என் மலர்tooltip icon

    சமையல்

    • பேப்பர் விரித்து அப்பளம் வைத்தால் வெகு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
    • பூச்சி, புழுக்கள் வராமல் இருக்க வசம்பை போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

    * அப்பளம் வைக்கும் டப்பாவில் சிறிது அரிசி போட்டு அதன் மேல் பேப்பர் விரித்து அப்பளம் வைத்தால் வெகு நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

    * சிறிய வகை மீன்களுக்கு அதிக மசாலா சேர்க்காமல் உப்பும், மிளகாய்த்தூளும் கலந்தாலே சுவை அதிகமாக இருக்கும்.

    * தக்காளி சட்னி தயார் செய்யும் போது வெங்காயம், தக்காளியின் அளவு குறைவாக இருந்தால் இரண்டையும் வதக்கியவுடன் சிறிது வறுத்த வேர்க்கடலை சேர்க்க சட்னியின் அளவு கூடும்.

    * கறிவேப் பிலையை காம்புடன் பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு அதன் பசுமை மாறாமல் இருக்கும்.

    * பூண்டுவை கேரட் துருவுவதில் துருவினால் அதன் தோல்கள் உரிந்து, உரிக்க சுலபமாக இருக்கும்.

    * இட்லி பாத்திரத்திற்கு அடியில் இரண்டு ரூபாய் நாணயத்தை போட்டு இட்லி வேக வைத்தால் தண்ணீரின் அளவை அதன் சத்தத்தை வைத்து கண்டு பிடிக்க எளிதாக இருக்கும்.

    * ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

    * வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.

    * காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

    * காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

    * கேழ்வரகை ஊற வைத்து அரைத்துப் பால் எடுத்து, கோதுமை அல்வா போன்று செய்யலாம். கோதுமை அல்வாவைவிட ருசியாக இருக்கும்.

    • சாக்லேட் பல்வேறு ஃப்ளேவர்களில், சுவைகளில் கிடைக்கிறது.
    • சாக்லேட் வகைகளில் முக்கியமானதாக டார்க் சாக்லேட்.

    உலகம் முழுவதும் மக்களால் விரும்பி உண்ணப்படும் சாக்லேட் பல்வேறு ஃப்ளேவர்களில், சுவைகளில் கிடைக்கிறது. பொதுவாக இனிப்புகள் அனைத்தையும் சாக்லேட் என்று சொல்லும் பழக்கம் சிலருக்கு உண்டு.

    சாக்லேட் வகைகளில் முக்கியமானதாக டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட், வொயிட் சாக்லேட் ஆகிய மூன்று வகைகள் உள்ளன. இவற்றுடன் வேறு சில பொருட்களை சேர்த்து பல்வேறு வகை சாக்லேட்டுகள் உருவாக்கப்படுகின்றன.

    தேவையான பொருட்கள்:

    மில்க் சாக்லேட் பார் - 75 கிராம் (துண்டுகளாக்கவும்)

    கண்டன்ஸ்டு மில்க் - 50 மில்லி

    இனிப்பு கோகோ பவுடர் - 2 டீஸ்பூன்

    விரும்பிய நட்ஸ் கலவை (வால்நட், பாதாம், முந்திரி, உலர்திராட்சை) - ஒரு டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)

    செய்முறை:

    சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் உருக்கிக்கொள்ள வேண்டும். (ஒரு கிண்ணத்தில் கால் பங்கு தண்ணீரில் நிரப்பி அதை கொதிக்கவிட வேண்டும். இன்னொரு கிண்ணத்தில் நறுக்கிய சாக்லேட் சேர்த்து இந்த கிண்ணத்தை தண்ணீர் இருக்கும் பாத்திரத்தினுள் வைத்து சாக்லேட்டை உருக்கவும்.) அதனுடன் நட்ஸ், கண்டன்ஸ்டு மில்க் சேர்க்க வேண்டும்.

