என் மலர்
உடற்பயிற்சி
ட்ரெட்மில்லில் நடப்பதால் நாம் எவ்வளவு தூரம் நடந்தோம்?, நம் உடல் செயல்பாடு எப்படி மாறுகிறது?, எவ்வளவு கலோரிகளை எரித்திருக்கிறோம்? என்பது போன்ற விஷயங்களை இதில் தெரிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமாய் வாழவேண்டும் என்றால் உடலுழைப்பு வேண்டும் என்பது அவசியமானது. ஆனால் நாம் செய்யும் தினசரி வேலைகளில் போதுமான உடலுழைப்பு இல்லாததினால் உடற்பயிற்சிகள் இன்றியமையாததாக உள்ளது. துரித நடை பயிற்சி மற்றும் மிதமான ஓட்டம் என்பது இதயத்தின் செயல்பாட்டை அதிகப்படுத்தி உடலின் எல்லா பகுதிகளுக்கும் ரத்த ஓட்டத்தை சீராகப் பரவச்செய்கிறது. இதனால் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் போதுமான பிராணவாயு மற்றும் குளுகோஸ் கிடைக்கிறது. இதனால் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியோடு இயங்க ஆரம்பிக்கிறது. இதன் பயனாக உடலில் பல நோய்கள் தவிர்க்கப் படுவதுடன் நாம் நாள் முழுவதும் உற்சாகமாகவும், தெம்புடனும் இருக்க முடிகிறது.
ஆனால் எல்லோருக்குமே வெளியில் சென்று நடப்பதும், ஓடுவதும் கடினம். குறிப்பாக பெண்களுக்கு அதிகாலையிலும், மாலை பொழுதுகளிலும் வெளியில் நடக்கச் செல்வது சற்றே கடினம்தான். இம்மாதிரி சூழலில் நம் உதவிக்கு வருவதுதான் ட்ரெட்மில்.
ட்ரெட்மில்லில் உள்ள வசதிகள்
ட்ரெட்மில் நம் கால்களால் இயக்கக்கூடியது (மானுவல்) என்றும், மின்சாரத்தால் இயங்கக்கூடியது (எலக்ட்ரானிக்) என்றும் இரண்டுவகையில் கிடைக்கிறது. இதில் பொதுவாக மின்சாரத்தால் இயங்கக்கூடிய ட்ரெட்மில்லே சிறந்தது.
ட்ரெட்மில்லின் ஓடும் பகுதி குறுகலாக இல்லாமல் நல்ல அகலமாக இருப்பது அவசியம். ட்ரெட்மில்லின் சாய்வான அமைப்பு நாமாக தேர்வு செய்துக் கொள்ளக்கூடியதாகவும், தானாக அதுவே நம் வேகத்தை கணித்து அதற்கேற்றாற் போல் சாய்வை அமைத்துக் கொள்ளக்கூடியதாகவும் இருவகையில் கிடைக்கிறது. இது அவரவரின் தேவைக்கேற்பவும், விலையை பொருத்தும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
நாம் நடக்கும் போது நம் உடலின் அசைவுகளினால் ஏற்படும் மாற்றங்களை கணித்துச் சொல்க்கூடிய கருவிகளும் இதில் பொருத்தப்பட்டிருக்கும். இதய துடிப்பின் அளவு, உடற்பயிற்சியினால் நாம் எரித்த கலோரிகளின் அளவு, நம் உடல் எடை மற்றும் உயரத்திற்கான விகிதம் (பி.எம்.ஐ.) மற்றும் நாடியின் அளவை இந்த கருவி துல்லியமாக காட்டும். இந்த அளவுகளுக்கேற்ப நாம் நம் நடைபயிற்சியின் நேரத்தையும், வேகத்தையும் கூட்டுவதோ, குறைப்பதோ செய்துக் கொள்ளலாம்.
ட்ரெட்மில்லின் உபயோகங்கள்
ட்ரெட்மில் உபயோகிக்க எளிதானது. நாம் நம் உடலின் செயற்பாட்டிற்கு ஏற்ப நம் வீட்டில் இருந்தபடியே நடைபயிற்சி செய்யலாம். வசதியான ஆடையை உடுத்திக்கொண்டும், டி.வி. பார்த்துக்கொண்டும், செய்தி கேட்டுக்கொண்டும் நடக்கலாம். காலையில் நடக்கும் போது வரக்கூடிய இடர்பாடுகள் எதுவும் இதில் இல்லை.
ட்ரெட்மில்லில் நடப்பதால் நாம் எவ்வளவு தூரம் நடந்தோம்?, நம் உடல் செயல்பாடு எப்படி மாறுகிறது?, எவ்வளவு கலோரிகளை எரித்திருக்கிறோம்? என்பது போன்ற விஷயங்களை இதில் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய உடற்பயிற்சியின் தன்மை, தேவை போன்றவற்றிற்கு ஏற்ப நாம் ட்ரெட்மில்லில் தேர்தெடுத்து அதன் வழிகாட்டுதலின் பேரில் நடைபயிற்சியை செய்யலாம்.
வீட்டில் நாம் இருக்கவேண்டிய அவசியம் இருக்கும் போது, குழந்தைகளையோ, பணியாட்களையோ கண்காணித்துக் கொண்டே கூட நாம் ட்ரெட்மில்லில் நடைபயிற்சி செய்யலாம்.

அனைத்து வயதினரும் எளிமையாக மேற்கொள்ளும் பயிற்சியாகவும் இந்த 8 வடிவ நடைப்பயிற்சி அமைந்திருக்கிறது. இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்வது குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பார்ப்போம்.
உடற்பயிற்சி செய்வதற்கு வெளியே செல்ல முடியாத சூழலில், நிறைய பேர் வீட்டுக்குள்ளேயே விதவிதமான உடற்பயிற்சிகளை செய்வதற்கு பழகி விட்டார்கள். மொட்டை மாடியிலோ, வீட்டின் முற்றத்திலோ 8 வடிவத்தில் கோடுகள் வரைந்து அந்த வட்டத்தை சுற்றி நடந்து நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களும் அதிகரித்து இருக்கிறார்கள். அனைத்து வயதினரும் எளிமையாக மேற்கொள்ளும் பயிற்சியாகவும் இந்த 8 வடிவ நடைப்பயிற்சி அமைந்திருக்கிறது. இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்வது குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பார்ப்போம்.
நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு 6 அடி அகலம், 10 அடி நீளம் கொண்ட ‘8’ என்ற எண்ணை வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி வரைந்து கொள்ள வேண்டும். முதலில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நடக்க வேண்டும். பின்பு தெற்கில் இருந்து வடக்காக நடக்க வேண்டும். ஒவ்வொரு திசையிலும் தலா 15 நிமிடம் வீதம் மொத்தம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது கவனமெல்லாம் 8 என்ற வடிவத்தில்தான் இருக்க வேண்டும். அதில் இருந்துவிலகி நடக்கக்கூடாது. ஒருவர் பின் ஒருவராக சீரான இடைவெளிவிட்டு நடக்க வேண்டும். அப்போது யாருடனும் பேசக்கூடாது. மீறி பேசுவது கவனச்சிதறலுக்கு வழிவகுக்கும்.
8 வடிவ நடைப்பயிற்சி செய்வது பார்வை திறனை மேம்படுத்தும். வரையப்பட்டிருக்கும் கோடுகளை கூர்ந்து கவனித்தபடி செல்வதால், கருவிழிகள் அங்கும் இங்கும் சுழன்று, கண்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். பார்வை சார்ந்த பிரச்சினைகள் நீங்கும்.
இந்த பயிற்சியின்போது வெறும் காலில் நடப்பதால் பாதத்தின் மையப்பகுதியில் அழுத்தம் சீராக இருக்கும். உள்ளுறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு நோய் தாக்கத்தில் இருந்து விடுபட வைக்கும்.
நடைப்பயிற்சியை மேற்கொள்ளும்போது சுவாசமும் சீராக இருக்கும். மூக்கடைப்பு பிரச்சினைக்கு ஆளாகு பவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறலாம்.
சளி, இருமல் பாதிப்புக்கு ஆளாகுபவர்களுக்கும் இந்த நடைப்பயிற்சி பலன் கொடுக்கும். நடக்கும்போது சுவாசிக்கும் திறன் மேம்படும். ஆக்சிஜன் அதிகமாக உள்ளிழுக்கப்படுவதால் நுரையீரலில் தேங்கி இருக்கும் சளி வெளியேற ஆரம்பிக்கும். உடலின் ஆற்றலும் மேம்படும்.
தலைவலி, உடல் வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, பாத வெடிப்பு, செரிமான பிரச்சினை, தைராய்டு, உடல் பருமன், மலச்சிக்கல், தூக்கமின்மை, ஆஸ்துமா, முதுகுவலி, கழுத்துவலி, சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு 8 வடிவ நடைப்பயிற்சி நிவாரணம் தேடித்தரும்.
நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்த பயிற்சி நல்லது. காலையிலும், மாலையிலும் மேற்கொள்ளலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வழிவகுக்கும். இரத்த அழுத்தம் குறையும்.
8 வடிவ நடைப்பயிற்சியை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மேற்கொள்வது நல்லது.
அறுவை சிகிச்சை செய்து இருந்தால் 6 மாதம் வரை இந்த பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது. அதன் பிறகு டாக்டரிடம் ஆலோசனை பெற்று மேற்கொள்ளலாம். அதுபோல் இதயம் சார்ந்த பிரச்சினைகள், சர்க்கரை நோய், நரம்பு கோளாறுகள், பக்கவாதம், சிறுநீரகம் சார்ந்த பாதிப்புக்குள்ளானவர்கள் டாக்டரிடம் அனுமதி பெற்றே மேற்கொள்ள வேண்டும்.
தினமும் இந்த பயிற்சி செய்துவந்தால் பாதங்களும், கால்களும் வலுப்பெறும். சுவாசம் சார்ந்த கோளாறுகள் அனைத்தும் நீங்கும். காது கேட்கும் திறன் அதிகரிக்கும். முதுமையை தள்ளிப்போடவும் செய்துவிடும். இளமையுடனும், சுறுசுறுப்புடனும் செயல்படலாம்.

உடல் பருமன் முதல் மனஅழுத்தம் வரை மக்களை பாதிக்கும் பல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் ஒரு பயிற்சியாக இந்த பயிற்சி உள்ளது. மேலும் இந்த பயிற்சி செய்வதினால் என்னென்னெ நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம்.
சிறு பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு ஸ்கிப்பிங் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். ஸ்கிப்பிங் ஒரு விளையாட்டு பயிற்சியாக மட்டுமல்லாமல் இது விளையாடும் போது உடலில் பலவிதமான நன்மைகள் நடைபெறுகின்றன தெரியுமா? உடல் பருமன் முதல் மனஅழுத்தம் வரை மக்களை பாதிக்கும் பல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் ஒரு பயிற்சியாக ஸ்கிப்பிங் அல்லது கயிறு தாண்டும் பயிற்சி உள்ளது. மேலும் இந்த பயிற்சி செய்வதினால் என்னென்னெ நன்மைகள் கிடைக்கின்றன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஸ்கிப்பிங் செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினை படிப்படியாக குறையும். மனக்கவலை, மன அழுத்தம், போன்றவை குறையும்.
ஸ்கிப்பிங் பயிற்சி இதயத்துக்கும் நுரையீரலுக்கும் வலுவை கொடுக்கும். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தால் உடல் மற்றும் தண்டுவடம் நேராகி உயரமான தோற்றம் கிடைக்கும். ஸ்கிப்பிங் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பு பலம் பெறும். மேலும் கை மற்றும் கால்களின் செயல் வேகம் அதிகரிக்கும். இதனால் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படலாம்.
உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறவர்கள் ஸ்கிப்பிங் பயிற்சி தினமும் செய்யலாம். இந்த பயிற்சி உங்களுக்கு எந்த தீங்குகளையும் ஏற்படுத்தாது. இந்த பயிற்சியை நீங்கள் தினமும் செய்தால் உடல் எடை எளிதில் குறைந்து, உடலுக்கு சீரான வளர்ச்சியும், ஆரோக்கியமும் கிடைக்கும். மேலும் தினமும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்தால் 200 கலோரிகள் வரை குறைக்கலாம்.
தினமும் தொடர்ச்சியாக 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்து வந்தால் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, உடலில் இருக்கும் நச்சுப்பொருட்கள் எளிமையாக வெளியேற்றிவிடும்.
ஸ்கிப்பிங் செய்யும் போது ஸ்கிப்பிங் கயிற்றின் நீளம் மிக முக்கியம். கயிற்றை நம்முடைய உயரத்துக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான நீளமுள்ள கயிற்றை தேர்தெடுக்க கயிற்றின் நடுப்பகுதியில் வைத்து கால்களை உயர்த்திப்பிடிக்க வேண்டும். அது உங்களின் வயிற்றுப் பகுதிக்கு மேல் இருந்தால் அது சரியான அளவு.
ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது கயிற்றின் முனையில் அதிக கயிறு கையைவிட்டு வெளியே வராத அளவு நடுவில் பிடிக்க வேண்டும். ஸ்கிப்பிங் கயிற்றை கைகளில் பிடிக்கும்போது கயிற்றின் நுனியிலும் கையின் நுனியிலும் பிடிக்கக் கூடாது. அதேபோல அதிக கயிறு கைகளைவிட்டு வெளியில் வரும்படியும் பிடிக்கக் கூடாது. இந்த பயிற்சியை செய்ய நல்ல தரமான கயிறைப் பயன்படுத்தவும். நீங்கள் முதல் முறை செய்பவராக இருந்தால் மிக கவனமாக மெதுவாக செய்யுங்கள்.
யார் ஸ்கிப்பிங் செய்யக் கூடாது?
இதய நோயாளிகள், முழங்கால் வலி, கணுக்கால் வலி, இடுப்பு வலி, எலும்பு முறிவு உடையவர்கள் மற்றும் சுளுக்கு ஏற்பட்டவர்கள் அனைவரும் ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கலாம். மேலும் அதிக உயரம் கொண்டவர்கள் ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.

சூரிய நமஸ்காரம் செய்வதால் நம் உடலுக்கும் மனதிற்கும் அமைதி கிடைக்கிறது. ஆனால் இந்த ஆசனத்தை செய்யும் நிறைய பேர் சில தவறுகளை செய்கிறார்கள். அது எந்த மாதிரியான தவறுகள் அதை எப்படி சரி செய்யலாம் என பார்ப்போம்.
சூரிய நமஸ்காரம் செய்யும் போது நமது சுவாசத்தில் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் உடல் அசைவுகள் மற்றும் உங்கள் சுவாசம் ஒத்திசைவாக இருக்க வேண்டும். படிப்படியான பயிற்சி உங்களுக்கு நல்ல தீர்வை கொடுக்கும். எனவே படிப்படியாக சுவாச பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
சூரிய நமாஸ்காரத்தின் போது ஒரு சுற்றில் ஹஸ்தா உத்தனாசனா இரண்டு முறை தோன்றும். இந்த ஆசனத்தின் முக்கிய நோக்கம் நம்முடைய முதுகெலும்புகளை சூடேற்றி பலப்படுத்துவதாகும். இது உங்கள் முதுகெலும்பின் முழு நீளத்திற்கும் ஒரு பெரிய நீட்டிப்பை அளிக்கிறது. மேலும் ஆழமாகவும் முழுமையாகவும் சுவாசிக்க உதவுகிறது.
எனவே ஒரு வேளை நீங்கள் ஹஸ்தா உத்தனாசனாவைத் தவிர்ப்பதன் மூலம், நீங்கள் சுவாசம் மற்றும் இயக்க சமநிலையை பெற முடியாமல் போகலாம் . உங்கள் முதுகெலும்புக்கு தேவையான வலிமையும் நீட்டலும் கிடைக்காது என்கிறார்கள் யோகா வல்லுநர்கள்.
நான்கு-மூட்டு அமர்வு நிலை அல்லது தாழ்ந்த பிளாங் என்றும் அழைக்கப்படும் இந்த போஸுக்கு உங்கள் உடல் உள்ளங்கைகள் அல்லது கால்விரல்களின் ஆதரவுடன் தரையில் நேராகவும் இணையாகவும் இருக்க வேண்டும். நீங்கள் தவறு செய்வது உங்கள் முதுகெலும்புக்கு அழுத்தம் கொடுக்க நேரிடலாம். எனவே நீங்கள் இதை தவறாக செய்யும்போது, கீழ் உடல் தரையை நோக்கி மூழ்கி உங்களுக்கு முதுகுவலியைத் தருகிறது. எனவே அதைத் தவிர்க்க, உங்கள் வயிற்று மற்றும் மேல் உடல் தசைகளைப் கொண்டு ஈடுபட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கோப்ரா நிலைக்கும் மேல்நோக்கி எதிர்கொள்ளும் நாய் போன்ற நிலைக்கும் இடையிலான குழப்பம். கோப்ரா நிலை மற்றும் மேல்நோக்கி எதிர்கொள்ளும் நாய் நிலை (உர்த்வா முக ஸ்வானாசனா) ஆகியவை மிகவும் ஒத்தவை. எனவே இந்த இரண்டு யோகாசனங்களையும் குழப்பிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
மேலும் சூர்ய நமஸ்காரம் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு கோப்ரா போஸ் செய்தால் உங்களுக்கு நல்ல பிடிப்பு கிடைக்கும் என்கிறார்கள் யோகா வல்லுநர்கள்.
