என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    கணினியில் வேலை செய்பவர்களுக்கு கண்களுக்கு ஓய்வு கிடைக்காது. அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
    பால்மிங் (Palming)   ஒரு நாற்காலியில் கையின் முட்டி தொடையில் படுமாறு உட்காரவும். வலது கையால் வலது கண்ணையும், இடது கையால் இடது கண்ணையும் மூடிக்கொண்டு, சந்தோஷம்தரும் பழைய தருணங்களை நினைத்துப்பார்க்கவும். 10 நிமிடங்கள் என தினமும் மூன்றுமுறை இந்தப் பயிற்சியை செய்யலாம்.

    ஸ்விங்கிங் (Swinging)  இரண்டு கால்களுக்கு இடையே சிறிதளவு இடைவெளி விட்டு நிற்கவேண்டும். பிறகு குதிகாலை லேசாகத் தூக்கி,  கடிகாரத்தின் பெண்டுலம் போல வலப்பக்கமும் இடப்பக்கமும் தொடர்ந்து அசையவும். இடுப்பை வளைக்கக் கூடாது. அசையும் போது எதிர்ப்பக்கம் தெரியும் ஏதேனும் ஒரு பொருளை நன்றாகக் கவனிக்கவும். நீங்கள் அசையாமல் அந்தப் பொருள் அசைவது போல தோன்றும். பிறகு, கண்களை ரிலாக்ஸாக  மூடிக்கொண்டு, மீண்டும் அசையவும். ஏற்கனவே பார்த்த அந்த பொருளை நினைத்துப் பார்க்கவும்.

    கண்களை வட்டமாக சுழற்றுங்கள். பின்னர் மீண்டும் அதற்கு நேர்மாறான திசையில் வட்டமாகச் சுழற்றுங்கள். இந்தப் பயிற்சியை தினமும் நான்கு முறை செய்யுங்கள்.

    நேராக நின்றுகொள்ளுங்கள். முகத்தைத் திருப்பாமல், இரு கண்களையும் முதலில் வலது புறமாகத் திருப்பவும். பிறகு இடதுபுறமாகத் திருப்பவும். இந்தப் பயிற்சியை ஆறு முறை செய்யவும்.

    ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 20 25 தடவை கண் சிமிட்டவும். சீரான இடைவேளையில் கண் சிமிட்டினால் பார்வை தெளிவாகும். கண் அயர்வு நீங்கும்.

    தினமும் மூன்று முறை குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவவும். கைகளில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு, கண்ணிற்கு இரண்டு அங்குல தொலைவில் கைகளை வைத்து, தண்ணீரைத் தெளிக்கவும். தொடர்ந்து 20 முறை இவ்வாறு செய்யலாம்.
    சைக்கிளிங் செய்வதால், உடல் உறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் உள்ள தொடர்பினை உறுதிப்படுத்துகிறது.
    சைக்கிளிங் செய்வதால், உடல் உறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் உள்ள தொடர்பினை உறுதிப்படுத்துகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து, ஹிப்போகேம்பஸ் பகுதியில் புதிய செல்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது. இதனால், நினைவாற்றல் மேம்படும். வாரத்துக்கு 5 நாட்கள் சராசரியாக 30 நிமிடங்கள் சைக்கிளிங் செய்வது நல்லது.

    அரை மணி நேர சைக்கிளிங் பயிற்சியில் 300 கலோரிகள் வரை எரிக்கப்படும். சைக்கிளிங் செய்யும்போது முதல் 10 நிமிடங்களில் உடலில் இருக்கும் நீர் வெளியேறும். 20 நிமிடங்களுக்குப்பிறகு குளுக்கோஸ் எரிக்கப்படும். 30 நிமிடங்களுக்குப்பிறகு கொழுப்புச் சத்து குறையும்.

    சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உடற்பயிற்சியாளர் லதாவிடம் பேசினோம். ‘‘சைக்கிளிங் நமது உடலை ஃபிட்டாக வைக்க உதவும் எளிய பயிற்சி. இதயத் துடிப்பை அதிகப்படுத்துவதோடு, இதயத்தை வலுப்படுத்துகிறது. எலும்பு மற்றும் மூட்டுகளை வலுவாக்குகிறது. தசைகளை வலிமையாக்குகிறது. உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்கிறது.

    நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இருக்கும் அதிகமான கலோரிகளை எரிக்கிறது. பாதத்தால் சைக்கிளை மிதிப்பதால் கால் தசைகள் கூடுதல் பலம் பெறுகின்றன. தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டினால் கை, கால் தசைகள் உறுதி பெறுகின்றன. உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களைக் கட்டுக்குள் வைக்கின்றன. உடல் வெப்பத்தையும், வியர்வையையும் வெளியேற்றுகிறது’’ என்றார்.

    சைக்கிள்களில் பல வகைகள் உள்ளன. அதில், நம் உடல் அமைப்புக்கும், வயதுக்கும் பொருத்தமான சைக்கிள்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. நிற்கும்போது, நம்முடைய இடுப்பு உயரத்துக்கு சீட் இருக்க வேண்டும். சீட் உயரம் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால், முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். முதல் முறையாக சைக்கிளிங் செய்பவர்கள் மெதுவாகத் தொடங்கி நன்கு பழகிய பிறகு, வேகத்தையும், தொலைவையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

    தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் தசைகளின் வலிமை கூடும். தினசரி உடற்பயிற்சி செய்வது எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும்.
    உடற்பயிற்சி உடம்பில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை கூட்டி, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும். மேலும் இதயத்தில் உள்ள தமனிகளில் ரத்தம் உறைதல் உருவாக்குவதை தடுக்கும். உடற்பயிற்சி தசைகளின் வலுவை அதிகரிக்க துணை புரியும். இதனால் வயதாகும் போது தசைகளின் இயக்கத்தை நிலை நிறுத்த உதவும்.

    மனநிலையை ஊக்குவிக்கும் உணவு முறையை நம்புவதற்கு பதிலாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. ஏனெனில் உடற்பயிற்சி மூளையில் உற்பத்தியாகும் ரசாயனங்களுக்கு அதிகப்படியான தூண்டு தலை கொடுப்பதால் மனநிலையை சந்தோஷமாகவும் அமைதியாகவும் வைத்திருக்கும்.

    தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் தசைகளின் வலிமை கூடும். ஆற்றல் அதிகரிக்கும். மேலும் திசுக்களுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்க உதவிபுரியும். உடற்பயிற்சி செய்தால் கடுமையான வேலைக்கு பின் தூக்கம் வருவது போல தூக்கம் வரும். ஆனால் தூங்குவதற்கு முன் கண்டிபாக உடற்பயிற்சி செய்யக்கூடாது.

    தினசரி உடற்பயிற்சி செய்வது எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும். இதனால் ஆஸ்டியோ போரோசிஸ் மற்றும் ஆர்தரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். உடற்பயிற்சி குடல் புற்று நோய், மார்பக புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் போன்ற பல வகையான புற்று நோய்கள் வருவதை குறைக்க உதவி புரிகிறது.

    அதனால் உடற்பயிற்சி செய்து புற்று நோய் வரும் அபாயத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள். நீண்ட ஆயுள் தினசரி உடற்பயிற்சி செய்வதால் ஆயுள் பல வருடம் கூடும். ஆயுளை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் வயதானாலும் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.

    முதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள் வலியை குறைக்க உடலை சிறிது வளைத்து உடற்பயிற்சி செய்யலாம். முதுகு வலியை மருந்துகள் மூலம் குணப்படுத்துவதை விட உடற்பயிற்சி மூலம் குறைப்பதே சிறந்த வழி. படிப்பாற்றல் அதிகரிக்கும் தினசரி உடற்பயிற்சி செய்தால் மூளையின் ரசாயன அளவு அதிகரிக்கும்.