    30 நொடிகளுக்குப் பிறகு இறக்கி நன்கு கலந்துகொள்ள வேண்டும். சாக்லேட் நன்றாகக் கரைந்த பிறகு ஆறவிடவும். இதை ஒரு கரண்டியால் எடுத்துச் சிறிய உருண்டைகளாக்கி, மேலே கோகோ பவுடர் தூவி உருட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் கப் கேக் லைனருக்குள் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தேவையான போது எடுத்து சுவைக்கலாம். இந்த நட்ஸ் சாக்லேட்டை அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

    • அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் சிக்கன் தான்.
    • விருப்பமாக வீட்டிலேயும் சமைத்து சாப்பிடலாம்.

    இப்பொழுது அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது சிக்கன் தான். இந்த கோழிக்கறியில் எதை சமைத்துக் கொடுத்தாலும் அனைவரும் விருப்பமாக சாப்பிடுகிறார்கள். சிக்கன் குழம்பு, சிக்கன் மசாலா, சிக்கன் சில்லி, சிக்கன் பெப்பர், சிக்கன் ஃப்ரை. சிக்கன் 65 என்று பலவகை உணவுகளை கோழிக்கறியில் சமைக்கின்றோம். அதேபோல் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றாலும் அனைவரும் ஆர்டர் செய்வதும் இந்த சிக்கன் வகைகளை தான். இவ்வாறு அனைவருக்கும் பிடித்த கோழிக்கறியை வெளியில் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லதல்ல. எனவே இவற்றை விருப்பமாக வீட்டிலேயும் சமைத்து சாப்பிடலாம். வித்தியாசமான முறையில் சிக்கனை கொண்டு சிக்கன் டோநட் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்

    சிக்கன் 200

    வெங்காயம்- 1

    பச்சைமிளாகாய்- 1

    இஞ்சி- ஒரு துண்டு

    பூண்டு- 5 பல்

    மிளகாய்தூள்- கால் டீஸ்பூன்

    கரம்மசாலா தூள்- கால் டீஸ்பூன்

    மிளகுதூள்- கால் டீஸ்பூன்

    கொத்தமல்லி தழை

    பிரெட்- 2 துண்டு

    முட்டை- இ

    மைதா- ஒரு ஸ்பூன்

    பிரெட் தூள்- ஒரு கப்

    செய்முறை

    ஒரு மிக்சி ஜாரில் எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகள், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகாய்தூள், கரம்மசாலா தூள், மிளகுதூள், பிரெட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு ஸ்பூன் மைதா மாவினை ஒரு தட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று முட்டையையும் ஒரு கிண்ணத்தில் அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாக உருட்டி டோநட் மாதிரி செய்துகொள்ள வேண்டும். இந்த சிக்கன் டோநட்களை முட்டைக் கலவையில் போட்டு எடுத்து, மைதா மாவில் தோய்த்து, பிரெட் தூள்களில் புரட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தயாராக உள்ள சிக்கன் டோநட்களை பொன்நிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சிக்கன் டோநட் தயார்.

    • அரேபியன் ரெசிபி மொறுமொறுப்பான குனாஃபா.
    • பாலஸ்தீனம் குனாஃபாவை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது.

    உலர் பருப்பு வகைகள் நிறைந்த இந்த இனிப்பு கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு பாலஸ்தீன நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒரே தட்டில் 1,765 கிலோ எடை கொண்ட குனாஃபாவை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது, குறிப்பிடத்தக்கது.

    மோசரெல்லா சீஸ் மூலம் செய்யப்பட்ட மிருதுவான மற்றும் மொறுமொறுப்பான இனிப்பு உருகிய வெண்ணையில் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதற்கு கொனாபா, கனாஃபே மற்றும் நாஃபே போன்ற பல பெயர்கள் உள்ளன. சரி இனி வெர்மிசெல்லி கொண்டு அரேபியன் ரெசிபி மொறுமொறுப்பான குனாஃபா செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    சேமியா- 200 கிராம்