சூரிய நமஸ்காரத்தின் ஒரு சுற்று அது முடிவடைவதற்கு முன்பே கீழ்நோக்கி எதிர்கொள்ளும் நாய் நிலையில் இருந்து குதிரையேற்றம் நிலைக்கு மாறுகிறது. எனவே முடிவில் நீங்கள் முழங்காலை தெரியாமல் அதிகமாக நீட்டுவது முழங்கால்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும். மேலும் உங்க இடுப்புப் பகுதி ஒரு நெகிழ்வான தன்மையை தராது. எனவே இந்த மாதிரி செய்வது தவறு என்கிறார்கள் யோகா வல்லுநர்கள்.
உங்கள் முழங்கால்களை சிறிது நேரம் வளைத்து பின் உங்கள் பாதத்தை பின்னோக்கி நகர்த்தும். பொதுவாக சூரிய நமஸ்காரத்திற்கு என்று தனிப்பட்ட கவனம் யோகா பயிற்சியின் போது கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் நீங்கள் அதை சரியாக செய்ய வேண்டும். ஒவ்வொரு சுவாசத்திலும் நிலையிலும் கவனம் செலுத்துவதை நோக்கி உங்கள் உடலும் மனமும் சீரமைக்கப்பட வேண்டும் என்கிறார் யோகா வல்லுநர்கள்.

எல்லாரும் வேகமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இந்த 6 உடற்பயிற்சிகள் கை கொடுக்கும் என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள்.
எல்லாரும் வேகமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இந்த 6 உடற்பயிற்சிகள் கை கொடுக்கும் என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள். இந்த 6 உடற்பயிற்சி நிலைகளும் உங்க உடல் எடையை குறைக்க உதவுவதோடு உங்க தசைகளை வலுவாக்கவும் மேம்படுத்தவும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தாலே உடற்பயிற்சி தான் நம் கண்களுக்கு தென்படும். ஏனெனில் உடற்பயிற்சியின் மூலம் நம் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை எரிக்க முடியும்.
வாக்கிங்
சிலருக்கு வாக்கிங் சென்றாலே உடல் எடை குறைய ஆரம்பித்து விடும். ஆனால் சிலருக்கோ வாக்கிங் ஜாக்கிங் என்று என்ன செய்தாலும் உடல் எடை குறையாது. எனவே உங்க உடல் எடையை குறைக்க உங்களுக்கு என்று சிறந்த உடற்பயிற்சியை தேர்ந்தெடுப்பது அவசியம் ஆகிறது. அதனால் தான் நாங்கள் உங்களுக்கான சிறந்த உடற்பயிற்சி முறைகளை இங்கே பட்டியல் இடுகிறோம்.
பர்பீஸ் உடற்பயிற்சி
இது ஒரு மேஜிக் என்றே கூறலாம். எந்த நேரத்திலும் உங்க எடை இழப்பு முடிவுகளை சிறப்பாக காண்பிக்க இந்த பர்பீஸ் உடற்பயிற்சி உதவுகிறது. ஒரு வேளை நீங்கள் ஒரு பெரிய எடை இழப்பை பெற விரும்பினால் ஒரு நாளில் குறைந்தது 50-100 பர்பீக்கள் வரை செய்ய முற்படுங்கள்.
தவளை ஜம்ப்
நாம் குழந்தை பருவத்தில் விளையாட்டாக செய்த நிறைய விஷயங்கள் இன்று நம் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. கண்டிப்பாக இது உங்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கலாம். ஆனால் தவளை போன்று குதித்து குதித்து உடற்பயிற்சி செய்வது உங்க உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. முன்னோக்கி தாவல்கள் மற்றும் குந்துகளின் வீச்சு போன்றவை இந்த பயிற்சியில் உள்ளது. இந்த தவளை தாவல்களை 20 தடவை என 4 முறை செய்து வரலாம். இதன் மூலம் உடல் எடையை குறைக்க உங்களுக்கு ஒரு மாதம் காலம் ஆகலாம்.
குதிக்கும் குந்துகை பயிற்சி
உங்க உடலின் மையத்திலிருந்து கால் வரை உடலின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கொழுப்புப் பைகளைத் துடைக்க குதிக்கும் குந்துகைகள் உடற்பயிற்சி உதவுகிறது. இது கார்டியோ மற்றும் பாடிவெயிட் பயிற்சியின் கலவை. இது உங்க உடலுக்கு இரட்டை நன்மைகளைக் தருகிறது. இது உங்க இதய செயல்பாட்டை சீராக்க இந்த குந்துகை உடற்பயிற்சி உதவுகிறது. 25 ஜம்பிங் குந்துகையாக 4 தடவை செய்யுங்கள்.
ஸ்பிரிண்ட்
ஜாகிங் மற்றும் பல மணி நேரத்திற்கு ஓடுவது கூட கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஆனால் 200 மீட்டர் ஜாகிங் கை விட 10 தடவை ஸ்பிரிண்ட் செய்வது கூடுதல் நன்மைகளை அளிக்கிறது. இது எடை இழப்பிற்கான சிறந்த ஒன்றாகும். த்ரெட்மில்லில் ஓடுவது உங்க உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது. 10 தடவை செய்யுங்கள். ஸ்பிரிண்ட்கள் உங்க உடல் கொழுப்பை குறைக்கிறது.
கெட்டில்பெல் ஸ்விங்
உடல் எடையை குறைக்க பலரும் நம்புவது இந்த கெட்டில்பெல் ஸ்விங் தான். இது தசைகளில் ஏற்படும் காயங்கள் மற்றும் தசை கிழிவதை குறைக்கிறது. கெட்டடில் பெல் இயல்பான எடை பராமரிக்க உதவுகிறது. 4-6 கிலோ ஆனது கெட்டில்பெல் செய்வதற்கு போதுமானது.
ஸ்கிப்பிங் அல்லது கயிறு தாண்டுதல்
நம் உடல் எடையை கட்டுக்குள் வைக்க ஸ்கிப்பிங் என்பதுசிறந்த முறையாகும். குறைந்தது 1000 முதல் 1500 ஸ்கிப்களை செய்ய வேண்டும். எனவே நீங்கள் எடையை இழக்க 200 ஸ்கிப்பிங் வரை என ஆரம்பியுங்கள். 7 செட்களை செய்யலாம்
எனவே இனி உங்களுக்கு எடை இழப்பு என்று வந்தாலே இந்த உடற்பயிற்சிகளை பேணுங்கள். இதன் மூலம் உங்க உடல் எடையை குறைக்க வாய்ப்பு உள்ளது.

