என் மலர்
சமையல்
- பனீரை ஒரே மாதிரி சமைத்து போரடித்துவிட்டதா?
- இன்று உங்கள் வீட்டில் பனீர் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோர் பனீரை விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் உங்கள் வீட்டில் பனீரை அடிக்கடி சமைப்பீர்களா? எப்போதும் நீங்கள் பனீரை ஒரே மாதிரி தான் சமைப்பீர்களா? பனீரை ஒரே மாதிரி சமைத்து போரடித்துவிட்டதா? இன்று உங்கள் வீட்டில் பனீர் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் இந்த முறை பனீரைக் கொண்டு குருமா செய்யுங்கள். இந்த பனீர் குருமா சப்பாத்தி, பூரி,
நாண் போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பனீர் - 300 கிராம்
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - 1 அங்குல அளவு
பச்சை மிளகாய் - 4
பாதாம் -12
முந்திரி - 12
கசகசா - 2 டீஸ்பூன்
சோம்பு- 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு -2
ஏலக்காய் - 1
பிரியாணி இலை -1
அன்னாசி பூ - 2
தயிர் - கால் கப்
பால் -1 கப்
பிரஷ் கிரீம் - 1 டேபிள் ஸ்பூன்
கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்
கொத்த மல்லித்தழை (பொடிதாக)
நறுக்கியது) -2 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ள வேண்டும். பாலை காய்ச்சி ஆற வைக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பாதாமை சூடான நீரில் போட்டு 4 மணி நேரம் ஊறவைத்து மேல் தோலை நீக்கிக்கொள்ள வேண்டும். முந்திரி மற்றும் கசகசாவை வெந்நீரில் போட்டு கால் மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் பாதாம், முந்திரி, கசகசா மூன்றையும் மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பனீரை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதை தனியாக ஒரு பிளேட்டில் எடுத்து ஆறவைக்கவும். மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து மீதமிருக்கும் எண்ணெய்யை ஊற்றி சூடானதும் அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை. அன்னாசி பூ ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
அதன் பிறகு அதில் வெங்காய விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பின்னர் பாதாம் மற்றும்
முந்திரி விழுதை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்க வேண்டும். இந்த கலவை நன்றாக வதங்கியவுடன் அதில் தயிர் சேர்த்து கிளறவும். பின்னர் அதில் பாலை ஊற்றி 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். பின்பு அதனுடன் பனீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
கடைசியாக அந்த கலவையில் பிரஷ் கிரீம் சேர்த்து கலக்க வேண்டும். கசூரி மேத்தி மற்றும் கொத்த மல்லி தழையை அதன் மேலே தூவி இறக்கினால் சுவையான நவாபி பனீர் தயார்.
- சட்னி செய்யும் போது எள்ளை வறுத்து பொடித்து தூவினால் ருசி அதிகமாக இருக்கும்.
- எண்ணெய் கொட்டினால் கோலமாவை போட்டு துடைத்தால் நீங்கி விடும்.
* வெங்காய சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து தூவினால் ருசி அதிகமாக இருக்கும்.
* துருபிடித்த தோசைக்கல், வாணலி உள்ளிட்ட துருபிடித்த பாத்திரத்தில் படிந்துள்ள கறைகளை நீக்க உருளைக்கிழங்கை பாதியாக வெட்டிக் கொள்ளவும். சிறிது உப்பு மற்றும் எண்ணெய்யை கலந்து அதில் உருளைக்கிழங்கை தோய்த்து, துருபிடித்த பாத்திரத்தை தேய்த்தால் பளிச்சென மாறிவிடும்.
* சமையல் அறையில் கரப்பான் பூச்சி தொல்லையா? அந்த இடத்தில் கிராம்பை வைக்கலாம் அல்லது கிராம்பு எண்ணெய்யை சிறிது தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம். இதன் வாசனைக்கு கரப்பான் பூச்சி வராது. அடிக்கடி கிராம்பை மாற்ற வேண்டும்.
