என் மலர்
இஸ்லாம்
நாம் நமது வணக்கங்களின் வழியாக நன்றி செலுத்தினால் மட்டும் போதாது. நம்மை சுற்றியிருப்பவர்கள் நமக்கு செய்த நற்காரியங்களுக்கு முதலில் நாம் நன்றி செலுத்த வேண்டும்.
நன்றி கூர்தல் என்பது நற்குணங்களில் முக்கியமான ஒன்று. நன்றி மறப்பது நன்றன்று என்பது நாமறிந்த ஒன்று. இது போன்ற ரமலானிய காலங்களில் கட்டாயம் நாம் இறைவனுக்கு இதர மக்களுக்கும் மனதார நன்றி செலுத்த வேண்டும்.
இதுகுறித்து இறைமறை கூறுவதைப்பாருங்கள்: நீங்கள் நன்றி செலுத்துவீர்களென்று இதற்குப்பின்னும் நாம் உங்களை மன்னித்தோம். (திருக்குர்ஆன் (2,52)
நம்பிக்கையாளர்களே நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவைகளில் இருந்தோ புசியுங்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (திருக்குர்ஆன் 2:172)
அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்கு பயந்து (வழிபட்டு) நடங்கள். (திருக்குர்ஆன் 3:123)
நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் விரைவில் நற்பலனை வழங்குவோம். (திருக்குர்ஆன் 3:145)
நீங்கள் (இவ்வாறு) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டும், அவனுக்கு நன்றி செலுத்தி கொண்டுமிருந்தால் உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன (லாபம்) அடைப்போகிறான்? அல்லாஹ்வோ( நீங்கள் செய்யும் ஒரு சொற்ப) நன்றிக்கும் கூலி கொடுப்பவனாகவும், யாவையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன்: 4:147)
நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை)அதிகமாக்குவேன்: (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக்கடுமையானதாக இருக்கும் என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூருங்கள்) (திருக்குர்ஆன் 14:7)
மேற்கண்ட வான்மறை வசனங்கள் நன்றி கூர்வதைப்பற்றி தெள்ளத்தெளிவாக நமக்கு கூறிக்காட்டுகின்றன. எனவே நன்றி கூறுவதையும் நன்றி செலுத்துவதையும் ஒருபோதும் நாம் கைவிட்டுவிடக்கூடாது.
நபிகள் நாயகம்கூறினார்கள்: எவர் மக்களுக்கு நன்றி செய்யவில்லையோ அவர் அல்லாஹ்வுக்கு நன்றி செய்தவராக ஆக முடியாது (நூல்:அஹ்மது)
நாம் நமது வணக்கங்களின் வழியாக நன்றி செலுத்தினால் மட்டும் போதாது. நம்மை சுற்றியிருப்பவர்கள் நமக்கு செய்த நற்காரியங்களுக்கு முதலில் நாம் நன்றி செலுத்த வேண்டும்.
ஒருமுறை நபிகளார் கூறினார்கள்: ஆச்சரியம் தான் ஒரு இறைவாசிக்கு (நல்லதோ, கெட்டதோ) என்ன ஏற்பட்டாலும் அவனுக்கு நல்லது தான். எப்படி என்றால் அவனுக்கு நல்லது நடந்தால் நன்றி செலுத்துவான். இது அவனுக்கு நல்லது தானே. அவனுக்கு கெட்டது நடந்தால் பொறுமையாக இருப்பான். இதுவும் அவனுக்கு நல்லது தானே. (நூல்:முஸ்லிம்)
எனவே நாம் நம்மை படைத்த இறைவனுக்கும், நம்மை சுற்றயுள்ள மக்களுக்கும் மனப்பூர்வமாக நன்றி செலுத்தி நன்மக்களாக வாழ்வோமாக
மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3

இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் நமக்காக செயல்பாடுகளாக இருந்தாலும், ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் இருப்பது என்பது மிகமிக அவசியம்.
‘ஜமாஅத்’ எனும் ‘ஒற்றுமை’ முக்கியமான ஒன்று. நாம் ஒரு காரியத்தை தனியாக செய்வதற்கும், கூட்டாக செய்வதற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறது. ரமலானில் நமது வணக்க வழிபாடுகளில் பலவும் கூட்டு வழிபாடுதான். அதற்குதான் பலன்களும் அதிகம்.
இது பற்றி வான்மறை கூறுகிறது இப்படி: நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத் (மார்க்க வரி) கொடுத்து வாருங்கள். (தொழுகையில் ஒன்று சேர்ந்து குனிந்து) ருகூஉ செய்பவர்களுடன் நீங்களும் (குனிந்து) ருகூஉ செய்யுங்கள். (திருக்குர்ஆன் 2:43)
நீங்கள் அனைவரும் ஒன்று சோர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாக பற்றி பிடித்து கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துகொண்டு) நீங்கள் பிரிந்து விட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்து பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) எதிரிகளாக(ப் பிரிந்து) இருந்த சமயத்தில் உங்கள் உள்ளங்களுக்குள் அன்பை ஊட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே அல்லாஹ்வின் அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (திருக்குர்ஆன் 3:103)
நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு (உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் தர்க்கித்து கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து உங்கள் சக்தி(ஆற்றல்)போய்விடும். ஆகவே நீங்கள்(கஷ்டங்களை சகித்து கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 8:46)
மேற்கண்ட இறைமறை வசனங்கள் அனைத்தும் நாம் நமது வணக்க வழிபாடுகளிலும், நமது நடைமுறை வாழ்க்கையிலும் ஒற்றுமையாகதான் இருக்க வேண்டும். அதுதான் சிறந்தது. வலிமை மிக்கது. இறையருளை பெற்றுத்தரத்தக்கது என்றெல்லாம் கூறி ஒற்றுமையின் உயர்வை உணர்த்தி காட்டுகிறது.
