என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10-ம் நாள் திருவிழாவையொட்டி 4 தேர்கள் பவனி நடந்தது. திருவிழாவை காண ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10- நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் திருப்பலி மற்றும் ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடந்தன. ஒவ்வொரு நாள் விழாவையும் ஒவ்வொரு அமைப்பினர் நடத்தினார்கள்.

    விழாவில் கடைசி 3 நாட்கள் தேர்பவனி நடைபெறுவது வழக்கம். இதே போல 8-ம் நாள் மற்றும் 9-ம் நாள் திருவிழாவன்று இரவில் தேர்பவனி நடந்தது. அப்போது தேரின் பின்னால் மக்கள் கும்பிடு நமஸ்காரம் நேர்ச்சை நிறைவேற்றினார்கள்.

    இந்த நிலையில் 10-ம் நாள் திருவிழாவான நேற்று பகலில் தேர்பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட 4 தேர்களில் புனித மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா சொரூபம் வைக்கப்பட்டு வீதிகளில் வலம் வந்தன. பேராலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர்களானது வடிவீஸ்வரம், கம்பளம் சந்திப்பு, ரெயில்வே ரோடு சந்திப்பு வழியாக கேப் ரோடு வந்து பின்னர் மீண்டும் பேராலயம் சென்றது.

    அப்போது அந்தந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பிரார்த்தனை செய்தனர். மேலும் உப்பு, மிளகு வைத்து வணங்கினார்கள். கூட்டத்தின் மத்தியில் தேர் ஆடி அசைந்து சென்ற காட்சியை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தார்கள். புகைப்படமும் எடுத்து கொண்டார்கள். பின்னர் மாலையில் தேர்கள் மீண்டும் நிலைக்கு வந்தன.

    இதைத் தொடர்ந்து தேரில் திருப்பலி நடந்தது. முன்னதாக காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி நடந்தது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கினார். இதனையடுத்து 8 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெற்றது. புனித சவேரியார் பேராலய 10-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    எனவே மாவட்டம் முழுவதிலும் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக புனித சவேரியார் பேராலயத்துக்கு வந்தனர். ஆனால் காலையில் சாரல் மழை பெய்தது. எனினும் மழையை பொருட்படுத்தாது மக்கள் பேராலயத்தில் குவிந்தனர். தேர்பவனியையொட்டி பேராலயம் அமைந்துள்ள கேப் ரோடு மற்றும் செட்டிகுளம் சந்திப்பில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் பேராலயத்துக்கு வந்து செல்ல வசதியாக இருந்தது. இந்த சாலைகளில் எல்லாம் ஏராளமான திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 9-ம் நாள் திருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக கோட்டார் புனித சவேரியார் பேராலயம் திகழ்கிறது. இங்கு 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. 8-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடைபெற்றது.

    9-ம் நாள் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, நற்கருணை ஆசிர் நடைபெற்றது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார். அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு தேர்பவனி புறப்பட்டது.

    பங்குதந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி தேரை மந்திரித்தார். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க இசை வாத்தியங்கள் ஒலிக்க தேர் புறப்பட்டது. முன்னதாக காவல் சம்மனசு, செபஸ்தியார் மற்றும் சவேரியார் ஆகிய சொரூபங்கள் தாங்கிய தேர்கள் வந்தன. அதன்பின் மாதா சொரூபத்தை தாங்கிய தேர் வந்தது.

    ஒன்றன் பின் ஒன்றாக வந்த தேர்களில் நல்ல மிளகு, மெழுகுவர்த்தி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக வைத்து வழிபட்டனர். மலர் மாலைகளும் காணிக்கையாக அளிக்கப்பட்டது. தேருக்கு பின்னால் பக்தர்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிறைவேற்றியபடி சென்றனர்.

    பேராலய திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. விழாவையொட்டி காலை 6 மணிக்கு சவேரியார் பெருவிழா திருப்பலியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மறையுரையாற்றுகிறார். 8 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர்பவனியும் நடைபெற உள்ளது.

