என் மலர்
இஸ்லாம்
பக்ரீத் பண்டிகையையொட்டி நாளை (சனிக்கிழமை) வீடுகளிலேயே முஸ்லிம்கள் தொழுகை நடத்திக்கொள்ள வேண்டும் என்று விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை கொண்டாடுவது குறித்து மங்கலம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த அனைத்து ஊர் பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமை தாங்கினார். மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மங்கலம்பேட்டை கீழ வீதி, மேலவீதி, அலியார் நகர், மில்லத் நகர், மஸ்ஜிதே ரஹ்மத், உம்மா ஹபீபா ஆகிய பள்ளிவாசல்கள் மற்றும் மங்கலம்பேட்டையை சுற்றியுள்ள எம்.அகரம், எடைச்சித்தூர், டி.மாவிடந்தல், மாத்தூர், பழையப்பட்டினம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில், இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு குத்பா தொழுகையை நடத்தாமல், அவரவர் வீடுகளிலேயே தொழுகை நடத்திக்கொள்ள வேண்டும். ஊர்வலமாக செல்வதற்கும் அனுமதி கிடையாது. அதேபோல் குர்பானி நிகழ்வையும் அவரவர் வீடுகளிலேயே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மங்கலம்பேட்டை கீழ வீதி பள்ளிவாசல் துணைத் தலைவர் அப்துல் ரகுமான், வக்கீல் பாரி இப்ராஹீம், மேலவீதி பள்ளிவாசல் காரியஸ்தர் சஹாப்தீன், எம்.அகரம் பள்ளிவாசல் முத்தவல்லி முகமது ஜாபர், காரியஸ்தர் ஹஜ்ஜி முகமது, டி.மாவிடந்தல் குடுஜான், பழையப்பட்டினம் அப்துல் ஹை, முகமது யாசீன், மாத்தூர் அப்துல் ஹமீது உள்ட பலர் கலந்துகொண்டனர்.

இப்ராகீம் நபிகள் வாழ்வில் செய்த இந்த தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லீம்கள் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் பக்ரீத் பண்டிகையாக, தியாகத் திருநாளாக வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர். அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்.
இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்ராகீம் நபிகள். இவர், இளமைக்காலம் தொட்டே பகுத்தறிவில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார்கள். எந்த ஒரு நிகழ்வையும் ஏன், எதற்கு என்று கேள்வி எழுப்பி, அதற்கு விடை காண்பதற்கு பெரு முயற்சி எடுத்துக் கொண்டார்கள்.
இப்ராகீம் நபிகளின் தந்தை ஆஜர் என்பவர் களிமண்ணில் கடவுள் பொம்மைகள் செய்து அவற்றை விற்பனை செய்து வந்தார். இதனை பிடிக்காத இப்ராகீம் நபிகள், ‘கீழே விழுந்தால் உடைந்து விடக்கூடிய, தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத மண் பொம்மைகள் எப்படி உலகைக் காக்கும் கடவுளாக முடியும்’ என்று அதனை எதிர்த்தார்கள். அதனால் தந்தையை மட்டுமல்ல அந்த ஊரையே பகைத்துக் கொண்டார்கள்.
‘மண் பொம்மைகள் கடவுள் இல்லை என்றால், உண்மையான இறைவன் யார்?’ என்பதில் அவர்கள் கவனம் திசை திரும்பியது.
‘இருளிலும், வெளிச்சத்திலும் உலகை காக்கும் மகா சக்தியே இறைவனாக இருக்க முடியும். அதுவே அல்லாஹ்’ என்று தனது ஞானத்தின் மூலம் அறிந்து கொண்டார்கள். அல்லாஹ்வும் இப்ராகீமை நபியாக ஏற்றுக்கொண்டான்.
அல்லாஹ்வும், இப்ராகீம் நபிகளுக்கு உள்ளுணர்வின் மூலமாகவும், கனவின் மூலமாகவும் தன்னுடைய கட்டளைகளை பிறப்பித்து வந்தான். மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது அந்த கட்டளைகள் அவர்களுக்கு சோதனையாக அமைந்ததாகத் தான் தெரியும். ஆனால் அல்லாஹ் அதன்மூலம் மிகச் சிறந்த கடமைகளை மனித இனத்திற்கு உணர்த்தினான்.
ஒருமுறை தான் கண்ட கனவின் மூலமாக அருமை மனைவி ஹாஜரா அம்மையாரையும், அருந்தவச் செல்வன் இஸ்மாயிலையும் பாலைவனத்தில் விட்டுவிட்டு திரும்பி வந்து விட்டார்கள். அவர்களுக்கு அது சோதனை. ஆனால் அதன் விளைவாக மக்கா என்ற சிறப்புற்ற நகரமும், ’ஜம்ஜம்’ என்ற வற்றாத ஜீவ நீர் ஊற்றும் உருவானது.