நீங்கள் தனியாக தொழுவதை விட ஜமா அத்துடன் சேர்ந்து தொழுவதில் தான் இருபத்தேழு மடங்கு நன்மை அதிகமாக இருக்கிறது. என்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள் (நூல்:மிஷ்காத்)
நாங்கள் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் வயிறு நிரம்புவதில்லை. இதற்கு என்ன செய்வது? என்று நாயகத்தோழர் ஒருவர் நபிகளாரிடம் கேட்ட போது நீங்கள் தனித்தனியாக உணவுகளை உண்ணாதீர்கள் இனி அனைவரும் சேர்ந்து உண்ணுங்கள். அபிவிருத்தி செய்யப்படுவீர்கள் என்று பதிலளித்தார்கள். அவரும் அப்படியே செய்ய அவர்களது வயிறு ழுமுமையாக நிரம்பியது. அதற்கு பிறகு எங்களுக்கு உணவு போதவில்லை என்ற பிரச்சனையே ஏற்படவில்லை என்கிறார் அந்நாயகத் தோழர். (நூல்:மிஷ்காத்)
ஆக இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் நமக்காக செயல்பாடுகளாக இருந்தாலும், ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் இருப்பது என்பது மிகமிக அவசியம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது பெற்று மொழியல்ல வெற்றி மொழி. இனியேனும் நாம் அனைத்து காரியங்களிலும் வேற்றுமையிலும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து வாழ்வோமாக.

இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பண்டிகை தினத்தில், தங்களது ரமலான் பெருநாள் தொழுகையை (2 ரக் அத் நபில் தொழுகையாக) தங்கள் வீடுகளிலேயே நிறைவேற்றும்படி அரசு தலைமை ஹாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை :
தமிழக அரசின் தலைமை ஹாஜி மவுலவி முப்தி சலாகுதீன் முகமது அயூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய்த்தொற்று ஆபத்து காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ரமலான் பண்டிகை தொழுகையை பள்ளிவாசல் அல்லது திடல்களில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவே இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பண்டிகை தினத்தில், தங்களது ரமலான் பெருநாள் தொழுகையை (2 ரக் அத் நபில் தொழுகையாக) தங்கள் வீடுகளிலேயே நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ணியமிக்க பாக்கியமிக்க இரவுகளில் பல நல்ல அமல்களை செய்தால் நாமும் நிச்சயம் கண்ணியம் மிக்கவர்களாக பாக்கியம் நிறைந்தவர்களாக மிளிர்வோம் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
லைலத்துல் கத்ர் எனும் புனித இரவு ஆயிரம் மாதங்களை விடச்சிறந்தது. இந்த இரவில் தான் திருக்குர்ஆன் இறங்கத் தொடங்கியது. விண்ணிலிருந்து மண்ணகத்திற்கு வானவர்களும் இந்த இரவில் தான் வருகை தருகிறார்கள். இது பற்றி குர்ஆன் கூறுகிறது:
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியம் மிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும்(ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளைப்படி (நடைபெற வேண்டிய)சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்): அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (திருக்குர்ஆன் 97:1-5)
ஆக கண்ணியமிக்க பாக்கியமிக்க இரவுகளில் பல நல்ல அமல்களை செய்தால் நாமும் நிச்சயம் கண்ணியம் மிக்கவர்களாக பாக்கியம் நிறைந்தவர்களாக மிளிர்வோம் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
நபிகளார் நவின்றார்கள்: இப்புனித இரவை கடைசி பத்து தினங்களில் நீங்கள் தேடி கொள்ளுங்கள். (நூல்:புகாரி)
இன்று புனித இரவு என்று தெரியவந்தால், அன்று நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆயிஷா(ரலி) கேட்டபோது இறைவா, நீயே மன்னிப்பவன். நீ மன்னிப்பை விரும்புவான், எனவே எனக்கு நீ மன்னிப்பு வழங்குவாயாக என்று நீ பிரார்த்தனை செய் என்று நபி அவர்கள் சொல்லிக்கொடுத்தார்கள். (நூல்: அஹ்மது, இப்னுமாஜா)
ஒருமுறை நபிகளார் இப்புனித இரவு மிகச்சரியாக எந்த இரவில் இருக்கிறது என்று சொல்ல ஆர்வமுடன் பள்ளிவாசலுக்கு வந்தபோது அங்கு அப்துல்லாஹ் இப்னு அபுஹத்ரத் மற்றும் கஅப் இப்னுமாலிக் ஆகிய இரு நபித்தோழர்கள் குரலை உயர்த்தி சண்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள். இதை கண்ட நபிகளார், அந்த இரவு பற்றிய செய்தி நீக்கப்பட்டு விட்டது.( அல்லது மறக்கடிக்கப்பட்டு விட்டது)அதுவும் உங்களுக்கு நல்லது தான் என்றார்கள். (நூல்:புகாரி)
இவ்வாறெல்லாம் கூறி கடைசி தினங்களை கைவிட்டு விடாதீர்கள் என்பதைதான் அழுத்தமாக சொல்கிறார்கள். எனவே தான் பாக்கியம் நிறைந்த அந்த கடைசி நாட்களில் ஜவுளிக்கடைகளில் ஷாப்பிங் மால்களில், உணவகங்களில் சுற்றித்திரியக்கூடாது என்பதற்காகத்தான் இக்திகாப் எனப்படும் தனித்திருத்தல் அவசியமாக்கப்பட்டிருக்கிறது.