    சர்க்கரை- கால் கப்

    பால்- கால் கப்

    கிரீம்- கால் கப் டீஸ்பூன்

    வெண்ணெய்- 1/2 கப்

    சோளமாவு- 2 ஸ்பூன் கிராம்

    ரோஸ்வாட்டர்- கால் டீஸ்பூன்

    பாதாம் தூள்- கால் கப்

    மொசருல்லா சீஸ்- ஒரு கப்

    பிஸ்தா பருப்பு தூள்- 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பவுலில் சேமியாவை கையால் நொறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் உருக்கிய வெண்ணையை ஊற்றி நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும். இதனை ஒரு கேக் மோல்டில் ஒரு பாதியை மட்டும் போட்டி தட்டையாக பரப்பிக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு மீண்டும் ஒரு பவுலில் பால், கிரீம், சோளமாவு, சர்க்கரை, சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். இதனை ஒரு வாணலியில் ஊற்றி மிதமான தீயில் வைத்து காய்ச்ச வேண்டும். இந்த கலவை அடுப்பில் வைத்து அதில் ரோஸ்வாட்டர், மொசருல்லா சீஸ் சேர்த்து நன்றாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த கலவையை நாம் ஏற்கனவே சேமியா கலவையின் நடுவே ஊற்ற வேண்டும். அதன்பிறகு மீதம் இருக்கும் சேமியாவை அதன்மேல் மூடினாற்போல் பரப்பி வைக்க வேண்டும். இதனை 10 நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்த ஓவனில், 40 நிமிடம் பேக் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஓவன் இல்லை என்றாலும் குக்கரில் பேக் செய்துகொள்ளலாம்.

    அதன்பிறகு ஒரு கடாயில் சர்க்கரை சேர்த்து சிறிதளவு மட்டுமே தண்ணீர் ஊற்றி நன்றாக பிசுபிசுப்பு தன்மை வரும் வரை காய்ச்சி அந்த சர்க்கரை பாகினை நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள குனாஃபாவின் மீது ஊற்ற வேண்டும். அதன் மேல் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவற்றை பொடித்து மேலே தூவ வேண்டும்.


    • 80-களில் பிறந்தவர்களுக்கு தேன்மிட்டாய் என்றாலே பிரியம்தான்.
    • தேன்மிட்டாய்க்கு பல கதைகள் கூட இருக்கலாம்.

    தேன்மிட்டாய் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். 80-களில் பிறந்தவர்களுக்கு தேன்மிட்டாய் என்றாலே பிரியம்தான். இந்த தேன்மிட்டாய்க்கு பல கதைகள் கூட இருக்கலாம்.

    உங்களுக்கும் தேன் மிட்டாய் பிடிக்கும் என்றால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள ரெசிபியை அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த தேன் மிட்டாயை வீட்டிலேயே செய்து சுவைத்து பாருங்கள். சரி வாங்க நண்பர்களே தேன் மிட்டாயை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்

    அரிசி – ஒரு டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை – 2 கப்

    பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்

    ஃபுட் கலர் – கால் டீஸ்பூன்

    எண்ணெய் – தேவையான அளவு

    தண்ணீர் – ஒரு கப்

    செய்முறை:

    முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் உளுந்து மற்றும் அரிசி இரண்டையும் நன்கு சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் கால் டீஸ்பூன் ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் தயார் செய்து வைத்துள்ள மாவை ஒரு சிறிய ஸ்பூனை கொண்டு சிறிது சிறிதாக போட்டு பொறித்து எடுத்து கொள்ளுங்கள்.

    இப்பொழுது அடுப்பில் மீண்டும் ஒரு வாணலியை வைத்து 2 கப் சர்க்கரையை போட்டு அதனுடன் ஒரு கப் தண்ணீரை ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்தவுடன் அதனை அடுப்பில் இருந்து இறக்கி நாம் ஏற்கனவே பொறித்து வைத்துள்ள மிட்டாய்களை சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதன் மீது சிறிதளவு சர்க்கரையை தூவிக் கொள்ளுங்கள்.

    இப்பொழுது சுவையான 80's கிட்ஸ் ஸ்பெஷல் தேன் மிட்டாய் தயாராகி விட்டது. வாங்க சுவைக்கலாம் நீங்களும் இந்த தேன் மிட்டாய் ரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.

    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • ஆரஞ்சு மிட்டாயை செய்து தந்து பாராட்டினை பெறுங்கள்.

