என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    நவ நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அன்னையின் பெருவிழாவான 8-ந்தேதி ஆடம்பர தேர் ஆலய முற்றத்தில் பக்தர்களின் வழிபாட்டுக்கு அலங்கரித்து வைக்கப்படுகிறது.
    அரியாங்குப்பத்தில் பிரசித்திபெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 331-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக சிறப்பு திருப்பலி நடைபெற்றது. புதுவை- கடலூர் உயர்மறை மாவட்ட முதன்மை குருவான ஆயரின் பிரதிநிதி அருள் தந்தை அருளானந்தம் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆலய பங்குத்தந்தை அந்தோணிரோச் தலைமை தாங்கினார்.

    இதில் பங்கு நிர்வாகக்குழு, பங்கு மக்கள் திரளான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கலந்துகொண்டனர். கைகளை சுத்தம் செய்துகொள்ள கிருமிநாசினியும் வழங்கப்பட்டது.

    நவ நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அன்னையின் பெருவிழாவான 8-ந்தேதி ஆடம்பர தேர் ஆலய முற்றத்தில் பக்தர்களின் வழிபாட்டுக்கு அலங்கரித்து வைக்கப்படுகிறது.

    ஆண்டு பெருவிழா வருகிற 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் அன்று காலை 6 மணிக்கு திருப்பலி நடக்கிறது. காலை 7.30 மணிக்கு அப்போஸ்தலிக்க ஆயர் பீட்டர் அபீர் தலைமையில் திருப்பலி நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து மாலை 6 மணி திருப்பலிக்குப் பின் ஆலய உள்புறத்தில் மட்டும் ஆடம்பர பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. நோய்த்தொற்று பரவல் காரணமாக அரசு விதிகளுக்கு உட்பட்டு ஆடம்பர தேர் பவனி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து 13-ந்தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை அந்தோணி ரோச் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
    மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் 442-வது ஆண்டு மகிமை திருவிழா நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வெளியூர் பக்தர்கள் விழாவில் பங்கேற்க அனுமதியில்லை.
    மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் 442-வது ஆண்டு மகிமை திருவிழா நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் முதல் திருப்பலியும், காலை 6.30 மணிக்கு ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, திருச்சிலுவை ஆசீர் வழங்கப்படும். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருச்சிலுவை திருத்தலத்திலும், பங்கு ஆலயத்திலும் திருப்பலிகள் நடைபெறும்.

    விழாவில்முக்கிய நாளான 13-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலியும் பின்பு ஐந்து திருக்காய சபையின் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாலை 6.30 மணிக்கு பெருவிழா மாலை ஆராதனையும். 14-ந்தேதி திருச்சிலுவைமகிமை பெருவிழாவை யொட்டி அதிகாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்திலும், திருச்சிலுவை திருத்தலத்திலும் திருப்பலிகள் நடைபெறும்.

    காலை 6 மணிக்கு திவ்விய ஐந்து திருக்காய திருச்சபையினர் பவனி வந்து மகிமை பெருவிழா ஆராதனைகள் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசிர் மாலை 5.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் கொடியிறக்க திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வெளியூர் பக்தர்கள் விழாவில் பங்கேற்க அனுமதியில்லை.
    வடுகர்பேட்டை புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் குறைந்த அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    திருச்சி மாவட்ட வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் வடுகர்பேட்டை புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை நடைபெற்றது.

    கொடியினை சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயர் கொடியினை புனிதப்படுத்தி கொடியேற்றி திருவிழாவினை துவக்கி வைத்தார். விழாவில் பங்கு தந்தை தங்கசாமி உதவி பங்குத்தந்தை அருளப்பன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வியாகுல ஈஸ்வரி ஜெயக்குமார், துணைத்தலைவர் அலெக்ஸ் செல்வராஜ் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் குறைந்த அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    நாம் இறைவனின் பிள்ளைகள் என்பதையும், உலகில் நேர்மையுடன் வாழ்ந்து, நிலைவாழ்வைப் பெறுவதற்கே உலகில் பிறந்துள்ளோம் என்பதையும் அறிகிறோம்
    கலிலேயக் கடற்கரையில் திரளான மக்களுக்கு முன் இயேசு கூறிய விண்ணரசின் உவமைகளில் கடுகு விதை உவமையும் ஒன்று.

    உவமை

    இயேசு, “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்” என்று கூறினார்.