* புதிதாக வாங்கிய மண் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சிறிது நேரம் வைத்து சூடேற்றிவிட்டு, பின் அதை கழுவினால் மண் வாசனை வராது. விரிசலும் ஏற்படாது
* சாக்பீஸ்சை காடா துணியில் பொதிந்து வெள்ளிப்பொருள்கள் வைத்திருக்கும் இடத்தில் வைத்தால் அவை துரு பிடிக்காமலும், கருத்துப்போகாமலும் இருக்கும்.
* அடைக்கு கடலைப்பருப்பை ஊறவைத்து அரிசி கலந்து அரைக்கும் போது வேகவைத்த உருளைக்கிழங்கு அல்லது மரவள்ளிக்கிழங்கை போட்டு அரைத்தால் அடை ருசியாக இருக்கும்.
* சமையல் மேடையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன் மீது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கிவிடும்.
* மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்சில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
* வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
* பாகற்காயை வில்லைகளாக நறுக்கி, எலுமிச்சை சாறில் சிறிது நேரம் ஊற வைத்து பொரியல் செய்தால் சுவையாக இருக்கும்.
- டம்ப்ளிங்ஸ் விதவிதமான முறைகளில் தயார் செய்யப்படுகிறது.
- நாம் எளிதாக வீட்டிலேயே செய்துவிடலாம்.
சீன உணவு பொருட்களில் மிகவும் பிரபலமான டம்ப்ளிங்சை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மிகவும் பிரபலமான சீன உணவுப் பொருளான இந்த டம்ப்ளிங்ஸ் விதவிதமான முறைகளில் தயார் செய்யப்படுகிறது. வெஜ்டபிள் டம்ப்ளிங்ஸ், சிக்கன் டம்ப்ளிங்ஸ், மட்டன் டம்ப்ளிங்ஸ் என பலவிதமான டம்ப்ளிங்ஸ் உணவகங்களில் கிடைக்கின்றன.
ஆனால் சிலருக்கு வெளியே உணவகங்களில் சாப்பிட்டால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். மேலும் உணவகங்களில் கிடைக்கும் அனைத்து உணவு பொருட்களுமே உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை கடைகளில் வாங்கி சாப்பிடும்போது தேவையில்லாத பணச்செலவு தான். இதனை நாம் எளிதாக வீட்டிலேயே செய்துவிடலாம். அதிக சுவையுடன் மொறுமொறுவென்று இருக்கும். இந்த ரெசிபியை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மேலும் விழாக்களின் போதும், நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்கும் போதும் இந்த டம்ப்ளிங்ஸ் மிகவும் ஏற்ற உணவுப் பொருளாக இருக்கும். இதனுடன் டோமட்டோ கெட்சப், மயோனைஸ் போன்ற உங்களுக்குப் பிடித்த சாஸை பயன்படுத்தி நீங்கள் சாப்பிடலாம். இப்போது வீட்டிலேயே எவ்வாறு டம்ப்ளிங்ஸ் தயார் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
காலிபிளவர்- கால் கப் (பொடிதாக நறுக்கியது)
கேரட்- கால் கப் (பொடிதாக நறுக்கியது)
முட்டைகோஸ்- கால் கப் (பொடிதாக நறுக்கியது)
காளாந் கால் கப் (பொடிதாக நறுக்கியது)
பனீர்- கால் கப் (பொடிதாக நறுக்கியது)
வெங்காய தாள்- ஒரு கப் (பொடிதாக நறுக்கியது)
மிளகு தூள்- ஒரு ஸ்பூன்
வெள்ளை எள்- ஒரு ஸ்பூன்
தக்காளி சாஸ்- ஒரு ஸ்பூன்
சோயா- சாஸ்- ஒரு ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
பச்சைமிளகாய்- 1 (நறுக்கியது)
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும். அது பச்சைவாசனை போகும் அளவுக்கு வதக்கி அதன்பிறகு பொடித்தாக நறுக்கி வைத்துள்ள காய்கறி கலவைகளை போட வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து அதிகமான தீயில் வைத்து நன்றாக கிளர வேண்டும்.

