என் மலர்
கிறித்தவம்
ஒன்று, பிரான்ஸ் நாட்டிலுள்ள, மார்க்கரேட் மேரியின் கான்வென்ட் மற்றும் ரீம்ஸ் நகரில் உள்ள கதீட்ரல் சபையிலும், மூன்றாவது, இந்தியாவில் இடைக்காட்டூரிலும் உள்ளது. பிரான்ஸ் நாட்டில், 130 ஆண்டுகளுக்கு முன், மரிய அன்னாள் என்பவர் வாழ்ந்து வந்தார். கடுமையான இதய நோயால் அவதிபட்டு வந்த அவர், பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால், மனமுடைந்த நிலையில், மரணத்தை எதிர் நோக்கி இருந்தார்.
இந்நிலையில், கத்தோலிக்க சபையைச் சேர்ந்த சிலர், 'ஒன்பது நாட்கள் விரதமிருந்து ஆண்டவராகிய இயேசுவை மனமுருகி வழிபட்டால் நோய் தீரும்...' என்று கூறினர். இதை ஏற்றுக் கொண்ட அன்னாள், அவ்வாறே விரதமிருந்து வழிபட துவங்கினார். ஐந்தாவது நாளே உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தார். மறுநாள் டாக்டரிடம் சென்று காண்பித்த போது, இதய நோய் குறைந்து வருவதாக கூறிய அவர், நாளடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விட்டதாக கூறினார்.

இதனால், மகிழ்ச்சியடைந்த அவர், தன் இதய நோயை குணப்படுத்திய ஆண்டவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று எண்ணினார். இச்சமயத்தில், இடைக்காட்டூரில் பங்குத் தந்தையாக இருந்த பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த பெர்டிணன்ட் செல், அங்கு தேவலாயம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக பொருள் தேடி, பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார்.
இதைக் கேள்விப்பட்ட அன்னாள், அதற்காக ஆகும் செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக கூறினார். பின், 'ஆலயத்தை எப்படி நிர்மானிப்பது, ஆண்டவரை எப்படி உருவாக்குவது...' என்று ஆலோசித்தனர். மார்க்ரேட் மேரி என்பவர், 1673 ல் பிரான்சில், பாரலேமோனியால் நகரில் உள்ள கன்னியர் மடத்தில் வாழ்ந்து வந்தார்.
அவர், இயேசு மீது மிகுந்த பற்று கொண்டவர். ஒருநாள், அவர் கனவில், 'ஒவ்வொரு நாளும் மக்கள் படும் துன்பங்கள், துயரங்கள் மற்றும் கஷ்டங்களால் என் மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது பார்...' என்று கூறி, தன் இதயத்தை திறந்து காண்பித்துள்ளார் இயேசு. அதைப் பார்த்த மார்க்ரேட் மேரி அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு எழுந்தார்.
பின், அவரது கூற்றுப்படியே இயேசு, தன் இதயத்தை திறந்து காண்பிக்கும்படியான, திரு இருதய ஆண்டவர் உருவம் உருவாக்கப்பட்டது. புனித அன்னாளிடம் பொருளுதவியும், மார்க்ரேட் மேரியிடம் உருவ படமும் பெற்ற பெர்டினான்ட் செல், இடைக்காட்டூர் வந்து, கட்டுமானப் பணிகளைத் துவங்கினார்.

பிரான்ஸ் நாட்டு, 'கோத்தி' எனும் கட்டடக்கலையின் அடிப்படையில், சுண்ணாம்புடன், கருப்பட்டி மற்றும் இதர பொருட்களின் கலவையால் கட்டடம் கட்டப்பட்டு, 'சம்மனசு' எனப்படும் வானதூதர்கள், 153 பேரின் உருவங்களும் வைக்கப்பட்டன. சுமார், 120 ஆண்டுகளைக் கடந்தும், வானளாவிய உயரத்துடன் காணப்படும் இந்த ஆலயத்தில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என, வழக்கமான விழாக்கள் நடந்தாலும், ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடக்கும் சிறப்பு திருப்பலி மிகவும் விசேஷம்.
இதில், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் என, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொள்வர். இது தவிர, ஏப்ரல் மாத ஈஸ்டர் மற்றும் பாஸ்கு திருவிழாக்களும் நடக்கும். எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், பாஸ்கு திருவிழா நடைபெறும் நேரத்தில், ஒரு வாரத்திற்கு முன், வெளியூரில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரியப்படுத்தி வரவழைப்பர்.
உறவினர்களும் இரு நாட்களுக்கு முன்பே வந்து, பாஸ்கு திருவிழா ஏற்பாடுகளை ஜாதி, மத வேறுபாடின்றி செய்வர். தற்போது இங்கு, வெளி நாட்டினரும் வருகை புரிவதால், தமிழக அரசு, இத்திருத்தலத்தை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது.
