என் மலர்
ஆரோக்கியம்

நேந்திரம் பழ ஜாம் செய்வது எப்படி
குழந்தைகளுக்கு பிடித்தமான நேந்திரம் பழ ஜாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நன்கு கனிந்த நேந்திரம் பழம் - 4
வெல்லம் - ஒரு கப்,
நெய் - கால் கப்.
செய்முறை :
* நேந்திரம் பழத்தை தோல் நீக்கி, மிக்ஸியில் அரைத்து ஒரு கப் அளவுக்கு விழுதாக்கவும்.
* வெல்லத்தைக் சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும்.
* அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் வடிகட்டிய வெல்லம், அரைத்த நேந்திரம் பழ விழுது, நெய் சேர்த்து கைவிடாமல் நன்கு சுருள கிளறவும்.
* ஓரங்களில் நெய் கசிய ஆரம்பித்தவுடன் இறக்கவும்.
* சூடு ஆறியதும் காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும்.
* சுவையான நேந்திரம் பழ ஜாம் ரெடி.
குறிப்பு: இந்த ஜாமுடன் தேங்காய்ப் பால் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்க... பாயசம் ரெடி! பலாச் சுளையிலும் இதே முறையில் செய்யலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story