என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    குனிந்து நிமிர்ந்து வேலை செய்வோர், இரு சக்கர வாகனம் ஓட்டுவோர், நீண்ட நேரம் குனிந்து படிக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் கழுத்து வலி சரியாகும்.
    ‘சிரசாசனம்’ என்பது தலைகீழாக நின்று செய்யும் ஆசனம்.

    சிரசாசனம் செய்ய முடியாதவர்களுக்கு ‘மகா சிரசு முத்திரை’ நல்ல மாற்று. சிரசாசனம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அவை அனைத்தும் இந்த முத்திரையைச் செய்வதால் கிடைக்கும். இது உச்சி முதல் கழுத்து, தோள்பட்டை வரை உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, அங்குள்ள சளி, நீர் ஆகியவற்றை வெளியேற்றும்.

    செய்முறை :

    மோதிர விரலை மடக்கி உள்ளங்கையின் நடுவில் வைத்து அழுத்த வேண்டும். ஆள்காட்டி விரல் நடுவிரல் நுனிகளை கட்டைவிரல் நுனியோடு சேர்த்து வைக்க வேண்டும். சுண்டு விரல் நீட்டி இருக்கவும்.

    பலன்கள் :

    நீர்கோத்தலால் ஏற்படும் தலைவலி, தலைபாரம், சளியால் ஏற்படும் தலைவலி, நெற்றிப்பொட்டில் ஏற்படும் வலி (Frontal sinusitis), மூக்குக்கு இருபுறமும் கண்களுக்குக் கீழே உள்ள எலும்புகளில் வரும் வலியை (Maxillaray sinusitis, Ethomoidal sinusitis) சரியாக்கும்.

    மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்தல், மூக்கில் நீர் வடிதல், ஒரு பக்க மூக்கில் மூச்சுவிடுதல், வாசனை உணராமல் போதல் பிரச்சனை உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    குனிந்து நிமிர்ந்து வேலை செய்வோர், இரு சக்கர வாகனம் ஓட்டுவோர், நீண்ட நேரம் குனிந்து படிக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் கழுத்து வலி சரியாகும். கழுத்து இறுக்கமும் நீங்கும்.

    சிலருக்குக் கழுத்து எலும்பில் உள்ள சவ்வு பாதிக்கப்பட்டிருக்கும். இதனால் தோள்பட்டை, கை வரை வலி பாயும். இவர்களுக்கான பிரச்னையைத் தீர்க்கும் சிறந்த முத்திரை இது.

    இதனால் தலை சார்ந்த அனைத்துத் தொந்தரவுகளும் நீங்கும். தலைவலி,ஸ்ட்ரெஸ் (மன அழுத்தம்) டென்சன் இவைகள் தீரும்.

    கட்டளைகள் :

    விரிப்பில் அமர்ந்து தலை, முதுகுத்தண்டு நிமிர்ந்த நிலையில் தரையில் சம்மணமிட்டு செய்ய வேண்டும். நாற்காலியில் அமர்ந்து பாதங்களை தரையில் பதித்தும் செய்யலாம்.

    படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தலையணை வைத்து சாய்ந்த நிலையில் செய்யலாம்.

    உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
    முத்திரையைச் செய்த பிறகு, அதிகமாக சளி பிடிக்கத் தொடங்கினால், நீர் முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் அதிகமானாலும், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். நமது உடல், 70 சதவிகிதம் நீரினால் நிறைந்துள்ளது. ரத்தம், உமிழ்நீர், செல்களின் உட்பகுதி, செரிமான அமிலங்கள், மூட்டுக்களின் இடையில் உள்ள திரவம், விந்து, தோலின் ஈரப்பசை, கண்களில் உள்ள திரவம், ஏன் எலும்பில்கூட 30 சதவிகிதத்துக்கும் அதிகமாக நீர் மூலக்கூறுகள் உள்ளன.

    உடலில் உள்ள நீர்ச்சத்தை சமஅளவில் வைத்திருக்க உதவுவது தான் நீர் முத்திரை. இந்த முத்திரையைச் செய்துவந்தால், நீர்ப்பற்றாக்குறை மற்றும் அதிகக்  குளிர்ச்சியால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்தும் எளிதில் தப்பிக்க முடியும்.
     
    செய்முறை
     
    கட்டைவிரலின் நுனியும், சுண்டுவிரலின் நுனியும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும். நீர், நெருப்பு என்ற  இரண்டு பஞ்சபூதங்களை சமன்செய்வதற்காக செய்யப்படும் முத்திரை இது.
     
    தரையில் அமர்ந்தோ, நாற்காலியில் கால்கள் தரையில் படும்படி அமர்ந்தோ, இந்த முத்திரையைச் செய்யலாம். அமரும்போது முதுகுத்தண்டு, கழுத்து நேராக நிமிர்த்தி வைத்து, 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம். காலை, மாலை இருவேளைகளும் குளிக்கும் முன்பு செய்வது மிகுந்த பலனை அளிக்கும்.
     