    பின்னர் இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. விழாவையொட்டி இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவின் இறுதி நாளான இன்று உள்ளூர், வெளி ஊர்களில் இருந்து ஏராளமானோர் ஆலயத்துக்கு வருகை தருவார்கள்.
    பாளையங்கோட்டையில் சவேரியார் பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சவேரியாரின் திருவுருவப்பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சவேரியார் எழுந்தருளினார்.
    பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலய பெருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் திருப்பலி, மறையுரை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சவேரியாரின் திருவுருவப்பவனி நேற்று இரவு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சவேரியார் எழுந்தருளினார்.

    அந்த தேர் தெற்கு பஜார், ராஜகோபாலசாமி கோவில், வடக்கு, கீழரதவீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த தேரின் முன்பாக இறை மக்கள் ஊர்வலமாக சென்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி மற்றும் புதுநன்மை விழா நடைபெறுகிறது. மாலையில் கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிறைவேற்றினர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக கோட்டார் புனித சவேரியார் பேராலயம் திகழ்கிறது. இங்கு 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. 8-ம் நாள் திருவிழாவான நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பலி, 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 11 மணிக்கு குணமளிக்கும் திருப்பலி நடைபெற்றது. மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது.

    பின்னர் இரவு 10.30 மணிக்கு தேர்பவனி தொடங்கியது. பங்குதந்தை கிரேஷ் குணபால் ஆராச்சி தேரை மந்திரித்தார். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க இசை வாத்தியங்கள் ஒலிக்க தேர் புறப்பட்டது. பெரிய தேர் புறப்படுவதற்கு முன் காவல் சம்மனசு, செபஸ்தியார் ஆகிய சொரூபங்கள் தாங்கிய தேர்கள் வந்தன. அதன்பின் புனித சவேரியார் சொரூபத்தை தாங்கிய தேர் வந்தது.

    பக்தர்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிறைவேற்றியதை படத்தில் காணலாம்.

    ஒன்றன் பின் ஒன்றாக வந்த தேர்களில் நல்ல மிளகு, மொழுகுவர்த்தி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக வைத்து வழிபட்டனர். மலர் மாலைகளும் காணிக்கையாக அளிக்கப்பட்டது. சவேரியார் தேருக்கு பின்னால் பக்தர்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிறைவேற்றியபடி சென்றனர்.

    அதாவது ஏராளமான சிறுவர், சிறுமிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் தரையில் சாஸ்டாங்கமாக விழுந்தும், பின்னர் எழுந்தும் வழிபட்டனர். ஆண்கள் தரையில் உருண்டும் நேர்சை செய்தனர். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர் வடிவீஸ்வரம், கம்பளம் சந்திப்பு, ரெயில்வே ரோடு சந்திப்பு வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

    பேராலய திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. இதையொட்டி நாளை குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாரில் நேற்று இரவு முதலே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளையும் நடைமுறையில் இருக்கும்.
    வீழ்ச்சி, தடுமாற்றம் போன்றவை ஏற்பட்டவுடன் சோர்ந்திடாது முன்னோக்கிய பயணத்தை இன்னும் விரைவுப்படுத்திட வேண்டும்.
    உயர்வடைய வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துவிட்டால் எந்த சூழ்நிலையிலும் அஞ்சாது மிக துணிச்சலான முடிவுகளை எடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். வறுமை மிகுந்த குடும்பத்தில் பிறந்தவரே பெர்னாட்ஷா. எவ்வித பின்புலமும் இல்லை. தனது வருமானத்தை நம்பியே குடும்பம் இயங்குகிறது என்பதனை உணர்ந்தார். ஒரு அலுவலத்தில் சாதாரண ஊழியராக வேலைக்கு சேர்ந்தார். படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் முடியவில்லை. குடும்ப பின்புலம், அநத் வேலையிலேயே தொடர வேண்டிய நிலை ஏற்படுகிறது. மனதை குழப்பி கொண்டார். வேலையை விட்டுவிட தீர்மானம் எடுத்தார். வேலையை ராஜினாமா செய்து விட்டு தன் தாய்க்கு கடிதம் எழுதுகிறார். அம்மா கடவுள் கொடுத்தது ஒரு வாழ்க்கை. அதையும் ஆபீஸ் பையனாக வீணாக்க விரும்பவில்லை.

