என் மலர்
உடற்பயிற்சி
இந்த முத்திரை உடலின் நோய்த்தடுப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. களைப்பை போக்கி, ஆற்றல் திறனுடன் வைத்திருக்கவும் உதவும்.
செய்முறை
சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் இரண்டையும் சேர்த்து மடக்கி வைத்து, கட்டை விரலால் தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

பலன்கள்
வாழ்க்கையைக் குறிக்கும் முத்திரை இது. பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்புக்கு வகை செய்யும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த முத்திரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும்.
சோர்வு நீங்கும். கண் பார்வை சிறப்பாகும். செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. களைப்பை போக்கி, ஆற்றல் திறனுடன் வைத்திருக்கவும் உதவும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். உடலின் நோய்த்தடுப்பு சக்தியை அதிகரிக்கும். பொதுவாக உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.
இம்முத்திரை இதயத்தைப் பலப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, நம்பிக்கை தரும். மேலும் மூச்சினை சீராக்கி, ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்படி செய்யும் வல்லமை வாய்ந்த
செய்முறை :
இடது கைவிரல்களை மடக்கி கைபாதம் நெஞ்சைப் பார்த்தபடி வைக்கவும். வலதுகை விரல்களை மடக்கி இடதுகை விரல்களில் கொக்கி போல் மாட்டிக் கொள்ளவும். மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும்போது கை புஜங்களில் அழுத்தம் கொடுத்து கைகள் ஒன்றை ஒன்று இழுத்த வண்ணம் இருக்கட்டும்.
பிறகு கையை மாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை 15 நிமிடம் செய்யவும்.
பலன்கள் :
ஒவ்வொருவர் தேகத்திலும் 6 ஆதார சக்கரங்களும் ஏழாவதாய் சகஸ்ராரமும் உள்ளது. இது தியானத்திற்கு ஏழு படிகள் என்று கூறப்படுகிறது. தியானத்தின் மூலம் சக்தியை மூலாதாரத்திலிருந்து எழுப்பி, தொடர்ந்து ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா என்று கடந்து கொண்டு செல்லப்படுகிறது.
இதில் நான்காவது சக்கரமான அனாகத்தை தூண்டவல்லது இம்முத்திரை. மேலும் இதயத்தைப் பலப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, நம்பிக்கை தரும். மேலும் மூச்சினை சீராக்கி, ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்படி செய்யும் வல்லமை வாய்ந்தது. ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும்.

உலகில் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அத்தகைய ஆரோக்கியமான வாழ்வை அளிக்கவல்ல சக்தி யோகா கலைக்கு உள்ளது.
இன்று (திங்கட்கிழமை) உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நம் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யோகா கலை தோன்றியது. சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுத்து வடிவம் கொடுத்து, யோக சூத்திரங்களை அமைத்து, அதற்கு உயிரூட்டி, அதை நிலை பெறச் செய்தவர் பதஞ்சலி முனிவர் ஆவார். அதனால்தான் அவரை யோகா கலையின் தந்தை எனவும், அவர் கொடுத்த யோகா கலையை பதஞ்சலி யோகா என்றும் அழைக்கின்றோம்.
யோகா என்னும் வடமொழி சொல்லுக்கு இணைத்தல் அல்லது ஒன்று சேர்தல் என்பது பொருள் ஆகும். உடலோடு மனதை ஒன்றிணைத்து, உயிர்சக்தியை அறிந்து வாழ்வியல் முறையை மேம்பட செய்வதே யோகா கலை.
இத்தகைய சிறப்புமிக்க யோகா கலையின் பயன்கள் குறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை சிகிச்சை பிரிவு உதவி மருத்துவ அலுவலர் எ.ஜெ.கல்யாணி கூறியதாவது:-
மனிதனின் உடலை இயங்க உயிர்சக்தி அவசியம். அந்த உயிர்சக்தி தங்கும் இடமாக நம் உடலமைப்பு உள்ளது. நம் உடல் ஆகாயம், காற்று, நீர், நிலம், நெருப்பு என்ற பஞ்சபூதங்களால் ஆனது. நிலம் உடலையும், ரத்தம் நீரையும், பிராணவாயு காற்றையும், உடல் வெப்பம் நெருப்பையும், ஆகாயம் வெற்றிடத்தையும் உடலில் குறிக்கின்றது. இந்த பஞ்ச பூதங்களில் காற்று, நெருப்பு, நீர் ஆகிய மூன்றும் பருபொருளான உடலை, நுண்பொருளான உயிர் சக்தியோடு இணைத்து, நட்போடு இயங்க செய்கிறது. இந்த மூன்றின் செயல்பாட்டில் ஒன்று கூடினாலும், குறைந்தாலும் உடலில் உயிர்சக்தி குறையும். அதனால் வாதம், பித்தம், கபம் போன்ற நோய்கள் ஏற்படும்.

