என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    இந்த ஆசனம் முதுகு தண்டினை வலுப்படுத்தும். முதுகு சதையினை வீரியப்படுத்தும். இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    செய்முறை

    சமதரையில் அமர்ந்து வலதுகால் பாதத்தை உடலை நோக்கி இழுத்து வைத்துக் கொண்டு இடது பாதத்தை வலது கால் தொடை, முழங்கால் இடைச்சந்தில் உள்நுழைக்கவும்.

    கால் விரல்கள் கீழாகவும் குதிங்கால் மேலாகவும் இருக்க வேண்டும். அதேபோல் இடது காலை இழுத்து வலது கால் உள்பக்கம் வைக்க வேண்டும்.

    இரண்டு குதிக்கால்களும் இருபக்க அடித்தொடை அருகே இருக்க வேண்டும். கைகள் மூட்டுக்களின் அருகில் சின்முத்திரை நிலையில் வைக்க வேண்டும். முதுகினை நேராக வைத்து சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேவிட்டு சீராக்க வேண்டும்.

    பயன்கள்

    இடுப்பை வலுப்படுத்தும்.
    நரம்பினை வலுப்படுத்தும்.
    முதுகு தண்டினை வலுப்படுத்தும்.
    முதுகு சதையினை வீரியப்படுத்தும்.
    உடம்பிற்கோர் மருந்து நல்ல யோகாசனமும், உள்ளத்திற்கோர் மருந்து தியானத்தையும் காலை மாலை பயிலுங்கள். வளமாக, நலமாக வாழுங்கள்.

    தரையில் விரிப்பு விரித்து அதில் சுகாசனத்தில் அமரவும். கைகளை தியான முத்திரையில் வைக்கவும். இடது கை கீழ் அதன் மேல் வலது கை வைத்து இரண்டு பெருவிரல் ஒன்றையொன்று தொடட்டும். கைகளை மடிமேல் வைக்கவும். கண்களை மூடி மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

    பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கவனிக்கவும். பத்து நிமிடங்கள் மூச்சில் மட்டும் கவனம் செலுத்துங்கள். “ஜீவனை சிந்தையில் நினைத்து நிற்றலே தியானம்.” இந்த தியானத்தை காலை / மாலை பத்து நிமிடங்கள் செய்யவும்.

    பலன்கள்: ரத்த அழுத்தம் வராது. மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். இதயம் சிறப்பாக இயங்கும். சுறுசுறுப்பாக வாழலாம். நீரழிவு, அல்சர் வராது. உடல் உள் உறுப்புகள் அனைத்தும் சிறப்பாக பிராண ஆற்றல் பெற்று இயங்கும்.

    சற்குரு சீரோ பிக்ஷு அருளிய உடம்பிற்கோர் மருந்து நல்ல யோகாசனமும், உள்ளத்திற்கோர் மருந்து தியானத்தையும் காலை மாலை பயிலுங்கள். வளமாக, நலமாக வாழுங்கள்.

    மாலை மலர் வாசகர்கள் தங்களின் உடல், மனோ ரீதியான குறைபாடுகள், மற்றும் யோகா குறித்த சந்தேகம் இருந்தால் pathanjaliyogam@gmail.com என்ற ஈமெயிலுக்கு எழுதி அனுப்புங்கள்,

    யோகக் கலைமாமணி
    பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
    6369940440

    இந்த முத்திரையை செய்து வந்தால் சோர்வு, வியர்வை, வயிற்று கடுப்பு, தலை சுற்றல், மயக்கம், படபடப்பு, தலைபாரம், தலையில் நீர் கோர்த்தல் சரியாகும்.
    செய்முறை:

    நடு விரல், ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரல் நுனிகள் ஒன்றோடொன்று தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்க வேண்டும்.

    10 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்ய வேண்டும். காலை, மாலையில் சம்மனங்கால் இட்டு அல்லது நாற்காலியில் பாதங்கள் தரையில் படியும் படி அமர்ந்தோ செய்ய வேண்டும்.

