என் மலர்
உடற்பயிற்சி
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நோய்களே வராது. நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும். மலச்சிக்கல் தீரும். தைராய்டு பிரச்சனை நீங்கும். இடுப்பு சதைகள் குறையும்.
செய்முறை
விரிப்பில் நேராக படுக்கவும். இரு கால்களையும் மெதுவாக இடுப்பிற்கு மேல் உயர்த்தவும். கைகள் இரண்டையும் இடுப்புப் பக்கத்தில் பிடிக்கவும். இதுதான் சர்வாங்காசனம்.
இப்பொழுது மெதுவாக கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் முடிந்தளவு விரிக்கவும். இப்படியே சாதாரண மூச்சில் 15 முதல் 25 நம்பர்களை என்னும் வரை நிலையாக இருக்கவும். பிறகு இரு கால்களையும் ஒன்று சேர்க்கவும்.
பின்னர் மெதுவாக கைகளின் உதவியால் கால்களை தரைக்கு இடுப்பை தளர்த்தி கொண்டு வந்து படுக்கவும். இதே போல் இரண்டு முறை செய்யவும்.
இதய பலவீனமுள்ளவர்கள், உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தும், நீரிழிவு, ஆஸ்துமா உள்ளவர்கள் யோகா ஆசிரியரின் நேரடி அறிவுரைப்படி இந்த ஆசனத்தை பயிலவும்.
மற்றபடி, ஆரோகியமாக உள்ளவர்கள் ஒரே ஒரு மறை மட்டும் யோகா வல்லுனரின் மேற்பார்வையில் இந்த ஆசனத்தை பயில்வது சிறப்பு.
பலன்கள்
என்றும் இளமையுடன் வாழலாம். நோய்களே வராது. நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும். மலச்சிக்கல் தீரும். தைராய்டு பிரச்சனை நீங்கும். இடுப்பு சதைகள் குறையும்.
ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்கும். மலட்டுத்தன்மை நீங்கும். இதயம் பாதுகாக்கப்படும். ரத்த அழுத்தம் வராது. ஆஸ்துமா, சைனஸ், டான்சில் நோய்கள் வரவே வராது.

உடற்பயிற்சி செய்வதால், உடல் எடை தான் குறையும் என்று தெரியும். ஆனால் யோகா செய்தால், ஆஸ்துமா, மூட்டு வலி, நீரிழிவு, முதுகு வலி போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியும்.
உடலில் எந்த மாதிரியான நோய்கள் ஏற்பட்டாலும், அதனை சரிசெய்ய பல வழிகள் உள்ளன. நோயை சரிசெய்ய ஒருசில செயல்களான உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும். அதிலும் உடற்பயிற்சியை விட யோகாவிற்கு அதிக சக்தி உள்ளது. உடற்பயிற்சி செய்வதால், உடல் எடை தான் குறையும் என்று தெரியும். ஆனால் யோகா செய்தால், ஆஸ்துமா, மூட்டு வலி, நீரிழிவு, முதுகு வலி போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியும்.
ஆஸ்துமாவை யோகாவினாலேயே சரிசெய்துவிட முடியும். அதிலும் மூச்சுப் பயிற்சிகளில் ஒன்றான பிரணாயாமத்தை தினமும் செய்து வந்தால், நாளடைவில் ஆஸ்துமாவை சரிசெய்துவிட முடியும்.
பாலாசனத்தை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
போதிய இரத்த சுழற்சி உடலில் இல்லாததால், மூளைக்கு செல்லும் இரத்தத்தின் ஓட்டம் குறைவாக இருக்கும் போது ஒற்றைத் தலைவலியானது ஏற்படுகிறது. எனவே உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கு சிரசாசனம் செய்ய வேண்டும்.
முதுகு வலியைப் போக்க சூரிய நமஸ்காரத்தில் வரும் ஒரு நிலையான, இங்கே குறிப்பிட்டுள்ளதை செய்து வர வேண்டும். இதனால் முதுகு வலியை சரிசெய்யலாம்.
பலர் மூட்டு வலியால் நிறைய அவஸ்தைப்படுகின்றனர். இத்தகைய மூட்டு வலியை குணப்படுத்த சூரிய நமஸ்காரத்தில் வரும் நிலைகளை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
பிரச்சனை கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து உண்டாகும் ஒரு பிரச்சனை தான் கல்லீரல் கொழுப்பு நோய். இந்த கொழுப்புகளை கரைத்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, மிகவும் அடிப்படை யோகா நிலையான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

