என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    வளரும் குழந்தைகளுக்கு நெய் சேர்த்த உணவுகளை கொடுக்கவேண்டும். நெய்சாதம் ஊட்டச்சத்து மிக்கது. எளிதில் செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொன்னி அரிசி - கால் கிலோ
    நெய் - 100 கிராம்
    பட்டை - 3 துண்டுகள் (சிறியது)
    கிராம்பு - 4
    ஏலக்காய் - 2
    பூண்டு - 7 பல்
    பிரியாணி இலை - 1
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    முந்திரி, திராட்சை - தேவைக்கு

    செய்முறை :

    * அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வடித்து கொள்ளவும்.

    * பூண்டை தோல் உரித்து தட்டிக் கொள்ளவும். ஏலக்காயை லேசாக தட்டிக் கொள்ளவும்.

    * அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளித்த பின் முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

    * அடுத்து அதில் வடிகட்டிய அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறவும்.

    * இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கர் மூடி போடவும். விசில் போடாமல் மிதமான தீயில் 10 நிமிடம் வேகவைக்கவும். பத்துநிமிடம் கழித்து சாதம் குழையும் முன் இறக்கி வைக்கவும்.

    * சுவையான நெய் சாதம் தயார்.

    * இதனுடன் சைடு டிஸ்சாக குருமா, ரைத்தா தொட்டுக்கொள்ளலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை விளக்கமாக பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கிலோ
    மட்டன் - ஒரு கிலோ
    வெங்காயம் - அரை கிலோ
    பழுத்த தக்காளி - அரை கிலோ
    பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - ஆறு
    காஷ்மீரி சில்லி - இரண்டு தேக்கரண்டி
    தயிர் - ஒரு கோப்பை
    கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    புதினா - ஒரு கொத்து
    பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
    பிரியாணி இலை - இரண்டு
    உப்பு தூள் - தேவையான அளவு
    எண்ணெய் - 200 மில்லி
    நெய் - 50 மில்லி
    எலுமிச்சை - அரை பழம்

    செய்முறை :

    * அரிசியை லேசாக களைந்து ஊற வைக்கவும்.

    * மட்டனை 5 முறை கழுவி தண்ணீரை வடிக்கவும்.

    * தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    * வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

    * வெங்காயம் வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின் தயிர் சேர்க்கவும்.

    * அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும்.

    * மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விடவும்.

    * மட்டன் அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்றவும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.

    * தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.

    * பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் கிளறி விடவும்.

    * சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 
    டயட்டில் இருப்பவர்கள் தேங்காய் சேர்க்காமல் மீன் குழம்பு செய்து சாப்பிடலாம். இப்போது தேங்காய் சேர்க்காமல் மீன் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வஞ்சிர‌ மீன் - 250 கிராம்
    வெந்தயம் - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    சின்னவெங்காயம் - 100  கிராம்
    தக்காளி - 150 கிராம்
    இஞ்சி, பூண்டு  விழுது - 1 டேபிள்ஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    குழம்பு மசாலா செய்ய‌ :

    மல்லி (தனியா) - 2  டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4 (குண்டு)
    சீரகம் - அரை டீஸ்பூன்
    சோம்பு - அரை டீஸ்பூன்
    மிளகு - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை :

    * சின்ன வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கிகொள்ளவும்.

    * மீனை நன்றாக கழுவி வைக்கவும்.

    * புளியை நன்றாக கரைத்து வடிகட்டி வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் குழம்பு மசாலா செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில்போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

    * தக்காளி நன்றாக மசிந்ததும் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த மசாலா, மிளகாய் தூள் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு, புளி கரைசல் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

    * கடைசியாக மீனை போட்டு அடுப்பை குறைந்த தீயில் 15 நிமிடம் கொதிக்க வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது குழம்பை இறக்கி பரிமாறவும்.