    இது புதிய மூளை அணுக்களை உருவாக்கி மூளையில் உள்ள அணுக்களின் மத்தியில் இணைப்பை உருவாக்கும். அதனால் புதிய விஷயங்களை படிக்கவும், புரியவும் உதவும். டென்னிஸ், கூடைப்பந்து போன்ற கடின பயிற்சியையும் மேற்கொண்டால் படிப்புத்திறன் மற்றும் மன ஒருமித்தல் திறன் அதிகரிக்கும்.
    தினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம்.
    ஃபிட்னெஸ்க்காக வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடை குறைய வேண்டும் என்று வாக்கிங் செய்பவர்கள்தான் அதிகம். உடல் எடை குறைந்து, பார்க்க ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த ஃபிட்னெஸ் கருவிகள் வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பலர்.

    நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவராக இருந்தால், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஐந்து நிமிடங்கள் இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள். இந்த ஐந்து நிமிடத்துக்கு சின்னதாக உங்கள் இடத்தைச் சுற்றி நடந்து வாருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு 20 நிமிடம் வாக்கிங் சென்றதன் பலனை நீங்கள் பெறலாம்.

    100 கலோரி எரிக்க...

    தினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதற்கு...

    20 நிமிடத்தில் 1 மைல் தூரத்துக்கு நடைபோடுங்கள்

    20 நிமிடத்துக்கு தோட்டத்தில் புல் வெட்டுதல் அல்லது செடி நடும் வேலை செய்யுங்கள்

    30 நிமிடத்துக்கு வீட்டை சுத்தம் செய்யுங்கள்.

    10 நிமிடத்துக்கு ஓட்டப் பயிற்சி செய்யுங்கள்.

    9 நிமிடத்துக்கு ஸ்கிப்பிங் செய்யுங்கள்

    20 நிமிடத்துக்கு நன்கு குனிந்து தரையைத் துடையுங்கள்
    உடலுக்கு உறுதியும் மனதுக்கு உற்சாகமும் அளிக்க வீட்டிலேயே சில எளிய பயிற்சிகள் செய்வதன் மூலம், உடலை ஃபிட்டாகவைத்திருக்க முடியும்.
    உடலை உறுதிப்படுத்த, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க, அனைவருக்கும் ஆசைதான். உடலுக்கு உறுதியும் மனதுக்கு உற்சாகமும் அளிக்க வீட்டிலேயே சில எளிய பயிற்சிகள் செய்வதன் மூலம், உடலை ஃபிட்டாகவைத்திருக்க முடியும்.

    ஸ்டிக் சைடு பெண்ட் அண்டு லெக் லிஃப்ட் (Stick side bend and leg lift)

    சிலம்ப ஸ்டிக் அல்லது மெல்லிய மூங்கில் குச்சியை கைகள், தோள்பட்டைக்குப் பின்புறமாக நுழைத்து, நேராக நிற்க வேண்டும். கால்கள் சற்று அகட்டி இருக்கட்டும். இப்போது, வலது கையை கீழே தாழ்த்தி, அதே நேரத்தில் வலது காலை மேலே உயர்த்த வேண்டும். பின்னர், இயல்பு நிலைக்குத் திரும்பி, இடது காலுக்கும் இப்படிச் செய்ய வேண்டும்.

    பலன்கள்: இடுப்பு மற்றும் உடலின் பக்கவாட்டடில் உள்ள டிரங்க் தசையை உறுதிப்படுத்தும்.

    ஸ்டிக் ட்விஸ்ட்டிங் (Stick twisting)

    கைகள், தோள்பட்டைக்குப் பின்புறமாக ஸ்டிக்கை நுழைத்து நேராக நிற்க வேண்டும். கால்கள் சற்று அகட்டி இருக்கட்டும். இப்போது, இடுப்புப் பகுதிக்கு மேல் உடலை அப்படியே இடது மற்றும் வலது புறம் திருப்ப வேண்டும்.

    பலன்கள்: வயிறு, இடுப்பு பகுதியில் பக்கவாட்டுத் தசையை உறுதிப்படுத்தும் பயிற்சி இது.

