search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    இயேசு கற்றுக் கொடுத்த போதனைதான் விசுவாசம்

    இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுத்த நல்லதொரு போதனைதான் விசுவாசம். அவர் தம்முடைய வாழ்நாள் முழுவதும் விசுவாசத்தின் மேன்மைகளை தமது சீடர்களுக்கு போதித்தார்.
    இன்றைய நாட்களில் நம்முடைய தேவைகள், வியாதிகள், பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று பல்வேறு இடங்களுக்கு செல்வது போல, இயேசுவின் நாட்களிலும் காணப்பட்டது. ஆனால் அவர்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுத்த நல்லதொரு போதனைதான் விசுவாசம். அவர் தம்முடைய வாழ்நாள் முழுவதும் விசுவாசத்தின் மேன்மைகளை தமது சீடர்களுக்கு போதித்தார்.

    தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோ:3:16)என்று வேதம் கூறுகிறது. இன்றைய உலகில் நாம் தேடும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் இயேசுவின் மேல் வைக்கும் விசுவாசம் நமக்கு நல்ல பதிலைப் பெற்றுத்தரும்.

    இன்றைக்கும் தேவனிடத்தில் அற்புதங்களையும், அடையாளங்களையும் நாம் பெற்றுக்கொள்ள தகுதியோ, அந்தஸ்தோ தேவை இல்லை. நாம் விசுவாசத்தோடு வேண்டிக்கொண்டாலே போதும். இயேசு சிலுவையில் அறையப்பட்டு இருந்த போது, அங்கு கூடி இருந்த மக்கள் கூறும் போது:-,

    மற்றவர்களை ரட்சித்து தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை. இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும். அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத்தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் (மத்:27:42,43) என்றனர். சுற்றி இருந்த ஜனங்கள் ஏளனமாய் பேசின போதிலும், நம்பிக்கையற்ற வார்த்தைகளைக் கூறின போதும் தம்மை மரணத்திலிருந்து எழுப்ப வல்லமையுள்ள தேவன் மேல் இயேசு விசுவாசமுள்ளவராகவே இருந்தார்.

    நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று வேதம் சொல்லியிருக்கிறபடி இயேசு பிதாவின் மேல் விசுவாசமாக இருந்தப்படியால் 3-ம் நாளிலே உயிர்தெழுந்தார் என்று நாம் பார்க்கிறோம். கிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் நாம் எதைக்கேட்டாலும் அதை செய்ய அவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார். எனவே தேவபிள்ளைகளே, இந்த தவக்காலத்தில் அவரை விசுவாசிப்போம்,தேவனுடைய அற்புதத்தைப் பெற்றுக்கொள்வோம்.

    சகோ: ஜோசப், வீரபாண்டி. 
    Next Story
    ×