    பலன்கள்:

    சோர்வு, வியர்வை, வெயில் சூட்டால் ஏற்படும் வயிற்று போக்கு, அதீத தூக்க உணர்வு, வயிற்று கடுப்பு, தலை சுற்றல், மயக்கம், வெயிலால் ஏற்படும் பக்கவாதம், படபடப்பு, ரத்த கொதிப்பு, தலைபாரம், தலையில் நீர் கோர்த்தல் சரியாகும்.
    இந்த முத்திரை செய்து வந்தால் தீய பழக்கங்கள் அதாவது புகை பிடித்தல், மது பழக்கம், புகையிலை உபயோகித்தல் நாளடைவில் படிப்படியாக குறைந்து அதிலிருந்து விடுபடுவார்கள்.
    செய்முறை :

    நமது பெருவிரலின் நுனி நடுவிரல் நுனியையும், மோதிர விரல் நுனி நடுவிரல் நுனியையும், சிறு விரல் நுனி  மோதிர விரல் நுனியையும் தொட்டுக்கொள்ளவேண்டும். ஆள்காட்டி விரல் வளையாமல் நேராக நீட்டிக்கொள்ளவேண்டும். படத்தில் பார்க்கவும்.

    இது இந்திரனின் கையில் உள்ள வஜ்ராயுதம் போல் காணப்படும். அதனால் இதை வஜ்ர முத்திரை என்று அழைக்கப்படுகிறது.

    இந்த முத்திரை பயிற்சியை குறைந்த பட்சம் 5 நிமிடங்களும் அதிக பட்சம் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். எந்த நேரத்திலும் செய்யலாம். செய்து முடித்த பிறகு தலையின் முன் பக்கம் பின் பக்கம், கழுத்துப்பகுதி, பிடரி, இலேசாக அழுத்தத்துடன் தடவிக்கொடுக்கவேண்டும்,.

    நன்மைகள்

    * உடல் உள் உறுப்புகளான வயிறு, மண்ணீரல், கணையம் அதிக சக்தி பெறுகிறது.
    * உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
    * இதயத்திற்கு அதிக இரத்த ஓட்டம் செலுத்தப்படுவதால் இதயத்திற்கு அதிக சக்தி கிடைக்கிறது.
    * வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
    * குறைந்த இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் இந்த முத்திரை பயிற்சி செய்தால் நோய் குணமாகும்.
    * மன அமைதி உண்டாகும்.
    * தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் குணமாகும்.
    * தீய பழக்கங்கள் அதாவது புகை பிடித்தல், மது பழக்கம், புகையிலை உபயோகித்தல் நாளடைவில் படிப்படியாக குறைந்து அதிலிருந்து விடுபடுவார்கள்.
    * இரத்த ஓட்டம் நன்றாக இருப்பதால் உடல் உறுப்புகள் செயல்பாடுகள் நன்றாக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
    * மன அழுத்தம் குறையும்.
    * அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முத்திரை பயிற்சி செய்யக்கூடாது.
    ஒவ்வொரு மனிதனும் இந்த யோகக் கலைகள் எளிமையான பஞ்சபூத முத்திரைகள், தியானம் தினமும் பயின்று 100 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
    சுகாசனத்தில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை இரு நாசி வழியாக வெளியிடவும். பத்து முறைகள் செய்யவும். பின் உங்கள் மனதை இதயத்தின் உள் பகுதியில் நிலை நிறுத்தவும். நல்ல பிராண ஆற்றல் இதயம் முழுக்க கிடைப்பதாக எண்ணவும். உங்களது உணர்வை இதயம் முழுக்க பரவச் செய்து இதயத் துடிப்பு சீராக இயங்குவதாக எண்ணுங்கள்.

    யோக சாஸ்திரப்படி இருதயம் பகுதி அனாகத சக்கரமாகும். இந்தப் பகுதியில் மனதை, மூச்சை கவனித்து தியானிக்கும் பொழுது தைமஸ் சுரப்பி நன்றாக இயங்கும். இதய வால்வுகள், இதய மேலுறை, நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும். இதய துடிப்பு சீராகும். உடல் முழுக்க ரத்த ஓட்டம், மூச்சோட்டம், வெப்ப ஓட்டம் சீராகும். மன அழுத்தம், கவலை, டென்ஷன் நீங்கும். மன அமைதி கிடைக்கும். எவ்வளவு வயதானாலும் இதயம் மிக அற்புதமாக இயங்கும். ராஜ உறுப்பான இதயம் நன்றாக இயங்க இந்த எளியமுறை தியானத்தை தினமும் காலை மாலை பத்து நிமிடங்கள் செய்யவும்.