மற்றொரு முறை, குழந்தை இஸ்மாயிலை, அல்லாஹ்வின் கட்டளைப்படி அறுத்து பலியிடுவதாக கண்ட கனவை நிறைவேற்ற முயன்றார்கள். அப்போது அல்லாஹ் அதனைத் தடுத்து, ஒரு ஆடு அனுப்பி, அதை அறுத்து குர்பானி கொடுக்க கட்டளையிட்டான். அரேபிய மாதமான துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் இது நடந்தது.
உலக வாழ்வில் தான் சந்தித்த நிகழ்வுகள் அனைத்தையும் ஏன் எதற்கு என்று கேட்டவர்கள், அல்லாஹ்வின் கட்டளை என்று வந்தபோது எந்தவித ஆட்சேபனையும் இன்றி உடனே அடிபணிந்தார்கள். எனவே தான் அல்லாஹ் இப்ராகீம் நபிகளை, ‘தன் நேசத்துக்கு உரியவர்’ என்று பெருமிதத்தோடு குறிப்பிடுகின்றான்.
இப்ராகீம் நபிகள் வாழ்வில் செய்த இந்த தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லீம்கள் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் பக்ரீத் பண்டிகையாக, தியாகத் திருநாளாக வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர். அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்.
அஸ்ரா உமர் கத்தாஃப், சென்னை.

மலைபோல வேதனைகள், சோதனைகள், பிரச்சினைகள் வந்தாலும் இனி தப்பவே முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும், அதனை பொறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உலகில் மனிதர்கள் சிறுசிறு கூட்டங்களாக வாழ்ந்த காலகட்டங்களில் ஒவ்வொரு கூட்டத் திற்கென தனியாக ஒரு நபியை அனுப்பி வைத்தான் அல்லாஹ். அப்போது, யூனுஸ் நபியை ஒரு கூட்டத் திற்கு நபியாக அனுப்பினான். அந்த மக்களுக்கு பல ஆண்டுகள் அல்லாஹ்வின் வல்லமையை யூனுஸ் நபிகள் எடுத்துச் சொல்லியும், அந்த மக்கள் இறை கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே யூனுஸ் நபிகள் அந்த ஊரை விட்டு வெளியேறினார்கள். ஒரு கப்பலில் ஏறி வேறு ஒரு ஊருக்கு பயணமானார்கள். கப்பல் நடுக்கடலை அடைந்ததும் கடும் புயல் வீசத் தொடங்கியது. அது இயற்கை சீற்றம் என்று அந்த மக்கள் நம்பிக்கை கொண்டிருந்ததால், அறியாமைக்கால வழக்கப்படி திருவுளச்சீட்டு போட்டு பார்த்தார்கள். அதன்மூலம் பயணியர்களில் ஒருவரை கடலுக்கு பலி கொடுக்க தீர்மானித்தார்கள். மூன்று முறை திருவுளச்சீட்டு போட்டுப் பார்த்தும் திரும்ப திரும்ப யூனுஸ்நபி அவர்களின் பெயரே வந்தது.
அந்த முடிவின்படி யூனுஸ் நபிகளை கடலில் தூக்கிப் போட்டார்கள். அப்போது கப்பலின் அருகே வந்த பெரிய திமிங்கலம் ஒன்று அவரை விழுங்கிக் கொண்டது. அல்லாஹ்வின் அருளால் யூனுஸ் நபிகள் மீன் வயிற்றிலேயே உயிரோடு பாதுகாக்கப் பட்டார்கள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டி அல்லாஹ்விடம் யூனுஸ் நபியவர்கள் இவ்வாறு பிரார்த்தித்தார்கள்.
“உன்னைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். என்னை மன்னித்து அருள்புரிவாயாக என்று பிரார்த்தனை செய்தார்”. (திருக்குர்ஆன் 21:87)
தனக்கு ஒரு துன்பம் வந்தபோது இறைவனிடம், ‘யா அல்லாஹ், என்னை இந்த இக்கட்டில் இருந்து பாதுகாத்து கிருபை செய்’ என்று யூனுஸ் நபிகள் தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அல்லாஹ், ‘யூனுஸ் நபியை கடற்கரையில் கொண்டு விட்டு விடும்படி மீனிற்கு கட்டளையிட்டான். இதன்படி கரையில் ஒதுங்கிய நபியவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி சிரம் பணிந்தார்கள்.
எனவே மலைபோல வேதனைகள், சோதனைகள், பிரச்சினைகள் வந்தாலும் இனி தப்பவே முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும், அதனை பொறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். நெருக்கடியான நேரத்தில் யூனுஸ் நபி இறைவனிடம் வேண்டியது போல இந்த பிரார்த்தனையை நம்பிக்கையோடு செய்து வந்தால் நிச்சயமாக அல்லாஹ் நம்மை பாதுகாத்து அருள் புரிவான், ஆமின்.