    ஓவர் ஹெட் ஸ்டிக் சைடு பெண்ட் (Overhead stick side bend)

    ஸ்டிக்கை இரண்டு கைகளாலும் தலைக்கு மேல் உயர்த்திப்பிடிக்க வேண்டும். இப்போது, உடலை பக்கவாட்டில் நன்கு வளைக்க வேண்டும். இப்படி இருபுறமும் செய்யவும்.

    பலன்கள்: பக்கவாட்டுப் பகுதியில் உள்ள தசைகளை உறுதியாக்கி, ஃபிட்டான வடிவத்தைத் தரும்.
    வேலைக்கு போகும் பெண்களின் ஆரோக்கியத்தை பேணுவதில் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    * நேர வசதிக்கேற்ப, உங்களுக்கு பொருந்தக்கூடிய சில உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, வாரத்திற்கு இரண்டு முறை 20 நிமிடங்களுக்கு தசை வலுவூட்டும் பயிற்சிகள் சிலவற்றை செய்வது நல்லது அல்லது இடைவேளைப் பயிற்சியாக நடைப்பயிற்சி அல்லது மெது ஓட்டம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவை உடற்கட்டுக்கு ஒரு புதுப்பொலிவை அளிக்கும்.

    * வேலைக்கு போகும் பெண்களின் ஆரோக்கியத்தை பேணுவதில் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. காலை உணவில் புதிதான பழ வகைகளை சேர்த்துக் கொள்வது சிறந்தது. இதனால் பழங்களில் உள்ள குளுக்கோஸ் உடலின் இனிப்பு வேட்கையை பூர்த்தி செய்துவிடும்.

    * 3-5 பவுண்டு எடையுள்ள ‘டம்பெல்’களை பிடித்தபடி 15 நிமிடங்களுக்கு டிரட்மில்லில் பயிற்சி செய்யுங்கள். மேலும் உடலுக்கேற்ப வேகத்தை செட் செய்து கொள்ளுங்கள்.

    * கிரஞ்ச் எனும் அடிவயிற்று உடற்பயிற்சியின் போது பெரும்பாலான பெண்கள் கழுத்து தசைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகின்றனர். இது மிகவும் தவறான, எந்த பலனையும் கொடுக்காத ஒரு முறையாகும். மாறாக அடிவயிற்று தசைகளில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். மேலும் கிரஞ்ச் உடற்பயிற்சியை துவங்கும் முன்னர், நாக்கால் வாயின் மேலண்ணத்தை நன்கு ஈரப்படுத்திக் கொள்வதும் அவசியம்.

    * உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி செய்முறைகள் போன்றவற்றின் பட்டியலோடு, எந்த அளவுக்கு வெற்றிகரமாக அவற்றில் ஈடுபட்டீர்கள் என்பதை குறித்துக் கொள்ள ஒரு குறிப்பேட்டை பயன்படுத்துங்கள். அதில் நீங்கள் புதிதாக மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள், கால கட்டம், தேவைப்படும் எச்சரிக்கைகள் போன்றவற்றை பதிவு செய்து கொள்ளுங்கள்

    * பெண்களை பொறுத்தவரையில் ஒரு மணிநேர உடற்பயிற்சி செய்முறைகள் போதுமானது. எனவே அதிக நேரம் ஜிம்மில் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது களைப்பையும் சோர்வையும் ஏற்படுத்திவிடும்.