    * மீன் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க விட கூடாது. இதை தோசை, இட்லி, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 
    டயட்டில் இருப்போர் மதிய வேளையில் உணவு உண்பதற்கு முன் சூப் குடித்துவிட்டு பின் உணவை உட்கொண்டால் உண்ணும் உணவின் அளவானது குறையும். இப்போது மட்டன் கீமா சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா - 150 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    துவரம் பருப்பு - 50 கிராம்
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    நெய் - 3 டீஸ்பூன்
    புதினா - சிறிது
    கொத்தமல்லி - சிறிது
    ஏலக்காய் - 2
    பட்டை - 1 இன்ச்
    கிராம்பு - 2
    உப்பு - தேவையான அளவு
    மிளகு தூள் - 1 ஸ்பூன்

    செய்முறை :

    * துவரம் பருப்பு, மட்டன் கீமாவை நன்றாக கழுவி வைக்கவும்.

    * வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

    * பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின் துவரம் பருப்பு சேர்த்து சிறிது வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் மட்டன் கீமா சேர்த்து பிரட்டிய பின் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    * கடைசியாக அதில் புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கவும்.

    * விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை, மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

    * சுவையான மட்டன் கீமா சூப் ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காரைக்குடி நண்டு மசாலாவின் ஸ்பெஷல் என்னவென்றால், அதில் புளி மற்றும் முந்திரி சேர்த்து அரைத்த மசாலாவை கலந்து சமைப்பது தான். இதனால் இந்த நண்டு மசாலா மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    நண்டு - அரை கிலோ
    புளிக்கரைசல் - அரை கப்
    பட்டை - 2
    பிரியாணி இலை - 2
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    தனியா தூள் - 1 1/2 டீஸ்பூன்
    வெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    மசாலாவிற்கு...

    துருவிய தேங்காய் - 1 கப்
    மிளகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    முந்திரி - 3
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்


    செய்முறை :

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின் நண்டு சேர்த்து, வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

    * நண்டு ஓரளவு வெந்த பின் அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், காரைக்குடி நண்டு மசாலா ரெடி!!!

    * காரைக்குடி நண்டு மசாலாவை சாதம் மட்டுமின்றி, தோசை, இட்லி, சப்பாத்தி போன்றவற்றுடனும் சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரியாணிகளில் பலவகைகள் உண்டு. அவற்றில் மொகல் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 1 கிலோ
    பாசுமதி அரிசி - 3 கப்
    தயிர் - 1 1/2 கப்
    வெங்காயம் - 4 (நறுக்கியது)
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 6
    மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 1/2 டீஸ்பூன்
    தனியா தூள் - 1 1/2 டீஸ்பூன்
    கரம்மசாலா - 1 டீஸ்பூன்
    பட்டை - 2
    மிளகு - 6
    கிராம்பு - 5
    ஏலக்காய் - 5
    பிரியாணி இலை - 1
    குங்குமப்பூ - 1 சிட்டிகை (பாலில் ஊற வைத்தது)
    முந்திரி - 15
    உலர் திராட்சை - 20
    நெய் - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மட்டனை பொடியாக நறுக்கி நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

    * கழுவி மட்டனில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

    * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

    * பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின் பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட வேண்டும்.

    * பிறகு அதில் ஊற வைத்துள்ள மட்டனை போட்டு 5 நிமிடம், வதக்க வேண்டும். அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் சேருமாறு வதக்கி, மூடி போட்டு 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து மட்டனை வேக வைக்க வேண்டும்.

    * மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் முந்திரி, உலர் திராட்சையை போட்டு தீயை குறைவில் வைத்து வதக்கி விட்டு, பாசுமதி அரிசியை நீரில் கழுவி குக்கரில் போட்டு, அரிசியை 5 நிமிடம் வறுக்க வேண்டும்.

    * இந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் உள்ள மட்டனானது பாதி அளவு வெந்து கிரேவி பதத்தில் இருக்கும்.

    * இப்போது மட்டன் கிரேவியை குக்கரில் அரிசியுடன் சேர்த்து நன்றாக பிரட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.

    * மட்டன் மற்றும் அரிசியானது நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் பாலில் ஊறவைத்த குங்குமப்பூ, நெய்யை மேலே ஊற்றி கிளறி, இறக்கி விட வேண்டும்.

