என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
எளிய முறையில் செட்டிநாடு அயிர மீன் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அயிரை மீன் - 300 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 2
பூண்டு - 15 பல்
மிளகாய் - 3
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - கொஞ்சம்
எண்ணெய் - 3 கரண்டி
கடுகு, உ.பருப்பு - அரைக்கரண்டி
வெந்தயம் - கால் கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தனியா தூள்- 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் விழுது - 3 தேக்கரண்டி
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் அயிரை மீன், கல் உப்பு போட்டு மூன்று நான்கு முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவ வேண்டும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புளியைக் கரைத்து கொள்ளவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உ.பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
* தக்காளி மசிந்தவுடன், மிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் புளித்தண்ணீர் விட வேண்டும். நன்றாக கொதித்து மசாலா வாடை அடங்கியதும் மீனை போட வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து தேங்காய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட மிகவும் உகந்தது ரைஸ் பக்கோடா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சாதம் - 1 கப்
கடலைமாவு - 1/2 கப்
வெங்காயம் - 1
இஞ்சி - 1 துண்டு
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு, எண்ணெய் - தேவையானது
செய்முறை :
* இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
* வடித்த சாதத்தை நன்றாக குழைய பிசைந்து கொள்ளவும்.
* ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மசித்த சாதம், கடலைமாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேவையான உப்பு, காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.
* அடுப்பில் கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை பக்கோடாவுக்கு போடுவதுபோல் கிள்ளி போட்டு சிவந்ததும் எடுக்கவேண்டும்.
* மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் உகந்தது.

எளிய முறையில் வேர்க்கடலை உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வறுத்த வேர்க்கடலை - 200 கிராம்
வெல்லம் - தலா 200 கிராம்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
செய்முறை:
* வேர்க்கடலையை நன்றாக வறுத்து தோல் இரண்டாக உடைத்து கொள்ளவும்.
* வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி, உருட்டும் பதத்தில் பாகு காய்ச்சவும்.
* வேர்க்கடலையுடன் பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி உருண்டை பிடிக்கவும்.
* சுவையான சத்தான வேர்க்கடலை உருண்டை ரெடி
குறிப்பு: புரதமும், இரும்புச்சத்தும் இதில் மிக அதிகம். இரத்த சோகை வராது.

பாய்லர் கோழியை விட நாட்டுக்கோழி உடலுக்கு நல்லது. நாட்டுக்கோழி குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
நாட்டுக்கோழி - 1/2 கிலோ
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
தயிர் - 2 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிது
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்க :
மிளகாய் வத்தல் -5
தனியா - 5 மேஜைக்கரண்டி
சீரகம் - 1 மேஜைக்கரண்டி
மிளகு - 1 மேஜைக்கரண்டி
தேங்காய் துருவல் - 100 கிராம்
தாளிக்க :
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
பட்டை - 1 இன்ச் அளவு
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
* நாட்டுக்கோழி துண்டுகளை நன்கு சுத்தப்படுத்தி வைக்கவும்.
* தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் மிளகாய் வத்தல், தனியா, சீரகம், மிளகு, தேங்காய் துருவல் அனைத்தையும் தனித்தனியாக போட்டு வறுத்த பின் அடுப்பை அணைத்து ஆற விடவும். ஆறியதும் மிக்ஸ்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* தேங்காயை மட்டும் தனியாக தண்ணீர் சேர்த்து விழுதாகவும், மற்றவற்றை பொடியாக அரைத்து கொள்ளவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்கு வதங்கியதும் தயிர், திரித்து வைத்துள்ள பொடி, கரம் மசாலா தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் உப்பும் கோழித்துண்டுகளையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
* பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
* மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* குழம்பு கெட்டியானதும் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
* சுவையான நாட்டுக்கோழி குழம்பு ரெடி.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான முட்டை நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
நூடுல்ஸ் - 150 கிராம்
முட்டை - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
குடமிளகாய் - 1
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை - சிறிது
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிது உப்பு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் மற்றும் நூடுல்ஸ் சேர்த்து கொதிக்க விடவும். நூடுல்ஸ் வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டியில் வடித்து எடுத்து குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைக்கவும்.
