என் மலர்
கிறித்தவம்
இயேசுவின் பிரியமானவர்களே, நாமும் உண்மையான மனமாற்றம் பெற்று வாழ நமக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
இறை அருளும் இரக்கமும் தாராளமாக பொழியப்படும் காலம் தான் தவக்காலம். கிறிஸ்துவில் புதுவாழ்வை தொடங்க தங்களையே தயாரிக்கும் காலம் தான் இந்த தவக்காலம். கடவுளின் இரக்கத்தையும் ஆசீரையும் பெற்று தருவதால் இது அருளின் காலமாக அழைக்கப்படுகிறது.
தவக்காலத்தின் முக்கிய நோக்கம் வாழ்க்கையில் ஒன்றை இழந்தால் மற்றொன்றை பெறமுடியும். அதாவது நம் பழைய வாழ்விலிருந்து புதியதொரு வாழ்வுக்கு செல்ல முயல்வது. நம் ஆண்டவர் இயேசுவின் திருப்பாடுகள், சிலுவை மரணம் இன்னும் பல்வேறு பக்தி முயற்சிகளில் பங்கெடுத்துவிட்டு சிறிதுகாலம் கழித்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவதல்ல மனமாற்றம். 2 பேதுரு 2:22ல் சொல்லப்படுவது போல கக்கினதையே மீண்டும் தின்னவரும், பிராணியாகவும், குளிப்பாட்டிய பின் மீண்டும் சேற்றில் புரளும் விலங்கினமாகவும், நம்முடைய கிறிஸ்துவ வாழ்வு இருக்கக்கூடாது. குறிப்பிட்ட காலமே ஆடைமாற்றி அந்த காலங்களில் மட்டும் நன்மை செய்து நடித்து திரியும் கூட்டமாக இருக்க கூடாது. மனித பலவீனம் என்ற போலியான காரணம் கூறி மீண்டும், மீண்டும் பாவத்தை செய்து கொண்டு வாழ்வது நல்ல வாழ்வு அல்ல. உண்மையான மனமாற்றத்திற்கு அன்று முதல் இன்று வரை சாட்சிகளாக விவிலியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இருவரை நாம் நினைவில் கொள்வோம். 1) தாவீது அரசர் 2) மகதலாமரியா.
இயேசுவின் பிரியமானவர்களே, நாமும் உண்மையான மனமாற்றம் பெற்று வாழ நமக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்டு, தூயநீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய் ஆண்டவரை அணுகி செல்வோம். வெளிவேடமாக வாழாமல் தவக்காலத்தின் அனைத்து முயற்சிகளிலும் பங்கெடுத்து கிறிஸ்துவுக்குள் ஒளிர்விடும் மக்களாய், சாட்சிகளாய் வாழ இறைவனின் அருள் வேண்டுவோம். இறைவனின் திருமுன் மாசற்றவராக வாழ நம் பாவங்களை விட்டு விலகுவோம். சென்ற இடமெல்லாம நன்மையை செய்த இயேசுவை போல் தேவைப்படுவோருக்கு நல்லதை செய்வோம். குழுவாகவோ, தனிமையாகவோ ஜெபத்தில் இறைவனோடு உறவாடுவோம்.
- அருள்திரு மரியசூசை, துணை இயக்குநர், திரு இருதய ஆண்டவர் மருத்துவமனை, கும்பகோணம்.

பாவத்தின் முடிவு மரணம் என்று பைபிள் கூறுகின்றது. அதுமட்டுமல்ல நம் உடலில் குடி, போதை, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், ஒழுங்கற்ற பாலியல் உறவுகள் போன்ற பாவத்தின் நிமித்தம் மனிதர்களுக்கு மரணம் ஏற்படுகிறது.
நம் உடலை விட்டு உயிர் கடவுளிடம் செல்வதை மரணம் என்கிறோம். நம் உடலுக்குள் உயிர் கடவுளிடமிருந்து பூமிக்கு வருவதை பிறப்பு என்கிறோம். ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தால் இரு குடும்பங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. அவர்களை சார்ந்த உறவுகளுக்கு சந்தோஷம் உண்டாகிறது. அந்த குழந்தையின் நிமித்தம் இரு குடும்பங்கள், பகைமை பொறுப்புகளை களைந்துவிட்டு ஒன்றாகிறார்கள். ஆனால் மரணத்தாலோ, பிரிவின் நிமித்தம் ஏமாற்றம், கவலை, துக்கம், அழுகை, புலம்பல் உண்டாகிறது.
