என் மலர்
இஸ்லாம்
எந்தக் காரியம் வெற்றி பெற வேண்டுமென்றாலும் நம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து விட்டு பின்னர் இறைவனிடம் முறையிட வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியாளராக இருந்த வேளையில், அவர்களிடம் ஒரு வழக்கு தீர்ப்புக்காக வந்தது. உயர் குலத்தைச் சார்ந்த ஒரு பெண் திருட்டுக் குற்றம் புரிந்தது உறுதியாயிற்று. பெருமானார் அந்தப் பெண்ணுக்குத் தண்டனையை முடிவு செய்தார்கள். உயர் குலத்தைச் சேர்ந்த பெண்ணுக்குத் தண்டனையா என்று அக்குலத்தைச் சேர்ந்தவர்கள் பதற்றமடைந்தார்கள். அப்பெண்ணை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்குடன் எவரையாவது நபிகளாரிடம் சிபாரிசுக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்தனர்.
நபிகளாரின் அன்புக்குரியவரான உசாமா இப்னு ஜைத் என்பவரை பெருமானாரிடத்தில் பரிந்துரைக்காக அனுப்பி வைத்தனர்.
உசாமாவின் பரிந்துரையைக் கேட்ட நபிகளாரின் முகம் சினத்தால் சிவந்தது. “இறைவன் விதித்த தண்டனையை மாற்றும்படியாகவா நீங்கள் பரிந்துரை செய்கிறீர்கள்” என்று கேட்டார்கள்.
பின்னர் நபிகளார் எழுந்து நின்று சொற்பொழிவு ஆற்றினார்கள்:
“உங்களுக்கு முன் வாழ்ந்து சென்ற மக்கள் அழிந்ததற்குக் காரணம் என்னவெனில் அவர்களில் செல்வாக்கு மிக்க ஒருவன் திருடினால் அவனைத் தண்டிக்காமல் விட்டு விடுவார்கள். ஆனால் பலவீனமான ஒருவன் திருடி விட்டாலோ, அவன் மீது தண்டனையை நிறைவேற்றி விடுவார்கள். இறைவன் மீது ஆணை! என்னுடைய மகள் பாத்திமா திருடினாலும் நான் அவளுடைய கையைத் துண்டிப்பேன்” (நூல்: புகாரி, முஸ்லிம்)
ஒரு தலைவன் எப்படி தன் குடிமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இது இலக்கணமாக அமைந்துள்ளது.
முதலில் ஒரு குற்றவாளிக்காக பரிந்துரை செய்வது தவறு என்பதை இந்த சம்பவத்தின் மூலமாக நபிகள் நாயகம் உணர்த்து கிறார்கள். இரண்டாவது பிறப்பு, செல்வம், அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் தண்டனை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவது மிகப் பெரும் அநீதி என்பது உணர்த்தப்படுகிறது. தண்டனைகளை நிறைவேற்றுவதில் ஆளுக்கொரு நீதி என்ற கொள்கை பின்பற்றப்பட்டால், அச்சமூகம் அழிவை நோக்கிச் செல்லும் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. இன்று நாம் வாழும் சமூகத்தில் பணம், பதவி, செல்வாக்கு படைத்தவர்கள் மிகப் பெரிய குற்றங்கள் செய்தாலும் தப்பி விட முடிகிறது. பலவீனர்கள், சிறிய குற்றம் செய்தாலும் தண்டனை பெறுவது உறுதியாகிறது. இத்தகைய நிலை சமூகத்தின் அமைதியைக் குலைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒருமுறை நபித்தோழர் பஷீர் (ரலி) அவர்கள், தம் மகனை அழைத்துக் கொண்டு அண்ணலாரின் அவைக்கு வந்தார். “இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஓர் அடிமை (பணியாள்) இருந்தான். அவனை என்னுடைய இந்த மகனுக்கு அன்பளிப்பாக வழங்கி விட்டேன்” என்று கூறினார். நபிகளார், “நீர் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கினீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த நபித் தோழர், “இல்லை” என்றார். அதனைக் கேட்ட நபிகளார், “நீர் கொடுத்த பணியாளரைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்; இறைவனுக்கு அஞ்சி வாழும்; குழந்தைகளுடன் சமமாக நடந்து கொள்ளும். நீர் செய்யும் இந்தப் பாவத்திற்கு என்னை ஏன் சாட்சியாக ஆக்கு கின்றீர். நான் ஒருபோதும் கொடுமைக்கு சாட்சியாக விளங்க மாட்டேன். உம்முடைய குழந்தைகள் அனைவரும் உம்முடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நீர் விரும்புகின்றீரா?” என்று நபிகளார் வினவினார்கள். அதற்கு அவர், “ஏன் இல்லை, அவ்வாறு தான் விரும்புகிறேன்” என்றார். நபிகளார் கூறினார்கள்: “அவ்வாறாயின் நீர் இத்தகைய (பாரபட்சமான) செயலைச் செய்யக் கூடாது.”
குழந்தைகளிடம் பாரபட்சமாக நடந்து கொள்வது மிகப் பெரிய அநீதியாகும். இது குழந்தைகளின் மனநிலையை வெகுவாகப் பாதிக்கும். குழந்தைகள் ஒருவரையொருவர் வெறுக்கும் நிலை உருவாகும். தன்னைப் பெற்றோர்கள் புறக்கணிக்கிறார்கள் என்ற தாழ்வு மனப்பான்மையும் உண்டாகும். இக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது பழிவாங்கும் மனப்பான்மையும், பெற்றோர்களை வெறுக்கும் நிலையும் ஏற்படும்.
இறைவன் எல்லாக் குழந்தைகளையும், ஒரே மாதிரியான அழகு, அறிவு, திறமை ஆற்றல்களோடு படைப்பதில்லை. ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு சிறப்பு உள்ளது. தாம் பெற்ற குழந்தைகளிடமே பாரபட்சம் காட்டுவது நல்ல பெற்றோர்களின் பண்பாக இருக்க முடியாது. வீட்டிலும், நாட்டிலும் சம நீதி பேணப்பட வேண்டும்; ஆளுக்கொரு நீதி அகற்றப்பட வேண்டும்.
ஒருவர் நபிகள் நாயகத்திடம் வந்தார். “நாயகமே! நான் எனது ஒட்டகத்தைக் கட்டி வைத்து விட்டு (அது ஓடாதிருக்க) இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமா? அல்லது அதனைக் கட்டிப் போடாமல் அவிழ்த்து விட்டு இறைவனிடம் நம்பிக்கை வைக்க வேண்டுமா?” என்று வினவினார். அதற்கு நபிகளார், “அதனைக் கட்டிப் போட்டு விட்டு இறைவன் மீது நம்பிக்கை வைப்பீராக” என்றார்கள். (நூல்: திர்மிதி)
எந்தக் காரியம் வெற்றி பெற வேண்டுமென்றாலும் நம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து விட்டு பின்னர் இறைவனிடம் முறையிட வேண்டும். எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல், இறைவனிடம் மட்டும் முறையிடுவது இறைவனுக்கு விருப்பமானதல்ல. முயற்சியை மேற்கொள்பவர்களுக்கே இறைவன் வெற்றியைத் தருகிறான்.
மனித முயற்சியும், இறையருளும் இணையும்போதே மனிதனுக்கு வெற்றி கிட்டுகிறது. இது பற்றி நபிகள் நாயகம் சொன்ன ஒரு கருத்தைக் கவனியுங்கள். “நீங்கள் இறைவன் மீது முறையாக நம்பிக்கை கொள்வீர்களாயின் பறவைகளுக்கு உணவளிப்பது போன்று உங்களுக்கும் உணவளிப்பான். அவை வெறும் வயிற்றுடன் காலையில் கிளம்புகின்றன. மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகின்றன.” (நூல்: திர்மிதி).
நபிகளார் பறவைகளை உவமையாகக் கூறி உழைப்பின் மேன்மையைத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். பறவைகள் கூட்டிலேயே இருந்து கொள்ளாமல் உணவைத் தேடி வெளியில் பறந்து செல்கின்றன. மனிதர்களும் இவ்வாறே முயன்றால் இறை உதவி கிட்டும்.
-டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்.
ஹுனைன் போரில் முஸ்லிம்களுக்கு அபார வெற்றி கிடைத்ததால், - கனீமத்துப் பொருட்கள் - அதாவது போரில் கிடைத்த பொருட்கள் ஏராளமாகக் குவிந்தன.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி “போரில் நீங்கள் வீரத்தோடு போர் புரிந்து ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருட்கள் உரியவை” என்று கூறினார்கள். அப்போது அபூ கத்தாத் (ரலி) மூன்று முறை எழுந்து நின்று எனக்காக சாட்சி சொல்ல முன் வாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
நபி(ஸல்) அவர்கள் நடந்தை விளக்குமாறு அபூ கத்தாதாவிடம் கேட்டபோது, இணைவைப்பவன் ஒருவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்து கொல்ல முயன்றதையும், அதனை அவர்கள் காத்துத் தடுத்து, தன் உயிரைப் பணயம் வைத்து அவனைக் கொன்று வென்றதையும் விளக்கினார். அவர் உண்மையைத்தான் சொன்னார் என்று மற்றவர் சாட்சி சொன்னார்.
