியா வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது மேலும் தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் முகத்தில் பாதிப்படைந்த பகுதியில் சந்தனத்தை பாலுடன் கலந்து அந்த கலவையை பயன்படுத்தினால் அது தோலை பாதுகாக்க உதவும்.

    1. முகப்பரு மற்றும் பிளாக்ஹெட்ஸ் நீக்க

    சந்தன எண்ணெய் ஒரு தேக்கரண்டி , மஞ்சள் மற்றும் கற்பூரம் ஒரு சிட்டிகை கலந்து. முகப்பரு மற்றும் பிளாக்ஹெட்ஸ் நீக்க இரவு முழுவதும் ஃபேஸ்பேக் போடுங்கள். நீங்கள் அத்துடன் 1 தேக்கரண்டி சந்தன பவுடர், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் சில எலுமிச்சை சாறுகளை ஒரு பசையாக தயாரித்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் முகத்தில் தடவி அரை மணி நேரம் விட்டு விடுங்கள். பின்னர், உலர்ந்த பின்பு இதமான சுடுத் தண்ணீரில் முகத்தைக் கழுவுங்கள்.

    2. தோலை மென்மையாக்க

    சந்தன எண்ணெயை உங்கள் முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அதை விட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் இதமான சுடுத் தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.

    3. சூரியானால் ஏற்படும் கருமையை போக்குகிறது

    ஃபேஸ் பேக் தயார் செய்ய ஒரு தேக்கரண்டி வெள்ளரிச் சாறு, ஒரு தேக்கரண்டி தயிர், தேன் ஒரு தேக்கரண்டி, சில எலுமிச்சை சாறு மற்றும் சந்தன பவுடர் ஒரு தேக்கரண்டி பயன்படுத்துங்கள். இந்த கலவையாலான ஃபேஸ் பாக்கை உங்கள் முகத்தில் தடவவும், சுமார் 15 நிமிடங்களுக்கு அதை விட்டு விடுங்கள். இது சூரியனால் ஏற்பட்ட கருமை மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது.

    4. கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது

    1 டீஸ்பூன் சந்தனப் பவுடர் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து அதை முகத்தில் தடவி மசாஜ் செய்து அதை இரவு முழுவதும் விட்டு விடுங்கள். தொடர்ந்து இதைப் பயன்பாடுத்துவதால், கரும் புள்ளிகள் மறைந்துவிடும்.
     
    5. எண்ணெய் படிந்த சருமத்துக்கு

    சந்தன தூளை ரோஜா நீர் சில துளிகள் சேர்த்து கலந்து உங்கள் முகத்தில் தடவவும். அரை மணி நேரம் அதை விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
    முகம், கைகள், கால்களில் சரும பராமரிப்புக்கு செலுத்தும் கவனத்தை நிறைய பேர் பின்புறத்தில் இருக்கும் முதுகை பராமரிப்பதற்கு செலுத்துவதில்லை.
    முகம், கைகள், கால்களில் சரும பராமரிப்புக்கு செலுத்தும் கவனத்தை நிறைய பேர் பின்புறத்தில் இருக்கும் முதுகை பராமரிப்பதற்கு செலுத்துவதில்லை. முதுகு பகுதியை நன்றாக பராமரித்து வருவது அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம்.

    உடலில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக முதுகுதான் அமைந்திருக்கிறது. முகத்தையும், கைகளையும் அடிக்கடி சுத்தம் செய்து கொள்பவர்களுக்கு முதுகு பகுதி சட்டென்று நினைவுக்கு வராது. முகத்திற்கு ‘ஸ்க்ரப்’ செய்து இறந்த செல்களை நீக்குவதுபோல முதுகுக்கும் ஸ்க்ரப் செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.

    முதுகு பகுதியில் கருமை படிந்திருந்தால் எலுமிச்சை சாறை பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறு சருமத்தை இயற்கையாகவே பிளிச்சிங் செய்யும் தன்மை கொண்டது. பொலிவிழந்து போன சருமத்திற்கு பளபளப்பையும், பிரகாசத்தையும் கொடுக்கும். முதுகு பகுதியை சுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.

    சருமத்திற்கு ஈரப்பதம் எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோல் முதுகுக்கும் அவசியம். முதுகு பகுதியை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்திருப்பதற்கு ஈரப்பதம்தான் உதவும். முதுகு பகுதியின் சரும தன்மையை இயற்கையாகவே புதுப்பிக்கவும் உதவும். அங்கு ஈரப்பதம் இல்லாவிட்டால் சரும பராமரிப்பில் சிக்கல் நேரும்.

