என் மலர்
கிறித்தவம்
நம் வாழ்வில் எந்த காரியத்தை நாம் செய்ய வேண்டுமானாலும் ‘அது தேவசித்தமா?’ என்பது தான் முக்கியம்.
கர்த்தருக்குள் பிரியமானவர்களே, இந்த நாட்கள் படிக்கிற பிள்ளைகளின் வாழ்வில் மிகமிக முக்கியமான நாட்கள். பெற்றோருடைய வாழ்விலும் முக்கியமான நாட்கள்.
எந்த பள்ளியில் அல்லது கல்லூரியில் பிள்ளைகளை சேர்ப்பது?, எந்த படிப்பில் சேர்க்க வேண்டும்?, கல்விக் கட்டணம் எவ்வளவு கட்டவேண்டுமோ தெரியவில்லையே என பலதரப்பட்ட குழப்பங்கள் பெற்றோர்களிடம் காணப்படும். இதில், தேவசித்தம் எது என்பதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையே என பாரத்தோடும், கேள்விகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிற அன்புப் பெற்றோர்களே இச்செய்தியை கவனமாக வாசியுங்கள்.
தங்கள் பிள்ளைகளின் திருமண காரியம் மற்றும் வேலை காரியம், வீடு கட்டுதல் போன்ற முக்கியமான முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் உள்ள அன்பு சகோதரனே, சகோதரியே, இந்த மாதம் உங்கள் வாழ்வில் ஒரு அற்புதத்தை தேவன் செய்யப் போகிறார். எனவே ஒரு எதிர்பார்ப்போடு இச்செய்தியை வாசியுங்கள்.
தேவ சித்தமே முக்கியம்
நம் வாழ்வில் எந்த காரியத்தை நாம் செய்ய வேண்டுமானாலும் ‘அது தேவசித்தமா?’ என்பது தான் முக்கியம். அவருடைய சித்தம் நம் வாழ்வில் அல்லது நம் பிள்ளைகள் வாழ்வில் நடக்கும் போது தான் நம் வாழ்க்கை அல்லது நம் பிள்ளைகளின் எதிர்காலம் ஆசீர்வாதமாயிருக்கும். எனவே ஆண்டவருடைய சித்தத்திற்கு நம்மை முதலாவது அர்ப்பணிக்க வேண்டும்.
(சங்.37:5)–யை வாசித்துப் பாருங்கள். ‘உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்’.
ஆண்டவருடைய கரத்தில் நம்மை அர்ப்பணித்து அவருடைய சித்தம் நம் வாழ்வில் நிறைவேறும்படி நம்பிக்கையோடு காத்திருக்கும்போது, கர்த்தர் நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார்.
தேவ சித்தத்திற்கு அர்ப்பணியுங்கள்
மரியாளிடத்தில் தேவதூதன் வந்து அவள் மூலமாய் இயேசு இந்த உலகில் வெளிப்படப்போவதை அறிவித்தவுடன் மரியாள் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?
‘இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது’. (லூக்.1:38)
மரியாள் தன்னை ஆண்டவருடைய சித்தத்திற்கு அர்ப்பணித்ததால் தான் அவள் மூலமாய் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்பட்டார். அதுபோலவே சிறிய காரியமானாலும், பெரிய காரியமானாலும் அவருடைய சித்தத்துக்கு நம்மை அர்ப்பணிக் கும்போது நாம் எதிர்பார்த்திருக்கிற, காத்திருக்கிற ஆசீர்வாதங்களை நமக்குத் தருவார். இதன் மூலம் தேவ நாமம் மகிமைப்படும்.
தேவ சித்தத்தின்படி ஜெபியுங்கள்
இன்று அநேகர் தங்கள் விருப்பப்படி எல்லாம் நடைபெறவேண்டும் என்ற ஆசையோடு அதுவே தேவசித்தமாக இருக்கட்டும் என ஜெபிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஜெபம் ஒருநாளும் கேட்கப்படாது. ஏனெனில் வேதம் சொல்லுகிறது:
‘நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிக்கொடுக்கிறார் என்பதே அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்’. (1 யோவா.5:14)
எனவே நாம் ஜெபிக்கும்போது ‘உம் சித்தம் எங்கள் குடும்பத்தில் வெளிப்படுவதாக’ என ஜெபித்தால் நிச்சயம் நம் ஆண்டவர் நம் ஜெபத்திற்கு பதில் தருவார். நம் வாழ்வும் சமாதானமாக அமையும்.
