என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    ஜிம்முக்கே போகாமல் இருப்பது பற்றி கவலைப்படுவதைவிட, கிடைக்கும் நேரத்தை உபயோகப்படுத்தி முழு பயனும் கிடைக்கக்கூடிய உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம்.
    தொடர்ந்து அலுவலக வேலை, வீட்டு வேலையும் சேர்ந்துகொண்டு உடற்பயிற்சியை ஒத்திப் போடும் சூழல் வரும். சில நேரங்களில் உடற்பயிற்சி செய்வதையே ஒரேயடியாக நிறுத்திவிடுவோம்.  இப்படி ஜிம்முக்கே போகாமல் இருப்பது பற்றி கவலைப்படுவதைவிட, கிடைக்கும் நேரத்தை உபயோகப்படுத்தி முழு பயனும் கிடைக்கக்கூடிய பயிற்சிகளைச் செய்யலாம்.’ உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கு தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி கட்டாயம் தேவை.

    இது எல்லோருக்கும், எல்லா நேரமும் பொருந்தாது என்பதால், குறைந்தபட்சம் 20 நிமிடமாவது உடற்பயிற்சி செய்தால் மட்டுமே நம் உடல் நம் சொன்ன பேச்சை கேட்கும். வார இறுதி நாட்களில் இன்னும் சற்று கூடுதலாக பயிற்சிகளைச் செய்யலாம். அதுவும் ஓவராக போய்விடக்கூடாது. செய்யும் நேரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டுமென்றால் முழு உடற்பயிற்சிகளை செய்யலாம்.

    வெளியூர் பயணங்களில் பயிற்சி செய்வதற்கான தனிப்பட்ட இடமோ, கருவிகளோ இல்லாதபோது மார்பு மற்றும் தோள்களில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட உடற்பயிற்சிகளை செய்வதை விட முழு உடலுக்கான பயிற்சிகளை செய்யலாம். அதற்கு ஸ்கிப்பிங் சரியான தேர்வாக இருக்கும். கைவசம் எப்போதும் ஸ்கிப்பிங் ரோப் வைத்திருப்பது நல்லது.

    ரன்னிங், வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றை செய்யலாம். எதுவுமே செய்ய முடியாவிட்டாலும், இருக்கவே இருக்கிறது யோகா பயிற்சிகள். இதைச் செய்வதற்கு ஒரு விரிப்பும், 6 x 3 அடி இடம் இருந்தால் மட்டும் கூட போதும். அன்றைய நாளின் இலகுவான இயக்கத்திற்கு தேவையான பயிற்சிகளை செய்துவிடலாம். குறைந்தபட்சம் சூரிய நமஸ்காரம் மட்டும் 5 முறை செய்தாலே உடலின் அனைத்து பாகங்களுக்கும் இயக்கம் கிடைத்துவிடும்.

    நின்ற இடத்திலேயே செய்யக்கூடிய ஜம்பிங், ரன்னிங், ஜாக்கிங், பிளாங்க்ஸ் போன்ற பயிற்சிகள் உடலின் முக்கியத் தசைகளை இயங்கச் செய்பவை. இவற்றை 20-30 நிமிடங்கள் செய்வதால் வயிறு, பின்னங்கால், தொடை, பின்புறம் மற்றும் இடுப்பு தசைகளுக்கு உறுதி கிடைக்கும். இந்தப் பகுதிகளிலுள்ள அதிக கொழுப்புகள் கரையும்.

    வயிறு, இடுப்பு, பின்புறம் போன்ற கீழுடல் பாகங்களில் பெரிய தசைக்குழுக்கள் இருக்கும் இவற்றை குறைக்க அதிக கலோரிகள் எரிக்க வேண்டியிருக்கும். அதற்கேற்றவாறு கால்களை மடக்கி கீழுடலை இயக்கி செய்யும் பயிற்சிகளான லன்ஜஸ், ஸ்குவாட், ஜம்ப் ஸ்க்வாட், பில்லட்ஸ், டாங்கி கிக்ஸ் போன்ற பயிற்சிகளைச் செய்யலாம்.

    வீட்டிலேயே செய்யக்கூடிய கெட்டில் பெல், டம்பெல்ஸ், புல் அப்ஸ், புஷ் அப்ஸ் போன்ற பயிற்சிகளை செய்யலாம். பிளாங்க் பயிற்சிகள் கைகள் மற்றும் தோள்களுக்கு வலு சேர்ப்பவை. இவை தவிர டபாட்டா போன்ற High Intensity Style பயிற்சிகளை செய்யலாம்.

    நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும். இதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
    ஒருவர் தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.

    இந்த பயிற்சியை காலை மாலை 1 மணி நேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் இரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70 வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும். .சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும்.

    முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

    கண்பார்வை அதிகரிக்கும் ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

    செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

    உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

    காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும்.

    அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

    இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால் பாத வெடிப்பு வலி மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.

    முதியோரும் நடக்க இயலாதோறும் பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.

    தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன் இரத்த அழுத்தம் இதய நோய் ஆஸ்துமா கண் நோய்கள் மூக்கடைப்பு தூக்கமின்மை மூட்டுவலி முதுகுவலி மன இறுக்கம் போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

    முதலில் நம் உடல், மனதில் ஆரோக்கியம் நிலைத்து நிற்கும் வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் நிலைத்து நிற்க உதவும் நின்ற பாத ஆசனத்தை தினமும் பயிற்சி செய்ய வாருங்கள்.
    வாழ்வில் பொதுவாக மனிதர்கள் பெரும்பாலும் ஆசைப்படுவது என் செல்வம் நிலைத்து நிற்க வேண்டும்,என் பெயர் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.அதற்கு முதலில் நம் உடல், மனதில் ஆரோக்கியம் நிலைத்து நிற்கும் வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின் தான் செல்வம், பெயர், புகழ் எல்லாம் நிலைத்து நிற்க பாடுபட வேண்டும். இதோ ஆரோக்கியத்தில் நிலைத்து நிற்க உதவும் நின்ற பாத ஆசனத்தை தினமும் பயிற்சி செய்ய வாருங்கள்.

    செய்முறை

    விரிப்பில் நேராக நிற்கவும். வலது காலை மடித்து பாதம் இடுப்புப் பகுதியில் வானத்தை நோக்கி இருக்குமாறு படத்திலுள்ளது போல் வைக்கவும். இப்பொழுது இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிடவும்.

    இந்நிலையில் சாதாரண மூச்சில் இருபது விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக கை, கால்களை தரையில் கொண்டு வரவும். இதேபோல் காலை மாற்றி ஒரு முறை பயிற்சி செய்யவும். காலை, மாலை இரண்டு முறை பயிற்சி செய்யவும்.

    குறிப்பு: முதலில் பயிற்சி செய்பவர்கள் நிதானமாக சுவரில் சாய்ந்து பயிற்சி செய்யவும். நன்கு முழுமையாக பயின்றவுடன் சுவரில் சாயாமல் பயிலலாம்.
    அதிகமான உடல் எடை உள்ளவர்கள், மூட்டுவலி உள்ளவர்கள், யோகாசன ஆசிரியரை அணுகி அவரின் நேரடி பார்வையில் பயிலவும்.

    முதலில் பயிற்சி செய்பவர்கள் பத்து விநாடிகள் இருக்கவும். ஒரு மாதம் கழித்து இருபது விநாடிகள் இருக்கலாம். காலையில் சூரியனை நோக்கி கிழக்கு திசையிலும், மாலையில் சூரியனை நோக்கி மேற்கு திசையிலும் செய்வது நல்ல பலனைத் தரும். சூரிய ஒளிக்கதிர்கள் உடலில் படும்படி நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் பயில்வது மிக நல்லது.

    நின்ற பாத ஆசனத்தின் பலன்கள்

    குதிகால் பாத வலி: நிறைய மனிதர்களுக்கு குதிகால் எரிச்சல், பாத வலியில் அவதிப்படுகின்றனர். அவர்கள் இவ்வாசனம் செய்தால் மிக நல்ல பலன் தரும்.
    மன அமைதி: நிறைய மனிதர்கள் நிகழ் காலத்தில் வாழ்வதில்லை. மன அமைதியின்றி குழப்பத்தில் தான் வாழ்கின்றனர். இந்த ஆசனம், மனக் குழப்பத்தை நீக்குகின்றது. மன அமைதியை அளிக்கின்றது.

    மன ஒரு நிலைப்பாடு: நின்ற பாத ஆசனம் தொடர்ந்து செய்தால் மனம் தெளிவடையும். நிறைய மனிதர்கள் வாழ்வில் சின்ன பிரச்சனைகளுக்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் இந்த ஆசனத்தை தினமும் பயிற்சி செய்தால் உள்ளம் தெளிவாகும்.

    தோள் பட்டை வலி: பொதுவாக நாம் வலது பக்கம் அல்லது இடது பக்கம் அதிகமான வலுவை கொடுப்பதால் தோள்பட்டை சரியாக சமமாக இருக்காது. இலேசாக வவப்பக்கம், அல்லது இடப்பக்கம் விலகியிருக்கும். அதனால் தோள்பட்டை வலி வரும். இந்த ஆசனம் இதனை சரி செய்து அழகான தோற்றத்தையும் கொடுக்கின்றது.

    மூட்டுவலி: உடலில் மூட்டுக்களில் தங்கியுள்ள கழிவுகள் நீங்கி, மூட்டு வலி வராமலிருக்கும்.

    நரம்புத் தளர்ச்சி: உடல் கைகால் நடுக்கம், பதட்டத்தையும், நரம்புத் தளர்ச்சியையும் நீக்கி உற்சாகத்தை கொடுக்கிறது.

    தூக்கம்: மனஅமைதி கிடைப்பதால் தேவையற்ற எண்ண ஓட்டம் அழிவதால் தூக்கம் நன்கு வரும். கோனாடு சுரப்பியின் குறைபாடுகளை நீக்குகின்றது. சிறு நீரகக் குறைபாடு அதனால் நீங்கும்.

    அடிவயிறு பருமன்: சிலருக்கு அடி வயிறு மட்டும் அதிக பருமனாக இருக்கும். இந்த ஆசனம் அந்தக் குறைபாட்டை நீக்குகின்றது. கால் பாதத்திற்கு பிரபஞ்சசக்தி: இந்த ஆசனம் செய்யும் பொழுது பிரபஞ்சத்திலுள்ள நல்ல பிராணசக்தி கால் பாதத்தில் இறங்குகின்றது. கை வழியாகவும், பிராண ஆற்றலை உள் வாங்குகின்றோம். இதனால் உடலும், மனமும் புத்துணர்வு பெற்று இயங்குகின்றது.

    மாணவர்கள்: படிக்கின்ற மாணவர்கள் இந்த ஆசனத்தை தினமும் பயிற்சி செய்தால் நல்ல மன ஒருமைப்பாடு, மன அமைதி, சிந்தனை கிடைக்கும். எதையும் சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவர்.