வேறொருவர் எழுந்து நின்று, “இறைத்தூதர் அவர்களே! இவர் உண்மையைத்தான் சொன்னார். இவரால் கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்னிடம் உள்ளன. எனக்காக அவருக்கு வேறு ஏதையாவது கொடுத்துத் திருப்திப்படுத்தி விடுங்கள்” என்றார். அப்போது அபூ பக்ர் சித்திக்(ரலி), “இல்லை. அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வின் சார்பாகவும் போரிட்டு, தன்னால் கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுக்க இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்” என்று நபி(ஸல்) அவர்களின் மனதறிந்து கூறினார்கள்.
உடனே நபி(ஸல்) அவர்கள், 'அபூ பக்ர் சொல்வது சரி' என்று கூறினார்கள். கனீமத்துப் பொருட்கள் பிரிப்பதிலும் நபி(ஸல்) அவர்கள் நேர்மையையும் நியாயத்தையும் கடைப்பிடித்தார்கள்.
அபூ கத்தாதா(ரலி) அவர்களுக்குரிய பொருள் வந்து சேர்ந்தது. அந்தப் போர்க் கவசத்தை விற்றுவிட்டு பனூ ஸலமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந் தோட்டத்தை வாங்கியதாகவும், அதுதான் தாம் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு சேகரித்த முதல் சொத்தென்றும் அபூ கத்தாதா(ரலி) அவர்கள் வேறொரு குறிப்பில் சாட்சியம் அளித்துள்ளார்கள்.
ஸஹீஹ் புகாரி 3:57:3142
- ஜெஸிலா பானு.
எந்த அளவிற்கு நாம் குறைவாகப் பேசுகிறோமோ, அந்த அளவிற்கு நாவின் மூலம் நாம் பாவங்கள் செய்வது குறைந்து விடும்.
ஒரு உறுப்பை வைத்து ஒருவரை எடை போட முடியும் என்றால் அது நாக்குதான். ஒருவர் பேசும் வார்த்தைகளில் இருந்து அவரது குணாதிசயங்களையும், அவர் எப்படிப்பட்டவர் என்பதையும் நாம் தெள்ளத்தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
நாவின் வன்மையால் இவ்வையத்தில் வாழ்ந்தோரும் உண்டு, வீழ்ந்தோரும் உண்டு. அது மட்டுமின்றி நம்முடைய உறுப்புகள் யாவும் இறைவன் நமக்களித்த அருட்கொடைகளாகும். நாம் அவற்றைத் தவறாகப் பயன்படுத்தும் பட்சத்தில் அவை நமக்கு எதிராக இறைவனிடத்தில் சாட்சி சொல்லும். எனவே நம்முடைய உறுப்புகளை நல்ல விதமாகப் பயன்படுத்துகிறோமா என்பதைப் பற்றி அதிகக் கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான். ‘(நபியே!) நீங்கள் அறியாத யாதொரு விஷயத்தையும் நீங்கள் பின்தொடராதீர்கள்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப் பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்’. (17:36)
‘முஸ்லிம்களில் சிறந்தவர்கள் யார்?’ என்று ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது ‘எவருடைய நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)’ என்று பதில் அளித்தார்கள்.
மக்கள் நாவினால் மிகச் சாதாரணமாகச் செய்யும் பாவம் பொய் சொல்வதாகும். பொய்யை ஒரு பொருட்டாகவே மதிக்காத மக்கள் எடுத்தெற்கெல்லாம் பொய் சொல்கிறார் கள்.
ஒரு முஸ்லிம் பொய் சொல்வதில் இருந்து தன்னை முழுமையாக விலக்கிக் கொள்ளவேண்டும். தன்னுடைய சொல், செயல் இரண்டிலும் வேறுபாடின்றி நடந்து கொள்ள வேண்டும். வாய்மை தவறாதவர்களாக இருக்க வேண்டும். இறை வசனம் இவ்வாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறது: ‘நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். மேலும், (சொல்லிலும், செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்’. (9:119)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘நபி (ஸல்) அவர்களுக்கு பொய்யை விட மிக வெறுக்கும் விஷயம் எதுவும் கிடையாது’. (அஹ்மத்)
‘ஒரு முமின் கோழையாக இருப்பானா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று பதில் அளித்தார்கள். ‘ஒரு முமின் உலோபியாக இருப்பானா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கும் ‘ஆம்’ என்று பதில் அளித்தார்கள். ‘ஒரு முமின் பொய்யனாக இருப்பானா?’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘இல்லை’ என்று பதில் அளித்தார்கள். (முஅத்தா)
இன்னும், ‘விளையாட்டுக்குக் கூட பொய் சொல்வதை விட்டு விடுகிறவனுக்கு சுவர்க்கத்தில் மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
வேடிக்கைக்கு கூடப் பொய் சொல்வதை நாம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். மேலும் தம் இறைவனுக்கு அஞ்சிக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் மனதில் பொய் என்னும் விஷ விதையை ஒரு நாளும் விதைத்து விடக் கூடாது. நாம் எப்படியோ அப்படியே நம் குழந்தைகளும் என்பதை நினைவில் இருத்தி எந்த நிலையிலும் நாமும் பொய் சொல்லாமல் நம் குழந்தைகளுக்கும் அதே பயிற்சியை அளிக்க வேண்டும்.
இன்னும் மக்கள் தங்கள் நாவினை புறம் பேசுவதற்கும், மற்றவர்களைப் பற்றி அவதூறுகளைப் பரப்புவதற்கும் பயன்படுத்தி அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகிறார்கள். இரு மனிதர்கள் சந்தித்துக் கொண்டாலே மூன்றாவது மனிதரைப் பற்றி பேசும் பலவீனம் உடையவர்களாகவே மனிதர்கள் இருக்கின்றனர். நாம் அதைத் தவறென்று உணரும்பொழுதாவது உடனடியாக இறைவனிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
‘நம்பிக்கையாளர்களே! அநேகமாக சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாக சந்தேகங்களில் சில பாவமானவைகளாக இருக்கின்றன. (எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனுடைய மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே. இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து) விலகுபவர்களை அங்கீகரிப்பவனும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்’. (49:12)
‘எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதே பேசட்டும் அல்லது வாய் மூடி மவுனமாக இருக்கட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளது போல நாம் அதிகம் பேசுவதினாலேயே அதிகமதிகம் தவறுகள் செய்கிறோம். நம்முடைய பலவீனங்களையும் மற்றவர்கள் அறியுமாறும் செய்து விடுகிறோம். அதனால் நாவினை நாம் தேவையான நேரங்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும். எந்த அளவிற்கு நாம் குறைவாகப் பேசுகிறோமோ, அந்த அளவிற்கு நாவின் மூலம் நாம் பாவங்கள் செய்வது குறைந்து விடும்.
ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-84
எவர் பிறரின் குற்றங்களைத் தேடுகிறார்களோ, அவர்களின் குறைகளை இறைவன் தேடுகிறான்.
“ஷைத்தான் மனிதர்களைத் தீமை செய்யும்படித் தூண்டுகிறான்; தீமைகளைச் செய்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறான். எனவே குற்றம் புரிபவர்களைத் திட்டுவதன் மூலம் நாம் அவர்களை ஷைத்தானின் பக்கம்- தீய சக்திகளின் பக்கம் தள்ளி விடுகிறோம்”
ஜாகிர் என்ற பெயருடைய ஒரு நபித்தோழர் இருந்தார். அழகற்றவரான அவர் மீது நபிகளார் அன்பு வைத்திருந்தார்கள். ஒருநாள் அவர் கடைத்தெருவில் தம் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் வந்த நபிகளார், அவர் பார்க்காத வண்ணம் அவருக்குப் பின்னால் சென்று அவரைக் கட்டிப் பிடித்தார்கள். அவர், “யாரது, என்னை விடுங்கள்” என்று கூறி விட்டு, திரும்பிப் பார்த்ததும் அவ்வாறு செய்தது நபிகள் நாயகம் அவர்கள் தான் எனத் தெரிந்து கொண்டவுடன், தம் முதுகை நபியவர்களின் மார்புடன் இணைத்துக் கொண்டார்.
அப்போது நபிகளார், “இந்த அடிமையை விலைக்கு வாங்குவோர் யார்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், “இறைவனின் தூதரே! நீங்கள் என்னை விற்க முனைந்தால் என்னை எவரும் வாங்க மாட்டார்கள்” எனக் கூறியதும், நபிகளார், “இறைவனிடத்தில் நீர் விலை போகாதவர் அல்லர்; இறைவனிடம் உமக்கு அதிக விலை உண்டு” என்றார்கள். (நூல்: இப்னு ஹிப்பான்).
இந்தச் சம்பவத்தில் நமக்குப் பெரும் படிப்பினை உள்ளது. நாம் எவ்வளவு உயர்ந்தாலும் சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்களை மதிக்கவும், நேசிக்கவும், அவர்களுடன் உறவாடவும் வேண்டும். ஒரு இயக்கமோ கட்சியோ தொடங்கப்படும் போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முதலில் தம்மை ஆர்வமாக இணைத்துக் கொள்பவர்கள் ஏழைகளும், அடித்தட்டு மக்களுமே.
ஆனால் அவ்வியக்கம் வேர் விட்டு, கிளைகள் பரப்பி வளர்ந்த பிறகு, அவ்வியக்கத்தின் மூலம் பலன்களை அனுபவிக்க வசதி படைத்தவர்களும், பதவி ஆசை கொண்டவர்களும் அதில் இணைவார்கள். அவ்வேளையில், அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட சாமானியர்கள் மெல்ல ஓரங்கட்டப்படுவார்கள். தாம் வளர்த்த இயக்கத்தின் தலைவரைச் சந்திப்பதே பெரும்பாடாக ஆகி விடும். தலைவர்களும் ஏழைகளை நேசிப்பதுபோல பாவனை செய்து, சில நாடகங்களை நடத்துவார்கள்.