    தொடர்ந்து பல முயற்சிகள் எடுக்கிறார். எழுத்தாளராக புதிய அவதாரம் எடுக்கிறார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவரை தேடி வருகிறது. இருப்பதில் நிறைவு கொள்வதல்ல வாழ்க்கை. தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் வாழ்வில் வெற்றியினை எளிதாக வசப்படுத்த இயலும். அவமானம், இடையூறு போன்றவற்றை கடந்து செல்கிறவர்களே வெற்றியாளர் ஆவர்.

    இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் இறைவனின் அருளை நிரம்ப பெற்றுக்கொள்வதற்கு ஒவ்வொரு முறையும் நாம் கடினப்பட்டு உழைத்திட வேண்டும். இறைப்பணியை செய்வதற்கு அழைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதர்களுமே, உழைப்பை மிகவும் போற்றினர்.

    இன்றைய நாளில் நாம் என்னென்ன பயிகளை முன்னெடுத்து செய்ய வேண்டும் என்பதை நன்கு திட்டமிட வேண்டும். வீழ்ச்சி, தடுமாற்றம் போன்றவை ஏற்பட்டவுடன் சோர்ந்திடாது முன்னோக்கிய பயணத்தை இன்னும் விரைவுப்படுத்திட வேண்டும். அதனால் இன்றே செய்வோம் என்ற மனநிலையோடு இயங்க வேண்டும். அப்போது நமது வாழ்வின் இலக்குகள் பலருக்கும் பயன்தரும. உழைப்பு, நமது வாழ்வின் முகவரியாகட்டும்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறைமாவட்டம்.
    ‘இனி இந்த தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்’ (எரேமியா 32:15).
    இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை மிகுந்த அன்புடன் வாழ்த்துகிறேன். நம் தேவன் நல்லவர். இம்மட்டும் நடத்தின தேவன் இனியும் நம் குடும்பங்களை நடத்த வல்லவராக இருக்கிறார்.

    ‘உன் துக்கநாட்கள் முடிந்துபோம்’ (ஏசாயா 60:20).

    மேற்கண்ட வாக்குத்தத்தங்களின்படி உங்கள் துக்க நாட்களெல்லாம் முடிந்து போகப்போகிறது. நீங்கள் பலவிதமான வேதனைகள் மத்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கலாம். என் வேதனைகள் என்று மாறும்? என துக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிற அன்பு சகோதரனே! சகோதரியே! நிச்சயமாகவே முடிவு உண்டு, உங்கள் நம்பிக்கை வீண்போகாது.

    உங்கள் துக்க நாட்களை தேவன் மாற்றி உங்களை நிச்சயம் சந்தோஷப்படுத்துவார். அப்படி உங்கள் துக்கம் மாறும் போது, இனி உங்கள் வாழ்வில் சம்பவிக்கிற காரியங்களைக் குறித்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

    ‘இனி நீ அழுதுகொண்டிராய், உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்’ (ஏசாயா 30:19)

    அன்னாள் வாழ்விலே ஒரு பக்கம் குழந்தையில்லையே என்கிற துக்கம், மறுபக்கம் குடும்பத்தினரின் நிந்தையான பேச்சுகள். இவற்றின் மத்தியிலே துக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருந்த அன்னாள் தேவ சமுகத்திலே சென்று தன் இருதய பாரங்களை ஊற்றிவிட்டபோது வேதம் சொல்லுகிறது.