தடாசனம் செய்வதால் நுரையீரல் நன்கு விரிவடைந்து மூச்சுக்காற்று அதிகமாக உட்செல்லும். மார்பு, தொடை, குதிங்கால் தசைகள் வலுப்பெறும். மக்கராசனம் செய்வதால் மனதை அமைதிப்படுத்தி சுவாசம் ஒரே சீராக சிரமமின்றி செல்லும். இது கொரோனா நோயாளிகளுக்கு உகந்த பயிற்சி. பிராமரி பிராணாயாமம் செய்வதால் மூச்சை ஒழுங்குபடுத்துவதுடன் மேலும் சில நன்மைகள் கிடைக்கும்.
நமது உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக்கொண்டு வருவதே முத்திரையாகும். இதில் லிங்க முத்திரை செய்வதால் வறட்டு இருமல் நீங்கும். கபம் அகலும். நீர்கட்டு பிரச்சினைகள், ஜலதோஷம், ஆஸ்துமா சரியாகும்.
கிரியா செய்வதால் பஞ்சபூதங்களில் இருந்து தேவையான சக்தியை உடல் பெற்றுக்கொண்டு தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும். ஜலநேத்தியில் மூக்கை சுத்தப்படுத்தும் முறை உள்ளது. இதை செய்வதால் சளி வெளியேறும். கொரோனா வைரஸ் கிருமி மூக்கின் உள்ளே செல்வதை தடுக்க முடியும்.
பொதுவாக யோகாசனம் செய்வதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் உண்டாகும். நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு சீராகும். நினைவாற்றல் அதிகரிக்கும். இன்னும் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

யோகாவில், அஷ்டாங்க யோகா, ஹத யோகா என்னும் 2 வகை உள்ளது. இதில் ஹத யோகா, கொரோனா தொற்று மட்டுமல்லாது அனைத்து வகை கிருமித்தொற்றையும் அழித்து உடலை சுத்தப்படுத்தி உயிராற்றலை தியானத்தின் வழியாக அதிகப்படுத்த செய்கிறது.