ஹம்ஸா, தாராபுரம்

நாமும் தினந்தோறும் தொழுகையில் ஈடுபட்டு, திருக்குர்ஆன் ஓதி, தான தர்மங்கள் மற்றும் நல்லறங்கள் செய்வதோடு, இந்த பிரார்த்தனையை ஓதி வருவோம். இதன்மூலம் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நல்லடியார்களாக வாழ்வோம்.
எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ், இந்த உலகைப் படைத்த பின்னர் அதில் உயிரினங்களைப் படைக்க முடிவு செய்தான். முதல் மனிதர் ஆதம் நபிகளைப் படைத்து சொர்க்கத்தில் உள்ள அனைவரையும் அவருக்கு சிரம் பணிய பணித்தான்.
ஆனால் சைத்தானோ “இறைவா, நீ என்னை நெருப்பால் படைத்தாய். மனிதனையோ களிமண்ணால் படைத்தாய். நான் அவரை விட உயர்ந்தவன். நான் அவருக்கு தலைவணங்க மாட்டேன்” என்றான்.
அல்லாஹ் அவனை சபித்து சொர்க்கத்தை விட்டு வெளியேற்றினான். ஆனால் சைத்தானோ, “உலகில் மனிதனை நான் எப்போதும் வழிகெடுத்துக் கொண்டே இருப்பேன்” என்றான்.
அதன் முதல் நிகழ்வாக ஆதம் நபிகளை வழிதவறச் செய்தான். “எந்த மரத்தின் கனியைப் புசிக்காதீர்கள்” என்று அல்லாஹ் தடுத்தானோ, அதனைப் புசிக்குமாறு சதி செய்து விட்டான்.
ஆதம் நபிகள் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதால் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றப் பட்டு உலகில் வந்து வாழ்ந்தார்கள். அப்போது அவர்கள் பல துன்பங்களை அனுபவித்தார்கள். தான் செய்த பாவத்தை உணர்ந்து அல்லாஹ்விடம் கையேந்தி இவ்வாறு பிரார்த்தித்தார்கள்:
“எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம், நீ எங்களை மன்னித்து கிருபை செய்யாவிட்டால் நாங்கள் நஷ்டவாளிகள் ஆகி விடுவோம்” (திருக்குர்ஆன் 7:23) என்று மனமுருக பிரார்த்தித்தார்கள்.
அல்லாஹ்வும் அவர் மேல் இரக்கம் கொண்டு பாவமன்னிப்பு அளித்தான்.
எனவே நாமும் எத்தனைப் பெரிய பாவங்கள் செய்தாலும் பாவமன்னிப்பிற்காக அவனிடம் கையேந்தினால் அல்லாஹ் நம் பாவங்கள் அனைத்தையும் நிச்சயமாக மன்னிக்கின்றான்.
நாமும் தினந்தோறும் தொழுகையில் ஈடுபட்டு, திருக்குர்ஆன் ஓதி, தான தர்மங்கள் மற்றும் நல்லறங்கள் செய்வதோடு, இந்த பிரார்த்தனையை ஓதி வருவோம். இதன்மூலம் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நல்லடியார்களாக வாழ்வோம்.
முகைதீன் காமில், சென்னை.

தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்பட்டி ஜீம்ஆ பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தினர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் கிராமங்களில் உள்ள வழிபாட்டு தலங்களில் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதன்படி கிராமங்களில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள பள்ளிவாசல்களில் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தொழுகை நடத்தி கொள்ள அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்பட்டி ஜீம்ஆ பள்ளிவாசலில் நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தினர். அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆறடி இடைவெளி விட்டு, முககவசம் அணிந்தவாறு தொழுகையில் கலந்து கொண்டனர். கடந்த 4 மாதங்களுக்கு பிறகு பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.

நம்பிக்கையோடு இந்த துஆவை நாம் தினந்தோரும் ஓதி வருவோம், வல்ல ரஹ்மான் நம் பிரார்த்தனைகளை ஏற்று கிருபை செய்வானாக, ஆமின்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அப்பாஸ் (ரலி). இவர் ஒருமுறை நபிகளாரை சந்தித்து, ‘பல நன்மைகளைப் பெற்றுத்தரும் சிறந்த ஒரு துஆவை (பிரார்த்தனையை) கற்றுத்தாருங்கள்’ என்று கேட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னி அஸ் அலுக்க அல்-ஆஃபியா” என்று சுருக்கமான ஒரு துஆவை கற்றுத்தந்தார்கள்.
‘இறைவா, எல்லாவித தொந்தரவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்று’ என்பது இதன் சுருக்கமான பொருள் ஆகும். ‘ஆஃபியா’ என்பது நோய் நொடிகள், துன்பங்கள், துயரங்கள், கவலைகள், வறுமை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிப்பது என்று அதற்கு விளக்கமும் சொன்னார்கள்.