    பொதுவாக பள்ளியில் இருந்து திரும்பி வரும் குழந்தைகளுக்கு ஏதாவது சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து தர வேண்டும். மேலும் நாம் செய்து தரும் ஸ்நாக்ஸ் அவர்களுக்கு பிடித்த மாதிரியும் இருக்க வேண்டும் என்று சிந்தனை செய்பவரா நீங்கள் அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். இனிப்பு என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும், அதுவும் ஆரஞ்சு சுவையுடன் வித்தியாசமான மிட்டாய் என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

    ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் வீணாக தூக்கிப்போடும் ஆரஞ்சு பழதோலை பயன்படுத்தி மிட்டாய் செய்வது எப்படி என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள சமையல் குறிப்பினை பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரஞ்சு மிட்டாயை செய்து தந்து பாராட்டினை பெறுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    ஆரஞ்சு பழதோல் – 1 கைப்பிடி அளவு

    நாட்டு சர்க்கரை – 1 1/2 கப்

    ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்

    தண்ணீர் – தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் நாம் எடுத்து வைத்துள்ள ஒரு கைப்பிடி அளவு ஆரஞ்சு பழதோலினை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அதில் நாம் நறுக்கி வைத்துள்ள ஆரஞ்சு பழதோல்களை சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

    பிறகு அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் எடுத்து வைத்துள்ள நாட்டு சர்க்கரையை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

    இப்பொழுது அதனுடன் நாம் வேக வைத்து எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு பழதோல்களை சேர்த்து ஒன்றுடன் ஒன்று கலக்குமாறு நன்கு கலந்து விட வேண்டும்.

    இறுதியாக அதன் மீது நாம் எடுத்து வைத்துள்ள ஒரு டீஸ்பூன் ஏலக்காய் தூளினை சேர்த்து நன்கு கலந்து எடுத்து அதனை ஒரு தட்டில் வைத்து நன்கு ஆற விடவும். சுவையான ஆரஞ்சு கேண்டி தயார்.

    • குழந்தைகளுக்கு வேகவைத்த முட்டை என்றாலே பிடிக்காது.
    • மீண்டும் மீண்டும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

    இன்றைய சமையல் குறிப்பு பதிவில் நாம் பார்க்க இருப்பது கறிவேப்பிலை முட்டை மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தான். பொதுவாக குழந்தைகளுக்கு வேகவைத்த முட்டை என்றாலே பிடிக்காது. அதனால் அந்த முட்டையை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் நீங்கள் இந்த பதிவில் கூறியுள்ள வேகவைத்த கறிவேப்பிலை முட்டை மசாலா ரெசிபியை ஒருமுறை செய்து கொடுத்துப்பாருங்க..! அதன் பிறகு அவர்களே மீண்டும் மீண்டும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை – 8

    கறிவேப்பில்லை – 1 கைப்பிடி அளவு

    மிளகு – 2 டீஸ்பூன்

    சீரகம் – 2 டீஸ்பூன்

    சோம்பு – 2 டீஸ்பூன்

    இஞ்சு – 2 சிறிய துண்டு

    பூண்டு – 10 பற்கள்

    சின்ன வெங்காயம் – 14

    மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்

    மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்

    எண்ணெய் – தேவையான அளவு

    உப்பு – தேவையான அளவு

    தண்ணீர் – தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 8 முட்டைகளையும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு போட்டு அடுப்பில் நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதனை தோல் உரித்து இரண்டு பாதியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

    பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 2 டீஸ்பூன் மிளகு, 2 டீஸ்பூன் சீரகம், 2 டீஸ்பூன் சோம்பு, 2 சிறிய துண்டு இஞ்சி, 10 பற்கள் பூண்டு மற்றும் 14 சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

    அடுத்து மிக்சியில் இருக்கும் பொருட்களுடன் 2 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பில்லை, தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மசாலா பதத்திற்கு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    பின்னர் நம் முன்னரே வேகவைத்து நறுக்கிவைத்துள்ள முட்டையின் மீது நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை தடவிக்கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி நாம் மசாலா தடவி வைத்துள்ள முட்டையை அதனுடன் சேர்த்து முன்னும் பின்னும் பிரட்டி போட்டு நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    இப்பொழுது மிகவும் ருசியான கருவேப்பிலை முட்டை மசாலா தயார். நீங்களும் இந்த கறிவேப்பிலை முட்டை மசாலாவை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப்பாருங்கள்.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
    • நீங்களும் இந்த பிரெட் ஸ்ப்ரிங் ரோல் ரெசிபியை செய்து பாருங்கள்