    ‘அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை’ (1 சாமுவேல்1:18).

    அவள் விண்ணப்பத்தை கர்த்தர் கேட்டார், பிள்ளைகளைக் கொடுத்தார். அவளுடைய அழுகை நின்று விட்டது.

    அழுகையின் பாதையிலே நடந்து கொண்டிருக்கிற சகோதரனே, சகோதரியே, உங்கள் கண்ணீரையும் ஆண்டவர் பார்க்கிறார். தேவனை மாத்திரம் பற்றிக் கொள்ளுங்கள். இனி நீங்கள் அழுது கொண்டிருப்பதில்லை. உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

    ‘ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக் குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை, இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை’ (ஏசாயா 29:22)

    பலவிதமான நிந்தனைகளாலும், அவமானங்களினாலும் வேதனைப்பட்டு, வெட்கப்பட்டு நிற்கிற உங்களைப் பார்த்து ஆண்டவர் சொல்லுகிற காரியம் என்ன தெரியுமா?, ‘இனி நீங்கள் வெட்கமடைவதில்லை. உங்கள் முகம் செத்துப் போவதுமில்லை. உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்’.

    ‘நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்பாழான தேசமென்னப் படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும், கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார், உன் தேசம் வாழ்க்கைப்படும்’ (ஏசாயா 62:4)

    ஆகார் தன் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு வனாந்திரத்திலே அலைந்து திரிந்தபோது, கர்த்தரின் கண்கள் அவளைக் கண்டது. அவளுக்கென்று ஒரு நீரூற்றைத் திறந்து, அவளைக் கைவிடாத தேவன் உங்கள் பாரங்களை பார்க்கிறார். உங்கள் வேதனைகளை அறிகிறார்.

    ‘இனி நீங்கள் கைவிடப்படுவதில்லை, உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்’.

    ‘இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்’ (வெளிப்படுத்தின விசேஷம் 22:3)

    பலவிதமான சாபங்களினால், பரம்பரை சாபங்களினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற சகோதரனே, சகோதரியே, இயேசுவின் ரத்தத்தினால் உங்கள் சாபங்களையெல்லாம் கர்த்தர் ஆசீர்வாதமாக மாற்றி உங்களை சந்தோஷப்படுத்தப் போகிறார்.

    இனி உங்கள் குடும்பத்தில் ஒரு சாபமும் இருக்காது. உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

    ‘இனி இந்த தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்’ (எரேமியா 32:15).

    வாடகை வீட்டிலே கஷ்டத்தோடு ஒருவேளை நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம், எவ்வளவு சம்பாதித்தாலும் என்னால் ஒரு வீடு அல்லது நிலம் கூட வாங்க முடியாதபடிக்கு சம்பளம் முழுவதும் மருத்துவருக்கோ அல்லது கடனை அடைப்பதற்கோ போய்விடுகிறதே என துக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம். தேவன் உங்கள் துக்கத்தை மாற்ற விரும்புகிறார். விசுவாசத்தோடு தேவனையே நோக்கிப் பாருங்கள்.

    இனி உங்கள் வாழ்வில் வீடுகளும், நிலங்களும் கொள்ளப்படும். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

    சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54
    தூத்துக்குடி தூய சவேரியார் ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பங்குதந்தை ஜேசுநசரேன் தலைமை தாங்கினார்.
    தூத்துக்குடி தூய சவேரியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பங்குதந்தை ஜேசுநசரேன் தலைமை தாங்கினார்.

    பாதிரியார்கள் ஸ்டாலின், ஜஸ்டின், பிராக்ரஸ், கிங்ஸ்டன், வினித்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தி கொடியேற்றி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. 9-ம் திருவிழாவான வருகிற 2-ந்தேதி காலையில் திருவிழா திருப்பலி நடக்கிறது.

