என் மலர்
உடற்பயிற்சி
இந்த முத்திரை உடலில் உள்ள காற்று தனிமத்தை சமநிலைப்படுத்துகிறது. இந்த முத்திரை செய்முறையும், இந்த முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்களையும் பார்க்கலாம்.
ஆள்காட்டி விரலின் நுனிப்பகுதியால், கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொட்டவாறும், கட்டைவிரல் மெதுவாக வளைந்து ஆள்காட்டி விரலின் கனுவைத் தொடவேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்:
இந்த முத்திரை உடலில் உள்ள காற்று தனிமத்தை சமநிலைப்படுத்துகிறது. உட்கார்ந்திருக்கும்போது, நிற்கும்போது அல்லது படுக்கும்போது என ஒரு நாளில் எந்த நேரம் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம்.
45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை நிவர்த்தி செய்ய முடியும்.
தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும்.
வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும். உடலில் உள்ள அளவுக்கு அதிகமான காற்றை வெளியேற்றி, வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வலியை குறைக்க இது உதவும்.
ஆர்த்தரைடிஸ் மூட்டுவலி, ரூமாடிசம், ஸ்பான்டிலைடிஸ் எனப்படும் கழுத்துவலிகளை குறைக்க உதவும்.

தொடர் நடைப்பயிற்சியினால் நுரையீரலில் ஆக்ஸிஜன் கொள்ளளவு பன்மடங்கு அதிகரிக்கும். எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலிமையைக் கொடுக்கும். உடல் எப்போதும் சுறுசுறுப்பாகச் செயல்படும்.
உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் அத்தியாவசியம்.
உடல் உழைப்புக்கு வாய்ப்பே இல்லாதவர்கள், தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.
மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல்... என நமது உடல் உறுப்புகள் அனைத்தும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க இடைவிடாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. அவை அனைத்தையும் தாங்கிப்பிடித்திருக்கும் நாம்தான் ஓடாமல், நடக்காமல் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொள்கிறோம்.
நோய்கள் வராமல் பாதுகாப்பதற்கு நம்மிடையே இருக்கும் மிக முக்கியச் சாதனம் நடைப்பயிற்சி. ஆனால், அந்த சாதனத்தை பயன்படுத்தாமல் துருப்பிடிக்க வைத்துவிடுவதுதான் நோய்களுக்குக் கொண்டாட்டமாகப் போய்விடுகிறது. நடைப்பயிற்சியின் முக்கியத்துவம், நோயின்றி நம்மை பாதுகாக்க இது எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
முதுமையை விரட்டும்
நடைப்பயிற்சி, உள் உறுப்புகளுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும், பிராண வாயு செறிவையும் ஏற்படுத்தி, சிறப்பாகச் செயல்படவைக்கும்.
நடைப்பயிற்சி உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தி, ரத்தக்குழாய்களில் தேங்கியிருக்கும் கொழுப்புத் திட்டுகளை நீக்கப் பயன்படும்.
சிறு வயது முதலே விளையாட்டுடன்கூடிய நடைப்பயிற்சி, முதுமையைத் தள்ளிப்போடும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம்.
எலும்புகள் வலுவாகும்
தொடர் நடைப்பயிற்சியினால் நுரையீரலில் ஆக்ஸிஜன் கொள்ளளவு பன்மடங்கு அதிகரிக்கும். எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலிமையைக் கொடுக்கும். உடல் எப்போதும் சுறுசுறுப்பாகச் செயல்படும்.
உடல் எடையை குறைக்க நடைபோடுபவர்கள், நொறுக்குத்தீனிகளை கொறித்துக்கொண்டே சென் றால், நடப்பதில் எந்தப் பயனும் இல்லை. உடல் பருமனைக் குறைக்க நடைப்பயிற்சியோடு, யோகாசனப் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்யலாம்.
இதயத்தை வலிமையாக்கும்
வாரத்துக்குக் குறைந்தது மூன்று மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் குறைகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த முதியோர்களுக்கான பத்திரிகை ஒன்றில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று, இளம் வயதிலிருந்தே நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் இதயம், முதிர்ந்த வயதிலும் ஆரோக்கியமாகத் தடங்கலின்றி இயங்குவதாகத் தெரிவிக்கிறது. இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையும் இயல்பாக இருக்குமாம்.