    பிரெட் ஸ்ப்பிரிங் ரோல்

    இன்றைய சமையல் பதிவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அப்படி நினைப்பவர்களுக்காக தான் இந்த பதிவு. வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த பிரெட் ஸ்பிரிங் ரோல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    பெரிய வெங்காயம்- 2 (நறுக்கியது)

    உருளைக்கிழங்கு- 2 (வேகவைத்தது)

    மைதா மாவு 1/4 கப்

    இஞ்சி பூண்டு பேஸ்ட்- ஒரு ஸ்பூன்

    மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்

    மல்லித்தூள்- ஒரு ஸ்பூன்

    கரம் மசாலா- 1/2 ஸ்பூன்

    மஞ்சள் தூள்- சிறிதளவு

    பச்சை பட்டாணி- 1/2 கப்

    கொத்தமல்லி- சிறிதளவு

    எலுமிச்சை சாறு- ஒரு ஸ்பூன்

    பிரெட்- 10

    பிரெட் தூள்- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் வதங்கியதும் அதில் ஒரு ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம்மசாலா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து மாவு போல மசித்து எடுத்து கொள்ளுங்கள். மசாலா வெந்ததும் அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு சிறிதளவு கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    மசாலா உருளைக்கிழங்குடன் சேரும் வரை நன்றாக கிண்ட வேண்டும். உருளைக்கிழங்கும் மசாலாவும் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

     பின்னர் ஒரு கிண்ணத்தில் மைதா மாவை சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.

    அதன்பிறகு பிரெட் எடுத்து கொள்ளுங்கள். பிரெட்டின் நான்கு ஓரங்களையும் வெட்டி எடுத்துவிட்டு பின்னர் ஒவ்வொரு பிரெட்டையும் சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்துக் கொள்ளுங்கள்.

    அதில் நாம் செய்து வைத்துள்ள மசாலாவை பிரெட்டில் வைத்து உருட்டி கொள்ளுங்கள். அதன்பிறகு மைதா மாவு கலந்து வைத்துள்ள தண்ணீரை தொட்டு பிரெட்டின் ஓரங்களை ஒட்டிக்கொள்ள வேண்டும்.

    அடுத்து மசாலா வைத்து உருட்டி வைத்துள்ள பிரெட்டை மைதா மாவு கலந்து வைத்துள்ள தண்ணீரில் நனைத்து எடுத்து, பின்னர் பிரெட் தூளில் போட்டு புரட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள பிரெட் ரோலை போட்டு பொறிக்க வேண்டும். பிரெட் ரோல் பொன்னிறமாக வந்ததும் எண்ணெய்யில் இருந்து எடுத்து விட வேண்டும்.

    அவ்வளவு தான் நண்பர்களே..! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய பிரெட் ஸ்ப்ரிங் ரோல் ரெடி..! நீங்களும் இந்த பிரெட் ஸ்ப்ரிங் ரோல் ரெசிபியை செய்து சாப்பிட்டு பாருங்கள்.

    • காஷ்மீரி மட்டன் புலாவ் கூடுதல் ருசியானது.
    • பிரியாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

    ஆட்டு இறைச்சி புரதச்சத்து நிறைந்தது. இதனை உணவோடு சமைத்து சாப்பிடும்போது கூடுதல் சுவையை தரும். விழா காலங்களில் மட்டன் பிரியாணி சமைத்து சாப்பிட்டிருப்போம். காஷ்மீரி மட்டன் புலாவ் கூடுதல் ருசியானது. இது பிரியாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சமையல் பொருட்கள் எல்லாமே பிரியாணிக்கு போடுவதை போலத்தான் இருக்கும் இருந்தாலும் செய்முறை கொஞ்சம் மாறுபட்டது.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் சாறு தயாரிக்க:

    ஆட்டு இறைச்சி கிலோ

    பெரிய வெங்காயம் - 1

    பூண்டு 6 பல்

    தண்ணீர் - 14 லிட்டர்

    சோம்பு - 2 டீஸ்பூன்

    கருப்பு ஏலக்காய் - 3

    பச்சை ஏலக்காய் 6

    கிராம்பு - 5

    மிளகு - ஒருடீஸ்பூன்

    ஜாதிபத்திரி -1

    உப்பு - தேவைக்கு

    புலாவ் தயாரிக்க

    பாசுமதி அரிசி -1கிலோ

    பச்சை ஏலக்காய் 4

    சீரகம் - 1 டீஸ்பூன்

    லவங்கப்பட்டை - 2

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 8

    தயிர் -கால்கப்

    பெரிய வெங்காயம் - 5

    நெய் - 5 டீஸ்பூன்

    தேங்காய் துண்டுகள் (நீளவாக்கில்

    மெலிதாக நறுக்கியது) -8

    பாதாம் (ஊறவைத்து தோல் உரித்தது)-10

    உலர் திராட்சை 20

    எண்ணெய் - தேவைக்கு

    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    அரிசியை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதில் சுத்தம் செய்த ஆட்டு இறைச்சி, முழு வெங்காயம், பூண்டு, சோம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், கிராம்பு, மிளகுதூள், ஜாதிபத்திரி மற்றும் உப்பு சேர்த்து 2 அல்லது 3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். இந்த கலவை ஆறியதும் அதில் இருந்து இறைச்சியை தனியாக பிரித்து எடுத்து வைக்க வேண்டும்.

    வெங்காயங்களை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். இந்த வெங்காயங்களை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் மற்றொரு அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் ஏலக்காய், சீரகம் சேர்த்து வதக்கவும். பின்பு அதனுடன் இறைச்சியை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்க வேண்டும்.

    பின்னர் லவங்கப்பட்டை, இஞ்சி பூண்டு விழுது. தயிர், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து ௫ நிமிடங்களுக்கு வதக்க வேண்டும். அதன்பிறகு ஊறவைத்த அரிசியை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி. அதனுடன் இறைச்சி வேகவைத்த தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்பு அந்த கலவையில் பொரித்து வைத்துள்ள வெங்காயத்தில் பாதி அளவை சேர்த்துக் கிளற வேண்டும். 1௦ நிமிடங்கள் மூடிய நிலையில் வேக வைக்க வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் பாதாம், தேங்காய், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். இதை வெந்துக்கொண்டு இருக்கும் கலவையில் சேர்த்துக் கிளறி 5 நிமிடங்கள் குறைவான தீயில் வேகவைத்து இறக்கவும்.

    கடைசியாக மீதமுள்ள பொரித்த வெங்காயத்தை புலாவ் மேல் தூவ வேண்டும். அவ்வளவு தான் சுவையான காஷ்மீரி மட்டன் புலாவ் தயார்.

    • சிக்கன், மட்டன் சமைக்கும் போது சிறிதளவு தயிர் சேர்த்தால் சுவை கூடும்.
    • மோர்க் குழம்பில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்தால் வாசனையாக இருக்கும்

    * பாகற்காயை சிறு துண்டுகளாக வெட்டி, அரிசி கழுவிய தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்தால் அதன் கசப்புத் தன்மை நீங்கி விடும்.

    * சப்பாத்தி மிருதுவாக இருக்க சப்பாத்தி மாவை தேய்த்தவுடன் தோசைக்கல்லில் போட்டு எடுத்து விட வேண்டும்.

    * பொரியலுடன் வேர்க்கடலையை வறுத்துப் பொடியாக்கி இறுதியில் சேர்த்தால் அதன் சுவை கூடும்.

    * ஊறுகாயில் மஞ்சள் தூள் சேர்த்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். ஊறுகாய் மணமாகவும் இருக்கும்.

    * அல்வா செய்யும் போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் அதனுடன் சிறிது சோள மாவை சேர்த்தால் சரியான பதம் கிடைத்துவிடும். அல்வாவின் சுவையும் அதிகரித்து விடும்.

    * மோர்க் குழம்பு செய்யும்போது இறுதியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்தால் குழம்பு வாசனையாக இருக்கும்.

    * அரிசி வைக்கும் பாத்திரத்தில் சிறிதளவு காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் வண்டுகள் புகாது.

    * சர்க்கரைப் பாகு செய்யும் போது அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்தால் குலாப் ஜாமூன் விரியாமல் இருக்கும்.