    * எப்போதுமே ஒரு திட்டமிட்ட ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். எனவே காலை உடற்பயிற்சி நேரத்தில் ஏதேனும் திடீர் விஷயம் குறுக்கிட்டால், அதனை இயல்பாக சமாளித்துக் கொள்ளுங்கள். தவறவிட்ட உடற்பயிற்சியை அந்த நாளின் பிற்பகுதியில் முடிக்கலாம் என்று நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
    உடற்பயிற்சி அளவாக செய்வதே நல்லது. உடற்பயிற்சி அதிகமானதால் உடல் ரீதியான உபாதைகள் நிறைய வரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    உடற்பயிற்சி அளவாக செய்வதே நல்லது. அது ரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்கி, உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். உடலில் இருக்கும் நுண்ணிய அழுக்குகளை வியர்வை வழியாக வெளியேற்றி நுரையீரலின் செயல்பாட்டை மேம்பட வைக்கும். தேவையற்ற கொழுப்பை கரைக்கும். உடல் பலத்தை கூட்டும். உடற்பயிற்சி அதிகமானதால் உடல் ரீதியான உபாதைகள் நிறைய வரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    உடற்பயிற்சி பற்றிய சில அறிவுரைகள் :

    உடல் இளைக்க வேண்டுமானால் உடற் பயிற்சியுடன் மருந்து சாப்பிட வேண்டும். உடல் எடை கூட வேண்டுமானால் உடற் பயிற்சியுடன் சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் அதிகமாகவும், கோடையில் குறைவாகவும் செய்ய வேண்டும். மிகவும் வயது முதிர்ந்தவர்கள், சிறு குழந்தைகள் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

    சுவாசக்கோளாறு, மூட்டுவலி, மூட்டு வீக்கம் இருப்பவர்கள், செரிமானக்கோளாறு இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது. கடினமான பயிற்சிகளைத்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. கைகளை வீசி, வேகமாக நடப்பது. நிதானமாக ஓடுவது. குனிந்து, நிமிர்ந்து கைகளை ஆட்டுவது கூட உடற்பயிற்சி தான்.

    உடற்பயிற்சி முடிந்த பின் கண்களை மூடி சில நிமிடம் அப்படியே அமர்ந்து, மனதை ஒருநிலைப்படுத்தி, கடவுளையோ அல்லது நமக்கு பிடித்த ஏதேனும் ஒன்றையோ நினைத்து தியானம் செய்வது மன அழுக்குகளை வெளியேற்றும்.

    உடற்பயிற்சி முடிந்தவுடன் குளிக்கக்கூடாது. வியர்வை உலர்ந்த பின்பே குளிக்க வேண்டும்.

    இன்று உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்தே பள்ளிகள், கல்லூரிகள், சிறிய, பெரிய தொழில் நிறுவனங்கள் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள். இப்போது ‘உலக யோகா தினம் கொண்டாடுகிறார்கள். விழிப்புணர்வு அதிகமாக்க அரசே முன் வருகிறது.

    இன்றைய சூழலில் வேலைப்பளு தாங்காமல் மன அழுத்தம் காரணமாக இளைஞர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள். யோகா, தியானம் ஆகியன மன அழுத்தத்தைக் குறைத்து மனம் சமநிலைப்பட, அமைதியாக உதவுகின்றன.
    உங்களுக்கு பொருத்தமான உடற்பயிற்சி அல்லது நீங்கள் 65 வயதைக் கடந்தவர் எனில் உங்கள் உடலின் ஸ்டமினா கோருவதைப் பொறுத்து கால அளவை நீங்களே நிர்ணயித்து கொள்ளலாம்.
    முறையான உடற்பயிற்சியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 28 வயது முதல் 68 வரையிலான வயதுடையவர்களுக்கான உடற்பயிற்சி வகைகளும், கால அவகாசமும் பார்க்கலாம். மற்றவர்களுக்கு உடற்பயிற்சி கால அளவினை உங்கள் மருத்துவரிடம் பரிந்துரைக்கலாம். உங்களுக்கு பொருத்தமான உடற்பயிற்சி அல்லது நீங்கள் 65 வயதைக் கடந்தவர் எனில் உங்கள் உடலின் ஸ்டமினா கோருவதைப் பொறுத்து கால அளவை நீங்களே நிர்ணயித்து கொள்ளலாம்.

    1. 35 முதல் 45 நிமிட நடைப்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியின் இறுதியில் ஐந்து நிமிட மூச்சுபயிற்சி.
    2. 30 நிமிட நடைப்பயிற்சியின் முடிவில் 5 நிமிட புல் அப்ஸ்.