    ஆஸ்துமா நோயாளிகள், அதிகமாக சளித் தொந்தரவு இருப்பவர்கள் இந்த முத்திரையைச் செய்யக் கூடாது. முத்திரையைச் செய்த பிறகு, அதிகமாக சளி பிடிக்கத் தொடங்கினால், நீர் முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
     
    பலன்கள்:
     
    உடல் வெப்பம், எரிச்சல், சரும வறட்சி, சுவாசிக்கையில் வரும் உஷ்ண மூச்சுக் காற்று சரியாகும். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் வெயில் காலத்தில் குறைந்தது  அரை மணி நேரம் இந்த முத்திரையைச் செய்யலாம்.

    உடல் உறுப்புகள் வயிறு, கல்லீரல், பித்தப்பை சக்தி பெற்று நன்றாக வேலை செய்கிறது. நரம்புகள் வலுவடைந்து நரம்பு தளர்ச்சி நீங்குகிறது. குமட்டல் மற்றும் வாந்தியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
    செய்முறை :

    வலது கையின் ஆள்காட்டி விரல், மற்றும் நடு விரலின் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக்கொள்ளவேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக வைத்துக்கொள்ளவேண்டும்.

    இடது கையின் நடு விரல், மற்றும் மோதிர விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக்கொள்ளவேண்டும். மற்ற ஆள்காட்டி விரலும் சிறுவிரலும் நேராக வைத்துக்கொள்ளவேண்டும்.

    இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம். சில நிமிடங்கள் செய்தாலே இது நல்ல பலனை கொடுக்கும். உணவு சாப்பிட்டபின் இந்த முத்திரை பயிற்சி செய்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

    இந்த முத்திரை பயிற்சியால் நிலம் காற்று ஆகாயம் பஞ்சபூத சக்திகள் நமது உடலுக்கு அதிகம் கிடைக்கிறது. அதாவது ஒரு கையால் சக்தி பெறப்பட்டு மற்றொரு கையால் சக்தி உடலுக்கு கொடுக்கப்படுகிறது.

    பயன்கள் :

    உடல் உறுப்புகள் வயிறு, கல்லீரல், பித்தப்பை சக்தி பெற்று நன்றாக வேலை செய்கிறது. நரம்புகள் வலுவடைந்து நரம்பு தளர்ச்சி நீங்குகிறது. குமட்டல் மற்றும் வாந்தியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

    உடலில் வாயுக்கோளாறுகளை நீக்குகிறது. வயிறு மற்றும் குடல்கள் சக்தி பெற்று அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. சர்க்கரைநோய் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.

    இதையும் படிக்கலாம்... எந்த யோகா...என்ன பலன்?
    தினமும் மூச்சுப்பயிற்சி, தியானம், பிராமரி பிராணாயாமம் தவிர மற்ற யோகா பயிற்சிகளை செய்து வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    மூச்சுப்பயிற்சி, தியானம், பிராமரி பிராணாயாமம் தவிர மற்ற யோகா பயிற்சிகள் எடுத்துக்கொள்வதால் என்ன பயன் என்று பார்ப்போம்...

    * தாடாசனம் - உயர் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

    * த்ரியக்க தாடாசனம், கட்டி சக்ராசனம் - இ்ந்த இரண்டும் நம் நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிக்க செய்யும்.

    * உட்கட்டாசனம் - நாற்காலி போன்ற இந்த ஆசனம் நம் தசைகளை வலிமைப்படுத்தி நம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

    * நாடி சோதனா பிராணயாமம் (அ) நாடி சுத்தி பிராணாயாமம் - நம் நாடிகளை சுத்திகரித்து செல்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல உதவுகிறது நம் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
    நடைப்பயிற்சியை விட ஓட்டப்பயிற்சி கூடுதல் கலோரிகளை எரிக்க உதவும். அதற்கேற்ப அதிக முயற்சியும், உடல் இயக்கமும் தேவைப்படும்.
    நடைப்பயிற்சி சிறந்ததா? ஓட்டப்பயிற்சி சிறந்ததா? என்ற விவாதம் நீண்டகாலமாக நடந்து கொண்டிருக்கிறது. இரண்டில் கிடைக்கும் நன்மைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒருவரது உடல்திறனை பொறுத்து கிடைக்கும் நன்மைகள் மாறுபடும். நடைப்பயிற்சியை விட ஓட்டப்பயிற்சி கூடுதல் கலோரிகளை எரிக்க உதவும். அதற்கேற்ப அதிக முயற்சியும், உடல் இயக்கமும் தேவைப்படும்.

    * நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி இரண்டுமே தசை வலிமை, உடல் ஆற்றல் திறன், ஸ்டெமினா போன்றவற்றை அளிக்கக்கூடியது. நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட தூண்டும். குறிப்பாக ஓடுவதன் மூலம் திசுகளுக்கு தேவையான ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் சீராக கிடைக்கும். இதயம், நுரையீரல் செயல்பாடு மேம்படும். உடலுக்கு அதிக ஆற்றலையும் வழங்கும். அப்படி உடலின் ஆற்றலை அதிகரிப்பதன் மூலம் சுறுசுறுப்பாக செயல்படவும், வேலைகளை விரைவாக முடிக்கவும் முடியும்.

    * நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி இரண்டுமே உடல் எடையை குறைப்பதற்கு உதவுகின்றன. பி.எம்.ஐ. அளவை விட உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கவும் உதவி புரிகின்றன. கலோரிகளை எரிக்கவும் துணை புரிகின்றன.

    * இருவகை பயிற்சிகளுமே மனநிலையை விரைவாக மேம்படு்த்த உதவும். மன நலன் பலவீனமாக இருப்பதாக உணரும்போதெல்லாம் சிறிது தூரம் ஓடிவிட்டுவரலாம். அது மூளைக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். உடல் நெகிழ்வாக இருக்கும்போதும், ஓய்வாக இருக்கும்போதும் மகிழ்ச்சியை உணர வைப்பதற்காக மூளை பல ரசாயனங்களை உருவாக்கும். உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடும்போதெல்லாம் மூளை எண்டோர்பின் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. தினமும் நடைப்பயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ மேற்கொண்டால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    * ஆக்சிஜனேற்ற அழுத்தம் காரணமாக சரும செல்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. உண்ணும் உணவுகள், உட்கொள்ளும் மருந்துகள் காரணமாகவும் உள்கட்டமைப்புகளில் உள்ள செல்கள் சேதமடைகின்றன. ஓடுவது, நடப்பது இவை இரண்டுமே இயற்கையாகவே ஆன்டி ஆக்சிடென்டுகளை உற்பத்தி செய்கின்றன. அவை செல்களை பாதுகாக்கவும், சருமத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

    * ஓடுவதும், நடப்பதும் இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கக்கூடியவை. ஓடுவதால் உடலில் அதிக கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படும். நீரிழிவு நோய் ஏற்படும் அபாயமும் குறையும். உடல்ரீதியான நடவடிக்கைகள் இதய நோய் அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன. ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து நடப்பது கூட இதயத்திற்கு நல்லது. ரத்த அழுத்தம், கொழுப்பை நிர்வகிக்கவும் நடைப்பயிற்சி உதவுகிறது.

    * நடப்பதை விட ஓடும்போது எதிர்பாராதவிதமாக காயங்கள் ஏற்படக்கூடும். எலும்பு முறிவு பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடும். சீராக வேகத்தில் ஓடி பயிற்சி பெறுவதுதான் கால்களுக்கு நல்லது. திடீரென்று ஓடும் வேகத்தை அதிகரிக்கக்கூடாது. கால்கள், எலும்புகளுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக பிரச்சினைகள் உருவாகலாம்.

    * உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஓட்டப்பயிற்சியை மேற்கொள்ளலாம். நடைப்பயிற்சியுடன் ஒப்பிடுகையில் அதிக கலோரிகளை எரிக்க உதவும். நடுத்தர வயது கொண்டவர்கள், வயதானவர்கள் நடைப்பயிற்சியை தேர்வு செய்வதே சிறப்பானது. முதுமை ஓட்டப்பயிற்சிக்கு ஒத்துழைக்காது.
    இரண்டு பக்க மூளையும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால் மட்டுமே, ஒரு காரியத்தை அறிவுப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் செய்ய முடியும். இதற்கு, ஆக்கினை முத்திரை உதவுகிறது.
    சில பிரபலங்கள், இரண்டு கை விரல்களின் முனையையும் ஒன்றோடு ஒன்று தொட்டபடி வைத்து, உரையாடுவதைப் பார்த்திருக்கலாம். இதுவும் முத்திரைப் பயிற்சிதான். இதற்கு, ஆக்கினை முத்திரை என்று பெயர். மனித மூளையின் இடது பக்கம் கணக்கு, சீர்தூக்கிப் பார்த்தல், தர்க்கப்பூர்வமாகச் சிந்தித்தல், கற்றல் உள்ளிட்ட செயல்பாடுகளையும்,

    வலதுபக்க மூளையானது, உள்ளுணர்வு, கற்பனை, கலைநயம், இசை, காட்சிகள் வாயிலாகச் சிந்தித்தல், மனிதநேயம், அன்பு போன்ற உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும். இந்த, இரண்டு பக்க மூளையும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால் மட்டுமே, ஒரு காரியத்தை அறிவுப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் செய்ய முடியும். இதற்கு, ஆக்கினை முத்திரை உதவுகிறது.

    செய்முறை

    நாற்காலியிலோ விரிப்பிலோ அமர்ந்த நிலையில், வலது கை விரல்களின் நுனிகளை இடது கை விரல்களின் நுனிகளுடன் தொட்டுக்கொண்டு இருக்கும்படி வைக்க வேண்டும். நடுவில் கூடு போன்ற பகுதி இருக்கும். இதை, ஒருநாளைக்கு மூன்று முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

    பலன்கள்

    மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. ஞாபகமறதியைப் போக்கப் பயன்படும். மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் பயன்படுத்தலாம்.