காரணம் அந்த இரவில் முழுப்பலனை நாம் முழுமையாக அடையவேண்டும் என்பது தான். ஆனால் இன்றைக்கு நாம் எப்படியிருக்கிறோம் என்பதும் ஒரு கணம் சிந்தித்துப்பார்க்க தக்கது.
இனியேனும் நாம் இது போன்ற புனித தினங்களையும், இரவுகளையும் வீணடித்து விடாமல் மிகச்சரியாக பயன்படுத்தி தனித்திருந்து, விழித்திருந்து, பிரார்த்தனைகள் புரிந்து தான தர்மங்கள் செய்து இறைவனை புகழ்வோம். இதன் மூலம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாம் பெறுவோமாக

ரமலானில் நாம் செய்ய வேண்டிய நற்காரியகங்களில் குறிப்பிடத்தக்கது நம்மை சுற்றியுள்ள முதியோர்களை மதிப்பதாகும். அவர்களை மதிப்பதில் தான் நமக்கான முழு மதிப்பும் மறைந்துள்ளது என்பதை மட்டும் என்றும் நாம் மறந்துவிடக்கூடாது.

இதுபற்றி குர்ஆன் கூறுகிறது: அவர்(மூச நபி) மத்யன் நாட்டுத் தண்ணீர்(த்துறையின்) அருகே வந்தபோது அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால்நடைகளுக்குத்)தண்ணீர் புகட்டி கொண்டிருந்ததை கண்டார்: அவர்களைத்தவிர, பெண்கள் இருவர்(தங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதை கண்டார்: உங்களிருவரின் விஷயம் என்ன? என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்:அதற்கு: இம்மேய்ப்பர்கள் (தண்ணீர் புகட்டி விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது- மேலும் எங்கள் தந்தை(ஷுஐப் நபி) மிகவும் வயது முதிர்ந்தவர் என்ற அவ்விருவரும் கூறினார்கள். (திருக்குர்ஆன் 28:23)
எங்கள் தந்தை வீட்டிலிருக்கிறார் என்று சொல்லாமல் அவர் வயது முதிர்ந்தவர் என்று சொன்னதில் மூலம் அவ்விரு பெண்பிள்ளைகளும், வயோதிகம் அது மதிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் உணர்த்திக்காட்டுகிறார்கள் என்பதை இவ்வசனத்தின் மூலம் அறியமுடிகிறது.
நபிபள் நாயகம் கூறினார்கள்: தலைமுடி நரைத்தவர். திருக்குர்ஆனை மனனமிட்டவர். நீதியான தலைவர் ஆகியோரை கண்ணியப்படுத்துவது இறைவனை கண்ணியப்படுத்துவதாக ஆகும். (நூல்:அபூதாவூது)
எவர் சிறுவர்களுக்கு இரக்கம் காட்டவில்லையோ, முதியோர்களின் சிறப்புகளை அறியவில்லையோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (நூல்:திர்மிதி)
தம் வாலிப காலத்தில் முதியோர்களை மதித்தால் அவர் முதியவராகும் போது அவரை மதிப்பதற்கு அல்லாஹ் சிலரை நிச்சயம் ஏற்படுத்துவான். (நூல்:திர்மிதி)
இது போன்ற நபிமொழிகள் ஏராளம் உண்டு. அவை வலியுறுத்தும் விஷயம். முதியோர்களை நாம் மதித்து போற்றவேண்டும் என்பதே. வீட்டிலுள்ள பெரியோர்களின் அனுபவப்பூர்வமான ஆலோசனைகளை கேட்டு அதன்படி செயல்படும் போது தான் நமது காரியங்கள் நிச்சயம் பெற்றிபெறும்.
நமக்கும் ஒருநாள் வயோதிகம் ஏற்படும். அப்போது நம்மை யாருமே கண்டுகொள்ளாமல் இருந்தால் நமது நிலை எப்படியிருக்கும் என்ற நாம் யோசித்து பார்க்க வேண்டும். அப்போது தான் புரியும் முதியோர்கள் ஏன் அடிக்கடி ஏதாவது சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள் என்று. முதியவர்கள் மதிக்கப்படும் போது தான் அங்கு இறையருள் இறங்கும் என்று துணிந்து கூறலாம்.