    உவமை கருத்து

    உலகில் செல்வம், கல்வி, பதவி போன்றவையே நம் வாழ்வின் முக்கிய நோக்கமாக இருக்கின்றன. உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக, நாம் இவைகளை நாடித் தேடி ஓடுகிறோம். இவைகளுக்கு நடுவே, இயேசுவின் நற்செய்தி கடுகு விதை போன்று சிறிதாக இருக்கிறது. இறையாட்சியை வாழ்வின் இலக்காக எவரும் கொள்வதில்லை. அதற்கு நாம் முன்னுரிமை அளிப்பதில்லை. அதனால் நற்செய்தி நம் உள்ளத்தில் பதிவதில்லை. ஆனால், சிறிய கடுகு விதையாக நம் மனதிற்குள் விழும் நற்செய்திதான், நமக்கு நிலை வாழ்வை வழங்கக்கூடியது.

    ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். நமது உள்ளமே வயல். இயேசுவின் நற்செய்தியே கடுகு போன்ற விதை. உலக தேவைக்காக வாரம் முழுக்க வேறு பணிகளில் ஈடுபடும் நாம், ஓய்வு நாட்களில் மட்டும் இயேசுவின் நற்செய்தியைக் கேட்கிறோம் அல்லது வாசிக்கிறோம். இயேசுவின் வார்த்தை நம் உள்ளத்திலுள்ள ஒரு சிறு இடத்தில், கடுகு விதையை போல பதிவாகிறது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து, எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகிறது. இயேசுவின் வார்த்தை உள்ளத்தில் பதிவாகி இருப்பதால், செயல்படத் தொடங்குகிறது.

    நாம் இறைவனின் பிள்ளைகள் என்பதையும், உலகில் நேர்மையுடன் வாழ்ந்து, நிலைவாழ்வைப் பெறுவதற்கே உலகில் பிறந்துள்ளோம் என்பதையும் அறிகிறோம். உலகின் மற்ற தேவைகளும் அவற்றின் மீது கொண்ட நாட்டமும் குறைகின்றன. நற்செய்தியை கடைப்பிடித்து இறையாட்சியைப் பெறுகிறோம்.

    வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும். அதுபோல நம் உள்ளத்தில் இயேசுவின் வார்த்தை வளர்ந்து, அதன் வாயிலாக அன்பு, பரிவு, தன்னடக்கம் பணிவு போன்ற தூய ஆவியின் கனிகள் நம் வாழ்வில் வெளிப்படுகின்றன. துன்பத்தில் தவிப்போருக்கும் தன்னலமின்றி உதவுகிறோம். இதனால், நம் வாழ்வு நம்மை சுற்றியுள்ளோருக்கும் பயனுள்ளதாக அமைகிறது. நம் வாழ்வு 30, 60, 100 என்ற அளவில் இறையாட்சியாக நிறைவு பெறுகிறது.

    இந்த உவமையை கூறி முடித்த இயேசு, தம் சீடரிடம் “உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம் மலையைப் பார்த்து “இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ” எனக் கூறினால் அது பெயர்ந்து போகும்” என்றும், “இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்” என நம்பிக்கையினால் உலக இச்சைகளை விலக்க முடியும் என்று வலியுறுத்தினார்.
    பூண்டிமாதா பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம்( செப்டம்பர்) 9-ந் தேதி விழா நடக்கிறது.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம்( செப்டம்பர்) 9-ந் தேதி விழா நடக்கிறது.

    கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் சாம்சன், உதவி பங்குத்தந்தையர்கள் இனிகோ, ஜான்சன், ஆன்மிகதந்தை அருளானந்தம் மற்றும் பேராலய பணியாளர்கள் இணைந்து ஜெபமாலை பாடல்களுடன் திருக்கொடியை பேராலயத்தை சுற்றி எடுத்து வந்தனர்.

    பின்னர் கொடியை புனிதம் செய்து ஏற்றி பேராலய அதிபர் பாக்கியசாமி ஏற்றினார். வழக்கமாக பூண்டி மாதா பேராலய வளாகத்தில் திருவிழாவின் போது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று பூண்டி மாதா பேராலய வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. பேராலய வளாகத்தில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி, சப் இன்ஸ்பெக்டர் சார்லிமேன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பேராலயத்துக்கு வந்த பக்தர்களை திருப்பி அனுப்பினர்.
    கொரோனா ஊரடங்கினால் இந்த ஆண்டு திருவிழா மக்கள் பங்கேற்பின்றியும் கொடிப்பவனி, நற்கருணைப்பவனி, சப்பரப்பவனி ஆகியவை நடைபெறாது.
    தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாள் நேற்று மாலை 5.30 மணிக்கு திருத்தல அதிபர் அந்தோணி ஜோசப் தலைமையில் அன்னையின் கொடியேற்றமும், சிறப்பு திருப்பலியும் நடந்தது. 7-ந்தேதி வரை மாலை 6 மணிக்கு நவநாள் திருப்பலி நடக்கிறது. மேலும் இதன் முக்கிய விழாவான செப்டம்பர் 8-ந்தேதி புதன்கிழமை ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 21-வதுஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கு கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

    9-ந்தேதி வியாழக்கிழமை காலை 6.30 ஆரோக்கிய அன்னையின் கொடி பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை எஸ்.வி.டி.அதிபர் அந்தோணி ஜோசப்அடிகளார், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் அடிகளார், உதவி பங்குத்தந்தை குழந்தை யேசுதாஸ் அடிகளார் மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.