    இரண்டு பக்க மூளைக்கும் உள்ள சக்தி ஓட்டம், பரிமாற்றம் சீராகிறது. அதனால், சிந்தனை வளம் அதிகமாகிறது. குழந்தைகள் படிப்பில் மட்டும் அல்லாது விளையாட்டு உட்பட மற்ற எக்ஸ்ட்ராகரிக்குலர் ஆக்டிவிட்டிஸிலும் வெற்றி பெறுவர்.

    அதிகமாக மூளைக்கு வேலை தருபவர்கள், பன்முகச் செயல்பாடுகள் (Multitasking) செய்பவர்கள் அவசியம் செய்ய வேண்டிய முத்திரை

    கண் பார்வை, காது கேட்கும் திறன், மூக்கால் நுகரும் திறன், சுவையறிதல், தொடு உணர்வு ஆகிய ஐம்புலன்களின் செயல்பாடுகளும் கூர்மையாகின்றன.
    கண்கள் என்பது ஐம்புலன்களில் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு மேலும் கண்களை மூடுவதன் காரணமாக நாம் தியானத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு பெரிதும் உதவி புரியும்.
    தியானம் எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் கண்களை மூடிக் கொண்டு செய்ய வேண்டும்.

    வேடிக்கையாக சொல்லவில்லை உண்மையாகவே ஆரம்பத்தில் தியானம் பழகுபவர்கள் கண்களை மூடிக்கொண்டு செய்ய வேண்டும் ஏன் என்றால், நமது ஐம்புலன்கள் இயல்பாகவே வெளிமுகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன அவற்றை நாம் உள் முகமாக திருப்ப வேண்டும்.

    கண்கள் என்பது ஐம்புலன்களில் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு மேலும் கண்களை மூடுவதன் காரணமாக நாம் தியானத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு பெரிதும் உதவி புரியும்.

    1. சம்மாணமிட்டு (அட்டணைக்காலிட்டு) உட்காரவும். ஒரு கால் மற்றதன் முன்னாலும், ஒன்றன் மேல் ஒன்றாக இல்லாமலும் இருக்க வேண்டும். இந்த நிலை அசௌகரிகமாக இருக்குமானால் அடி வயிற்றைக் கவனிக்க எது வசதியான நிலையோ அப்படி அமர்ந்து கொள்ளலாம்.

    2. அமர்ந்திருக்கும்போது ஒரு கை மற்றதன் மேல் உள்ளங்கை மேற்புறமாக இருக்குமாறு மடியின் மீது வைத்திருக்க வேண்டும்.

    3. முதுகை நேராக வைத்திருக்கவும். அசௌகரியமாக இருந்தால் முதுகு மிகவும் நேராக இருக்க வேண்டிய அவசியமில்லை; அடிவயிற்றின் அசைவு தெளிவாகத் தெரியும் எந்த உடல் நிலையிலும் இருக்கலாம்.

    4. கண்களை மூடிக் கொள்ளுங்கள். நமது கவனம் வயிற்றின் மீது பதிந்திருப்பதால் கண்கள் திறந்திருந்தால் கவனம் திசை திருப்பப்பட்டு விடக் கூடும்.

    5. மனக்கவனத்தை அடிவயிற்றில் பதிய வையுங்கள்; அடிவயிறு உயரும் போது இந்தத் தெளிவான எண்ணத்துக்கு இடம் கொடுங்கள்; மனதில் அமைதியாக, "உயர்கிறது" என்றும் அடிவயிறு தாழும் போது "தாழ்கிறது" என்றும் கூறிக் கொள்ளுங்கள். இந்தப் பயிற்சியை மனம் திசை திருப்பப்படும் வரை தொடர்ந்து செய்து கொண்டிருங்கள்.

    இந்தத் தெளிவான, "உயர்கிறது" அல்லது "தாழ்கிறது" என்ற எண்ணம் அடிவயிற்றில் கவனம் செலுத்தும்போது மனதில் இருக்க வேண்டியது மிக முக்கியம். அடிவயிற்றோடு பேசுவது போலத் தோன்ற வேண்டும். முடிந்தால் இந்தப் பயிற்சியை ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்குத் தொடரலாம்.
    உடலில் தேங்கியுள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி நாள்பட்ட நோய்கள் அகலும். மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை போக்கி நேர்மறை எண்ணங்களை வளர்க்கும்.
    தூய்மைப்படுத்தும் முத்திரையைச் செய்யும் பொழுது உடலில் உள்ள நச்சுகள் சிறுநீர், மலம் அல்லது வியர்வை மூலமாக வெளியேறும்.