நீங்கள் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் செயல்திறன் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது; மேலும் இவ்வாறு செய்வது உங்களின் முன்னேற்றத்தையும் குறைக்கும்.
அதிகப்படியான நோய்க்குறியைத் (ஓவர் ட்ரெய்னிங் சிண்ட்ரோம்) தடுக்க ஓய்வு நாட்கள் முக்கியம். ஓய்வு நாட்கள் அதிகப்படியான பயிற்சி நோய்க்குறியை தடுக்கலாம்; அல்லது தகர்க்கவும் கூடும். ஓர் சிலர் தங்களின் உடலை மீட்கும் திறனைத் தாண்டி பயிற்சி செய்யும் போது இது நிகழ்கிறது. அதிகப்படியான பயிற்சி, செயல்திறன் குறைவதற்கு கூட காரணமாக இருக்கலாம். மற்றும் அதன் முன்னேற்றத்தையும் குறைக்கலாம்.
உங்கள் உடலுக்கு போதுமான ஓய்வு நேரம் கொடுக்கவில்லை என்றால், அத்தகைய பயிற்சி முறையே உங்கள் செயல்திறனைக் குறைக்கக்கூடும். ஓய்வு இல்லாமல் உடற்பயிற்சி செய்வது அதிகப்படியான எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்:
குறுகிய காலத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பல பெண்கள் உடற்பயிற்சியை மிகைப்படுத்தி செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் உணர மறுப்பது என்னவென்றால், உடல் குறைப்பு என்பது படிப்படியான செயல். படிப்படியாகவும் சீராகவும் உடல் எடையை குறைப்பவர், இறுதிவரை உடல் எடையை பராமரிப்பதில் மிகவும் வெற்றிகரமாக இருப்பார். அதாவது வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு பவுண்டுகள் வரை குறைத்தால் நன்று. மறுபுறம், போதுமான மீட்பு நேரம் இல்லாமல் அதிக தீவிரத்தில் அதிகமாக உடற்பயிற்சி செய்வது ஆச்சரியமான வழிகளில், உங்களுக்கே தெரியாமல் உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
அதிகப்படியான பயிற்சியின் விளைவாக, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உணர்ச்சி நிலை காரணமாக ஏற்படும் குறைந்த வளர்சிதை மாற்றம், உண்மையில் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதிகப்படியான உடற்பயிற்சி மன அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும் இதன் விளைவாக ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி சுரப்பி மற்றும் அட்ரீனல் சுரப்பிகள் இடையே கடுமையான தவறான தகவல்தொடர்பு ஏற்படக்கூடும். இது சோர்வு, தூக்கமின்மை, குடல் பிரச்சினைகள் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற எதிர்மறையான உடல் விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
உடற்பயிற்சி செய்வது மூலம் ஏற்படக்கூடிய சில நன்மைகள் என்னவென்றால், உடற்பயிற்சி செய்வது மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது; உங்கள் இதயத்தை பலப்படுத்துகிறது; உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது; உடற்பயிற்சி செய்வதால் நீங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மேலும், வழக்கமான உடற்பயிற்சி, இரத்த அழுத்தத்தை குறைக்க வல்லது; மற்றும் கொழுப்பின் அளவையும் குறைக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஒழுங்கான முறையில் உடற்பயிற்சி செய்து வருவது நல்லது.
நீங்கள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் உடற்பயிற்சி செய்து வந்தால் கூட அது போதுமானது. எனவே, அவரவர் உடல் நலத்திற்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்து நன்மை பெறுங்கள்!

தினசரி உடற்பயிற்சி செய்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், அதற்காக நீங்கள் அதிகபடியாக உடற்பயிற்சி செய்து வர தேவையில்லை
உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அல்லது பராமரிக்கும் ஓர் உடல் செயல்பாடாகும். மேலும் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. நீங்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம், உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட சில நோய்களை உருவாக்கக்கூடிய அபாயம் குறைக்கிறது. மேலும் இது, உங்களின் உடலை ஆரோக்கியமான எடையில் வைத்திருக்க உதவும்.
வழக்கமாக உடற்பயிற்சி செய்து வருவது எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். ஆனால், விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக சிலர் அளவுக்கு அதிகமா உடற்பயிற்சி செய்வது உண்டு. நீங்கள் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் செயல்திறன் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது; மேலும் இவ்வாறு செய்வது உங்களின் முன்னேற்றத்தையும் குறைக்கும்.
தினசரி உடற்பயிற்சி செய்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், அதற்காக நீங்கள் அதிகபடியாக உடற்பயிற்சி செய்து வர தேவையில்லை; மற்றும் தினசரி செய்ய வேண்டும் என்றும் எந்த அவசியமும் இல்லை.
உடற்பயிற்சிகளுக்கு இடையில் ஓய்வு எடுப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏன்னென்றால், உடற்பயிற்சியின் போது ஏற்படக்கூடிய சேதத்திலிருந்து உங்கள் தசைகளை மீட்கவும் மற்றும் உங்கள் தசைகள் மீண்டும் வளரவும் ஓய்வு என்பது மிகவும் அவசியம்.
நல்ல ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி பராமரிப்பதற்கு, ஓய்வு நாட்கள் எவ்வளவு முக்கியம் என்று பல ஆய்வுகள் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளது.
நீங்கள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் உடற்பயிற்சி செய்து வந்தால் கூட அது போதுமானது. எனவே, அவரவர் உடல் நலத்திற்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்து நன்மை பெறுங்கள்!
