என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    உருண்டை காரக்குழப்பு சாப்பீட்டு இருப்பீங்க ஆனால் பருப்பு உருண்டை மோர் குழம்பு அதை விட அருமையாக இருக்கும். இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மோர் - 2 கப்

    உருண்டை செய்ய...

    கடலைப்பருப்பு - 100 கிராம்,
    துவரம்பருப்பு - 50 கிராம்,
    காய்ந்தமிளகாய் - 10,
    தனியா - 2 டீஸ்பூன்,
    உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தேவைக்கு,
    எண்ணெய் - 4 டீஸ்பூன்.

    அரைக்க...

    தனியா - 2 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 6,
    இஞ்சி - 1 துண்டு,
    தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    மிளகு - 1/2 டீஸ்பூன்,
    அரிசி - 1 டீஸ்பூன்.

    தாளிக்க...

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - 1 கொத்து.



    செய்முறை :

    கடலைப்பருப்பு, துவரம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.

    கடலைப்பருப்பு, துவரம் பருப்பு நன்றாக ஊறியவுடன் தனியா, உப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவில் 1 டீஸ்பூன் எண்ணெய், மஞ்சள் தூள், சிறிது உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து கொள்ளவும்.

    அரைக்க கொடுத்தவற்றை ஊறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து அடிபிடிக்காமல் கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்து வரும் போது அதில் வேக வைத்த உருண்டை, மோரை ஊற்றி நுரைத்து வரும் பொழுது இறக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து தயிர் கலவையில் கொட்டி பரிமாறவும்.

    சூப்பரான பருப்பு உருண்டை மோர் குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பேபிகார்னில் சாலட், பிரை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பேபிகார்னை வைத்து சூப்பரான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேபிகார்ன் - 12,
    கடலை மாவு - 1 கப்,
    அரிசிமாவு - 1 டீஸ்பூன்,
    கார்ன்ஃப்ளவர் - 1 டீஸ்பூன்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    எண்ணெய் - தேவைக்கு,
    ஆப்ப சோடா - சிட்டிகை

    அரைக்க:

    பச்சை மிளகாய் - 3,
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 3 பல்.



    செய்முறை:

    பேபிகார்னை சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு வைத்து பின்னர் எடுக்கவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மாவு, அரைத்த விழுது, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள்.

    எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு பேபி கார்னையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    சுவையான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல் மேக்கர் கிரேவி. இன்று மீல் மேக்கர் கிரேவியை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்:

    மீல் மேக்கர் - 1/2 கப்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 1/2
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    தண்ணீர் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    பால் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...


    தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    வெங்காயம் - 1 (சிறியது)
    தக்காளி - 2 (சிறியது)

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை:

    கொத்தமல்லி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் மீல் மேக்கரைப் போட்டு சில நிமிடங்கள் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீல் மேக்கரை எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள எஞ்சிய பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

    பின் அதில் மீல் மேக்கரை சேர்த்து, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிரேவியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொத்தமல்லியைத் தூவினால், மீல் மேக்கர் கிரேவி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கத்தரிக்காயில் வறுவல், கிரேவி, சட்னி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்தரிக்காய் வைத்து சூப்பரான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய கத்தரிக்காய் - 1,
    கடலை மாவு - 1 கப்,
    மைதா மாவு - 1 டீஸ்பூன்,
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    எண்ணெய் - தேவையான அளவு,
    ஆப்ப சோடா - அரை சிட்டிகை.

    அரைக்க:

    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 3 பல்,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்.



    செய்முறை:

    கத்தரிக்காயைக் கழுவித் துடைத்து மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள்.

    அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்து, பாதியை வைத்து விட்டு மீதமுள்ளதில் சிறிது உப்பு சேர்த்து கலக்குங்கள்.

    இந்த விழுதை ஒவ்வொரு கத்தரிக்காய் துண்டின் மீதும் சிறிது தடவுங்கள்.

    கடலை மாவுடன் உப்பு, மீதமுள்ள அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துகொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் கத்தரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    சூப்பரான கத்தரிக்காய் பஜ்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட் சேர்த்து சூப்பரான லஸ்ஸி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    தயிர் - 2 கப்
    டேரிமில்ஸ் சாக்லேட் (dairy milk chocolate) - 6 துண்டுகள்
    பூஸ்டு (boost) - 2 டீஸ்பூன்
    சர்க்கரை - தேவையான அளவு
    பாதாம், பிஸ்தா - தேவையான அளவு
    சூடான பால் - 4 டீஸ்பூன்
    ஐஸ்கட்டிகள் - சிறிதளவு



    செய்முறை:

    பூஸ்டில் சூடான பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.

    பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    டேரிமில்ஸ் சாக்லேட்டை ஒரு கிண்ணத்தில் போட்டு அதை சூடான தண்ணீரின் மேல் வைத்து கிளறிக்கொண்டு இருந்தால் சாக்லேட் உருக ஆரம்பிக்கும். சாக்லேட் நன்றாக உருகி கட்டியில்லாமல் ஆனவுடன் அதை இறக்கி தனியாக வைக்கவும்.

    மிக்சியில் தயிர், சக்கரை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள பூஸ்டு, சாக்லேட், ஐஸ்கட்டிகள் சேர்த்து மறுபடியும் நுரைக்க அரைக்கவும்.

    அரைத்த லஸ்ஸியை கண்ணாடி கப்பில் ஊற்றி பொடியாக நறுக்கி பாதாம், பிஸ்தா, பூஸ்டு தூவி பருகவும்.

    சூப்பரான சாக்லேட் லஸ்ஸி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அவல் போண்டா அருமையாக இருக்கும். இன்று இந்த போண்டாவை செய்து எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தட்டை அவல் - ஒரு கப்,
    உருளைக்கிழங்கு - ஒன்று,
    பச்சை மிளகாய் - 3,
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு,
    தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
    உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தேவையான அளவு.



    செய்முறை :  

    அவலை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவலை தண்ணீரை நன்றாக வடித்து போட்டு அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, ப.மிளகாய், கொத்தமல்லி, உப்பு, தயிர், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீர் தெளித்து, நன்கு பிரைந்து கொள்ளவும்.

    இந்த மாவை போண்டா சைஸில் உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை போட்டு மிதமான சூட்டில், அதிகம் சிவந்து விடாமல் பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான அவல் போண்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு குச்சி ஐஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் மாம்பழம் சேர்த்து குச்சி ஐஸ் செய்வது எப்படி என்று பார்க்கலம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - அரை லிட்டர்
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்
    சர்க்கைர - 100 கிராம்
    பாதாம் - தேவையான அளவு
    முந்திரி - தேவையான அளவு
    மாம்பழம் - 1



    செய்முறை  :

    மாம்பழத்தை தோல் சீவி நீள நீள துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக அரைத்து கொள்ளவும்.

    முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலை நன்கு சுண்ட காய்ச்சவும்.

    அரிசி மாவுடன் சீனியை கலந்து கொண்டு சிறிது சிறிதாக கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் போட்டு கட்டி பிடிக்காமல் கலக்கவும். அல்லது மாவை தண்ணீரில் கரைத்தும் சேர்க்கலாம்.

    சுமார் 5 நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும்.

    மாவு நன்கு வெந்து, கலவை கெட்டியானதும் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி துண்டுகளை போட்டு கலக்கி இறக்கி ஆறவிடவும்.

    பால் அரிசி மா கலவை ஆறியதும் அதில் மாம்பழ கூழ் சேர்த்து கலக்கவும்.

    பின்னர் இதை குச்சி ஐஸ் அச்சில் ஊற்றி பிரீசரில் வைக்கவும். குச்சி ஐஸ் அச்சு இல்லாதவர்கள் சிறிய கிண்ணங்களில் ஊற்றி பிரீசரில் வைக்கலாம்.

    மாம்பழ குச்சி ஐஸ் உறைந்ததும் எடுத்து பரிமாறலாம்.

    இப்போது சுவையான மாம்பழ குச்சி ஐஸ் ரெடி.!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரட்டை பச்சையாகவோ அல்லது ஜூஸ் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கேரட்டில் சத்தான சுவையான மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கேரட் - 200 கிராம்
    பாதாம் - 20
    பால் - 2 கப்
    ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
    நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்



    செய்முறை:

    கேரட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    முதலில் பாதாமை நீரில் போட்டு 4 மணிநேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள தோலை நீக்கிவிட வேண்டும்.

    பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதித்ததும், சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    பின்பு அதில் துருவிய கேரட், பாதாம், ஏலக்காய் பொடி சேர்த்து, அடுப்பை அணைத்து விட்டு, கலவையை நன்கு குளிர வைக்கவும்.

    பிறகு பாலில் இருக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது பால் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

    இறுதியில் மீதமுள்ள பாலை ஊற்றி ஒருமுறை அடித்து பரிமாறினால், கேரட் மில்க் ஷேக் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட் ஐஸ்கிரீமை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஹெவி கிரீம் - 1 1/2 கப்
    பால் - 1/2 கப்
    கோகோ பவுடர் - 1/4 கப்
    இன்ஸ்டன்ட் காபி தூள் - 1/2 தேக்கரண்டி
    சக்கரை - 1/2 கப்
    நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை) - 1/4 கப்
    உப்பு - 1/4 தேக்கரண்டி
    வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி
    சாக்லேட் சிப்ஸ் - விருப்பத்திற்கு ஏற்ப.