நோயில்லாத, கவலைகள் அற்ற வாழ்வு வாய்த்திருந்தால் அது ஆஃபியா. தேவைக்கு போதுமான பொருளாதாரம், அதில் அபிவிருத்தியும் தன்னிறைவும் பெற்றிருந்தால் - அது ஆஃபியா. அல்லாஹ் நம் தேவைகளையும், எண்ணங்களையும் நிறைவேற்றி நம் முயற்சியில் வெற்றியைத் தந்தால் - அது ஆஃபியா.
நம் குடும்பமே அல்லாஹ்வின் பாதுகாவல் பெற்றிருந்தால் - அது ஆஃபியா. நம்முடைய தொழில், வியாபாரம், வேலை ஆகியவற்றில் ‘பரக்கத்’ என்னும் அருள் பெற்றிருந்தால் - அது ஆஃபியா.
உலகில் நம்முடைய தேவைகளுக்காக இறைவனைத் தவிர பிறரின் தேவையை நாடாதிருந்தால் - அது ஆஃபியா.
பாவங்கள் மன்னிக்கப்பட்டும், அதனால் தண்டிக்கப்படாமலும் இருந்தால் - அது ஆஃபியா.
இவ்வாறு நம் எண்ணங்கள், தேவைகள் அனைத்தும் எளிய, சிறிய, ஆனால் செறிவு மிக்க இந்த துஆவில் அடக்கம்.
எனவே நம்பிக்கையோடு இந்த துஆவை நாம் தினந்தோரும் ஓதி வருவோம், வல்ல ரஹ்மான் நம் பிரார்த்தனைகளை ஏற்று கிருபை செய்வானாக, ஆமின்.
மு. முகமது யூசுப், உடன்குடி.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. பயணத்துக்காக கட்டணம் செலுத்தியவர்களுக்கு திருப்பித்தர இந்திய ஹஜ் கமிட்டி முடிவு எடுத்துள்ளது.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று, வாழ்வில் ஒரு முறையேனும் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வதாகும். ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து ஏராளமானோர் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டு அடுத்த மாத இறுதியில் அல்லது ஆகஸ்டு மாத தொடக்கத்தில் அந்த புனிதப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. 2 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு ஹஜ் புனிதப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
இதற்கான கட்டணத்தை அவர்கள் பலரும் ஹஜ் கமிட்டியிடம் செலுத்தி இருந்தனர்.
ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று 2 லட்சத்து 37 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும், சவுதி அரேபியாவில் 95 ஆயிரத்துக்கு அதிகமானோருக்கும் பரவி இருக்கிறது. இந்தியாவில் 6,650 பேரும், சவுதி அரேபியாவில் சுமார் 650 பேரும் பலியாகியும் உள்ளனர்.
இப்படி கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஹஜ் புனிதப்பயணத்தை இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இஸ்லாமிய பெருமக்கள் மேற்கொள்வதற்கு வாய்ப்பு இல்லை என தகவல்கள் கூறுகின்றன.
இதையொட்டி இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி மக்சூத் அகமது கான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் அதில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவில் இருந்து ஹஜ் புனிதப்பயணத்துக்கான ஆயத்த பணிகளை செய்வதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் சவுதி அதிகாரிகள் இது தொடர்பாக எந்த மேலதிக தகவலையும் தெரிவிக்கவில்லை.
ஆனால் இங்கு ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வதில் நிலவி வருகிற நிச்சயமற்ற தன்மை குறித்து பல தரப்பினரும் விசாரித்துள்ளனர். கவலை தெரிவித்தும் இருக்கிறார்கள். இந்த நிலையில், இந்த ஆண்டு ஹஜ் புனிதப்பயணத்தை ரத்து செய்ய விரும்புவோருக்கு, இதுவரை செலுத்திய 100 சதவீத தொகையும் எந்த விதமான பிடித்தமும் இன்றி திருப்பித்தரப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி மக்சூத் அகமது கான் கூறி உள்ளார்.
இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வதற்காக சவுதி அரேபிய அரசுடன் இந்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது நினைவுகூரத்தக்கது.
