search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பஞ்சபூத முத்திரைகள்
    X
    பஞ்சபூத முத்திரைகள்

    பஞ்சபூத முத்திரைகள்

    மனித உடல் பஞ்சபூதத்தினால் ஆனது. ஒவ்வொரு விரல் நுனிகளும் ஒவ்வொரு பஞ்சபூதத்தை கட்டுப்படுத்துகின்றது. ஒரு மனிதனுடைய உடலில் பஞ்சபூதங்களும் சமமான விகிதத்தில் இருக்க வேண்டும். அதற்கு முத்திரைகள் பயன்படுகின்றது.
    1. நிலம்-பிரிதிவி முத்திரை

    செய்முறை

    பஞ்சபூதங்களில் ஒன்றான நிலம், மண்ணீரல், இரைப்பையை கட்டுப்படுத்துகின்றது. பிரிதிவி முத்திரை செய்வதின் மூலம் நிலம் சார்ந்த உள் உறுப்பான மண்ணீரலும், இரைப்பையும் நன்கு பிராண சக்தி பெற்று இயங்குகின்றது.

    ஒரு விரிப்பு விரித்து அதில் சுகாசனத்தில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமரமுடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் மோதிரவிரல் நுனியையும் கட்டை விரல் நுனியையும் தொடவும்.

    மற்ற விரல்கள் படத்தில் உள்ளது போல் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் மன ஒருநிலையுடன் பயிற்சி செய்யவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.


    2. நீர்-வருண முத்திரை

    செய்முறை

    தரையில் ஒரு விரிப்பு விரித்து நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி மிக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் கண்களை திறந்து சுண்டு விரல், பெருவிரல் நுனியை தொடவும், மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் பயிற்சி செய்யவும். இரண்டு நிமிடம் பயிற்சி செய்யவும். பின் சாதாரணமாக கைகளை வைக்கவும்.

    நீர் மூலகம் சிறுநீரகம், சிறு சிறுநீரகப்பை என்ற உள் உறுப்பை கொண்டுள்ளது. நீர் மூலகம் தலைமுடி, நகங்கள், பற்கள் போன்றவற்றை பராமரிக்கின்றது. ரத்தத்தில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து நீர் கழிவாக வெளியேற்றும். எலும்புகளை பராமரிக்கின்றது. எலும்பு மஜ்ஜைகளை உருவாக்குகின்றது. பெண்களின் கர்ப்பப்பை நீர் மூலகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. அடி முதுகு, மற்றும் இடுப்புப் பகுதிகளுக்கு தேவையான இயக்க சக்தியை அளிக்கிறது. இந்த முத்திரையை செய்தால் நீர் மூலகமும் அதைச்சார்ந்த உறுப்புகளும் நன்கு சக்தி பெற்று இயங்கும்.

    3. நெருப்பு-சூன்ய முத்திரை -

    செய்முறை

    நெருப்பு மூலகம், இதயம், சிறுகுடல் என்ற உள் உறுப்புக்களை மையமாக இயக்குகின்றது. தரையில் ஒரு விரிப்பு விரித்து நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி மிக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் கண்களை திறந்து நடுவிரலை மடித்து அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

    இந்த முத்திரை ராஜ உறுப்பான இதயம், இதய வால்வுகளை நன்றாக இயங்கச் செய்யும். அதில் எந்த ஒரு குறைபாடும் வராது. சிறுகுடலுக்கு நல்ல சக்தி ஓட்டம் கிடைக்க செய்கின்றது. ஜீரண மண்டலம் நன்றாக இயங்கும்.


    4. காற்று மூலகம்-வாயு முத்திரை

    பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று மூலகம் நுரையீரல், பெருங்குடல் என்ற உறுப்புகளை பராமரிக்கின்றது. வாயு முத்திரை மூலம் இந்த உறுப்புகளுக்கு நல்ல சக்தி கிடைக்கும்.

    விரிப்பு விரித்து நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மிக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் ஆள்காட்டி விரலை மடித்து உள்ளங்கையில் தொடும்படி வைத்து அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். லேசான அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். பின் கைகளை சாதாரணமாக வைக்கவும். இதன் மூலம் நமது நுரையீரல், பெருங்குடல் நல்ல பிராணசக்தி பெற்று சிறப்பாக இயங்கும்.

    5. ஆகாய மூலகம்-ஆகாய முத்திரை

    பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாய மூலகம், கல்லீரல், பித்தப்பை என்ற உறுப்புகளை இயக்குகின்றது. ஆகாய முத்திரை இந்த உறுப்புகளுக்கு நல்ல பிராண சக்தியை கொடுக்கின்றது.

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி மிக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் கண்களை திறந்து நடுவிரல், கட்டை விரல் நுனிகளை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.
    Next Story
    ×