    செய்முறை :

    பாலை நன்றாக காய்ச்சி பிரிட்ஜில் 2 மணி நேரம் குளிர வைத்து கொள்ளவும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தில் கோகோ பவுடர், சக்கரை, நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை), இன்ஸ்டன்ட் காபி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

    அனைத்து நன்றாக கலந்த பின்னர் அதனுடன் காய்ச்சி குளிர வைத்த பால் சேர்த்து கைவிடாமல் கலக்கவும்.

    அடுத்து அதனுடன் ஹெவி கிரீம் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

    இந்தக் கலவையை ஒரு காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜ் ப்ரீசரில் 3 மணி நேரம் வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து ஐஸ்கிரீம் கலவையை எடுத்து அதை மிக்சியில் போட்டு 30 நொடிகள் வரை குறைவான வேகத்தில் அடித்து மீண்டும் டப்பாவில் போட்டு ப்ரீசரில் வைக்க வேண்டும்.

    இதே போல் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து பிரிட்ஜ் ப்ரீசரில் வைக்கவும். இது போன்று 3 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் கட்டி சேராமல் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும்.

    கடைசியாக இதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்கி ஒரு இரவு முழுவதும் பிரிட்ஜ் பிரீசரில் வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சுவையான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார்!

    குறிப்பு:

    1. பிரீசரை அதிகமான குளிர்ச்சியில் வைக்கவும்.
    2. மிக்ஸியில் போட்டு 15 - 30 நொடி வரை சுற்றினால் போதுமானது. அதற்கு மேல் சுற்றினால் கிரீம் வெண்ணை ஆவதற்கு வாய்ப்புகள் அதிக வாய்ப்புள்ளது.
    3. அமுல் ஹெவி கிரீம் கொண்டு செய்து பாருங்கள். இல்லையெனில் 35% மேல் கொழுப்புள்ள எந்த கிரீம் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    லஸ்ஸியில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் கோடையில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தைக் கொண்டும் லஸ்ஸி செய்யலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    தயிர் - 2 கப்
    நறுக்கிய மாம்பழம் - 2 கப்
    சர்க்கரை - தேவையான அளவு
    ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
    ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    பிஸ்தா - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
    குங்குமப்பூ - 1 சிட்டிகை

    செய்முறை:

    முதலில் பிளெண்டர் அல்லது மிக்ஸியில் நறுக்கிய மாம்பழத் துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் தயிர், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு 1 நிமிடம் அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின் அதனை டம்ளரில் ஊற்றி, அதன் மேல் பிஸ்தா தூவி பரிமாறினால், சுவையான மாம்பழ லஸ்ஸி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், சாம்பார் சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை பட்டாணி பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    முட்டை - 4
    பட்டாணி - 100 கிராம்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 1
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
    மிளகுப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை :

    பட்டாணியை உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வெந்தும் தக்காளி, மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான முட்டை, பட்டாணி பொரியல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கோதுமை மாவில் இனிப்பு கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 கப்
    வெல்லம் - அரை கப்
    தேங்காய் - தேவையான அளவு
    ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி



    செய்முறை :

    கோதுமை மாவை வாசம் வரும் வரை வெறும் வாணலியில் போட்டு குறைந்த தீயில் வறுத்துக் கொள்ளவும்.

    வெல்லத்தை தட்டி வைத்துக் கொள்ளவும்.

    தேங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    வாணலியில் தட்டி வைத்த வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

    வடிகட்டிய வெல்ல கரைசலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்ததும், தீயின் அளவை குறைத்து விட்டு பொடியாக நறுக்கிய தேங்காய், ஏலக்காய் தூள், நெய், கோதுமை மாவு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    மாவு வாணலியில் ஒட்டாமல் ஒன்றாக சேர்ந்து வரும். இதுவே சரியான பதம். பதம் வந்ததும், அடுப்பை அணைத்து மூடி போட்டு சற்று நேரம் ஆற விடவும்.

    சூடு சிறிது குறைந்ததும், மாவை சிறிது எடுத்து பிடி கொழுக்கட்டைகளாக செய்து வைக்கவும்.

    இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    ஏற்கனவே கோதுமை மாவை வெல்லத் தண்ணீரில் வேக வைத்து விட்டதால் இந்த கொழுக்கட்டைகள் சீக்கிரம் வெந்து விடும். எனவே ஐந்து அல்லது ஏழு நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தாலே போதுமானது.

    சுவையான சத்தான கொழுக்கட்டை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×