ஆனால் கொள்கைகளுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்பவன் ஒருபோதும் சாதாரண மக்களை விட்டு விலகி இருக்க மாட்டான். அதைத்தான் நபி களாரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. நபிகள் நாயகம் மதீனாவின் ஆட்சித் தலைவராக ஆன பின்னரும் ஏழைகளை மறக்கவில்லை.
தெருவில் பொருட்களை விற்றுக் கொண்டிருந்த ஒரு அடிமையை நபிகள் நாயகம் கட்டி அணைத்ததும், அவரிடம் நகைச்சுவையாகவும், அன்பாகவும் நடந்து கொண்ட விதம், ஒரு தலைவர், ஒரு சாதாரணத் தொண்டனையும் எப்படி மதிக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த இலக்கணமாகத் திகழ்கிறது.
“ஏழைகளை மதியுங்கள்! நேசியுங்கள்! ஏழைகளையும், தேவையுள்ளோரையும் உங்களுக்கு நெருக்கமாக ஆக்கிக் கொண்டால் இறைவன் உங்களை அவனுக்கு நெருக்கமானவர்களாக ஆக்கிக் கொள்வான்” என்ற அவரது வாக்கை செயல்படுத்தும் விதத்தில் நபிகளாரின் வாழ்வு அமைந்திருந்ததைப் பார்க்கிறோம்.
வெறுக்க வேண்டியது குற்றங்களையே! குற்றவாளிகளை அல்ல!
* நபித் தோழர்களில் ஒருவர் குடிப்பழக்கம் உள்ளவராக இருந்தார். அதற்குத் தண்டனையாக, நபிகள் நாயகத்திடம் இருந்து கசையடிகளைப் பெற்றார். ஆனால் மீண்டும் குடித்து, மீண்டும் கசையடிகளைப் பெற்றார். அவ்வேளையில், இன்னொரு நபித் தோழர், அவருக்கெதிராக இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தித்தார்: “இறைவா! இவரைச் சபிப்பாயாக! எத்தனை தடவை இவர் இவ்வாறு தண்டனை பெறுவார்”
இதனை செவியுற்ற நபிகளார், “அவ்வாறு அவரைச் சபிக்காதீர்கள். அவர் இறைவனையும், இறைத்தூதரையும் நேசிக்கிறார்; அவருடைய விஷயத்தில் ஷைத்தானுக்கு உதவி செய்யாதீர்கள்; ‘இறைவா! இத்தோழரை மன்னிப்பாயாக; அவருக்குக் கருணை காட்டுவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்” (நூல்: புகாரி)
பொதுவாக நாம் தவறு செய்பவர் களைக் கண்டால் வெறுக்கிறோம்; திட்டுகிறோம்; இந்தத் தண்டனையும், அவமானமும் அவனுக்குத் தேவை தான் என்றும் சொல்கிறோம். ஆனால் பிரச்சினையின் இன்னொரு பக்கத்தைப் பார்க்க தவறி விடுகிறோம். தவறைச் செய்வதற்கான காரணம் என்ன? தவறைச் செய்ய அவனைத் தூண்டியது எது? அவனைத் திருத்துவது எப்படி? என்பனவற்றை மறந்து விடுகிறோம். எல்லோரும் இப்படி அவனைச் சபித்தால், அவனைத் திருத்துபவர் யார்? எல்லோரும் சேர்ந்து அவனைத் திட்டினால், அவன் தவறுகளின்பால் மேலும் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.
இதனைத்தான் நபிகள் நாயகம், “அவனுக்கு எதிராக ஷைத்தானுக்கு நீங்கள் உதவி செய்யாதீர்கள்” என்றார்கள். ஷைத்தான் மனிதர்களைத் தீமை செய்யும்படித் தூண்டுகிறான்; தீமைகளைச் செய்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறான். எனவே குற்றம் புரிபவர்களைத் திட்டுவதன் மூலம் நாம் அவர்களை ஷைத்தானின் பக்கம்- தீய சக்திகளின் பக்கம் தள்ளி விடுகிறோம்.
நபிகள் நாயகம் அந்தக் குடிகாரன் மீது இரக்கம் கொண்டு அவனுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோரி, அவனுக்குக் கருணை காட்டுமாறு பிரார்த்தித்ததைப் பார்த்தோம். எனவே நாம் வெறுக்க வேண்டியது குற்றங்களையே! குற்றவாளிகளை அல்ல!
குற்றவாளிகளைத் திட்டுவது எளிது; திருத்துவதே கடினம். ஆனால் நாம் திட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறோமே தவிர, திருத்துவதற்கு முயற்சி செய்வதில்லை. அவர்களை அவமானப்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை, அவர்களைத் திருத்துவதில் காட்டுவதில்லை. குற்றவாளிகளிடம் நாம் நடந்து கொள்ளும் இந்த முறை, அவர்களை மேலும் குற்றத்தின் பக்கம் தள்ளி விடுவதாக அமைந்து விடுகிறது. குழியில் விழுந்து விட்ட மனிதனை, கை கொடுத்துத் தூக்கி விடுவதே நம் கடமையாகும். மாறாக மேலும் அவனைக் குழியில் தள்ளி மண்ணைப் போடுவதாக நமது செயல்கள் அமைந்து விடக்கூடாது.
* பிறர் குறைகளைத் தேடித் திரியாதீர்கள்.
* குறைகளைப் பகிரங்கப்படுத்தாதீர்கள்.
* பிறர் குறைகளைக் கண்டு மகிழாதீர்கள்.
“எவர் பிறரின் குற்றங்களைத் தேடுகிறார்களோ, அவர்களின் குறைகளை இறைவன் தேடுகிறான். எவருடைய குறைகளை இறைவன் தேடுகிறானோ, இறைவன் அவனைக் கேவலப்படுத்தி விடுவான். அவர் தம் வீட்டில் மறைந்திருந்தாலும் சரியே” என்ற நபிகள் நாயகத்தின் எச்சரிக்கையை மனதில் வையுங்கள்.
(நூல்: திர்மிதி)
-டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலில் கந்தூரி விழா வருகிற 16, 17-ந் தேதிகளில் நடக்கிறது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் உள்ளது. இங்குள்ள ஹசரத் சேகு முகம்மது (ஒலி), ஹசரத் சையதலி பாத்திமா (ரலி) தர்கா கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா வருகிற 16, 17 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
இதையொட்டி 16-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு கத்முல் குர்ஆன் ஓதுதல் தொடங்குகிறது. காலை 7 மணிக்கு குர்ஆன் தமாம், காலை 8 மணிக்கு அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து யானை மீது கொடி ஊர்வலம், சந்தனக்குடம் தர்காவுக்கு கொண்டு வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 9 மணிக்கு கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
10 மணிக்கு பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அஹ்மத் பிஜிலி, ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி ஆகியோர் தலைமையில் சந்தனம் மெழுகுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை மவ்லூது ஷரீப் ஓதுதல், மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்று மஜ்லீஸ் நடக்கிறது.
இரவு 7 மணிக்கு ஹதீஸ் ஆரம்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 12 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது.
17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நன்றி நவிலல் நிகழ்ச்சியும், 5.45 மணிக்கு சிறப்பு துவா ஓதுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 6 மணிக்கு நயாஸ் அஹ்மத் பிஜிலி, ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி ஆகியோர் தலைமையில் நேர்ச்சை வினியோகம் செய்தல் நடக்கிறது. விழாவையொட்டி பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கந்தூரி விழா ஏற்பாடுகளை ஆத்தங்கரை பள்ளிவாசல் பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அஹ்மத் பிஜிலி, ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி ஆகியோர் செய்துள்ளனர்.
வாருங்கள்! நபிகள் நாயகத்தின் வரலாற்றைப் படிப்போம்; நமது நிலையை உயர்த்துவோம்; வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் காண்போம்.
“நல்லவற்றைச் செய்ய வேண்டும்; அனைவருக்கும் பயன்பட்டு வாழ வேண்டும்; எல்லோரும் நம்மை நல்லோர் என்று சொல்ல வேண்டும்; இறந்த பிறகும் மக்கள் நம்மை நினைவு கூர வேண்டும்” இதுவே மனித வாழ்வின் உயர்ந்த லட்சியமாக இருக்க முடியும். இதைச் சொல்வது மிக எளிது; அடைவது அரிது. ஆனால் முடியாதது அல்ல. கொண்ட லட்சியத்தில் தெளிவும் உறுதியும் வேண்டும். நன்மை தீமை பற்றிய தெளிவான சிந்தனை, கள்ளம் கபடமற்ற உள்ளம், நல்லவர்களின் நட்பு, தீமையான சூழலில் இருந்து விலகி வாழ்தல் எனப் பல பண்புகள் இதற்குத் தேவைப்படுகின்றன.
இந்த வரிசையில் தேவைப்படும் இன்னொரு முக்கிய பண்பு, நல்லோர்களின் முன்மாதிரிகளையும், வரலாறுகளையும், வாசித்து உணர்வு, ஊக்கம் பெறுதல். அவர்களால் நல்லவர்களாக வாழ முடியும் என்றால், நம்மால் ஏன் முடியாது என்ற எண்ணம் பிறக்கும்; அவர்களின் வாழ்க்கை நம்மை நல்ல முறையில் நடத்திச் செல்லும்; நமக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழும்.
நாம் அத்தகைய முன்மாதிரியாக வாழ்ந்த ஒரு மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆவார்.