தேவசித்தத்தின்படி நம் வாழ்க்கை அல்லது நம் பிள்ளைகளின் வாழ்க்கை அமையுமானால் அதைப் போல ஒரு மேலான ஆசீர்வாதம் வேறொன்றுமில்லை. எனவே தேவசித்தத்துக்கு உங்களை அர்ப்பணியுங்கள். தேவ சித்தம் நிறைவேற காத்திருங்கள், ஜெபியுங்கள், அற்புதங்களைக் காண்பீர்கள்.
சகோதரி கிறிஸ்டினா ராபின்சன்.

உவரி அந்தோணியார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
தென் தமிழகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் புகழ் பெற்றது, நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி அந்தோணியார் ஆலயம். இந்த ஆலயத்தில் அந்தோணியார் நினைவுநாளையொட்டி ஆண்டுதோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 13 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் ஆலயத்தில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் மறையுரையும் நடந்தது. 12-ம் திருநாளன்று இரவு சப்பர பவனி நடந்தது. 13-ம் திருநாளன்று காலையில் திருப்பலியும், அதனை தொடர்ந்து கொடி இறக்கமும் நடந்தது.
அன்று இரவில் திவ்ய நற்கருணை பவனி, ஆசீர்வாத ஜெபம் முதலியவை நடைபெற்றது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் மற்றும் ஊர் பொதுமக்கள், நிதி குழுவினர் செய்திருந்தனர்.

நாகை அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகை முதல் கடற்கரை சாலையில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
அதைதொடர்ந்து திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான பேர் கலந்து கொண்டனர். அதைதொடர்ந்து விழா நாட்களில் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, செபமாலை, நவநாள் செபம், சிறிய தேர் பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர் பவனி வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. அதைதொடர்ந்து 26-ந்தேதி ஆடம்பர கூட்டு பாடல் திருப்பலியும், தேர் பவனியும், மாலை கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

கடியபட்டணம் தூய பேதுரு பவுல் ஆலய நூற்றாண்டு திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கடியபட்டணம் தூய பேதுரு பவுல் ஆலய நூற்றாண்டு திருவிழா 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி அன்றைய தினம் மாலை 4 மணிக்கு திருக்கொடி பவனியும், 6 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலியும் நடக்கிறது.
இதற்கு மறை மாவட்ட முதன்மை பணியாளர் சாலமோன் தலைமை தாங்குகிறார். கோட்டார் அருட்பணியாளர் குணபால் மறையுரையாற்றுகிறார். இரவு பக்த சபைகளின் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 2-ம் நாள் முதல் 6-ம் நாள் திருவிழா வரை தினமும் மாலை செபமாலை, திருப்பலி, இரவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
7-ம் நாள் காலை 5 மணிக்கு தூய ராயப்பர் சின்னப்பர் ஆலயத்தில் திருப்பலியும், 5.30 மணிக்கு புனித அந்தோணியார் ஆலயத்திலும், 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 10 மணிக்கு நற்கருணை ஆராதனை, மாலை நற்கருணை ஆசீர், இரவு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழாவும் நடக்கிறது. 8-ம் நாள் காலை நோயாளிக்கான சிறப்பு திருப்பலியும், 9-ம் நாள் மாலை இரவு 7 மணிக்கு வாணவேடிக்கையும், 7.30 மணிக்கு நூற்றாண்டு சிறப்பு தேர்ப்பவனியும் நடக்கிறது.
10-ம் நாள் காலை 5.30 மணிக்கு திருப்பலி, 7 மணிக்கு பெருவிழா திருப்பலியும் நடக்கிறது. இதில் கோட்டார் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். இரவில் நன்றி வழிபாடும், நற்கருணை ஆசீர் மற்றும் இன்னிசை கச்சேரி நடக்கிறது.