    * சிக்கன், மட்டன் சமைக்கும் போது அதில் சிறிதளவு தயிர் சேர்த்தால் சுவை கூடும்.

    • குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • வித்தியாசமான சுவையில் தயார் செய்து கொடுக்கலாம்.

    வீட்டிலிருக்கும் ரவை,கோதுமை மாவை வைத்து சுவையான இரவு நேர உணவு தயார் செய்து விடலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என்று சாப்பிடுவதற்கு பதிலாக கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இந்த உணவை தயார் செய்து கொடுக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

    இதில் நாம் நமக்குத் தேவையான காய்கறிகளை சேர்த்துக்கலாம். பெரியவர்களும் சாப்பிடுவார்கள். இதை பத்து நிமிடங்களில் தயார் செய்து விடலாம்

    தேவையான பொருட்கள்

    ரவை- ஒருகப்

    கோதுமை மாவு- அரை கப்

    சில்லி பிளேக்ஸ்- ஒரு ஸ்பூன்

    சீரகம் - ஒரு ஸ்பூன்

    தயிர்- 3 ஸ்பூன்

    வெள்ளை எள்- ஒரு ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    கொத்தமல்லி தழை- 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

    செய்முறை:

    முதலில் ரவையை மிக்சியில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் கோதுமை மாவு சில்லி பிளேக்ஸ், சீரகம், தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் கொத்தமல்லி தழை போட்டு ரவா தோசை பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த கலவையை 10 நிமிடத்திற்கு அப்படியே மூடி வைக்க வேண்டும்.

    பின்னர் இந்த மாவினை ஒரு பிளேட்டில் எண்ணெய் தடவி அதில் தோசை மாதிரி மெல்லியதாக ஊற்ற வேண்டும். இந்த பிளேட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து இட்லி பாத்திரத்தில் இருந்து பிளேட்டை வெளியே எடுத்து பிளேட்டில் உள்ள தோசையை நீளவாக்கில் வெட்டி ரோல் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஒவ்வொறு முறையும் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது செய்து வைத்துள்ள ரோல்களை எல்லாம் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் வெள்ளை எள் போட்டு தாளித்து ரோல்களை போட்டு எடுத்து பரிமாறவும். இதற்கு தொட்டுக்கொள்ள செஸ்வான் சாஸ் மற்றும் டொமேட்டோ சாஸ் சூப்பராக இருக்கும்.

    • முட்டை திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.
    • விட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.

    முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது. மேலும் முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. இந்த முட்டையில் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய அட்டகாசமான ஒரு ஈவினிங் ஸ்னாக்ஸ் முட்டை லாலிபாப் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை- 4

    வெங்காயம்-2 (நறுக்கியது)

    மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்

    தனியா தூள்- ஒரு ஸ்பூன்

    கரம்மசாலா தூள்- ஒரு ஸ்பூன்

    கொத்தமல்லி தழை- ஒரு கைப்பிடி

    பிரெட் தூள்- தேவையான அளவு

    சீஸ்- ஒரு கப்

    மைதா- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடுத்து கலக்கிக் கொள்ள வேண்டும். அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய்தூள், தனியா தூள், கரம்மசாலா தூள், உப்பு, கொத்தமல்லி தழை மற்றும் இதனுடன் துருவி சீஸ் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

    இந்த கலவையை ஒரு இட்லி பாத்திரத்தில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வேகவைத்த இந்த முட்டை கலவையை ஒரு பிளேட்டிற்கு மாற்றி அதனை சிறிய சிறிய துண்டுகளாக சதுர வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் மைதாவை போட்டு அதனை தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ள வேண்டும். அதன் அருகே ஒரு பிளேட்டில் பிரெட் தூள்களையும் கொட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த முட்டை துண்டுகளை மைதாவில் போட்டு அதன்பிறகு பிரெட் தூளில் போட்டு புரட்டி அதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான கிரிஸ்பி சீஸ் எக் பைட்ஸ் தயார்.

    கொட்டுற மழைக்கு சூடாக கிரிஸ்பியான, சுவையான கிரிஸ்பி சீஸ் எக் பைட்ஸ் 20 நிமிடத்தில் செய்துவிடலாம்.

    ×