    உணவு: இந்த ஆசனத்துடன் முட்டைகோஸ், அவரைக்காய் அடிக்கடி உணவில் எடுத்துக்கொள்ளுங்கள். எலுமிச்சை சாறு தேனில் கலந்து இஞ்சி துண்டும் சேர்த்து வாரம் ஒருமுறை சாப்பிடுங்கள். புலால் உணவை தவிருங்கள். பசு நெய், வெண்ணை சிறிது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்தில் நிலைத்து நிற்கலாம்.
    உங்களின் உடலுக்காக தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒதுக்குங்கள். யோகாசனம் செய்வதற்கு முன்பும், பின்பும் சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
    உங்களின் உடலுக்காக தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒதுக்குங்கள். முதலில் சற்று தினசரி தடுமாற்றம் ஏற்படும். பிறகு போகப்போக அன்றாட வாழ்க்கையில் யோகா ஓர் அங்கமாக மாறிவிடும்.

    தினசரி காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக யோகாசன பயிற்சி செய்யலாம். யோகாசன பயிற்சியில் தியானம், மூச்சுப்பயற்சி, ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிராணாயாமம், அதன் பிறகு ஆசனங்கள் செய்வது நல்லது.

    நீர் ஆகாரமாக இருந்தால், அருந்திய பின் அரை மணி நேரம் கழிந்த பின்பும், எளிய சிற்றுண்டியாக இருந்தால் இரண்டு மணி நேரம் கழித்தும், முழுமையான ஆகாரமாக இருந்தால் நான்கு மணி நேரம் கழித்தும் யோகப்பயிற்சிகளை செய்யவும்.

    உங்களது உடலின் தன்மைக்கு ஏற்பவும், தினசரி பழக்கத்திற்கு ஏற்பவும் ஆரம்ப காலங்களில் குளியல் முறையை பின்பற்றவும். எப்போதும் குளித்த பின்பு யோகப்பயிற்சிகளை செய்தால் மனம் குதூகலமாக இருக்கும். யோகாசனப் பயிற்சிகளை செய்வதற்கு தரைவிரிப்பு சற்று கனமாக இருந்தால், சிலவகை ஆசனங்கள் செய்யும் பொழுது வழுக்காமல் இருக்கும்.

    யோகாசனம், தியானம், மூச்சுப்பயற்சி இவைகளை எப்போதும் கிழக்கு முகம் பார்த்தோ, அல்லது வடக்கு முகம் பார்த்தோ பயிற்சி செய்தல் நல்லது. பருத்தி துணியாலான உடைகளை அணிவது நல்லது. உடலை மிகவும் இறுக்கி, ஆசனங்கள் செய்யும் பொழுது அழுத்தி வலிப்பதாக இருக்கக்கூடாது. அதுபோலவே உள்ளாடைகள் மிகவும் தொளதொளவென்றும் இருக்கக்கூடாது.

    நேரமில்லாமல் வருந்துபவர்கள், காலை நேரத்தில் தியானம், மூச்சுப்பயற்சி செய்துவிட்டு, மாலை நேரத்தில் யோகாசனப் பயிற்சியையும் செய்யலாம். நீண்ட நேரம் வெயிலில் அலைந்தாலும், நீண்ட நேரம் கண் விழித்திருந்தாலும், அல்லது நீண்ட பிரயாணங்களில் உடல் களைத்திருந்தாலும் இரவில் சரிவர தூக்கம் இல்லாமல் தவித்த நேரத்திலும் யோகாசன உடற்பயிற்சிகளை அன்று செய்யக்கூடாது. ஏனெனில் இந்த நேரத்தில் யோகாசனப் பயிற்சி செய்தால் மேலும் மேலும் உடல் களைப்பும், உடல் வெப்பமும் அதிகரிக்கும். ஆகவே போதுமான ஓய்விற்கு பின்பு பயிற்சி செய்யவும்.

    சைவ உணவுப் பழக்கமே யோகத்திலும், உடல் நலத்திலும் மிகுந்த நன்மையைச் செய்யும். அசைவ உணவு உட்கொள்பவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டே வந்தால் சில நாட்களில் சைவ உணவின் மகத்துவத்தை உடலின் செயல்பாட்டினால் அறிந்து கொள்வீர்கள், அதற்காக யோகாசனத்தை விட்டு விடாதீர்கள்.

    யோகாசனம் செய்த பின்பு கட்டாயம் சவாசனம் என்ற ஓய்வு ஆசனத்தில் குறைந்தது 10 நிமிடங்களாவது இருக்க வேண்டும். அப்பொழுது தான் உடலின் இரத்த ஓட்டம் சரியான நிலைக்கு வரும். மேலும் வியர்வைகள் சமன்பாட்டிற்கு வரும். உடல், மனம், சுவாசம் இவைகளில் தெய்வீக காந்த அலைகள் ஊடுருவி பாயும். எனவே சவாசனம் அவசியம் செய்யவும். பணிகளில் களைப்பு அதிகரித்திருந்தாலும் சவாசனத்தின் மூலம் உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி கொள்ளலாம்.
    யோகப் பயிற்சியை முடித்துக் கொண்டு வியர்வை அடங்கிய பின்னால்தான் குளிக்க வேண்டும்.