    மாலையில் நற்கருணை பவனி, மாலை ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி காலை 6 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் சகாயம் தலைமையில் ஆடம்பர திருவிழா திருப்பலி நடக்கிறது.
    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள தாளார்குளம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள தாளார்குளம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவானது வருகிற 3-ந் தேதி வரை நடக்கிறது.

    விழாவில் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) திருப்பலி, மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி, 1-ந்தேதி புதுநன்மை வழங்கல், நற்கருணை பவனியும், 2-ந் தேதி திருவிழா கூட்டு திருப்பலியும், 3-ந் தேதி பருதவிழா திருப்பலி, தேர் பவனி, கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தாளார்குளம் ஊர் பொறுப்பாளர்கள் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.
    தூய பவுல் எழுதிய கடிதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது உரோமையர். இதை இவர் தனது கைப்பட எழுதவில்லை, தெர்தியு என்பவர் இதை எழுத பவுலுக்கு உதவினார்.
    தூய பவுல் எழுதிய கடிதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது உரோமையர். இதை இவர் தனது கைப்பட எழுதவில்லை, தெர்தியு என்பவர் இதை எழுத பவுலுக்கு உதவினார். கி.பி. 57, 58 ஆண்டுகளில் இந்த நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக தான் நிறுவிய, சந்தித்த திருச்சபைகளுக்கு மடல் எழுதுவதே பவுலின் வழக்கம். இந்த உரோமையர் கடிதத்தை, அவர் உரோமைக்குச் செல்வதற்கு முன்பாகவே எழுதினார்.

    பதினாறு அதிகாரங்களும், 9447 வசனங்களும் கொண்ட இந்த கடிதம், அந்தக்கால கடிதங்களில் மிகப்பெரியது. வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட கடிதங்களிலேயே இது தான் பெரியது என்கின்றனர் ஆய்வாளர்கள். இதை ‘பவுலின் நற்செய்தி’ என்று ஆரம்ப காலத்தில் ரோமர்கள் அழைத்தனர். அந்த அளவுக்கு ஆன்மிகச் செறிவுடையது இந்த நூல்.

    அந்தக் காலகட்டத்தில் ரோமில் சுமார் முப்பது லட்சம் முதல் நாற்பது லட்சம் வரை மக்கள் இருந்தார்கள். பலர் அங்கே கிறிஸ்தவ மறைபரப்புப் பணியைச் செய்திருந்தனர். இந்த நூலுக்கு முன் பவுல் கலாத்தியருக்கு ஒரு மடல் எழுதியிருந்தார். அந்த மடலின் கருத்துகள் யூத மறைக்கு எதிரானது எனும் புகைச்சல் ரோமில் எழுந்தது. அதுசார்ந்து தவறான போதனைகள் பரவத் தொடங்கின. அத்தகைய சலசலப்புகளை மிகத் தெளிவான போதனையால் சரிசெய்ய விரும்பிய பவுல் இந்த நூலை எழுதியதாக விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    இந்த நூலின் கடைசி அதிகாரத்தில் பவுல் 26 பேருக்கு வாழ்த்து சொல்கிறார். இது வழக்கத்துக்கு மாறாக, மிக நீளமாக உள்ளது. இதுவரை சந்தித்திராத உரோமை மக்களுக்கான வாழ்த்து அல்ல இது. மாறாக ஏற்கனவே சென்ற எபேசு திருச்சபை மக்களுக்கான வாழ்த்து. இந்தத் திருமுகத்தை எபேசுவுக்குக் கொடுக்க பவுல் யெப்பாவிடம் கொடுத்தனுப்பியிருக்கலாம். காலப்போக்கில் அது ரோமர் திருமுகத்துடன் இணைந்திருக்கலாம் என ஒரு வலுவான கருத்து நிலவுகிறது.