தடாசனம் செய்வதால் நுரையீரல் நன்கு விரிவடைந்து மூச்சுக்காற்று அதிகமாக உட்செல்லும். மார்பு, தொடை, குதிங்கால் தசைகள் வலுப்பெறும். மக்கராசனம் செய்வதால் மனதை அமைதிப்படுத்தி சுவாசம் ஒரே சீராக சிரமமின்றி செல்லும். இது கொரோனா நோயாளிகளுக்கு உகந்த பயிற்சி. பிராமரி பிராணாயாமம் செய்வதால் மூச்சை ஒழுங்குபடுத்துவதுடன் மேலும் சில நன்மைகள் கிடைக்கும்.
நமது உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக்கொண்டு வருவதே முத்திரையாகும். இதில் லிங்க முத்திரை செய்வதால் வறட்டு இருமல் நீங்கும். கபம் அகலும். நீர்கட்டு பிரச்சினைகள், ஜலதோஷம், ஆஸ்துமா சரியாகும்.
கிரியா செய்வதால் பஞ்சபூதங்களில் இருந்து தேவையான சக்தியை உடல் பெற்றுக்கொண்டு தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும். ஜலநேத்தியில் மூக்கை சுத்தப்படுத்தும் முறை உள்ளது. இதை செய்வதால் சளி வெளியேறும். கொரோனா வைரஸ் கிருமி மூக்கின் உள்ளே செல்வதை தடுக்க முடியும்.
பொதுவாக யோகாசனம் செய்வதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் உண்டாகும். நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு சீராகும். நினைவாற்றல் அதிகரிக்கும். இன்னும் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த முத்திரையை காலை உதயத்திற்கு பின்பும், மாலை அஸ்தமனத்திற்கு முன்புமாக இரண்டு நேரம் செய்வது உத்தமம், அதிக பலன்கள் கிடைக்கும்.
ஆயுர்வேதத்தின் படி ,மூன்று நாடிகளில் பித்த நாடி குறைந்து, கப நாடி கூடினால், சுறுசுறுப்பின்மை, உடல் அதீத குளிர்ச்சி அடைதல், தன்னம்பிக்கை இழத்தல், ஜீரணக் கோளாறு, நீண்ட நேரம் செரிமானம் ஆகாமல் இருத்தல், தாகமின்மை, மாதவிடாய் கோளாறு, தைராய்டு சுரப்பியின் குறைவான செயல்பாடு (ஹைபோ தைராடிசம்),அதிகச் சளித் தொந்தரவு, ஆஸ்துமா, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல், கண்நோய்கள், உதாரணமாக கண்களில் அதிக நீர் சுரத்தல், பூளை கட்டுதல் போன்றவை, ரத்த ஓட்டம் சீராக இல்லாமை, அதிக எடை, போன்ற நோய்குறிகள் ஏற்படும். இதை போக்குவது இந்த கப நாசக முத்திரை.
செய்முறை
சுண்டு விரலை மடக்கவும். மோதிர விரலை சுண்டுவிரலின் பாதி அளவிற்கு மடக்கவும். கட்டைவிரலை மோதிர விரலின் முதல் முட்டியிலும், சுண்டுவிரலின் இரண்டாவது முட்டியிலும் படும்படி அழுத்திப் பிடிக்கவும். இவ்வாறு 30 வினாடிகளிலிருந்து 15 நிமிடம் வரை பயிற்சி செய்தால் மேற்கூறப்பட்ட நோய்கள் நீங்கும்.
இதை எப்போதும் பயிற்சி செய்யலாம். இருப்பினும். காலை உதயத்திற்கு பின்பும், மாலை அஸ்தமனத்திற்கு முன்புமாக இரண்டு நேரம் செய்வது உத்தமம், அதிக பலன்கள் கிடைக்கும். இது சிகித்சா முத்திரை வகையானதால் நோய் கண்டவர்கள் மட்டும் செய்து நிவர்த்தி ஆனவுடன் நிறுத்திவிடவும். நாட்பட்ட நோய்குணங்கள் உள்ளவர்கள் தொடர்ந்து பயிற்சி செய்தால் நோய் தாக்காது காத்துக்கொள்ளலாம்.

