search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    உண்மையான மனமாற்றம் பெற

    இயேசுவின் பிரியமானவர்களே, நாமும் உண்மையான மனமாற்றம் பெற்று வாழ நமக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
    இறை அருளும் இரக்கமும் தாராளமாக பொழியப்படும் காலம் தான் தவக்காலம். கிறிஸ்துவில் புதுவாழ்வை தொடங்க தங்களையே தயாரிக்கும் காலம் தான் இந்த தவக்காலம். கடவுளின் இரக்கத்தையும் ஆசீரையும் பெற்று தருவதால் இது அருளின் காலமாக அழைக்கப்படுகிறது.

    தவக்காலத்தின் முக்கிய நோக்கம் வாழ்க்கையில் ஒன்றை இழந்தால் மற்றொன்றை பெறமுடியும். அதாவது நம் பழைய வாழ்விலிருந்து புதியதொரு வாழ்வுக்கு செல்ல முயல்வது. நம் ஆண்டவர் இயேசுவின் திருப்பாடுகள், சிலுவை மரணம் இன்னும் பல்வேறு பக்தி முயற்சிகளில் பங்கெடுத்துவிட்டு சிறிதுகாலம் கழித்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவதல்ல மனமாற்றம். 2 பேதுரு 2:22ல் சொல்லப்படுவது போல கக்கினதையே மீண்டும் தின்னவரும், பிராணியாகவும், குளிப்பாட்டிய பின் மீண்டும் சேற்றில் புரளும் விலங்கினமாகவும், நம்முடைய கிறிஸ்துவ வாழ்வு இருக்கக்கூடாது. குறிப்பிட்ட காலமே ஆடைமாற்றி அந்த காலங்களில் மட்டும் நன்மை செய்து நடித்து திரியும் கூட்டமாக இருக்க கூடாது. மனித பலவீனம் என்ற போலியான காரணம் கூறி மீண்டும், மீண்டும் பாவத்தை செய்து கொண்டு வாழ்வது நல்ல வாழ்வு அல்ல. உண்மையான மனமாற்றத்திற்கு அன்று முதல் இன்று வரை சாட்சிகளாக விவிலியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இருவரை நாம் நினைவில் கொள்வோம். 1) தாவீது அரசர் 2) மகதலாமரியா.

    இயேசுவின் பிரியமானவர்களே, நாமும் உண்மையான மனமாற்றம் பெற்று வாழ நமக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்டு, தூயநீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய் ஆண்டவரை அணுகி செல்வோம். வெளிவேடமாக வாழாமல் தவக்காலத்தின் அனைத்து முயற்சிகளிலும் பங்கெடுத்து கிறிஸ்துவுக்குள் ஒளிர்விடும் மக்களாய், சாட்சிகளாய் வாழ இறைவனின் அருள் வேண்டுவோம். இறைவனின் திருமுன் மாசற்றவராக வாழ நம் பாவங்களை விட்டு விலகுவோம். சென்ற இடமெல்லாம நன்மையை செய்த இயேசுவை போல் தேவைப்படுவோருக்கு நல்லதை செய்வோம். குழுவாகவோ, தனிமையாகவோ ஜெபத்தில் இறைவனோடு உறவாடுவோம்.

    - அருள்திரு மரியசூசை, துணை இயக்குநர், திரு இருதய ஆண்டவர் மருத்துவமனை, கும்பகோணம்.
    Next Story
    ×