என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    அவல் தோசை
    X
    அவல் தோசை

    உடலுக்கு வலுசேர்க்கும் அவல் தோசை

    தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் அவலுக்கு முக்கிய பங்கு உண்டு. இன்று நாம் உடலுக்கு வலுசேர்க்கும் சுவையான அவல் தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையானவை பொருட்கள்

    அவல் - 200 கிராம்,
    அரிசி - 100 கிராம்,
    உப்பு - தேவையான அளவு,
    கடுகு, இஞ்சி துருவல் - சிறிது,
    மிளகாய் - 1.

    செய்முறை

    ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும்.

    மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும்.

    தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டெடுக்கவும்.

    சூடான அவல் தோசையுடன் காரமான கெட்டிச்சட்னியை வைத்து சாப்பிட சுவை நன்றாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    Next Story
    ×