    இந்த உடல் ஆரோக்கியத்திற்கு மனம் முக்கிய பங்கு வகிக்கிறது. மனதில் எழும் எண்ணங்களை தீர்க்கமாக ஆராய்ந்து நல்ல எண்ணங்களை மட்டும் செயல்படுத்தவும். என்னால் எதையும் சாதிக்கமுடியும். நான் அற்புத ஆத்ம சக்தி பெற்றவன். எனது ஆரோக்கியம் ஒவ்வொரு கணமும் சிறப்பாக உள்ளது. என் உடல் உறுப்புக்கள் அனைத்தும் நல்ல பிராண சக்தி பெற்று இயங்குகின்றது. இந்த எண்ணம் எப்பொழுதும் நமது மனதில் இருக்க வேண்டும்.

    வாழ்வில் ஒரு குறிக்கோள் வேண்டும். அந்த லட்சியத்தை நண்பர்கள், உறவினர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். தன்னலமில்லா தொண்டு சிறிதேனும் தினமும் செய்யுங்கள். இவ்வாறு செய்யும்பொழுது நமது உடலில் சுரப்பிகள் சரியாக சுரக்கும். நம் மனம் அமைதியுறும். உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.

    ஒவ்வொரு மனிதனும் இந்த யோகக் கலைகள் எளிமையான பஞ்சபூத முத்திரைகள், தியானம் தினமும் பயின்று 100 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

    யோகக் கலைமாமணி பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
    6369940440
    நாடி சுத்தி செய்வதால் உச்சி முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியம் இருக்கும். உடல் உள் உறுப்புக்கள் நன்கு பிராண ஆற்றல் பெற்று இயங்கும்.
    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இடது கை சின் முத்திரை - ஆள்காட்டி விரல் நுனியையும், கட்டை விரல் நுனியையும் இணைக்கவும்.

    1. வலது கை கட்டை விரலால் வலது நாசியை அடைத்து இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து, இடது நாசியிலேயே மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.

    2 . பின் வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து வலது நாசியிலேயே மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். மூச்சை வெளிவிடும் பொழுது மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.

    3.இப்பொழுது வலது நாசியை கட்டைவிரலால் அடைத்து இடது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து இடது நாசியை மோதிரவிரலால் அடைத்து வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை வெளி விடவும். இதேபோல் மீண்டும் இடதில் இழுத்து வலது நாசியில் மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

    4.இப்பொழுது இடது நாசியை மோதிர விரலால் அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து உடன் வலது நாசியை அடைத்து, இடது நாசி வழியாக மூச்சை வெளிவிடவும். இதேபோல் வலதில் இழுத்து இடதில் உடன் வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

    இப்பொழுது கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கூர்ந்து ஒரு நிமிடம் கவனிக்கவும்.

    மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை காலை ஒரு முறை, மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் சாப்பிடுமுன் ஒரு முறை பயிற்சி செய்யுங்கள். உச்சி முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியம் இருக்கும். உடல் உள் உறுப்புக்கள் நன்கு பிராண ஆற்றல் பெற்று இயங்கும். நீரிழிவு, ரத்த அழுத்தம், மன அழுத்தம், கழுத்து வலி, முதுகு வலி போன்ற எந்த நோயும் வராமல் வாழலாம்.
    இந்த ஆசனம் செய்வதால் கழுத்துவலி, நடு முதுகுவலி, அடி முதுகு வலி வராமல் வளமாக வாழலாம். முதுகுத்தண்டுவடம் திடப்படும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    பஞ்சபூத முத்திரை முடித்தவுடன் பர்வட்டாசனம் செய்யவும். விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதலில் வலது காலை தொடையில் போட்டு அதன் மேல் இடது காலை வைத்து படத்தில் உள்ளது போல் பத்மாசனம் போடவும்.

