search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    சவால்கள் நிறைந்த வாழ்க்கை

    வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது. இந்த சவால்களை சந்திப்பது எப்படி? என்பது பற்றி சற்று சிந்தித்து பார்ப்போம்.
    வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது. இந்த சவால்களை சந்திப்பது எப்படி? என்பது பற்றி சற்று சிந்தித்து பார்ப்போம்.

    இரண்டு தொழில் அதிபர்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தனர். இதில் ஒருவர் பல்வேறு போராட்டங்களை சந்தித்து வாழ்க்கையில் நல்ல வளர்ச்சி பெற்றார். இன்னொரு தொழில் அதிபரோ போராட்டங்களை தவிர்த்தார். ஆனாலும் அவருடைய வாழ்க்கையில் பலவிதமான சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருந்ததால் வளர்ச்சி பெற முடியாமலேயே இருந்தது.

    ஒருநாள் இரண்டு தொழில் அதிபர்களும் ஒரு இடத்தில் சந்தித்தனர். அப்போது ஒருவர் இன்னொருவரை பார்த்து போராட்டங்கள் இடையே நீங்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் நான் போராட்டங்களை தவிர்க்கிறேன் என்னால் வளர முடியவில்லையே ஏன்? என்று கேட்டார். அதற்கு அவர் மிகவும் பொறுமையாக நான், ‘எனக்கு தொழிலில் பல்வேறு சரிவுகள் ஏற்பட்டாலும், பொறுமையுடன் அவைகளை சமாளித்து, எல்லாம் நன்மைக்கே என்று அதை சவாலாக எடுத்துக்கொண்டு அதை துணிவுடன் மேற்கொள்கிறேன்’. ஆனால் நீங்களோ தொழிலில் சிறிது சரிவு ஏற்பட்டாலும், உடனே மனம் நொந்து போய் காணப்படுகிறீர்கள். அப்படி இல்லாமல் எதனால் இந்த சரிவு, இதை எப்படி சரி செய்வது? என்று யோசித்து மிகவும் பொறுமையாக அதை நம்முடைய தொழிலுக்கு ஒரு சவாலாக எடுத்து அதை செய்ய வேண்டும். அப்படி நீங்கள் செய்ய ஆரம்பித்தால் என்னை போன்று நீங்களும் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடையலாம் என்று கூறினார்.

    இதைப்போல தான் இயேசுவுக்கும் பாடுகள், சிலுவை மரணம் போன்றவை சவால்கள் நிறைந்ததாகவே காணப்பட்டது. ஆனால் இயேசுவோ அவற்றை எல்லாம் எதிர்த்து போராடி சிலுவை மரணத்தை வெற்றிக்கொண்டார். எனவே அவர் சரித்திரத்தில் இடம் பிடித்தார் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

    எனவே தேவ பிள்ளைகளே நாமும் இந்த நேரத்தில் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிட்டுள்ளது. தற்போது கொரோனா என்ற கொடிய வைரசை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் உள்ளோம். எனவே வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே இதை நாமும் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இந்த கொரோனா பிடியில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இயேசுவிடம் ஜெபம் செய்வோம். அவர் நம் ஒவ்வொருவரையும் காத்துக்கொள்வாராக ஆமென்.

    சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.
    Next Story
    ×