வழக்கமாக உடற்பயிற்சி செய்து வருவது எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். ஆனால், விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக சிலர் அளவுக்கு அதிகமா உடற்பயிற்சி செய்வது உண்டு. நீங்கள் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் செயல்திறன் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது; மேலும் இவ்வாறு செய்வது உங்களின் முன்னேற்றத்தையும் குறைக்கும்.
தினசரி உடற்பயிற்சி செய்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், அதற்காக நீங்கள் அதிகபடியாக உடற்பயிற்சி செய்து வர தேவையில்லை; மற்றும் தினசரி செய்ய வேண்டும் என்றும் எந்த அவசியமும் இல்லை.
உடற்பயிற்சிகளுக்கு இடையில் ஓய்வு எடுப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏன்னென்றால், உடற்பயிற்சியின் போது ஏற்படக்கூடிய சேதத்திலிருந்து உங்கள் தசைகளை மீட்கவும் மற்றும் உங்கள் தசைகள் மீண்டும் வளரவும் ஓய்வு என்பது மிகவும் அவசியம்.
நல்ல ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி பராமரிப்பதற்கு, ஓய்வு நாட்கள் எவ்வளவு முக்கியம் என்று பல ஆய்வுகள் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளது.
நீங்கள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் உடற்பயிற்சி செய்து வந்தால் கூட அது போதுமானது. எனவே, அவரவர் உடல் நலத்திற்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்து நன்மை பெறுங்கள்!
ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளலாம் என்பதால் குழந்தைகள் மட்டுமின்றி எல்லா வயதினருக்கும் ஏற்றதாகவும், சிறந்த உடற்பயிற்சியாகவும் விளங்குகிறது.
குழந்தைகள் விரும்பி விளையாடும் உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகளுள் ஒன்றாக ‘ஸ்கிப்பிங்’ அமைந்திருக்கிறது. வீட்டின் முற்றங்கள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் என எந்த இடத்திலும் ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளலாம் என்பதால் குழந்தைகள் மட்டுமின்றி எல்லா வயதினருக்கும் ஏற்றதாகவும், சிறந்த உடற்பயிற்சியாகவும் விளங்குகிறது.
உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் உள்பட பிற வாழ்க்கை முறை சார்ந்த நோய்களை தவிர்ப்பதற்கு ஸ்கிப்பிங் பயிற்சி சிறந்தது என்று ஐரோப்பிய ஜர்னல் ஆப் அப்ளைடு பிசியாலஜி ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
எடை குறைதல்: உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும் சிறந்த பயிற்சி முறையாக ஸ்கிப்பிங் விளங்குகிறது. ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால் 1300 கலோரிகளை எரிக்க வாய்ப்புள்ளது. ஜாக்கிங் அல்லது நடைப்பயிற்சியுடன் ஒப்பிடும்போது ஸ்கிப்பிங் அதிக கலோரிகளை எரிக்க வல்லது.
தசைகள்: ஆரம்பத்தில் சில நாட்கள் ஸ்கிப்பிங் செய்த பிறகு உடல் வலியை உணரலாம். முன்பைவிட கை, கால் தசைகள் அதிகமாக வேலை செய்வதால் இந்த பிரச்சினை ஏற்படும். இருப்பினும் கை, கால்களில் உள்ள தசைகள் வலு வடைவதற்கு உதவும் முழு உடற்பயிற்சியாக இது அமையும். உற்சாகத்துடன் செயல்படவும் தூண்டும்.
ஒருங்கிணைப்பு: ஸ்கிப்பிங் செய்வது உடல் உறுப்புகளுக்கு ஒருங்கிணைப்பை வழங்கும் செயல்முறையாகவும் அமையும். கண்கள், மூளை மற்றும் தசைகள் ஒருங்கிணைந்து செயல்பட உதவும். தினமும் அரை மணி நேரம் ஸ்கிப்பிங் செய்வது அறிவாற்றல் மற்றும் நரம்பியல் செயல்பாட்டை மேம்படுத்தும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எலும்பு அடர்த்தி: ஸ்கிப்பிங் செய்வதால் எலும்பு சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்பது சுகாதார நிபுணர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஸ்கிப்பிங் செய்தபடி மேலும் கீழும் குதிக்கும்போது அனைத்து தசைகளும் தூண்டப்படும். அதனால் எலும்பு பலம் அதிகரிப்பதோடு எலும்புகளின் அடர்த்தியும் கூடும். எலும்புகளை சுற்றியிருக்கும் தசைகளும் பலப்படும்.
இதய ஆரோக்கியம்: ஸ்கிப்பிங் செய்வது சிறந்த கார்டியோ பயிற்சிகளில் ஒன்றாகும். இது இதய செயல்பாட்டையும், ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும். உடலில் ஸ்டெமினாவை அதிகரிக்க செய்து இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

சுவாசத்தை முறைப்படுத்தி உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டாலே உங்களால் எளிதாக உங்கள் எடையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
மூச்சுப் பயிற்சி செய்வது வயிற்றுக்கு அடைபட்டு இருக்கும் காற்றை மட்டும் வெளியேற்றி தொப்பையைக் குறைக்கும் வேலையை மட்டும் செய்வதல்ல. அதோடு மேலும்நிறைய நன்மைகளை இந்த மூச்சுப்பயிற்சியின் வழியாக நாம் பெற முடியும். குறிப்பாக, சுவாசப் பயிற்சியை தினந்தோறும் மேற்கொண்டு வந்தால், நாள்பட்ட நுரையீரல் பிரச்சினை, நுரையீரல் செயல்பாடு, இதய சுவாசம், சுவாசக் குழாயில் மெல்லிய சதைகள் வளர்வதைத் தடுப்பது, சுவாச மண்டலத்தை பலப்படுத்துவது ஆகிய பல்வேறு நன்மைகளைப் பெற முடியும்.