    இரு கைகளையும் காதோடு சேர்ந்து தலைக்கு மேல் கும்பிடவும். சாதாரண மூச்சில் இருபது வினாடிகள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும். பத்மாசனம் போட முடியாதவர்கள் சுகாசனத்தில் அமர்ந்து கைகளை தலைக்குமேல் உயர்த்தி கும்பிடவும். தரையில் சுகாசனத்தில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து கைகளை தலைக்குமேல் உயர்த்தி கும்பிடவும். மூன்று முறைகள் செய்யவும்.

    பலன்கள்

    கழுத்துவலி, நடு முதுகுவலி, அடிமுதுகுவலி வராமல் வளமாக வாழலாம். முதுகுத்தண்டுவடம் திடப்படும். அதைச் சார்ந்த உள் உறுப்புக்கள் நன்கு சக்தி பெற்று இயங்கும். சிறுநீரகம், சிறுங்குடல், பெருங்குடல், இதயம், நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும். உடலில் பிராண சக்தி எல்லா உறுப்புகளுக்கும் நன்றாக கிடைக்க வழிவகை செய்கின்றது. சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வாழலாம்.
    மனித உடல் பஞ்சபூதத்தினால் ஆனது. ஒவ்வொரு விரல் நுனிகளும் ஒவ்வொரு பஞ்சபூதத்தை கட்டுப்படுத்துகின்றது. ஒரு மனிதனுடைய உடலில் பஞ்சபூதங்களும் சமமான விகிதத்தில் இருக்க வேண்டும். அதற்கு முத்திரைகள் பயன்படுகின்றது.
    1. நிலம்-பிரிதிவி முத்திரை

    செய்முறை

    பஞ்சபூதங்களில் ஒன்றான நிலம், மண்ணீரல், இரைப்பையை கட்டுப்படுத்துகின்றது. பிரிதிவி முத்திரை செய்வதின் மூலம் நிலம் சார்ந்த உள் உறுப்பான மண்ணீரலும், இரைப்பையும் நன்கு பிராண சக்தி பெற்று இயங்குகின்றது.

    ஒரு விரிப்பு விரித்து அதில் சுகாசனத்தில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமரமுடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் மோதிரவிரல் நுனியையும் கட்டை விரல் நுனியையும் தொடவும்.

    மற்ற விரல்கள் படத்தில் உள்ளது போல் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் மன ஒருநிலையுடன் பயிற்சி செய்யவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.


    2. நீர்-வருண முத்திரை

    செய்முறை

    தரையில் ஒரு விரிப்பு விரித்து நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி மிக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் கண்களை திறந்து சுண்டு விரல், பெருவிரல் நுனியை தொடவும், மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் பயிற்சி செய்யவும். இரண்டு நிமிடம் பயிற்சி செய்யவும். பின் சாதாரணமாக கைகளை வைக்கவும்.

    நீர் மூலகம் சிறுநீரகம், சிறு சிறுநீரகப்பை என்ற உள் உறுப்பை கொண்டுள்ளது. நீர் மூலகம் தலைமுடி, நகங்கள், பற்கள் போன்றவற்றை பராமரிக்கின்றது. ரத்தத்தில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து நீர் கழிவாக வெளியேற்றும். எலும்புகளை பராமரிக்கின்றது. எலும்பு மஜ்ஜைகளை உருவாக்குகின்றது. பெண்களின் கர்ப்பப்பை நீர் மூலகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. அடி முதுகு, மற்றும் இடுப்புப் பகுதிகளுக்கு தேவையான இயக்க சக்தியை அளிக்கிறது. இந்த முத்திரையை செய்தால் நீர் மூலகமும் அதைச்சார்ந்த உறுப்புகளும் நன்கு சக்தி பெற்று இயங்கும்.

    3. நெருப்பு-சூன்ய முத்திரை -

    செய்முறை

    நெருப்பு மூலகம், இதயம், சிறுகுடல் என்ற உள் உறுப்புக்களை மையமாக இயக்குகின்றது. தரையில் ஒரு விரிப்பு விரித்து நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி மிக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் கண்களை திறந்து நடுவிரலை மடித்து அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

    இந்த முத்திரை ராஜ உறுப்பான இதயம், இதய வால்வுகளை நன்றாக இயங்கச் செய்யும். அதில் எந்த ஒரு குறைபாடும் வராது. சிறுகுடலுக்கு நல்ல சக்தி ஓட்டம் கிடைக்க செய்கின்றது. ஜீரண மண்டலம் நன்றாக இயங்கும்.


