search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
    X

    இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    • ரவா கேசரி, ரவா பர்பி செய்யும்போது பால் சேர்க்க சுவை கூடும்.
    • கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டால் கல் உப்பு தடவினால் கொப்பளம் உண்டாகாது.

    * தோசைக்கு ஊறவைக்கும்போது ஒரு கிலோ அரிசிக்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவையான, சத்தான தோசை ரெடி.

    * கோதுமை மாவில் கொஞ்சம் வேர்க்கடலையை பொடித்து கலந்து பூரி, சப்பாத்தி செய்தால் ருசியாக இருப்பதுடன் உடலுக்கும் வலிமை ஏற்படும்.

    * எலுமிச்சம் பழங்களை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் `பிரஷ்'ஷாக இருக்கும். அந்த பழங்களில் இருந்து நிறைய சாறும் கிடைக்கும்.

    * தேங்காய் பர்பி பதம் தவறி முறுகி விட்டால் அதை பாலில் ஊறவைத்து மீண்டும் கிளறி, இறக்கும் போது நெய்யில் வறுத்த கடலைமாவை சிறிது தூவி இறக்கினால் பர்பி சரியான பதத்துக்கு வந்துவிடும்.

    * மிளகாய் பொடிக்கு வறுக்கும்போது ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சேர்த்து அவற்றையும் அரைக்கலாம். கறி வகைகள் செய்யும்போது இந்த பொடியை தூவினால் சுவையாக இருக்கும்.

    * கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கிளறினால், கொழுக்கட்டை விரிந்து போகாமல் இருக்கும்.

    * ரவா தோசை செய்யும்போது அரிசி மாவு, ரவை இரண்டையும் சம அளவு கலந்து, அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி கடலை மாவு அல்லது வறுத்து அரைத்த உளுந்து மாவு கலந்து தோசை வார்த்தால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.

    * ரவா கேசரி, ரவா பர்பி செய்யும்போது தண்ணீரின் அளவில் பாதி குறைத்துவிட்டு அதற்கு பதில் கெட்டியான பால் சேர்க்க சுவை கூடும்.

    * வெந்தயக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சளி சம்பந்தப்பட்ட கோளாறு நீங்கும். இதில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது.

    * சமைக்கும்போது கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டுவிட்டால், அந்த இடத்தில் தேன் அல்லது கல் உப்பை சிறிது தடவினால்கொப்பணளம் உண்டாகாது.

    * தயிர் பச்சடி, சாலட் தயாரிக்கும்போது தேங்காய் எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட வாசனையாக இருக்கும்.

    * அடைக்கு ஊற வைக்கும்போது சிறிது கோதுமையும், ஜவ்வரிசியும் சேர்த்து ஊற வைத்து அரைத்து அடை செய்தால் மொறுமொறுவென்று மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * முற்றிய முருங்கைக்காய்களின் விதைகள் உள்ளே இருக்கும் பருப்புகளை வறுத்து உண்டால் நிலக்கடலை போல் ருசியாக இருக்கும். உடலுக்கும் வலு சேர்க்கும்.

    * ரசம் தயாரிக்கும்போது சிறிது முருங்கை இலை சேர்த்து கொதிக்க வைத்தால் ரசம் மணமாக இருக்கும். முருங்கைக்கீரை சேர்ப்பதால், சத்தாகவும் இருக்கும்.

    Next Story
    ×