search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்
    X
    இஸ்லாம்

    நோன்பின் மாண்புகள்: முதியோர்களை மதிப்போம்

    ரமலானில் நாம் செய்ய வேண்டிய நற்காரியகங்களில் குறிப்பிடத்தக்கது நம்மை சுற்றியுள்ள முதியோர்களை மதிப்பதாகும். அவர்களை மதிப்பதில் தான் நமக்கான முழு மதிப்பும் மறைந்துள்ளது என்பதை மட்டும் என்றும் நாம் மறந்துவிடக்கூடாது.
    ரமலானில் நாம் செய்ய வேண்டிய நற்காரியகங்களில் குறிப்பிடத்தக்கது நம்மை சுற்றியுள்ள முதியோர்களை மதிப்பதாகும். அவர்களை மதிப்பதில் தான் நமக்கான முழு மதிப்பும் மறைந்துள்ளது என்பதை மட்டும் என்றும் நாம் மறந்துவிடக்கூடாது.

    இதுபற்றி குர்ஆன் கூறுகிறது: அவர்(மூச நபி) மத்யன் நாட்டுத் தண்ணீர்(த்துறையின்) அருகே வந்தபோது அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால்நடைகளுக்குத்)தண்ணீர் புகட்டி கொண்டிருந்ததை கண்டார்: அவர்களைத்தவிர, பெண்கள் இருவர்(தங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதை கண்டார்: உங்களிருவரின் விஷயம் என்ன? என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்:அதற்கு: இம்மேய்ப்பர்கள் (தண்ணீர் புகட்டி விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது- மேலும் எங்கள் தந்தை(ஷுஐப் நபி) மிகவும் வயது முதிர்ந்தவர் என்ற அவ்விருவரும் கூறினார்கள். (திருக்குர்ஆன் 28:23)

    எங்கள் தந்தை வீட்டிலிருக்கிறார் என்று சொல்லாமல் அவர் வயது முதிர்ந்தவர் என்று சொன்னதில் மூலம் அவ்விரு பெண்பிள்ளைகளும், வயோதிகம் அது மதிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் உணர்த்திக்காட்டுகிறார்கள் என்பதை இவ்வசனத்தின் மூலம் அறியமுடிகிறது.

    நபிபள் நாயகம் கூறினார்கள்: தலைமுடி நரைத்தவர். திருக்குர்ஆனை மனனமிட்டவர். நீதியான தலைவர் ஆகியோரை கண்ணியப்படுத்துவது இறைவனை கண்ணியப்படுத்துவதாக ஆகும். (நூல்:அபூதாவூது)

    எவர் சிறுவர்களுக்கு இரக்கம் காட்டவில்லையோ, முதியோர்களின் சிறப்புகளை அறியவில்லையோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (நூல்:திர்மிதி)

    தம் வாலிப காலத்தில் முதியோர்களை மதித்தால் அவர் முதியவராகும் போது அவரை மதிப்பதற்கு அல்லாஹ் சிலரை நிச்சயம் ஏற்படுத்துவான். (நூல்:திர்மிதி)

    இது போன்ற நபிமொழிகள் ஏராளம் உண்டு. அவை வலியுறுத்தும் விஷயம். முதியோர்களை நாம் மதித்து போற்றவேண்டும் என்பதே. வீட்டிலுள்ள பெரியோர்களின் அனுபவப்பூர்வமான ஆலோசனைகளை கேட்டு அதன்படி செயல்படும் போது தான் நமது காரியங்கள் நிச்சயம் பெற்றிபெறும்.

    நமக்கும் ஒருநாள் வயோதிகம் ஏற்படும். அப்போது நம்மை யாருமே கண்டுகொள்ளாமல் இருந்தால் நமது நிலை எப்படியிருக்கும் என்ற நாம் யோசித்து பார்க்க வேண்டும். அப்போது தான் புரியும் முதியோர்கள் ஏன் அடிக்கடி ஏதாவது சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள் என்று. முதியவர்கள் மதிக்கப்படும் போது தான் அங்கு இறையருள் இறங்கும் என்று துணிந்து கூறலாம்.

    இனியேனும் நாம் நம்மை சுற்றியுள்ள நமது வீடுகளிலுள்ளபெரியோர்களை இழிவாக கேவலமாக கருதாமல் அவர்களை போற்றி கண்ணியப்படுத்தி மதித்து மரியாதை செய்து மதிப்புடன், மகிழ்வுடன் வாழ்வோமாக.

    மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
    Next Story
    ×