    யோகாசனப் பயிற்சிக்குப் பின்பு 15 நிமிடங்கள் கழித்து எளிய ஆகாரங்களையோ, பழச்சாறு, அல்லது உணவு உட்கொள்ளலாம்,

    யோகாசனப் பயிற்சி செய்பவர்கள் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ அவசியம் எண்ணெய் தேய்த்து 10 நிமிடங்களுக்குள் தலை தேய்த்துக்குளித்தல் நல்லது. இதனால் கபால சூடு தணியும். நீர் கடுப்பு, வெட்டைச் சூடு இவைகள் உடலை தாக்காது. அதுபோலவே எண்ணெய் தேய்த்துக் குளிக்கும், நாளில் வெயிலில் அலைவதும், கண்விழிப்பதும், குடும்ப சுகம் பெறுவதும் கூடாது.

    யோகா பயிற்சி துவங்கும் பொழுது மாதா, பிதா, குரு, தெய்வத்தை பிரார்த்தித்து துவங்கவும். அதுபோலவே யோகப் பயிற்சியை நிறைவு செய்யும்போது சவாசனத்தை முடித்தபின் குரு வணக்கத்தோடு முடித்துக் கொள்ளவும். யோகாவை பதட்டத்துடன் பயிற்சி செய்யாமல், பொறுமையாகவும், விடா முயற்சியுடனும் பயிற்சி செய்து வந்தால் வெற்றி நிச்சயம் உங்கள் பக்கம்.

    ஆசனங்களை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ஆகிய அணைத்து தரப்பினரும் பயிற்சி செய்யலாம், ஆனால் உடல் வாகு,வேலையின் தன்மை, உணவு ஒழுக்கம், நோயின் தன்மை இவைகளுக்கேற்ப பயிற்சி செய்வது மிக மிக கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பெண்கள் கருவுற்ற காலங்களிலும், மாதவிடாய் காலங்களிலும், உடல் பயிற்சி இயக்கமான ஆசனங்களை தவிர்த்து, தியானமும் மூச்சுப்பயிற்சி முறைகளிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நன்கு சவாசனத்தில் ஓய்வு பெற வேண்டும். பகல் உறக்கத்தை தவிர்த்தல் நல்லது.

    காலையில் பழவகைகளையும், அல்லது திரவ கஞ்சி போன்றவற்றையும், மதியம் முழு அளவில் உணவினையும், இரவில் பழவகைகள் அல்லது திரவ ஆகாரங்களை யோகா சாதகர்கள் எடுத்துக் கொள்வது மிக நல்லது.

    யோகப் பயிற்சியில் அதிக ஆர்வமும் மிக உன்னதமான பல சித்திகளை பெறவும் ஆசை கொண்டவர்கள், கட்டாயம் நொறுக்குத்தீனிகளை தவிர்க்கவும். மேலும் தேவையில்லாமல் மூச்சுக் காற்று(ஆவி) போகும்படி தொணதொணவென்று பேசிக் கொண்டிருக்கக் கூடாது. 
    கடுமையான உடற்பயிற்சி, கடுமையான டயட் போன்றவை மட்டும் எடை குறைக்க காரணிகளாக அமைந்துவிடுவது இல்லை. திட்டமிடுதல் மிக மிக அவசியம்.
    ஒரு மாதத்திற்கு எவ்வளவு எடை உங்களால் குறைக்க முடியும்? இதை முதலில் என்றாவது யோசித்து கணக்கிட்டு செயல்பட்டு இருக்கிறீர்களா? கடுமையான உடற்பயிற்சி, கடுமையான டயட் போன்றவை மட்டும் எடை குறைக்க காரணிகளாக அமைந்துவிடுவது இல்லை. திட்டமிடுதல் மிக மிக அவசியம்.

    இலக்கே இல்லாமல், உழைப்பை மட்டும் கொடுத்தால், எடை குறைவது குறித்த எந்த புரிதலும் இல்லாமல் போய்விடும். ஒருக்கட்டத்தில் நீங்கள் சோர்ந்து, உடற்பயிற்சியை கூட நிறுத்த நேரிடும்.

    நம்மில் பலரும், உடலைக் குறைக்கிறேன் என சபதம் எடுத்து இப்படி வீணாய்ப் போனதுண்டு.

    ஆகையால், ஒரு மனிதனால் வாரத்தில் எவ்வளவு கிலோ வரை உடல் எடையைக் குறைக்க முடியும் என்பதற்கான விடையை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

    நோய்த் தடுப்பு மற்றும் காத்தல் அமைப்பின் அறிக்கை படி, ஒரு மனிதனால், வாரத்திற்கு 500 கிராம் முதல் 1 கிலோ வரை எடை குறைக்க முடியுமாம்(உங்கள் உடல் எடையைப் பொறுத்து). மாதத்திற்கு 2 கிலோ முதல் 4 கிலோ வரை மட்டுமே குறைக்க முடியுமாம். கலோரிகளை எரிப்பதன் மூலமே, உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது நமக்கு தெரியும். ஒரு பவுண்ட் எடையை (0.45 கி) குறைக்க, நீங்கள் 35,000 கலோரிகளை எரிக்க வேண்டும்.

    ஆய்வின் படி, ஆரோக்கியமான முறையில் நீங்கள் எடை குறைக்க வேண்டுமெனில், ஒரு நாளைக்கு 500 - 1000 கலோரிகளை, குறைவான உணவு எடுத்துக் கொள்ளுதல் மற்றும் அதிக உடற்பயிற்சி செய்வதன் மூலம் எரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
    உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம் காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
    நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. இதை மாற்றி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டால் நோயற்றவாழ்வு வாழலாம்.  உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கியமான விஷயங்களைப் பட்டியலிட்டால் அந்தப் பட்டியலின் முதன்மையான இடத்தில் உடற்பயிற்சி இருக்கும்.  

    உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம் காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது. உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன் மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

    உடற்பயிற்சியில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஸ்டென்ர்த்தனிங் டிரைனிங். இரண்டு கார்டியோ எக்சசைஸ். தசைகளை வலுப்படுத்துவதற்கானது முதல்வகை. உடலில் இருக்கும் கொழுப்பை அகற்றுவதற்காக செய்யும் பயிற்சிகள் இரண்டாவது வகை (ட்ரெட் மில், சைக்கிளிங், ஓடுதல், நடனமாடுதல், ஏரோபிக்ஸ் செய்தல் போன்றவை கார்டியோ பயிற்சியாகும்).

    இவைகளை தினமும் செய்தால் உடலில் இருக்கும் கொழுப்பு குறையும். தசையும் பலமாகும். இந்த இரண்டு வகை உடற்பயிற்சிகளையும் அவரவருக்குத் தேவையான அளவில் தொடர்ந்து செய்துவர வேண்டும்.  தற்போது உடல் உழைப்பு என்பது இல்லாமல் போய்விட்டது. என்ன தான் உணவுக்கட்டுப்பாடாக இருந்தாலும் உடற்பயிற்சி இருந்தால் தான் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.

    உயிர்வளி பெருக்கும் உடற்பயிற்சி (Aerobic Exercise) எனப்படும் இத்தகைய உடற்பயிற்சியின் மூலம் உடலில் உள்ள உறுப்புகளுக்குத் தேவையான சக்தியை பன்மடங்காகப் பெருக்க முடியும். குறிப்பாக நடைப்பயிற்சி (Walking), மெல்லோட்டம் (jogging), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) போன்றபயிற்சியின் மூலம் நமது இதயத்தை வலுவாக்க முடியும்.

    முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. தினமும் 30 நிமிடங்களில் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து முறை, முறையான உடற்பயிற்சி செய்தால் மிகவும் நல்லது. 
    `ஒரு தனிநபர் ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்' என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
    உலக நாடுகளில் உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே, உடல் இயக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் `ஒரு தனிநபர் ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்' என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

    தொடர்ச்சியாக உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உயர் ரத்தஅழுத்தம், தீவிர இதயநோய், பக்கவாதம், சர்க்கரை நோய், மனஅழுத்தம், மார்பகப் புற்றுநோய்,மலக்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எலும்புகளின் வலிமை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை அதிகரிக்க உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.

    18 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் வாரத்துக்குக் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும் அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். கூடுதல் ஆரோக்கியப் பலன்களைப் பெறுவதற்கு வாரத்துக்கு 300 நிமிடங்கள் மிதமாகவும், 150 நிமிடங்கள்  தீவிரமான உடற்பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.

    5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இளைஞர்கள் தினமும் 60 நிமிடங்கள் செய்வது நல்லது. இப்பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்கள் மனப்பதற்றம், மனஅழுத்தம் போன்ற மனநலப் பாதிப்புகளிலிருந்தும் விடுபடலாம். இப்படிச் செய்வதன் மூலம் புகைப்பிடித்தல், மது, போதைப்பழக்கம் ஆகியவற்றில் சிக்காமல் இருக்க முடியும்' என்றும் உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
    உடல் எடையை(weight) குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
    உடல் எடையை(weight) குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால் விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்று எண்ணக்கூடாது.

    உடல்(weight) எடையை குறைக்க எண்ணும்போது, "உடல் எடை மெதுவாகக் குறைந்தால் போதுமானது" என்று நினைத்து, உடல் எடையைக்(weight) குறைக்க முறையான வழிமுறைகளை, சரியாக மேற்கொண்டு வர வேண்டும்.

    உடல் எடையை(weight) குறைக்க சாப்பிடும் உணவின் அளவு குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். இதற்காக உணவை தவிர்க்கவும் கூடாது. உணவுக் கட்டுப்பாடு இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். சாதாரணமாக, தினமும் 2 கப் சோறு சாப்பிட்டால், உடல் எடையை(weight) குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும்.

    இடைபட்ட நேரத்தில் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிடலாம். அதிலும் சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து, பசி ஏற்பட்டால், அப்போது வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. பழங்கள் என்றால் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

    உடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும்(weight) ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்து வெளியேறிவிடும். முக்கியமாக அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை தினமும் 3௦ முதல் 45 நிமிடம் தொடர்ந்து செய்துவந்தால், உடல் கச்சிதமாக விரைவில் மாறிவிடும்.

    சரி நீங்கள் மேற்கொள்ள வேண்டிய 8 முக்கிய உடற்பயிற்ச்சியினை இங்கு பார்ப்போம்.

    1. பிளாங்க் உடற்பயிற்சி

    குப்புற படுத்தவாறான நிலையில், கைகளை உந்தி உடலை மேலே வைத்திருக்க வேண்டும். கால்களை நிலத்தில் ஊன்றி, இடுப்பு பகுதியை மேலே உயர்த்த வேண்டும். அப்போது தலை முதல் கால் வரை உடல் கிடைமட்டமாக இருக்கவும். அந்த நிலையிலேயே 30 முதல் 40 நொடிகள் இருக்கவும்.