மகிழ்ச்சியை வழங்கும்
‘நடைப்பயிற்சி, மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஹார்மோன்கள் சுரக்க உதவும்’ என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான நாடுகளில், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வியல் பயிற்சிகளில் நடைப்பழக்கமும் முக்கியமான ஒன்று. தொடர்ந்து நடைப்பயிற்சி செய்யும்போது, மூளையில் உள்ள ‘ஹிப்போகாம்பஸ்’ பகுதி சிறப்பாகச் செயல்படுவதாக சில ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் போதும், ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். தொடர்ந்து ஐந்து நாட்கள் தவறாமல் நடைப்பயிற்சி செய்துவிட்டு, உங்கள் மனநிலையை ஆராய்ந்து பாருங்கள்... உற்சாகம் கரை புரண்டு ஓடும்!
இயற்கை நடை
‘ட்ரெட்மில் இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே அதில் நடக்கிறேன்’ என்பவர்களுக்கு ஒரு செய்தி. சூரிய ஒளி உடலில் படும்படி நடப்பவர்களுக்கு கூடுதல் பலனாக ‘வைட்டமின் டி’ கிடைக்கும். வெளிச்சம் உள்நுழையாத நான்கு சுவர்களுக்குள் நடப்பதற்கும் இயற்கையான ‘வெளியில்’ நடப்பதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் வெளியில் நடக்க முடியாத சூழலில் இருப்பவர்கள், ட்ரெட்மில் இயந்திரத்திலாவது நடக்கவேண்டியது அவசியம்.

இந்த முத்திரை மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் பயன்படுத்தலாம்.
மனித மூளையின் இடது பக்கம் கணக்கு, சீர்தூக்கிப் பார்த்தல், தர்க்கப்பூர்வமாகச் சிந்தித்தல், கற்றல் உள்ளிட்ட செயல்பாடுகளையும்,
வலதுபக்க மூளையானது, உள்ளுணர்வு, கற்பனை, கலைநயம், இசை, காட்சிகள் வாயிலாகச் சிந்தித்தல், மனிதநேயம், அன்பு போன்ற உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும். இந்த, இரண்டு பக்க மூளையும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால் மட்டுமே, ஒரு காரியத்தை அறிவுப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் செய்ய முடியும். இதற்கு, ஆக்கினை முத்திரை உதவுகிறது.
செய்முறை :
நாற்காலியிலோ விரிப்பிலோ அமர்ந்த நிலையில், வலது கை விரல்களின் நுனிகளை இடது கை விரல்களின் நுனிகளுடன் தொட்டுக்கொண்டு இருக்கும்படி வைக்க வேண்டும். நடுவில் கூடு போன்ற பகுதி இருக்கும். இதை, ஒருநாளைக்கு மூன்று முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் செய்ய வேண்டும். நேரம் கிடைக்கும் போது எல்லாம் இந்த ஆசனத்தை செய்து வரலாம்.
பலன்கள் :
மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. ஞாபகமறதியைப் போக்கப் பயன்படும். மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் பயன்படுத்தலாம்.
இரண்டு பக்க மூளைக்கும் உள்ள சக்தி ஓட்டம், பரிமாற்றம் சீராகிறது. அதனால், சிந்தனை வளம் அதிகமாகிறது. குழந்தைகள் படிப்பில் மட்டும் அல்லாது விளையாட்டு உட்பட மற்ற எக்ஸ்ட்ராகரிக்குலர் ஆக்டிவிட்டிஸிலும் வெற்றி பெறுவர்.
அதிகமாக மூளைக்கு வேலை தருபவர்கள், பன்முகச் செயல்பாடுகள் (Multitasking) செய்பவர்கள் அவசியம் செய்ய வேண்டிய முத்திரை.
கண் பார்வை, காது கேட்கும் திறன், மூக்கால் நுகரும் திறன், சுவையறிதல், தொடு உணர்வு ஆகிய ஐம்புலன்களின் செயல்பாடுகளும் கூர்மையாகின்றன.