    முத்திரைப் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் செய்ய வேண்டிய முதல் முத்திரை தூய்மைப்படுத்தும் முத்திரையாகும். இம்முத்திரையை ஒரு வாரத்திலிருந்து 10 நாட்கள் வரை தினமும் 15 முதல் 45 நிமிடங்களுக்கு பழகி வர வேண்டும். ஒரு வேளைக்கு 15 நிமிடமாக ஒரு நாளில் மூன்று வேளையாகவும் தூய்மைப்படுத்தும் முத்திரையைப் பழகலாம். உடலிலிருக்கும் நச்சுகளை இம்முத்திரையின் மூலம் அகற்றிய பின் பிற முத்திரைகளைத் தேவைக்கேற்பப் பழகலாம்.

    தூய்மைப்படுத்தும் முத்திரையைச் செய்வது எப்படி?

    முதுகும் கழுத்தும் நேராக இருக்குமாறு அமரவும்.
    கை விரல்களை விரிக்கவும்.
    கையின் பெருவிரல் நுனியை மோதிர விரலின் அடிப்பகுதியில் இருக்கும் கோட்டின் மீது வைக்கவும்.
    மிக லேசான அழுத்தம் தரவும்.
    கண்களை மூடிக் கொள்ளவும். மனதை முத்திரை மீது வைக்கவும்.
    சீரான சுவாசத்தில் இருக்கவும்.

    தூய்மைப்படுத்தும் முத்திரையைச் செய்யும் பொழுது உடலில் உள்ள நச்சுகள் சிறுநீர், மலம் அல்லது வியர்வை மூலமாக வெளியேறும். இதற்கான அறிகுறிகளாக அதிக சிறுநீர் போதல், சிறுநீரின் நிறம் மாறுதல், அதிக மலம் போதல், மலத்தின் தன்மை மற்றும் நிறம் மாறுதல், அதிக வியர்வை வெளியேறுதல் போன்றவை ஏற்படும். சில நாட்களில் இவ்வறிகுறிகள் மறைந்து உடல் நலம் மேம்படுவதை உணர்வீர்கள்.

    தூய்மைப்படுத்தும் முத்திரையின் பலன்கள்

    உடலில் தேங்கியுள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி நாள்பட்ட நோய்கள் அகலும். மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை போக்கி நேர்மறை எண்ணங்களை வளர்க்கும்.


    மூட்டு வலி, முடக்கு வாதம் உள்ளவர்கள் இதில் கொடுத்துள்ள முத்திரைகளை மட்டும் பயிலுங்கள். தினமும் மூன்று வேளை சாப்பிடும் முன் பயிலுங்கள். நல்ல முன்னேற்றம் நிச்சயம் கிடைக்கும்.
    இன்று நிறைய மனிதர்களுக்கு முடக்கு வாதம் ஏற்படுகின்றது. அதனால் ஒரு பக்க கை, கால்கள் செயலிழப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல், தங்களது அன்றாட கடமைகளை மற்றொருவர் உதவியால் செய்யும் நிலை ஏற்படுகின்றது. அதேபோல் மூட்டு வலி, மூட்டு வீக்கத்தாலும் நிறைய மனிதர்கள் நடக்க முடியாமல், மாடி ஏற முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு யோகா சிகிச்சையாக நாம் பார்க்கவுள்ளோம். இதனை அனைவரும் பயிலுங்கள். இது முடக்கு வாதம், மூட்டு வலி வராமல் நம்மை காக்கும் கவசமாக அமையும். மூட்டு வலி, முடக்கு வாதம் உள்ளவர்கள் இதில் கொடுத்துள்ள முத்திரைகளை மட்டும் பயிலுங்கள். தினமும் மூன்று வேளை சாப்பிடும் முன் பயிலுங்கள். நல்ல முன்னேற்றம் நிச்சயம் கிடைக்கும்.

    மனித உடல்

    மனித உடல் பல மில்லியன் செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்களிலும் பஞ்ச பூத தன்மைகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் உள்ளது. இவை அனைத்தையும் கை விரல் நுனிகள் கட்டுப்படுத்துகின்றன. பெருவிரல் - நெருப்பு, ஆள்காட்டி விரல் -காற்று, நடு விரல் - ஆகாயம், மோதிர விரல் - நிலம், சுண்டு விரல் - நீர்.

    முத்திரை என்பது கை விரல் நுனிகளில் ஒரு சிறிய அழுத்தம் கொடுத்தல். கை விரல் நுனி என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் விரல் நுனியல்ல, இது ஒவ்வொரு பூத மூலகமாகும். இதன் மூலம் நமது உடலில் பஞ்சபூதத்தில் ஏற்பட்ட மாற்றங்களை சரி செய்யலாம். அந்த வகையில் நாம் வாதம், முடக்கு வாதம், மூட்டு வலி வராமல் பாதுகாக்கும் முத்திரை சிகிச்சையாக பார்க்கவுள்ளோம்.