இனியேனும் நாம் நம்மை சுற்றியுள்ள நமது வீடுகளிலுள்ளபெரியோர்களை இழிவாக கேவலமாக கருதாமல் அவர்களை போற்றி கண்ணியப்படுத்தி மதித்து மரியாதை செய்து மதிப்புடன், மகிழ்வுடன் வாழ்வோமாக.

புனித ரமலானில் நாம் பேண வேண்டிய காரியங்களில் நல்லிணக்கமும் ஒன்று. நாம் வாழும் இந்த பன்மை சமூகத்தில் அனைத்து சமயத்தவர்களுடனும் இணங்கி, இணைந்து வாழ வேண்டும்.
புனித ரமலானில் நாம் பேண வேண்டிய காரியங்களில் நல்லிணக்கமும் ஒன்று. நாம் வாழும் இந்த பன்மை சமூகத்தில் அனைத்து சமயத்தவர்களுடனும் இணங்கி, இணைந்து வாழ வேண்டும். தனித்து வாழ்வதை இஸ்லாம் ஒருபோதும் விரும்பியதும் இல்லை. இது குறித்து இறைமறைக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
(நம்பிக்கையாளர்களே) அல்லாஹ் அல்லாத எவறை அவர்கள்(கடவுள் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால் அறிவாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக்கி வைத்திருக்கின்றோம். பின்னர் அவர்கள் தங்கள் இறைவனிடமே செல்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயலைப்பற்றி (அவற்றின் நன்மை எவை, தீமை எவை என்பதை) அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான். (திருக்குர்ஆன் 6:108)
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்: எனக்கு என்னுடைய மார்க்கம். (திருக்குர்ஆன் 109:6)
மேற்கண்ட வான்மறை வசனங்கள் சகோதர சமயத்தவர்களுடன் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதையும் சொல்லி காட்டுகிறது.
குறிப்பாக ஒவ்வொரு சமயத்தவர்களின் வழிபாட்டுத்தலங்களையும் அவரவர்கள் என்னென்ன பெயர்களில் அழைப்பார்களே அவ்வாறே அல்லாஹ் பெயர் குறிப்பிட்டு சொல்வது நாம் ஆழ்ந்து சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று. கூடவே ஒவ்வொரு சமயத்தவர்களும் இதர சமயத்தவர்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
நபிகள் நாயகமும், நாயகத்தோழர்களும் சமய நல்லிணக்கத்துடன் தான் நடந்து கொண்டார்கள். அதன் வழியாக வந்த சூபிகளும் இறைநேசச் செல்வர்களும் இதே நல்லிணக்கத்தை தான் நமக்கு வலியுறுத்தினார்கள்.
ஒருமுறை இறந்து போன யூதர் ஒருவரின் சடலம் வீதி வழியே வந்த போது நபிகளார் எழுந்து நின்றார்கள். இதை கண்ட நாயகத்தின் தோழர்கள் நாயகமே அவர் யூதராயிற்றே நீங்கள் எப்படி? என்று ஆச்சரியமாய் வினவியபோது அவரும் நம்மைப்போல மனிதர் தானே என்றார்கள். (நூல்:மிஷ்காத்)
இன்னொரு முறை தன்னிடம் பணிபுரிந்த யூதச்சிறுவன் ஒருவன் உடல் நலமில்லாமல் இருந்த போது அந்தச்சிறுவனின் வீட்டுக்கு சென்று உடல்நலம் விசாரித்தார்கள். (நூல்:மிஷ்காத்)
இன்றைக்கு நாம் செய்ய வேண்டியதும் கடைப்பிடிக்க வேண்டியதும் இந்த அற்புதமான பல்சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும் தான். இது தான் என்றைக்கும் நிலையானது, நீடிக்கக்தக்கது. அது தான் மெய்யானதும் கூட. நாம் நம்மை சுற்றியிருப்பவர்களை மதித்து நடக்கும் போது தான் நம்மை சுற்றியிருப்பவர்களும் நம்மை மதித்து நடப்பார்கள்.
எனவே நாம் நம்மைச்சுற்றி இருப்பவர்களோடு ஜாதி, மத, இன, மொழி, நிற வேறுபாடு பார்க்காமல் நல்லிணக்கம் பேணி வாழ்வோமாக.

ரமலானில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ‘ஜகாத்’ எனும் மார்க்க வரியும் ஒன்று. ‘ஜகாத்’ என்ற அரபுச்சொல்லுக்கு ‘தூய்மை’ என்றே பொருள்.

இதுகுறித்து இறைமறை இப்படிக்கூறுகிறது: (நபியே) அவர்களுடைய செல்வத்திலிருந்து ஜகாத்திற்கானதை எடுத்துகொண்டு அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக. (திருக்குர்ஆன் 9:103)
நமது உடலை நோன்பு தூய்மைப்படுத்துவதை போல நமது சொத்துக்களை ஜகாத் தான் தூய்மைப்படுத்தும். எனவே வசதி பெற்றவர்கள் தம் கையிருப்பில் பத்தரை பவுன் தங்க நகை வாங்கும் அளவுக்கு பணமாக வைத்திருந்தால் ஆண்டுக்கு ஒருமுறை நாற்பதில் ஒருபங்கு அதாவது நூற்றுக்கு இரண்டரை சதவீம் ஜகாத் கொடுப்பது கட்டாய கடமையாகும்.:
தங்கம், வெள்ளி, விளைதானியங்கள், ஆடு, மாடு, ஒட்டகங்கள், வியாபார பொருட்கள் என இவையாவற்றிற்கும் ஜகாத் உண்டு. அவற்றுக்கான சட்டங்களை தெளிவான முறையில் தெரிந்து ஏழை, எளியவர்களுக்கு மனப்பூர்வமாக வழங்கிட வேண்டும்.