இந்த செயலியில் இடம்பெற்றிருக்கும் பயிற்சிகள் அனைத்தும் 45 விநாடிகள் முதல் 1.2 நிமிடங்களுக்குள் செய்து முடிக்கும் வகையில் வீடியோ காட்சிகளாக இடம்பெற்றுள்ளன.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் ‘யோகா-பிரேக்' என்னும் செயலியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பணி சூழலில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், புதிய உற்சாகத்துடன் பணியில் கூடுதல் கவனம் செலுத்தவும் வழிவகை செய்யும் நோக்கத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப பணியிடங்களில் 5 நிமிட யோகா இடைவேளையை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் செய்வதற்கு ஏற்ற எளிமையான யோகாசனங்கள், பிராணாயாமம், தியானம் போன்ற அம்சங்கள் இந்த செயலியில் உள்ளன. இந்தியாவின் ஆறு முன்னணி யோகா நிறுவனங்களுடன் இணைந்தும், யோகாசன பயிற்சியாளர்கள், நிபுணர்களுடன் கலந்தாலோசித்தும் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் மூலம் 717 நபர்களுக்கு இந்த யோகாசன பயிற்சிகள் 15 நாட்கள் சோதனை முயற்சியாக வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய 6 நகரங்களில் இந்த யோகா பயிற்சி முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அனைத்து அரசு துறைகளும் தங்களுடைய ஊழியர்களுக்கு ஐந்து நிமிட யோகா இடைவெளியை வழங்க வேண்டும் என்று மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த செயலியில் இடம்பெற்றிருக்கும் பயிற்சிகள் அனைத்தும் 45 விநாடிகள் முதல் 1.2 நிமிடங்களுக்குள் செய்து முடிக்கும் வகையில் வீடியோ காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. இந்த ஆசனங்களை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி இந்தி, ஆங்கில மொழியில் பின்னணி குரல் ஒலிக்கிறது. அத்துடன் ஒவ்வொரு அசைவையும் எப்படி மேற்கொள்ள வேண் டும் என்பதும் ஒவ் வொரு படி நிலைகளாக ஆங்கிலம், இந்தி மொழிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் தங்கள் தினசரி வாழ்க்கையில் 5 நிமிடங்களை யோகா பயிற்சிக்கு ஒதுக்குவதன் மூலம் மன அழுத்தத்தை குறைத்து செயல் திறனை அதிகப்படுத்த முடியும். ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் எளிமையாக இந்த ஆசன பயிற்சிகளை மேற்கொள்ளலாம், கூகுள் பிளே ஸ்டோரில் இதனை பதிவேற்றம் செய்து பயன்படுத்தலாம் என்றும் ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.

சைக்கிள் ஓட்டுவது, ஓடுவது இரண்டும் ஏரோபிக் செயல்பாடுகள் என்பதால், அவை இரண்டுமே இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கக்கூடியவை. இவ்விரு பயிற்சிகளை மேற்கொள்ளும்போது உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
இன்றைய காலகட்டத்தில் சைக்கிள் ஓட்டுவது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ஜாக்கிங் போன்ற ஓட்டப்பயிற்சி மீது ஆர்வம் இல்லாதவர்கள் சைக்கிளிங் பயிற்சியை தேர்ந்தெடுக்கிறார்கள். இரண்டு பயிற்சிகளில் எது சிறந்தது? என்ற கேள்வியும் நிறைய பேரிடம் இருக்கிறது. இரண்டுமே எரோபிக் பயிற்சிகள்தான். ஆனால் ஓடுவது, சைக்கிள் ஓட்டுவதை விட அதிக கலோரிகளை எரிக்க உதவும். அதே வேளையில் தசைகளை கடினமாக்கிவிடும். உடல் வலி, தசை பிடிப்பு போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்வதுதான் சிறந்தது. இரு பயிற்சிகளாலும் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.இதய ஆரோக்கியம்: கலோரிகள் எரிக்கப்படும்: எடை இழப்பு:
சைக்கிள் ஓட்டுவது, ஓடுவது இரண்டும் ஏரோபிக் செயல்பாடுகள் என்பதால், அவை இரண்டுமே இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கக்கூடியவை. இவ்விரு பயிற்சிகளை மேற்கொள்ளும்போது உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
தினமும் தவறாமல் செய்து வரும்போது இதயத்திற்கு ரத்தத்தை திறம்பட ‘பம்ப்’ செய்யும். அதனால் இதயம் வலுப்படும். எனினும் இந்த பயிற்சிகளை ஒரு நாளைக்கு 60 நிமிடங்களுக்கு மேல் செய்யாதீர்கள். அளவுக்கு மீறி செய்வது இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்துவிடும்.
சைக்கிள் ஓட்டுவது மென்மையான பயிற்சி முறை. ஓடுவதுடன் ஒப்பிடும்போது தசை களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காது. ஓடுவதை விட அதிக நேரம் சைக்கிள் ஓட்டவும் முடியும். எனினும் ஓடுவதில்தான் அதிக கலோரிகள் எரிக்கப்படும். சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் ஆகிய இரண்டு பயிற்சிகளையும் செய்து வந்தால் நிச்சயமாக அதிக கலோரிகளை சிரமமில்லாமல் எரிக்க முடியும்.
உடல் எடையை குறைப்பதற்கும், கலோரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கலோரிகளின் அளவை குறைப்பது முக்கியம். இந்த விஷயத்தில் ஓடுவதுதான் விரைவாக எடை குறைவதற்கு வழிவகுக்கும். சைக்கிள் ஓட்டுவதன் மூலம் எடையை குறைப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். அதேவேளையில் உடற்பயிற்சிகள் மட்டுமே எடையை குறைப்பதற்கு உதவாது. ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பதும், சரியான நேரத்தில் தூங்குவதும் முக்கியம்.