    வாயு முத்திரை செய்முறை

    தரையில் விரிப்பு விரித்து நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து கொள்ளலாம். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை முப்பது வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். கண்களை திறந்து ஆள்காட்டி விரலை உள்ளங்கைக்குள் மடித்து அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். படத்தை பார்க்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.

    அபான முத்திரை செய்முறை

    நிமிர்ந்து அமரவும், முதுகெலும்பு நேராகஇருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை முப்பது வினாடிகள் கவனிக்கவும். இப்பொழுது கண்களை திறந்து மோதிரவிரல், நடுவிரலை மடக்கி அதன் நுனிபகுதியை கட்டை விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

    அபான வாயு முத்திரை செய்முறை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை முப்பது வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் கண்களை திறக்கவும். முதலில் இருக்கைகளிலும் நடு விரல், மோதிர விரல் மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். உடன் ஆள்காட்டி விரலை மடக்கி கட்டை விரலின் அடியில் வைக்கவும். சுண்டுவிரல் மட்டும் தரையை பார்த்து இருக்கவேண்டும். இது அபான வாயு முத்திரையாகும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

    மூன்று முத்திரைகளின் பலன்கள்

    கை விரல்களில் உள்ள பிராண ஆற்றலை இருதயத்திற்கு கொண்டு செல்கிறது. அதனால் இதயம் புத்துணர்வு பெறுகின்றது. இருதயத்தை வலுப்படுத்துவதால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் பிராண ஆற்றலை பெற்று சிறப்பாக செயல்படுகிறது.

    உடலில் தச வாயுக்கள் என்றழைக்கப்படும் பத்து விதமான வாயுவும் நன்றாக இயங்கும். அதனால் வாயு சம்பந்தமான வாதம், முடக்கு வாதம், மூக்கடைப்பு, மூட்டுவலி வராமல் தடுக்கப்படுகின்றது. மூட்டு சவ்வுகளில் ஈரப்பதம் சரியான அளவில் இருக்கச் செய்கின்றது.

    வலது மூளை, இடது மூளைக்கு ரத்த ஓட்டம் நன்றாக பாய்கின்றது. அதனால் வலது பக்க உறுப்புக்கள், இடப்பக்க உறுப்புக்கள் நல்ல பிராண ஆற்றலை பெற்று சிறப்பாக இயங்குகிறது.

    மலச்சிக்கல் வராமல் வாழலாம். அதனால் வாயுத் தொந்தரவு, வாதம் மூட்டு வலி வராமல் வாழலாம்.

    இந்த மூன்று முத்திரைகள் செய்தவுடன் கோமுகாசனம் செய்யுங்கள்.

    விரிப்பின் மீது கால்களை நீட்டி அமரவும். வலது காலை மடித்து பாதத்தை இடது தொடையின் கீழ் வைக்கவும்.

    இடது காலை மடித்து வலது தொடை மீது வைத்து வலது பாதத்தை இடது தொடையின் பக்கத்தில் தரை மீது படியும்படி வைக்கவும். நிமிர்ந்து அமர்ந்து இடது கையை தலைக்கு மேல் உயர்த்தி மடித்து கையை முதுகுக்கு பின் புறம் கொண்டு வந்து முதுகை தொடவும். வலது கையை சாதாரணமாக பின்புறம் கொண்டு வந்து இடது கை விரல்களை பிடிக்கவும். சாதாரண மூச்சில் பத்து முதல் இருபது வினாடிகள் இருக்கவும்.

    கால்களை மாற்றி ஒரு முறை செய்யவும். எந்த கால் முட்டியின் மீது உள்ளதோ அந்த கையை தலைக்குமேல் உயர்த்தி மடித்து செய்யவும். உடல் பருத்தல், ஆர்த்ரைடிஸ் இரண்டுமே நமது உடலில் ஏற்படும் கழிவு பொருட்களின் சேர்க்கையால் ஏற்படுவதாகும்.

     வயிற்றில் ஏற்படும் மிகப் பொதுவான பிரச்சினை வாயுத் தொல்லையாகும். வயிற்றில் அளவுக்கதிகமான அமிலம் சுரந்து அஜீரணத்தை ஏற்படுத்துகின்றது. இத்துடன் அனேகமாக மலச்சிக்கலும் சேரும்பொழுது உடலில் உள்ள எல்லாத் திசுக்களிலும் அமில சுரப்பு அதிகமாகி, அதனால் மிகையான யூரிக் அமிலம் நம் உடலில் சேரும். இதுவே வாயுத் தொல்லை, மூட்டு வாதம் என்றழைக்கப்படுகின்றது.

    இதற்கு மேற்கூறிய முத்திரைகளும் கோமுகாசனமும் மிகுந்த பலனைத்தருகின்றது. நமது உடலில் மலச்சிக்கல் வராமல் சரி செய்கின்றது. வாயுவை சமப்படுத்துகின்றது. ஜீரண மண்டலத்தை நன்கு இயங்கச் செய்கின்றது. அதனால் வாயுப் பிரச்சினைகள் வாதப்பிரச்சினைகள் நீங்கி வாழலாம்.

