search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ரவை வாழைப்பழ பணியாரம்
    X
    ரவை வாழைப்பழ பணியாரம்

    ரவை வாழைப்பழ பணியாரம்

    விதவிதமாக பணியாரம் செய்தாலும் இனிப்பு பணியாரத்திற்கு என்றும் தனி வரவேற்பு உண்டு. சிறிது வித்தியாசமாக ரவா, மைதா, வாழைப்பழம் கலந்து பணியாரம் எப்படி செய்வதென்று பார்ப்போம்!
    தேவையான பொருட்கள்

    ரவை - 100 கிராம்
    மைதா - 100 கிராம்
    சர்க்கரை அல்லது வெல்லம் - 100 கிராம்
    திக்கான தேங்காய் பால் - 1 கப்
    பெரிய நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
    நெய் - 50 மில்லி
    ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1/4 தேக்கரண்டி

    ரவை வாழைப்பழ பணியாரம்

    செய்முறை

    வாழைப்பழத்தை நன்றாக மசித்து வைக்கவும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ரவை, மைதா, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து அதனுடன் மசித்து வைத்துள்ள வாழைப்பழம், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன்  தேங்காய் பாலும் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

    அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் தேவையான அளவு நெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான வைத்து சூட்டில் குழி கொள்ளும் அளவுக்கு மாவு ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.

    மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் செய்யவும்.

    சுவையான ரவை வாழைப்பழ பணியாரம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×