முன்னதாக நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 19-ந் தேதி காலை 10 மணிக்கு ‘புற்று நோயில்லா குமரி மாவட்டம் கடியபட்டணம்‘ என்ற தலைப்பில் 1000 பேர் பங்கேற்கும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் கரோலின் கீதா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை கிங்ஸ்லி ஜோன்ஸ், இணைபங்குதந்தை சைமன், பங்கு பேரவை தலைவர் ஜோசப் சுந்தர், செயலாளர் கார்மேலியன், பொருளாளர் மார்ட்டின் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

செஞ்சி புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி சிறப்பாக நடந்தது.
செஞ்சி நகரம் ஆர்.சி. கிருஷ்ணாபுரத்தில் சிங்கவரம் சாலையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் தேர்பவனி நடந்தது. காலையில் சிறப்பு பிரார்த்தனையும், மாலையில் திருப்பலியும் நடந்தது.
பின்னர் இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த தேர் பவனி வட்டார முதன்மை குரு பிச்சை முத்து தலைமையில் நடந்தது. செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் நடந்த ஆடம்பர தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் கிராமத்தில் நூற்றாண்டு விழா கண்ட புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5 - ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி நடைபெற்று வந்தது.
மேலும் பொருத்தனை தேர்பவனி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் புதுச்சேரி - கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் பெருவிழா திருப்பலி நடைபெற்றது.
இதையடுத்து இரவு 11 மணிக்கு ஆலய அதிபரும், பங்கு தந்தையுமான பால்ராஜ் தலைமையில் பங்கு தந்தையர்களான குருமார்கள், காரியக்காரர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஜெபவழிபாடு நடத்தி ஆடம்பர தேர்பவனியை தொடங்கி வைத்தனர். இதில் முதலில் புனித சூசையப்பர் தேரும், 2 - வது புனித மரியாள் தேரும், 3 - வதாக புனித அந்தோணியார் தேரும் வரிசையாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நேற்று காலை ஆலயத்தை வந்தடைந்தது.
இதில் கடலூர், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, திருச்சி, நாகர்கோவில் உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா ஆகிய வெளிமாநிலங்களை சேர்ந்த கிறிஸ்தவர்களும் திரளாக கலந்து கொண்டு புனித அந்தோணியாரை வழிபட்டனர்.
இந்த தேர்பவனி நிகழ்ச்சிக்காக சின்னசேலம் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பாரம்பரிய முறைப்படி குடும்பத்தினருடன் மாட்டுவண்டிகளில் ஆலயத்துக்கு வந்தனர். தேர்பவனி முடிந்ததும் ஆலய அதிபர் பால்ராஜ் தலைமையில் திருப்பலி நடத்தப்பட்டு விழா கொடி இறக்கப்பட்டது.

தன்னை நம்பியவர்களை என்றும் கைவிட மாட்டேன் என்பதை இயேசு உணர்த்திய நிகழ்வு.
இலாசர் இயேசுவின் நண்பர். அவருடைய சகோதரிகள் மார்த்தா, மரியா இருவரும் இயேசுவின் போதனைகளின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தவர்கள்.
இலாசர் நோய்வாய்ப்பட்டான். அந்த தகவல் இயேசுவிடம் பரிமாறப்பட்டது. இயேசு தொலைதூரத்தில் இருந்தார், அந்த செய்தியைக் கண்டுகொள்ளவில்லை.
சீடர்கள் அவரிடம், ‘போதகரே... உமது நண்பன் நோயுற்றிருக்கிறான்’.
‘பயப்படாதீர்கள், சாவில் முடிவதற்கான நோயல்ல இது. கடவுளின் மாட்சி விளங்குவதற்கான நோய்’ என்று சொல்லி இயேசு அங்கேயே தங்கினார்.
இரண்டு நாட்களுக்குப் பின் இயேசு சீடர்களை அழைத்து, ‘வாருங்கள் போவோம்’, என்றார்.
‘எங்கே செல்கிறோம்?’
‘இலாசரைப் பார்க்க’
‘ரபி... அங்கே சென்றால் யூதர்கள் நம்மீது தாக்குதல் நடத்துவார்கள்....’
‘வாருங்கள், இலாசர் தூங்குகிறான். அவனை எழுப்பவேண்டும்’ என்றார் இயேசு.