வாய்மையுடன் வாழ்ந்தவர்.
மனித நேயத்தைக் கடைப்பிடித்தவர்.
ஒழுக்கத்தின் உறைவிடமாகத் திகழ்ந்தவர்.
தீமைகளுக்கு எதிராகப் புரட்சி செய்தவர்.
எளிமை, அடக்கத்தின் திருவுருவாக வாழ்ந்து காட்டியவர்.
வீரமும், ஈரமும் ஒருங்கே அமையப் பெற்றவர்.
இன, மத, மொழி பேதமின்றி அனைவரையும் சமமாக நடத்தியவர்.
சமாதானத்தின் தூதுவர்.
மேலும்,
நல்ல கணவராக, தந்தையாக
நல்ல அண்டை வீட்டுக்காரராக
ஏழைகள், தொழிலாளர்கள், அனாதைகள் ஆகியோரை நேசித்தவராக
பெண்களைக் கண்ணியத்துடன் நடத்தியவராக
குழந்தைகள் மீது அன்பு கொண்டவராக
நேர்மையான வணிகராக
நீதி மிக்க ஆட்சியாளராக
சிறந்த ராஜதந்திரியாக
போர்த் தளபதியாக
நல்ல போதகராக
ஆன்மிகவாதியாக வாழ்ந்து காட்டியவர்.
அவர் நபிகள் நாயகம் என்று அழைக்கப்படுகின்ற முகம்மது நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள்.
முகம்மது நபி அவர்கள் கி.பி. 570-ல் அரேபியாவில் உள்ள மக்காவில் பிறந்தார். பிறக்கும் முன்பே தந்தையையும், பிறந்த ஆறு ஆண்டுகளில் தாயையும் இழந்து அனாதை ஆனார். சிறுவராக இருந்தபோது கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தார். பின்னர் வணிகர் ஆனார். கதீஜா என்ற பெண்ணை மணந்து குழந்தைகளைப் பெற்றார்.
இளமைப் பருவத்திலேயே வாய்மையாளராகவும், (அஸ்-ஸாதிக்), மக்களின் நம்பிக்கைக்குரியவராகவும் (அல் அமீன்) திகழ்ந்தார். மக்கள் தங்கள் விவகாரங்களைத் தீர்க்க அவரையே நீதிபதியாக ஏற்றுக் கொண்டனர். அவர் வாழ்ந்த மக்காவில் மூடப் பழக்க வழக்கங்கள், தீமைகள், அநீதிகள், ஏற்றத் தாழ்வுகள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், மது, சூது, முறைகேடான உறவுகள், வட்டி ஆகியன மலிந்திருந்தன.
இவற்றைக் குறித்து கவலைப்பட்டவராக மக்காவின் அருகில் இருந்த ‘ஹிரா’ குகையில் தனித்து ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டார். அவ்வேளையில் அவருக்கு இறைவனிடம் இருந்து இறை வசனங்கள் அருளப்பட்டன. அன்று முதல் அவர் இறைத்தூதர் என்ற தகுதியைப் பெற்றார். ஒரே இறைவனை வணங்கும்படியும், மனிதர்களைச் சமமாக நடத்தும்படியும், பலவீனமான மக்களை அரவணைக்கும்படியும், இறைவன் தடுத்த தீமைகளை விட்டொழிக்கும்படியும் போதித்தார்.
முகம்மது நபியின் போதனைகள் மக்கா நகரத் தலைவர்களுக்கு பேரிடியாக வந்து விழுந்தது. அவரை நாட்டை விட்டு விரட்டவும் அல்லது கொல்லவும் திட்டமிட்டனர். 13 ஆண்டு கால பரப்புரைக்குப் பின்னர் தாயகத்தைத் துறந்து 200 மைல் தொலைவில் இருந்த யத்ரிப் (மதீனா) நகருக்கு அம்மக்களின் அழைப்பின்பேரில் சென்றார். அங்கு 10 ஆண்டுகள் வாழ்ந்து தனது பரப்புரையை முழுமை செய்து, புதிய சமூகம் ஒன்றை நிறுவினார். 5 லட்சம் மக்கள் அவரது அணியில் இணைந்திருந்தனர். கி.பி. 532-ல் அவரது 63-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இதுவே நபிகள் நாயகத்தின் சுருக்கமான வரலாறாகும்.
நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்ற வாழ்வின் லட்சியத்தை அடைய, நமது ஆளுமையை வளர்க்க, நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவரது வாழ்க்கை பெரிதும் உதவும். ஒரு கருத்தைத் தத்துவமாகப் படிப்பதை விட, அதன்படி வாழ்ந்த ஒருவரின் வரலாற்றைப் படிப்பது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லவா?
நபிகள் நாயகம் தன்னை கடவுள் என்றோ, கடவுளின் அம்சங்கள் பெற்றவரென்றோ ஒருபோதும் கூறியதில்லை. மாறாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன் என்றே கூறினார். எனவே அவருடைய வாழ்க்கை பின்பற்ற முடியாத ஒன்றல்ல.

நபி முஹம்மது (ஸல்) மக்காவை வெற்றி கொண்ட பின்னர், மக்காவாசிகள் இஸ்லாமே உண்மையான மார்க்கம் என்று புரிந்து கொண்டனர்.
நபி முஹம்மது (ஸல்) மக்காவை வெற்றி கொண்ட பின்னர், மக்காவாசிகள் இஸ்லாமே உண்மையான மார்க்கம் என்று புரிந்து கொண்டனர். நபி(ஸல்) அவர்களின் சொற்பொழிவைக் கேட்டு நடக்க மக்காவாசிகள் உறுதியெடுத்தனர். இஸ்லாமை ஏற்றுக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்தனர்.
உஹுத் போரில் ஹம்ஜாவுடைய உடலைச் சின்னாபின்னமாக்கிய அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா நபியிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் செய்து கொள்ள வந்தார். ஆனால் தமது செயலுக்காக நபி(ஸல்) தண்டனை தந்துவிடுவார்களோ என்று பயந்து, அடையாளம் தெரியாதபடி வந்தார். நபி(ஸல்) மற்றவர்களுக்குத் தரும் இஸ்லாமிய ஒப்பந்த வாக்கையே ஹிந்துக்கும் சொன்னார்கள்.
“அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது, திருடக் கூடாது. விபசாரம் செய்யக் கூடாது; உங்கள் குழந்தைகளைக் கொல்லக் கூடாது; எவரின் மீதும் அவதூறை இட்டுக்கட்டி உங்களிடையே பரப்பக் கூடாது. உங்களில் இவற்றையெல்லாம் நிறைவேற்றுகிறவருக்குப் பிரதிபலன் அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பு. இந்தக் குற்றங்களில் ஏதேனும் ஒன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இம்மையிலேயே தண்டிக்கப்பட்டால், அது அவருக்குப் பரிகாரமும் அவரைத் தூய்மைப்படுத்தக் கூடியதும் ஆகும்.
அல்லாஹ் எவருடைய குற்றத்தை மறைத்து விடுகிறானோ அவரின் விவகாரம் அல்லாஹ்விடமே ஒப்படைக்கப்படும். அவன் நாடினால் அவரை வேதனைப்படுத்துவான். நாடினால் அவருக்கு மன்னிப்பளிப்பான்” என்று சொல்லி முடிக்கும் முன்னர், ஹிந்து “இறைத்தூதர் அவர்களே! என் கணவர் மிகவும் கருமியாக இருக்கிறார். அவரின் பணத்திலிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்து எங்கள் குழந்தை குட்டிகளுக்கு உணவளிப்பதால் என் மீது குற்றம் ஏதும் உண்டா? என்று கேட்டார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஒரு புன்னகையுடன், “நீ ஹிந்த் தானே” என்று வினவினார்கள். அதற்கு ஹிந்த் பின்த் உத்பா, நபி(ஸல்) அவர்களிடம், “இறைத்தூதர் அவர்களே! நான் இஸ்லாத்தை எதிர்த்து வந்த பொழுது பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.
நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு இன்று பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் பெறுவதையும் விட உங்கள் வீட்டார் கண்ணியம் பெறுவதே எனக்கு அதிக விருப்பமானதாக மாறிவிட்டது” என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இந்த உன்னுடைய விருப்பம் இன்னும் அதிகமாகும்' என்று பதிலளித்துவிட்டு, “நியாயமான அளவிற்கு உன் கணவனின் பணத்தை எடுத்துக் குழந்தைகளுக்கு உணவளிப்பதால் உன் மீது குற்றம் எதுவும் இல்லை” என்று பதிலளித்தார்கள்.
அப்போது குஜாஆ கிளையினர் மற்றொரு கிளையைச் சேர்ந்தவரை கொலை செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நபி(ஸல்) சொன்னார்கள் “இதற்கு முன்னர் நீங்கள் செய்த கொலைகளும் பாவங்களும் போதும். இனி இப்படியான காரியத்தைச் செய்யாதீர்கள். நீங்கள் கொன்றவருக்குரிய நஷ்ட ஈட்டை நிறைவேற்றிவிடுங்கள். இதற்குப் பின்னர், கொலை செய்யப்பட்டால் ஒன்று கொலையாளியைப் பழிக்குப் பழி கொல்வது அல்லது அவரிடமிருந்து நஷ்ட ஈடு பெறுவது என்பதே நியாயமான தீர்ப்பு” என்றார்கள். யமன் வாசிகள் இந்தத் தீர்ப்பை நபி(ஸல்) அவர்களிடம் எழுதிப் பெற்றுக் கொண்டனர்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மதீனாவாசிகள், நபி(ஸல்) தனது சொந்த ஊரான மக்காவிலேயே தங்கிவிடுவார்களோ? என்று அச்சப்பட்டனர். இதனை அறிந்த நபி(ஸல்) அவர்கள் “நான் வாழ்ந்தால் உங்களுடன் வாழ்வேன். மரணித்தால் உங்களுடனேயே மரணிப்பேன்” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி 2:46:2460, 7:97:7468, 2:45:2434, 4:63:3825

தொழுகை என்பது வெறும் சடங்கு, சம்பிரதாயமல்ல. அது நமது உடலையும், உள்ளத்தையும் பரிசுத்தப்படுத்தும் அற்புத கருவியாகும்.