அதன்பிறகு ரைஸ் பேப்பர் ஷீட்டை எடுத்து ஒரு பிளேட்டில் தண்ணீரை ஊற்றி அதில் ரைஸ் பேப்பரை மூழ்க வைத்து எடுத்து ஒரு பிளேட்டில் வைத்து அதன் நடுவே நாம் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள காய்கறி கலவைகளை அதன் நடுவே வைத்து ஸ்பிரிங் ரோல் போன்று ரோல் செய்ய வேண்டும். இப்படியே அனைத்தையும் ரோல் செய்து வரிசையாக அடுக்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த டம்ப்ளிங்ஸ்களை போட்டு வறுத்து எடுக்க வேண்டும். எல்லா புறமும் திருப்பி திருப்பி போட்டு வறுக்க வேண்டும்.
சோயா டிப்பிங்
தொட்டுக்கொள்வதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சோயா சாஸ், ஒரு ஸ்பூன் தக்காளி சாஸ், கால் டீஸ்பூன் வெள்ளை எள் மற்றும் வெங்காயதாள், சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து எடுத்தால் சுவையான டிப்பிங் தயார். இது டம்ப்ளிங் தொட்டுக்கொள்வதற்கு மிகவும் ஏற்றது.
- பொடிக்கு சுவையை கூட்டுவது வறுத்து சேர்க்கும் வேர்க்கடலை தான்.
- சிறிதளவு நெய் சேர்த்து சாதத்தோடு சாப்பிடலாம்.
பல வகை இட்லி பொடிகளை செய்தும் சாப்பிட்டும் பார்த்திருப்பீர்கள். ஆனால் வேர்க்கடலை மற்றும் பூண்டில் செய்யப்பட்ட பொடியை ருசித்திருக்க மாட்டீர்கள். இந்த பொடிக்கு சுவையை கூட்டுவது நீங்கள் வறுத்து சேர்க்கும் வேர்க்கடலை தான். இந்த பொடியோடு சிறிதளவு நெய் சேர்த்து சாதத்தோடு சாப்பிடலாம். இந்த இட்லி பொடியை மிகவும் எளிமையாக செய்துவிடலாம். இதை செய்ய மிகக்குறைவான பொருட்களே தேவைப்படும்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை (தோல் அகற்றப்பட்டது) - 1 கப்
உலர்ந்த சிவப்பு மிளகாய் - 3-4 (காரத்திற்கேற்ப)
பூண்டு - 3 அல்லது 4 பல்
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
கொப்பரை- ஒரு கப்
பொட்டுக்கடலை- கால் கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை- ஒரு கொத்து
பெருங்காயம்- ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வேர்க்கடலை நன்றாக வறுக்கவும். அதன்பிறகு சீரகம் மற்றும் பூண்டு, புளி மற்றும் காய்ந்த சிவப்பு மிளகாய், பொட்டுக்கடலை, கொப்பரை தேங்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். பூண்டு கருக்காத அளவிற்கு மிதமான தணலில் வைத்து வறுக்கவும். பூண்டின் சுவை மாறாமல் அதே சுவையில் உங்களுக்கு வேண்டுமானால், அவற்றை வறுக்காமல் தட்டியும் போட்டுக்கொள்ளலாம்.
இப்போது நீங்கள் வறுத்த பொருட்கள் அனைத்தும் குளிர்ந்தவுடன், அவற்றை ஓரளவுக்கு தூளாக அரைக்கவும். நீங்கள் பொடி அரைக்கும்போது சிறிது இடைவெளி விட்டு அரைக்கவும், இல்லையென்றால் அவற்றில் உள்ள எண்ணெய் சத்துக்கள் வெளியேறக்கூடும். உங்களுக்கு பேஸ்டியாக வேண்டும் என்றால் அப்படி அரைத்துக்கொள்ளலாம்.