இங்கு இயேசுநாதரின் சிலுவை மரணம், பாடுகள், வேதனைகள் நிறைந்ததாயிருந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே. ஏனென்றால் குழந்தையின் குடும்பங்கள் ஒன்றாக்கப்படுவது போல், இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் மனிதர்களாகிய நாம் கடவுளுடன் சேர்க்கப்படுகிறோம். (எபே: 2: 13-17) கடவுளின் வார்த்தைக்கு கீழ்படியாத ஆதாம், ஏவாளின் மூலம் பாவம் உருவாகி, அவர்களுடைய சந்ததியாகிய நமக்குள்ளும் பாவம் தொடர்ந்து வருகின்றது. இந்த பாவத்தின் விளைவினால் நமக்கும், தேவனுக்கும் ஒரு மிகப்பெரிய இடைவெளி உண்டாயிற்று. பாவத்தின் முடிவு மரணம் என்று பைபிள் கூறுகின்றது. அதுமட்டுமல்ல நம் உடலில் குடி, போதை, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், ஒழுங்கற்ற பாலியல் உறவுகள் போன்ற பாவத்தின் நிமித்தம் மனிதர்களுக்கு மரணம் ஏற்படுகிறது.
முடிவில்லாத வேதனையும், தண்டனையும் உண்டு என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. ஒரு கல்லூரியிலோ அல்லது வெளியில் தவறும் செய்யும் தன் மகனுக்காக, தகப்பனே முன் வந்து மன்னிப்பு கேட்பதும் அதற்கான அபராத தொகையை தானே செலுத்தி மகனை விடுவிப்பது போல, நம்முடைய அன்பின் ஆண்டவர் பரம தகப்பனாகிய இயேசு கிறிஸ்து பிள்ளையாகிய நமக்காக சிலுவையில் ரத்தம் சிந்தி பாவத்தின் தண்டனையிலிருந்து நம்மை விடுவித்திருக்கிறார். ஆகவே அவர் தாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களை சுமந்தார். (மத்: 8: 17) (நம்முடைய மீறுதல்கள் நிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்கள் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசா: 53: 5)
ரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்ற பைபிள் வார்த்தையின்படி (எபி: 9: 22) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து, 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததினால் நமக்கு சமாதானம், சந்தோஷம், பாவத்தில் இருந்து விடுதலை, தெய்வீக பாதுகாப்பு, பரிபூரண ஆசீர்வாதம், நிறைவான, பரலோக வாழ்வு கிடைத்திருக்கிறது. ஆகவே அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் மரணம் நமக்கு மகிழ்ச்சியே!
கர்த்தகர் உங்களை ஆசிர்வதிப்பாராக...
பாஸ்டர் எஸ்.வேதமுத்து,
சர்வ வல்லவர் சர்வதேச சபை
பெரியார் காலனி, திருப்பூர்.

என்னிடமும் கடவுளிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்ற இறைமகள் இயேசுவின் வார்த்தை செயலாக்கம் பெறுவதற்கு நாம் நம்மையே தயார் செய்ய வேண்டும்.
நாம் லட்சியங்களை அடைவதற்கு முழுமையான ஈடுபாட்டோடு களம்இறங்க வேண்டும். சீனிவாச ராமானுஜம், முறையான உயர்கல்வியை பெற வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கணிதத்திதன் மீது அவர் கொண்டிருந்த தீராத அன்பால் மிக கடுமையான ஈடுபாட்டோடு உழைத்தார். அதனால் வரலாற்றில்நினைவு கூறப்படுகிற அளவுக்கு உயர்ந்த இடத்தினை எட்டிப்பிடித்தார். அவரது கண்டுபிடிப்பினை பற்றிய ஆராய்ச்சியும், நிரூபணமும் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணித மேதை பேராசிரியர் பல்கலைக்கழக கணித மேதை பேராசிரியர் ஹார்டி அனைத்து மேதைகளையும் பட்டியலிட்டு தர வரிசைப்படுத்தினார். அதில் 100 சதவீதம் முதன்மைபடுத்தப்பட்டவர் ராமானுஜம் ஆவார்.
நம்முடைய அன்பின் வெளிப்பாடே நமது உண்மையான உழைப்பு என்பார் கலில்ஜிப்ரான். இளமையில் இருந்தே வாழ்வின் குறிக்கோளை உருவாக்கிக்கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். தடங்கல்கள், பிரச்சனைகள் அனைத்தும் இயல்பானவை. ஆனால் விடாமுயற்சியோடு, பொறுமை கொண்டு அவற்றை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டும். நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதற்காக மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும்.
இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் இதற்கான பயணத்திட்டங்களை நாம் வரைந்திட வேண்டும். சோர்வு,, நெருக்கடி இவை அனைத்தையும் கடந்து பயணத்தினை அமைக்க வேண்டும். இயல்பான மனித வாழ்கையில் சறுக்கல்கள் நிச்சயம் உண்டு. சோர்வுற்று விழுந்து கிடக்கிறவன், எழும்ப முடியாது தடுமாறி கிடக்கிறவன், இவ்வளவுதான் என்று அஞ்சுகிறவன் எதையும் சாதித்த தாய் வரலாறு இல்லை. நாள் ஒன்றுக்கு ஒருநாள் செயல் என்ற மனப்பக்குவத்தோடு இயங்குவதற்கு நாம் அழைக்க படுகின்றோம். நாம் செய்ய வேண்டும் என கருதுகின்ற செயலை நன்கு திட்டமிட்டு முழுமையான அர்ப்பணிப்போடு ஈடுபாட்டு உணர்வோடு செய்ய வேண்டும்.
நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். என்னிடமும் கடவுளிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்ற இறைமகள் இயேசுவின் வார்த்தை செயலாக்கம் பெறுவதற்கு நாம் நம்மையே தயார் செய்ய வேண்டும். நமது உள்ளம் சிறப்புற இருக்கின்ற போது எல்லாமே நல்லதாய் நடக்கும்.
அருட்பணியாளர் குருசுகார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.

வாழ்க்கை என்பது ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்பதல்ல. போட்டிகள், பொறாமைகள் நிறைந்த இந்த உலகில் சரித்திரம் படைக்க, இறைவனின் திருவுருவில் படைக்கப்பட்டவர்கள் நாம்.
வாழ்க்கை என்பது ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்பதல்ல. போட்டிகள், பொறாமைகள் நிறைந்த இந்த உலகில் சரித்திரம் படைக்க, இறைவனின் திருவுருவில் படைக்கப்பட்டவர்கள் நாம். இறைவார்த்தையின் படி நடந்து மேலும் வாழ்வில் வளர இதோ விவிலியத்தின் ஒருபகுதி(மத்தேயு- 7:21. 24-27)
என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச்சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக என் தந்தையின் திருவுளப்படி நடப்பவரே செல்வர். இறை வார்த்தையின் படி நடப்பவர்கள் பாறை மீது அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அவை வீட்டின் மேல் மோதியும் விழவில்லை. ஏனெனில் பாறையிள் மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நாம் சொல்லும் வார்த்தையை கேட்டு அவற்றின் படி செயல்படாதவர்கள் மணல் மீது வீட்டை கட்டிய அறிவிலிக்கு ஓப்பாவர். மழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அவை அந்த வீட்டை தாக்க பேரழிவு நேர்ந்தது.
வாழ்க்கை எனும் வீட்டிற்கு அடித்தளமாக அன்பு, நம்பிக்கை, உழைப்பு, இரக்கத்தை நாம் நம் கற்பாறையாம் கடவுளாகவே கொண்டுள்ளோம். நாம் வாழ்வை பொருளாதாரப்பிரச்சனைகள், உறவுகள் தாக்கினாலும் உறுதியான மனதோடு வாழ்வோம். அதனால் இதற்கு மாறாக நம் வாழ்க்கை வீட்டை சுயநலம், பதவி, பணம், பொறாமை மீது கட்டினோம் என்றால், மணல் மீது கட்டப்பட்ட வீட்டை போன்று அழிந்து விடுவோம். இல்வாழ்க்கை சிறக்க இறைப்பற்றுதலில் நம்பிக்கை கொண்ட மனிதர்களாய் மாறுவோம். வாழ்ந்து பார். உறவின் உன்னதம் உனக்கு தெரியும்.
வாழ்க்கையில் இறைவேண்டலையும் இணைத்துப்பார் உன் வாழ்வே ஒளிமயமாகும்.
நாம் செய்த பாவத்திற்கு சிலுவை சுமந்த அவர் இன்றளவிலும் நம்மை மன்னிக்கும் தெய்வமாகவே இருக்கிறார். மனம் மாறுங்கள் நமது இறைவேண்டலில் வாழ்க்கை பயணம் தொடர.
எஸ்.அமலா.சீனிவாசநல்லூர்.

இயேசுவை போல பாவமில்லாத வாழ்க்கை வாழ நற்சிந்தனையை நம்முடைய உள்ளத்திலே துளிர்விட செய்து மற்றவர்கள் நம்மை பார்த்து நாமும் அதே போல துளிர்விட வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு வாழ தேவன் தாமே அருள்புரிவாராக.. ஆமென்!
சிலுவையிலே நமக்காக ரத்தம் சிந்தி தன்னையே பலியாக ஒப்புவித்த இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் விதமாக இந்த தவக்காலத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து சற்று தியானித்து பார்ப்போம்.