    * சுவையான மொகல் பிரியாணி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உளுந்து மிகவும் சத்து நிறைந்தது. மேலும் உளுந்தை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது உளுந்து பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுந்து - 150 கிராம்
    பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன்
    தேங்காய் பால் - 1 லிட்டர்
    சீனி - 400 கிராம்
    உப்பு - 1 டீஸ்பூன்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    முந்திரி, திராட்சை, பாதாம் - தேவைக்கு

    செய்முறை :

    * முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உளுந்தையும், அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

    * பின்பு அதில் உப்பு, தேங்காய் பால் சேர்க்கவும்.

    * அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் அரைத்த உளுந்து, உப்பு, தேங்காய் பால் கலவையை ஊற்றவும்.

    * கெட்டியாக இருக்கும் அந்த கலவையில் 300 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி 20 நிமிடம் அடுப்பில் வைக்கவும். அடிபிடிக்காதவாறு கலவையை அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.

    * சிறிது நேரம் கழித்து கெட்டியாகி உளுந்து வாசம் வீசும் போது சீனி, ஏலக்காய் தூளை சேர்த்து கிளறவும்.

    * மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாமை போட்டு வறுத்து உளுந்து பாயசத்தில் சேர்க்கவும்.

    * சுவையான உளுந்து பாயாசம் தயார்…!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காரைக்குடி கோழி குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) உங்கள் வீட்டில் இந்த காரைக்குடி கோழி குழம்பை வைத்து அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    கோழி - 1/2 கிலோ
    தக்காளி - 2
    வெங்காயம் - 2
    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிது (அலங்கரிக்க)

    அரைப்பதற்கு...

    தேங்காய் - 1/2 மூடி
    கசகசா - 1/2 டீஸ்பூன்
    முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்

    தாளிப்பதற்கு :

    கடுகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/4 டீஸ்பூன்
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை  :

    * தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி விடவும்.

    * மசாலா வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் சிறிது உப்பு தூவி பிரட்டி, மூடி வைத்து தக்காளியை வேக வைக்க வேண்டும்.

    * தக்காளியானது நன்கு வெந்ததும், அதில் சிக்கனை சேர்த்து, அத்துடன் சிறிது உப்பு தூவி பிரட்டி, மூடி வைத்து மிதமான தீயில் 8 நிமிடம் வேக வைக்கவும்.

    * சிக்கனானது ஓரளவு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

    * சிக்கனானது நன்கு வெந்து, பச்சை வாசனை போனவுடன் இறக்கி வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவினால், காரைக்குடி கோழி குழம்பு ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆப்பிள் ரிங்ஸ் அற்புதமான மாலை நேர ஸ்நாக்ஸ். இதனை ஆப்பிள் பஜ்ஜி என்று கூட சொல்லலாம்.
    தேவையான பொருட்கள்:

    ஆப்பிள் - 5
    மைதா - 1 கப்
    சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
    பட்டைத் தூள் - 1/4 டீஸ்பூன்
    பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
    உப்பு - 1/4 டீஸ்பூன்
    முட்டை - 2
    மோர் - 1 கப்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
    பொடித்த சர்க்கரை - 1/2 கப்
    பட்டைத் தூள் - 2 டீஸ்பூன்

    செய்முறை :

    * ஆப்பிளை வட்ட துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். தோலை நீக்க வேண்டாம். பின்னர் அதன் நடுவே உள்ள பகுதியை நீக்கிவிட்டு, வளையங்களாக்கிக் கொண்டு, அதனை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து, அதில் உள்ள அதிகப்படியான ஈரத்தன்மையை நீக்க வேண்டும்.

    * ஒரு பௌலில் மைதா, பேக்கிங் சோடா, சர்க்கரை, 1/4 டீஸ்பூன் பட்டைத் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    * மற்றொரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்த பின் அதில் மோர் சேர்த்து நன்றாக கலந்து மைதா கலவையில் ஊற்றி நன்றாக கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை மற்றும் பட்டைத் தூளை சேர்த்து கலந்து வைக்கவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    * எண்ணெய் சூடானதும், ஆப்பிள் துண்டுகளை கலந்து வைத்துள்ள மாவு பேஸ்டில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * பொரித்த ஆப்பிள் துண்டுகளை சர்க்கரை, பட்டைத் தூள் கலவையில் பிரட்டி எடுத்தால், ஆப்பிள் ரிங்ஸ் ரெடி!!!