ஆனால் தூள் போன்று வேண்டும் என்று விரும்பினால், கொஞ்சம் இடைவெளி விட்டு அரைப்பது நல்லது. தூளாக அரைத்து முடிந்ததும், அவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கலாம்.
நீங்கள் இப்போது அரைத்து தூளாக வைத்துள்ள இந்த பொடியை சிறிது நெய் அல்லது நல்லெண்யுடன் சேர்த்து சேர்த்து இட்லிக்கோ அல்லது சாதத்திற்கோ சேர்த்து ருசிக்கலாம். மற்றும் காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கொள்ளவும். பொடியை தயாரித்து இரண்டு வாரங்களுக்கு மேல் பயன்படுத்தலாம்.

- குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது.
- நண்டு சளி, இருமலுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது.
கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். மீன் வகைகளைக் காட்டிலும், நண்டு, இறால் வகைகளின் சுவைகளுக்கு அடிமையாகாத அசைவப் பிரியர்கள் இருக்கவே மாட்டார்கள்.
நண்டில் உள்ள புரோட்டீன் ஒருவரின் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது.
கடல் உணவுகளில் ஒன்றான நண்டு சளி, இருமலுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது. சளி, இருமல் என்ற தொந்தரவு ஏற்பட்டாலே நண்டு வாங்கி சமைத்து சாப்பிடுபவர்கள் அதிகம். நண்டு ரசம், சூப் போன்ற உணவுகளில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களிலும் மருத்துவ பண்புகள் நிறைந்திருக்கும்.
நண்டு குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. சளி, இரும்மல், தொண்டை வலி ஆகியவற்றை சரி செய்யக்கூடியது.
தலை வலி, தலை பாரம், சளி, இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற தொந்தரவு உள்ளவர்கள் நண்டு சூப் செய்து சாப்பிட்டால் போதும்.
நல்ல நிவாரணம் கிடைக்கும். பின் எப்போதெல்லாம் காய்ச்சல், இருமல் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் இந்த நண்டு சூப்பை செய்து சாப்பிட்டாலே போதுமானது.
ஆனால் சளி பிடிக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, மனதில் ஆசை தோன்றி விட்டால் உடனே சமைத்து சாப்பிடுங்கள். கிராமங்களில் கை வைத்தியமாக வயல் வெளியில் கிடைக்கும் நண்டுகளை வைத்து சூப் செய்து சாப்பிடுவது வழக்கம். நண்டு சூப் வைப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நண்டு - 2
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - சிறு துண்டு
மிளகு - அரை ஸ்பூன்
சீரகம் - கால் ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 2
பட்டை - தேவையான அளவு
பிரியாணி இலை - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் நண்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நண்டின் சதைப்பகுதி வெளியில் வரும் அளவுக்கு தட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இஞ்சி, பூண்டையும் தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். நன்றாக வதங்கியவுடன் அரிசி கழுவிய தண்ணீர் அல்லது தண்ணீர் போதுமான அளவு ஊற்ற வேண்டும்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் நண்டு, மஞ்சள் தூள், உப்பு போடவும். நண்டு நன்கு வெந்ததும் மிளகு, சீரகத்தூள் போட வேண்டும். நண்டு ஓடு அடியில் இருக்கும் அதனால் வடிகட்டி விட்டு கொத்தமல்லி இலை தூவி சுடச் சுட பறிமாறவும். இதோ சுவையான நண்டு சூப் ரெடி.
- அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த கட்லெட் இருக்கும்.
- குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த கட்லெட் இருக்கும் குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் என்று அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இந்த மயோ சீஸி கட்லெட் இருக்கும்.