மனிதன் இறைவனுக்குச் செய்ய வேண்டிய முதல் முக்கியக் கடமையே ஐந்து நேரத்தொழுகைகள் தான். இதன்மூலம் மனித வாழ்வில் தொழுகைக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை நாம் நன்கு அறியலாம். இன்றைக்கு அந்த தொழுகைகளை நாம் சரிவர நிறைவேற்றுகிறோமா என்று ஒருகணம் யோசிக்க வேண்டியதிருக்கிறது.
‘(நம்பிக்கையாளர்களே) அனைத்து தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் (நேரம் தவறாமல்) பேணி(த் தொழுது) கொள்ளுங்கள். மேலும், (தொழுகையின் போது) அல்லாஹ்வுக்குப் பயந்து மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள்’. (திருக்குர்ஆன் 2:238)
தொழுகை எப்படி நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது. அதாவது தொழுகையின் காலநேரத்திலும், தொழுகையின் செயல் முறையிலும் நாம் மிகச்சரியாக இருக்க வேண்டும் என்பதே அது.
ஒருமுறை நபித்தோழர் ஒருவர் அரை குறையாக தொழுது கொண்டிருப்பதைக் கண்ட ஹூதைபா அல் யமான் என்ற நாயகத்தோழர், தொழுகைக்குப் பின் அவரை அழைத்து, ‘தோழரே நீர் சரியாக தொழவில்லை. ஒரு வேளை நீர் மரணித்தால் நபியின் வழிமுறையை விட்டுவிட்ட நிலையில் தான் மரணிப்பீர்’ என்று கண்டித்தார்கள். (நூல்: புகாரி)
இந்த நிகழ்வு நமக்கு ஒரு செய்தியை அழுத்தமாகக் கூறுகிறது. அதாவது, ‘நீங்கள் ஐங்காலத் தொழுகைகளை தொழுவது பெரிதல்ல. அதைசரிவர முறையாக, நிறைவாகச் செய்வதே பெரிது’ என்கிறார்கள் நபிகளார்.
முன்னதாக தொழுகையின் சிறப்பை, மகத்துவத்தை நாம் நன்கு அறிய வேண்டும். அப்போது தான் தொழுகை களின் மீது மதிப்பும், மரியாதையும் உண்டாகும்.
‘சொர்க்கத்தின் சாவி தொழுகை’ என்று நபிகளார் கூறினார்கள். இதைவிட வேறு என்ன உவமை வேண்டும் நமக்கு.
சுவனத்திற்குள் நுழைய வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை. ஆனால் அதற்காக நாம் என்ன நற்செயல்கள் செய்தோம் என்று பார்த்தால், விடை பூஜ்ஜியமாகத்தான் இருக் கிறது. இதனால் தான் நமது அன்றாட வாழ்க்கையும் வெற்றிடமாகவே காட்சியளிக்கிறது.
‘(நபியே) வஹி மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட இவ் வேதத்தை (மக்களுக்கு) நீங்கள் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாக தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) ‘திக்ரு’ செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவைகளுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீர்வீர்கள்)’. (திருக்குர்ஆன் 29:45)
தொழுகையின் பலன் என்னவென்று இந்த வசனத்தின் மூலம் நாம் நன்கு அறியலாம்.
‘திக்ரு’ எனப்படும் இறைத்தியானம் செய்வதால் கிடைக்கும் பலனை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
‘மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள் தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள்’. (13:28)
இன்றைக்கு மனிதன் நிம்மதியைத் தேடி அலையாத இடமில்லை. எங்கும் பிரச்சினை, குழப்பம், அமைதியின்மை. இந்த நிலையில் ‘உங்களுக்கான நிம்மதி இதோ இந்த ஐந்து நேரத்தொழுகைகளில் இருக்கிறதே’ என்று திருக்குர்ஆன் கூறுவதை நாம் கவனிக்காமல் இருப்பது ஏன்?
ஒருவர் தினமும் ஐந்து வேளை ஆற்றில் குளிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரது உடலில் அழுக்குகள் ஏதும் தங்கி இருக்குமா? இருக்காதே. அவ்வாறு தான் இந்த ‘ஐந்து நேரத்தொழுகைகளும் ஒருவரது அன்றாட சிறுசிறு பாவக்கறைகளை நீக்கி விடுகின்றன’ என்று நபிகள் நாயகம் உவமைப்படுத்திக் கூறினார்கள்.
நமது பாவக்கறைகளை ஐங்காலத் தொழுகைகள் போக்கிவிடுகின்றன என்றால் இதைவிட வேறு பாக்கியம் நமக்கு என்ன வேண்டும்.
இன்னொரு இறைவசனம் பேசுகிறது இப்படி:
‘நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’. (2:153)
‘பொறுத்தவர் பூமியாள்வார்’ என்பார்கள். அந்தப் பண்புடன் தொழுகையும் இணைத்துச் சொல்லப்பட்டிருப்பது நம் கவனத்திற்குரியது. இன்னும் சொல்லப்போனால் தொழுகை தான் மனிதனுக்கு பொறுமையை கற்றுத் தருகிறது என்றால் அதுமிகையல்ல.
காரணம், தொழுகை என்பது அவசர, அவசரமாகச் செய்யப்படும் வணக்க வழிபாடல்ல. நிறுத்தி, நிதானமாகச் செய்யப்பட வேண்டிய ஓர் அற்புதமான வணக்கம் அது.
இதனால் தான் ‘அவசரம் அது ஷைத்தானின் குணம்; நிதானம் அது அல்லாஹ்வின் குணம்’ என்று நபிகள் நாயகம் குறிப்பிட்டார்கள்.
தொழுகை என்பது வெறும் சடங்கு, சம்பிரதாயமல்ல. அது நமது உடலையும், உள்ளத்தையும் பரிசுத்தப்படுத்தும் அற்புத கருவியாகும். இது ஒருவரிடத்தில் மிகச்சரியாக அமைந்து விட்டால், பிறகு அனைத்தும் அவருக்கு மிக இலகுவாக அமைந்து விடும்.
அதேநேரத்தில் தொழுகையை விட்டவர்களுக்கு காத்திருக்கும் கேடுகள் குறித்தும் திருக்குர்ஆன் கீழ் கண்டவாறு எச்சரிக்கிறது:
‘(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கு கேடுதான். அவர்கள் எத்தகையவர்கள் என்றால், தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள். (மேலும், அவர்கள் தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்’. (107:4,5,6)
எனவே நமது ஐங்காலத்தொழுகைகளை நன்கு சரிபார்த்துக் கொள்ள வேண்டிய நேரமிது. வாருங்கள், இறையச்சத்துடன் தொழுகையை தொடர்வோம், இறையருளைப் பெறுவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத்அலி மஸ்லஹி, ஈரோடு-3.

நம்பிக்கையும் நாணயமும் செயலில் வெளிப்படும்போதுதான் இஸ்லாம் எவ்வளவு உயரிய மார்க்கம் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரியவரும்.
அடுத்தவரிடமிருந்து ஏதேனும் ஒருபொருளை இரவலாக வாங்குகின்றோம். பின்னர் சாதாரணப் பொருள்தானே என்று திருப்பித் தராமல் அதனை அப்படியே மறந்துவிடுகின்றோம். பொருளைத் தந்தவர் இதையெல்லாம் எப்படித் திருப்பிக் கேட்பது என்ற வெட்கத்தில் இருப்பார். இதையெல்லாம் அவர் கேட்கவா போகின்றார் என்ற மெத்தனத்தில் நாமும் இருப்போம்.
ஆயினும் அல்லாஹ்வின் ஏட்டில் இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதை ஏனோ மறந்துவிடுகின்றோம். அற்பப் பொருள்தானே என்று நாம் கருதும் எந்த ஒன்றும் அல்லாஹ்வின் பார்வையில் அற்பமாக இருப்பதில்லை. வாசித்து முடித்த புத்தகம், சின்னச்சின்ன வீட்டு உபயோகப் பொருட்கள், மாலையில் வாங்கிப் படிக்கும் இரவல் தினசரி, தேதி முடிந்த பத்திரிகைகள் என்று அடிக்கிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் அடைக்கலப் பொருட்களே.
அடுத்தவரிடமிருந்து இவற்றை வாங்கும்போது இரவல் மனோபாவத்துடன் தான் வாங்குகின்றோம். ஆயினும் திருப்பிக்கொடுப்பதே இல்லை. இதையெல்லாம் எப்படித் திருப்பிக் கேட்பது என்ற வெட்க உணர்வில் அவர்களும் கேட்கமாட்டார்கள். அவர்கள் திருப்பிக் கேட்கின்றார்களோ இல்லையோ.. கொடுப்பது நமது கடமையில்லையா..? அதுதானே முறையாகவும் நேர்மையாகவும் இருக்கும்.