உடல் பருமனில் தொடங்கி மன அழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வாகிறது ‘ஸ்கிப்பிங்’ (கயிறு தாண்டும்) பயிற்சி.
உடல் பருமனில் தொடங்கி மன அழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வாகிறது ‘ஸ்கிப்பிங்’ (கயிறு தாண்டும்) பயிற்சி. இந்தப் பயிற்சியில் பல வகை உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. ‘ஸ்கிப்பிங்’ செய்வதால் கிடைக்கும் நன்மைகளாக உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். உடலின் உள் உறுப்புகளுக்கும் நரம்புகளுக்கும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக்கவலை, மன அழுத்தம் போன்றவை நீங்க உதவும்.
இதயத்துக்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும். தினமும் ‘ஸ்கிப்பிங்’ செய்வதால், உடல் மற்றும் தண்டுவடம் நேராகி உயரமான தோற்றம் கிடைக்கும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பு பலம் பெறும். கை மற்றும் கால்களின் செயல் வேகம் அதிகரிக்கும். இது ஒரு முழு உடலுக்கான பயிற்சி.
பெண்களை அதிகமாகத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற எலும்புகள் மென்மையாகிற நோய்த் தடுக்கப்பட்டு, எலும்புகள் வலுவடையும். ஸ்கிப்பிங் பயிற்சி செலவில்லாதது. எங்கும் எப்போதும் செய்யலாம். ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும். உடலின் சமநிலைத் தன்மை மற்றும் சுறுசுறுப்பை அதிகரிக்கும்.
ஸ்கிப்பிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவை:-
ஸ்கிப்பிங் எந்த அளவுக்கு உடலுக்கு முக்கியமோ, அதே அளவு ஸ்கிப்பிங் கயிற்றின் நீளம் மிக முக்கியம். கயிற்றை உங்களின் உயரத்துக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கயிற்றில் சரியான நீளத்தை தேர்வுசெய்ய, நீங்கள் கயிற்றின் மத்தியில் கால்களை வைத்து உயர்த்திப்பிடிக்க வேண்டும். அது உங்களின் வயிற்றுப் பகுதிக்கு மேல் இருந்தால் அது சரியான அளவு. ஸ்கிப்பிங் கயிற்றின் முனையில் அதிக கயிறு கையைவிட்டு வெளியே வராத அளவு நடுவில் பிடிக்க வேண்டும். ஸ்கிப்பிங் கயிற்றை கைகளில் பிடிக்கும்போது கயிற்றின் நுனியிலும் கையின் நுனியிலும் பிடிக்கக் கூடாது. அதேபோன்று அதிக கயிறு கைகளைவிட்டு வெளியில் வரும்படியும் பிடிக்கக் கூடாது. தரம் குறைவான ஸ்கிப்பிங் கயிற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அது உங்களின் பயிற்சியை கடினமானதாக மாற்றும். நல்ல தரமான கயிற்றை பயன்படுத்தவும். இது உங்கள் பயிற்சிக்கும் உங்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும்.
ஸ்கிப்பிங் யார் செய்யக் கூடாது என்றால் அதிக உயரம் கொண்டவர்கள் கயிறு தாண்டும் பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது. இதய நோயாளிகள் ஸ்கிப்பிங் பயிற்சியை தவிர்க்கவும். கணுக்கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள் முடிந்த வரை ஸ்கிப்பிங் பயிற்சியை தவிர்க்கலாம். பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுச் செய்வது நல்லது. எலும்பு முறிவு உடையவர்கள் மற்றும் சுளுக்கு ஏற்பட்டவர்கள் இந்த பயிற்சிகளை தவிர்க்கவும்.

இளவயதிலிருந்தே மூட்டுகளையும் மூட்டுகளின் இணைப்புத் தசைகளையும் பலமாக்கும் பயிற்சிகளைச் செய்து வந்தால் பிற்காலத்தில் மூட்டு வலியைத் தவிர்க்கலாம்.
உடற்பயிற்சிகளுக்கு முன் வார்ம்-அப்எந்த உடற்பயிற்சியையும் வார்ம் அப் பயிற்சிகள் செய்யாமல் தொடங்கக் கூடாது. வார்ம் அப் பயிற்சிகள் உங்கள் தசைகளைத் தளர்த்தி பயிற்சிகளுக்குத் தயார்படுத்தும். நீச்சலும், நடைப்பயிற்சியும் ஜிம்மில் போய் உடற்பயிற்சிகள் செய்ய முடியாதபோதும், வெளியூர்களுக்குச் செல்லும்போது பயிற்சிகள் செய்ய முடியாத நிலையிலும் நடைப் பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளலாம்.
உடலுக்கு வேலை கொடுப்பது உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்காதீர்கள். ஓய்விலிருப்பதை விரும்பி அதிலேயே சுகம் காணாதீர்கள். உடலுக்கு எந்தளவுக்கு வேலைகள் கொடுக்கிறீர்களோ அந்தளவுக்கு மூட்டுகளும், எலும்புகளும், தசைகளும் ஆரோக்கியமாக இருக்கும். சுயபயிற்சிகள் தவிர்ப்பது யாருக்கோ பலனளித்த பயிற்சிகளை நீங்களாக செய்யத் தொடங்க வேண்டாம். அதேபோல நீங்கள் வழக்கமாகச் செய்கிற பயிற்சிகளின் வேகத்தையோ, எண்ணிக்கையையோ திடீரென அதிகரிக்க வேண்டாம்.
இளவயதிலிருந்தே மூட்டுகளையும் மூட்டுகளின் இணைப்புத் தசைகளையும் பலமாக்கும் பயிற்சிகளைச் செய்து வந்தால் பிற்காலத்தில் மூட்டு வலியைத் தவிர்க்கலாம்.