தசை கட்டமைப்பு:
இரண்டு பயிற்சிகளையும் ஒப்பிடும்போது சைக்கிள் ஓட்டுவது, இடுப்புக்கு கீழ் பகுதியில் உள்ள தசைகளை உருவாக்க, வலுப்படுத்த உதவும். ஓடும் விஷயத்தில் அனைத்து தசைகளும் ஒரே நேரத்தில் சீரான இயக்கத்தில் இருக்கும். உடலை வலிமையாக்க உதவும். ஆனால் சைக்கிள் ஓட்டும்போது கால் தசைகள்தான் அதிகமாக செயல்படும். உடல் தசைகளை முழுமையாக கட்டமைக்க இரு பயிற்சிகளையும் மேற்கொள்வதுதான் சிறந்தது.
ஓடுவது அதிக கலோரிகளை எரிக்க உதவும் என்றாலும் அதனுடன் சில எடை தூக்கும் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். அவை தசைகளை இறுகச் செய்யும். உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும். உடலுக்கு வடிவமும் கொடுக்கும். சைக்கிள் ஓட்டுவது கால் தசைகளைத்தான் வலுப்படுத்தும். முழு உடல் தசைகளுக்கும் பலன் அளிக்காது.

பிரமிட்டின் கீழே தூங்குபவர்களுக்கு ஹைபர்டென்சன், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் மறைகின்றன. இன்று இந்த தியானத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஒரு மனிதனின் மனம் எவ்வாறு செயல்படுகிறதோ அதே போல அவன் வாழ்க்கையும் அமைகிறது. மனம் குழம்பிய நிலையில் சோர்வாக, மந்தமாக இருக்குமேயானால் அவன் வாழ்வும் குழம்பித்தான் போகிறது. தெளிவான மனம் தெளிந்த கருத்தை அள்ளித் தருகிறது.
அமைதியான மனதை அடைய என்ன வழி?
"தியானம்" தான். தியானம் ஒன்று மட்டுமே நம் மனதைப் பண்படுத்தி நம் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
இப்போது "விடக்கா" என்றச் சொல்லைப் பற்றிச் சொல்கிறேன். பாலி மொழியில் "டக்கா" என்றால் தர்க்கம் எனப்படும். " விடக்கா" என்றால் மனிதனின் அலைபாயும் மனதைக் குறிக்கும். அன்றாட வாழ்க்கையில் கடந்து போன சம்பவங்கள் திரும்பத் திரும்ப நினைவில் வந்து நம்மை மூழ்க வைக்கும். இந்த நிலையை விடக்கா என்று சொல்லலாம். இந்த நிலை நமக்குள் இருக்கும் நமக்குள் இருக்கும் சக்தியை உணரவிடாமல் செய்கிறது. "பிரமிட் தியானம்" இந்தச் சக்தியைக் கொடுக்கிறது. இதை "ஆனாபானா சதி "என்ற பெயரில் அழைக்கின்றனர். இதை ஒழுங்காகச் செய்தால் இந்த "விடக்கா "என்ற பலதரப்பட்ட எண்ண ஓட்டங்களிலிருந்து விடுபடலாம். மனம் சலனமற்ற நிலையை அடைகிறது.
ஆனாபானாசதி, பாலி மொழியில் "ஆனா" என்றால் உள்ளே இழுக்கும் மூச்சு. "அபானா" என்றால் வெளியே விடும் முச்சு. "சதி" என்றால் உடன் இருத்தல். அதாவது உள்மூச்சு வெளிமூச்சுடன் நாம் உடன் இருக்க வேண்டும். அப்படியே ஒன்ற வேண்டும். அதையே உன்னிப்பாய் கவனிக்க வேண்டும். இயற்கையாக சுவாசித்தலைக் கவனிக்க வேண்டும். இந்த தியானம் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
இதைச் செய்யும் முறை :
வசதியான விதத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாகக் கோர்த்துக் கொண்டு கண்களையும் மூடிக் கொள்ளுங்கள். எல்லா உறுப்புக்களையும் தளர்த்திக் கொள்ளுங்கள். மனதால் எல்லா உறுப்புக்களும் தளர்ந்து விட்டதை உணருங்கள். பின் தியானம் ஆரம்பம்.