‘தூங்குகிறானா? அது நல்லது தானே போதகரே, தூங்கினால் அவன் நலமடைவான்’.
‘எனதருமை சீடர்களே... இலாசர் இறந்து விட்டான், வாருங்கள் போவோம்...’
அதிர்ந்த சீடர்கள் இயேசுவோடு சேர்ந்து பெத்தானியாவுக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் பெத்தானியாவை அடைந்த போது இலாசரைக் கல்லறையில் வைத்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது.
இயேசு வந்து கொண்டிருக்கிறார் என்னும் செய்தியைக் கேட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு விரைந்தோடினாள்.
‘ஆண்டவரே... நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்...’ என்று அழுதாள்.
‘மார்த்தா... கவலைப்படாதே. இலாசர் உயிர்த்தெழுவான்’, இயேசு சொன்னார்.
‘ஆண்டவரே.. இறுதி நாளில் எல்லோரும் உயிர்த்தெழும்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்...’ அவள் அழுகை அடங்கவில்லை.
‘மார்த்தா... உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னை நம்புகிறவன் இறந்தாலும் வாழ்வான். இதை நீ நம்புகிறாயா?’
‘நம்புகிறேன் ஆண்டவரே. நீர் கடவுளின் மகன். நீர் சொன்னால் நடக்காதது என்று எதுவுமே இல்லை. அதை நான் முழுமையாக நம்புகிறேன்’.
மரியாவுக்கும் செய்தி கிடைக்க அவரும் விரைந்தோடி வந்தார்.
மரியாவின் புலம்பல் இயேசுவின் மனதைக் கரைத்தது. அவருடைய கண்களில் கண்ணீர்.
‘பார்... இவர் இலாசரை எந்த அளவுக்கு நேசித்திருக்கிறார். இவர் அழுவதை நாம் கண்டதேயில்லையே’ யூதர்கள் பலவாறாகப் பேசிக்கொண்டார்கள்.
இயேசுவோ மரியாவிடம் ‘இலாசரை எங்கே வைத்தீர்கள்? அவனுடைய கல்லறை எங்கே இருக்கிறது?’ என்று கேட்டார்.
‘வந்து பாரும் இயேசுவே’ என்று மரியா உடைந்த குரலில் சொல்ல இயேசுவின் கண்களில் மீண்டும் கண்ணீர்.
இயேசு கல்லறையின் முன்னால் வந்து நின்றார். அந்தக் காலத்தில் கல்லறை என்பது ஒரு குகை போன்று இருக்கும்.
இறந்துபோனவனை துணிகளால் சுற்றி நறுமணத் தைலம் பூசி உள்ளே வைத்து அதன் வாசலை எளிதில் நகர்த்த முடியாத மிகப் பெரிய பாறாங்கல்லைக் கொண்டு மூடி வைப்பார்கள். இலாசரும் அப்படி ஒரு குகையில் தான் அடக்கம் செய்யப்பட்டிருந்தான்.
‘கல்லை நீக்குங்கள்’ இயேசு சொன்னார். இலாசரின் சகோதரி மார்த்தாவும் இயேசுவிடம், ‘ஆண்டவரே... நான்கு நாட்களாயிற்றே... நாற்றம் அடிக்குமே’ என்று தழு தழுக்கும் குரலில் சொன்னாள்.
‘நம்பினால் நீ கடவுளின் மாபெரும் செயல்களைக் காண்பாய் என்று நான் சொன்னேனே’ இயேசு அவளைப் பார்த்துச் சொன்னார்.
கல் புரட்டப்பட்டது.
இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து ‘தந்தையே... உமக்கு நன்றி. நீர் எப்போதும் எனக்குச் செவி கொடுக்கிறீர் என்பதை நான் அறிவேன். நீர் தான் என்னை அனுப்பினீர் என்பதை சூழ்ந்திருக்கும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்கிறேன்’ என்றார்.
பின் இயேசு, கல் புரட்டப்பட்ட கல்லறையை நோக்கி உரத்த குரலில் ‘இலாசரே... வெளியே வா’ என்றார்.
இலாசர் வெளியே வந்தான்!