ஆலயத்திற்கு எப்படி செல்வது :
சென்னையிலிருந்து மதுரை வந்து, ராமேஸ்வரம் செல்லும் சாலையில் மானாமதுரை அருகே, 40 கி.மீ.,ல் உள்ளது முத்தனேந்தல். இங்கு இறங்கி, மேம்பாலத்தை கடந்தால், இடைக்காட்டூர். திருத்தலத்திற்கு போக, ஆட்டோ வசதிகளும் உள்ளன.
மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 19–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவை மறை மாவட்ட முதன்மை குருஜான் ஜோசப் ஸ்டனிஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத் தார். அதனைத் தொடர்ந்து தினசரி மாலை திருப்பலி, தேர்பவனி, நவநாள், அருளுரை, நற்கருணை, ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவிற்கு சிகரம் வைத்தாற்போல் தேர்த்திரு விழா நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. காலை 8.15 மணிக்கு மேட்டுப்பாளையம் மறை மாவட்ட தலைமை குரு மற்றும் மேட்டுப் பாளையம் அற்புத கெபி ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை ஜேக்கப் தலைமை தாங்கி திருவிழா சிறப்புத் திருப்பலி, முதல் நற்கருணை அருட்சாதனம் வேண்டுதல் தேர் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்கு வினாஸ் தலைமையில் திருவிழா சிறப்பு உறுதி பூசுதல், அருட்சாதனம் வழங்குதல் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதன்பின்னர் இரவு ஆலய பங்கு தந்தை ரோசாரியோ ஆசீர்வதித்து திருவிழா அலங்கார தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாகச்சென்று மீண்டும் ஆலயத்தை இரவு நற்கருணை ஆசீர்வாதத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.
திருவிழா நடக்கும் 10 நாட்களும் பல்வேறு ஆலய பங்குத் தந்தைகள் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி மற்றும் சொற்பொழிவு ஆற்றுவார்கள். அதன்படி 122–வது ஆண்டாக இந்த ஆண்டு நற்கருணைப்பெருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிவகங்கை மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் லூர்துராஜா தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 1–ந்தேதி மாலை மின்னொளியில் தேர்பவனி நிகழ்ச்சி நடைபெறும்.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம், மறை மாவட்ட பொருளாளர் மைக்கேல்ராஜ் உள்பட பல்வேறு ஆலயங்களில் இருந்து வரும் பங்குத் தந்தையர்கள் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்ற உள்ளனர்.
இந்த, விழாவிற்கான ஏற்பாடுகளை திரு இருதய ஆண்டவர் ஆலயப் பொறுப்பாளர் ரெமிஜியஸ், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செசல்ஸ் பேரவை ஆகியோர் செய்து வருகின்றனர்.
இவ்வாலய விழாநாள் கன்னி மரியாவின் பிறந்த நாளும், போர்த்துகீசிய மாலுமி கரை அடைந்த புதுமை நடந்த நாளுமான செப்டம்பர், 08 ஆகும். இவ்வாலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் உள்ள பேராலய வடிவில் கட்டப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.
அன்னை மரியா :
இயேசுவின் தாயான மரியா, உலகின் பல நாடுகளில் வாழும் மக்களிடையே தோன்றி இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் தோன்றிய இடங்களின் பெயரால், லூர்து மாதா, பாத்திமா மாதா, குவாடலூப்பே மாதா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார். உலகின் பல இடங்களில் தோன்றிய அன்னை, இந்தியாவில் தமிழகத்தின் வேளாங்கண்ணியில் காட்சி அளித்ததால் வேளாங்கண்ணி மாதா என்று அழைக்கப்படுகிறார். வேண்டுதல் செய்யும் அனைவரின் உடல், உள்ளக் குறைகளைத் தீர்ப்பதால் ஆரோக்கிய அன்னையாக திகழ்கிறார்.
பால்க்கார சிறுவன் :
அன்னை மரியா, பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் நாகப்பட்டினம் அருகே உள்ள வேளாங்கண்ணியில் காட்சி அளித்தார். வேளாங்கண்ணி என்றால் விவசாய நிலம் என்று அர்த்தம். இங்கு இருந்த குளத்தைச் சுற்றி வேளாண்மை நடந்தது. அந்த காலகட்டத்தில், பண்ணையார் ஒருவருக்கு பால் கொண்டு சென்ற இந்து சிறுவனுக்கு வேளாங்கண்ணி குளத்தின் அருகே மரியன்னை குழந்தை இயேசுவுடன் தோன்றி, தனது மகனுக்கு பால் வழங்குமாறு கேட்டார்.