மூச்சு உள்ளே, வெளியே செல்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். எண்ணங்கள் வந்து போகலாம். அது தானாகவே வந்து போய், பின் அடங்கி விடும். அதைக் கட்டுப்படுத்தாதீர்கள். எண்ணங்களின் மேல் இருக்கும் கவனிப்பை விடுத்து சுவாசத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.
நம் மூக்கு தான் பிரமிட் என்று எண்ண வேண்டும். கொஞ்ச நேரத்தில் மன அழுத்தம் குறைந்து மனம் மலர்ந்து விரிவதைப் பார்க்கலாம். இதைச் செய்வதால் பிராணசக்தி நம் உடலில் பெருகுகிறது. மனம் தெளிவு பெறுகிறது. உணர்ச்சிப் பெருக்கில் நல்ல மாற்றம் உண்டாவது நமக்குத் தெரிகிறது. ஒரு சாந்த நிலை ஏற்படுகிறது. ஆன்மா ஊக்கப்படுகிறது. இந்தத் தியானம் ஆரம்பத்தில் பத்து நிமிடங்கள் செய்யலாம். பின் நன்கு பயிற்சி ஆனபின், 60 நிமிடம் வரை செய்யலாம்.
எகிப்து தேசத்தின் பிரமிட்கள் சுமார் 5000 வருடங்கள் பழமையானவை. இறந்த உடல்கள் இங்கு கெடாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள். பிரமிட்டின் கீழே தூங்குபவர்களுக்கு ஹைபர்டென்சன், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் மறைகின்றன.
விஞ்ஞானி லியால் வாட்சன் சொல்கிறார், "சிறிது நேரம் இதன் கீழ் அமர்ந்து மௌனமாகக் கண்களை மூடினாலும் கூட அது பலனைக் கொடுத்து விடுகிறது. மன அழுத்தம் மிகப்பெருமளவில் குறைந்து விடுகிறது"
பிரமிட் வடிவ டப்பாவில் நகைகள் அப்படியே புதுப் பொலிவுடன் இருக்கின்றன. சிறிது நீரை இதனுள் வைத்துப் பின் முகம் கழுவ, முக சுருக்கம் மறைகிறது. முக லோஷன் போல் உதவுகிறது. காய்கறிகள் பிரமிட்டில் வைக்க அப்படியே வாடாமல் இருக்கின்றன, உணவுப் பொருட்களும் கெடுவதில்லை. தவிர, மருந்துகளும் பிரமிட் டப்பாவில் வைக்க கூடுதல் நன்மை அளிக்கின்றனவாம்.
தலைவலிக்கு பிரமிட் போன்று அட்டையில் வடிவம் அமைத்து தலையில் தொப்பி போல் வைத்துக் கொள்ள, தலைவலி மறைகிறது. சிலர் வீடுகளிலும் இந்த மாதிரி வடிவம் அமைத்துக் கொள்கிறார்கள். நம் தமிழ் நாட்டுக் கோயில்களில் கோபுரங்களைக் காணலாம். அதே போல் எல்லாக் கேரளக் கோயில்களும் பிரமிட் வடிவத்தில் அமைந்தவையே.
தமிழ் நாட்டில் கோயம்பத்தூரில் வடவள்ளி என்னும் இடத்தில் பெரிய பிரமிட் கட்டிடம் உள்ளது. இதனுள் அமர்ந்து பலர் தியானம் செய்கிறார்கள். இதில் மூன்று மாடிகள் உள்ளன. மூன்றும் பிரமிட் வடிவம் தான். இந்தத் தியானம் செய்யும் முறை மிக எளிது என்பதால் எல்லோரும் இதைச் செய்ய முடியும். இத்தனை உபயோகம் தரும் இதை நாம் வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொள்ளலாமே!

மிக அற்புத மகிமை வாய்ந்த இந்த மூலாதார கணபதி தியானத்தின் பலன்கள் அளவிடற்கரியது. இந்த அற்புத தியானத்தால் உயிரோட்டம் மிகச் சிறப்பாக இயங்குகின்றது.
ஒரு விரிப்பில் கிழக்கு நோக்கி பத்மாசனம், அல்லது வஜ்ராசனம், அல்லது சாதாரணமாக உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் முதுகெலும்பு நேராக இருக்கட்டும், கண்களை மூடிக் கொள்ளுங்கள். முதலில் தலை முதல் கால் வரை உடல் வெளித் தசையில் உங்கள் மனதை நிலை நிறுத்தி அதில் உள்ள டென்ஷன் உடலைவிட்டு வெளியேறுவதாக எண்ணி ஒரு 5 நிமிடம் தளர்த்தவும். பின் மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை உள் இழுத்து இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும்.