    உணவு

    இன்றைய நவீன உலகில் நாக்கு ருசிக்காக மசாலா பொருட்கள், மைதாவினால் ஆன உணவுகள் நிறைய வந்துள்ளது. குறிப்பாக மைதாவினால் செய்த புரோட்டா உண்பதால் அஜீரண கோளாறு, மலச்சிக்கல், ஏற்படுகின்றது. இதனை தவிர்க்கவும். நாம் எடுக்கும் ஒவ்வொரு உணவும், ஆரோக்கியத்தை நோக்கியிருக்க வேண்டும். ருசிக்காக உண்டு பின் வாயு பிரச்சினை, ஜீரண பிரச்சினை வரக் கூடாது. முடிந்த வரை பழ வகைகள், கீரை வகைகள், உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

    கொய்யா பழம், ஆரஞ்சு பழம், மாதுளை பழம், கருப்பு திராட்சை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். முடக்கத்தான் கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை கொத்தமல்லி, புதினா உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.

    இரவு சாப்பாடு 8 மணிக்குள் மிதமான உணவாக எடுத்துக்கொள்ளுங்கள். அரை வயிறு இரவு சாப்பாடு போதும். இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஆழ்ந்த உறக்கம் வேண்டும். அதிகமாக டீ, காபி பருகாதீர்கள். அதற்கு பதிலாக சுக்குமல்லி, கருப்பட்டி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பால் சேர்க்காமல் பருகுங்கள். தயிர் வேண்டாம். மோராக கடைந்து நீர் ஊற்றி பருகுங்கள்.

    சுரைக்காய், பூசணிக்காய், கோவக்காய், கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், பாகற்காய், புடலங்காய், அவரை, முட்டைகோஸ் உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள்.

    முருங்கை கீரை, அகத்திக்கீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். பசிக்கும் பொழுது பசியறிந்து சாப்பிடுங்கள். முத்திரை, ஆசனம், உணவு முறை மூலம் மூட்டு வாதத்திற்கும், முடக்கு வாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம்.

    யோகக் கலைமாமணி
    பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    6369940440

    பிராணாயாமம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலை பரிசுத்தமாக்கி வைத்திருப்பதால் உடல் பொலிவுடன் இருக்கும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்
    மூச்சை உள் இழுக்கும் போதும், வெளியே விடும் போதும் கவனத்தை மூச்சுப்பயிற்சியில் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பது மட்டும் தான் இந்த பயிற்சியின் அடிப்படை. தினமும் தொடர்ந்து செய்யும் போது ஒரே மாதத்தில் உடல் ஒழுங்கு நிலைக்கு வந்திருக்கும்.

    எதிலும் அவசரம் அவசரம் என்று ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் எல்லாவற்றையும் குறிப்பாக சிக்கலான சூழலையும் பதட்டமில்லாமல் கையாள்வார்கள். நுரையீரலுக்கு காற்று தடையின்றி செல்வதால் சைனஸ், ஆஸ்துமா பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் நிவாரணம் அடைவார்கள்.

    நீரிழிவு, மலச்சிக்கல், இரத்த அழுத்தம் பிரச்சனைகளை வராமல் காப்பதிலும், வந்தவர்கள் செய்யும் போது கட்டுப்படுத்துவதிலும் இந்த பிராணாயாம பயிற்சி உறுதுணையாக இருக்கும். உற்சாகம் குறைந்திருக்கும் போது எந்த நேரமாக இருந்தாலும் சோர்வை உடனே விரட்டியடிக்க மூச்சை மெதுவாக உள்ளிழுத்து நிறுத்தி பொறுமையாக வெளிவிடுங்கள். ஐந்துநிமிடங்களில் உற்சாகமாய் உணர்வீர்கள்.

    உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சியைக் காட்டிலும் சிறந்தது யோகா என்கிறார்கள் நிபுணர்கள். உடல் தசைகளை அடக்கி ஆள யோகா துணைபுரிகிறது, உடலை வருத்தும் உடற்பயிற்சிகளுக்கு முன்னால் எளிமையான மூச்சுப்பயிற்சியால் செய்யும் இந்த பிராணாயாம பயிற்சி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உங்களை எப்போதும் ஃபிட்டாக வைத்திருக்கும்.

    உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலை பரிசுத்தமாக்கி வைத்திருப்பதால் உடல் பொலிவுடன் இருக்கும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். செரிமானம் எளிதாகும். உணவின் தேவை கூடினாலும் உடல் எடை கட்டுக்கோப்புடன் இருப்பதை உறுதி செய்கிறது மூச்சுப்பயிற்சி என்னும் பிராணாயாமம்.

    அனுபவமிக்க பயிற்சியாளரின் ஆலோசனையோடு மூச்சு பயிற்சியைத் தொடங்குங்கள். ஆயுளுக்கும் கட்டுக்கோப்பாய் அழகாய் ஜொலிப்பீர்கள்.