இயற்கையாக மரங்கள் அந்தந்த காலங்களில் தன்னை புதுமைப்படுத்திக் கொள்கிறது. எப்படியென்றால், இலையுதிர்காலத்திலே இலைகள் எல்லாம் காய்ந்து கீழே விழுந்து விடுகிறது. பின்னர் புதிதாக துளிர்விட்டு இலைகள் படர்ந்து பச்சை பசேல் என்று நம்முடைய கண்ணுக்கு பார்க்க அழகாக காட்சி தருகிறது. நாமும் மரத்தை பார்த்து விட்டு எவ்வளவு அழகாக உள்ளது என்று வியக்கும் அளவுக்கு இருக்கும்.
இப்படி இயற்கையை படைத்த கடவுள்தான் நம்மையும் படைத்திருக்கிறார். எனவே தேவ பிள்ளைகளே மரங்கள் எப்படி இலையுதிர் காலத்தில் தன் இலைகளை எல்லாம் தளர்த்து விட்டு, புதிதாக துளிர்விட்டு தன்னை புதுப்பித்துக் கொள்கிறதோ, அதே போல நாமும் இந்த தவக்காலத்தில் தீய பழக்கங்கள், தீய சிந்தனைகளை கைவிட்டு நம்முடைய உள்ளத்தில் இருந்து அதை எடுத்து அப்புறப்படுத்தி விட்டு புதிய சிந்தனைகளை துளிர்விட செய்ய முயற்சிக்க வேண்டும்.
இப்படி நம்முடைய உள்ளத்தை நற்சிந்தனைகளாக மாற்றும் போது, அந்த மரங்களை பார்த்து எவ்வளவு பச்சை பசேல் என்று அழகாக இருக்கிறது என்றோமோ, அதே போல நம்மையும் அடுத்தவர்கள் பார்க்கும் போது அவனா, அவன் நல்லவன், ஒழுக்கமானவன் என்று நம்மை விமர்சிக்க தோன்றும்.
எனவே தேவ பிள்ளைகளே இந்த நாளில் இயேசுவை போல பாவமில்லாத வாழ்க்கை வாழ நற்சிந்தனையை நம்முடைய உள்ளத்திலே துளிர்விட செய்து மற்றவர்கள் நம்மை பார்த்து நாமும் அதே போல துளிர்விட வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு வாழ தேவன் தாமே அருள்புரிவாராக.. ஆமென்!
இம்மானுவேல்,வீரபாண்டி.

வேதாகமத்தில் சங்கீதம் முதலாம் அதிகாரம் 2-ம் வசனத்தில் ‘கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும், பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிற மனிதன் பாக்கியவான்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நாளில் நாம், வேதத்தை எப்படி தியானிப்பது, கர்த்தருக்கு எப்படி பாக்கியவானாய் இருப்பது என்பது குறித்து சற்று தியானிப்போம்.
ஒரு இடத்தில் கண்காட்சி நடந்தால் அங்கு ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். அப்படி வருபவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருட்கள் பிடித்தமானதாக அமையும். அதில் ஒருவர் என்ன செய்வார் என்றால் தனக்கு பிடித்தமான பொருளை எடுத்து இது எப்படி செய்தார்கள்?, எப்படி உபயோகப்படுத்துவது? என்பதை குறித்து ஆய்வு செய்து பின்னர் அந்த பொருளை வாங்குவார். சிலர் பார்த்தவுடன் நமக்கு பிடித்திருக்கிறது நாம் வாங்கி கொள்ளலாம் என்று வாங்கி சென்று விட்டு அந்த பொருள் வீட்டில் ஒரு மூலையில் கிடக்கும்.
இப்படித்தான் ஒவ்வொருவரும் வாரந்தோறும் கோவிலுக்கு செல்வதும். மேலும் சிலர் விசேஷ நாட்களில் மட்டும் கோவிலுக்கு செல்வதும் உண்டு. அப்படி செல்லும் போது கோவிலுக்கு அருகே புதுப்புது கடைகள் இருக்கும் உடனே அங்கு சென்று பல்வேறு பொருட்களை வாங்கி விட்டு, பின்னர் வேதாகமத்தை புதிய புதிய வடிவங்களில் பார்த்து அதையும் வாங்கி செல்வர். அதை சிலர் வாங்கி வந்து வீட்டின் மூலையில் போட்டு விடுகின்றனர். ஆனால் சிலர் அந்த வேதாகமத்தை ஆராய்ந்து அறிகின்றனர். இப்படி வேதத்தை ஆராய்ந்து தியானிக்கும் போது நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு ஏற்பட்டு நம் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் என்பதை நாம் மறந்து போகக்கூடாது.
