search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    முழு ஈடுபாட்டோடு களம் காண்போம்

    என்னிடமும் கடவுளிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்ற இறைமகள் இயேசுவின் வார்த்தை செயலாக்கம் பெறுவதற்கு நாம் நம்மையே தயார் செய்ய வேண்டும்.
    நாம் லட்சியங்களை அடைவதற்கு முழுமையான ஈடுபாட்டோடு களம்இறங்க வேண்டும். சீனிவாச ராமானுஜம், முறையான உயர்கல்வியை பெற வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கணிதத்திதன் மீது அவர் கொண்டிருந்த தீராத அன்பால் மிக கடுமையான ஈடுபாட்டோடு உழைத்தார். அதனால் வரலாற்றில்நினைவு கூறப்படுகிற அளவுக்கு உயர்ந்த இடத்தினை எட்டிப்பிடித்தார். அவரது கண்டுபிடிப்பினை பற்றிய ஆராய்ச்சியும், நிரூபணமும் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணித மேதை பேராசிரியர் பல்கலைக்கழக கணித மேதை பேராசிரியர் ஹார்டி அனைத்து மேதைகளையும் பட்டியலிட்டு தர வரிசைப்படுத்தினார். அதில் 100 சதவீதம் முதன்மைபடுத்தப்பட்டவர் ராமானுஜம் ஆவார்.

    நம்முடைய அன்பின் வெளிப்பாடே நமது உண்மையான உழைப்பு என்பார் கலில்ஜிப்ரான். இளமையில் இருந்தே வாழ்வின் குறிக்கோளை உருவாக்கிக்கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். தடங்கல்கள், பிரச்சனைகள் அனைத்தும் இயல்பானவை. ஆனால் விடாமுயற்சியோடு, பொறுமை கொண்டு அவற்றை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டும். நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதற்காக மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் இதற்கான பயணத்திட்டங்களை நாம் வரைந்திட வேண்டும். சோர்வு,, நெருக்கடி இவை அனைத்தையும் கடந்து பயணத்தினை அமைக்க வேண்டும். இயல்பான மனித வாழ்கையில் சறுக்கல்கள் நிச்சயம் உண்டு. சோர்வுற்று விழுந்து கிடக்கிறவன், எழும்ப முடியாது தடுமாறி கிடக்கிறவன், இவ்வளவுதான் என்று அஞ்சுகிறவன் எதையும் சாதித்த தாய் வரலாறு இல்லை. நாள் ஒன்றுக்கு ஒருநாள் செயல் என்ற மனப்பக்குவத்தோடு இயங்குவதற்கு நாம் அழைக்க படுகின்றோம். நாம் செய்ய வேண்டும் என கருதுகின்ற செயலை நன்கு திட்டமிட்டு முழுமையான அர்ப்பணிப்போடு ஈடுபாட்டு உணர்வோடு செய்ய வேண்டும்.

    நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். என்னிடமும் கடவுளிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்ற இறைமகள் இயேசுவின் வார்த்தை செயலாக்கம் பெறுவதற்கு நாம் நம்மையே தயார் செய்ய வேண்டும். நமது உள்ளம் சிறப்புற இருக்கின்ற போது எல்லாமே நல்லதாய் நடக்கும்.

    அருட்பணியாளர் குருசுகார்மல்,
    கோட்டார் மறைமாவட்டம்.
    Next Story
    ×