search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chocolate Recipe"

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
    • நீரிழிவு நோயாளிகள் கூட சாப்பிடலாம்.

    ஆரோக்கியமான இனிப்பு ஸ்நாக் ரெசிபியான ஓட்ஸ் சாக்லேட் பைட்ஸ் எப்படி செய்வது என தெரிந்துக்கொள்ளுங்கள்…

    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ்- 2 கப்

    பேரிச்சை- 50 கிராம்

    ஆலிவ் விதைகள்- ஒரு ஸ்பூன்

    தேங்காய் துருவல்- 2 ஸ்பூன்

    பாதாம்- 20

    சாக்லேட்- 50 கிராம் (உருக்கிக்கொள்ளவும்)

    நட்ஸ்-அலங்கரிக்க

    செய்முறை:

    முதலில் சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் உருக்கொக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஓட்ஸ் மற்றும் பாதாமை ஒரு வாணலியில் இளம் வறுப்பாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு மிக்சி ஜாரில் வறுத்த ஓட்ஸ், பாதாம், ஆலிவ் விதைகள், தேங்காய் துருவல், பேரிச்சை போன்றவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுதினை ஒரு சாக்லேட் மோல்டில் வைத்து அடுக்க வேண்டும். பின்னர் அதன் ஒவ்வொன்றின் மீதும் மேல்புறமாக உருகிய சாக்லேட் கலவையினை ஊற்றி அதன் மேல் நட்ஸ் வகைகளை தூவ வேண்டும். பின்னர் ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான அதேநேரம் ஹெல்தியான ஓட்ஸ் சாக்லேட் பைட்ஸ் தயார்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இதில் சர்க்கரை இல்லை என்பதால் நீரிழிவு நோயாளிகள் கூட சாப்பிடலாம். ஸ்கூலுக்கு ஸ்நாக்சாகவும் கொடுத்துவிடலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

    • சாக்லேட் பல்வேறு ஃப்ளேவர்களில், சுவைகளில் கிடைக்கிறது.
    • சாக்லேட் வகைகளில் முக்கியமானதாக டார்க் சாக்லேட்.

    உலகம் முழுவதும் மக்களால் விரும்பி உண்ணப்படும் சாக்லேட் பல்வேறு ஃப்ளேவர்களில், சுவைகளில் கிடைக்கிறது. பொதுவாக இனிப்புகள் அனைத்தையும் சாக்லேட் என்று சொல்லும் பழக்கம் சிலருக்கு உண்டு.

    சாக்லேட் வகைகளில் முக்கியமானதாக டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட், வொயிட் சாக்லேட் ஆகிய மூன்று வகைகள் உள்ளன. இவற்றுடன் வேறு சில பொருட்களை சேர்த்து பல்வேறு வகை சாக்லேட்டுகள் உருவாக்கப்படுகின்றன.

    தேவையான பொருட்கள்:

    மில்க் சாக்லேட் பார் - 75 கிராம் (துண்டுகளாக்கவும்)

    கண்டன்ஸ்டு மில்க் - 50 மில்லி

    இனிப்பு கோகோ பவுடர் - 2 டீஸ்பூன்

    விரும்பிய நட்ஸ் கலவை (வால்நட், பாதாம், முந்திரி, உலர்திராட்சை) - ஒரு டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)

    செய்முறை:

    சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் உருக்கிக்கொள்ள வேண்டும். (ஒரு கிண்ணத்தில் கால் பங்கு தண்ணீரில் நிரப்பி அதை கொதிக்கவிட வேண்டும். இன்னொரு கிண்ணத்தில் நறுக்கிய சாக்லேட் சேர்த்து இந்த கிண்ணத்தை தண்ணீர் இருக்கும் பாத்திரத்தினுள் வைத்து சாக்லேட்டை உருக்கவும்.) அதனுடன் நட்ஸ், கண்டன்ஸ்டு மில்க் சேர்க்க வேண்டும்.

    30 நொடிகளுக்குப் பிறகு இறக்கி நன்கு கலந்துகொள்ள வேண்டும். சாக்லேட் நன்றாகக் கரைந்த பிறகு ஆறவிடவும். இதை ஒரு கரண்டியால் எடுத்துச் சிறிய உருண்டைகளாக்கி, மேலே கோகோ பவுடர் தூவி உருட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் கப் கேக் லைனருக்குள் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தேவையான போது எடுத்து சுவைக்கலாம். இந்த நட்ஸ் சாக்லேட்டை அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

    ×