பின் உங்கள் மனதை உங்கள் உடலில் உள்ள முதுகுத்தண்டின் கடைசிபகுதி உள் பகுதியில் மனதை நிறுத்தவும். இது மூலாதாரச் சக்கர மாகும். இதில் உங்களுக்குப் பிடித்த கணபதி உருவத்தை தியானிக்கவும். அல்லது பத்து நிமிடம் மனதிற்குள் ஜெபிக்கவும்.
அப்பொழுது மலர்களினால் மானசீகமாக அர்ச்சனை செய்யவும். பின் மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிட்டு மூலாதாரச் சக்கரத்தில் கணபதியின் முழு அருளைப் பெறுவதாக தியானிக்கவும்.
பின் விநாயகா, நான் பல ஜென்மங்களில் செய்த தீவினைப் பதிவுகள் அங்கே உன்னிடத்தில் வாசனையாக உள்ளன. எல்லா தீவினைகளும் அழியட்டும். இந்த உடல்,உள்ளம், புனிதம் அடையட்டும். எண்ணம், சொல், செயல் மூன்றும் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் வாழும் வாழ்க்கையை அருள்வாய் விநாயகா என்று பிரார்த்திக்கவும்.
பின் மெதுவாக ஓம் சாந்தி என்று மூன்று முறைகள் கூறி தியானத்தை நிறைவு செய்து கண்களைத் திறந்து கொள்ளவும். மிக அற்புத மகிமை வாய்ந்த இந்த மூலாதார கணபதி தியானத்தின் பலன்கள் அளவிடற்கரியது.
இத்தியானத்தால் நம் ஊழ்வினைகள் அறுக்கப்படுகின்றது. உடல் உள் உறுப்புக்கள் நல்ல வலுவாக இயங்குகின்றது. எப்பொழுதும் தெய்வ சிந்தனையில் வாழலாம்.
உடலில் உயிர்சக்தி மூலாதாரத்தில் இருந்து தான் உடல் முழுக்க இயங்குகின்றது. இந்த மூலாதாரம் பழுதடைந்தால் உடலில் உயிரோட்டம் ஒழுங்காக இயங்காது. உடல் சோர்வு, மன சோர்வு- ஏற்படும். இந்த அற்புத தியானத்தால் உயிரோட்டம் மிகச் சிறப்பாக இயங்குகின்றது. என்ன கிரக ஜாதகதோஷங்கள் இருந்தாலும் அவை கணபதி அருளால் விலகி நன்மைகள் நடக்கும்.
இத்தியானத்தை அமாவாசை அன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் செய்து தொடர்ந்து இதுபோல் பவுர்ணமி வரை காலை 4 முதல் 5 மணி வரை நெய் விளக்கு ஏற்றி கணபதி திருவுருவப்படம் முன் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.

அதிக சிந்தனை கட்டுப்பட, மனக்குழப்பம் நீங்க, மூளை சோர்வடைதலை தடுக்க, சுறுசுறுப்பு கிடைக்க, தலைவலி தீர இந்த முத்திரை உதவும்.
தலைவலி ஏற்பட ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளதாக மருத்துவம் சொல்கிறது. ஆனால், எதைப் பற்றியும் கவலையின்றி வலி நிவாரணிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். தலைவலி எதனால் ஏற்படுகிறது என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற வேண்டும். அதனுடன், சில முத்திரைகள் செய்வதன் மூலம் விரைவில் குணம்பெற முடியும்.
ஆட்காட்டி விரல் கட்டை விரலின் முதல் ரேகையில் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்க வேண்டும்.
பலன்கள்: 10 - 40 நிமிடங்கள் செய்யலாம். அதிக சிந்தனை, மனக்குழப்பம், மூளை சோர்வடைதல், தலைவலி தீர அர்த்தசின் முத்திரை உதவும். அதிக சிந்தனை கட்டுப்பட, மனக்குழப்பம் நீங்க, மூளை சோர்வடைதலை தடுக்க, சுறுசுறுப்பு கிடைக்க, தலைவலி தீர இந்த முத்திரை உதவும்.

சிலருக்குத் தோள்பட்டை சற்றே வளைந்து கூன் விழுந்ததுபோல் இருக்கும். இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்து வந்தால், கம்பீரமான நிமிர்ந்த தோற்றம் கிடைக்கும்.
செய்யும் முறை :
உட்கார்ந்து செய்யும் ஆசனங்களின் அடிப்படை தண்டாசனம் எனப்படும் நிலை. நிமிர்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டுவதுதான் இந்த ஆசனம்.