நீங்கள் இன்று ஸ்நாக்சாக சாப்பிடக்கூடிய வகையில் சுவையான கட்லெட் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இது வீட்டில் மழை நேரங்களில் சுட சுட ஏதாவது சாப்பிட நினைக்கும் பொழுது நீங்கள் வழக்கம் போல் வடை, போண்டா, பஜ்ஜி என செய்து கொடுப்பதற்கு பதிலாக இந்த சுவையான மயோ சீஸி கட்லெட் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு- 4
பச்சைமிளகாய்- 2 (நறுக்கியது)
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
கரம் மசாலாதூள்- ஒரு ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- பொறிப்பதற்கு
பிரெட் தூள்- ஒரு கப்
மைதா- ஒரு ஸ்பூன்
மயோ- 3 ஸ்பூன்
சீஸ் - துருவியது ஒரு கப்
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்தூள், கரம் மசாலாதூள், பிரெட் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் மயோனிஸ் மற்றும் துருவிய சீஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மற்றொரு கிண்ணத்தில் மைதா மாவுடன் நீர் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பிளேட்டில் பிரெட் தூளை பரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவை கையில் எண்ணெய் தடவிக்கொண்டு எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி அதன் நடுவே மயோ, சீஸ் கலவையை வைத்து உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை மைதா கரைசலில் முக்கி எடுத்து பிரெட் தூளில் நன்றாக புரட்டி எடுத்து ஒரு பிளேட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த உருண்டைகளை எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான மயோ சீஸி கட்லெட் தயார்.

- உடலுக்கு மிகவும் நல்லது.
- வெற்றிலை செரிமானத்தை தூண்ட உதவுகிறது.
வித்தியாசமான முறையில் வெற்றிலை லட்டு ட்ரை பண்ணி பாருங்க. உடலுக்கு மிகவும் நல்லது. வெற்றிலை செரிமானத்தை தூண்ட உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
வெற்றிலை-3
மில்க்மேய்ட்-50 கிராம்
தேங்காய் துருவல்- ஒரு கப்
டூட்டிபுரூட்டி- 4 ஸ்பூன்
குல்குந்து- 4 ஸ்பூன்
நெய்- தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் இளம் வெற்றிலைகளை எடுத்து காம்புகளை நீக்கிவிட்டு இரண்டாக கிழித்து சேர்க்க வேண்டும். அதில் மில்க்மேய்டை ஊற்றி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் அரைத்து வைத்துள்ள வெற்றிலை கலவையை ஊற்றி கிளர வேண்டும்.
இந்த கலவை நன்றாக வாணலியில் ஒட்டாமல் வரும் அளவிற்கு கிளர வேண்டும். அதன்பிறகு இந்த கலவையை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் டூட்டிபுருட்டி மற்றும் குல்குந்து இரண்டையும் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
வெற்றிலை கலவையை உருண்டைகளாக உருட்டி அதன் நடுவே குல்குந்து கலவையை வைத்து நன்றாக மூடி லட்டு வடிவத்திற்கு உருட்டி தேங்காய் துருவலில் போட்டு புரட்டி எடுத்தால் சுவையான பான் லட்டு தயார்.
- உணவின் ஊட்டச்சத்துகள் வீணாகாமல் பாதுகாக்கப்படுகின்றன.
- உணவின் சுவையை அதிகரிக்கச் செய்கிறது.
தொன்று தொட்டு நம் முன்னோர்கள் மண்பாண்டங்களில் தான் உணவை பாரம்பரியமாக சமைத்து வருகின்றனர். இன்றும் கூட பலரது வீடுகளில் ஒரு சில உணவு வகைகளை சமைக்க மண்பாண்டங் களை பயன்படுத்துவது உண்டு. சமீப காலங்களில் அந்த அளவிற்கு மண்பாண்டத்தின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்து வருகின்றனர். மண்பாண்டத்தில் சமைக்கும் உணவானது ஊட்டச்சத்துகளை இழக்காமல் அப்படியே அதன் தன்மையை முழுமையாக கொண்டிருக்கும்.