    இந்த கடிதத்தை எளிமையாகப் பிரிக்கவேண்டுமெனில் விசுவாசம், நம்பிக்கை, அன்பு எனும் மூன்று சிந்தனைகளின் அடிப்படையில் பிரிக்கலாம். முதலாவது விசுவாசம், முதல் நான்கு அதிகாரங்களும் விசுவாசத்தைப் பற்றிப் பேசுகின்றன. ஐந்தாவது அதிகாரத்திலிருந்து நம்பிக்கை முன்னிலைப்படுத்தப்படுகிறது. பன்னிரண்டாம் அதிகாரத்திலிருந்து அன்பு முதன்மை இடத்துக்கு வருகிறது.

    மனிதர் அனைவரும் பாவிகளே. அனைவருக்கும் மீட்பு தேவை. அதில் யூதர் என்றும் பிற இனத்தவர் என்றும் பாகுபாடு இல்லை. விசுவாசத்தினால் மீட்பு வருகிறது. பாவிகளுக்கு தண்டனைத் தீர்ப்பு வருகிறது என தனது நற்செய்தியை தொடங்குகிறார். பின்னர் அந்த மீட்பு இறைமகன் இயேசுவின் மூலம் தான் வருகிறது. அவரே பாவிகளுக்காக உயிரை விட்டவர். நாம் பாவத்தை விட்டு விலகவேண்டும் என தொடர்கிறார். சட்டத்தின் கரங்களில் அடிமையாக இருக்காமல் தூய ஆவியில் சுதந்திரமாய் இருக்க வேண்டும் எனும் முத்தாய்ப்பை வைக்கிறார்.

    சட்டத்தை முழுமையாய்க் கைகழுவி விட்டு விட்டு வாழ்கின்ற பிற இன மக்களின் வாழ்க்கை முறையையும், சட்டத்தை மட்டுமே கைக்கொண்டு வாழ்கின்ற யூத மக்களின் வாழ்க்கை முறையையும் பவுல் சுட்டிக்காட்டுகிறார். அனைவரும் கிறிஸ்துவின் நீதியினால் நேர்மையாளராக்கப்பட வேண்டியதன் தேவையை அழுத்தமாய்ச் சொல்கிறார்.

    யூதர்கள், யூதரல்லாதோர் எனும் பிரிவினையில் கனன்று கொண்டிருந்த அன்றைய திருச்சபையை இறைமகன் இயேசுவின் முன்னால் ஒன்றாக பவுல் இணைத்துக் கட்டுகிறார்.

    இஸ்ரேல், இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்ட இனம். ஆனால் அவர்களோ இறைவனை நிராகரிக்கின்றனர். ஆனால் ஒரு நாள் இஸ்ரேல் மக்கள் மீட்கப்படுவார்கள் எனும் இஸ்ரேலுக்கான இறைவார்த்தையை பவுல் தெளிவாக்குகிறார்.

    இறைவன் அவரது எல்லையில்லா அன்பின்படி சிலரைத் தேர்ந்தெடுக்கிறார். சிலரை நிராகரிக்கிறார். ஈசாக்கை அங்கீகரித்தவர், இஸ்மாயிலை விட்டுவிடுகிறார். யாக்கோபை அரவணைத்தவர், ஏசாயை விட்டு விடுகிறார். மோசேயை வழிநடத்தியவர், பார்வோனை புறக்கணிக்கிறார். அதே போல இப்போது யூதர்களை விட்டு விட்டு பிற இன மக்களை அரவணைக்கிறார். ஆனால் ஒரு நாள் இஸ்ரேல் மீட்கப்படும் எனும் செய்தியை பவுல் யூதர்களுக்குப் புரியும் வரலாற்றுடன் இணைத்துப் பேசுகிறார்.

    திருச்சபையின் ஒற்றுமையையும், திருச்சபை எப்படி பழைய ஏற்பாட்டு நிழல்களினால் புதிய ஏற்பாட்டின் நிஜங்களை இணைக்க வேண்டும், எப்படி விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் தெள்ளத்தெளிவாக பவுல் தெரிவிக்கிறார்.