இப்படி வாங்கி வந்த வேதாகமத்தை தியானிப்பதை விட்டு விட்டு, மற்றவர்களிடம் எங்கள் வீட்டில் சிறியதும், பெரியதுமாக பல்வேறு வடிவங்களில் உள்ளது என்று பெருமை பாராட்டாமல் அந்த வேதாகமத்தை இந்த தவக்காலத்தில் தியானிக்க ஆரம்பிப்போம். இதைத்தான் வேதாகமத்தில் சங்கீதம் முதலாம் அதிகாரம் 2-ம் வசனத்தில் ‘கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும், பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிற மனிதன் பாக்கியவான்’ என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்த தவக்காலத்தில் வேதத்தை வாசித்து அதை தியானித்து கர்த்தருக்கு பாக்கியவானாய் மாற முயற்சிப்போம் ஆமென்.
அல்போன்ஸ், கோவில்வழி, திருப்பூர்.

நம்முடைய இதயத்தை கடவுளுக்கென்று மாற்ற வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் நாம் கடைபிடித்தால் கடவுள் நமக்கு நல்ல மனமாற்றத்தை தர வல்லவராய் இருக்கிறார்.
கடவுளுக்கும் நமக்கும் மிக நெருக்கமான உறவு ஏற்பட்டு மனமாற்றத்தை நாம் பெற வேண்டி தங்களையே தயார்படுத்தி கொள்ளக்கூடிய காலம் தான் இந்த தவக்காலம். இந்த மனமாற்றத்தை பெற நாம் என்ன செய்யவேண்டும் என்று சற்று தியானித்து பார்ப்போம்.
இந்த தவக்காலத்தில் சிலர் நான் சாப்பிடாமல் உபவாசம் இருக்கிறேன். நீங்கள் எப்படி? என்று கேள்வி கேட்டுக்கொள்வார்கள். இன்னும் சிலர் நான் பல்வேறு கெட்ட பழக்கங்களை விட்டு விட்டேன். இந்த 40 நாட்களிலாவது அதை செய்யாமல் இருக்கிறேன் என்று சொல்வார்கள். இப்படியெல்லாம் பேசி விட்டு பின்னர் லெந்து நாட்கள் முடிந்தவுடன் தீய பழக்கங்களை மீண்டும் ஆரம்பித்து விடுவார்கள்.
எனவே உபவாசம் இருப்பது என்றால் 3 வேளை உணவை ஒருமுறை, இரண்டு முறை அல்லது மூன்று முறையும் சாப்பிடாமல் இருப்பது, இன்னும் சிலர் தீய பழக்கங்களில் இருந்து விலகி இருப்பது மட்டுமல்ல, ஆத்ம தியாகத்துடன் உபவாசம் இருக்க வேண்டும். இதைத்தான் இயேசுவும் கல்வாரி சிலுவையில் பாடுகளை அனுபவிக்கும் முன்பு உபவாசம் இருந்து தன் ஆத்மாவை தேவனிடத்தில் தன்னை ஒப்புக்கொடுத்தார் என்று வேதாகமத்தில் கூறப்பட்டு உள்ளது. எனவே ஆத்ம தியாகம் என்றால் தினமும் வேதம் வாசிக்க வேண்டும். கடவுளிடம் தினமும் நம்முடைய வேண்டுதல்களை ஜெபம் செய்ய வேண்டும். அவர் நமக்காக கல்வாரி சிலுவையில் பட்ட கஷ்டங்கள் குறித்து ஆராய வேண்டும். நம்முடைய இதயத்தை கடவுளுக்கென்று மாற்ற வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் நாம் கடைபிடித்தால் கடவுள் நமக்கு நல்ல மனமாற்றத்தை தர வல்லவராய் இருக்கிறார்.
இப்படி செய்யாமல் நான் இந்த 40 நாட்கள் மட்டும்தான் உபவாசம் இருப்பேன், தீய பழக்கங்களை விட்டு விடுவேன். பின்னர் திரும்பவும் பழைய மனிதாக மாறி விடுவேன் என்பது அல்ல. இந்த தவக்காலத்தில் நம்முடைய வாழ்க்கையை மாற்றவும், கடவுளுக்கு ஏற்றதாக நம்முடைய இதயத்தை மாற்றவுமே இந்த நாட்கள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்து போகக்கூடாது. எனவே நம்முடைய மனதில் மாற்றம் அடைந்து கிறிஸ்துவுக்குள்ளாய் வாழ தேவன்தாமே நமக்கு கிருபை செய்வாராக ஆமென்.
பெலிக்ஸ், பலவஞ்சிபாளையம்.

ஆன்மாவின் நலனுக்குப் பயன்படாத நம்முடைய சுய மகிழ்வகளை அடையாளம் கண்டு அவற்றை நீக்கி ஆன்ம வளர்ச்சிக்கான பண்புகளை வளர்த்துக்கொள்ள முயற்சி எடுப்போம்.