அல்லாஹ் கூறியுள்ளான்: எவர்கள் தங்கத் தையும், வெள்ளியையும் சேமித்து வைத்து அவற்றை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யவில்லையோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையை கொண்டு(நபியே) நீர் சுபச்செய்தி கூறுவீராக.
நரக நெருப்பில் அவை பழுக்கக்காய்ச்சப்பட்டு அவற்றை கொண்டு அவர்களுடைய நெற்றிகளும், அவர்களுடைய விலாப்புறங்களும், அவர்களுடைய முதுகுகளும் சூடு போடப்படும்(அந்த மறுமை) நாளில், இது (தான் உங்களுக்காக நீங்கள் சேமித்து வைத்தது: நீங்கள் சேமித்து வைத்திருந்ததை (இப்போது) நீங்கள் சுவைத்து பாருங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்படும். (திருக்குர்ஆன் 9:34,35)
ஜகாத் இஸ்லாத்தின் ஐம்பெரும் அடிப்படைக்கடமைகளில் ஒன்று. குர்ஆன் முழுவதும் தொழுகையை பற்றி கூறப்பெற்றுள்ள இடங்களில் பெரும்பாலும் ஜகாத் இணைத்தே சொல்லப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
காரணம், நமது இறைவனுக்கு செய்ய வேண்டிய தொழுகை நமக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வாறே நம்மைச்சுற்றியுள்ள ஏழை மக்களுக்கு சேரவேண்டிய ஜகாத் அவர்களுக்கு போய் சேர்வதும் மிக முக்கியம்.
செல்வந்தர்கள், தமக்கு செல்வத்தை தந்த அந்த இறைவனை அஞ்சி, சரிவர கணக்கிட்டு வருடந்தோரும் ஜகாத்தை கொடுத்தாலே போதும் நம்மை சுற்றியுள்ள ஏழைகள் ஏற்றம் பெற்றுவிடுவர்.
ஆனால் நம்மில் பலரும் பணம் தீர்ந்து போய்விடுமோ நாமும் ஏழையாகி விடுவோமோ என்று நினைத்து நினைத்து திடீரென ஏற்படும பெரும் பொருளாதார நெருக்கடிகளில் நோய் நொடிகளில் அல்லது பேராபத்துகளில் சிக்கி தவிக்கின்றனர். அப்போது தான் அவர்களது பணம் கண்ணுக்கு தெரியாமலேயே கற்பூரமாய் கரைந்து விடுகிறது.
இனியேனும் இறைவனை அஞ்சி முறையாக ஜகாத் கொடுப்போமாக.

இன்று முதல் ‘இத்க்’ எனும் விடுதலை தேடும் இறுதி பத்து நாட்கள் ஆரம்பம். எனவே நரகத்திலிருந்து விடுதலை தேடி அதிகமாக துஆ செய்ய வேண்டிய நேரமிது.

எங்கள் இறைவனே எங்களுக்கு நீ இன்மையிலும் நன்மை அளிப்பாயாக. மறுமையிலும் நன்மையளிப்பாயாக. (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ பாதுகாப்பாயாக எனக் கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. (திருக்குர்ஆன் 2:201)
எவர்கள் பாவத்தையே சம்பாதித்து கொண்டிருந்து அவர்களுடைய பாவம் அவர்களை சூழ்ந்து கொண்டதோ அவர்கள் (யாராய் இருப்பினும்) நரகவாசிகளே. அதில் தான் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (திருக்குர்ஆன் 2:81)
நீ அல்லாஹ்வுக்கு பயந்து கொள் (விஷமம் செய்யாதே) என அவனுக்கு கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை (விஷமம் செய்து)பாவத்தை செய்யும்படியே (இழுத்துப்)பிடித்து கொள்கிறது. ஆகவே அவனுக்கு நரகமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக்கெட்டது. (திருக்குர்ஆன் 2:206)
எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து அவன் ஏற்படுத்திய வரம்புகளை கடக்கின்றானோ அவனை நரகத்தில் புகுத்தி விடுவான். அதிலேயே அவன் (என்றென்றும்) தங்கிவிடுவான். இழிவுபடுத்தும் வேதனையும் அவனுக்கு உண்டு(திருக்குர்ஆன் 4:14)
எவர்கள் நம்முடைய (இவ்வேத) வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் (மறுமையில்) நரகத்தில் சேர்ந்து விடுவோம். அவர்கள் வேதனையை தொடர்ந்து அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல் கருகி விடும் போதொல்லாம். மற்றொரு புதிய தோலை மாற்றி கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தனும் ஞான முடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:56)
மேற்கண்ட இறைவசனங்கள் யாவுமே நரகம் எவ்வளவு கொடுமையானது. அதில் யார் யாரெல்லாம் நுழைவார்கள். அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்பது பற்றி தெளிவு படுத்துகிறது.