    முதுகுக்கு பொருத்தமான லோஷன் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். அது சரும பராமரிப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குளிக்கும்போது முதுகு பகுதியையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். குளிக்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் கை கால்களை கழுவுவதுபோல் வாரத்திற்கு மூன்று, நான்கு முறையாவது முதுகை நன்றாக கழுவ வேண்டும்.

    நீராவி பயன்படுத்தி சுத்தம் செய்வது சருமத்திற்கும், முதுகுக்கும் சிறந்த சிகிச்சையாக அமையும். மாதத்திற்கு ஒருமுறையோ, இரண்டு முறையோ நீராவி பிடிப்பது சரும துளைகளை திறக்க உதவும். சருமத்தில் இருக்கும் அழுக்குகள், நச்சுக்களை அழிக்கவும் செய்துவிடும். முகத்திற்கு நீராவி சிகிச்சை மேற்கொள்வது எளிதானது. வீட்டிலேயே எளிதாக நீராவி பிடித்துவிடலாம். முதுகு மற்றும் உடலுக்கும் நீராவி சிகிச்சை மேற்கொள்வது அவசியம். அத்தகைய சிகிச்சை வழங்கும் ஸ்பா, அழகு நிலையத்திற்கு மாதம் ஒருமுறை சென்று வரலாம். அதன் மூலம் முழுஉடலுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
    சந்தனம் பல விதமான மருத்துவ நலன்களைக் கொண்டுள்ளது. பருக்கள், கரும்புள்ளிகள், கருவளையங்கள், போன்ற சருமப் பிரச்சனைகள் முதல் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.
    மாசு நிறைந்த நகர வாழ்க்கையில் பருக்கள், கரும்புள்ளிகள், கருவளையங்கள், போன்ற சருமப் பிரச்சனைகள் சாதாரணமாக அனைவருக்கும் வர ஆரம்பித்துவிட்டது. ஆயுர்வேதத்தில் சிறப்புவாய்ந்த, உடலுக்கு அழகு சேர்க்கும் பல நன்மைகளைக் கொண்டது சந்தனம். சந்தனம் இயற்கையானது, நம்பகமானது, பயன்த்தரக் கூடியது. நறுமணம் நிறைந்த சந்தன மரத்திலிருந்து பெறப்பட்ட பழுப்பு நிறப் பவுடராக இந்த சந்தனம் கிடைக்கும். சந்தன எண்ணெய் பல விதமான தோல் பிரச்சனைகளுக்கு தீர்வழிப்பதில் சிறந்து விளங்குகிறது. சந்தனம் பல விதமான மருத்துவ நலன்களைக் கொண்டுள்ளது. எனவே பல சரும பிரச்சனைகள் தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.

    இதோ உங்கள் சருமத்திற்கு பயன்தரும் சந்தனத்தின் பயன்கள்

    1. கருமையை நீக்க உதவுகிறது

    சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து உங்களை காப்பாற்ற வேண்டியது அவசியம். சந்தனத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் சூரியனால் ஏற்படும் கருமையை அகற்ற உதவுகின்றன.

    2. அலர்ஜி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது

    அதன் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு அல்லது சூரியனின் கதிர்கள் காரணமாக ஏற்படும் எரியும் உணர்வைப் போக்க உதவுகிறது. சந்தன எண்ணெய் பூச்சிக் கடி அல்லது வேறு எந்த தோல் காயங்களுக்கும் சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாம்.

    3. சுருக்கத்தை போக்க பயன்படுகிறது

    சந்தனம் சருமத்தில் புரதங்களைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் உங்கள் தோலை அனைத்து வகை ஒரு பிரேக்அவுட், ஒவ்வாமை அல்லது சிராய்ப்புகளிலிருந்தும் பாதுகாக்கிறது. இது தோல் மென்மையான திசுக்களில் உள்ள சிறிய சுருக்கங்கள் மற்றும் துளைகளை இறுக்குகிறது. பலவிதமான ஃபேஸ் பக்ஸ், டோனர்களில், சந்தனம் முக்கிய பொருட்கள் ஒன்றாக பயன்படுத்தப்படுகின்றன.