    மேலும் கொரோனா ஊரடங்கினால் இந்த ஆண்டு திருவிழா மக்கள் பங்கேற்பின்றியும் கொடிப்பவனி, நற்கருணைப்பவனி, சப்பரப்பவனி ஆகியவை நடைபெறாது. அரசு விதித்துள்ள வழிமுறைகளை கடைபிடித்து நடத்திடவும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லாததால் வீட்டிலிருந்தே வலைதளம் மூலம் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    திருச்சி மேலப்புதூரில் பிரசித்தி பெற்ற புனித மரியன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,
    திருச்சி மேலப்புதூரில் பிரசித்தி பெற்ற புனித மரியன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது, தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தி ஆரோக்கியமாதா உருவம் பதித்த கொடியை ஏற்றி வைத்தார்.

    கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து குறைந்த அளவிலானவர்களே கலந்து கொண்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 8-ந்தேதி தேர்பவனி நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடத்தப்படுகிறது.
    தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா மக்கள் பங்கேற்பு இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ் கலந்து கொண்டு அன்னையின் கொடியை ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலிகளும் மக்கள் பங்கேற்பு இன்றி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 5-ந் தேதி மாலை 6 மணிக்கு திவ்விய நற்கருணை பெருவிழா, தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் நடக்கிறது. திருவிழா நிகழ்ச்சிகள் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யு.டியூப் சானலிலும் ஒளிபரப்பப்படுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெரோசின் அ.கற்றார், மற்றும் பக்த சபைகள், பங்கு பேரவையினர் இணைந்து செய்து உள்ளனர்.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். செப்டம்பர் 7-ந் தேதி தேர்பவனி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான பெருவிழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடு்த்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி அடுத்த மாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் ஆண்டு பெருவிழா நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஆண்டு பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. எனவே பக்தர்கள் இன்றி நாளை கொடியேற்றம் நடைபெறும் என பேராலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் அனைத்து வழிபாடுகளும் பூட்டப்பட்ட பேராலயத்துக்குள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா நிகழ்ச்சிகளை இணையதளம், தொலைக்காட்சி மூலமாக தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவுபடியும், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பரிந்துரையின்படியும், வேளாங்கண்ணி செயல் அலுவலர் பொன்னுசாமி அறிவுறுத்தலின்படியும் வேளாங்கண்ணி ஆரியநாட்டுத்தெரு, கடற்கரை சாலை, சர்ச் சாலை, உத்திரியமாதா கோவில் தெரு, செபஸ்தியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், பலசரக்கு கடைகள், பேன்சி ஸ்டோர்கள், மெழுகுவர்த்தி கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நேற்று முதல் மூடப்பட்டன.

    மேலும் பக்தர்கள் வருவதை தடுக்க பேராலயம் செல்லக்கூடிய முக்கிய வழித்தடமான கிழக்கு கடற்கரை சாலை ஆர்ச் உள்பட 19 இடங்களில் போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேளாங்கண்ணி பஸ் நிலையத்திற்கு செல்லவும் அனுமதி இல்லை. அதேபோல் கடற்கரைக்கு செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஆண்டு பெருவிழாவையொட்டி வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. மேலும் மின்விளக்குகளால் கொடிமரமும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலய ஆண்டு விழா 29-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்க வேளாங்கண்ணி பேராலய விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் வேளாங்கண்ணி மாதா பேராலய அதிபர் பிரபாகர் நேற்று பேராலய விழாவிற்கான பத்திரிகையை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

    தற்போது கொரோனா பரவலை தடுக்க பேராலய விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நோய் தொற்று பரவாமல் தடுக்க அரசு மற்றும் திருச்சபை வழங்கும் ஒழுங்கு நடைமுறைகளை பேராலய நிர்வாகம் கடைபிடித்து 29-ந் தேதி வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு விழா கொடியேற்றும் நிகழ்ச்சிபக்தர்கள் இன்றி நடைபெறும். திருப்பலிகள் பேராலயத்துக்குள் நடைபெறும்.

    தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோசின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படியும், தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும் கொடியேற்றம், நவநாள் மற்றும் திருப்பலிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் யாரும் நேரில் வர வேண்டாம். விழா நிகழ்ச்சிகள் பேராலய இணையதளம் மற்றும் தொலைக்காட்சி, யூடியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். இதன் மூலம் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது பங்கு தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    வருகிற 29-ந்தேதி தொடங்கும் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழாவை தொலைக்காட்சி-சமூக வலைதளங்களில் கண்டுகளிக்க வேண்டும் என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா தொற்றுபரவல் காரணமாக அனைத்து மத வழிபாட்டுத்தளங்களிலும் வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்கள் பிரார்த்தனை செய்ய மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா வருகிற 29-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கானோர் பாதையாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் வந்து செல்வார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பக்தர்கள் பாதையாத்திரையாகவும், பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலமாக வருவதை தவிர்க்க வேண்டும்.

    இதற்கு பதில் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஆராதனை நிகழ்ச்சிகளை, பக்தர்கள் தொலைக்காட்சி, செய்திதாள்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக கண்டுகளிக்கலாம். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பாதையாத்திரையாகவோ, வாகனங்கள் மூலமாகவே பக்தர்கள் வருவதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கோகூர் அந்தோணியாரின் திருவிழாவிற்கு நம்பிக்கையோடு வாருங்கள். உங்கள் வேண்டுதல்களை கோகூர் அந்தோணியார் நிச்சயம் நிறைவேற்றி தருவார்.
    நாகப்பட்டினம் மறை வட்டத்திற்கு இரண்டு பெருமைகள் உண்டு, ஒன்று வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலம், மற்றொன்று கோகூர் புனித அந்தோணியார் திருத்தலம். ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும், ஜூன் மாதம் நடைபெறும் கோகூரில் கோவில் கொண்டுள்ள கோடி அற்புதர் புனித அந்தோணியாரின் பெருவிழாவிலும் ஆயிரகணக்கான மக்கள் கூடுவதையும், ஜெபிப்பதையும் பார்ப்போர் பரவசம் அடைகின்றனர். கண்டோர் சாட்சி கூறுகின்றனர். நாகையிலிருந்து மேற்கே திருவாரூர் நெடுஞ்சாலையில் கீழ்வேளூரிலிருந்து வடக்கே சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் கோகூர் புனித அந்தோணியார் திருத்தலம் உள்ளது. இந்த கிராமத்தில் தான் புனித அந்தோணியார் குடிகொண்டு அற்புதங்கள், அதிசயங்கள் செய்து வருகிறார்.

    கோகூர் பெயர்காரணம் :

    கோகூரின் பழைய பெயர் "பனந்தோப்பு". கோவூர் கிழார் என்னும் பெரியவர் இங்கு தங்கி இருந்ததால் காலப்போக்கில் அது மருவி அவர் பெயரிலே கோகூர் என பெயர்பெற்றது. இவருக்கு பிறகு "வெள்ளை புடவை கார அம்மா " என்னும் ஒருவர் இங்கு தங்கி அறப்பணிகள் செய்து வந்தார், ஆனால் காலப்போக்கில் இங்கிருந்து மறைந்துவிட்டார் என்பது செவிவழி செய்தி.

    கோகூரில் கோவில் வந்தது எப்படி:

    கி.பி 1837 ஆண்டு வளம் கொழிக்கும் வற்றா நதியான வெட்டாற்றில் முதியவர் ஒருவர் தூண்டில் போட்டுகொண்டு இருந்தார், அவ்வேளையில் புனித அந்தோணியார் சொருபம் ஒன்று நீரில் மிதந்து துண்டிலை சுற்றி சுற்றி வந்தது, அந்த முதியவர் அதை ஒதுக்கிவிட்டு தூண்டில் போட்டார், ஆனால் மீண்டும் மீண்டும் அந்த அந்தோணியார் சொருபம் தூண்டிலை சுற்றி வர வியப்படைந்த அவர் சொரூபத்தை தன் வீட்டுக்கு கொண்டுவந்தார், அன்று இரவு அவர் தூங்கும் போது, கனவில் அவர் பெயரை சொல்லி கோகூரில் தனக்கு ஒரு கோவில் கட்டவும், நான் அந்தோணியார் என்றும் கூறியது. கண் விழித்த அவர் காலையில் ஊர் மக்களிடம் நடந்ததை சொல்லி, எல்லோரின் உதவியுடன் முதன்முதலில் கீற்று கோவில் கட்டி புனித அந்தோணியார் சொருபத்தை அதில் வைத்து வழிபட்டு வந்தனர், அந்த புதுமை வழங்கும் புனித அந்தோணியார் சொருபம் இன்று ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
    ×