நபிகள் நாயகம் இப்படி பிரார்த்தனை செய்தார்கள்: இறைவா மகாசோம்பல், தள்ளாத வயோதிகம், கடன் சுமை, பாவச்செயல் போன்றவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இறைவா, நரக வேதனை, நரக சோதனை, மண்ணறை சோதனைகளிலிருந்து பாதுகாவல் தேடுகிறேன். இறைவா, பொருளாதார சோதனை வறுமைப்பிடி, தஜ்ஜால் போன்ற குழப்பவாதிகள் சோதனைகளிலிருந்து பாதுகாவல் தேடுகிறேன்.
இறைவா, அழுக்குகள் விட்டும் ஆடைகள் தூய்மையாக்கப்படுவதை போல் என் இதயத்தை குளிர்ச்சியான தண்ணீர் மூலம் என் பாவக்கறைகளை போக்குவாயாக. இறைவா, கிழக்கும் மேற்கும் எப்படி விலகியிருக்கிறதோ அவ்வாறே எனக்கும் என் பாவங்களுக்கும் இடையே தொலைதூரத்தை ஏற்படுத்துவாயாக. (நூல்:புகாரி, முஸ்லிம்)
இது போன்ற பிரார்த்தனைகளை செய்து நமது சோதனைகளிலிருந்து நெருக்கடிகளிலிருந்தும் நம்மை நாம் விடுதலைப்படுத்தி கொள்வோமாக.

அநாதைகளுடன் அன்பாக நடந்து அவர்களது கரம் பிடித்து இறுதிவரை அவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்து இன்முகத்துடன் இனிதே ஆதரிப்போமாக.
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதைப்போல் தமது பெற்றோரை இழந்தவர்களுக்குத்தான் தெரியும் அநாதைகளின் அருமை. இந்த ரமலான் அப்படிப்பட்ட அநாதைகளையும் சற்று நினைத்து பார்க்கச் சொல்கிறது. இவர்களை பற்றி குர்ஆன் கூறுகிறது:
(நபியே) நீர் அநாதையை கடிந்து கொள்ளாதீர். (திருக்குர்ஆன் 93:9)
(நபியே பொருள்களில்) எதை செலவு செய்வது? (யாருக்கு கொடுப்பது) என்று உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: (நன்மைகளை கருதி) நீங்கள் எத்தகைய பொருளை செலவு செய்தபோதிலும் (அதனை) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்கு கொடுங்கள். இன்னும் நீங்கள் (வேறு) என்ன நன்மையை செய்த போதிலும் அதனையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான். (திருக்குர்ஆன் : 2,215)
(நபியே) அநாதைகளை (வளர்ப்பதை) பற்றியும் உங்களிடம் கேட்கிறார்கள்(அதற்கு) நீங்கள் கூறுங்கள்: அவர்களை சீர்திருத்துவது மிகவும் நன்றே. மேலும் நீங்கள் அவர்களுடன் கலந்(து வசித்)திருக்க நேரிட்டால் (அவர்கள்) உங்களுடைய சகோதர்களே. (ஆதலால் அவர்களுடைய சொத்தில் இருந்து அவசியமான அளவு உங்களுக்காகவும் செலவு செய்து கொள்ளலாம்). ஆனால் நன்மை செய்வோம் என்று (கூறிக்கொண்டு) தீமை செய்பவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடினால் உங்களை (மீள முடியாத) கஷ்டத்திற்குள்ளாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (எவ்விதமும் செய்ய) வல்லவனும், நுண்ணறிவுடையவனுமாக இருக்கின்றான். (ஆகவே அநாதைகள் விஷயத்தில் மோசம் செய்யாது மிக்க அனுதாபத்துடனும் நீதமாகவும் நடந்து கொள்ளுங்கள்). (திருக்குர்ஆன் 2:220)
நீங்கள் அநாதைகளின் பொருள்களை (அவர்கள் பருவமடைந்த பின் குறைவின்றி) அவர்களுக்கு கொடுத்து விடுங்கள். (அதிலுள்ள) நல்லதுக்கு பதிலாக கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்களுடைய பொருள்களுடன் சேர்த்து விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாகும். (திருக்குர் ஆன் 4:2)
(அநாதைகளின் பொருளுக்கு பொறுப்பாளரான நீங்கள் அந்த அநாதைகள்) புத்திக் குறைவானவர்களாயிருந்தால், வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைந்திருககும் உங்களிடமுள்ள (அவர்களின்) பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனினும் (அவர்களுக்கு போதுமான) உணவையும், அவர்களுக்கு (வேண்டிய) ஆடைகளையும், அதிலிருந்து கொடுத்து அவர்களுக்கு அன்பான வார்த்தைகளை கூறி (நல்லறிவை புகட்டி) வருவீர்களாக (திருக்குர்ஆன் 4:5)
இப்படியாக அநாதைகள் விஷயத்தில் பேராதரவுடன் குர்ஆன் பேசுகிறது. எனவே அநாதைகளுடன் அன்பாக நடந்து அவர்களது கரம் பிடித்து இறுதிவரை அவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்து இன்முகத்துடன் இனிதே ஆதரிப்போமாக.