     4. கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது

    சந்தனம், பருக்கள், முகப்பரு மற்றும் புண்கள் ஆகியவற்றைத் தடுக்கின்ற ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. சருமத்தில் தூசி மற்றும் மாசுபடும் போது பாக்டீரியா வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது மேலும் தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் முகத்தில் பாதிப்படைந்த பகுதியில் சந்தனத்தை பாலுடன் கலந்து அந்த கலவையை பயன்படுத்தினால் அது தோலை பாதுகாக்க உதவும்.
    கோடை காலத்தில் நிறைய பேருக்கு உச்சந்தலையில் நமைச்சல், அரிப்பு பிரச்சினை தலைதூக்கும். இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
    கோடை காலத்தில் நிறைய பேருக்கு உச்சந்தலையில் நமைச்சல், அரிப்பு பிரச்சினை தலைதூக்கும். தலைமுடியில் வியர்வையும், எண்ணெய்யும் படிந்திருப்பதே அதற்கு காரணமாக இருக்கும். ஷாம்பு போட்டு குளித்தால் சிலருக்கு சரியாகிவிடும். நமைச்சல் அதிகமாக இருந்தால் அழுக்கு படர்ந்துகொண்டிருப்பது, பேன் தொல்லை, ஒவ்வாமை, உச்சந்தலை சுத்தமாக பராமரிக்கப்படாவிட்டால் தோன்றும் தொற்று, ஷாம்பு ஒத்துக்கொள்ளாதது போன்றவை காரணமாக இருக்கலாம்.

    பொடுகு தொல்லைதான் உச்சந்தலையில் நமைச்சல் ஏற்படுவதற்கு பொதுவான காரணமாகும். அதனால் உச்சந்தலையில் பூஞ்சை, பாக்டீரியா போன்ற தொற்றுகள் உருவாகும். அதன் காரணமாக அரிப்பு பிரச்சினை உண்டாகும். உச்சந்தலையில் போதுமான ஈரப்பதத்தன்மை இல்லாவிட்டாலும் அரிப்பு ஏற்படலாம். தலைமுடியை சுத்தமாக பராமரிக்காதது, தலைமுடிக்கு பயன்படுத்தும் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதது, தலையில் அதிகபடியாக வியர்ப்பது போன்ற காரணங்களும் நமைச்சலை ஏற்படுத்தும். சில சமயங்களில் மன அழுத்தமும், உணவு பழக்கமும் கூட பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.

    பெரும்பாலானோர் நமைச்சல் பிரச்சினைக்கு தீர்வாக எலுமிச்சை சாறுவைத்தான் பயன்படுத்துவார்கள். உச்சந்தலை உள்பட கூந்தல் முழுவதும் எலுமிச்சை சாறை கொண்டு அழுத்தி தேய்த்துவிட்டு சில நிமிடங்கள் கழித்து குளித்துவிடலாம். அரிப்பு நீங்குவதோடு முடியும் வலிமையாகும். கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம். அதனை தலையில் நன்றாக தடவிவிட்டு கால் மணி நேரம் கழித்து நீரில் அலசலாம். லாவண்டர் எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், சாமந்தி எண்ணெய் போன்றவையும் அரிப்புக்கு சிறந்த நிவாரணம் தரும். இந்த எண்ணெய்களை சிறிதளவு தண்ணீரில் கலந்து தலையில் தேய்த்து வரலாம்.

    ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய்யும் பயன்படுத்தலாம். ஆலிவ் மற்றும் பாதாம் எண்ணெய் கலவை பொடுகுக்கு சிறந்த தீர்வு தரும். தூங்க செல்வதற்கு முன்பு ஐந்தாறு முறை தலை சீவுவது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அரிப்பு தொந்தரவு வராமலும் தடுக்கும். உணவு பழக்கமும் கூந்தல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைட்டமின் பி, சி, துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமை பிரச்சினைகளை தவிர்க்க உதவும். உச்சந்தலையில் அரிப்பு தொல்லை இருந்தால் கீரை, சாலட், பயறு மற்றும் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். 
    சிட்ரஸ் பழங்களில் நிறைந்துள்ள வைட்டமின் சி விரைவில் முகம் முதுமை அடையவதை தடுக்கும். மேலும் இது உங்கள் தோல் பளபளப்பாக இயற்கையாகவே உதவுகிறது.
    சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் இது உடலுக்கு மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்க்கையில் சிட்ரஸ் பழங்களை சேர்த்துக் கொண்டால் இதய நோய்கள், சிறுநீரக கற்கள் மற்றும்  தொற்றுநோய்களின் ஆபத்தை குறைக்க உதவும். இதையும் தாண்டி நம் சருமத்துக்கு அதிக பலன்களை கொடுக்கும்.