    மனிதர் யாவரும் பாவிகள். யாவருக்கும் மீட்பு தேவை. மீட்புக்கு இறைமகன் இயேசு கிறிஸ்து தேவை. அவரோடு இணைந்த வாழ்வில் தான் புது வாழ்வு கிடைக்கும் எனும் மையக்கருத்து இந்த நூலில் வலுவாக இருக்கிறது.

    உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது (ரோமர் 8:39) எனும் அற்புதமான நம்பிக்கை வார்த்தையை பவுல் தருகிறார்.

    முழுமையாய் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய ஒரு நூல் உரோமையர்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா டிசம்பர் மாதம் 3-ந் தேதி வரை நடைபெறும்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி வரை நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு 7.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட முதன்மை பணியாளர் கிலேரியஸ் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் கோட்டார் வட்டார முதல்வர் மைக்கிள் ஏஞ்சலுஸ், பங்குத்தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்குத்தந்தை டோனி ஜெரோம், பேராலய நிர்வாகிகள், அருட்சகோதரிகள் மற்றும் பங்குமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    திருவிழா நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பலி நடைபெறுகிறது. டிசம்பர் 1-ந் தேதி காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், 11 மணிக்கு குணமளிக்கும் திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஓய்வுபெற்ற கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலியும் நடைபெறுகிறது. அன்று இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.

    2-ந்தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு ஆராதனையும், நற்கருணை ஆசீர், இரவு 10.30 மணிக்கு தேர்பவனியும் நடைபெறுகிறது.

    3-ந்தேதி காலை 8 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேர் பேராலயத்தை வந்தடைகிறது. தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
    கோவில்பட்டியை அடுத்த வடக்கு வண்டானம் புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    கோவில்பட்டியை அடுத்த வடக்கு வண்டானம் புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஆலயத்தை சுற்றி கொடி பவனியும், புனிதரின் மன்றாட்டு மாலையும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சிக்கு மேலமெஞ்ஞானபுரம் பங்கு பணியாளர் குழந்தைராஜ் தலைமை வகித்து திருக்கொடி ஏற்றினார். வீரவநல்லூர் பங்கு பணியாளர் ஞானதினகரன் மறையுரையாற்றினார்.

    விழாவில், காமநாயக்கன் பட்டி ஆலயப் பங்கு தந்தையர்கள் அருள்ராஜ், அல்போன்ஸ் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, காமநாயக்கன்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வடக்கு வண்டானம் முன்னாள் ஊராட்சி தலைவர் விசுவாசம் - சவரியம்மாள் குடும்பத்தினர் சார்பில் விருந்து நடைபெற்றது.

    விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு திருஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெறும். அதைத்தொடர்ந்து, 9-ம் திருநாளான வருகிற 30-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருஜெபமாலை, திருப்பலி மற்றும் சப்பர பவனி நிகழ்ச்சி நடைபெறும். 10-ம் திருநாளான டிசம்பர் 1-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேரடித் திருப்பலியும், நண்பகல் 12 மணிக்கு திருபயணிகள் திருப்பலியும் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு வண்டானம் பங்கு பணியாளர் அருள்நேசமணி தலைமையில் திருஇருதயசபை அருட்சகோதரிகள், ஊர் பொறுப்பாளர்கள், கிறிஸ்தவர்கள், வெளியூர் வாழ் வண்டானம் கிறிஸ்தவர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    சில நேரங்களில் நம்மைக்குறித்து நாம் சரியாக பார்த்து, நாம் யார்? எப்படி? என்ற தெரிந்து வைத்திருப்பதில்லை.
    “சிலர் அவர் நல்லவர் என்றார்கள்- யோவான் -7:12”