    3. 30 நிமிட நடைப்பயிற்சியின் முடிவில் 15 நிமிட யோகா.(தேர்ந்தெடுத்த ஆசனங்கள் மட்டும்)
    4. எரோபிக் உடற்பயிற்சி எனில் 35 நிமிடங்கள், 5 நிமிட அமைதியான இருத்தல்

    5. அவுட்டோர் சைக்கிளிங் என்றால் 30 நிமிடம்
    6. உடற்பயிற்சி எந்திரங்களில் ஏரோபிக் பயிற்சி என்றால் 30 நிமிடம்

    7. டிரெட் மில் எனில் 15 +15 நிமிடங்கள் இரண்டு நிமிட இடைவேளி எடுத்துக்கொண்டு.
    8. நீச்சல் பயிற்சி - வார்ம் வாட்டர் பூல் எனில் 30 நிமிடங்கள், நார்மல் வாட்டர் எனில் 45 நிமிடங்கள்

    9. படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது( 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும், மூட்டுவலி பிரச்சனை இல்லாதவர்கள் செய்யலாம். மாடிப்படிகளில் 150 படிக்கட்டுகள் ஏறி இறங்கலாம். 30 நிமிடங்கள்)

    10. பாட்மிட்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஃபுட்பால், ஸ்குவாஸ் போன்ற விளையாட்டுகள் எனில் குறைந்தது 1 மணிநேரம்.
    இந்த பயிற்சிகள் எல்லாவற்றையும் தினமும் செய்ய வேண்டும் என்பதில்லை. அதில் உங்களுக்கு எது ஏற்றதாக இருக்குமோ அதை தேர்ந்தெடுத்து அதை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.
    அதிகாலையில் எழுந்து ஓடுவது பலருக்கும் பிடித்த உடற்பயிற்சி. உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் நடைபயிற்சியில் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.
    அதிகாலையில் எழுந்து ஓடுவது பலருக்கும் பிடித்த உடற்பயிற்சி. அது உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் புத்துணர்ச்சி தருகிறது. ஆனால் ஓடுவதில் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

    அவை...

    * உடம்பில் வலியுடன் ஓடுவதைத் தவிர்க்க வேண்டும். காரணம் அந்த வலி, நம் உடலில் ஏதேனும் உள்காயம் ஏற்பட்ட அறி குறியாக இருக்கலாம்.

    * ஓட்டத்துக்கு உரிய ஷூக்களை அணிந்து ஓட வேண்டும். சாதாரண காலணி அணிந்து கொண்டு ஓடக்கூடாது.

    * ஷூவின் உழைப்பு, தரம் பார்த்து வாங்கு வதுடன், பாதங்கள் வைக்கும் இடத்தில் கூடுதல் பேட் இருக்கும் ஷூக்களாக வாங்க வேண்டும்.

    * ஓட்டத்துக்கு இடையூறில்லாத, உடம்புடன் ஒட்டிய ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும்.

    * தொடர்ந்து முன் பக்கமாக குனிந்திருந்தால், முதுகு வலி பிரச்சினை ஏற்படும். எனவே அதனை தடுக்க, ஓடும்போது உடலை நேர் நிலையில் வைத்து ஓடுவது மிகவும் அவசியமாகும்.

    * ‘வார்ம் அப்’ எதுவும் செய்யாமல் நேரடியாக ஓடத் தொடங்குவது சரியல்ல. ஏனெனில் அதனால் தசைவலி, மூட்டுப் பிடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

    * நாலு சுவருக்குள் டிரெட்மில்லில் ஓடுவதை விட, திறந்தவெளியில் ஓடுவது நலம் பயக்கும்.

    * தினமும் ஓட்டம், மெல்லோட்டம் போன்ற எந்தப் பயிற்சியை செய்யத் தொடங்கினாலும், நம்மால் முடிந்த அளவுக்கு மிதமாக ஈடுபட வேண்டும்.