ஸ்ட்ரெயிட் லெக் ரெயிஸ் (Straight Leg Raise)
தரைவிரிப்பின் மேல் சமதளமாக மல்லாந்து படுத்துக் கொள்ளவும். ஒரு காலை லேசாக மடக்கி, உள்ளங்கால் தரையைத் தொடும்படி வைத்துக் கொள்ளவும். இன்னொரு காலை வளைக்காமல் நேராக நீட்டியபடி உங்களால் முடிந்த உயரத்துக்குத் தூக்கவும். ஒவ்வொரு காலுக்கும் இதே போல 10 முதல் 15 முறைகள் செய்யவும்.
ஹாம்ஸ்ட்ரிங் கர்ல் (Hamstring Curl)
தரைவிரிப்பின் மேல் குப்புறப்படுத்துக் கொள்ளவும். கால்களை மடக்கி உங்கள் குதிகால் பகுதியானது பிட்டப்பகுதியைத் தொடும்படி மடக்கவும். அதே நிலையில் சில நொடிகள் இருந்துவிட்டுப் பழைய நிலைக்குத் திரும்பவும். 15 முறை செய்யவும்.நின்ற நிலையிலும் இதைச் செய்யலாம். நாற்காலியின் பின்பக்கத்தைப் பிடித்தபடி நின்றுகொள்ளவும். ஒவ்வொரு காலாக உயர்த்தி குதிகால் பிட்டத்தைத் தொடும்படி உயர்த்தி பிறகு கீழே இறக்கவும். இன்னொரு காலுக்கும் செய்யவும்.
வால் ஸ்குவாட்ஸ்(Wall Squats)
சுவரில் சாய்ந்தபடி நேராக நிற்கவும். நாற்காலி இல்லாமலேயே நாற்காலியில் அமர்வது போலக் கற்பனை செய்துகொண்டு உட்காரும் நிலைக்கு வரவும். கைகள் சுவரைப் பிடித்துக்கொள்ளலாம் அல்லது கைகளைத் தொங்கவிட்டுக்கொள்ளலாம். உட்கார்ந்திருப்பது போன்ற நிலையில் 10 நொடிகள் இருக்கவும். பயிற்சியின் ஆரம்பத்தில் இது சிரமமாகத் தெரியலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் பயிற்சியின் நேரத்தை ஒவ்வொரு நொடியாக அதிகரித்தால் சிரமம் தெரியாது. இந்தப் பயிற்சிகளை தினமும் செய்துவந்தாலே மூட்டுகளும் தசைகளும் வலுவாகும்.

எங்கேயாவது அடிபட்டு மூட்டுகளில் காயம் ஏற்படும்போது அது தீவிரமான பாதிப்பைக் கொடுப்பதையும் தவிர்க்கலாம். மூட்டுகளைப் பலப்படுத்தும் பயிற்சிகள் சிலவற்றை இங்கே பார்ப்போம். இந்தப் பயிற்சிகளை வெறும் படங்களைப் பார்த்து நீங்களாக செய்ய வேண்டாம். மருத்துவர் அல்லது உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையுடன் செய்வதுதான் பாதுகாப்பானது.