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு இல்லை என்கிற நிலையில், சில நாடுகள் ஏற்கனவே இந்த புனிதப்பயணத்தை நடப்பு ஆண்டில் மேற்கொள்வதை ரத்து செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்களை கொண்டுள்ள இந்தோனோசியாவிலும் இந்த ஆண்டு ஹஜ் புனிதப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே எளிமையாக கொண்டாடினர். காலை, மாலை தொழுகைகளை அவர்கள் தங்கள் வீடுகளிலேயே நடத்தி வந்தனர்.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான் பண்டிகை. இந்த பண்டிகை ரமலான் மாத இறுதியில் (பிறை தெரிவதை கணக்கிட்டு) கொண்டாடப்படுகிறது. எனவே இஸ்லாமிய மாதங்களில் இந்த ரமலான் மாதம் புனிதமிக்க மாதமாக கருதப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகையன்று காலை சிறப்பு தொழுகை முடிந்த பிறகு தம்மை சுற்றியுள்ள ஏழை, எளியவர்களுக்கு தானதர்மங்கள் செய்தும், தங்களது உறவினர்களுக்கும், உற்ற நண்பர்களுக்கும் தம்மால் இயன்ற உதவி மற்றும் விருந்து அளிப்பார்கள். இதனால்தான் ரம்ஜான் பண்டிகையை ஈகைத்திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
ரமலான் மாதம் முழுவதும் அதாவது 30 நாட்கள் முஸ்லிம்கள் நோன்பை கடைபிடிப்பது வழக்கம். நோன்பு ஆரம்பிக்கும்போதும், நோன்பை நிறைவு செய்யும்போதும் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களுக்கு சென்று கூட்டுத்தொழுகையில் ஈடுபடுவார்கள். ஆனால் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் ரமலான் மாதமும் தொடங்கியது.
வழக்கம்போல் இந்த ஆண்டும் முஸ்லிம்கள், ரமலான் மாத நோன்பை உலகம் முழுவதும் கடைபிடித்தார்கள். அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் இந்த நோன்பை முஸ்லிம்கள் கடைபிடித்தனர். காலை, மாலை தொழுகைகளை அவர்கள் தங்கள் வீடுகளிலேயே நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை கடலூர் மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வழக்கமாக காலையில் பள்ளிவாசல்கள், மைதானங்கள் போன்றவற்றில் சிறப்பு தொழுகைகள் நடைபெறும். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளையும், அன்பையும் பரிமாறிக்கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக கூட்டமாக கூடி நின்று வழிபாடுகள், தொழுகைகள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருப்பதால் பள்ளிவாசல்கள், மைதானங்களில் தொழுகைகள் நடைபெறவில்லை. மாறாக, முஸ்லிம்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே மிகவும் எளிமையான முறையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். ஒவ்வொரு வீட்டிலும் அந்தந்த குடும்ப தலைவர் தலைமையில் தொழுகைகள் நடந்தன. முஸ்லிம்கள் தங்களது குடும்பத்தினரோடு சமூக இடைவெளியை பின்பற்றி தொழுகை செய்தனர். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் வீடுகளில் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது என்பதால் அவர்கள் தங்கள் வீட்டின் மாடியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தொழுகை முடிந்ததும் பிரியாணி உள்ளிட்ட அறுசுவை உணவுகளை சமைத்து சாப்பிட்டதோடு உறவினர்கள், நண்பர்களுக்கும் அதனை கொடுத்து மகிழ்ந்தனர். இந்த பண்டிகையை கொண்டாடும் அனைவரும் புத்தாடைகள் அணிவார்கள். கொரோ னா ஊரடங்கால் வாழ்வாதாரங்களை இழந்த பலர் புத்தாடைகள் வாங்க முடியாததால் தங்களுடைய தகுதிக்கேற்ப இந்த பண்டிகையை எளிமையாக கொண்டாடினர். அதேபோல் ஊரடங்கால் நேருக்கு நேர் வாழ்த்துக்களை தெரிவிக்க முடியாதவர்கள், தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு செல்போன்களில் வாட்ஸ்-அப், முகநூல் மூலமாக வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
ரம்ஜானையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் பள்ளிவாசல், கடலூர் முதுநகர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஈகைத் திருநாள் என்பது இஸ்லாமியமக்களின் இன்றியமையாத நன்நாள். இந்த பண்டிகை சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இந்த உலகில் பரப்பும் நோக்கில் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஈகைத் திருநாள் என்பது இஸ்லாமியமக்களின் இன்றியமையாத நன்நாள். இந்த பண்டிகை சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இந்த உலகில் பரப்பும் நோக்கில் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதயம் மலர்ந்து வாழ்த்துகளை சொல்லும் இந்த நாளில் உள்ளங்கள் மட்டுமின்றி, அவர்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சி மலர்ந்து காணப்படும். கோவை மாவட்டத்திலும் இந்த திருநாளின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இஸ்லாமியர்கள் அனைவரும் இந்த திருநாளை இன் முகத்தோடு வரவேற்று தங்களின் ஈகைக்குணத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த திருநாளை கொண்டாடும் வேளையில், இது குறித்து இஸ்லாம் மார்க்க அறிஞர்கள் சிலர் கூறியதாவது:- இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே, அவர்களின் உறுதியான நம்பிக்கை. அப்படியான நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை முறையில் ஈகைத் திருநாளாக ரம்ஜான் பண்டிகையும், மற்றும் தியாகத் திருநாள் என்கிற பக்ரீத் பண்டிகையும் ஆண்டுதோறும் இஸ்லாம் மார்க்கத்தில் பெருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ரமலான் சிறப்புகள் முக்கியமானது. இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு.