    2. ஜம்பிங் ஜாக்

    கைகளை பக்கவாட்டில் தளர்ந்த நிலையில் வைத்து நேராக நிற்க வேண்டும். கால்களை ஒன்றாக சேர்த்துவைக்கவும். இப்போது இரண்டு கால்களையும் அகட்டிக் குதித்து, அதே நேரத்தில் கைகளை தலைக்கு மேல் உயர்த்தித் தட்ட வேண்டும். பிறகு, பழையபடி குதித்து கால்களை ஒன்றுசேர்த்தபடியே, கைகளை இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும். இதுபோன்று 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

    3. ஸ்கிப்பிங்

    தரம் குறைவான ஸ்கிப்பிங் கயிற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அது உங்களின் பயிற்சியைக் கடினமானதாக மாற்றும். நல்ல தரமான ஸ்கிப்பிங் கயிறைப் பயன்படுத்தவும். இது உங்கள் பயிற்சிக்கும் உங்களுக்கும் ஊக்கத்தைக் கொடுக்கும்.

    4. புஷ் அப்

    புஷ் அப் உடற்பயிற்சி செய்வது மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை செய்வதால் உடல் மிகவும் வலிமையாகிறது. தினசரி வேலைகளை செய்வதற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. உடலை திடமாகவும், தொப்பை இல்லாமலும் வைத்துக்கொள்ள இந்த உடற்பயிற்சி உதவுகிறது
     
    5. பை சைக்கிள் உடற்பயிற்சி

    அடி வயிற்று தசைகளை உறுதிப்படுத்துவதற்காக பை சைக்கிள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    6. எலிப்டிகர் ட்ரெய்னர்

    இந்த கருவியின் மூலம் எளிய உடற்பயிற்சி(weight) மேற்கொண்டு, தொப்பையை குறைக்கலாம். 30 நிமிடங்கள் பயிற்சி செய்வதன் மூலம், 300 கலோரி வரை எரிக்க முடியும்.

    7. பை சைக்கிளிங்

    சைக்கிளில் நீண்ட தூரம் பயணிக்கும் போது, அது நமது உடல் வலிமைக்கு உதவுகிறது. 30 நிமிட பயணிப்பதன் மூலம், 250-500 கலோரிகள் வரை எரிக்கலாம்.

    8. ஓடுதல்

    உடற்பயிற்சி செய்யும் போது, கலோரிகள் எரிந்து, கொழுப்பு சதவிகிதம் குறைந்துவிடுகின்றன. உடற்பயிற்சியால் வயிற்று தொப்பை குறைவது மட்டுமல்ல, பிற இடங்களில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடுகின்றன. கொழுப்பைக் கரைக்க ஓடுதல் அல்லது நடத்தல் சிறந்த உடற்பயிற்சியாகும். இதற்கு நல்ல ஷூக்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும். இவை இரண்டில் ஓடுதல் மட்டுமே வேகமாக கொழுப்பை கரைத்து விடுகிறது.
    புஜங்காசனத்தை தினமும் செய்து வந்தால் கழுத்து, முதுகுவலி, அடி முதுகு, நடு முதுகுவலிகள் நீங்கும். இன்று இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    விரிப்பில் கிழக்கு நோக்கி குப்புறப் படுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இரு கைகளையும் இதயத்தின் பக்கத்தில் வைக்கவும். கை விரல்கள் தரையில் இருக்கவேண்டும். இப்பொழுது மெதுவாக மூச்சை உள் இழுத்து தலையை உயர்த்தி முதுகை பின்பக்கமாக வளைத்து கண்களை வானத்தை நோக்கி பார்க்கவேண்டும். (படத்தை பார்க்கவும்). இந்த நிலையிலில் மூச்சடக்கி 10 விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளியில் விட்டு சாதாரண நிலைக்கு வரவும். சற்று ஓய்வெடுத்து விட்டு மீண்டும் ஒரு முறை செய்யவும். இதேபோல் காலை மாலை செய்ய வேண்டும்.

    முக்கிய குறிப்பு


    அவசரப்படாமல், நிதானமாக, பொறுமையாக செய்ய வேண்டும். எடுத்தவுடன் முழுமை நிலை வராது. முதலில் உடலை வளைக்கும் பொழுது மெதுவாக வளைக்கவும். வலி ஏற்பட்டால் நிறுத்திக் கொள்ளவும். ஒரு மாதம் தொடர்ந்து பயிற்சி செய்தால் முழுமைநிலை வரும். முதுகுத்தண்டில் அதிகவலி உள்ளவர்கள், முதுகெலும்பு விலகியிருந்தால் யோக வல்லுநரின் நேரடிப் பார்வையில் செய்யவும். சாதாரண வலி, அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்வதால் வலி, இருசக்கரம் அதிகம் ஓட்டுவதால் வலி உள்ளவர்கள் தாராளமாக இதனை செய்யலாம். பத்தே நாளில் பறந்துவிடும் முதுகுவலி. இது உண்மை.
    இந்த ஒரு ஆசனம் கழுத்து முதுகு, நடு முதுகு, அடி முதுகு எலும்புகளில் உள்ள குறையை நீக்குகிறது. முதுகெலும்பை வலிமையாக்குகின்றது.

    இந்த புஜங்காசனம் முதுகுவலியை மட்டும் போக்குவதில்லை இதோ இதன் மற்ற பலன்கள்:.