இறந்து போய் நான்கு நாட்களாகக் கல்லறையில் கிடந்த பிணம் உயிர்பெற்று எழுந்து நடந்து வந்துகொண்டிருப்பதைக் கண்ட மக்கள் திடுக்கிட்டுப் பின்வாங்கினார்கள். இலாசரின் உடல் முழுவதும் துணியினால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது.
‘கட்டுகளை அவிழ்த்து அவனை நடக்கவிடுங்கள்’ இயேசு சொன்னார்.
இலாசரின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. நல்ல உடல் நலத்துடன் அவர் இயேசுவின் முன்னால் வந்தார்.
அந்த நிகழ்வைக் கண்ட அனைவருமே இயேசுவை நம்பினார்கள். இயேசுவின் எதிர்ப்பாளர்களுக்கும், ஆலய குருக்கள், மறைநூல் அறிஞர்களுக்கும் இது ஒரு மிகப்பெரிய தோல்வியாய் அமைந்தது.

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் எவ்வாறு தோன்றியது என்பது பற்றிய சுவையான வரலாறு
இறைவனின் நேரடித் தொடர்பு அறுந்துவிட்டபோது, அவர், தேவதூதர்கள் மூலமாக நம்முடன் தொடர்பு கொண்டார்.
அவ்வாறு எழுதப்பட்ட வேதாகமத்தை (பைபிள்) பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு துறைகளைச் சார்ந்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு எழுதினார்கள்.
வேதாகமத்தை வேதவல்லுநர்கள் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டாகப் பிரித்துள்ளனர். பழைய ஏற்பாட்டின் காலம்: பழைய ஏற்பாட்டில் சிறிதும், பெரிதுமாக 39 புத்தகங்கள் உள்ளன. முதன்முதலாக எழுதப்பட்ட புத்தகம் ‘யோபு’. இது கி.மு.2150ல் எழுதப்பட்டது. மற்ற 38 புத்தகங்களும் கி.மு.1500 முதல் கி.மு.400 வரை எழுதப்பட்டது.
பழைய ஏற்பாட்டை பிரமாணம், தீர்க்கதரிசனம், வேத எழுத்துக்கள் என்று மூன்று வகையாக பிரித்துள்ளனர். மொழி: 39 புத்தகங்களும் எபிரேய மொழியில் எழுதப்பட்டுள்ளது. எஸ்றா, எரேமியா மற்றும் தானியேல் புத்தகங்களில் சில பகுதிகள் ‘அரெமிக்’ மொழியில் எழுதப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து பேசிய மொழி இதுவே.
ஆசிரியர்கள்: ஆமோஸ் போன்று கூலி வேலை செய்பவர் முதல் தாவீது போன்ற அரசர்கள் வரை பல குணங்களுடைய, பல தொழில்களில் ஈடுபட்ட தேவனுடைய பிள்ளைகள் தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதினார்கள். பத்து கற்பனைகளை மட்டும் தமது சொந்த விரலினால் கடவுள் எழுதினார். ”ஆண்டவர் வசனம் தந்தார்.
அதை பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி” (சங்கீதம் 68:11) என்ற வசனத்தின்படி, 32 வித்தியாசமான மனிதர்கள் ஒரே கருத்தான ”நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே” (மாற்கு 12:29) என்ற கருத்தை மட்டும் எழுதியுள்ளார்கள்.
புதிய ஏற்பாடு காலம்: புதிய ஏற்பாட்டின் காலம் கி.பி.50 முதல் கி.பி.100 வரை ஆகும். ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குள் 27 புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளது.
‘யாக்கோபின் நிருபம்’ தான் முதலில் எழுதப்பட்ட புத்தகம் ஆகும். புதிய ஏற்பாட்டை சுவிஷேசங்கள், நிருபங்கள், தீர்க்க தரிசனங்கள் என்று மூன்று வகையாக பிரித்துள்ளனர்.
இயேசு கிறிஸ்து ”அரெமிக்” மொழியில் பேசினாலும், புதிய ஏற்பாடு முழுவதும் கிரேக்க மொழியில்தான் எழுதப்பட்டது.