அதில் ஒன்று, ரமலான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ரமலான் மாதத்தைப் பொறுத்தவரை எல்லா இஸ்லாமியர்களுக்குமே, அல்லாவை அதிகம் நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும் இருப்பதால், ஒரு சிலர் தவிர அனைவருமே நோன்பு இருக்க என்றுமே தவறுவதில்லை. தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதே ரமலான் மாதத்தில் முக்கியமானது.
அப்படி இருக்கும்பொழுதுதான், மனது தூய்மையை நாடும் என்பது அதன் மறைபொருளாக இருக்கிறது. அதாவது அதிகாலை முதல், மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல், பிற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்ற தத்துவதை உணர்த்துகிறது. ரமலான் நோன்பின் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல்பிறை தோன்றுவதற்கேற்ப அந்நாடுகளில் ரம்ஜான் கொண்டாடப்படும்.
சவுதி அரேபியா, கத்தார், பக்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் ரம்ஜான் கொண்டாடிய மறுநாள்தான் இந்தியாவில் ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் சிறப்பு தொழுகைகளுடன் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகவே உலக சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை மலரவைக்கும் ஈகைத்திருநாள் அனைவரது இதயங்களையும் இணைக்கட்டும். உலக அச்சுறுத்தல்கள் அனைத்தும் அகன்று போகட்டும். உலகம் முழுவதும் நன்மைகள் பெருகட்டும். உலக மக்கள் அனைவரும் வழக்கம்போல் தங்களது பணிகளை செய்து, பிறருக்கு பகிர்ந்து கொடுக்கும் நல்ல மனம் உருவாகட்டும். நாட்டில் செழிப்பும், மேன்மையும் உருவாகட்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த புனித ஈகைத் திருநாளில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி மக்கள் எல்லா நலனும் பெறவும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு மாதம் முழுக்க குறிப்பிட்ட நேரம் முதல் குறிப்பிட்ட நேரம் வரை உண்ணாமல், குடிக்காமல், நோன்பிருந்து, மாத முடிவில் அதைக் கொண்டாடும் இந்த ரம்ஜான் பெருநாள் பல சிறப்புகளை கொண்டது. நோன்பிருந்தவர்களுக்கும், ஏழை களுக்கும் குடும்பத்தினருக் கும், குழந்தைகளுக்கும், சமுதா யத்தவருக்கும் மகிழ்ச்சி தருவது இந்த திருநாள். காரணம் இந்த மாதத்தில்தான் ஜகாத் என்று சொல்லப்படும் ஏழை வரி ஏராளமாக மனசாட்சி உள்ள சம்பாதிப்பவர்களால் கொடுக் கப்படுகிறது.
வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை இல்லாதவர்களுக்கு தானம் செய்ய வேண்டும் என்பதை ஒரு கடமையாய் விதித்திருக்கும் மதம் இஸ்லாத்தை தவிர வேறு எதுவும் இந்த உலகில் உள்ளதா என்று தெரியவில்லை. நோன்பு என்பது சும்மா பட்டினி கிடப்பதல்ல. எல்லாம் இருந்தும், இறைவனுக்காக எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இருக்கின்ற கடமையாகும். அதன் மூலம் பசி, பட்டினியால் வாடும் ஏழைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள இந்த புனிதமிக்க மாதம் வழி வகுக்கிறது.
ஒரு பிரச்சினையை வெளியில் இருந்து பார்க்காமல், அதில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று நோன்பையும் இறைவன் இஸ்லாத்தில் ஒரு கடமையாக ஆக்கி வைத்துள்ளான். இந்த கடமையை நிறைவேற்றுவதன் மூலம் சுய கட்டுப்பாட்டை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். என்று இறைவன் திருக்குர் ஆனில் கூறுகின்றான்.
ஆயிரம் மாதங்களை விட இந்த மாதம் சிறப்பு மிக்கது, ஏன்? இந்த மாதத்தில்தான் புனித குர்ஆன் நபிகள் நாயகத்துக்கு இறைவனால் அருளப்பட்டது. நோன்பு பிடித்தவர்களை கண்ணி யப்படுத்தும் பொருட்கள் ரையான் என்ற சிறப்பு வாயிலை இறைவன் சொர்க்கத்தில் திறந்து வைத்திருப்பதாகவும் கூறுகின்றான். ரமலான் மாதத்தில் கருணையின் கதவுகள் திறக்கப்படுவதாகவும், நரகத்தின் வாயில்கள் மூடப்படுவதாகவும் நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்கள்.