ஸ்ட்ரெயிட் லெக் ரெயிஸ் (Straight Leg Raise)
தரைவிரிப்பின் மேல் சமதளமாக மல்லாந்து படுத்துக் கொள்ளவும். ஒரு காலை லேசாக மடக்கி, உள்ளங்கால் தரையைத் தொடும்படி வைத்துக் கொள்ளவும். இன்னொரு காலை வளைக்காமல் நேராக நீட்டியபடி உங்களால் முடிந்த உயரத்துக்குத் தூக்கவும். ஒவ்வொரு காலுக்கும் இதே போல 10 முதல் 15 முறைகள் செய்யவும்.
ஹாம்ஸ்ட்ரிங் கர்ல் (Hamstring Curl)
தரைவிரிப்பின் மேல் குப்புறப்படுத்துக் கொள்ளவும். கால்களை மடக்கி உங்கள் குதிகால் பகுதியானது பிட்டப்பகுதியைத் தொடும்படி மடக்கவும். அதே நிலையில் சில நொடிகள் இருந்துவிட்டுப் பழைய நிலைக்குத் திரும்பவும். 15 முறை செய்யவும்.நின்ற நிலையிலும் இதைச் செய்யலாம். நாற்காலியின் பின்பக்கத்தைப் பிடித்தபடி நின்றுகொள்ளவும். ஒவ்வொரு காலாக உயர்த்தி குதிகால் பிட்டத்தைத் தொடும்படி உயர்த்தி பிறகு கீழே இறக்கவும். இன்னொரு காலுக்கும் செய்யவும்.
வால் ஸ்குவாட்ஸ்(Wall Squats)
சுவரில் சாய்ந்தபடி நேராக நிற்கவும். நாற்காலி இல்லாமலேயே நாற்காலியில் அமர்வது போலக் கற்பனை செய்துகொண்டு உட்காரும் நிலைக்கு வரவும். கைகள் சுவரைப் பிடித்துக்கொள்ளலாம் அல்லது கைகளைத் தொங்கவிட்டுக்கொள்ளலாம். உட்கார்ந்திருப்பது போன்ற நிலையில் 10 நொடிகள் இருக்கவும். பயிற்சியின் ஆரம்பத்தில் இது சிரமமாகத் தெரியலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் பயிற்சியின் நேரத்தை ஒவ்வொரு நொடியாக அதிகரித்தால் சிரமம் தெரியாது. இந்தப் பயிற்சிகளை தினமும் செய்துவந்தாலே மூட்டுகளும் தசைகளும் வலுவாகும்.
வீட்டிலேயே டம்பெல், மெடிசின் பால் போன்ற சிறிய உடற்பயிற்சிப் பொருட்களைப் பயன்படுத்தி, 15 நிமிடங்கள் வொர்க்அவுட் செய்தால் போதும் ஈஸியா ஃபிட்டாகலாம்.
இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகரிக்கும்போது, தசைகள் டயர் போல மாறி, அழகைக் கெடுக்கும். பிடித்த உடையை அணிய முடியாமல், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கவலையில் திணறுவார்கள். இதற்கு, வீட்டிலேயே டம்பெல், மெடிசின் பால் போன்ற சிறிய உடற்பயிற்சிப் பொருட்களைப் பயன்படுத்தி, 15 மினிட்ஸ் வொர்க்அவுட் செய்தால் போதும். ஈஸியா ஃபிட்டாகலாம்.
மெடிசின் பால் ஓவர் ஹெட் (Medicine ball over head)
மெடிசின் பந்தை இரு கைகளாலும் வயிற்றுக்கு அருகே வைத்துக்கொள்ள வேண்டும். கைகளைத் தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். கைகள் காதை ஒட்டி இருக்கட்டும். இப்போது, உடலை இடது புறம் வளைத்து நிமிர்த்த வேண்டும். பின்னர், வலது புறமும் வளைக்க வேண்டும். வளையும்போது கை மூட்டுகள் மடங்கக் கூடாது. இது ஒரு செட். இப்படி மூன்று முறை செய்யலாம்.
பலன்கள்: உடலின் மேல் பகுதி முதல் கீழ் பகுதி வரை குறிப்பாக, இடுப்புத் தசைகளுக்கும் தொடைப் பகுதியில் உள்ள குவாட்ஸ், க்ளுட்ஸ், பின்னங்காலில் உள்ள காவ்ஸ் தசைகளுக்கும் நல்ல பயிற்சி. முழு உடலும் வலுவடையும்.
கெட்டில்பெல் சைடு கிரெஞ்ச் (Kettlebell Side Crunch)
கால்களை அகட்டிவைத்து, நேராக நிற்க வேண்டும். வலது கையில் கெட்டில்பெல்லைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இடது கையை மடக்கி, காதின் அருகே வைத்தபடி, இடது புறம் உடலை வளைக்க வேண்டும். கழுத்தை வளைக்கக் கூடாது. பழைய நிலைக்குத் திரும்பி, கெட்டில்பெல்லை இடது கையில் பிடித்தவாறு வலது புறம் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று முறை செய்யலாம். பலன்கள்: முன் கைகள், மேல் உடலில் உள்ள உட்புற, வெளிப்புறத் தசைகள், வயிற்றுப் பகுதி இறுக்கமாகும்.
சைடு கிரவுண்டு டச் வித் வெயிட் (Side ground touch with weight)
இரு கைகளிலும் டம்பெல்லைப் பிடித்தபடி, கால்களை அகட்டிவைத்து நேராக நிற்க வேண்டும். முன்புறம் உடலை வளைத்து, வலது கையில் உள்ள டம்பெல்லைக் கொண்டு இடது பாதத்தைத் தொட வேண்டும். இடது கை, டம்பெல்லுடன் உடலோடு ஒட்டி இருக்க வேண்டும். பிறகு, நிமிராமல் இடது கையில் உள்ள டம்பெல்லை கொண்டு வலது கால் பாதத்தைத் தொட வேண்டும். இது ஒரு செட். இப்படி, மூன்று முறை செய்ய வேண்டும். பலன்கள்: உடலின் பின் புறத் தசைகள், கை, இடுப்பு வலுவடையும். பக்கவாட்டுத் தொடை தசையான க்ளுட்ஸ், ஹேம்ஸ்ட்ரிங்க்கான நல்ல பயிற்சி.
சைட்ஸ் ஓவர் ஹெட் டம்பெல் ரைஸ் (Sides over head dumbbell raise)