அன்னையின் விண்ணக அழகால் மெய்சிலிர்த்த அவன் குழந்தை இயேசுவுக்கு பால் கொடுத்தான். பால் குறைந்ததால் பண்ணையார் சிறுவனை திட்டித்தீர்த்தார். சிறிது நேரத்தில் அதிசயமாக சிறுவன் கொண்டு வந்த பானையிலிருந்து பால் பொங்கி வழிந்தோடியது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் அனைவரும் சிறுவன் கண்ட விண்ணகத் தாயைக் காண மிகவும் ஆசைப்பட்டனர். அன்னை காட்சி அளித்த இடத்தில் மக்கள் கூடி செபிக்கத் தொடங்கினர். பலரும் தங்கள் துன்பங்கள் தீர உதவுமாறு அன்னை மரியாவிடம் வேண்டிக்கொண்டனர்.
மோர் விற்ற சிறுவன் :
தனது மகனுக்காக மனதுருகி செபித்த ஒரு தாயின் வேண்டுதலுக்கு பதிலளிக்கும் வகையில் மரியன்னை மீண்டும் காட்சி அளித்தார். நடுத்திட்டு என்ற இடத்தில் மோர் விற்றுக் கொண்டிருந்த கால் ஊனமுற்ற சிறுவன் ஒருவனுக்கு அன்னை மரியா தோன்றினார்.
`மகனே, எழுந்து நாகப்பட்டினத்தில் உள்ள செல்வந்தரிடம் சென்று ஒரு ஆலயம் கட்ட சொல்' என்ற அன்னையின் வார்த்தைகளைக் கேட்ட சிறுவன் அதிர்ந்து போனான். `அம்மா, என்னால் எப்படி நடக்க முடியும்?' என்றான் சிறுவன். `உன்னால் முடியும்' என்றார் அன்னை. அவன் எழுந்தான், நடந்தான், அங்கு ஓடத் தொடங்கியவன் செல்வந்தரின் வீட்டில் போய்தான் நின்றான். அன்னையின் புகழ் சுற்றுப் புறமெங்கும் பரவ, அன்னை செல்வந்தருக்கு காட்டிய இடத்தில் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது.
ஆலயத்தின் வளர்ச்சி :
தொடக்கத்தில் நாகப்பட்டினம் கிறிஸ்தவப் பங்கின் துணை ஆலயமாக வேளாங்கண்ணி இருந்து வந்தது. 1771ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. ஏராளமான அற்புதங்கள் நடந்ததால் சமயம், இனம், மொழி கடந்து ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் திருத்தலமாக மாறியது.
இந்த ஆலயத்தின் அற்புதங்களுக்கும், புகழுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் வேளாங்கண்ணி திருத்தலக் கோவிலை 1962 நவம்பர் 3ஆம் நாள் "இணைப் பெருங்கோவில்" (minor basilica என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் "பெருங்கோவில்" நிலைக்கு உயர்த்தப்பட்டதன் 50ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.
சமூக சேவைகள் :
தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் ஆண்டகையின் மேற்பார்வையின் கீழ் வேளாங்கண்ணி பேராலயம் உள்ளது. இதன் அதிபராக அருட்தந்தை மைக்கேல் அடிகளார் இருந்து வருகிறார். மேலும் பல குருக்களும் இந்த ஆலயத்தில் பணியாற்றுகிறார்கள். வேளாங்கண்ணி பேராலயத்தின் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சமூக சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வேளாங்கண்ணி அன்னையைத் தேடி வரும் அனைவரும், அந்த அன்புத் தாயின் பரிந்துரையால் அற்புதங்களைப் பெற்று மகிழ்கிறார்கள்.
இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து 20–ந்தேதி மாலை பெரியாகுறிச்சி ஆலய பங்கு தந்தை லாரன்ஸ், கூனங்குறிச்சி ஆலய பங்கு தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோரின் தலைமையில் நவநாள் திருப்பலியும், ஆராதனையும் நடைபெற்றது.
தேர் பவனி
பின்னர் 21-ந்தேதி கடலூர் ஆக்னஸ் குரு மடம் அதிபர் ரொசாரியோ, திருவண்ணாமலை குழந்தை ஏசு ஆலய பங்கு தந்தை லாசர் சவரிமுத்து, புனித பால் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் நிர்மல்ராஜ், கும்பகோணம் பங்கு தந்தை ரெஜிஸ், முகையூர் உதவி பங்கு தந்தை ஆரோக்கிய ஜான் ராபர்ட், கூனங்குறிச்சி பங்கு தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோரின் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியாரின் ஆடம்பர தேர் பவனி நடந்தது.
தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை கிறிஸ்துராஜ், வேதியர் தேவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
ஆனால் ஆத்தும நன்மைகள் என்பவை இறைவனால் கொடுக்கப்பட்டு இருந்தாலும், அவற்றை வாழ்க்கையில் செயல்படுத்தும் போதுதான், அதைப் பெற்றிருப்பவர்களும், மற்றவர்களும் உணர முடியும்.