* வெங்காயம், தக்காளி, குடமிளகாய் மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து மூன்று மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
* தக்காளி சுருள வதங்கியதும் குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
* பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, சோயாசாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
* வதக்கியவற்றை கடாயில் ஓரமாக ஒதிக்கி வைத்து விட்டு மற்றொரு புறத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
* முட்டையை நன்றாக கிளறி பொடிமாஸ் மாதிரி செய்து கொள்ளவும். பிறகு அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கிளறவும்.
* பெரிய கடாய் இல்லையென்றால் மற்றொரு கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு முட்டையை சேர்த்து தனியாக கிளறி இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
* இப்போது நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
* கொத்தமல்லித் தழையை சேர்த்து பரிமாறவும்.
* சுவையான முட்டை நூடுல்ஸ் ரெடி.

குழந்தைகளுக்கு பிடித்தமான நேந்திரம் பழ ஜாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நன்கு கனிந்த நேந்திரம் பழம் - 4
வெல்லம் - ஒரு கப்,
நெய் - கால் கப்.
செய்முறை :
* நேந்திரம் பழத்தை தோல் நீக்கி, மிக்ஸியில் அரைத்து ஒரு கப் அளவுக்கு விழுதாக்கவும்.
* வெல்லத்தைக் சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும்.
* அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் வடிகட்டிய வெல்லம், அரைத்த நேந்திரம் பழ விழுது, நெய் சேர்த்து கைவிடாமல் நன்கு சுருள கிளறவும்.
* ஓரங்களில் நெய் கசிய ஆரம்பித்தவுடன் இறக்கவும்.
* சூடு ஆறியதும் காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும்.
* சுவையான நேந்திரம் பழ ஜாம் ரெடி.
குறிப்பு: இந்த ஜாமுடன் தேங்காய்ப் பால் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்க... பாயசம் ரெடி! பலாச் சுளையிலும் இதே முறையில் செய்யலாம்.

கேரளாவின் பாரம்பரியமான டிஷ்ஷான அடைப்பிரதமன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - ஒரு கப்,
வெல்லம் - 100 கிராம்,
தேங்காய் - ஒன்று,
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை,
நெய் - தேவையான அளவு,
எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை :
* தேங்காயை துருவி மிக்சியில் போட்டு அரைத்து பால் எடுக்கவும்.
* பச்சரிசியை ஊற வைத்து நைஸாக அரைக்கவும்.
* ஒரு தட்டில் எண்ணெய் தடவி பச்சரிசி மாவை ஊற்றி, ஆவியில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டவும்.
* அடுப்பில் அடிகனமான ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அடை துண்டுகளுடன் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.
* அடுத்து அதில் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
* கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை போட்டு வறுத்து அடைப் பிரதமனில் சேர்க்கவும்.
* கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது!

வீட்டிலேயே எளிய முறையில் சூப்பரான சிக்கன் ஸ்டஃப்டு பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எலுமில்லாத சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் + தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு
கோதுமை மாவு - 1 கப்
மைதா மாவு - கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கு
பெருஞ்சீரகம் - அரை ஸ்பூன்
செய்முறை :
* மைதாவுடன் கோதுமையை கலந்து உப்பு போட்டு தேவையான அளவு நீர், 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மூடி வைக்கவும்.
* சிக்கனை நன்றாக வேக வைத்து உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.
* வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின் தக்காளி, கொத்தமல்லித் தழை சேர்த்து தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும்.
* இதில் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து 3 மேசைக்கரண்டி அளவு நீர் விட்டு தூள் வாசம் போக வதக்கவும்.
* தூள் வாசம் போனதும் பொடியாக உதிர்த்த சிக்கன் துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து மசாலா நன்றாக சேர்ந்த உடன் வதக்கி இறக்கவும்.
* பிசைந்து வைத்துள்ள மாவில் சப்பாத்தி தேய்த்து அதன் நடுவே இந்த கலவையை வைக்கவும். பின்னர் அதன் மேலே இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி ஓரங்களை ஒட்டவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான சிக்கன் ஸ்டஃப்டு பரோட்டா தயார்.