பிராணாயாமம் செய்வதால் கிடைக்கும் அனைத்து பயன்களையும் அடைய வேண்டுமானால் அதனை விடிய காலை, சூரிய உதயத்தின் போது செய்திட வேண்டும்.
பிராணாயாமம் என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை. பிராணாயாமம் என்பது ‘பிராண’ மற்றும் ‘அயாமா’ என்ற வார்த்தைகளின் கூட்டாகும்.
‘பிராண’ என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். அதே போல் ‘அயாமா’ என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். பிராணாயாமம் என்பது ஒரு செய்முறையாகும். மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றி, அடக்கி வைப்பதை ஒழுங்கு முறைப்படி இதனை செய்ய வேண்டும்.
பிராணாயாமம் செய்வதால் கிடைக்கும் அனைத்து பயன்களையும் அடைய வேண்டுமானால் அதனை விடிய காலை, சூரிய உதயத்தின் போது செய்திட வேண்டும்.
* நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களைத் தூண்டச் செய்து சக்கரங்கள் நன்றாக செயல்பட உதவுகிறது. உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை குணமாக்கும் சக்தி மூச்சுப் பயிற்சிக்கு உண்டு.
* மூச்சுப் பயிற்சி செய்வதால் சகஸ்ரார சக்கரம் தூண்டப்பட்டு, உடலை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சி செய்வதால் நினைவாற்றல் பெருகும்
* மூச்சுப் பயிற்சி செய்வதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். தினமும் மூச்சுப் பயிற்சி செய்து வர உடலுக்குள் கிருமிகள் நுழைவதைத் தடுத்து முடியும்.
* தினமும் மூச்சுப் பயிற்சி செய்வதால் உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் இருக்கும். பதட்டம் ஏற்படாமல் இருக்க மூச்சுப்பயிற்சி மிகவும் பயன்படுகிறது.

வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை வேகமாக குறைக்க வேண்டுமானால், க்ரஞ்சஸ் மற்றும் உட்கார்ந்து எழுந்திருக்கும் உடற்பயிற்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்.
வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க வேண்டுமானால். குறிப்பிட்ட உணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சி உத்திகளை பின்பற்ற வேண்டும். நீங்கள் சீரான முறையில் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், உணவுகளில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்களுடன் உடற்பயிற்சியையும் தொடரலாம். நீங்கள் உடற்பயிற்சி செய்யாதவராக இருந்தால், 20 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்.
• குத்த வைத்து மூச்சு விடுவது போன்ற உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்து வயிற்று கொழுப்பை குறைக்கலாம். குத்த வைத்து உட்காரும் போது, உங்கள் கீழ் பகுதியை முடிந்த வரையில் கீழே உட்காரவும். உட்காரும் போது மூச்சை இழுக்கவும். சில நிமிடங்கள் காத்திருப்புக்கு பின் மெதுவாக மூச்சை வெளியே விட்டு பழைய நிலைக்கு வரவும். இந்த உடற்பயிற்சியை 20 முறை தொடர்ந்து செய்யவும்.
• வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை நீக்க க்ரஞ்சஸ் வகையிலான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். உங்கள் தலைக்கு பின்னால் கைகளை கட்டிக்கொண்டு, முட்டியை மடக்கி வைத்து, கால்களை தரையில் திடமாக ஊன்றவும். வயிற்று தசைகளை இறுக்கி, உங்கள் தோள்பட்டையை தரையில் இருந்து தூக்கவும். இதனை 10 முறையாவது செய்யுங்கள்.
• அதிக அளவிலான தண்ணீரை குடித்து உட்கார்ந்து எழுந்திருக்கும் உடற்பயிற்சியையும் செய்திடுங்கள். பின்புறமாக படுத்து, முட்டியை மடக்கி, பாதத்தை தரையில் வைத்திடவும். கைகளை படர்ந்து விரித்து, விரல்களை மேற்புறம் பார்த்தவாறு வைக்கவும். மூச்சை வெளியேற்றி மெதுவாக உட்கார முயற்சிக்கவும். மூச்சை உள்வாங்கி மீண்டும் மெதுவாக படுங்கள்.
• நடைப்பயிற்சி முதல் உட்கார்ந்து எழுந்திருப்பது வரை அனைத்து உடற்பயிற்சிகளையும் செய்திடுங்கள்.
• கொழுப்புகளை வேகமாக குறைக்க வேண்டுமானால், க்ரஞ்சஸ் மற்றும் உட்கார்ந்து எழுந்திருக்கும் உடற்பயிற்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்.
• தற்போது செய்து வரும் உடற்பயிற்சியுடன் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியையும் தொடருங்கள். அல்லது ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மட்டும் தொடருங்கள். உடற்பயிற்சியை மாற்றுவதால் உடலில் அதிர்வு ஏற்பட்டு, மெட்டபாலிக் வீதம் அதிகரிக்கும். அதனால் வயிற்றில் இருந்து கொழுப்பு வேகமாக கரையும். ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியை 30 நிமிடங்களுக்கு செய்யவும்.
• மேலும் சீராக செய்து வரும் உடற்பயிற்சிகளுடன் நீச்சல் பயிற்சியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நடைப்பயிற்சி யை 40 நிமிடங்களுக்கு அதிகரித்திடுங்கள். அனைத்து க்ரஞ்சஸ் மற்றும் உட்கார்ந்து எழுந்திருக்கும் உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம் அல்லது நீச்சல் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சியை தேர்ந்தெடுக்கலாம். விதவிதமான உடற்பயிற்சியில் ஈடுபட முயற்சி செய்யுங்கள் - ஸ்கிப்பிங் பயன்படுத்துங்கள் அல்லது லெக் டக் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