    4. காற்று மூலகம்-வாயு முத்திரை

    பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று மூலகம் நுரையீரல், பெருங்குடல் என்ற உறுப்புகளை பராமரிக்கின்றது. வாயு முத்திரை மூலம் இந்த உறுப்புகளுக்கு நல்ல சக்தி கிடைக்கும்.

    விரிப்பு விரித்து நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மிக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் ஆள்காட்டி விரலை மடித்து உள்ளங்கையில் தொடும்படி வைத்து அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். லேசான அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். பின் கைகளை சாதாரணமாக வைக்கவும். இதன் மூலம் நமது நுரையீரல், பெருங்குடல் நல்ல பிராணசக்தி பெற்று சிறப்பாக இயங்கும்.

    5. ஆகாய மூலகம்-ஆகாய முத்திரை

    பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாய மூலகம், கல்லீரல், பித்தப்பை என்ற உறுப்புகளை இயக்குகின்றது. ஆகாய முத்திரை இந்த உறுப்புகளுக்கு நல்ல பிராண சக்தியை கொடுக்கின்றது.

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி மிக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் கண்களை திறந்து நடுவிரல், கட்டை விரல் நுனிகளை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.
    இந்த முத்திரை செய்து வந்தால் சிறுகுடல் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும்.
    திரிகோண முத்திரை மேலேயுள்ள படத்தில் காட்டியுள்ளபடி விரல்களை இணைத்து 15 நிமிடங்கள் தினமும் செய்ய தீராத மலச்சிக்கல் பிரச்சனை தீரும், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும். மேலும் ஜீரண சக்தி அதிகரித்து சிறுகுடல் நோய்கள் நீங்க பெரும்.

    பலன்கள்

    மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுகுடல் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும்.
    இந்த சுவாதிஸ்டான தியானம், ரத்த அழுத்தம் வராமல் வாழ வழிவகை செய்கின்றது. நல்ல பிராணசக்தி இந்த சுவாதிஸ்டான சக்கர மையத்திற்கு கிடைப்பதாக எண்ணவும்.
    விரிப்பில் கால்களை நீட்டி அமரவும். ஒவ்வொரு காலாக தொடையில் மடித்து போடவும். படத்தை பார்க்கவும். கைவிரல்களை சின் முத்திரையில் வைக்கவும். கட்டை விரல் ஆள்காட்டி விரல் நுனியை தொடவும். கண்களை மூடி உங்களது மனதை தலை வெளி தசைகளில் நிறுத்தி, அதில் உள்ள எல்லா டென்ஷன், அழுத்தம் உடலை விட்டு நீங்குவதாக எண்ணவும்.

    அந்தப் பகுதியில் நல்ல பிராண ஆற்றல் கிடைப்பதாக எண்ணவும். பின் தோள்பட்டை வெளி தசைகளில் உங்கள் மனதை நிறுத்தி, அதில் உள்ள எல்லா டென்ஷனும் உடலை விட்டு நீங்குவதாக மனதால் எண்ணி தளர்த்தவும். இதேபோல் ஒவ்வொரு உறுப்பின் வெளி தசைகளில் மனதை நிறுத்தி தளர்த்த வேண்டும். இதய வெளி தசைகள். வயிற்று வெளி தசைகள், வலது கால், இடது கால் வெளி தசைகளிலுள்ள எல்லா டென்ஷன், அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணவும்.

    பின், மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் இவ்வாறு செய்யவும். பின் நமது முதுகுத்தண்டின் கடைசி பகுதியான ஆசனவாய் அருகில் உள்ள மூலாதார மையத்தில் உங்களது மனதை வைத்து மூச்சை இருபது வினாடிகள் கவனிக்கவும். பின் அதிலிருந்து 4விரல்கட்டை மேல் பகுதியில் உங்கள் மனதை நிலை நிறுத்தவும். இது சுவாதிஸ்டான சக்கரமாகும்.