    * ஓடும் தூரத்தையும் படிப்படியாக அதிகரிக்கலாம். மாறாக, ஆரம்பத்தில் அதிக தூரம் ஓடிவிட்டு, பின்னர் அதைக் குறைக்கக்கூடாது.
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் மூட்டுப்பகுதி நன்கு வலுவடையும். இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    செய்முறை :

    விரிப்பில் நேராக நிற்க வேண்டும். பார்வையை ஒரு இடத்தில் பதித்து, இடது கையை மேலே உயர்த்தி, இடது கன்னத்தை ஒட்டியவாறு வைக்க வேண்டும். பின் வலது காலை பின்புறம் மடக்கி, வலது கையால் கெண்டைக் காலை பிடிக்க வேண்டும்.

    பின் மூச்சை இழுத்துக் கொண்டே, வலது காலை பின்புறமாக மேலே உயர்த்தும் போது, இடது கையை கீழே இறக்கி, இடது தோள்பட்டைக்கு முன்புறம் நீட்ட வேண்டும். பின் இடது கையின் கட்டை விரல் நுனியும், ஆள் காட்டி விரல் நுனியும் சேர்ந்திருக்க வேண்டும்.

    பின் சீரான சுவாசத்தில் சிறிது நேரம் இருந்து, மூச்சை வெளிவிட்டுக் கொண்டே காலை விலக்கி பின், இடது கையை விலக்கி சாதாரண நிலைக்கு வர வேண்டும். பிறகு காலை மாற்றி செய்ய வேண்டும். இரண்டு பக்கமும், இரண்டு முறை செய்யலாம்; ஒவ்வொரு முறையும், 20 முதல் 30 வினாடிகள் செய்யலாம்.

    பயன்கள் :

    மூட்டுப்பகுதி நன்கு வலுவடைகிறது

    ஜீரண சக்தி அதிகமாகிறது

    ஜணன உறுப்புகள் நன்கு தூண்டப்பட்டு சரியாக இயங்குகிறது

    நரம்பு சுருள் பிரச்சனை சரியாகிறது.
    யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், சுவாசம் ஒழுங்காக இயங்க ஆரம்பித்து, உங்களது இளமையின் காலம் நீடிக்கும்.
    யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், சுவாசம் ஒழுங்காக இயங்க ஆரம்பித்து, உங்களது இளமையின் காலம் நீடிக்கும்.

    யோகா பயிற்சி நமக்கு தன்னம்பிக்கையுடன் முன்னோக்கி செல்லும் ஆற்றலை கொடுக்கிறது. தினமும் தவறாமல் பயிற்சி செய்தால் கோபம், எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படும். யோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறைகிறது. மேலும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல், இயற்கையாக உடல் எடை குறைய யோகா மட்டுமே சிறந்த வழி.

    யோகா செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. தொடை, கால், தண்டுவடம் மற்றும் இடுப்பு தசைகள் வலுவடைகிறது. இடுப்பு மெலிந்து உடல் அழகிய வடிவம் பெறுகிறது. வயிற்று உறுப்புகள் நன்றாக வேலை செய்கிறது. கழிவுகள் இலகுவாக வெளியேற யோகா பயிற்சி துணைபுரிகிறது. ஜீரண சக்தி அதிகரிக்கிறது.

    வாயுக்கோளாறு, உடல் மந்த நிலைகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது. முழங்கால், மூட்டுவலிகள் பிரச்சனைகள் தீரும். சித்தாசனம், பத்மாசனம் என்ற தியான ஆசனங்களால் மனம் ஒருநிலைப்படுகிறது. தைராய்டு சுரப்பிகள் நன்றாக வேலை செய்கிறது. வயிற்று பகுதி உறுப்புகள், சிறுநீரக பிரச்சனைகள் தீரும். சுவாசம் சீரடைந்து புத்துணர்ச்சி அடைகிறது.