இந்த முத்திரை செய்து வந்தால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நேர்முகமான எண்ணங்கள் அதிகமாகும். உடல் முழுக்க பிராண ஆற்றல் பெருகும்.
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும், கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் கட்டை விரலை உள்ளங்கையின் மத்தியில் வைத்து மற்ற நான்கு விரல்களையும் படத்தில் உள்ளதுபோல் மடக்கி வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு பத்து முறை செய்யவும். பின் சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.
பலன்கள்: உடலில் உயிரோட்டம் நன்கு இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். தன்னம்பிக்கை பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நேர்முகமான எண்ணங்கள் அதிகமாகும். உடல் முழுக்க பிராண ஆற்றல் பெருகும்.
மேற்குறிப்பிட்ட முத்திரை பயிற்சிகள் செய்ய அரை மணி நேரமாகும். இந்த அரை மணி நேரம்தான் உங்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும், உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் தருகின்றது. இதனை வீட்டில் உள்ளவர்கள் குடும்பத்துடன் காலை, மாலை பயிற்சி செய்யுங்கள். பெண்களை பொறுத்தவரை மாதவிடாய் காலத்தில் முதல் நான்கு நாட்கள் பயிற்சி செய்ய வேண்டாம். ஐந்தாவது நாளில் இருந்து பயிற்சி செய்யலாம்.