இந்த புனித ஈகைத் திருநாளில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி மக்கள் எல்லா நலனும் பெறவும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை இல்லாதவர்களுக்கு தானம் செய்ய வேண்டும் என்பதை ஒரு கடமையாய் விதித்திருக்கும் மதம் இஸ்லாத்தை தவிர வேறு எதுவும் இந்த உலகில் உள்ளதா என்று தெரியவில்லை. நோன்பு என்பது சும்மா பட்டினி கிடப்பதல்ல. எல்லாம் இருந்தும், இறைவனுக்காக எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இருக்கின்ற கடமையாகும். அதன் மூலம் பசி, பட்டினியால் வாடும் ஏழைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள இந்த புனிதமிக்க மாதம் வழி வகுக்கிறது.
ஒரு பிரச்சினையை வெளியில் இருந்து பார்க்காமல், அதில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று நோன்பையும் இறைவன் இஸ்லாத்தில் ஒரு கடமையாக ஆக்கி வைத்துள்ளான். இந்த கடமையை நிறைவேற்றுவதன் மூலம் சுய கட்டுப்பாட்டை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். என்று இறைவன் திருக்குர் ஆனில் கூறுகின்றான்.
ஆயிரம் மாதங்களை விட இந்த மாதம் சிறப்பு மிக்கது, ஏன்? இந்த மாதத்தில்தான் புனித குர்ஆன் நபிகள் நாயகத்துக்கு இறைவனால் அருளப்பட்டது. நோன்பு பிடித்தவர்களை கண்ணி யப்படுத்தும் பொருட்கள் ரையான் என்ற சிறப்பு வாயிலை இறைவன் சொர்க்கத்தில் திறந்து வைத்திருப்பதாகவும் கூறுகின்றான். ரமலான் மாதத்தில் கருணையின் கதவுகள் திறக்கப்படுவதாகவும், நரகத்தின் வாயில்கள் மூடப்படுவதாகவும் நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்கள்.
இந்த புனித ஈகைத் திருநாளில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி மக்கள் எல்லா நலனும் பெறவும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
முழு ரமலான் மாதமும் நமக்கு கற்றுத்தந்த பாடங்களை நினைவில் கொண்டு என்றென்றும் மறக்காமல் நமக்கும், நம்மைச்சுற்றி உள்ளவர்களுக்கும் நற்சேவைகள் பல செய்வோமாக.
சமூக சேவை இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவை. சமூகப்பொறுப்புடன் ஒவ்வொருவரும் கட்டாயம் சேவை செய்ய வேண்டும். இந்த ரமலானும் அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.
இதுகுறித்து இறைமறை இப்படிப் பேசுகிறது: நன்மையே செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் (திருக்குர்ஆன் 22:77)
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்:(ஏனெனில்) நீங்கள் நல்லதை செய்ய ஏவுகிறீர்கள்: தீயதை விட்டும் விலக்குகிறீர்கள். (திருக்குர்ஆன் 3:110)
நிச்சயமாக சேவைகளுக்கான மாபெரும் கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது. (திருக்குர்ஆன் 9:22)
நம்பிக்கை ஊட்டுவது, வழிகாட்டுவது, உதவி செய்வது, உணவளிப்பது, உடையளிப்பது, குடிநீர்க்குழாய் அமைப்பது, நிழற்குடை அமைப்பது, கல்வி தருவது, மருந்தளிப்பது, ரத்த தானம் செய்வது என சமூக சேவையின் கரங்கள் ஏராளம் உண்டு. இவற்றில் நம்மால் எதைச் செய்ய முடியுமோ அதை நிச்சயம் நாம் செய்ய வேண்டும். அது நாம் நடக்கும் பாதையில் கிடக்கும் கற்களையும், முட்களையும் கண்ணாடித்துண்டுகளையும் அகற்றுவதாகக்கூட இருக்கலாம்.