மேலும் அதில் சமைக்கும் உணவானது அதீத சுவையுள்ளதாகவும் மாறுகின்றன. மண்பாண்டங்களில் தண்ணீரை ஊற்றினால் கால்பகுதி அப்படியே உணவில் கலந்து விடக்கூடும். இதற்கு மண்பாண்டத்தில் இருக்கும் நுண்ணிய துளைகள் வழியே நீர் கசிவு ஏற்படுவது தான் காரணம்.
மிக நுண்ணிய துளைகளை கொண்டுள்ள மண்பாண்டம் சமைக்கும் உணவில் சூடு மற்றும் ஈரப்பதம் இரண்டையுமே சமமாக பரவ செய்யும். இதனால் உணவின் ஊட்டச்சத்துகள் வீணாகாமல் பாதுகாக்கப்படுகின்றன. இதனால்தான் மற்ற பாத்திரங்களை விட மண்பாண்டத்தில் சமைக்கும் உணவுகள் அதிக ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது.
மண்பாண்டம் என்பது களிமண்ணால் செய்யப்பட கூடியது ஆகும். உணவின் சுவையை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் ஆரோக்கியம் பன்மடங்கு பெருகச்செய்கிறது. இதில் இருக்கும் இரும்பு, கால்சியம் போன்றவை சமைக்கும் உணவுப் பொருட்களிலும் கலந்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மண்பாண்டத்தில் சமைக்கும் உணவில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துகள் ஏராளமாக பெருகுகின்றன. இது நம் உடலுக்கு மிகுந்த நன்மைகளை செய்யக் கூடியது.
மற்ற பாத்திரங்களில் நீங்கள் சமைக்கும் போது ஊற்றும் எண்ணெயை விட மண்பாண்டத்தில் நீங்கள் சமைக்கும் போது குறைவாகவே ஊற்றலாம். உணவை மண்பாண்டத்தில் மிதமான தீயில் சமைக்கும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது.
எனவே இதில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் இயற்கையாக கிடைக்கும் எண்ணெய் பாதுகாக்கப்படுகிறது. எனவே நாம் அதிகமாக எண்ணெய் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. இதனால் மண்பாண்டத்தில் சமைப்பதால் இதயத்திற்கும் வலுசேர்க்கிறது.
மண்பாண்டத்தில் உணவை சமைத்து வந்தால் இதய நோய்க்கான அறிகுறிகள் குறையும். புதிதாக மண்பாண்டம் வாங்குபவர்கள் சிறிதுநேரம் அதனை தண்ணீரில் ஊற வைக்கவும். நன்கு உலர்ந்த பின் உங்களிடமிருக்கும் சமையல் எண்ணெயை மண்பாண்டத்தின் உள்புறமாக தடவி நிரம்ப தண்ணீரை ஊற்றி குறைந்த தீயில் 2 மணி நேரம் கொதிக்க விடுங்கள்.
பின்னர் அப்படியே தண்ணீரை ஆற விடுங்கள். இதனால் மண்பாண்டம் திடமாக மாறும். அதன் பிறகு நீங்கள் சமைக்கும் போது எந்த விதமான கசிவும் நுண்துளைகள் மூலம் ஏற்படாமல் இருக்கும்.

மண்பாண்டத்தில் இருக்கும் மண் வாசமும் அகலும், அதன் பிறகு சமைக்கப்படும் உணவானது ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும். ருசி மிகுந்ததாகவும் பாதுகாப் பானதாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இவ்வளவு நன்மைகளை தரக்கூடிய மண்பாண்டத்தை விடுத்து மற்ற பாத்திரங்களை இன்னமும் பயன்படுத்துவது ஏன்? முடிந்தவரை உங்களுக்கு எதற்கெல்லாம் நிறைந்து மண்பாண்டம் பயன்படுத்த முடியுமோ! அந்த உணவு எல்லாம் மண்பாண்டத்தை வாங்கி பயன்படுத்துங்கள்.