    வைட்டமின் சி இருப்பதால் விரைவில் முகம் முதுமை அடையவதை தடுக்கும். சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் தோலில் உள்ள பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது உங்கள் தோல் பளபளப்பாக இயற்கையாகவே  உதவுகிறது.
     
    உங்கள் சருமத்திற்காக பயன்படுத்தக் கூடிய சிட்ரஸ் பழங்கள்

    ஆரஞ்சு : ஆரோக்கியமான பொலிவான முகம் வேண்டுமா? அப்போ நிச்சயம் உங்களுக்கு இந்த சிட்ரஸ் பழம் தேவை. முகத்தில் இருக்கும் தேவையற்ற டெட் செல்களை அகற்றி, முகம் சுருக்கம் அடையாமல் அழகிய பொலிவை ஆரஞ்சு பழம் கொடுக்கும். பழம் என்றால் உள்ளுயிருக்கும் உண்ணக்கூடிய பழம் மட்டுமல்ல வெளியிருக்கும் தோலும் சேர்த்து தான். தோல்களை உலர வைத்து அரைத்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்துங்கள்.

    எலுமிச்சை : 100 கிராம் எலுமிச்சை பழத்தில் 53 கிராம் வைட்டமின் சி சத்து இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எலுமிச்சையுடன் தேன் சேர்த்து நீங்களே முக பொலிவிற்கான ஃ பேஸ் பேக்கை செய்யலாம். கரு வளையம் தேவையற்ற செல்களை இது நீக்கும்.

    சாத்துக்குடி : ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போலவே சாத்துகுடி தோலிலும் ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்துள்ளது. எனவே இந்த பழமும் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.

    கினோவ் பழம் : ஆரஞ்சு பழம் போலவே இருக்கும் இந்த பழம் சிட்ரஸ் பழத்தின் ராஜா எனக் கூறப்படும். இந்த பழத்தை உட்கொண்டாலே அதிக நன்மை பெறலாம்

    கினோவ் பழம் : ஆரஞ்சு பழம் போலவே இருக்கும் இந்த பழம் சிட்ரஸ் பழத்தின் ராஜா எனக் கூறப்படும். இந்த பழத்தை உட்கொண்டாலே அதிக நன்மை பெறலாம்
    தினந்தோறும் அழகாக, ஃபிரெஷ்ஷாக, ஆரோக்கியமாக இருக்க நம் எல்லோருக்குமே பிடிக்கும்தானே..? அதற்கு சில விஷயங்களை தினமும் கண்டிப்பாக ஃபாலோ செய்ய வேண்டும். அவை என்ன என்று பார்க்கலாம்.
    தினந்தோறும் அழகாக, ஃபிரெஷ்ஷாக, ஆரோக்கியமாக இருக்க நம் எல்லோருக்குமே பிடிக்கும்தானே..? அதற்கு சில விஷயங்களை தினமும் கண்டிப்பாக ஃபாலோ செய்ய வேண்டும். அவை என்ன என்று பார்க்கலாம்.

    * காலையில் எழுந்தவுடன் வெறும் தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவ வேண்டும். உள்ளங்கைகளைக் குவித்து நீரைப் பிடித்து, அதற்குள் உங்கள் கண்களைத் திறந்து திறந்து மூடுங்கள். இப்படிச் செய்வதால் முகத்திலும் கண்களிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து, நாள் முழுக்க ஃபிரெஷ்ஷாக உணர்வீர்கள்.

    * நன்கு வியர்க்கும்படி உடற்பயிற்சி, யோகா அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் இருக்கிற கழிவுகள் வியர்வை வழியாக வெளியேறும்.

    * உடலில் கழுத்துப்பகுதியில்தான் சீக்கிரம் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். அதனால், கழுத்துக்கான பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு தினமும் செய்து வந்தால், கழுத்தில் சுருக்கங்கள் வருவது தள்ளிப்போடப்படும்.

    * வெந்நீரில் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குடிக்கும்போது உடலில் இருக்கிற கழிவுகள் வெளியேறி புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.

    * காலையில் குளிப்பதற்கு முன்னால் உங்கள் சருமத்துக்கு ஏற்ற க்ளென்சிங், டோனிங், மாய்ஸ்ச்சரைஸிங் கட்டாயம் செய்ய வேண்டும். இதற்கு நேரமில்லை என்பவர்கள் பாலேட்டால் முகத்துக்கு மசாஜ் செய்யுங்கள். எண்ணெய்ப்பசை சருமம் என்றால், சோற்றுக்கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள்.

    * அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் பாதாம் மிக மிக அவசியம். அப்படியே சாப்பிட்டால் செரிமானப் பிரச்னைகள் வரலாம் என்பதால், முதல் நாள் இரவே பாதாம் பருப்பை ஊறவைத்து, காலையில் தோலை உரித்துவிட்டுச் சாப்பிடலாம். ஒரு நாளுக்கு 4 அல்லது 5 பாதாம் போதும்.

    * காலையில் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவதற்கு முன் உலர்ந்த பழங்கள் அல்லது ஃபிரெஷ் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். உலர் பழங்கள் ஒரு கைப்பிடியளவு போதுமானது. ஃபிரெஷ்ஷான பழங்கள் என்றால் ஒரு கப் அளவுக்குச் சாப்பிடலாம். கொரோனா தொற்று பயம் இருக்கிற இந்த நேரத்தில் பழங்களின் தோலை நீக்கிவிட்டே சாப்பிடுங்கள். பிறகு முக்கால் மணி நேரம் கழித்து காலை உணவு எடுத்துக்கொள்ளலாம்.

    * காலையில் உலர் பழங்கள், ஃபிரெஷ் பழங்கள் சாப்பிட முடியாதவர்கள் ஒரு தக்காளி, கால் துண்டு பீட்ரூட், ஒரு கேரட், சின்னத்துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து ஜூஸாகக் குடிக்கலாம். ஆரோக்கியத்துடன் சரும அழகும் அதிகரிக்கும்.

    * வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது தவறாமல், உங்கள் சருமத்துக்கு ஏற்ற, காலநிலைக்கு ஏற்ற சன்ஸ்க்ரீனை முகத்தில் அப்ளை செய்யவும்.

    * கடைசி பாயின்ட், ஆனால் மிக மிக முக்கியமான பாயின்ட். தாகம் எடுக்கும்போதெல்லாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டு அருந்துங்கள். காலையிலேயே பாட்டிலில் பிடித்துவைத்துவிட்டு இரவுக்குள் அருந்தும் வழக்கத்தையும் கடைப்பிடிக்கலாம். உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இருந்தால்தான் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும். தவிர, உடலில் இருக்கிற கழிவுகளும் முழுமையாக வெளியேறும்.
    வழுக்கை தலை பிரச்சினையை எதிர்கொள்ளும் ஆண்கள் பூசணி விதையை தவறாமல் சிற்றுண்டியில் சேர்த்துக்கொள்வது நல்லது. முடி பலம் இழந்து அறுந்து போவதை தவிர்க்க பூசணி விதையை பயன்படுத்தலாம்.
    அடர்ந்த கூந்தல் என்பது பெண்களின் ஆசைக்கனவாக இருக்கிறது. ஆனால் முடி உதிர்வு பிரச்சினை கூந்தல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு விடுகிறது. முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு கூந்தல் வளர்ச்சிக்கு சில வகை விதைகள் துணைபுரிகின்றன. அவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்துடன் கூந்தல் நலனும் மேம்படும்.

    கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் இரண்டுமே கூந்தலுக்கு ஆரோக்கியமும், பளபளப்பு தன்மையும் ஏற்படுத்தக்கூடியவை. அவற்றுள் தாதுக்கள், வைட்டமின்கள், பாலி அன்சச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், கொழுப்பை குறைக்கும் பைட்டோஸ்டெரால் போன்றவை இருக்கின்றன. அவை இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் உதவும். அன்றாடம் சமைக்கும் காய்கறிகள், உணவுடன் எள்ளையும் சேர்த்துக்கொள்ளலாம். லட்டுக்களாக தயாரித்தும் சாப்பிட்டு வரலாம்.

    சுற்றுச்சூழல் மாசுக்கள், நச்சுகளிடம் இருந்து கூந்தல் முடியை பாதுக்கும் தன்மை சூரியகாந்தி விதைக்கு இருக்கிறது. முடி வளர்ச்சிக்கும் வித்திடும். முடி அடர்த்தியை ஊக்குவிக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், துத்தநாகம், வைட்டமின் இ போன்றவைகளும் அதில் இருக்கிறது. ஆதலால் சூரியகாந்தி விதையையும் உணவில் சேர்த்துகொள்ளலாம். வீட்டில் நொறுக்குத்தீனியாக அதை சாப்பிடலாம்.