உடல் நேராக இருக்க வேண்டும். இரண்டு கைகளும் இடுப்புக்குப் பின்னால் இருக்க வேண்டும். கைகளும் வளையாமல் நேராக இருக்க வேண்டும். நீட்டியிருக்கும் கால்களின் அடிப்பகுதி, கீழே அழுத்தியிருக்க வேண்டும். இடுப்பு எலும்புகள் கீழே அழுத்தியிருக்க வேண்டும்.
கைகளை அழுத்தி மார்பை நன்கு விரிவடையச் செய்யுங்கள். முதுகெலும்பை நேராக வைத்திருங்கள். தோள்பட்டைகளும் விரிந்திருக்க வேண்டும். தொடைகள், முழங்கால்கள் தளர்வாக இருக்கக் கூடாது.
குதிகால்களை முடிந்தவரை வெளிப்புறமாகத் தள்ளுங்கள். நுனிக் கால்களை முன்னோக்கி இழுங்கள். கால் விரல்கள் உங்களை நோக்கியபடி இருக்கட்டும். மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள். மூன்று அல்லது ஐந்து மூச்சு வரை இதே நிலையில் இருக்கலாம்.
பலன்கள்
முதுகெலும்பை வலுப்படுத்த உதவுகிறது. மார்பை விரியச் செய்து மூச்சைச் சீராக்க உதவுகிறது. பின்புறத் தசைகளை வலுப்படுத்துகிறது. தோள்பட்டைகள் வலுவாகும்.
உடலின் தோற்றம் மெருகேறும். சிலருக்குத் தோள்பட்டை சற்றே வளைந்து கூன் விழுந்ததுபோல் இருக்கும். இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்து வந்தால், கம்பீரமான நிமிர்ந்த தோற்றம் கிடைக்கும்.
ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உட்கார்ந்து செய்யும் ஆசனங்களுக்கான அடிப்படைப் பயிற்சியை இது கொடுக்கும்.
முதலில் கால்களை நன்கு நீட்டிய நிலையில் முதுகை நிமிர்த்த முடியாது. அத்தகைய நிலையில் சுவரில் சற்றே சாய்ந்தபடி இதைப் பயிற்சி செய்யலாம். அப்படிச் செய்யும்போது இரண்டு தோள்பட்டைகளும் சுவரில் பட்டுக்கொண்டிருக்க வேண்டும். முதுகு நேராக இருக்க வேண்டும்.

மனஅழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மனஉளைச்சல், மனக்குழப்பம் ஆகியவற்றால் உண்டாகும் தலைவலிக்கு இந்த முத்திரை சிறந்த பலனளிக்கும்.
செய்முறை :
விரிப்பில் அமர்ந்து கொண்டோ, அல்லது சேரில் அமர்ந்து கொண்டோ சுண்டுவிரல், மோதிர விரல், நடுவிரல் ஆகியவற்றை மடக்கி உள்ளங்கையில் பதியும்படி வைக்கவும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம்.
இந்த நிலையில் 15 நிமிடங்கள் இருக்க வேண்டும்.
பலன்கள்: இந்த முத்திரையை தலைவலி தீரும் வரை செய்யலாம். மனஅழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மனஉளைச்சல், மனக்குழப்பம் ஆகியவற்றால் உண்டாகும் தலைவலிக்கு இந்த முத்திரை சிறந்த பலனளிக்கும்.

மலச்சிக்கலை எளிதில் போக்க நமது முன்னோர்கள் கையாண்டு வந்த சில எளிய உடற்பயிற்சிகளை செய்தாலே போதும். இந்தவகையில் இந்த ஆசனம் மலச்சிக்கலை எளிதில் போக்க உதவும்.
இன்று பலரும் அவதிப்படும் முக்கிய நோய்களுள் மலச்சிக்கலை ஒன்றாகும். இது வந்தாலே பலரும் அவதிப்படுவதுண்டு. மலச்சிக்கலை எளிதில் போக்க நமது முன்னோர்கள் கையாண்டு வந்த சில எளிய உடற்பயிற்சிகளை செய்தாலே போதும். இந்தவகையில் மலாசனம் வைத்து மலச்சிக்கலை எளிதில் போக்க முடியும்.
அதாவது, "மாலா" என்றால் "மாலை" என சமஸ்கிருதத்தில் பொருள்படும். எனவே, மாலை போன்ற நிலையில் உட்கார்ந்து இதை செய்ய வேண்டும். தற்போது இந்த மலாசனத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
செய்முறை
முதலில் காலை தோள்பட்டை அளவிற்கு விரித்து வைத்து கொள்ளவும். அடுத்து பாதி உட்காரும் நிலைக்கு மூச்சை வெளியேற்றிக்கொண்டே அமர வேண்டும்.