கிராஸ் கிரெஞ்ச் (Cross crunch)
கால்களை அகட்டி, நேராக நிற்க வேண்டும். வலது கையை காதின் அருகே வைத்தபடி இடது காலை மடக்கி இடுப்பு உயரத்துக்குத் தூக்க வேண்டும். முதுகு வளையக் கூடாது. பழைய நிலைக்குத் திரும்பி இதே போன்று இடது புறமும் செய்ய வேண்டும். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: பின் முதுகுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். தசைகளை உறுதிப்படுத்தும். கீழே படுத்து செய்யும் பயிற்சிகளைவிட இந்தப் பயிற்சியால் வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
ஸ்டாண்டிங் ட்விஸ்டர் (Standing twister)
மெடிசின் பாலை, கையில் பிடித்தவாறு, கால்களை சற்று அகட்டி நிற்க வேண்டும். கைகளை உடலுக்கு முன் நீட்ட வேண்டும். பின் உடலைத் திருப்பாமல், வளைக்காமல் கைகளை இடது புறம் திருப்ப வேண்டும். பழைய நிலைக்கு வந்து அதேபோல் வலது புறம் நீட்ட வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும். பலன்கள்: வெளி மற்றும் உள் ஆப்ளிக்ஸ் தசைகளை மெலியச் செய்யும். வயிற்றுப் பகுதியில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கும்.
சைடு கிரெஞ்ச் (Side crunch)
கால்களை அகட்டி, நேராக நிற்க வேண்டும்.வலது கையை மடக்கி, காதின் அருகே வைக்க வேண்டும். இடது கை உடலோடு ஒட்டி இருக்கட்டும். இப்போது, உடலை வலது புறம் வளைத்து, பழைய நிலைக்குத் திரும்பி, வலது புறம் செய்ய வேண்டும். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: வயிற்றின் பக்கவாட்டில் உள்ள எக்ஸ்டர்னல் ஆப்ளிக்ஸ், இன்டர்னல் ஆப்ளிக்ஸ், வயிற்றுத் தசைகளுக்கு நல்ல பயிற்சி.

வலது கையில் டம்பெல்லைப் பிடித்தபடி, கால்களை அகட்டி நேராக நிற்க வேண்டும். இடது கையைத் தலைக்கு நேராக உயர்த்த வேண்டும். வலது காலைச் சற்றுத் திருப்பி, வலது கையில் உள்ள டம்பெல்லை இடது கையில் படும்படி வைக்க வேண்டும். இதே போன்று வலது புறமும் செய்ய வேண்டும். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும். பலன்கள்: கைகளை வலுப்படுத்தும். இடுப்பு மற்றும் தோள்பட்டை தசைகள் வலுப்பெறும்.