குறிப்பாக கீரை மற்றும் பருப்பு உணவை சமைக்க மண்பாண்டத்தை பயன்படுத்துவது ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும். அதனால் சமையலுக்கு மண்பானைகளை பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கைக்கு வழிவகுத்து வாழ்க்கையில் பயணிப்போம்.
- இந்த கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
- சர்க்கரை, உப்பு கலந்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் துண்டுகள் - ½ கப்
பச்சை மிளகாய் - 2
சர்க்கரை கால் டீஸ்பூன்
தயிர் -1 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கு
செய்முறை:
தேங்காய் துண்டுகளுடன், நறுக்கிய பச்சை மிளகாய், சர்க்கரை, உப்பு கலந்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர் அதில் தயிர் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்க வேண்டும். இந்த கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். பின்னர் அதில் சீரகத்தை சேர்க்க வேண்டும். சீரகம் நன்றாக பொரிந்ததும். தேங்காய் கலவையில் இந்த தாளிப்பைக் கொட்டி அதன் மீது கொத்தமல்லித்தழையை தூவ வேண்டும். சுவையான 'தேங்காய் ரெய்தா' தயார்.
- பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
- வெண்டைக்காய்களைப் போட்டு மொறுமொறுப்பாக வறுக்கவும்.
தேவையான பொருட்கள்:
பிஞ்சு வெண்டைக்காய்- ௧௫ (நறுக்கியது)
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளரிக்காய் -கப்
சீரகத்தூள் 1 டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
பிளாக் சால்ட் - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
புளிப்பில்லாத தயிர்- ஒரு கப்
கொத்தமல்லித்தழை- ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கு
செய்முறை:
வெண்டைக்காய்களை சுத்தப்படுத்தி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். பின்னர் அதில் வெண்டைக்காய்களைப் போட்டு மொறுமொறுப்பாக வறுக்கவும். அதன்பிறகு அதில் காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும். இப்போது எண்ணெய்யை வடித்து வெண்டைக்காய்களை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
அகலமான கிண்ணத்தில் தயிர், பொடிதாக நறுக்கிய வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், பிளாக் சால்ட் ஆகியவற்றை போட்டு கலக்க வேண்டும். இதனுடன் வெண்டைக்காய்களையும் சேர்த்து கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். இப்போது சுவையான 'வெண்டைக்காய் ரெய்தா தயார்.
- ரவா கேசரி, ரவா பர்பி செய்யும்போது பால் சேர்க்க சுவை கூடும்.
- கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டால் கல் உப்பு தடவினால் கொப்பளம் உண்டாகாது.
* தோசைக்கு ஊறவைக்கும்போது ஒரு கிலோ அரிசிக்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவையான, சத்தான தோசை ரெடி.
* கோதுமை மாவில் கொஞ்சம் வேர்க்கடலையை பொடித்து கலந்து பூரி, சப்பாத்தி செய்தால் ருசியாக இருப்பதுடன் உடலுக்கும் வலிமை ஏற்படும்.
* எலுமிச்சம் பழங்களை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் `பிரஷ்'ஷாக இருக்கும். அந்த பழங்களில் இருந்து நிறைய சாறும் கிடைக்கும்.
* தேங்காய் பர்பி பதம் தவறி முறுகி விட்டால் அதை பாலில் ஊறவைத்து மீண்டும் கிளறி, இறக்கும் போது நெய்யில் வறுத்த கடலைமாவை சிறிது தூவி இறக்கினால் பர்பி சரியான பதத்துக்கு வந்துவிடும்.
* மிளகாய் பொடிக்கு வறுக்கும்போது ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சேர்த்து அவற்றையும் அரைக்கலாம். கறி வகைகள் செய்யும்போது இந்த பொடியை தூவினால் சுவையாக இருக்கும்.
* கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கிளறினால், கொழுக்கட்டை விரிந்து போகாமல் இருக்கும்.
* ரவா தோசை செய்யும்போது அரிசி மாவு, ரவை இரண்டையும் சம அளவு கலந்து, அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி கடலை மாவு அல்லது வறுத்து அரைத்த உளுந்து மாவு கலந்து தோசை வார்த்தால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.
