என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ்: ரைஸ் பக்கோடா
    X

    சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ்: ரைஸ் பக்கோடா

    மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட மிகவும் உகந்தது ரைஸ் பக்கோடா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாதம்  - 1 கப்
    கடலைமாவு - 1/2 கப்
    வெங்காயம் - 1
    இஞ்சி - 1 துண்டு
    பச்சைமிளகாய் - 2
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை - 1 கொத்து
    உப்பு, எண்ணெய் - தேவையானது

    செய்முறை :

    * இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    * வடித்த சாதத்தை நன்றாக குழைய பிசைந்து கொள்ளவும்.

    * ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மசித்த சாதம், கடலைமாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேவையான உப்பு, காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.

    * அடுப்பில் கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை பக்கோடாவுக்கு போடுவதுபோல் கிள்ளி போட்டு சிவந்ததும் எடுக்கவேண்டும்.

    * மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் உகந்தது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×