இந்த ஊரடங்கில் நாம் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் கலையான யோகப்பயிற்சிகள் செய்து உடலையும் மனதையும் பக்குவப்படுத்தினால், ஊரடங்கு முடிந்தவுடன் ஊருக்குள் திடமாக வலம் வரலாம்.
இன்று நமது நாட்டில் தொற்றுக் கிருமியின் பரவல் அதிகமாக உள்ளதால், நாட்டு நலன் கருதி ஊரடங்கு அமலில் உள்ளது. தனிமைப்படுத்தியுள்ளோம், இந்த தனிமை நிறைய நபர்களுக்கு சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடில்லாமல் மன அழுத்தத்தை தருவதாக உள்ளது. இந்த ஊரடங்கில் நாம் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் கலையான யோகப்பயிற்சிகள் செய்து உடலையும் மனதையும் பக்குவப்படுத்தினால், ஊரடங்கு முடிந்தவுடன் ஊருக்குள் திடமாக வலம் வரலாம்.
நுரையீரலை வலுப்படுத்தும் முறை
குடும்பத்துடன் அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் தினமும் கீழ்கண்ட எளிய யோகப்பயிற்சிகளை செய்யுங்கள். சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கலாம். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும். காலையில் 5 மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி, விரிப்பு விரித்து குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் கிழக்கு நோக்கி அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கைகள் சின் முத்திரையில் இருக்கவும். கண்களை மூடி இரு மூக்கு துவாரத்தின் வழியாக மெதுவாக, நிதானமாக மூச்சை இழுக்கவும், உடன் மெதுவாக மூச்சை வெளிவிடவும். இது போல் பத்து முறைகள் செய்யவும். பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் ஒரு ஐந்து நிமிடம் கூர்ந்து கவனிக்கவும். இது நுரையீரலுக்கு நல்ல சக்தியை தரும். உடல் முழுக்க பிராண ஆற்றல் நன்கு இயங்கும்.
உட்கட்டாசனம்:
எழுந்து நில்லுங்கள். இருகால்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். கைகளை முன்னாள் ஒரு அடி இடைவெளியில் நீட்டவும். மெதுவாக ஒரு நாற்காலியில் அமர்வது போல் படத்தில் உள்ளது போல் நிற்கவும். பத்து வினாடிகள் சாதாரண மூச்சில் இருக்கவும். பின் நேராக நிமிர்ந்து நிற்கவும். இதே போல் மூன்று முறைகள் பத்து வினாடிகள் செய்யவும்.
பலன்கள்:
நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும். மூச்சு திணறல் வராது, மூட்டுவலி வராது, மூட்டுக்கள் பலம் பெறும்.
புஜங்காசனம்:
விரிப்பில் குப்புறபடுக்கவும். இரு கால்களும் சேர்ந்திருக்கட்டும். இரு கைகளையும் இதயம் பக்கத்தில் கைவிரல் தரையில் படும்படி இருக்கவும். மெதுவாக மூச்சை இழுத்து, முதுகை, தலையை பின்னால் வளைத்து இடுப்பிற்கு மேல் உயர்த்தவும். படத்தில் உள்ளபடி ஒரு பத்து வினாடிகள் மூச்சடக்கி இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு தரைக்கு வரவும். இதே போல் மூன்று முறைகள் செய்யவும்.
முக்கிய குறிப்பு:
முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய பலவீனம் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்ய வேண்டாம்.
பலன்கள்:
நுரையீரல் நன்கு இயங்கும். கழுத்துவலி, முதுகு வலி வராது. ஆஸ்துமா, சைனஸ் நீங்கும். நீரிழிவு வராது, மன அமைதி கிடைக்கும், உடல் எடை அதிகமாகாது. இடுப்பு வலி வராது, மூட்டுக்கள், தோள்பட்டை எலும்புகள் வலுப்பெறும்.
பத்மாசனம்:
தரையில் விரிப்பு விரித்து அமரவும். ஒவ்வொரு காலாக மடித்து தொடைமேல் படத்தில் உள்ளபடி போடவும். இரு கைகளும் சின் முத்திரையில் வைக்கவும். கண்களை மூடி சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் வரை இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.
பலன்கள்:
மன அழுத்தம் நீங்கும். ரத்த அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். நேர்முகமான எண்ணங்கள் வளரும். இதயம் பாதுகாக்கப்படும். இதய வால்வுகள் நன்கு இயங்கும். மூளை செல்களுக்கு ரத்த ஓட்டம் நன்றாக இயங்கும். சுறுசுறுப்பாகவும். உற்சாகமாகவும் இருக்கலாம்.
பசியறிந்து பசிக்கும் பொழுது அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று போக இடமிருக்க வேண்டும். இவ்வாறு சாப்பிடுங்கள். பகலில் தூங்க வேண்டாம். இரவு 9.30 மணிக்குள் படுத்துவிடுங்கள். காலை 4 மணிக்கு எழுந்து இந்த யோகப் பயிற்சியை செய்யுங்கள். மாலையிலும் பயிற்சி செய்யுங்கள், நல்ல அறிவு சார்ந்த புத்தகங்களை படியுங்கள். உடல், மனதை உறுதிப்படுத்தி ஊரடங்கு முடிந்தவுடன் உற்சாகமாக நோய் எதிர்ப்பாற்றல் பெற்று வளமாக வாழுங்கள்.
யோகக் கலைமாமணி
பி,கிருஷ்ணன் பாலாஜி T M.A.(Yoga)
6369940440