    நம்மை குறித்து நாம் சரியாக பார்த்து தெரிநது வைத்திருக்க வேண்டும். பிறர் நம்மை எப்படி பார்க்கின்றார்கள் என்றும், அவர்கள் நம்மை எப்படி பார்க்க முடிகிறது என்பதும் நமக்கு தெரிய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை கடவுள் எப்படி பார்ப்பார். அவருடைய பரிசுத்த கண்களுக்கு முன்பாக நாம் எப்படி தோன்றுவோம் என்ற அறிவும் மிக அவசியம். சில நேரங்களில் நம்மைக்குறித்து நாம் சரியாக பார்த்து, நாம் யார்? எப்படி? என்ற தெரிந்து வைத்திருப்பதில்லை. எனவே நம்மை நல்லவர்கள் என்று பிறர் சொன்னால் மகிழ்ந்து விடுகிறோம். வேறுவிதமாக தாழ்வாக சொன்னால் சோர்ந்து போய் விடுகிறோம். மற்றவர்கள் நம்மை உயரம் என்று சொல்லும் போது நாம் குட்டை என்ற உண்மை தெரியப்படாமல் போய்விடும்.     

    மற்றவர்கள் நம்மை குட்டை என்று சொல்லும் போது நம்முடைய உயரம் அறியப்படாமல் போகும் . நம்மை நாம் சரியாக அறிந்திருந்தால் பிறருடைய புகழ்ச்சி நம்மை மயக்கம் செய்யாது. பிறருடைய இகழ்ச்சி நம் மனதை உடைக்கவும் செய்யாது. ஏனென்றால் நமக்கு நாம் யார்? என்பது தெரியும்.

    இயேசு கிறிஸ்து தம்மை புகழ்ந்தவர்களை நண்பர்கள் என்றும் எண்ணவில்லை. தேவையின்றி இகழ்ந்தவர்களை விரோதிகள் என்றும் எண்ணவில்லை. அவரவர்களுடைய் இருதயம் எப்படிப்பட்டதோ, அதற்கேற்றபடியே பிறரைக்குறித்த அவர்களுடைய மதிப்பீடுகளும் இருக்கும். நம்முடைய இருதயம் நன்றாய் இருந்தால் யாருடைய மதிப்பீடுகளும் நம்மை சோர்ந்து போக செய்ய இயலாது. ஒரு கூட்டம் மக்கள் இயேசுவை நல்லவர்கள் என்று புகழ்ந்தனர். அதே வேளையில் வேறொரு கூட்டத்தினர் அவரை வஞ்சிக்கின்றவன்என்று கூறி இகழ்ந்தனர். ஆனாலும் இயேசுவோ இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் எந்த பிரதிபலிப்பையும் காட்டவில்லை.

    அதே வேளையில் நம்மை குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்ற சிந்தனையும் அவசியம். இயேசு தம்முடைய சீடர்களிடம் ஜனங்கள் என்னைக்குறித்து என்ன சொல்லுகின்றார்கள். சீடர்கள் தம்மைக்குறித்து என்ன நினைக்கின்றார்கள் என்பதையெல்லாம் அறிந்திட ஆர்வமாய் இருந்தார். நாம் இன்னும் நம்மை சரியாக வைக்க வேண்டுமானால் ஜனங்களின் பார்வைகளை குறித்த ஒரு அறிவும் அவசியமே. எல்லாவற்றை பார்க்கிலும் கடவுள் நம்மை எப்படி பார்ப்பார் என்பதே மிக முக்கியம்.நம்முடைய கண்களும், ஜனங்களின் கண்களும் எதையும் சரியாக அளிப்பதில் பூரணம் உடையவை அல்ல. அவர்களுடைய பார்வையில் நாம் எப்படி இருப்போம் என்ற உணர்வுதான் நம்மை மிக சரியாக வாழ தூண்டுகிறது.

    “விமர்சனங்களுக்கு விதி விலக்காக இருக்க விரும்புகின்றவன் உண்மையின் விதிகளை விட்டு விலகித்தான் ஆக வேண்டும்.”

    ×