இயேசு கிறிஸ்துவின் சீடர்கள், வைத்தியர், கூடாரத் தொழிலாளி போன்ற பல பணிகளில் ஈடுபட்ட எட்டு (8) வேத அறிஞர்கள் புதிய ஏற்பாட்டை எழுதினார்கள்.
இப்போது எழுத்து வடிவம் உள்ள எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு, அதிக மொழிகளில் அதிக எண்ணிக்கையில் வெளியிடப்படும் புத்தகம் பரிசுத்த வேதாகமமே ஆகும்.

சுண்டம்பட்டி புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி அருகே சுண்டம்பட்டி பதுவை நகரில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அன்று மாலை நவநாள் திருப்பலி, மறையுரை, கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இதை சேலம் சூரமங்கலம் இருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை இருதய செல்வம் நடத்தினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா நேற்று முன்தினம் இரவு வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி காலை 8.30 மணிக்கு திருவிழா கூட்டு பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தர்மபுரி மறை மாவட்ட முதன்மை குரு சூசை தலைமை தாங்கினார். மாலையில் நடைபெற்ற கூட்டு பாடற்பலி நிகழ்ச்சிக்கு தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்கினார்.
இரவு 8 மணிக்கு அலங்கார தேர் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் சுண்டம்பட்டி, கிருஷ்ணகிரி, எலத்தகிரி, ஒரப்பம், கந்திகுப்பம், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சேவியர் செய்திருந்தார். விழாவை முன்னிட்டு நேற்று மாலை நன்றி திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) கொடி இறக்க நிகழ்ச்சியும், நவநாள் திருப்பலியும் நடைபெறுகிறது.

மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் நடந்த ஆண்டு பெருவிழா திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூரில் பழமைவாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் ஜெபவழிபாடு நடைபெற்று வந்தது.
மேலும் புனித அந்தோணியாரின் சொரூபம் தாங்கி பொருத்தனை தேர்பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் 9-வது நாளான நேற்று காலை 8 மணிக்கு புதுச்சேரி-கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் ஆண்டு பெருவிழா திருப்பலி நடந்தது.
தொடர்ந்து பேராயர் டாக்டர் அந்தோணி ஆனந்தராயர் இறையாசி வழங்கினார். இதில் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல், நாகர்கோவில், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேலூர், சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, புதுச்சேரி ஆகிய வெளிமாநிலங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு புனித அந்தோணியாரை வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய அதிபர் பால்ராஜ் தலைமையில் காரியக்காரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

பரங்கிமலை ரெயில் நிலைய சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் 32-வது ஆண்டு பெருவிழா நடந்தது.
சென்னையை அடுத்த ஆலந்தூர், பரங்கிமலை ரெயில் நிலைய சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் 32-வது ஆண்டு பெருவிழா நடந்தது. இதையொட்டி சிறப்பு செபமாலை, நவநாள் ஜெபம், திருப்பலி, நற்கருணை ஆசீர்வாதம் உள்ளிட்டவை நடந்தது.
பின்னர் தூய வேளாங்கண்ணி அன்னையின் கெபி மந்திரிப்பு மற்றும் மாலை பள்ளி திறக்கப்பட்டது. சிறப்பு திருப்பலியை செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன் நடத்தி தேர்பவனியை தொடங்கிவைத்தார்.
இதில் ஆலய பங்குத்தந்தை அருள் ஆனந்த் மற்றும் பங்குப்பேரவை உறுப்பினர்கள், பங்கு மக்கள் கலந்து கொண்டனர். ஆலந்தூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி சென்றது.

மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் இன்று ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் கிராமத்தில் நூற்றாண்டு விழா கண்ட புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, ஜெப வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 8 மணிக்கு புதுச்சேரி- கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் பெருவிழா திருப்பலி நடைபெற உள்ளது.
தொடர்ந்து இரவு 10 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொண்டு புனித அந்தோணியாரை வழிபடுவதற்காக உள்ளூர் பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் மேல்நாரியப்பனூர் கிராமத்திற்கு திரண்டு வருகின்றனர்.
கிறிஸ்தவர்களின் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ் வசதிக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய அதிபரும், பங்கு தந்தையுமான பால்ராஜ் சிறப்பாக செய்து வருகிறார்.