* ரவா கேசரி, ரவா பர்பி செய்யும்போது தண்ணீரின் அளவில் பாதி குறைத்துவிட்டு அதற்கு பதில் கெட்டியான பால் சேர்க்க சுவை கூடும்.
* வெந்தயக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சளி சம்பந்தப்பட்ட கோளாறு நீங்கும். இதில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது.
* சமைக்கும்போது கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டுவிட்டால், அந்த இடத்தில் தேன் அல்லது கல் உப்பை சிறிது தடவினால்கொப்பணளம் உண்டாகாது.
* தயிர் பச்சடி, சாலட் தயாரிக்கும்போது தேங்காய் எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட வாசனையாக இருக்கும்.
* அடைக்கு ஊற வைக்கும்போது சிறிது கோதுமையும், ஜவ்வரிசியும் சேர்த்து ஊற வைத்து அரைத்து அடை செய்தால் மொறுமொறுவென்று மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
* முற்றிய முருங்கைக்காய்களின் விதைகள் உள்ளே இருக்கும் பருப்புகளை வறுத்து உண்டால் நிலக்கடலை போல் ருசியாக இருக்கும். உடலுக்கும் வலு சேர்க்கும்.
* ரசம் தயாரிக்கும்போது சிறிது முருங்கை இலை சேர்த்து கொதிக்க வைத்தால் ரசம் மணமாக இருக்கும். முருங்கைக்கீரை சேர்ப்பதால், சத்தாகவும் இருக்கும்.
- ஒவ்வொரு பண்டிகைக்கும் விசேஷமான உணவு படைக்கப்படுவது வழக்கம்.
- கார்த்திகை தீபத்தன்று, அவல் பொரி உருண்டை படைத்து வழிபடுவது வழக்கம்.
நம் மரபில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விசேஷமான உணவு நைவேத்தியமாகச் செய்து படைக்கப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்திக்குக் கொழுக்கட்டை, மகர சங்கராந்திக்குச் சர்க்கரைப் பொங்கல், நவராத்திரிக்குச் சுண்டல் என்பதுபோல திருக்கார்த்திகைக்குப் பொரி உருண்டை. கார்த்திகை தீபத்தன்று, அவல் பொரி உருண்டை, அப்பம் செய்து கடவுளுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். வாங்க பொரி உருண்டை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நெல் பொரி- 500 கிராம்
வெல்லம்- 250 கிராம்
நெய்- தேவையான அளவு
தேங்காய்- 3 ஸ்பூன்
ஏலக்காய்தூள்- ஒரு ஸ்பூன்
செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெல்லம் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி பாகு எடுக்க வேண்டும். இதற்கு பாகுபதம் என்பது மிகவும் முக்கியம். பாகு இறுகி வரும் வரை அதாவது அதிரசம் செய்வதற்கு பாகு காய்ச்சுவதுபோல் பாகுபதம் பார்த்து பாகு எடுக்க வேண்டும்.
வெல்லப்பாகு தயாரானதும் அதனை தண்ணீரில் போட்டு பார்த்தால் அது தண்ணீரில் கரையாமல் உருண்டு வர வேண்டும். அதுவே பதம். அப்போது ஏலக்காய் தூள் போட வேண்டும். பின்னர் தேங்காயை பல் பல்லாக வெட்டி அதனை நெய்யில் வறுத்து இதனுடன் சேர்க்க வேண்டும். அதன்பிறகு பொரியை வெல்லப்பாகில் கொட்டி அடுப்பில் இருந்து இறக்கி கிளர வேண்டும். நன்றாக வெல்லப்பாகில் கிளரி எடுக்க வேண்டும். அப்போது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இளஞ்சூடாக இருக்கும்போதே பொரி உருண்டைகளாக உருட்டி எடுக்க வேண்டும்.