குடும்ப உறவுகளை போலவே நமது நட்புறவும் மிகமுக்கியமான ஒன்று. ரமலான் நோன்பு அந்த நட்புறவை வளர்க்க வழிவகை செய்கிறது.
குடும்ப உறவுகளை போலவே நமது நட்புறவும் மிகமுக்கியமான ஒன்று. ரமலான் நோன்பு அந்த நட்புறவை வளர்க்க வழிவகை செய்கிறது. ஒருவர் வீட்டை விட்டு வெளியேறினால் அவர் சந்திக்கும் முதல் சந்திப்பே நட்புறவாக தான் இருக்கிறது. இதுகுறித்து குர்ஆன் இப்படி கூறுகிறது:
ஒருவனுக்கு நேரான வழியில் அழைக்கக்கூடிய நண்பர்கள் இருந்து அவனை அவர்கள் தம்மிடம் வா என அழைத்து கொண்டிருக்க அவன் (அவ்வழியில் செல்லாது) ஷைத்தானுடைய ஏமாற்றத்தில் சிக்கி பூமியில் அலைந்து திரிபவனாக ஆகிவிட்டானே அவனுக்கு ஒப்பானவனாகி விட்டான். (திருக்குர்ஆன் 6:71)
நண்பர்கள் எப்போதும் நல்வழிக்கு தான் நம்மை அழைப்பார்கள். ஆனால் இன்றைக்கு நன்பர்களையே நல்லவர், தீயர் என்று பிரிக்கும் நிலைமைக்கு நாம் ஆளாகிவிட்டோம். பின்வரும் வான்மறை வசனம் அதை நிரூபிக்கிறது:
நிச்சயமாக அநியாயக்காரர்களுள் சிலர் (அவர்களில்) சிலருக்கு தான் நண்பர்கள். (நம்பிக்கையாளர்களுக்கு அல்ல) அல்லாஹ், இறை அச்சமுடைய பரிசுத்தவான்களுக்கு நண்பன். (திருக்குர்ஆன் 45:19)
இவ்வசனத்தில் அல்லாஹ் தன்னை நல்லோர்களின் நண்பன் என்று கூறி இருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. இந்த நட்பில் இறையச்சமும், பரிசுத்தமும் இருக்க வேண்டும் என்றும் அந்த வசனம் அடையாளப்படுத்துவதையும் நாம் மறந்து விடக்கூடாது.
உண்மையில் எந்தப்பிரதிபலனும் எதிர்பாராமல் தொடரும் நமது நட்புறவுகள் தான் காலம் கடந்து நிற்கும் என்பதை பின் வரும் நபிமொழிகள் நிரூபிக்கின்றன.
நபிகள் நாயகம் கூறினார்கள்: ஒருவர் நட்பு கொள்ளும் முன் தான் யாருடன் நட்புகொள்ளப்போகிறோம் என்பதை ஒரு கணம் சிந்தித்து செயல்படட்டும் (நூல்:அபூதாவூது)
நல்லோர்களை தவிர வேறு எவருடனும் நீர் தோழமை கொள்ள வேண்டாம்( நூல்:திர்மிதி)
யார் யாரை நேசிக்கிறாரோ அவர் அவருடன் (மறுமையில்) இருப்பார். (நூல்:புகாரி, முஸ்லிம்)
ஒருமுறை ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் உம்ரா பயணம் செல்ல அண்ணலாரிடம் அனுமதி கேட்டபோது அன்புத் தோழரே துஆவில் என்னை மறந்து விடாதீர் என நபிகள் நாயகம் கூறினார்கள். பிறகு ஹஜ்ரத் உமர்(ரலி) கூறினார்கள்: உலகத்திலேயே என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது அந்த ஒன்றை வார்த்தையை தவிர வேறொன்றும் இல்லை. (நூல்:திர்மிதி)
இப்படியாக எண்ணற்ற செய்திகள் பல உண்டு. எனவே நமது நட்புறவை நாம் மிகச்சரியாக பராமரிக்க வேண்டும். இந்த நட்புறவு சாதாரணமானதல்ல. ரமலான் போன்ற இனிய தருணங்களில் நமது நட்பின் வெளிப்பாடுகளை மிகச்சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாய்ப்புகள் வாசலுக்கே வரும் போது நழுவவிடலாமா என்ன?
ஆகவே நமது நட்புறவுகளை நன்றாக வளர்போமாக

புனித ரமலானில் மனித உறவுகளை மேம்படுத்தும் போது தான் நமது நோன்பு மாண்பு பெறும். இதுகுறித்து வான்மறை பேசுகிறது இப்படி:
உறவுகளின்றி உயிர்களில்லை. எனவே உறவினர்களை ஆரத்தழுவி, ஆதரிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கிருக்கிறது. அதுவும் புனித ரமலானில் மனித உறவுகளை மேம்படுத்தும் போது தான் நமது நோன்பு மாண்பு பெறும். இதுகுறித்து வான்மறை பேசுகிறது இப்படி:
மனிதர்களே உங்கள் இறைவனுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான், பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச்செய்தான்: ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள், அவனை கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளை) கேட்டுக்கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்)ரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.(திருக்குர்ஆன் 4:1)
உறவுகள் புனிதமானவை அவற்றை நாம் கடைசிவரை கட்டிக்காக்க வேண்டும் என்பது குர்ஆன் கூறும் உண்மை.