கிராஸ் கிரெஞ்ச் (Cross crunch)
கால்களை அகட்டி, நேராக நிற்க வேண்டும். வலது கையை காதின் அருகே வைத்தபடி இடது காலை மடக்கி இடுப்பு உயரத்துக்குத் தூக்க வேண்டும். முதுகு வளையக் கூடாது. பழைய நிலைக்குத் திரும்பி இதே போன்று இடது புறமும் செய்ய வேண்டும். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: பின் முதுகுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். தசைகளை உறுதிப்படுத்தும். கீழே படுத்து செய்யும் பயிற்சிகளைவிட இந்தப் பயிற்சியால் வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
ஸ்டாண்டிங் ட்விஸ்டர் (Standing twister)
மெடிசின் பாலை, கையில் பிடித்தவாறு, கால்களை சற்று அகட்டி நிற்க வேண்டும். கைகளை உடலுக்கு முன் நீட்ட வேண்டும். பின் உடலைத் திருப்பாமல், வளைக்காமல் கைகளை இடது புறம் திருப்ப வேண்டும். பழைய நிலைக்கு வந்து அதேபோல் வலது புறம் நீட்ட வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும். பலன்கள்: வெளி மற்றும் உள் ஆப்ளிக்ஸ் தசைகளை மெலியச் செய்யும். வயிற்றுப் பகுதியில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கும்.
சைடு கிரெஞ்ச் (Side crunch)
கால்களை அகட்டி, நேராக நிற்க வேண்டும்.வலது கையை மடக்கி, காதின் அருகே வைக்க வேண்டும். இடது கை உடலோடு ஒட்டி இருக்கட்டும். இப்போது, உடலை வலது புறம் வளைத்து, பழைய நிலைக்குத் திரும்பி, வலது புறம் செய்ய வேண்டும். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: வயிற்றின் பக்கவாட்டில் உள்ள எக்ஸ்டர்னல் ஆப்ளிக்ஸ், இன்டர்னல் ஆப்ளிக்ஸ், வயிற்றுத் தசைகளுக்கு நல்ல பயிற்சி.
உடலை வலுவாக வைத்துக்கொள்ள எல்லா உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கேற்ற, சில அடிப்படையான உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே போதும்.
உடலை வலுவாக வைத்துக்கொள்ள எல்லா உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கேற்ற, சில அடிப்படையான உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே போதும். அவைகள் என்னென்னவென்பதை அறிந்துகொள்வோம்…
* Pull Ups
ஜிம்முக்குச் செல்பவர்கள் முதலில் செய்ய வேண்டிய அடிப்படையான, முக்கியமான ஒரு பயிற்சிதான் Pull Ups. இப்பயிற்சி செய்கிறபோது கைகளால் கம்பியை பிடித்து கீழே தொங்கிய நிலையிலிருந்து, உடலை மேலே தூக்கிச் செல்ல வேண்டும். இது சிறுவர்கள் முதல் ஜிம்முக்கு செல்கிற அனைவரும் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான பயிற்சியாக இருக்கிறது. இப்பயிற்சியால் Wings என்கிற பகுதி, தோள்பட்டை, கை போன்ற உறுப்புகள் வலுவடைகிறது.
* Dips
Dips என்கிற இந்த பயிற்சியில் இரண்டு கம்பிகளின் மத்தியில் கால்களை தொங்க விட்டோ அல்லது மடக்கிய நிலையிலேயோ கம்பிகளின் மேலிருந்து கீழே இறங்கி மேலே செல்ல வேண்டும். இது அடிப்படையான, மிகவும் முக்கியமான ஒரு பயிற்சியாக இருந்து வருகிறது. இப்பயிற்சி செய்வதால் தோள்பட்டை, கை போன்ற உறுப்புகள் வலுவடைகிறது.
* Shoulder
தோள்பட்டை (Shoulder) அல்லது புஜம் வலுவடைவதற்கான பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இப்பயிற்சியின்போது இரண்டு கைகளிலும் தம்பிள்ஸ் வைத்துக்கொண்டு கைகளை பக்கவாட்டில் மேலும் கீழுமாக தூக்கி இறக்க வேண்டும்.
* Bench
மார்புப் பகுதியை வலுப்படுத்த செய்கிற பயிற்சியை Bench என்று சொல்கிறோம். இப்பயிற்சி செய்வதற்குரிய இடத்தில் படுத்த நிலையில் மார்புப் பகுதிக்கு மேல் எடையை மேலும் கீழுமாக முழுமையான நிலையில் தூக்கி இறக்க வேண்டும். கால்களை மேலே மடக்கியோ அல்லது கீழே தரையில் ஊன்றியவாறோ வைத்து செய்யலாம். கால்களை மேலே வைத்து செய்வதால் வயிற்றுப் பகுதியும் வலுவடைகிறது. இப்பயிற்சியின்போது அதிக எடை தூக்கும்போது அருகில் ஒருவரை உதவிக்கு வைத்துக்கொள்வது நல்லது.
* Squat
கால்களை வலுப்படுத்த செய்கிற முக்கியமான பயிற்சி Squat. இப்பயிற்சி செய்கிறபோது எடையை பின்புற கழுத்தின் மீது வைத்தவாறு கைகளால் பிடித்துக்கொண்டு, மெதுவாகவும், முழுமையாகவும் கீழே உட்கார்ந்து எழும்ப வேண்டும். பெரும்பாலானோர் இப்பயிற்சியை செய்யாமல் தவிர்த்து விடுகிறார்கள். இப்பயிற்சி செய்வதால் ஆண்களின் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதோடு, ஆண்களின் ஒட்டுமொத்த உடலின் வலுவும் அதிகரிக்கிறது. கால்களுக்கான இந்த பயிற்சி செய்வதால் உடலின் மேல்பாகவும் சீராக இருக்கும்.
* Biceps
கைகளின் மேல்பாகத்திலுள்ள Biceps என்கிற பகுதியை வலுப்படுத்துவதற்கு தம்பிள்ஸ் பயன்படுத்தி பயிற்சி செய்யலாம். இப்பயிற்சி செய்கிறபோது தம்பிள்ஸை மேலும் கீழுமாக மெதுவாக தூக்கி இறக்க வேண்டும். இப்பயிற்சியின்போது கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற உடல் பாகங்களை பயன்படுத்துவதோ, உடல் முழுவதையும் அசைப்பதோ கூடாது. அப்படி கைகளை மட்டுமே பயன்படுத்தி தூக்க முடிகிற எடையை முதலில் தூக்க வேண்டும். இதேபோல் சரியாக செய்து படிப்படியாக எடையை அதிகப்படுத்த வேண்டும்.
* Abs
வயிற்றுப் பகுதி (Abs) வலுவடைவதற்காக செய்கிற சிக்ஸ்பேக் பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இப்பயிற்சி செய்கிறபோது கம்பியில் கைகளால் பிடித்துக்கொண்டு கீழே தொங்கிய நிலையில், இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து மேலே தூக்கி கீழே இறக்கலாம். இதே நிலையில் கால்களை இடுப்புக்கு நேராக நீட்டி மடக்கலாம். இதே நிலையில் கால்களை இடுப்பின் பக்கவாட்டு புறத்திலும் மடக்கி நீட்டலாம்.
இவற்றை நினைவில் கொள்ளுங்கள்…
* Pull Ups, Bench, Squat, Shoulder, Biceps போன்ற அனைத்து பயிற்சிகளையும் அரை குறையாக செய்யக்கூடாது. சரியான முறையில் முழுமையான இயக்கத்துடன் செய்ய வேண்டும். இப்பயிற்சிகளை மெதுவாக செய்வதே நல்லது. அதிக பளு தூக்கும்போது அதற்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்து சற்று வேகமாக தூக்கலாம்.
ஆனால், அதன் பிறகு பளுவை இறக்கும்போது மெதுவாக இறக்க வேண்டும். இதனால் நாம் பயிற்சி மேற்கொள்கிற அந்த குறிப்பிட்ட தசைகள் நல்ல வலுவடைகிறது. தம்புள்ஸ், ஸ்குவாட், பெஞ்ச் போன்ற பயிற்சிகளை செய்யும்போது அதிக வேகத்துடன் செய்யக்கூடாது. இதுபோன்ற பயிற்சிகளை மெதுவாக செய்வதே நல்ல பலனளிக்கும்.

தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.
இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.
* முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.
* உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன.
* உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.
* கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது.
* நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க ஸ்கிப்பிங் உதவுகிறது. மிக முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும். அதனால் நீங்களும் உடலுக்கும் ஸ்கிப்பிங்தானே என எண்ணாமல் ஆரோக்கியமான வாழ்விற்கு ஸ்கிப்பிங் செய்து பயன்பெறுவோம்.

வயிறு அதை சுற்றியுள்ள பகுதிகள் மெலிந்து இருந்தால் பார்க்க அழகாக இருப்பதாக இன்றைய பெண்கள் கருதுகின்றனர். வயிற்றுப்பகுதியில் உள்ள சதையை குறைக்க உதவும் எளிய பயிற்சி இதோ...
கொடி போன்ற இடை என்பது பலரின் கனவு முக்கியமாக பெண்கள் இடை சிறுத்து இருக்க ஆசை கொள்கின்றனர்.. வயிறு அதை சுற்றியுள்ள பகுதிகள் மெலிந்து இருந்தால் பார்க்க அழகாக இருப்பதாக இன்றைய பெண்கள் கருதுகின்றனர்.
நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு சத்தானது முதலில் வயிறு அதை சுற்றியுள்ள பிரதேசங்களிலேயே அதிகம் படிகின்றது….இதுவே தொந்தி பிரச்சினைக்கு முதல் காரணமாகும் … இரண்டாவது வயிற்றில் உள்ள தசைகள் தொய்வடைவது ..
இக்காரணத்தினாலேயே பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் வயிறு பெருத்து விடுகின்றது.. முதல் காரணமான கொழுப்பினால் உண்டாகும் தொந்தி பிரச்சினைக்கு உணவுக்கட்டுப்பாடு தான் சிறந்த மருந்து அத்துடன் வயிற்றில் உள்ள தசைகளுக்கான பயிற்சியை செய்தல் மிகவும் அவசியம் ஆகும்.
வயிற்றுப்பகுதியில் உள்ள சதையை குறைக்க உதவும் எளிய பயிற்சி இதே….
முதலில் நேராக படுத்துக்கொண்டு காலை மடக்கி வைக்கவும். கைகளை தலையின் பின்புறம் வைத்துக் கொண்டு மெதுவாக மேல் எழுப்பி வர வேண்டும் முடிந்த அளவு மேல் நோக்கி வர வேண்டும். ஆனால் கால்களை அசைக்க கூடாது..
இதை கிரஞ்சஸ் எனக்கூறுவர். வயிற்று தசை பகுதிகளுக்கான வெகு முக்கிய பயிற்சி இதுவே.. இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து 15 முறை செய்துவிட்டு 20 நொடிகள் ஓய்வு பின் மீண்டும் பத்து முறை என தொடர்ந்து 3 செட்கள் செய்தல் நலம் படிப்படியாக வயிற்று பகுதியில் உள்ள சதை குறைவதை காணலாம்.
ஆரம்பத்தில் 2 செட் மட்டும் செய்தால் போதுமானது. படிப்படியாக இந்த பயிற்சியின் அளவை 2 செட்டியிலிருந்து அதிகரித்து 5 செட் வரை செய்யலாம்.

முதுகுவலிக்கான எளிமையான ஆசனம் மர்ஜரி ஆசனம். இப்பயிற்சியை தினமும் செய்துவர முதுகுவலி நன்கு குணமாகும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
முதுகுவலிக்கான எளிமையான ஆசனம் மர்ஜரி ஆசனம். ‘மர்ஜரி’ என்றால் பூனை. பூனைபோல உடலை வளைத்து செய்வதால் இந்தப் பெயர்.
இரு கால்களையும் மடித்து, குதிகால் பகுதியில் நமது பிட்டப் பகுதி நன்கு பதிந்திருக்குமாறு அமர்வதுதான் வஜ்ராசனம். முதலில் வஜ்ராசனத்தில் அமர வேண்டும். முட்டி போட்டு நின்றபடி, பூனைபோல கைகளை முன்னால் ஊன்றிய நிலையில் இருக்க வேண்டும்.
கால் முட்டியை சற்று அகல மாக வைத்து, கைகள் அதற்கு நேராக இருக்குமாறு சரிசெய்துகொள்ள வேண்டும். மூச்சை உள் இழுக்கும்போது தலையை நன்றாக மேலே தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த நிலையில் முதுகுப் பகுதி நன்கு வளைந்து, ஒரு பள்ளம்போல ஏற்படும். பிறகு மூச்சை விட்டவாறு பொறுமை யாக குனிந்து நம்முடைய தாடை மார்பைத் தொடுவதுபோல நன்றாக குனிய வேண்டும்.
இந்த நிலையில், முதுகுப் பகுதி வளைந்து, ஒரு குன்று போல காணப்படும். இவ்வாறு மாற்றி மாற்றி 3-5 முறை செய்ய வேண்டும். பிறகு, மீண்டும் வஜ்ராசனத்தில் அமரலாம். அல்லது, அப்படியே குப்புறப் படுத்து ரிலாக்ஸ் செய்துவிட்டு, பிறகு, ஒருக்களித்து ஒருபுறமாகத் திரும்பி, மல்லாக்க படுத்து சாந்தி அல்லது சவாசனத்தில் 10-15 விநாடிகள் இருந்துவிட்டு எழலாம். இப்பயிற்சியை தினமும் செய்துவர முதுகுவலி நன்கு குணமாகும்.