இந்த முத்திரை பனி காலத்தில் வரும் கபம் மற்றும் சளி போன்ற சுவாசம் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்தவல்லது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை
இரு உள்ளங்கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்துக் கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் தனித்து நேராக நிற்க வேண்டும். வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும்.
பலன்கள்
இந்த முத்திரை ஆண்மையை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் வெப்பத்தை உருவாக்குவதால், அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில், இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். மழை. பனி காலத்தில் வரும் கபம் மற்றும் சளி போன்ற சுவாசம் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்தவல்லது. உடல் எடை குறையும்.

இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து காலையில் செய்ய வேண்டும். ஒருமுனைப்படுதலை மேம்படுத்தி, தூக்கமின்மையை போக்கி, கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.
செய்முறை
ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கையை பூமியை நோக்கி கவிழ்த்து வைக்க வேண்டும். நிமிர்ந்து இருந்தால் அது சின் முத்திரை.
பலன்கள்
கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் நாளமில்லா (Endocrine) சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரலைத் தொடும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும்.
மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லும், மூளை செயல்பாடு, நினைவாற்றல் அதிகரிக்கும். அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோக முத்திரை இது. பத்மாசனத்தில் அமர்ந்து காலையில் செய்ய வேண்டும். ஒருமுனைப்படுதலை மேம்படுத்தி, தூக்கமின்மையை போக்கி, கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.

தொடர்ந்து 2 மாதங்கள் இந்த முத்திரையை செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம் போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். உடலில் உள்ள அளவுக்கு அதிகமான காற்றை வெளியேற்றி, வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வலியை குறைக்க இது உதவும்.
செய்முறை
ஆள்காட்டி விரலின் நுனிப்பகுதியால், கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொட்டவாறும், கட்டைவிரல் மெதுவாக வளைந்து ஆள்காட்டி விரலின் கனுவைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்
இந்த முத்திரை உடலில் உள்ள காற்று தனிமத்தை சமநிலைப்படுத்துகிறது. உட்கார்ந்திருக்கும்போது, நிற்கும்போது அல்லது படுக்கும்போது என ஒரு நாளில் எந்த நேரம் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை நிவர்த்தி செய்ய முடியும்.
தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும். உடலில் உள்ள அளவுக்கு அதிகமான காற்றை வெளியேற்றி, வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வலியை குறைக்க இது உதவும். ஆர்த்தரைடிஸ் மூட்டுவலி, ரூமாடிசம், ஸ்பான்டிலைடிஸ் எனப்படும் கழுத்துவலிகளை குறைக்க உதவும்.

ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள். நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்.
முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
* பத்மாசனத்தில் அமர்ந்து யோக முத்திரைகளை செய்வது நல்லது.
* நேரம் கிடைக்காதவர்கள் டி.வி பார்க்கும்போது, நிற்கும்போது, பயணம் செய்யும்போதுகூட செய்யலாம்.
* முத்திரைகளை விரலோடு விரல் அழுத்தி செய்ய வேண்டும் என்பதில்லை. மெதுவாகத் தொட்டாலே போதும்.
* எல்லா முத்திரையும் நெருப்பைக் குறிக்கும். அதனால், கட்டைவிரலை இணைத்துத்தான் செய்ய வேண்டும்.
* ஆரம்பத்தில் 10- 15 நிமிடம் செய்யத் தொடங்கி, போகப்போக நேரத்தை கூட்டிக்கொண்டே போகலாம். 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* வலது பக்க உறுப்புகளுக்கு இடது கையால் செய்வதும், இடப்பக்க உறுப்புகளுக்கு வலது கையால் செய்வதும் பலனைக் கொடுக்கும்.