முட்டை பிட்சா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முட்டை பிட்சாவை எப்படி எளிய முறையில் வீட்டிலேயே செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பிட்சா பேஸ் - 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 2 பற்கள்
முட்டை - 1
தக்காளி கெட்சப் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சில்லி ப்ளேக்ஸ் அல்லது மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள் - 1 டீஸ்பூன்
சீஸ் - தேவையான அளவு
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சீஸை துருவிக்கொள்ளவும்.
* முட்டையை வேக வைத்து நீளவாக்கில் 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* பின் அதில் தக்காளி கெட்சப் சேர்த்து கிளறி, உப்பு, மிளகாய் தூள், உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு ஒரு மைக்ரோ ஓவனில் வைக்கும்படியான தட்டில், பிட்சா பேஸை வைத்து, அதன் மேல் வதக்கிய கலவையை பரப்பி வைத்து, முட்டைகளை வைக்க வேண்டும்.
* பிறகு அதன் மேல் சிறிது நறுக்கிய வெங்காயம், தக்காளி, துருவிய சீஸை தூவி, மேலே உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள் மற்றும் சில்லி ப்ளேக்ஸை தூவி மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் அல்லது தவா என்றால் மூடி வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைத்து இறக்கி பரிமாறினால், முட்டை பிட்சா ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பிட்சா பேஸ் - 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 2 பற்கள்
முட்டை - 1
தக்காளி கெட்சப் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சில்லி ப்ளேக்ஸ் அல்லது மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள் - 1 டீஸ்பூன்
சீஸ் - தேவையான அளவு
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சீஸை துருவிக்கொள்ளவும்.
* முட்டையை வேக வைத்து நீளவாக்கில் 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* பின் அதில் தக்காளி கெட்சப் சேர்த்து கிளறி, உப்பு, மிளகாய் தூள், உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு ஒரு மைக்ரோ ஓவனில் வைக்கும்படியான தட்டில், பிட்சா பேஸை வைத்து, அதன் மேல் வதக்கிய கலவையை பரப்பி வைத்து, முட்டைகளை வைக்க வேண்டும்.
* பிறகு அதன் மேல் சிறிது நறுக்கிய வெங்காயம், தக்காளி, துருவிய சீஸை தூவி, மேலே உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள் மற்றும் சில்லி ப்ளேக்ஸை தூவி மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் அல்லது தவா என்றால் மூடி வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைத்து இறக்கி பரிமாறினால், முட்டை பிட்சா ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சுவையான சுவையான வெஜிடபிள் சமோசா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 250 கிராம்,
உருளைக்கிழங்கு - 250 கிராம்,
பச்சைப் பட்டாணி - 50 கிராம்,
பச்சை மிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
முந்திரித் துண்டுகள் - 10,
சீரகம், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 டேபிள்ஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
வனஸ்பதி 50 கிராம்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
* பச்சைப் பட்டாணி, கேரட், பீன்ஸ், நறுக்கிய உருளைக்கிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்து நீரை வடிகட்டி வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, சீரகத்தூள், லேசாக சூடாக்கிய வனஸ்பதி சேர்த்து நன்றாக கலந்த பின் நீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து, எட்டு பாகங்களாக செய்து, நீளவாக்கில் தேய்க்க வேண்டும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின் முந்திரி சேர்த்து, வறுத்த பிறகு பச்சை மிளகாய், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள் போட்டுக் கிளறிய பின்னர் மசித்த உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணியை சேர்த்து வதக்கி இறக்கி, கொத்தமல்லித் தழை தூவி வைக்கவும்.
* நீளமாகத் தேய்த்த மாவினை முக்கோணம் வடிவில் செய்து, உருளைக்கிழங்கு மசாலாவை 3 ஸ்பூன் எடுத்து உள்ளே வைத்து மூடி சமோசாக்கள் செய்து வைக்கவும்.
* கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து, செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.
* சுவையான சுவையான வெஜிடபிள் சமோசா ரெடி.