அதன் பின்னர் கைகளை குவித்து ..கைககளின் மூட்டுகள் ..கால்களின் மூட்டுகளை விலக்கும் வண்ணம் அமர்ந்து ...பார்வை மேல்நோக்கி இருக்க....கைககள் வணக்கம் வைக்க வேண்டும்....(படத்தில் உள்ளவாறு)சுருக்கமாக சொல்ல போனால் பாதி உட்கார்ந்து மலம் கழிக்கும் நிலையில் இருந்து கொண்டு இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
இந்த ஆசனத்தில் 30 முதல் 60 நொடிகள் வரை இருக்கவும்.இந்நிலையில் ஆழ்ந்த சுவாசங்கள் எடுக்க வேண்டும். 3 முறை இம்மாதிரி செய்யலாம் ...
ஒவ்வொரு முறை செய்த பின்னரும் மூச்சை நன்றாக இழுத்து வெளியே விடவும். இந்த பயிற்சியினால் எண்ணற்ற நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் கண்டிப்பாக ஏற்படாது. தொடைகள் மலக்குடலை நன்கு அழுத்துவதால்...மலக்குடல் நன்கு வேலை செய்யும்.
உங்களின் நடு முதுகு மிகவும் பலமாக இருக்கும். மேலும், கழுத்து வலி, இடுப்பு வலி போன்றவற்றால் அவதிப்படுவோருக்கு இது சிறந்த தீர்வாகும்.
மாற்று ஆசனம் பாலாசனம் ...

உடலை சமநிலைப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்துகிற வகையில் நவுகாசனம், விருட்சாசனம், தனுராசனம், தாடாசனம், சிரசாசனம், விபரீதகரணி முதலியவை மிக முக்கியமானவை.
உடலை சமநிலைப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்துகிற வகையில் நவுகாசனம், விருட்சாசனம், தனுராசனம், தாடாசனம், சிரசாசனம், விபரீதகரணி முதலியவை மிக முக்கியமானவை. அதேபோல, பிராணாயாமத்தில், நாடி சுத்தி பிராணாயாமம், பிரம்மரி பிராணாயாமம், உஜ்ஜயி பிராணாயாமம் மிகவும் நல்லது. இதில் மிகவும் விசேஷமான விருக்ஷாசனம் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
விருட்சம் என்றால் மரம். மரம்போல நிற்கும் நிலை என்பதால் விருக்ஷாசனம் என்ற பெயர். முதலில் கால்களை நேராக வைத்து, நன்கு நிமிர்ந்த நிலையில் நிற்க வேண்டும். பின்னர் இடது காலை மடக்கி வலது தொடையில் பதிய வைக்க வேண்டும். மடித்து வைக்கப்பட்ட கால் 90 டிகிரி அளவில் பக்கவாட்டில் விரிந்திருக்க வேண்டும். பின்னர், மெதுவாக கைகளை இணைத்து நமஸ்காரம் செய்வதுபோல, மார்புக்கு மத்தியில் வைக்க வேண்டும். இதற்கு ‘நமஸ்கார முத்ரா’ என்று பெயர். இது முதல் நிலை.
பிறகு, கைகளை நமஸ்கார முத்ரா நிலையிலேயே உயர்த்தி, தலைக்கு மத்தியில், அதாவது உச்சந்தலையில் வைக்க வேண்டும். இதற்கு ‘கயிலாய முத்ரா’ என்று பெயர். இது 2-வது நிலை.
பிறகு, காதுகளை ஒட்டினாற்போல கைகளை நேராக மேலே உயர்த்தி, நமஸ்காரம் செய்வதுபோல வைக்க வேண்டும். இது ‘அஞ்சலி முத்ரா’ எனப்படும். இது 3-வது நிலை. ஒவ்வொரு நிலையிலும் 3 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். பின்னர் கால்களை கீழே இறக்கிவிட வேண்டும், அடுத்து, வலது காலை மடக்கி இதேபோல செய்ய வேண்டும். இப்பயிற்சியின்போது, சாதாரணமாக மூச்சுவிட வேண்டும்.
தொடர்ந்து இந்த ஆசனம் செய்தால் கால்கள் நன்கு வலுப்பெறும். புஜங்கள் விரிவடையும். முக்கியமாக, மனதை ஒருநிலைப்படுத்த முடியும். விருட்சாசனம் உடலின் சமநிலையைக் கூட்டி, மன தடுமாற்றத்தைப் போக்கும். கவனக் குவிப்புத் திறன் வளரும் என்பதால் படிக்கும் மாணவர்களுக்கு இது மிகவும் நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். துருதுருவென்று ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் மனதை ஒருநிலைப்படுத்த இந்த ஆசனம் உதவும்.