குழந்தாய், ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால், சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்து கொள். உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இரு: உறுதியாக இரு: துன்ப வேளைகளில் பதற்றமுடன் செயலாற்றாதே. ஆண்டவரை இறுகப் பிடித்துக்கொள்: அவரை விட்டு விலகிச் செல்லாதே.. என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்: இழிவு வரும் போது பொறுமையாய் இரு.. ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்: அவர் உனக்கு துணை செய்வார். உன் விழிகளைச் சீர்படுத்து.. நெறி பிறழாதீர்கள்: பிறழ்ந்தால் வீழ்ச்சி அடைவீர்கள். ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்: உங்களுக்கு கைமாறு கிடைக்காமற் போகாது.
(சீஞா.2:1-8) ஒறுத்தல் இறைவன் விரும்பும் நற்பண்பாகும். இவ்வொறுத்தல் இறைவன் மீது கொண்ட அன்பினால், விருப்பத்தினால், அவரோடு இணைய வேண்டும் என்ற தாக்கத்தினால் செய்யப்பட வேண்டும். திருச்சபை எவரையும் உடனடியாக புனிதர் நிலைக்கு உயர்த்துவதில்லை. அவர்களின் நீண்ட ஒறுத்தல் நிலைகளை கண்டபிறகே உயர்த்தும். அதுபோல சுய கட்டுப்பாடுகளுடன் நாமும் ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எதையும் கடமைக்காகவோ, கட்டாயத்திற்காகவோ செய்யக்கூடாது. மாறாகக் கடவுளின் உன்னத அன்பிற்காகவே செய்யப்பட வேண்டும். அதுவும் பிறர் நல மனப்பான்மையோடு செய்ய வேண்டும்.
“பறவைகள் எப்பக்கம் பறந்து சென்றாலும் அங்கெல்லாம் ஆகாயம் இருப்பதைக் காண்பது போல நாம் எங்கு சென்றாலும் கடவுள் முன்னிலையில் இருக்கிறோம்” என்கிறார் புனித பிரான்ஸிஸ் சலேசியார். ஆகவே ஆன்மாவின் நலனுக்குப் பயன்படாத நம்முடைய சுய மகிழ்வகளை அடையாளம் கண்டு அவற்றை நீக்கி ஆன்ம வளர்ச்சிக்கான பண்புகளை வளர்த்துக்கொள்ள முயற்சி எடுப்போம்.
-அருட்தந்தை அல்போன்ஸ், பூண்டி

நமக்காக மரித்த தேவன் ஒவ்வொரு நாளும் நமக்காக அன்பு செலுத்த வல்லவராய் இருக்கிறார் என்று நாம் மறந்து போக வேண்டாம்.
இன்றைய நாகரீக வாழ்க்கையில் பல்வேறு விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றினால் நம் வாழ்க்கையை அதிலே தொலைத்து விடுகிறோம். நம் வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் கூட அவர்களை பார்த்து வாருங்கள் என்று கூட சொல்ல முடியாத அளவிற்கு நாம் செல்போனில் மூழ்க வேண்டி உள்ளது. இப்படி நம் உறவே செல்போன்தான் என்ற அளவுக்கு இப்போது உலகம் மாறி போய் உள்ளது. இப்படி நாம் ஒவ்வொருவருவரும் அன்பு செலுத்த நேரமில்லாமல் வேலைக்கு செல்ல வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் சில கஷ்டங்கள் வரும் போது உறவுகளின் அன்பையும், தேவனின் அன்பையும் தேட வேண்டும் நிலை உள்ளது.
எனவே தேவனுடைய அன்பு எவ்வளவு பெரியதாய் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். தேவனுடைய அன்பு நம் இருதயத்தில் பாயும் வரை எவ்வளவு பெரிய மனித தன்மையான அன்பினாலும் நம்முடைய இருதயத்தை நிறைவடைய செய்ய முடியாது. தேவ அன்பினால் மட்டுமே நம் இருதயத்தை நிறைவடைய செய்வதாகவும், நம் வாழ்க்கைக்கு தேவையானதை திருப்தியடைய செய்வதாகவும் உள்ளது.
இதைத்தான் வேதாகமத்தில் யோவான் 15-ம் அதிகாரம் 9-ம் வசனத்தில் பிதா என்னில் அன்பாய் இருக்கிறது போல, நானும் உங்களில் அன்பாய் இருக்கிறேன். என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள் என்று கூறப்பட்டு உள்ளது.
