search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    பாவம் இல்லாத வாழ்க்கை

    இயேசுவை போல பாவமில்லாத வாழ்க்கை வாழ நற்சிந்தனையை நம்முடைய உள்ளத்திலே துளிர்விட செய்து மற்றவர்கள் நம்மை பார்த்து நாமும் அதே போல துளிர்விட வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு வாழ தேவன் தாமே அருள்புரிவாராக.. ஆமென்!
    சிலுவையிலே நமக்காக ரத்தம் சிந்தி தன்னையே பலியாக ஒப்புவித்த இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் விதமாக இந்த தவக்காலத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து சற்று தியானித்து பார்ப்போம்.

    இயற்கையாக மரங்கள் அந்தந்த காலங்களில் தன்னை புதுமைப்படுத்திக் கொள்கிறது. எப்படியென்றால், இலையுதிர்காலத்திலே இலைகள் எல்லாம் காய்ந்து கீழே விழுந்து விடுகிறது. பின்னர் புதிதாக துளிர்விட்டு இலைகள் படர்ந்து பச்சை பசேல் என்று நம்முடைய கண்ணுக்கு பார்க்க அழகாக காட்சி தருகிறது. நாமும் மரத்தை பார்த்து விட்டு எவ்வளவு அழகாக உள்ளது என்று வியக்கும் அளவுக்கு இருக்கும்.

    இப்படி இயற்கையை படைத்த கடவுள்தான் நம்மையும் படைத்திருக்கிறார். எனவே தேவ பிள்ளைகளே மரங்கள் எப்படி இலையுதிர் காலத்தில் தன் இலைகளை எல்லாம் தளர்த்து விட்டு, புதிதாக துளிர்விட்டு தன்னை புதுப்பித்துக் கொள்கிறதோ, அதே போல நாமும் இந்த தவக்காலத்தில் தீய பழக்கங்கள், தீய சிந்தனைகளை கைவிட்டு நம்முடைய உள்ளத்தில் இருந்து அதை எடுத்து அப்புறப்படுத்தி விட்டு புதிய சிந்தனைகளை துளிர்விட செய்ய முயற்சிக்க வேண்டும்.

    இப்படி நம்முடைய உள்ளத்தை நற்சிந்தனைகளாக மாற்றும் போது, அந்த மரங்களை பார்த்து எவ்வளவு பச்சை பசேல் என்று அழகாக இருக்கிறது என்றோமோ, அதே போல நம்மையும் அடுத்தவர்கள் பார்க்கும் போது அவனா, அவன் நல்லவன், ஒழுக்கமானவன் என்று நம்மை விமர்சிக்க தோன்றும்.

    எனவே தேவ பிள்ளைகளே இந்த நாளில் இயேசுவை போல பாவமில்லாத வாழ்க்கை வாழ நற்சிந்தனையை நம்முடைய உள்ளத்திலே துளிர்விட செய்து மற்றவர்கள் நம்மை பார்த்து நாமும் அதே போல துளிர்விட வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு வாழ தேவன் தாமே அருள்புரிவாராக.. ஆமென்!

    இம்மானுவேல்,வீரபாண்டி.
    Next Story
    ×