சுவாசப் பிரச்சினைக்கும் ஆஸ்துமா, மூச்சுத் திணறல் ஆகியவற்றால் அவதிப்படுகின்றவர்களுக்கும் சிறந்த தீர்வாக மருத்துவர்கள் பரிந்துரைப்பது மருத்துவ சிகிச்சைகளுடன் சேர்த்து கட்டாயமாக தினசரி மூச்சுப் பயிற்சியும் செய்ய வேண்டும் என்பது தான். அதிலும் குறிப்பாக, காலையில் செய்வது போன்று இரவு தூங்கச் செல்லும்முன்பும் ஒருமுறை மூச்சுப்பயிற்சி செய்யலாம். ஆனால் இரவு உணவுக்கும் படுக்கைக்குச் செல்வதற்கும் இடையே குறைந்தபட்சம் 2 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.
பொதுவாக மூச்சுப் பயிற்சியில் நான்கு வகை நிலைகள் உள்ளன. அவற்றின்படி முறையாவது செய்வது தான் சிறந்தது.
1. முதலில் சுவாசத்தை உள்ளே இழுத்துக் கொள்ளுதல். இதற்கு பூரகம் என்று பெயர்.
2. இழுத்த சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைப்பது. இது கும்பகம் என்று அழைக்கப்படும்.
3. உள்ளே நிறுத்திய சுவாசத்தை வெளியே விடுதல் ரேசகம்
4. வெளியே சுவாசத்தை விட்ட பிறகு, அப்படியே இதை வெளியே நிறுத்தி வைப்பது.
இப்படி சுவாசத்தை முறைப்படுத்தி உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டாலே உங்களால் எளிதாக உங்கள் எடையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

சுவாசப் பிரச்சினைகள், அதிக உடல் எடை, மூச்சுத் திணறல் ஆகிய பிரச்சினைகளாலும் உடல் பருமன் கொண்டவர்கள் சுவாசப் பயிற்சி மூலமாக இந்த பிரச்சினைகளை எல்லாம் எளிதாகக் கடந்து விட முடியும்.
சுவாசப் பிரச்சினைகள், அதிக உடல் எடை, மூச்சுத் திணறல் ஆகிய பிரச்சினைகளாலும் உடல் பருமன் கொண்டவர்கள் சுவாசப் பயிற்சி மூலமாக இந்த பிரச்சினைகளை எல்லாம் எளிதாகக் கடந்து விட முடியும். நாம் அனைவரும் மேலோட்டமான சுவாசங்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம், இதன் காரணமாக நமது நுரையீரல் அவற்றின் சிறந்த திறனுடன் செயல்படாது, இது நமது மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
முறையாக சுவாசிக்காமல், காற்றை ஏனோதானோவென்று உள்ளிழுத்து, வெளியேற்றுவதால் வயிற்றுக்குள் காற்று தங்கிவிடுகிறது. அப்படி தங்கிவிடும் காற்றினால் தொப்பை, உடல் பருமன் போன்ற பிரச்சினைகளும் உண்டாகின்றன. ஆழ்நத சுவாசம் இல்லாதது நிறைய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆழ்ந்த சுவாசம் உங்கள் உடலில் மன அழுத்தத்தை குறைக்க ஒரு சிறந்த வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல், நீங்கள் ஆழ்ந்த சுவாசத்தை பயிற்சி செய்யும்போது, அது உண்மையில் உங்கள் மூளையை ரிலாக்ஸ் செய்கிறது . எனவே இந்த சுவாச பயற்சி செய்வது என்று தீர்மானியுங்கள்.
உட்கார்ந்த இடத்திலேயே செய்யும் பயிற்சிகள் நிறைய இருக்கின்றன. மூச்சுப்பயிற்சியும் அப்படி செய்யலாம். ஆனால் எடையைக் குறைக்க நீங்கள் மூச்சுப்பயிற்சி செய்வதாக இருந்தால் தரையில் அமர்ந்து தான் செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சியை செய்கின்றபோது தரையில் அமர்ந்து முதுகை நேராக வைத்து உட்காருங்கள். ஆனால் நீங்கள் நிமிர்ந்து உட்கார முயலுங்கள்.
முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி உட்கார வேண்டும். முதலில் வாயை மூடிக் கொண்டு மூக்கின் வழியாக 4 விநாடிகள் சுவாசிக்க வேண்டும். அடுத்து 7 விநாடிகள் என்று ஆக்கிக் கொண்டு சுவாசியுங்கள். உங்களை நீங்கள் அழுத்திக் கொள்ளாமல் லேசாக செய்யுங்கள். அடுத்து 8 விநாடிகள் வாயின் வழியாக சுவாசிக்கவும். இப்படி குறைந்தபட்சம் 3 முறை செய்யவும். அடுத்தடுத்து நீ்ங்கள் சௌகரியமாக உணர ஆரம்பித்ததும் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
இரண்டு கால்களையும் மடக்கி, பத்மாசனத்தில் அமருங்கள். ஆழ்ந்த சுவாசப் பழக்கத்தை உண்டாக்க இது ஒரு படிப்படியான பயிற்சியாக இருக்கும். இந்த அடிப்படை பயிற்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முழு பிராணாயாமம் செய்யுங்கள்.
அதிக நன்மைகளைப் பெற வேண்டுமானால் மாற்று நாசி மூச்சு போன்ற சுவாச பயிற்சிகளையும் நீங்கள் சேர்க்கலாம்.
ஆழ்ந்த சுவாசம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்ததாக அமையும். உங்களை மிகவும் ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும்.
நாள் முழுவதும் உங்களைச் சுறுசுறுப்பாக செயல்பட உதவும். இந்த சுவாச பயிற்சியை தினமும் செய்து மனதையும் உடலையும் உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் சுவாசப் பயிற்சி செய்வது மிக மிக முக்கியம்.
இந்த பயிற்சியைச் செய்வதன் மூலம் மார்பு சுருங்கி விரியும். இந்த மார்பு விரிவாக்கத்தால் ஏற்படுகின்ற மூச்சுத் திணறல் போன்றவை மார்புக் குறைபாடு ஆகியவற்றுடன் குறுகிய சுவாசத்திற்கு வழிவகுக்கும். சுவாசக் கோளாறினால் அதிகமாக பாதிக்கப்படுவது நிச்சயமாக உங்ளுடைய நுரையீரலையும் இதயத்தையும் தான். அதனால் சுவாசப் பயிற்சியை தினசரி மேற்கொள்ளுங்கள். அதற்கான ஏதோ செய்ய வேண்டுமென்று செய்யக் கூடாது. முறைப்படி தெரிந்து கொண்டு செய்தால் அது சரியான பலனைக் கொடுக்கும்.