எனவே நம்முடைய வாழ்க்கையில் தம் உறவுகளை விட்டு விட்டு எங்கு நமக்கு வேலை கிடைக்கிறதோ? அங்கு போய் வேலை செய்து கொண்டிருப்போம். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதே ஏதோ விசேஷ நாட்களில் மட்டும் தான் சென்று அந்த உறவுகளின் அன்பான பாசத்தை நாம் சேர்த்துக் கொள்ள முடியும். ஆனால் நமக்காக மரித்த தேவன் ஒவ்வொரு நாளும் நமக்காக அன்பு செலுத்த வல்லவராய் இருக்கிறார் என்று நாம் மறந்து போக வேண்டாம். இந்த தவக்காலத்தில் தேவனிடத்தில் அன்பு செலுத்தி அவர் நம்மீது அளவுகடந்த அன்பை செலுத்த நம் வாழ்க்கையை அர்ப்பணிக்க கடமைப்பட்டவர்களாய் இருப்போம்.
சகோ.பெலிக்ஸ், பலவஞ்சிபாளையம், திருப்பூர்.

சோர்ந்து போகிறவர்களுக்கு தேவன் பெலன் கொடுக்கிறார். தேவனே தோல்விகளின் நேரத்தில் பெலன் தந்து வெற்றிக்கான வழியை ஆயத்தப்படுத்துவார். ஆமென்.
பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக பலரின் வாழ்க்கை சோர்வடைந்ததாகவே காணப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் சோர்ந்து போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சற்று தியானித்து பார்ப்போம்.
கோடைக்கு பின் வசந்தகாலம் வருவது போல எந்த தோல்விக்கு பிறகும் வெற்றி நம்மை வந்து சேரும். எந்த பிரச்சினையும் இந்த உலகில் நிரந்தரமல்ல. எந்த குறைவுகளுக்கு பின்பும் நிறைவு வரும். நம்மை இதுவரை பாதுகாத்து வந்த தேவன் இனிமேலும் பாதுகாத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையை நம்மில் வளர்த்து கொள்ள வேண்டும்.
இதேபோல் தொழிலில் சரிவையே சந்தித்த ஒரு தொழில் அதிபர் மனம் நொந்து போய் கடற்கரைக்கு சென்றார். அப்போது அங்கு 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அந்த குழந்தைகள் சிறிது நேரத்தில் கடற்கரையில் இருந்த மணலில் அழகாக வீடு கட்டி விளையாடி கொண்டிருந்தனர். திடீரென கடலில் இருந்து வந்த அலை அந்த குழந்தைகள் கட்டிய வீட்டை அழித்து விட்டது. இதைப்பார்த்த அந்த தொழில் அதிபர், அந்த குழந்தைகள் மீண்டும் என்ன செய்கிறார்கள் என்று கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த குழந்தைகள் சிரித்துக்கொண்டே வேறு ஒரு இடத்திற்கு சென்று மீண்டும் மணல் வீட்டை கட்ட ஆரம்பித்தனர். இதைப்பார்த்த தொழில் அதிபருக்கு ஒரே அதிர்ச்சி. இப்படி இந்த குழந்தைகள் சோர்ந்து போகாமல் திரும்ப, திரும்ப மணல் வீட்டை கட்டி விளையாடுகின்றனர். நாமும் தொழிலில் எவ்வளவு சரிவு வந்தாலும் மனதில் சோர்வு அடையாமல் திரும்ப, திரும்ப முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணி சந்தோஷமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதைத்தான் வேதாகமத்தில் நீதிமொழிகள் 24-ம் அதிகாரம் 10-ம் வசனத்தில் ‘ஆபத்து காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது’ என்று எழுதப்பட்டுள்ளது.
எனவே தொழிலில் சரிவு ஏற்பட்டுள்ளதா? நம்முடைய வாழ்க்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதா? சோர்ந்து போகாதீர்கள். இப்படி சோர்ந்து போனால் நம் வாழ்க்கை குறுகியதாய் மாறி விடும். சோர்ந்து போகிறவர்களுக்கு தேவன் பெலன் கொடுக்கிறார். தேவனே தோல்விகளின் நேரத்தில் பெலன் தந்து வெற்றிக்கான வழியை ஆயத்தப்படுத்துவார். ஆமென்.
சகோ.கிங்ஸ்லி, ஜோதிநகர், கே.செட்டிபாளையம்.

இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுத்த நல்லதொரு போதனைதான் விசுவாசம். அவர் தம்முடைய வாழ்நாள் முழுவதும் விசுவாசத்தின் மேன்மைகளை தமது சீடர்களுக்கு போதித்தார்.
இன்றைய நாட்களில் நம்முடைய தேவைகள், வியாதிகள், பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று பல்வேறு இடங்களுக்கு செல்வது போல, இயேசுவின் நாட்களிலும் காணப்பட்டது. ஆனால் அவர்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுத்த நல்லதொரு போதனைதான் விசுவாசம். அவர் தம்முடைய வாழ்நாள் முழுவதும் விசுவாசத்தின் மேன்மைகளை தமது சீடர்களுக்கு போதித்தார்.
தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோ:3:16)என்று வேதம் கூறுகிறது. இன்றைய உலகில் நாம் தேடும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் இயேசுவின் மேல் வைக்கும் விசுவாசம் நமக்கு நல்ல பதிலைப் பெற்றுத்தரும்.
இன்றைக்கும் தேவனிடத்தில் அற்புதங்களையும், அடையாளங்களையும் நாம் பெற்றுக்கொள்ள தகுதியோ, அந்தஸ்தோ தேவை இல்லை. நாம் விசுவாசத்தோடு வேண்டிக்கொண்டாலே போதும். இயேசு சிலுவையில் அறையப்பட்டு இருந்த போது, அங்கு கூடி இருந்த மக்கள் கூறும் போது:-,
மற்றவர்களை ரட்சித்து தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை. இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும். அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத்தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் (மத்:27:42,43) என்றனர். சுற்றி இருந்த ஜனங்கள் ஏளனமாய் பேசின போதிலும், நம்பிக்கையற்ற வார்த்தைகளைக் கூறின போதும் தம்மை மரணத்திலிருந்து எழுப்ப வல்லமையுள்ள தேவன் மேல் இயேசு விசுவாசமுள்ளவராகவே இருந்தார்.
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று வேதம் சொல்லியிருக்கிறபடி இயேசு பிதாவின் மேல் விசுவாசமாக இருந்தப்படியால் 3-ம் நாளிலே உயிர்தெழுந்தார் என்று நாம் பார்க்கிறோம். கிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் நாம் எதைக்கேட்டாலும் அதை செய்ய அவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார். எனவே தேவபிள்ளைகளே, இந்த தவக்காலத்தில் அவரை விசுவாசிப்போம்,தேவனுடைய அற்புதத்தைப் பெற்றுக்கொள்வோம்.
சகோ: ஜோசப், வீரபாண்டி.

வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது. இந்த சவால்களை சந்திப்பது எப்படி? என்பது பற்றி சற்று சிந்தித்து பார்ப்போம்.

இரண்டு தொழில் அதிபர்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தனர். இதில் ஒருவர் பல்வேறு போராட்டங்களை சந்தித்து வாழ்க்கையில் நல்ல வளர்ச்சி பெற்றார். இன்னொரு தொழில் அதிபரோ போராட்டங்களை தவிர்த்தார். ஆனாலும் அவருடைய வாழ்க்கையில் பலவிதமான சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருந்ததால் வளர்ச்சி பெற முடியாமலேயே இருந்தது.
ஒருநாள் இரண்டு தொழில் அதிபர்களும் ஒரு இடத்தில் சந்தித்தனர். அப்போது ஒருவர் இன்னொருவரை பார்த்து போராட்டங்கள் இடையே நீங்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் நான் போராட்டங்களை தவிர்க்கிறேன் என்னால் வளர முடியவில்லையே ஏன்? என்று கேட்டார். அதற்கு அவர் மிகவும் பொறுமையாக நான், ‘எனக்கு தொழிலில் பல்வேறு சரிவுகள் ஏற்பட்டாலும், பொறுமையுடன் அவைகளை சமாளித்து, எல்லாம் நன்மைக்கே என்று அதை சவாலாக எடுத்துக்கொண்டு அதை துணிவுடன் மேற்கொள்கிறேன்’. ஆனால் நீங்களோ தொழிலில் சிறிது சரிவு ஏற்பட்டாலும், உடனே மனம் நொந்து போய் காணப்படுகிறீர்கள். அப்படி இல்லாமல் எதனால் இந்த சரிவு, இதை எப்படி சரி செய்வது? என்று யோசித்து மிகவும் பொறுமையாக அதை நம்முடைய தொழிலுக்கு ஒரு சவாலாக எடுத்து அதை செய்ய வேண்டும். அப்படி நீங்கள் செய்ய ஆரம்பித்தால் என்னை போன்று நீங்களும் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடையலாம் என்று கூறினார்.
இதைப்போல தான் இயேசுவுக்கும் பாடுகள், சிலுவை மரணம் போன்றவை சவால்கள் நிறைந்ததாகவே காணப்பட்டது. ஆனால் இயேசுவோ அவற்றை எல்லாம் எதிர்த்து போராடி சிலுவை மரணத்தை வெற்றிக்கொண்டார். எனவே அவர் சரித்திரத்தில் இடம் பிடித்தார் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
எனவே தேவ பிள்ளைகளே நாமும் இந்த நேரத்தில் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிட்டுள்ளது. தற்போது கொரோனா என்ற கொடிய வைரசை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் உள்ளோம். எனவே வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே இதை நாமும் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இந்த கொரோனா பிடியில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இயேசுவிடம் ஜெபம் செய்வோம். அவர் நம் ஒவ்வொருவரையும் காத்துக்கொள்வாராக ஆமென்.
சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.