search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்...
    X
    வயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்...

    வயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்...

    கொரோனாவை பற்றிய பயமே இல்லாமல் அறுபது வயதைக் கடந்தவர்கள்கூட தினமும் யோகாசன பயற்சிகளை மேற்கொண்டு ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்கள்.
    60வயதை கடந்தவர்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்பது அரசின் வேண்டுகோள். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும், வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதும் அதற்கு காரணமாக இருக்கிறது. அதே நேரத்தில் கொரோனாவை பற்றிய பயமே இல்லாமல் அறுபது வயதைக் கடந்தவர்கள்கூட தினமும் யோகாசன பயற்சிகளை மேற்கொண்டு ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்கள்.

    “பெண்கள் 40 வயதை கடக்கும்போது அவர்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கடிகள் தோன்றி கோபத்தையும், எரிச்சலையும் உருவாக்கும். அடுத்து மாதவிலக்கு நிலைத்துப்போகும் மனோபாஸ் காலகட்டத்தை அடைவார்கள். அப்போது உடலோடு சேர்ந்து மனதும் தளர்ந்துபோகும். அத்தகைய தளர்ச்சிகள் ஏற்படாமல் இருக்க 40 வயதிலேயே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முன்வரவேண்டும். அதற்கு அனைவரும் யோகா கற்கவேண்டும். கற்றால் 60-ல் மட்டுமல்ல 80 வயதிலும் இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் வாழலாம்.

    வயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் இலகுவாக செய்தால்போதும். அதனுடன் அவர்கள் பிரணாயாமமும் செய்யவேண்டும். மூச்சு பயிற்சி செய்தால் உடல் பாகங்கள் அனைத்திற்கும் போதுமான ஆக்சிஜன் கிடைக்கும். அவை நரம்புகளை வலுப்படுத்தும். முதுகுவலியால் அவதிப்படுகிறவர்கள் தொடர்ந்து யோகாசனம் செய்து வந்தால்போதும்.

    “பெண்கள் யோகாசனம் செய்துவந்தால் அவர்களது சருமம் பொலிவடைந்து அழகு அதிகரிக்கும். இளமையை தக்கவைக்கலாம். வாழ்க்கையை இனிமையாக அனுபவிக்கலாம். முதுமையை விரட்டிவிடலாம். தலைகீழாக நின்று சிரசாசனம் செய்து வந்தால், தலைப்பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதன் மூலம் உடல் முழுவதும் பலமடையும்.

    “பார்ட்னர் யோகா என்பது இரண்டு பெண்கள் இணைந்து செய்வதாகும். ஒரே மாதிரியான வயதையும், உடல் வாகுவையும் கொண்ட பெண்கள் இணைந்து இதை செய்யும்போது அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல்வலுவும் மேம் படும். அடுத்தடுத்து சிறந்த பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் பிறக்கும். எல்லா ஆசனங்களையும் அதுபோல் செய்ய முடியாது.
    Next Story
    ×