ஜாஹிலிய்யா எனும் அறியாமைக் காலத்தில் கஅபா ஆலயத்தைப் பாரமரிக்கும் பொறுப்பு உஸ்மான் பின் தல்ஹா அவர்களுடைய குடும்பத்தினரிடம் இருந்தது. கஅபாவின் திறவுகோலும் அவர்களிடம்தான் இருந்தது. அவர்கள் விரும்பும் மக்களை ஆலயத்திற்கு உள்ளே அனுமதிப்பார்கள். விரும்பாதவர்களை அனுமதிப்பது கிடையாது.
இஸ்லாத்தின் ஆரம்ப நாட்கள். ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடம், தம்மையும் அந்த ஆலயத்திற்கு உள்ளே அனுமதிக்குமாறு வேண்டினார்கள். உஸ்மான் அவர்கள் அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. நபிகளார் மீதும் இஸ்லாத்தின்மீதும் வன்மம் கொண்டிருந்த நேரமது. உம்மைப் போன்றவர்களை ஒருபோதும் உள்ளே விடமுடியாது என்று கூறிவிட்டார். இறைத்தூதருக்கோ அது பெரும் மனவருத்தத்தைத் தந்தது.
அந்த வருத்தத்துடனேயே உஸ்மான் பின் தல்ஹா அவர் களிடம் நபிகளார் கூறினார்கள்: “உஸ்மான்! ஒன்றை நன்றாக நினைவில் வையுங்கள். இதோ இப்போது உமது கரங்களில் இருக்கும் இந்தத் திறவுகோல்.. ஒருநாள் என் கரங்களுக்கு வரும். அப்படி வரும் நாளில் அந்தத் திறவுகோலை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற அதிகாரமும் என்னிடம் இருக்கும். நினைவில் வையுங்கள். மறந்துவிடாதீர்கள்”.
இதனைச் செவியுற்ற உஸ்மான் பின் தல்ஹா அவர்களும் விடவில்லை. அவர் கூறினார்: “முஹம்மதே! அப்படி ஒருநாள் வரவே வராது. அவ்வாறு வந்துவிட்டால் அந்த நாளில் இந்த உஸ்மான் மண்ணுக்கு மேலாக உயிரோடு இருப்பதைவிட மண்ணோடு மண்ணாக மடிந்து போயிருப்பான்”.
நாட்களும் வருடங்களும் ஓடின. மக்கா வெற்றி கொள்ளப்படுகிறது. வெற்றித் திருமகனாய் பெருமானார் (ஸல்) அவர்கள் கஅபாவுக்கு முன்பாக அமர்ந்து இருக்கின்றார்கள். கஅபாவைத் திறந்து அங்கிருக்கும் சிலைகளை அகற்றி அதனைச் சுத்தம் செய்யவேண்டும். ஆயினும் திறவுகோல்..? அது உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடம் அல்லவா இருக்கிறது.
பழைய உரையாடல்கள் நினைவலையில் வந்து போகிறது. அருகில் இருந்த மக்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டார்கள், “உஸ்மான் எங்கே?”. “இதோ இருக்கின்றேன்” என்று கூறுகின்றார். “கஅபாவின் திறவுகோல் எங்கே?”. “இதோ இருக்கிறது” என்று கூறி தன்னிடம் இருந்த சாவியை எடுத்துக் கொடுக்கின்றார்.
திறவுகோலை வாங்கிய நபிகளார் அதனைப் பார்வையிடுகின்றார்கள். என்ன வேண்டுமென்றாலும் செய்வதற்கான அதிகாரம் தன்னிடம் இப்போது இருக்கிறது. இந்தச் சாவியைக் கூட தாம் விரும்பும் யாருக்கு வேண்டுமென்றாலும் கொடுக்கும் அதிகாரமும் உள்ளது. காலம் காலமாக அதனைத் தங்கள் கைவசம் வைத்திருந்த உஸ்மான் பின் தல்ஹா அவர்களும் அங்கே நிற்கின்றார்கள்.
கஅபாவைப் பராமரிக்கும் பணி என்பது கண்ணியம் மிக்க ஒருபணி. யாருடைய குடும்பத்திற்கு அந்தப் பேறு வழங்கப்படுகிறதோ அவர்களுக்கு மக்களும் கண்ணியம் கொடுப்பார்கள். ஆகவே அனைவரது கண்களும் அந்தத் திறவுகோல் மீதே இருந்தது.
அண்ணலாருக்கு அருகே அவரது பெரியதந்தை அப்பாஸ் (ரலி) நின்றுகொண்டிருந்தார். காதருகே குனிந்து பெருமானார் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! அந்தத் திறவுகோலை என்னிடம் தாருங்கள். இன்றுமுதல் இந்த ஆலயத்தைப் பராமரிக்கும் பணியை நான் மேற்கொள்கிறேன்”.
பெருமானார் எதுவும் கூறவில்லை. கஅபாவைத் திறந்தார்கள். உள்ளேயே வலம் வந்தார்கள். அப்போதுதான் அந்த மாயம் நடந்தது. ஆம். ஆலயத்திற்குள்ளே வலம் வந்துகொண்டிருக்கும்போதே இறைக்கட்டளையுடன் வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) வந்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அந்தத் திறவுகோலை உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடமே ஒப் படைத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். பின்வரும் வசனம் இறக்கியருளப்பட்டது:
“முஸ்லிம்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். அமானத் - அடைக்கலப் பொருட்களை அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள்; நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால் நீதத்துடன் தீர்ப்பு வழங்குங்கள். திண்ணமாக, அல்லாஹ் உங்களுக்கு வழங்குகின்ற அறிவுரை மிக உன்னதமானதாகும். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்”. (4:58)
இந்த வசனத்தை ஓதியவாறே நபிகளார் கஅபாவை வலம் வந்தார்கள். பின்னர் வெளியே வந்து “உஸ்மான் பின் தல்ஹா (ரலி) எங்கே?” என்று விசாரித்தார்கள். “இதோ இருக்கின்றேன் இறைத் தூதரே!” (ஆம். அவர் இஸ்லாத்தை ஏற்றுவிட்டார்) என்று அவர் கூறினார். “நீட்டுங்கள் உங்கள் கரங்களை”. கரத்தை நீட்டினார். அதில் அந்தத் திறவுகோலை வைத்தார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள். “மறுமைநாள் வரை இது உங்களிடமே இருக்கட்டும்” என்று கூறினார்கள்.
தனக்கு அநீதி இழைத்தவராக இருந்தாலும் ஒருவரிடமிருந்து வாங்கிய அடைக்கலப் பொருட்களை அவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற இறைக் கட்டளையைப்பாருங்கள். இஸ்லாம் என்பது இறைவனை நம்பிக்கைக் கொண்டேன் என்று வாயால் கூறிவிட்டு எதுவும் செய்யாமல் இருப்பதல்ல. மாறாக இறைநம்பிக்கை என்பது செயலில் வெளிப்பட வேண்டும். நம்பிக்கையும் நாணயமும் செயலில் வெளிப்படும்போதுதான் இஸ்லாம் எவ்வளவு உயரிய மார்க்கம் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரியவரும். நம்பிக்கை செயலாக வெளிப்படாதவரை அது உண்மையான நம்பிக்கையாக மலராது.
நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

நமது எண்ணங்கள், சொல், செயல் இவை அனைத்தும் இறைவழியில் அமைத்துக்கொள்வதே நேர்வழி பெறுவதற்கான அடையாளமாகும்.
‘அறியாமை’ என்ற இருள் இந்த அகிலத்தை சூழ்ந் திருந்த காலகட்டத்தில், “மக்களிடமிருந்து அறியாமையை நீக்குங்கள் நபியே” என்று முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிட்டான்.
இந்த கட்டளையில் மிகமுக்கியமான கருத்து பொதிந்துள்ளது. அதாவது, ‘தனி ஒருவன் மட்டும் நன்மைகளைச் செய்து, நல்லவனாய் வாழ்வது மட்டும் குறிக்கோள் அல்ல. தன்னைச் சார்ந்தவர்களையும், அந்த சமூகத்தையும் நன்மையின் பாதையில் அழைத்து வர வேண்டும்”.
‘இறைவன் வகுத்த இந்த வழியில் செயலாற்றுபவர்கள் ஒருபோதும் நஷ்ட மடைய மாட்டார்கள்’ என்பது இறைவனின் சொல்லாகும். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
“மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும்; நற்செயல்கள் புரிந்துகொண்டும்; மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும்; பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர. (103:2,3)
இறைவனின் இந்த கட்டளையை ஏற்றுக்கொண்ட நபிகளார், அதன்படி தான் மட்டும் வாழாமல், பிறருக்கும் அதனை எடுத்தறிவித்தார்கள். அதனால் தான் சீர்கெட்ட ஒரு சமுதாயம் சீர்மிகு சமுதாயமாக பரிமளித்தது என்பது வரலாற்று உண்மை.
ஒருமுறை பாவங்கள் மிகுந்த ஒரு கூட்டத்தினரை அழித்துவிடுமாறு இறைவனின் கோபம் இறங்கியது. அப்போது, ‘அந்த ஊரில் நல்ல மனிதர் ஒருவர் உள்ளார். அவரையும் சேர்த்தா அழிக்க வேண்டும்’ என்று இறைவனிடம் கேட்கப்பட்டது. அப்போது, ‘தான் பெற்ற ஞானத்தை பிறருக்குச் சொல்லாமல் இருந்ததால் தான் அந்த சமூகம் இத்தனை பாவத்தில் ஆழ்ந்தது. தெரிந்தவர் சொல்லவில்லை என்றால், தெரியாதவர்கள் எப்படி சத்தியத்தை அறிந்து கொள்வார்கள்’ என்றான்.