    * முதலில் இந்த யோகாசனப் பயிற்சிகளை செய்யும்போது சற்று தடுமாற்றமாக இருக்கும். ஆனால், தொடர்ந்து தினமும் செய்யும்போது, எளிதில் செய்யக்கூடிய அளவுக்கு உடல் வளைந்து கொடுக்கும் தன்மையைப் பெறும்.  

    * குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போ, யோகாசனம் செய்யலாம்.

    * உணவு உண்ட பிறகு யோகாசனம் செய்யக் கூடாது.  காலை உணவு, சிற்றுண்டிக்குப் பிறகு 21/2 மணி நேரம் இடைவெளி விட வேண்டும். மதிய உணவுக்குப் பிறகு, 4 மணி நேர இடைவெளி தந்து யோகப் பயிற்சி செய்யலாம்.

    * ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் செய்யக் கூடாது. உடலைத் தளர்த்தும் பயிற்சிக்குப் பிறகே ஆசனங்களைத் துவங்க வேண்டும்.

    * ஆசனங்களின் ஒவ்வொரு நிலையிலும் உடலைத் தளர்த்துவது மிக அவசியம். ஆசனங்களின் உச்ச நிலையிலும் எல்லா இறுக்கங்களையும் அகற்றவும். ஓர் ஆசனத்துக்கும் அடுத்த ஆசனத்துக்கும் இடையில் சில நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம்.    

    * சுலபமாகக் கால்களை, கைகளை அசைப்பதற்கு வசதியாக உள்ள பருத்தி ஆடைகளை உடுத்துதல் நலம்.

    * எந்த ஓர் ஆசனம் செய்த பிறகும், செய்பவர்களின் உடல் புத்துணர்ச்சியுடனும், சுகமாகவும் இருக்க வேண்டும். களைப்படைந்தோ, சக்தி இழந்தோ வியர்த்தோ போகக் கூடாது.
    சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிய நோய்தீர்க்கும் யோக பயிற்சியாகும்.
    தொன்று தொட்டே நம் மக்கள் பின்பற்றி வந்த ஓர் ஆசார முறை சூரிய நமஸ்காரம். உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரமிது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடற்பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது.

    அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது புண்ணிய பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர்.

    சூரிய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என்கிறது அதர்வண வேதம். மேற்கத்திய நாடுகள் உட்பட உலகின் எல்லா பாகங்களிலும் இந்த ஆசார முறை பிரசித்தி பெற்றிருக்கிறது. ஜிம்னாஸ்டிக், சன்பாத் என்ற பெயர்களில் சூரிய நமஸ்காரத்தை உட்படுத்தி உடற்பயிற்சிகள் செய்து வருகின்றனர்.

    சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலிலுள்ள எல்லா முட்டுகளுக்கும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய ஒளிகதிர்களும் உண்டு. கால்சியம் உற்பத்தியை கட்டுபடுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன.

    மேலும் உடலுறுப்புகள் உறுதி பெறுவதால் காச நோயனுக்களின் ஆக்கிரமிப்பையும் தடுக்கின்றன.

    தொடர்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதினால் அகால வயது முதிர்ச்சியை ஓரளவுக்கு தடை செய்யலாம். மூட்டுகள் நல்ல லாவகமடைகின்றது. தொப்பை வயிறு வருவதை கட்டுபடுத்த இயல்கின்றது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவகின்றது.

    சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் :

    * சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் சூரிய உதயமாகும் அதிகாலை நேரம்.

    * சூரிய நமஸ்காரம் எட்டு நிலைகளை வரிசையாகக் கொண்ட ஒரு யோக பயிற்சியாகும்.

    * ஒவ்வொரு சூரிய நமஸ்காரமும் மொத்தம் பன்னிரண்டு ஆசன நிலைகளை உள்ளடக்கியதாகும். பன்னிரண்டு ஆசனங்கள் இணைந்தது ஒரு சுற்று. இவ்வாறு 12 நமஸ்கார சுற்றுகள் இணைந்தது ஒரு சூரிய நமஸ்காரமாகும்.
    ×