இறைவனுக்கு அடுத்தபடியாக நாம் அதிகம் பயப்பட வேண்டியது நமது உறவுகளுக்குத்தான். ஆம் அவர்களது ஆனந்தத்தில் தான் அல்லாஹ்வின் ஆனந்தம் இருக்கிறது. அவர்களது அதிருப்தியில் அல்லாஹ்வின் அதிருப்தி தான் இருக்கிறது என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் கூறினார்கள்: உங்களுக்கு வாழ்வாதாரம் பெருக வேண்டுமா? இன்னும் ஆயுள் அதிகரிக்க வேண்டுமா? உங்களது உறவுகளை இணைத்து வாழுங்கள். (நூல்:புகாரி, முஸ்லிம்)
மனித வாழ்விற்கு இந்த இரண்டும் முக்கியம் தான். அதை நாம் தங்கு தடையின்றி பெற வேண்டுமானால் அதற்கு நாம் செய்ய வேண்டியது நமது உறவுகளை உடையாமல் பார்த்து கொள்வது தான். உறவுகளுக்குள் அவ்வப்போது சண்டை, சச்சரவுகள் வரத்தான் செய்யும். அவற்றை நாம் தான் மனதார மன்னித்து மறந்து விட வேண்டும். என்றோ நடந்தவைகளை திரும்பத்திரும்ப சொல்லி காட்டிக்கொண்டே இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதை இஸ்லாம் விரும்பவும் இல்லை.
உறவுகளை துண்டித்து வாழ்ந்தால் என்ன நடக்கும் தெரியுமா? நபிகள் நாயகம் கூறினார்கள்: உலகத்திலேயே ஒருவருக்கு தண்டனை வழங்கப்படுகிறது என்றால் அது உறவுகளை துண்டித்து வாழ்வதற்குத்தான் வழங்கப்படும. ( நூல்:அபூதாவூது)
உறவுகளுடன் இணைந்திருப்பது தான் நமக்கு நல்லதொரு பலன். அந்த உறவுகள் ஒருபோதும் அறுந்து போவதில்லை. நாம் வேண்டுமானால் உறவுகளை மறுக்கலாம். புறக்கணிக்கலாம். ஆனால் உறவுகள் ஒருபோதும் நம்மை மறுப்பதில்லை. புறக்கணிப்பதும் இல்லை.
எனவே உன்னதமான உறவுகளுக்கு கைகொடுக்க வேண்டும். உடைந்த நம் உறவுகளை சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த புனிதமான ரமலான் மாதத்தை மிகச்சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இனியேனும் நாம் நமது உறவுகளை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து நேசிப்போமாக.

பெற்றோரின் திருப்தியில் இறைவனின் திருப்தியும், பெற்றோரின் கோபத்தில் இறைவனின் கோபமும் இருப்பதாக நபிகளார் சொன்னதும் இங்கு இணைத்து பார்க்கத்தக்கது.
ரமலான் சிறப்பு பெற்றதற்கு குர்ஆன் இம்மாதத்தில் இறங்கியதும் ஒரு காரணம். அந்த குர்ஆன் கூறும் கட்டளைகளில் பெற்றோரை பேணிப்பாதுகாப்பதும் ஒன்று. பெற்றோரை புறக்கணித்து விட்டு நோன்பின் பலன்களை நிச்சயம் ஒருவர் பெற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து இறைமறை கூறுவதை பார்ப்போம்:
“அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும், உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்: அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (ச்சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து ) விரட்ட வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக. இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காவும் நீர் தாழ்த்துவீராக: மேலும் என் இறைவனே நான் சிறு பிள்ளையாக இருந்து போது என்னை (பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல் நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக என்று கூறிப் பிரார்த்திப்பீராக“ (திருக்குர்ஆன் 17:23,24)
“நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது)பற்றி வஸிய்யத்துச் செய்(துபோதித்)தோம்: அவனுடைய தான் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்: இன்னும் அவனுக்கு பால் குடி மறந்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன:ஆகவே நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக: என்னிடமே உன்னுடய மீளுதல் இருக்கிறது”.
ஆனால் நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்:ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக்கொள்: (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக. பின்னர் உங்கள் ( அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்: நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன். .(திருக்குர்ஆன் 31:14,15)
இம்மூன்று வான்மறை வசனங்களும் நாம் நமது பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதை பற்றி தெளிவாக கூறிக்காட்டுகிறது.
எனவே நமது பெற்றோர்கள் சாதாரணமானவர்களல்ல. அவர்களுக்கொன்று தனிமதிப்பும், மரியாதையும் இருக்கிறது. அதை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
பெற்றோரின் திருப்தியில் இறைவனின் திருப்தியும், பெற்றோரின் கோபத்தில் இறைவனின் கோபமும் இருப்பதாக நபிகளார் சொன்னதும் இங்கு இணைத்து பார்க்கத்தக்கது.
இனியேனும் நமது பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை கண்ணியப்படுத்தி போற்றிடுவோமாக.