என் மலர்
சமையல்

உடல் எடையை குறைக்கணுமா?... கொள்ளு துவையல் இருக்க கவலை எதற்கு?
- உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.
- கொள்ளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் நிறைவாக உணர வைக்கும்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துண்டுகள் - 1 கப்
புளி - 10 கிராம்
கடுகு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் கொள்ளை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, சிறிதளவு உளுந்து, காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும்.
வறுத்து வைத்திருக்கும் கலவையை மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய்த் துண்டுகள், புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும்.
கடைசியாக கடுகு, கறிவேப்பிலையை தாளித்துக் கொட்டி சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட சுவை அமோகமாக இருக்கும்.
நீங்கள் உண்ணும் உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைவதால் எடை இழப்பு ஏற்படும்.
கொள்ளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் நிறைவாக உணர வைக்கும். இதனால் நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் குறையும்.
கொள்ளு துவையலாக மட்டுமில்லாமல், கொள்ளை வேகவைத்து சுண்டலாகவும், கொள்ளு தோசை, கொள்ளு சூப், கொள்ளு ரசம் முதலானவற்றை செய்து சாப்பிடலாம்.






