search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்
    X
    இஸ்லாம்

    நோன்பின் மாண்புகள்: விடுதலை பெறுவோம்

    இன்று முதல் ‘இத்க்’ எனும் விடுதலை தேடும் இறுதி பத்து நாட்கள் ஆரம்பம். எனவே நரகத்திலிருந்து விடுதலை தேடி அதிகமாக துஆ செய்ய வேண்டிய நேரமிது.
    இன்று முதல் ‘இத்க்’ எனும் விடுதலை தேடும் இறுதி பத்து நாட்கள் ஆரம்பம். எனவே நரகத்திலிருந்து விடுதலை தேடி அதிகமாக துஆ செய்ய வேண்டிய நேரமிது.

    எங்கள் இறைவனே எங்களுக்கு நீ இன்மையிலும் நன்மை அளிப்பாயாக. மறுமையிலும் நன்மையளிப்பாயாக. (நரக) நெருப்பின்  வேதனையிலிருந்து எங்களை நீ பாதுகாப்பாயாக எனக் கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. (திருக்குர்ஆன் 2:201)

    எவர்கள் பாவத்தையே சம்பாதித்து கொண்டிருந்து அவர்களுடைய பாவம் அவர்களை சூழ்ந்து கொண்டதோ அவர்கள் (யாராய் இருப்பினும்) நரகவாசிகளே. அதில் தான் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (திருக்குர்ஆன் 2:81)

    நீ அல்லாஹ்வுக்கு பயந்து கொள் (விஷமம் செய்யாதே) என அவனுக்கு கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை (விஷமம் செய்து)பாவத்தை  செய்யும்படியே (இழுத்துப்)பிடித்து கொள்கிறது. ஆகவே அவனுக்கு நரகமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக்கெட்டது. (திருக்குர்ஆன் 2:206)

    எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து அவன் ஏற்படுத்திய வரம்புகளை கடக்கின்றானோ அவனை நரகத்தில் புகுத்தி விடுவான். அதிலேயே அவன் (என்றென்றும்) தங்கிவிடுவான். இழிவுபடுத்தும் வேதனையும் அவனுக்கு உண்டு(திருக்குர்ஆன் 4:14)

    எவர்கள் நம்முடைய (இவ்வேத) வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் (மறுமையில்) நரகத்தில் சேர்ந்து விடுவோம். அவர்கள் வேதனையை தொடர்ந்து அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல் கருகி விடும் போதொல்லாம். மற்றொரு புதிய தோலை மாற்றி கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தனும் ஞான முடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:56)

    மேற்கண்ட இறைவசனங்கள் யாவுமே நரகம் எவ்வளவு கொடுமையானது. அதில் யார் யாரெல்லாம் நுழைவார்கள். அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்பது பற்றி தெளிவு படுத்துகிறது.

    நபிகள் நாயகம் இப்படி பிரார்த்தனை செய்தார்கள்: இறைவா மகாசோம்பல், தள்ளாத வயோதிகம், கடன் சுமை, பாவச்செயல் போன்றவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இறைவா, நரக வேதனை, நரக சோதனை, மண்ணறை சோதனைகளிலிருந்து பாதுகாவல் தேடுகிறேன். இறைவா, பொருளாதார சோதனை வறுமைப்பிடி, தஜ்ஜால் போன்ற குழப்பவாதிகள் சோதனைகளிலிருந்து பாதுகாவல் தேடுகிறேன்.

    இறைவா, அழுக்குகள் விட்டும் ஆடைகள் தூய்மையாக்கப்படுவதை போல் என் இதயத்தை குளிர்ச்சியான தண்ணீர் மூலம் என் பாவக்கறைகளை போக்குவாயாக. இறைவா, கிழக்கும்  மேற்கும் எப்படி விலகியிருக்கிறதோ அவ்வாறே எனக்கும் என் பாவங்களுக்கும் இடையே தொலைதூரத்தை ஏற்படுத்துவாயாக. (நூல்:புகாரி, முஸ்லிம்)

    இது போன்ற பிரார்த்தனைகளை செய்து நமது சோதனைகளிலிருந்து நெருக்கடிகளிலிருந்தும் நம்மை நாம் விடுதலைப்படுத்தி கொள்வோமாக.

    மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
    Next Story
    ×