    மூச்சை உள் இழுக்கும் போதும், வெளியே விடும் போதும் கவனத்தை மூச்சுப்பயிற்சியில் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பது மட்டும் தான் இந்த பயிற்சியின் அடிப்படை
    இப்போது பிராணயாமம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    பத்மாசனத்தில் அமர்ந்த பின்பு உங்கள் கவனம் முழுக்க முழுக்க உங்களது மூச்சுக்காற்று மீது மட்டுமே இருக்க வேண்டும். மூச்சுபயிற்சி பல்வேறு நிலைகளிலும் செய்யப்படுகிறது.

    இடது மூக்கு துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து இடது மூக்குதுவாரத்தின் வழியாக வெளிவிடுவது இட கலை என்று சொல்வார்கள். வலது துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வலது மூக்கு துவாரத்தின் வழியே வெளியிடுவது பிங்கலை என்று சொல்வார்கள்.

    இடது மூக்குத்துவாரத்தின் வழியாக மூச்சை உள்ளிழுத்து வலது மூக்குத்துவாரத்தின் வழியாக வெளியிடுவ தும், வலது மூக்குத் துவாரத்தின் வழியாக மூச்சை உள்ளிழுத்து இடது மூக்குதுவாரத்தின் வழியாக வெளியிடு வதும் எளிய மூச்சு பயிற்சி என்று சொல்லலாம். இப்படி உள் இழுக்கும் போதும் வெளிவிடும்போது மற்ற துவாரத்தை மூடிகொள்ள வேண்டும். ஒரு துவாரம் வழியாக மட்டுமே மூச்சு விடுதலும், மூச்சு உள்ளிழுத்தலும் நடக்க வேண்டும்.

    சுவாசத்தை உள்ளே மெதுவாக இழுப்பதை பூரகம் என்று சொல்வார்கள். உள்ளே இழுத்த காற்றை வெளியில் பொறுமையாக விடுவது ரேசகம் என்று சொல்வார்கள்.சுவாசத்தை நிறுத்தி வைப்பதை கும்பகம் என்றும் சொல்வார்கள். இதில் பிராண என்பது அதிமுக்கிய் ஆற்றல் திறன் என்றும், அயாமா என்றால் கட்டுப்பாடு என்றும் பொருளாகும்.

    உடலையும் உள்ளத்தையும் திடமாக வைத்துக் கொள்ளும் ஆரோக்கியமான பயிற்சி என்று பிராணாயாமம் பயிற்சியை சொல்லலாம். இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் சிறந்த மூச்சுப்பயிற்சி என்றும் சொல்லலாம்.
    பொதுவாக காலை வேளையில் சுத்தமான ஆக்ஸிஜனை சுமந்துவரும் காற்றை ரசித்தப்படி உலாவருவருவது போல் அமைதியான இடத்தில் அமர்ந்து சுவாசித்து செய்யும் பயிற்சி உடலோடு மனதுக்கும் அலாதி சுகத்தைத் தரும். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த பிராணாயாமம் செய்யலாம்.

    அன்றாடம் நொடிப்போதும் விடாமல் மூச்சு விட்டு கொண்டிருந்தாலும் இந்த மூச்சு விடுதலையே ஒரு பயிற்சியாக்கி அதைச் செய்ய குறிப்பிட்ட நேரம் ஒதுக்குவது அவசியமாகும். இவையும் உடற்பயிற்சியைச் சேர்ந்த ஒன்றே.

    உடலையும் உள்ளத்தையும் திடமாக வைத்துக் கொள்ளும் ஆரோக்கியமான பயிற்சி என்று பிராணாயாமம் பயிற்சியை சொல்லலாம். இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் சிறந்த மூச்சுப்பயிற்சி என்றும் சொல்லலாம்.

    அதிகாலை வேளையில் செய்யும் பிராணாயாமம் பயிற்சியின் போது வெறும் வயிற்றில் செய்யாமல் குளிர்ந்த நீரை ஒரு தம்ளர் குடித்து பிறகு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    தூய்மையான காற்றோட்டமுள்ள இடத்தில் (புல்தரை, திறந்த வெளி மைதானம் போன்ற இடங்கள் இருந்தால் இன்னும் சிறப்பு.) விரிப்பை போட்டு அதன் மீது பத்மாசனத்தில் அமர வேண்டும்.

    பிராணாயாமம் செய்யும் இடம் தூய்மையானதாக வசதியாக இருக்க வேண்டும். பயிற்சி செய்வதற்கு முன்பு நிமிர்ந்து உறுதியாக உட்கார்ந்துகொள்ள வேண்டும். பயிற்சி செய்பவர் உடலை வளைக்காமல் முதுகெலும்பு நேராக நிமிர்ந்திருக்கும்படி இருக்க வேண்டும். பேச்சு சத்தம் இல்லாத அமைதியான தனிமையான இடம் சிறந் ததாக இருக்கும்.


    ×