    முடி பலம் இழந்து அறுந்து போவதை தவிர்க்க பூசணி விதையை பயன்படுத்தலாம். டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அளவு அதிகமாவதன் காரணமாக முடி உதிர்ந்து வழுக்கை தலை பிரச்சினையை எதிர்கொள்ளும் ஆண்கள் பூசணி விதையை தவறாமல் சிற்றுண்டியில் சேர்த்துக்கொள்வது நல்லது. மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து சுவைக்கலாம்.

    ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆளி விதையில் அதிகம் உள்ளது. அது முடி உதிர்வதை கட்டுப்படுத்துவதோடு, கூந்தலின் வளர்ச்சிக்கும் உதவும். அதில் நார்ச்சத்துகள், புரதம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்றவைகளும் நிறைந்துள்ளன. உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கும் ஆளிவிதை பயனுள்ளதாக இருக்கிறது. சாலட்டுகளில் ஆளிவிதையை கலந்து சாப்பிடுவது கூடுதல் நன்மை தரும்.

    வெந்தயத்தை விழுதாக அரைத்து கூந்தலில் தடவி மசாஜ் செய்து வரலாம். இதில் இருக்கும் புரதம், நியாசின், பொட்டாசியம், அமினோ அமிலங்கள் போன்றவை முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவும். சமையலிலும் வெந்தயத்தை அதிகம் சேர்க்கலாம்.

    சியா விதைகளிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது கூந்தலை அடர்த்தியாக வளரச் செய்யும். செரிமானத்தையும் அதிகரிக்க செய்யும், இதய நோய், நீரிழிவு நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவும். ஓட்ஸ் உணவுடன் சியா விதைகளை சேர்த்து சாப்பிடலாம். இதனை தனியாக சாப்பிடுவதற்கு சிரமமாக இருந்தால் பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை கலந்தும் சாப்பிடலாம்.
    புரோட்டின் ஹேர் பேக் கூந்தலின் வளர்ச்சியை சீராக்கும். முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும் அதை சரிசெய்து முடிக்கு போதிய வலுகொடுக்கும்.இந்த ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருள்கள் கூந்தலின் வெளிப்புறத்துக்கு மட்டும் அல்லாமல் கூந்தலுக்கும் போஷாக்கு அளிக்க வேண்டும். அதற்கு சிறப்பாக உதவும் இந்த புரோட்டின் ஹேர் பேக். இவை கூந்தலின் வளர்ச்சியை சீராக்கும். முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும் அதை சரிசெய்து முடிக்கு போதிய வலுகொடுக்கும். அப்படி பயன்படுத்தகூடிய புரதம் நிறைந்த ஹேர் பேக் குறித்து பார்க்கலாமா?

    உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை மூன்றையும் தனித்தனியாக சிறிதளவு நீரில் மூழ்க வைக்கவும். மறுநாள் காலை முதலில் உளுந்தை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி, பிறகு வெந்தயம் சேர்த்து மிக்ஸியில் சுற்றி அதன் பிறகு கறிவேப்பிலையை சேர்த்து மைய அரைக்கவும். இந்த விழுது எல்லாமே குளிர்ச்சி நிறைந்தது என்பதால் தேவையெனில் இதில் மிளகுத்தூள் அரை டீஸ்பூன் அளவு சேர்க்கலாம். இவை கூடுதலாக கூந்தலில் இருக்கும் பொடுகையும் நீக்கவல்லது.

    இதை நன்றாக கலந்ததும் பிறகு கூந்தலின் ஸ்கால்ப் பகுதி முதல் வேர்ப்பகுதி வரை நன்றாக தடவி விடவும். மண்டை முதல் நுனி வரை இதை தடவினால் போதும். பிறகு சுத்தமான டவலை வெந்நீரில் பிழிந்து தலையில் இறுக கட்டிகொள்ளவும். 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலசவும். ஷாம்பு கொண்டு தேய்க்க வேண்டாம். சாதம் வடித்த கஞ்சியை மட்டும் கொண்டு அலசலாம்.

    முதல் முறை இந்த பேக் பயன்படுத்தும் போது அதிக நேரம் ஊறவைக்க வேண்டாம். மாலை நேரங்களில் இதை பயன்படுத்தினால் குளுமை தரக்கூடும் என்பதால் காலை வேளையில் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும். அடிக்கடி பயன்படுத்த கூடாது. மாதம் ஒருமுறை அல்லது அதிகம் இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தகூடாது. 
    ×