    இந்த சக்கரத்தில், இந்த இடத்தில் உங்களது மூச்சோட்டத்தையும், மனதையும் நிறுத்தி ஐந்து நிமிடங்கள் தியானிக்கவும். நல்ல பிராணசக்தி இந்த சுவாதிஸ்டான சக்கர மையத்திற்கு கிடைப்பதாக எண்ணவும். பின் மீண்டும் முதலில் ஆரம்பித்த மூலாதார சக்கரத்தில் ஒரு பத்து வினாடிகள் தியானிக்கவும். மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.

    இந்த தியானம் அட்ரீனல் சுரப்பிக்கு நல்ல சக்தியளிக்கின்றது. இச்சுரப்பி சரியாக வேலை செய்யாவிட்டால் உடலில் ரத்த ஓட்டம் குறையும். பசியிருக்காது. தலை சுற்றல் ஏற்படும். இந்த சுரப்பிகள் மனித உடலில் ரத்தம், தண்ணீர் அளவை சரி செய்கின்றது. இந்த சுவாதிஸ்டான தியானம், ரத்த அழுத்தம் வராமல் வாழ வழிவகை செய்கின்றது.

    யோகக் கலைமாமணி
    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A. (YOGA)
    6369940440
    கீழே கொடுக்கப்பட்டுள்ள யோகச் சிகிச்சையை முறையாக தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிடும் முன் பயிற்சி செய்யுங்கள். நிச்சயமாக ரத்த அழுத்தத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
    இன்றைய பரபரப்பான உலகில் மனிதன் காலை முதல் இரவு வரை பணத்திற்காகவும். தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்கும் உழைத்துக் கொண்டே இருக்கிறான். உட்கார நேரமில்லை என்று கூறுகிறான். பணமும் அளவுக்கு அதிகமாக சம்பாதித்து விடுகிறான். உடலில் ரத்த அழுத்தத்தையும் அதிகமாக சம்பாதித்து தினமும், மாத்திரை சாப்பிட்டு ஒரு பய உணர்வுடன் வாழ்கிறான். பதட்டத்துடன் வாழ்கிறான். கடைசி வரை மாத்திரை சாப்பிட வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறான்.

    இந்நிலையிலிருந்து மாறி ஒவ்வொரு மனிதனும் உடலில் ரத்த அழுத்தம் என்ற நோய் வராமல் வாழ முடியும். நமது பழக்கத்தில் வந்தாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள யோகச் சிகிச்சையை முறையாக தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிடும் முன் பயிற்சி செய்யுங்கள். நிச்சயமாக ரத்த அழுத்தத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இது அனைவரும் செய்ய வேண்டிய பயிற்சியாகும்.

    முதல் பயிற்சி - வஜ்ராசனத்தில் சின் முத்திரை

    தரையில் ஒரு விரிப்பு விரித்து கிழக்கு முகமாக இரு கால்களையும் நீட்டவும். பின் ஒவ்வொரு காலாக மூட்டு வரை மடித்து இரு கால் மூட்டுகளை படத்தில் உள்ளது போல் சேர்க்கவும். இரு கை விரல்களிலும் சின் முத்திரை செய்யவும். கட்டை விரல் நுனியும், ஆள்காட்டி விரல் நுனியும் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் கீழ்நோக்கி படத்தில் உள்ளது போல் இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும்.

    மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுத்து மிக மிக மெதுவாக இரு நாசியிலும் மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். பின் சாதாரண மூச்சில் இயல்பாக நடக்கும் மூச்சில் ஒரு மனமும், கைவிரல் நுனியில் கொடுத்த அழுத்தத்தில் ஒரு மனமும் லயிக்கட்டும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.

    வஜ்ராசனத்தில் முகுள முத்திரை

    பின் வஜ்ராசனத்தில் முகுள முத்திரை பயிற்சி செய்ய வேண்டும். பெருவிரல் நோக்கி நான்கு விரல்களையும் குவித்து மேல் நோக்கி வைக்கவும் மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் இவ்வாறு செய்து விட்டு சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.