    * ஆஸ்துமா, நுரையீரல் பலவீனம், இரத்தத்தில் சளி ஆகியவற்றை (ஈஸ்னோபைல்) நீக்குகிறது.
    * கிட்னியை பலப்படுத்தி நன்றாக இயங்கச் செய்கின்றது.
    * பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளை எளிதில் போக்கும். வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளிப் போதல், அல்லது முன்பே வருதல், மாதவிடாய் சமயம் வயிற்றுவலி போன்றவைகள் நீங்கும்.
    * மலச்சிக்கல் நீங்கும்.
    * உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

    அந்த காலத்திலேயே உலகப் புகழ்பெற்ற மருத்துவ இதழின் ஆய்வுத் தகவலின்படி முதுகுவலியை 96 யோகச்சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என்று அறிவித்துள்ளனர்.  எனவே இந்த புஜங்காசனத்தை ஆண் பெண் இருபாலரும் பயிற்சி செய்து திடமான முதுகெலும்பைப் பெற்று வளமாக வாழுங்கள்.

    முத்திரை என்றால் என்ன? முத்திரை செய்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
    முத்திரை என்றால் என்ன? முத்திரை செய்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மனித உடல் பஞ்சபூதத்தின் தொகுப்பு ஆகும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், இதுவே பஞ்சபூதமாகும். இதன் தன்மைகள் நமது ஒவ்வொரு செல்லிலும் உள்ளது. இதனுடைய கட்டுப்பாடு நம் கைவிரல் நுனியில் உள்ளது.

    பெருவிரல் - நெருப்பு
    சுண்டு விரல் - நீர்
    மோதிர விரல் - நிலம்
    நடுவிரல் - ஆகாயம்
    ஆள்காட்டி விரல் -காற்று

    முத்திரை என்பது கைவிரல் நுனிகளை இணைத்து செய்வதாகும். நாம் கை விரல்களை இணைக்கவில்லை. அதன் மூலம் பஞ்சபூதத்தை இணைக்கின்றோம். அதனால் அதைச் சார்ந்த உள் உறுப்புகள் நன்றாக இயங்கும்.
    கோபத்தை முதலில் படிப்படியாக குறைத்து, பின்பு முழுமையாக கோபத்தை அழிக்கும் ஓர் முத்திரைதான் முஷ்டிமுத்திரை. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    மனிதனும் உணர்ச்சி வயப்பட்டு கோபப்படுகின்றான். அதனால் இதயபாதிப்பு, ரத்த அழுத்தம் வந்தபின் உணர்கின்றான். இனி கோபப்படக்கூடாது என்ற உணர்வில் வாழ முயற்சி செய்கின்றான். ஆனால் அந்த உணர்வு தொடர்ந்து நிற்பதில்லை. ஏன்? ஏற்கனவே பல வருடங்கள் கோபப்பட்டதால் அந்த அனுபவங்கள் உடலில் வாசனையாக பதிந்துள்ளது. அந்த மனிதப் பண்புகள் மீண்டும், மீண்டும் கோப உணர்வலைகளைத் தூண்டுகின்றது. கோபத்தை முதலில் படிப்படியாக குறைத்து, பின்பு முழுமையாக கோபத்தை அழிக்கும் ஓர் முத்திரைதான் முஷ்டிமுத்திரை.

    எப்படி செய்வது

    விரிப்பில் கிழக்குதிசை நோக்கி, பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சைவெளியிடவும். மூச்சை வெளியிடும் பொழுது நமது உடல், மனதிலுள்ள அழுத்தங்கள் (டென்ஷன்) விலகுவதாக எண்ணவும்.

    இப்பொழுது உங்கள் கட்டைவிரல் தவிர மற்ற நான்கு விரல்களையும் இறுக்கமாக உள்ளங்கையில் படுமாறு வைக்கவும். அந்த விரல்களில் அழுத்தம் கொடுக்கவும். பின் கட்டை விரலை மடித்து, மோதிர விரலின் மேல் வைத்து அழுத்திப் பிடித்துக் கொள்ளவும். அனைத்து விரல்களையும் இறுக்கமாக வைத்து இம்முத்திரையைச் செய்யவும்.

    எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்

    தினமும் பத்து நிமிடங்கள் செய்யலாம். முதலில் பயிற்சி செய்பவர்கள் ஐந்து நிமிடங்கள் செய்து, படிப்படியாக ஒரு மாத முடிவில் பத்து நிமிடங்கள் செய்யவும். காலை, மதியம், மாலை மூன்று வேளையும் செய்யுங்கள். அடிக்கடி கோபம் அடைவது குறையும். நம் உடல் பாதுகாக்கப்படும்.

    பெரும்பாலான வியாதிக்குக் காரணம் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறாததுதான். நம் உடலில் தினமும் காலை, மாலை மலம் சிரமமில்லாமல் வெளியேறினால் உடலில் வியாதியே வராது. ஆனால் இன்று மன இறுக்கத்தினாலும், தகாத உணவுப் பழக்கத்தினாலும், சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளாததாலும், மன பதட்டத்தாலும், இடைத்தீனி அதிகம் உண்பதாலும் மலச்சிக்கல் நிறைய மனிதர்களுக்கு வகுக்கின்றது. இந்த முஷ்டி முத்திரையைச் செய்தால் நிச்சயமாக மலச்சிக்கல் என்ற நோயிலிருந்து படிப்படியாக விடுதலை அடையலாம். உண்ட உணவு ஜீரணமாகாமல், வயிறு உப்பிசத்துடன் நிறைய மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த முத்திரை அஜீரணக் கோளாறுகளை நீக்குகின்றது. பசியின்மை நீங்கும்

    எப்பொழுதும் படபடப்புடன் இருப்பவர்கள் செய்யும் காரியத்தில் தவறுகள் இருக்கும். தெளிவான முடிவை எடுக்க முடியாது. இந்த முத்திரை படபடப்பை நீக்குகின்றது. மன அமைதியைத் தருகின்றது. அதனால் தெளிந்த சிந்தனையுடன் வாழலாம்.

