என் மலர்

  ஆரோக்கியம்

  சுவையான வெஜிடபிள் சமோசா செய்வது எப்படி
  X

  சுவையான வெஜிடபிள் சமோசா செய்வது எப்படி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுவையான சுவையான வெஜிடபிள் சமோசா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  மைதா மாவு  - 250 கிராம்,  
  உருளைக்கிழங்கு  - 250 கிராம்,
  பச்சைப் பட்டாணி  - 50 கிராம்,
  பச்சை மிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  இஞ்சி விழுது  - ஒரு டேபிள்ஸ்பூன்,
  மஞ்சள்தூள்  - ஒரு டீஸ்பூன்,
  முந்திரித் துண்டுகள்  - 10,
  சீரகம், சோம்பு  - தலா ஒரு டீஸ்பூன்,
  நறுக்கிய கொத்தமல்லித் தழை  - 2 டேபிள்ஸ்பூன்,
  கரம்மசாலாத்தூள்  - ஒரு டீஸ்பூன்,
  வனஸ்பதி  50 கிராம்,
  உப்பு, எண்ணெய் -  தேவையான அளவு.

  செய்முறை:  

  * பச்சைப் பட்டாணி, கேரட், பீன்ஸ், நறுக்கிய உருளைக்கிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்து நீரை வடிகட்டி வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து வைக்கவும்.

  * ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, சீரகத்தூள், லேசாக சூடாக்கிய வனஸ்பதி சேர்த்து நன்றாக கலந்த பின் நீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து, எட்டு பாகங்களாக செய்து, நீளவாக்கில் தேய்க்க வேண்டும்.

  * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின் முந்திரி சேர்த்து, வறுத்த பிறகு பச்சை மிளகாய், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.

  * அடுத்து அதில் மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள் போட்டுக் கிளறிய பின்னர் மசித்த உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணியை சேர்த்து வதக்கி இறக்கி, கொத்தமல்லித் தழை தூவி வைக்கவும்.

  * நீளமாகத் தேய்த்த மாவினை முக்கோணம் வடிவில் செய்து, உருளைக்கிழங்கு மசாலாவை 3 ஸ்பூன் எடுத்து உள்ளே வைத்து மூடி சமோசாக்கள் செய்து வைக்கவும்.

  * கடாயில் எண்ணெயை ஊற்றி  சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து, செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

  * சுவையான சுவையான வெஜிடபிள் சமோசா ரெடி.
   
  குறிப்பு: சமோசாக்கள் மூழ்கும் அளவுக்கு எண்ணெய் இருக்க வேண்டும்.

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×