யோகாசனத்தில் புத்துணர்வூட்டும் புதிய பிரிவாக பிறந்திருக்கிறது, ‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம். இந்த ஆசனத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
யோகாசனத்தில் புத்துணர்வூட்டும் புதிய பிரிவாக பிறந்திருக்கிறது, ‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம். நாட்டின் உயர்தர நலவாழ்வு மையங்களிலும், ரிசார்ட்களிலும் இந்த ஆசனத்தில் மக்கள் ஆர்வத்தோடு ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள்.
தண்ணீருக்குள் நின்றபடி உடலின் மேற்பகுதி தண்ணீருக்கு வெளியே இருக்கும் படியும், சில வேளைகளில் முழுமையாக தண்ணீருக்குள் மூழ்கி மூச்சடக்கியும் இந்த தண்ணீர் ஆசனம் மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீரின் மீது மிதக்கும் பலகையிலும் ஆசனம் செய்கிறார்கள்.
கடல் நீர் நிரப்பிய நீச்சல் குளங்கள், வெந்நீர் நிரப்பிய குளியல் தொட்டிக்குள் இந்த தண்ணீர் ஆசனங்களைச் செய்கின்றனர். இதை முடித்து வெளியே வரும் போது, உடல், மனம், உணர்வு எல்லாமே புத்துணர்ச்சி பெறுவதாகக் கூறுகிறார்கள். வழக்கமாக தரையில் ஒரு விரிப்பில் அமர்ந்து செய்யப்படும் யோகாசனமே இப்படி தண்ணீருக்கடியிலும் செய்யப்படுகிறது.
யோகாசனத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற வர்களும், புதிதாக அதில் ஈடுபடுபவர்களும் தண்ணீர் ஆசனத்தை மேற்கொள்ளலாம். இதில் ஈடுபடுபவர்கள், தண்ணீரின் நலமளிக்கும் தன்மையை அனுபவப்பூர்வமாக உணரலாம்.
தண்ணீருக்குள் சூரிய நமஸ்காரம், விருக்ஷாசனம், அர்த்த சக்கராசனம், தனுராசனம் ஆகியவை பெரும்பாலும் செய்யப்படுகிறது. சூரிய நமஸ்காரமானது ஒட்டுமொத்த உடம்பின் வலுவையும் ஒழுங்கையும் கூட்டுகிறது. விருக்ஷாசனம் நிலைத்தன்மையையும், நெகிழ்வுத்தன்மையையும், அர்த்த சக்ராசனமானது முதுகெலும்பு மற்றும் பின்பகுதித் தசைகளுக்கு நெகிழ்வுத்தன்மையையும், தனுராசனம் உடம்பின் மேற்பகுதியை வளைத்து, தோள்பட்டைகளை வலுப்படுத்தவும், முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது என்கிறார்கள். வீரபத்ராசனமும் தண்ணீருக்குள் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.
வழக்கமாக தரையில் மேற்கொள்ளும் ஆசனத்தைவிட இதில் எடை குறைவாக உணரலாம். உடம்பின் சமச்சீர் நிலையை மேம்படுத்த இது கைகொடுக்கிறது. தண்ணீரின் அழுத்தமானது நுரையீரல்களை விரிவாக்க உதவுகிறது. அதனால் நாம் அதிகமான ஆக்சிஜனை உள்ளிழுக்க முடிகிறது.

இந்த பிராணாயாமம் பயிற்சியில் மூச்சை இழுத்து விடும் போது உருவாகும் வெப்பமானது வயிற்றின் உள்ளே இருக்கும் நச்சுக்கள் மற்றும் கழிவுகளை கரைக்கிறது.
முதலில் யோகா விரிப்பில் நேராக நிமிர்ந்து கண்களை மூடிய நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் முழங்கால்களில் ஊன்றிக் கொள்ள வேண்டும். மூக்கின் இரு துவாரங்கள் வழியாக நுரையீரல் நிரம்பும் வகையில் நன்றாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
வயிறு நன்றாக உள்ளிழுத்த நிலையில் இருக்க வேண்டும். இப்போது மூச்சு முழுவதும் வேகமாக வெளியே விடவேண்டும். இப்போது வயிறில் ஒரு அழுத்தம் கிடைக்கும். இதேபோல் 5 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.
பலன்கள்: மூச்சை இழுத்துவிடும்போது உருவாகும் வெப்பமானது வயிற்றின் உள்ளே இருக்கும் நச்சுக்கள் மற்றும் கழிவுகளை கரைக்கிறது. செரிமானத்தை தூண்டி, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. அனைத்து குடல் பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது.
கண்களில் உள்ள அழுத்தத்தை குறைப்பதால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை போக்குகிறது. உடலின் அனைத்து பாகங்களிலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வயிற்று சதை குறைவதுடன் மனதை அமைதிப்படுத்தி மனப்பதற்றத்தையும் குறைக்கிறது.

தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.
தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.
உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம்.காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.
காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.
பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.
உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் – சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம்.
உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.
மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.