அல்லாஹ் தன் அருள்மறையிலே லுக்மான் (அலை) தன் மகனுக்கு அறிவுரை கூறுவதாக சொல்லும் இடத்தில் இப்படி குறிப்பிடுகின்றான்:
“என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு. மேலும், நன்மை புரியும்படி ஏவு; தீமையைத் தடு! மேலும், எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதனைப் பொறுத்துக்கொள்! நிச்சயம் இவையெல்லாம் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள விஷயங்களாகும்”. (31:17)
ஆனால் இன்றைய காலச்சூழ்நிலையில் நமது வாழ்க்கை எப்படி உள்ளது?. தனிநபர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள், ஊரில் உள்ளவர்கள், நாட்டில் உள்ளவர்கள், நம்மை வழிநடத்துபவர்கள் எப்படி இருக்கிறார்கள். சத்தியத்தை எடுத்துச் சொல்லி நம்மை நேர்வழியில் நடத்து கிறார்களா? என்றால், ‘இல்லை’ என்று தான் பதில் கிடைக்கும்.
ஏனென்றால் நம்மில் பலர் நேர்வழியில் இல்லை. ஆனால் அசத்தியத்தை, பொய்களை, புரட்டுகளை, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தைரியமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
செய்யாததை சொல்வதும், சொல்லாததை செய்வதும் மிக பெரிய பாவம் என்று திருக்குர்ஆன் தெளிவுபடச் சொல்லு கிறது.
ஒருமுறை நபித்தோழர் ஒருவர் தான் மகனை அழைத்து, ஒரு செயலை செய்யச் சொல்லி ஏவிய போது, ‘இதனைச் செய்தால், இதனைத் தருவேன்’ என்று சொன்னார். அருகில் இருந்து இதனை கவனித்து கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவரை அழைத்து ‘நண்பரே நீங்கள் சொல்வது நிஜம் தானே, நிச்சயமாக நிறைவேற்றுவீர்கள் தானே. ஏனென்றால் சிறிய செயலுக்காகக் கூட பொய்யான வாக்குறு தியை சிறுவர்கள் நெஞ்சில் விதைக்காதீர்கள். இதனால் அவன் வாழ்வு முறையே மாறி விடும்’ என்று கடிந்து கொண்டார்கள்.
தான் செய்யாததை பிறருக்கு செய்தியாக சொல்வது பெரும் பாவம் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை. அதனால் அதனை வெகு இலகுவாக எண்ணிக்கொண்டு, பாவம் என்றே அறியாமல் அந்த செயலில் ஈடுபட்டு வருகிறார் கள். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகின்றீர்கள்?” (61:2)
“நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாக இருக்கின்றது” (61:3).
எங்கோ, யாராலோ, ஏதாவது நன்மையான காரியங்கள் நிகழ்த்தப்படுமானால் அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத ஒருவர் அதனை தானே செய்ததாக மார்தட்டிக் கொள்வது தவறு என்று திருக்குர்ஆன் கண்டிக்கிறது. மேலும், அதனால் உங்களுக்கு எந்த நன்மையையும் விளையப் போவதில்லை, மாறாக பாவச்சுமைகள் உங்கள் தோள்களில் ஏறிவிடும் என்றும் திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.
திருக்குர்ஆனை நன்றாக கற்று அறிந்த அறிஞர்கள், திருக்குர்ஆன் வழியில் தானும் நடந்து, பிறரையும் அதன்படி நடக்க வழிகாட்ட வேண்டும். ஆனால் ‘உபதேசம் ஊருக்குத்தான், தனக்கு அல்ல’ என்று நடந்துகொண்டால் அது தவறு, என்று திருக்குர்ஆன் இவ்வாறு கண்டிக்கிறது:
‘நீங்கள் வேதத்தையும் ஓதிக்கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?’ (2:44)
இன்றைய மக்கள், மதத்தலைவர்கள், வியாபாரிகள், முதலாளிகள், ஆட்சியாளர்கள் என அனைத்துதரப்பினரின் சொல்லும் செயலும் ஒரே மாதிரி உள்ளதா? என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. இறைவன் வகுத்த வழியில் வாழ வேண்டும் என்று மக்களிடம் சொல்பவர்கள், அந்த வழியில் வாழ்வதில்லை. கொடுக்கும் வாக்குறுதிகளை செய்துமுடிக்கவேண்டும் என்ற உணர்வு இல்லாதவர்களாக உள்ளனர். சுயநலம், சுயலாபம் என்ற கோணத்திலேயே மனிதனின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
இதனால் பாவங்கள் மலிந்துவிட்டன. பாவங்களுக்கும், பழிச்செயல்களுக்கும் அஞ்சும் மனம் மறைந்துவிட்டது. ‘இறைவன் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறான், அவனது கோபத்திற்கு ஆளாகக்கூடாது’ என்ற இறையச்சம் மனித மனங்களில் இல்லை. இதனால் அநீதிகள் பெருகிவிட்டன, மனிதன் மீது பெரும் பாவச்சுமைகள் விழுந்துவிட்டன. இந்த ஆபத்திலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காத்தருள்வானாக.
நமது எண்ணங்கள், சொல், செயல் இவை அனைத்தும் இறைவழியில் அமைத்துக்கொள்வதே நேர்வழி பெறுவதற்கான அடையாளமாகும்.
எம்.முஹம்மது யூசுப், உடன்குடி.

நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹானியிடம், “நீங்கள் பாதுகாப்புத் தந்தவர்களுக்கு நாமும் பாதுகாப்பை வழங்குகிறோம்” என்று கூறிவிட்டார்கள்.
நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட பின் கஅபாவின் சாவியை உஸ்மானிடம் ஒப்படைத்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் பிலால்(ரலி) அவர்களை, 'பாங்கு' அதாவது தொழுகைக்கான அழைப்பு விடுக்கும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். மக்காவின் வெற்றிக்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் நபி(ஸல்) ‘நன்றி தொழுகை’ நடத்தினார்கள்.
நபி(ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூதாலிபின் மகள் உம்மு ஹானி வீட்டிற்குச் சென்றபோது, உம்மு ஹானி அவர்கள், தனது கணவன் மற்றும் இரண்டு சகோதர்களுக்காக நபி(ஸல்) அவர்களிடம் பாதுகாப்பு கேட்டார். அலீ(ரலி) அவர்களைக் கொல்ல விரும்பினார். ஆனால் நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹானியிடம், “நீங்கள் பாதுகாப்புத் தந்தவர்களுக்கு நாமும் பாதுகாப்பை வழங்குகிறோம்” என்று கூறிவிட்டார்கள்.
இப்படிச் சிலரை மன்னித்து விடுவித்தும், சிலரைச் சிறைப்பிடித்தும் வந்தனர். ஸஃப்வான் இப்னு உமய்யா என்பவர் குறைஷிகளின் பெருந்தலைவர்களில் ஒருவர். அவர் கைது செய்யப்படுவார் என்று பயந்து மக்காவைவிட்டு ஓட ஆயுத்தமாகும்போது அவருக்காக உமைர் இப்னு வஹப் என்பவர் நபி(ஸல்) அவர்களிடம் ஸஃப்வானின் பாதுகாப்புக் குறித்துப் பேசினார். நபி(ஸல்) அவர்களைச் சந்தித்த ஸஃப்வான் தான் இஸ்லாமை அறிந்து கொண்டு ஏற்க, தனக்கு இரண்டு மாத கால அவகாசம் வேண்டுமெனக் கோரினார். அதற்கு நபி (ஸல்) நான்கு மாத கால அவகாசம் தருவதாக மொழிந்தார்கள். சில நாட்களிலேயே ஸஃப்வான் இஸ்லாமைத் தழுவினார்.
குறைஷிகளின் மற்றொரு தலைவரான ஃபழாலா இப்னு உமைய்யா என்பவர் நபி (ஸல்) அவர்களைக் கொல்வதற்காக நபியவர்களின் அருகில் சென்றார். ஃபழாலா தம்மைக் கொலை செய்யும் எண்ணத்தில்தான் வந்துள்ளார் என்பதை நபி(ஸல்) அவர்கள் ஃபழாலாவிடமே வெளிப்படையாகக் கேட்டவுடன், ஃபழாலா, நபி(ஸல்) உண்மையான திருத்தூதர்தான் எனப் புரிந்து கொண்டு, இஸ்லாமை ஏற்றார்.
மக்காவின் வெற்றிக்கு மறுநாள் நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே உரையாற்றினார்கள். அவ்வுரையில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, “இந்த மக்கா நகரை மனிதர்களில் யாரும் புனிதமாக்கவில்லை. அல்லாஹ்தான் இதனைப் புனித நகரமாக்கினான். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியிருக்கும் யாரும் இங்கு கொலை புரிவதோ, இரத்தம் சிந்துவதோ, மரம், செடி, கொடிகளை வெட்டுவதோ கூடாது.