    * இப்போது குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுலபமான முறையில் ஆப்பிள் பர்ஃபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆப்பிள் - 6,
    தேங்காய்த் துருவல் - 1 கப் கப்,
    சர்க்கரை - அரை கப்,
    சீவிய பிஸ்தா - ஒரு டேபிள்டீஸ்பூன்,
    நெய் - ஒரு டேபிள்டீஸ்பூன்,
    உப்பு - ஒரு துளி.

    செய்முறை :

    * ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

    * வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும் தேங்காய்த் துருவல், ஆப்பிள் துருவல், உப்பு சேர்த்துக் நன்றாக கிளறவும்.

    * பிறகு, சர்க்கரையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் நன்கு கிளறவும்.

    * பர்ஃபி பதத்துக்கு வந்ததும் இறக்கி, ஒரு தட்டில் சிறிது நெய்யை தடவி அதில் கலவையைப் போட்டு பரப்பவும்.

    * கடைசியாக அதன் மேல் சீவிய பிஸ்தாவை தூவவும்.

    * ஆறியதும் துண்டுகளாக்கி பரிமாறவும்.

    * குழந்தைகளுக்கு இந்த ஆப்பிள் பர்ஃபி மிகவும் பிடிக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எளிமையான முறையில் செய்யக்கூடிய கிவி ஐஸ்க்ரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கிவி பழம் (நறுக்கியது)  - ஒரு கப்,
    பைனாப்பிள் ஜூஸ் -  2 கப்,
    சர்க்கரை - அரை கப்.

    செய்முறை:

    * அரை கப் கிவி பழத்தை கூழாக்கி கொள்ளவும்.

    * மீதமுள்ள அரை கப் பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அடிகனமான பாத்திரத்தில் கூழாக்கிய பழத்தை போட்டு அத்துடன் பைனாப்பிள் ஜூஸ், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி, அடுப்பில் வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கூழ்பதம் வரும் வரை கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.

    * கூழ் பதம் வந்தவுடன் இறக்கி ஆற விடவும்.

    * ஆறியதும் மீதமுள்ள கிவி பழத்துண்டுகளை சேர்த்து, நன்றாக கலந்து சிறிய கப்களில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் 6 மணி நேரம் (ஃப்ரீசரில்) வைத்து எடுத்து பரிமாறவும்.

    * குழந்தைகளுக்கு இந்த ஐஸ்க்ரீம் மிகவும் பிடிக்கும். செய்வதும் மிகவும் சுலபமானது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் டிப்டு ஸ்ட்ராபெர்ரி செய்வது எப்படி என்ற பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஸ்ட்ராபெர்ரி பழம் - ஒரு கப் (இலையுடன் உள்ளது),
    சாக்லேட் - ஒரு கப்,
    வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை:

    * ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு கழுவி துணியில் துடைத்துக் கொள்ளவும்.

    * சாக்லேட்டை துண்டுகளாக உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்.

    * அடுப்பில் அடிகனமான அகலமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்கும் நீரின் மேல் சாக்லேட் துண்டுகள் போட்டுள்ள பாத்திரத்தை வைத்து கரண்டியால் நன்றாக கிளறவும். கைவிடாமல் கிளற வேண்டும். (அடுப்பில் நேராக வைத்து சாக்லேட்டை கிளற கூடாது)



    * சாக்லேட் நன்றாக உருகியதும் அதில் வெண்ணெயை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் இருந்து இறக்கவும்.



    * ஒரு ஸ்ட்ராபெர்ரி பழத்தை எடுத்து உருகிய சாக்லேட் கலவையில் நன்கு ’டிப்’ செய்து (மூழ்கவைத்து), எடுக்கவும்.

    * இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.



    * சாக்லேட்டில் டிப் செய்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை 20 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடவும்.

    * குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான சாக்லேட் டிப்டு ஸ்ட்ராபெர்ரி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×