குறிப்பு: சமோசாக்கள் மூழ்கும் அளவுக்கு எண்ணெய் இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு நல்ல சுவையான வகையில் வித்தியாசமான ஒரு இனிப்பு செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டால், அப்போது வீட்டில் பிரட் இருந்தால், அந்த பிரட்டை வைத்து ஒரு அல்வா செய்து கொடுத்தால், நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மில்க் பிரட் - 10 துண்டுகள்
பாதாம் - 15
முந்திரி - 15
ஏலக்காய் - 5
நெய் - அரை கப்
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1 கப்
செய்முறை:
* பிரட் துண்டுகளின் ஓரங்களில் வெட்டி விட்டு நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் நெய்யை ஊற்றி காய்ந்ததும், பாதாம் மற்றும் முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* அடுத்து உதிர்த்த பிரட் துண்டுகளை நெய்யில் போட்டு, பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, கொதிக்க விடவும்.
* பாலானது நன்கு கொதிக்கும் போது அதில் சர்க்கரையை போடவும். சர்க்கரை கரையும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
* பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் பாதாமில் 4 துண்டுகளை தனியாக எடுத்து வைத்து விட்டு, மீதமுள்ளவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
* அரைத்த பேஸ்ட்டை கொதிக்கும் பாலில் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* பின்பு வறுத்து வைத்துள்ள பிரட் தூளை நெய்யுடன் பாலில் சேர்த்து, தீயை குறைவிலேயே வைத்து, 10 நிமிடம் வேக வைக்கவும். கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
* இதற்குள் பாலானது வற்றி, அல்வா போன்று வந்துவிடும். இப்போது ஓரங்களில் நெய் விட ஆரம்பிக்கும்.
* பின்னர் இதன் மேல் பாதாம் மற்றும் முந்திரியால் அலங்கரிக்கவும். இப்போது சுவையான பிரட் அல்வா ரெடி!!!
* இதனை சூடாகவோ அல்லது குளிர்ச்சியுடனோ சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மில்க் பிரட் - 10 துண்டுகள்
பாதாம் - 15
முந்திரி - 15
ஏலக்காய் - 5
நெய் - அரை கப்
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1 கப்
செய்முறை:
* பிரட் துண்டுகளின் ஓரங்களில் வெட்டி விட்டு நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் நெய்யை ஊற்றி காய்ந்ததும், பாதாம் மற்றும் முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* அடுத்து உதிர்த்த பிரட் துண்டுகளை நெய்யில் போட்டு, பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, கொதிக்க விடவும்.
* பாலானது நன்கு கொதிக்கும் போது அதில் சர்க்கரையை போடவும். சர்க்கரை கரையும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
* பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் பாதாமில் 4 துண்டுகளை தனியாக எடுத்து வைத்து விட்டு, மீதமுள்ளவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
* அரைத்த பேஸ்ட்டை கொதிக்கும் பாலில் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* பின்பு வறுத்து வைத்துள்ள பிரட் தூளை நெய்யுடன் பாலில் சேர்த்து, தீயை குறைவிலேயே வைத்து, 10 நிமிடம் வேக வைக்கவும். கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
* இதற்குள் பாலானது வற்றி, அல்வா போன்று வந்துவிடும். இப்போது ஓரங்களில் நெய் விட ஆரம்பிக்கும்.
* பின்னர் இதன் மேல் பாதாம் மற்றும் முந்திரியால் அலங்கரிக்கவும். இப்போது சுவையான பிரட் அல்வா ரெடி!!!
* இதனை சூடாகவோ அல்லது குளிர்ச்சியுடனோ சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வீட்டிலேயே எளிய முறையில் மில்க்மெய்டு சாக்லேட் பர்ஃபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மில்க்மெய்டு - அரை டேபிள்ஸ்பூன்
முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன் (இரண்டாக உடைத்தது)
பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன் (இரண்டாக உடைத்தது)
வெண்ணெய் - அரை கப்
சர்க்கரை - அரை கப்
கோகோ - மூன்று டேபிள்ஸ்பூன்
செய்முறை :
* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மில்க்மெய்டு, வெண்ணெய், சர்க்கரை, கோகோ ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
* கெட்டியானதும் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தி, மேலே முந்திரி, பாதாம் தூவி நன்றாக ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.
* சுவையான மில்க்மெய்டு சாக்லேட் பர்ஃபி ரெடி.