search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இளைஞர்கள் ஓடலாம்.. முதியவர்கள் நடக்கலாம்..
    X
    இளைஞர்கள் ஓடலாம்.. முதியவர்கள் நடக்கலாம்..

    இளைஞர்கள் ஓடலாம்.. முதியவர்கள் நடக்கலாம்..

    நடைப்பயிற்சியை விட ஓட்டப்பயிற்சி கூடுதல் கலோரிகளை எரிக்க உதவும். அதற்கேற்ப அதிக முயற்சியும், உடல் இயக்கமும் தேவைப்படும்.
    நடைப்பயிற்சி சிறந்ததா? ஓட்டப்பயிற்சி சிறந்ததா? என்ற விவாதம் நீண்டகாலமாக நடந்து கொண்டிருக்கிறது. இரண்டில் கிடைக்கும் நன்மைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒருவரது உடல்திறனை பொறுத்து கிடைக்கும் நன்மைகள் மாறுபடும். நடைப்பயிற்சியை விட ஓட்டப்பயிற்சி கூடுதல் கலோரிகளை எரிக்க உதவும். அதற்கேற்ப அதிக முயற்சியும், உடல் இயக்கமும் தேவைப்படும்.

    * நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி இரண்டுமே தசை வலிமை, உடல் ஆற்றல் திறன், ஸ்டெமினா போன்றவற்றை அளிக்கக்கூடியது. நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட தூண்டும். குறிப்பாக ஓடுவதன் மூலம் திசுகளுக்கு தேவையான ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் சீராக கிடைக்கும். இதயம், நுரையீரல் செயல்பாடு மேம்படும். உடலுக்கு அதிக ஆற்றலையும் வழங்கும். அப்படி உடலின் ஆற்றலை அதிகரிப்பதன் மூலம் சுறுசுறுப்பாக செயல்படவும், வேலைகளை விரைவாக முடிக்கவும் முடியும்.

    * நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி இரண்டுமே உடல் எடையை குறைப்பதற்கு உதவுகின்றன. பி.எம்.ஐ. அளவை விட உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கவும் உதவி புரிகின்றன. கலோரிகளை எரிக்கவும் துணை புரிகின்றன.

    * இருவகை பயிற்சிகளுமே மனநிலையை விரைவாக மேம்படு்த்த உதவும். மன நலன் பலவீனமாக இருப்பதாக உணரும்போதெல்லாம் சிறிது தூரம் ஓடிவிட்டுவரலாம். அது மூளைக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். உடல் நெகிழ்வாக இருக்கும்போதும், ஓய்வாக இருக்கும்போதும் மகிழ்ச்சியை உணர வைப்பதற்காக மூளை பல ரசாயனங்களை உருவாக்கும். உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடும்போதெல்லாம் மூளை எண்டோர்பின் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. தினமும் நடைப்பயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ மேற்கொண்டால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    * ஆக்சிஜனேற்ற அழுத்தம் காரணமாக சரும செல்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. உண்ணும் உணவுகள், உட்கொள்ளும் மருந்துகள் காரணமாகவும் உள்கட்டமைப்புகளில் உள்ள செல்கள் சேதமடைகின்றன. ஓடுவது, நடப்பது இவை இரண்டுமே இயற்கையாகவே ஆன்டி ஆக்சிடென்டுகளை உற்பத்தி செய்கின்றன. அவை செல்களை பாதுகாக்கவும், சருமத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

    * ஓடுவதும், நடப்பதும் இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கக்கூடியவை. ஓடுவதால் உடலில் அதிக கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படும். நீரிழிவு நோய் ஏற்படும் அபாயமும் குறையும். உடல்ரீதியான நடவடிக்கைகள் இதய நோய் அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன. ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து நடப்பது கூட இதயத்திற்கு நல்லது. ரத்த அழுத்தம், கொழுப்பை நிர்வகிக்கவும் நடைப்பயிற்சி உதவுகிறது.

    * நடப்பதை விட ஓடும்போது எதிர்பாராதவிதமாக காயங்கள் ஏற்படக்கூடும். எலும்பு முறிவு பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடும். சீராக வேகத்தில் ஓடி பயிற்சி பெறுவதுதான் கால்களுக்கு நல்லது. திடீரென்று ஓடும் வேகத்தை அதிகரிக்கக்கூடாது. கால்கள், எலும்புகளுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக பிரச்சினைகள் உருவாகலாம்.

    * உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஓட்டப்பயிற்சியை மேற்கொள்ளலாம். நடைப்பயிற்சியுடன் ஒப்பிடுகையில் அதிக கலோரிகளை எரிக்க உதவும். நடுத்தர வயது கொண்டவர்கள், வயதானவர்கள் நடைப்பயிற்சியை தேர்வு செய்வதே சிறப்பானது. முதுமை ஓட்டப்பயிற்சிக்கு ஒத்துழைக்காது.
    Next Story
    ×