search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடற்பயிற்சி
    X
    உடற்பயிற்சி

    ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி அவசியம்

    `ஒரு தனிநபர் ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்' என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
    உலக நாடுகளில் உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே, உடல் இயக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் `ஒரு தனிநபர் ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்' என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

    தொடர்ச்சியாக உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உயர் ரத்தஅழுத்தம், தீவிர இதயநோய், பக்கவாதம், சர்க்கரை நோய், மனஅழுத்தம், மார்பகப் புற்றுநோய்,மலக்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எலும்புகளின் வலிமை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை அதிகரிக்க உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.

    18 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் வாரத்துக்குக் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும் அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். கூடுதல் ஆரோக்கியப் பலன்களைப் பெறுவதற்கு வாரத்துக்கு 300 நிமிடங்கள் மிதமாகவும், 150 நிமிடங்கள்  தீவிரமான உடற்பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.

    5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இளைஞர்கள் தினமும் 60 நிமிடங்கள் செய்வது நல்லது. இப்பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்கள் மனப்பதற்றம், மனஅழுத்தம் போன்ற மனநலப் பாதிப்புகளிலிருந்தும் விடுபடலாம். இப்படிச் செய்வதன் மூலம் புகைப்பிடித்தல், மது, போதைப்பழக்கம் ஆகியவற்றில் சிக்காமல் இருக்க முடியும்' என்றும் உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×