பர்வத ஆசனம் செய்வதால் தோள்கள் வலிமையடையும். இதயம் வலிமையடையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும். உடல் எடை குறையும்.
முதலில் விரிப்பில் கால்களை நன்றாக நீட்டி தளர்த்திக் கொண்டு அமர வேண்டும். வலது காலை இடது தொடை பக்கமாகவும், இடது காலை வலது தொடை பக்கமாகவும் மேல் நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். அதாவது பத்மாசன முறையில் உட்கார்ந்து கொண்டு பின்பு 2 கைகளையும் தரையில் நன்றாக அழுத்தியவாறு 2 கால் முட்டிகளையும் ஊன்றி நிற்க வேண்டும்.
பின்னர் மெதுவாக உடலை மேல் நோக்கி தூக்கி 2 கைகளையும் கும்பிட்ட நிலையில் வைக்க வேண்டும். இதுதான் பர்வத ஆசன முறை ஆகும். இந்த ஆசனத்தை முதலில் சுவரை ஒட்டிய நிலையில் பயிற்சி செய்யலாம்.
நன்றாக பயிற்சி செய்த பின்னர் வழக்கமான இடத்தில் செய்யலாம். மூட்டு வலி உள்ளவர்கள் வலி இருக்கும் போது இந்த ஆசனத்தை செய்ய கூடாது. பயிற்சியை முடித்த பின்னர் கால்களை நீட்டி மடக்கி 5 முறை செய்வது நல்லது. இப்படி செய்து வந்தால் மூட்டு வலி வருவது தடுக்கப்படுகிறது.

‘ஒவ்வொருவரின் உடலுக்கும் தனித்துவமான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் தேவை’ என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, உங்களுக்காகவே பிரத்யேகமாக ஒரு உடற்பயிற்சி நிபுணரை தேர்ந்தெடுங்கள்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உடற்பயிற்சி கூடம், யோகா உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துவிடுகிறோம். ஆனால், ஆர்வக்கோளாறில் சரியான வழிமுறைகளைப் பின்பற்றுகிறோமா என்றால் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்ல வேண்டும். எல்லோரும் செய்கிறார்களே என்று நாமும் பின்பற்றுகிறோம்.
உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த உடனேயே சில தவறுகளையும் செய்கிறோம். இந்த தவறுகளே சில நேரங்களில் நீங்கள் அடைய விரும்பிய உடல் அளவு லட்சியத்திற்கு இடையூறாகவும் இருந்துவிடும். உடற்பயிற்சியின் ஆரம்ப கட்டத்தில் பலரும் செய்யும் பொதுவான தவறுகள் என்று நிபுணர்கள் சிலவற்றை பட்டியலிட்டு இருக்கிறார்கள். அவற்றை அறிந்துகொள்வோம்.
‘ஒவ்வொருவரின் உடலுக்கும் தனித்துவமான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் தேவை’ என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, உங்களுக்காகவே பிரத்யேகமாக ஒரு உடற்பயிற்சி நிபுணரை தேர்ந்தெடுங்கள். அவர் அந்த வேலையை பார்த்துக் கொள்வார். எந்த அளவிற்கு உடற்பயிற்சி மீது மோகம் அதிகரித்திருக்கிறதோ, அதையும் தாண்டி, ஊட்டச்சத்து டானிக்குகள் மற்றும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை ஒரு பேஷனாகவே மாற்றிவிட்டார்கள். உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த உடனேயே இவற்றை சாப்பிட வேண்டும் என்ற கட்டாயமில்லை.
நாம் ஒன்றும் விளையாட்டு வீரர்களுக்கு இணையாக உடற்பயிற்சிகள் செய்துவிடப் போவதில்லை. சாதாரணமாக உடற்பயிற்சி கூடத்தில் செய்யும் ஆரம்பநிலைப் பயிற்சிகளுக்கு நாம் வழக்கமாக சாப்பிடும் சத்தான உணவே போதுமானது.
உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டினி இருப்பது மாபெரும் தவறு. சிலர் ஒல்லியாக வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு 1000 கலோரி அளவுக்கு மட்டுமே உணவு எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கலோரிகள் அளவை குறைப்பதால் மட்டுமே ஒருவர் உடனடியாக ஒல்லியாக முடியாது. இந்தப் பழக்கம் நாளடைவில் ஊட்டச்சத்து பற்றாக்குறையையும், வளர் சிதை மாற்றக் குறைபாட்டையும் ஏற்படுத்தி உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். இப்படி பட்டினி இருப்பதற்குப் பதில், உணவுக்கட்டுப்பாட்டோடு, குறைந்தபட்சம் வாரத்தில் 5 நாட்களாவது உடற்பயிற்சிகளையும் செய்து வந்தால் மட்டுமே உடல் பருமனை குறைக்க முடியும்.
இன்டர்நெட்டிலும், சாட்டிங்கிலும் இரவில் நீண்ட நேரம் விழித்துக்கொண்டு நேரத்தை செலவிடுவது நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என எல்லாம் கடைபிடித்தும் எடைஇழப்பு ஏற்படவில்லையே என்று வருத்தப்பட்டு பயனில்லை. வாரத்தில் 1, 2 நாட்கள் போதிய தூக்கம் இல்லாவிட்டாலும் கூட, மனஅழுத்தம் ஹார்மோனில் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களது வேலைகளில் செயல்திறனை குறைத்துவிடும். நாளடைவில், தசைகளில் பலவீனத்தை ஏற்படுத்தி அதுவே மீண்டும் எடை அதிகரிக்க வழிவகுக்கும் என நிபுணர்கள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.