    கூர்மாசனம் ஆசனம் பெண்களுக்கு மிகச் சிறந்த பலனை அளிக்கின்றது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மனசோர்வு, கவலை, மன அழுத்தத்தை நீக்கி மன அமைதியைக் கொடுக்கின்றது.
    நமது உடலில் தமோ குண அதிர்வலைகளான சோம்பல், பேராசை, பொறாமை, சூழ்ச்சி, காமம் போன்ற குணங்கள் இருக்கின்றன. இவைகள் எல்லாம் யோகாசனம் செய்தால் ஓடிவிடும். அவயங்களை ஒடுக்கி, புலன்களையும் தன் ஆட்சியில் கொண்டு வரும் கூர்மாசனம் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்.

    செய்முறை

    முதலில் தரையில் விரிப்பு விரித்து உட்காரவும். இரண்டு கால் பாதங்களையும் ஒன்றாக சேர்த்து இரண்டு குதிகால்களும் ஆசனவாயிற்படுமாறு பொருத்தி வைத்துக் கொள்ளவும். கைகளினால் இரண்டு கணுக்கால்களை பிடித்துக் கொண்டு மூச்சை வெளியில் விட்டு குனிந்து இருகால் பெருவிரல்களின் மத்தியில் தலையை வைத்து இரு கைகளையும் தலைக்கு முன்பாய் வைக்கவும். இந்நிலையில் சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். இதேபோல் இரண்டு முறைகள் செய்யவும்.

    பலன்கள்

    மனிதனின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது மனம். இந்த மனம் தான் புலன்களின் வழியாக இயங்குகின்றது. ஒவ்வொரு புலன்களையும் மனிதன் அடக்க முடியாமல் அல்லல்படுகிறான். இந்த ஆசனம் செய்வதால் மனதடங்குகின்றது. புலன்கள் அடங்குகின்றது. அதன் பின் அறிவைப் பயன்படுத்தி வளமாக வாழலாம்.

    நமது உடலில் உள்ள பிராண சக்தி கண்கள், காதுகள், வாய், மூக்கு, மனதில் எழும் எண்ணங்களினால் வெளியேறிக் கொண்டேயிருக்கின்றது. இதனால் உடலில் பிராண ஆற்றல் குறைகின்றது. எனவே உடல், மன சோர்வு ஏற்படுகின்றது. இந்த ஆசனம் செய்வதால் புலன் அடக்கம் ஏற்படுகின்றது. தேவையற்ற சிந்தனைகள் குறைகின்றது. இதனால் உடலில் பிராண சக்தி சேமிக்கப்படுகின்றது.

    உடல் இயங்குவதற்கு தேவையான பிராண சக்தி குறைவதால் தான் வியாதி வருகின்றது. இந்த ஆசனத்தால் புலன் ஒடுக்கம் ஏற்படுகின்றது. அதனால் பிராண சக்தி சேமிப்படைந்து உடல் உறுப்புக்கள் அனைத்தும் நன்றாக இயங்க பிராண ஆற்றல் எப்பொழுதும் உடலில் இருக்கின்றது.

    இந்த ஆசனம் கிட்னி சிறப்பாக இயங்க பயன்படுகின்றது. மேலும் கிட்னியை நன்கு திடப்படுத்தி அதன் முழு செயல்பாட்டையும் உடல் பெற்றுக் கொண்டு உழைக்க பயன்படுகின்றது.

    இந்த ஆசனம் பெண்களுக்கு மிகச் சிறந்த பலனை அளிக்கின்றது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மனசோர்வு, கவலை, மன அழுத்தத்தை நீக்கி  மன அமைதியைக் கொடுக்கின்றது. மாதவிடாய் தள்ளிப்போதல், ஒழுங்கின்மையை நீக்குகின்றது.

    அதிக ரத்தப் போக்கு, வெள்ளைப் படுதல் நீக்குகின்றது. பெண்கள் இளம் வயதிலேயே பயிற்சி செய்தால் கர்ப்பப்பையில் உள்ள  கோளாறுகள் நீங்கும். சுகபிரசவம் உண்டாகும். பெண்களின் அதிக இடுப்பு சதை வயிறுசதை கால் தொடை சதைகளை  சரிப்படுத்தி மிடுக்கான, இளமையான தோற்றத்துடன் திகழலாம். குழந்தை பிறந்த பின் முதுகு வலி வராது. அதிக சதை போடாது. நீரிழிவு வராது.

    சரியான நேரத்தில் பிரசவ வலி ஏற்படும். பிரசவமும் சுகமாக நிகழும். முதுகில் ஊசி போடுவதைத் தவிர்க்கலாம். சிறுநீர்ப்பையில் கற்கள், பித்தப்பையில் கற்கள் வராது. இருந்தாலும் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்தால் கரைந்து விடும். கழுத்து முதுகுவலி வராது. குழந்தை பிறந்த பின்பும் இந்த ஆசனத்தை மூன்று மாதம் கழித்து பெண்கள் பயிற்சி செய்யலாம். அதனால் மிக இளமையான உடல் தோற்றம் கிடைக்கும். மனமும் அமைதி பெறும்.
    ×