நபிகள் நாயகம் கூறினார்கள்: இறைவிசுவாசம் என்பது எழுபத்தேழு கிளைகளை கொண்டது.அதில் உயர்ந்தது லாயிலாஹ இல்லல்லாஹ - அல்லாவை தவிர வேறு கடவுள் இல்லை என்ற திருச்சொல்லாகும். அதில் கீழானது நடைபாதையில் இடையூறுஅளிப்பவைகளை அகற்றுவதாகும். ( நூல்:புகாரி)
இறைவன் எந்த ஊரையும் அவ்வூர் மக்கள் சீர்திருத்தம் புரிவோராய் இருக்கும் நிலையில் நியாயமின்றி அழித்துவிடக்கூடியவன் அல்லன். (திருக்குர்ஆன் 11:117) என்ற இந்த வான்மறை வசனம், நாமும் நமது ஊர் மக்களும் எப்படியிருக்க வேண்டும் என்பதை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
தொழுகை, நோன்பு, தர்மம் இவைகளை விட உயரிய செயல் ஒன்று உள்ளது. அதை நான் கூறட்டுமா? கூறுங்கள் நாயகமே. மக்களுக்கிடையே நீங்கள் சீர்திருத்தம் செய்வது தான் அது என்றார்கள் நபிகள். (நூல்:அபூதாவூது)
நபிகள் நாயகம் கூறினார்கள்: நீங்கள் அறிவீர்களா...உங்களிடம் பலவீனமானவர்களுக்கு நீங்கள் சேவை செய்வதன் வழியாகத்தான் நீங்கள் உணவளிக்கப்படுகிறீர்கள். மேலும் உதவி செய்யப்படுகிறீர்கள். (நூல்:புகாரி)
நபிகன் நாயகம் கூறினார்கள்: எவர் விதவைகளுக்கும், ஏழைகளுக்கும் சேவை செய்கிறாரோ அவர் இடைவிடாமல் நின்று தொழுதவர் மற்றும் இடைவிடாமல் நோன்பு நோற்றவர் போன்றவர் ஆவார். (நூல்:முஸ்லிம்)
எனவே முழு ரமலான் மாதமும் நமக்கு கற்றுத்தந்த பாடங்களை நினைவில் கொண்டு என்றென்றும் மறக்காமல் நமக்கும், நம்மைச்சுற்றி உள்ளவர்களுக்கும் நற்சேவைகள் பல செய்வோமாக.
மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3

அநீதி அழிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறோமோ அவ்வாறே நீதி நிலைக்க வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
அநீதி அழிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறோமோ அவ்வாறே நீதி நிலைக்க வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இது குறித்து இறைமறைக்குர்ஆன் இப்படி கூறுகிறது:
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறு நன்மை செய்யுமாறு ஏவுகிறான்:நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். (திருக்குர்ஆன் 16:90)
நம்பிக்கையாளர்களே அல்லாஹ்வுக்காக நீதமாக (உண்மை) சாட்சி சொல்வபர்களாக இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும் படி உங்களை தூண்டாதிருக்கட்டும். (எவ்வளவு குரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்த தன்மைக்கு மிக நெருங்கியது. (எத்தகைய சந்தர்ப்பங்களிலும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:9)
மேற்கண்ட வான்மறை வசனங்கள் அனைத்தும் நீதியின் அவசியத்தை நமக்கு வலியுறுத்திக் காட்டுகின்றன.
இந்த உலகம் சீராக சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் உலகம் முழுவதும் நீதி நிலை நாட்டப்பட வேண்டும்.
இதில் உயர்ந்தவர்-தாழ்ந்தவர். ஏழை-பணக்காரன், நகரவாசி- கிராமவாசி, உள்ளூர்காரன்-வெளியூர்காரன் என்ற எந்த ஒரு சின்னஞ்சிறு வேறுபாடும் இல்லை.
எங்கும் நிழலில்லாத மறுமைநாளில் இறைவனின் சிம்மாசனத்தின் கீழ் ஏழு வகையான மனிதர்களுக்கு நிழல் கிடைக்கும் என்று கூறி பட்டியலிட்ட நபிகள் நாயகம் அதில் முதல் நபராக நீதியுள்ள தலைவர் என்று குறிப்பிட்டார்கள்.
எனவே நீதி என்பது முக்கியமானது. கட்டாயம் நிலைநிறுத்தப்பட வேண்டியது. நீதி இந்த உலகில் மட்டுமல்ல நாளை மறு உலகிலும் நம்மை காப்பற்றும்.
நபிகள் நாயகம் கூறினார்கள்: நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு மத்தியில் நீதியாக நடந்து கொள்ளுங்கள். (நூல்:மிஷ்காத்)
எனவே நீதியை முதலில் நமது வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். ஒவ்வொரு வீடும் சரியாக விட்டால் நமது நாடும் சரியாகி விடும். அதுதானே இன்றைய தேவையும் கூட.
நபிகள் நாயகம் கூறினார்கள்: அல்லாஹ் எனக்கு ஒன்பது காரியங்களை கட்டளையிட்டான். கோபமான நிலையிலும் திருப்தியான நிலையிலும் நீதமான வார்த்தைகளைத்தான் நான் பயன்படுத்த வேண்டும் என்பது அதில் ஒன்று. (நூல்:மிஷ்காத்)
நாம் பேசும் வார்த்தைகளில் கட்டாயம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் வார்த்தைகள்நமது இருப்பை தீர்மானிக்கின்றன.
எனவே இனியேனும் நமது காரியகங்கள் அனைத்திலும் நீதியுடன் பேசி, நீதியுடன் நடந்து, நீதியின் வழியில் வாழ்வோமாக.