search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கணேச முத்திரை
    X
    கணேச முத்திரை

    மன அழுத்தத்தைக் குறைக்கும் கணேச முத்திரை

    இம்முத்திரை இதயத்தைப் பலப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, நம்பிக்கை தரும். மேலும் மூச்சினை சீராக்கி, ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்படி செய்யும் வல்லமை வாய்ந்த
    செய்முறை :

    இடது கைவிரல்களை மடக்கி கைபாதம் நெஞ்சைப் பார்த்தபடி வைக்கவும். வலதுகை விரல்களை மடக்கி இடதுகை விரல்களில் கொக்கி போல் மாட்டிக் கொள்ளவும். மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும்போது கை புஜங்களில் அழுத்தம் கொடுத்து கைகள் ஒன்றை ஒன்று இழுத்த வண்ணம் இருக்கட்டும்.

    பிறகு கையை மாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை 15 நிமிடம் செய்யவும்.

    பலன்கள் :

    ஒவ்வொருவர் தேகத்திலும் 6 ஆதார சக்கரங்களும் ஏழாவதாய் சகஸ்ராரமும் உள்ளது. இது தியானத்திற்கு ஏழு படிகள் என்று கூறப்படுகிறது. தியானத்தின் மூலம் சக்தியை மூலாதாரத்திலிருந்து எழுப்பி, தொடர்ந்து ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா என்று கடந்து கொண்டு செல்லப்படுகிறது.

    இதில் நான்காவது சக்கரமான அனாகத்தை தூண்டவல்லது இம்முத்திரை. மேலும் இதயத்தைப் பலப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, நம்பிக்கை தரும். மேலும் மூச்சினை சீராக்கி, ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்படி செய்யும் வல்லமை வாய்ந்தது. ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும்.
    Next Story
    ×