    சஸங்காசனம்

    பின் வஜ்ராசனத்திலிருந்து மூச்சை வெளிவிட்டு குனிந்து நெற்றி தரையில் படவேண்டும். இரு கைகளையும் பக்கவாட்டில் வைத்து சாதாரண மூச்சில் பத்து முதல் இருபது வினாடிகள் இருக்கவும்.

    யோகக் கலைமாமணி
    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A. (YOGA)
    6369940440
    நெஞ்சு வலி, வாயுப்பிடிப்பு, நெஞ்சு எரிச்சல், குத்துதல் போன்றவை குணமாகும். ஹார்ட் பிளாக் பிரச்சனை இருப்பவர்கள், தொடர்ந்து செய்துவர அறுவைசிகிச்சையைத் தடுக்க வாய்ப்புகள் அதிகமாகும்.
    இதயத்தைப் பாதுகாக்க, ஒப்பில்லாத மருந்து முத்திரை வடிவில் நம் கைவிரல்களிலேயே உள்ளது. இந்த முத்திரைக்கு ‘ம்ருத்யூசஞ்சீவி’ எனப் பெயர். ‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர்.

    செய்முறை :

    வலது கை:  

    ஆள்காட்டி விரலை மடக்கி, கட்டை விரல் அடிரேகையைத் தொட வேண்டும்.

    இடது கை:

    கட்டைவிரல் நுனியுடன் மோதிரவிரல் மற்றும் நடுவிரல் நுனியை சேர்த்து வைக்கவும். சுண்டு விரல் நேராக நீட்டி இருக்க வேண்டும்.

    பலன்கள் :

    படபடப்பு, சீரற்ற சுவாசம், பதற்றம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனைகள் சரியாகின்றன. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது. ரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, தசைகளை வலுவாக்கும்.

    உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். அதிகமாக வியர்த்தல், தலை சுற்றுதல் போன்ற பிரச்சனை இருக்கும்போது, இந்த முத்திரையைச் செய்தால் உடனடி பலன் தெரியும்.

    வாயு அதிகமாவதால் ஏற்படும் வயிற்று உப்புசம், வயிற்றைப் பிரட்டுதல், மலச்சிக்கல், மலம் மற்றும் வாயு தங்கியிருந்து வலி ஏற்படுதல் ஆகியவை குணமாகும்.

    நெஞ்சு வலி, வாயுப்பிடிப்பு, நெஞ்சு எரிச்சல், குத்துதல் போன்றவை குணமாகும். ஹார்ட் பிளாக் பிரச்சனை இருப்பவர்கள், தொடர்ந்து செய்துவர அறுவைசிகிச்சையைத் தடுக்க வாய்ப்புகள் அதிகமாகும்.

    40 வயதைக் கடந்தவர்கள், மன அழுத்தச் சூழலில் இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள், மூச்சுத் திணறல் உள்ளவர்கள் தினமும் இந்த முத்திரையைச் செய்துவர, இதய நோய் பாதிப்பிலிருந்து முழுமையாக தற்காத்துக்கொள்ள முடியும்.

    கட்டளைகள் :

    தரையில் நேராக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து செய்யலாம்; நாற்காலியில் நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, பாதங்களைத் தரையில் பதித்துச் செய்யலாம்.

    காலை, மாலை என வெறும் வயிற்றில் 10-30 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    இதய அறுவைசிகிச்சை செய்தவர்கள், முத்திரை பயிற்சியாளரின் ஆலோசனைக்குப் பிறகே செய்ய வேண்டும். முத்திரையைச் செய்யத் தொடங்கும்போது, மிதமாக வலி வருவதுபோலத் தெரியும். ஏனெனில், முதன்முறையாக சீரான ரத்த ஓட்டம் செல்வதால் ஏற்படும் அறிகுறி இது. பின் வலி மறையும். தொடர்ந்து செய்துவர, நல்ல பலன்களை உணரலாம்.

    அவசர காலத்தில், அதாவது நெஞ்சுவலி ஏற்பட்டால் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் செய்யலாம். உயிர் காக்க உதவும் முத்திரை இது. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கவும். வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும். மருத்துவரை அணுகி சிகிச்சை தொடங்கும் வரை முத்திரையை விடாமல் செய்வது நல்லது.
    ×