இறைத்தூதர் இங்கு ஒரு சிறு போரிட்டதை ஆதாரமாகக் கொண்டு எவராவது அவ்வாறு இங்கே போரிடுவது அனுமதிக்கப்பட்டது என்று கருதினால், நீங்கள் அவருக்குச் சொல்லுங்கள், நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு மட்டுமே அனுமதியளித்தான்; உங்களுக்கு அவன் அனுமதிக்கவில்லை என்று அவரிடம் கூறுங்கள். எனக்குக் கூட அவன் அனுமதியளித்தது பகல் பொழுதின் சிறிது நேரத்திற்கு மட்டும் தான். பின்னர் இன்று அதன் புனிதம் நேற்றுள்ள அதன் புனிதம் போல் வந்துவிட்டது. இச்செய்தியை இங்கே வராதிருப்பவர்களுக்கு வந்திருப்பவர்கள் தெரிவித்து விடட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஸஹீஹ் புகாரி 1:3:104, அர்ரஹீக் அல்மக்தூம்

பெருமானார் (ஸல்) அவர்களோ மீண்டும் மீண்டும் அந்த வசனத்தையே ஓதினார்களே தவிர அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. (இப்னு கஸீர்)
அடுத்தவர்களைக் குறித்து அவதூறு பேசுவது, ‘புறம்’ என்று நமக்குத் தெரியும். ஆனால், புறத்திலேயே பெரும் புறம் எது தெரியுமா? மார்க்கப் பற்றுமிக்க, மக்களிடையே கண்ணியம் பெற்ற அறிஞர்களையும் மேன்மக்களையும் குறித்து பேசும் புறம்தான்.
அழைப்பாளர்களைக் குறித்தும், அறிஞர்களைக் குறித்தும், இமாம் களைக் குறித்தும், மார்க்கக் கல்வி பயிலும் மாணவர்களைக் குறித்தும் பேசும் புறம் பெரும் குற்றமே. அவர்களுடைய வாகனத்தைக் குறித்தோ, ஆடையைக் குறித்தோ, நிறத்தைக் குறித்தோ, காலணிகளைக் குறித்தோ பேசும் புறத்தைக் குறித்தல்ல நாம் இங்கே அலசுகிறோம். மாறாக, அவர்களுடைய தாடியைக் குறித்தும், கரண்டைக்காலுக்கு மேலாக அவர்கள் அணிந்திருக்கும் ஆடையைக் குறித்தும், அவர் களுடைய உரைகளைக் குறித்தும் (பயான்) குறித்தும், அவர்களுடைய மார்க்க அடையாளங்களைக் குறித்தும் பேசும் புறம்தான் பெரிய புறம்.
ஏனெனில், இவ்வாறு பேசும் புறம் என்பது மார்க்கத்துடன் விளையாடும் விளையாட்டு. தாடி வைக்குமாறு உத்தரவிட்டது யார்? நபி (ஸல்) அவர்கள்தானே. கரண்டைக் காலுக்கு மேலாக ஆடை அணியுமாறு கூறியது யார்? நபி (ஸல்) அவர்கள்தானே. மக்களுக்கு உபதேசம் செய்யுமாறு ஏவியது யார்? நபி (ஸல்) அவர்கள்தானே. ஆக.. இந்த விவகாரங்களில் அறிஞர்களைக் குறித்து கேலியும் கிண்டலும் செய்வது என்பது மார்க்கத்துடன் விளையாடும் ஒருவகை ஆபத்தான விளையாட்டு.
தபூக் போரிலிருந்து நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் திரும்பிக்கொண்டிருந்தனர். பாதை நெடுகிலும் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் உரையாடிக்கொண்டே வந்தார்கள். பெரும் நபித் தோழர்கள் பெருமானாரைச் சுற்றியே எப்போதும் இருந்தனர்.
கூட்டத்தில் ஒருசில நயவஞ்சகர்களும் இருந்தனர். நயவஞ்சகர் களின் கண்களுக்கு இக்காட்சி பெரும் வெறுப்பைத் தந்தது. பொறாமையில் வெந்தனர். அந்தத் தோழர்களைக் குறித்து தங்களிடையே கேலி பேசிச் சிரித்தனர். வெறுப்பை உமிழ்ந்தனர்.
மட்சிபின் ஹுமைர் எனும் நயவஞ்சகர்களில் ஒருவன் கூறினான்: ‘இந்த வயோதிகர்களைப் போன்ற மோசமானவர்கள் எவரையும் நான் பார்த்ததே இல்லை. சாப்பிடுவதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். வயிறு மட்டுமே வளர்ந்துள்ளது. நாவில் வருவது எல்லாமே பொய். எதிரிகளைக் கண்டால் இவர்களைப் போன்று ஓடிப்போகும் கோழைகள் எவரும் இல்லை. போர் என்றால் என்னவென்றே தெரியாது.’
இந்த வார்த்தைகளை தன்னுடைய தோழர்களிடம் அவன் கூற, நயவஞ்சகர்கள் அனைவரும் ஒன்றுகூடிச் சிரித்தனர்.
அவ்ஃப் பின் மாலிக் (ரலி) இந்த வார்த்தைகளை செவியுற்றார். அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தமது தோழர்களைக் குறித்து இவர் எங்ஙனம் இப்படிப் பேசலாம். அவர்களது கண்ணியத்தைக் குறைக்கும் முகமாக அல்லவா இவர் பேசுகின்றார்.
அவ்ஃப் பின் மாலிக் (ரலி) மட்சிபிடம் கூறினார்: ‘பொய் சொல்கின்றாய். நீ ஒரு நயவஞ்சகன். நீ பேசியதை நான் அல்லாஹ்வின் தூதரிடம் கூறுவேன்.’
பின்னர் அங்கிருந்து எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வேகமாகச் சென்றார்.
ஆயினும் அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து சேருவதற்கு முன்னரே ஜிப்ரீல் (அலை) அவர்கள் விண்ணிலிருந்து வேத வெளிப்பாட்டுடன் (வஹி) இறங்கி வந்தார்கள். அல்லாஹ் இவ்வாறு வசனம் இறக்கியருளினான்:
“(நீங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று) அவர்களிடம் நீர் கேட்பீராயின் உடனே அவர்கள் கூறுவர் நாங்கள் நகைச்சுவையாகவும் விளையாட்டாகவும்தான் பேசிக்கொண்டிருந்தோம்.” அவர்களிடம் நீர் கூறும்: “அல்லாஹ்வையும் அவனுடைய வசனங்களையும் அவனுடைய தூதரையும்தான் நீங்கள் பரிகாசம் செய்துகொண்டிருக்க வேண்டுமா? உங்கள் தவறுகளை நீங்கள் நியாயப்படுத்த வேண்டாம். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டபின் திண்ணமாக நிராகரித்துவிட்டீர்கள்.” (9:65,66)
ஒருசில வினாடிகள்தான். அதற்குள் அல்லாஹ்வின் வேத வசனம் இறங்கிவிட்டது. ஆம், விளையாடுவதற்கும் நகைச்சுவை பேசுவதற்கும் அல்லாஹ்வின் மார்க்கம்தான் உங்களுக்குக் கிடைத்ததா? வாய்க்கு வந்தபடி வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் எழுதுவதற்கும் கேலி பேசுவதற்கும் இறை மார்க்கம்தான் கிடைத்ததா? இதுதான் அல்லாஹ்வின் கேள்வி.
30 ஆயிரத்துக்கும் அதிகமான தோழர்களுக்கு மத்தியில் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். கேலிபேசி கிண்டலடித்துக்கொண்டிருந்தவர்கள் யார் என்று தெரியவந்தது. மன்னிப்புக் கோரியவர்களாக பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஓடோடி வந்தனர். நபி (ஸல்) அவர்களோ அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மார்க்கத்துடனா விளையாட்டு..? நகைச்சுவை பேச உங்களுக்கு வேறு விஷயமா கிடைக்கவில்லை..?
நபி (ஸல்) அவர்களோ இந்த வசனத்தையே மீண்டும் மீண்டும் ஓதிக்கொண்டேஇருந்தார்கள். நயவஞ்சகர்கள் அனைவரும் பெருமானார் (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டபோது தோழர்களிடம், உடனே அந்த இடத்திலிருந்து புறப்படுமாறு கூறியவாறு தம்முடைய ஒட்டகத்தில் ஏறி நபி (ஸல்) அவர்கள் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இப்னு உமர் (ரலி) கூறுகின்றார்: மட்சிபின் ஹுமைர் எனும் அந்த நயவஞ்சகன் நபிகளாரின் ஒட்டகத்தின் மூக்கணாங்கயிறைப் பிடித்தவாறு பின்னால் ஓடிவந்தான். அவனுடைய பாதங்கள் கற்களில் இடறியது. ஆயினும் விடாமல் அவன் ஓடிவந்தான். ஓடிவரும்போது இவ்வாறு கூறினான்: ‘அல்லாஹ்வின் தூதரே! அது வெறுமனே நாங்கள் பேசிய பேச்சு. பொழுதுபோக்கிற்காகவும் தமாஷாகவும் நாங்கள் பேசியது. பயணத்தில் நேரம் போவதற்காக நாங்கள் பேசியது’ என்று கூறியவாறே பின்னால் ஓடிவந்தான்.
பெருமானார் (ஸல்) அவர்களோ மீண்டும் மீண்டும் அந்த வசனத்தையே ஓதினார்களே தவிர அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. (இப்னு கஸீர்)
நம்பிக்கையாளர்களின் மார்க்கப் பற்று குறித்தும் அவர்களது அடையாளங்கள் குறித்தும் கேலியும் கிண்டலும் பேசாமல் யார் தமது நாவைப் பாதுகாத்து கொண்டாரோ அவரே மறுமையில் முழுமையாக வெற்றி பெற்றவர். நாவின் மூலம் நமது நன்மைகளை நாமே இழக்கலாமா?
-மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.