தீமைக்கு தீமை செய்யாதிருத்தல், பகைப்பவனையும் நேசித்தல், துன்பங்களை சகித்தல், எதிலும் பொறுமையாக இருத்தல், இழப்புகளை ஏற்றுக்கொள்ளுதல், எப்பேர்பட்ட துரோகத்தையும் மன்னித்தல் போன்றவை எல்லாம் இறைவன் தரும் ஆத்தும நன்மைகளில் மிகச்சில.
இந்த நன்மைகளை வாழ்க்கையில் செயல்படுத்தும் மன பலத்தையும் சேர்த்தே பக்தனுக்கு இறைவன் அளிக்கிறார். இந்த நன்மைகளை செயல்படுத்துகிறவர்களின் வாழ்க்கையை பார்த்துத்தான் இறைவனின் தன்மைகளை ஓரளவாகிலும் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியும்.
ஆக, யார் யார் மூலமாக இறைத்தன்மைகள் வெளிப்பட வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை அப்படிப்பட்ட வழியில் இறைவன் நடத்துகிறார் என்பதும் உண்மை.
உதாரணமாக, மனிதர்களின் துரோக குணத்தையும் மன்னிக்கும் தன்மை தனக்கு உண்டு என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த இறைவன் விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். இதற்காக தான் தேர்ந்தெடுத்த பக்தனை, அவனது திராணிக்கேற்ற வகையிலான துரோகத்தை சந்திக்கவும், அதை அவன் மன்னிக்கவும் செய்து, தனது குணத்தை மனித குலத்துக்கு உணர்த்துகிறார்.
ஆக, இறை பக்தன் என்பவன் வாய் வழியாகவோ, எழுத்து மூலமாகவோ மட்டும் அல்ல, வாழ்க்கை வழியாகவும் இறைவனை வெளிக்காட்டுபவனாக இருந்தாக வேண்டும். அதற்கேற்ற இறை நடத்துதலை பொறுமையோடும், சகிப்புத்தன்மையோடும், புலம்பலின்றியும் கடந்து செல்ல வேண்டும். ஏசுவின் பிறப்பின்போது நடந்த சம்பவங்களை வைத்து, இதுதொடர்பான சில சத்தியங்களை அறியலாம்.
ஏசு எந்த காலகட்டத்தில், எங்கு, யாருடைய வயிற்றில் இருந்து மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பதெல்லாம் இறைவன் ஏற்கனவே போட்டு வைத்த திட்டம். அதன்படி, ஏசுவை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்க மரியாள் தேர்வு செய்யப்பட்டாள். ஏசுவின் குழந்தைப் பருவ பாதுகாவலுக்கு யோசேப்பு மரியாள் தம்பதியினர் தேர்வு செய்யப்பட்டனர்.
எல்லாமே தெய்வ ஏற்பாடு என்பதால் மனபாரங்கள், வேதனை, வலி, அலைச்சல், விரோதிகளின் துரத்தல், தப்பி ஓடுதல் போன்றவை இருக்காது என்று சொல்லிவிட முடியுமா?, இல்லையே.
கணவன் வந்து இணைவதற்கு முன்பதாக பிள்ளையை சுமக்க வேண்டும் என்ற இறை கட்டளை, உடனே ஏற்க முடியாத ஒன்று. சமுதாயம் எப்படி பேசுமோ என்ற மனபாரம் ஒரு பக்கம்; மணக்க இருக்கும் வாலிபனிடம் இதை எப்படிச் சொல்ல முடியும் என்ற அழுத்தம் மற்றொரு பக்கம் நிச்சயம் மரியாளுக்கு உருவாகியிருக்கும்.
மனைவியாக நிச்சயம் செய்யப்பட்ட மரியாள், இணைதலுக்கு முன்பே கருவுற்றவராக இருப்பதைக் கேட்டபோது யோசேப்புக்கு மிகுந்த துக்கம் உண்டாகியிருக்கும். ஆக, ஏசு பிறப்பதற்கு முன்னதாக அவர்கள் இரண்டு பேருமே கடினமான மனக்கஷ்டங்களால் நெருக்கப்பட்டனர்.
அடுத்ததாக, வயிற்றில் பிள்ளையை சுமந்த நிலையில் பிள்ளைப் பேறுக்காக அலைந்த அலைச்சல் ஒரு பக்கம்; எந்த இடமும் கிடைக்கவில்லை என்பதால், இறுதியில் பிள்ளையை பெற்றெடுப்பதற்காக பாதுகாப்பற்ற, மறைவற்ற, தகுதியற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி மற்றொரு பக்கம் நீடித்தது.
அதோடு பிரச்சினைகள் விட்டுவிடவில்லை. ஏசு பிறந்தபோது உதித்த ராஜ நட்சத்திரத்தைக் கண்ட ஞானிகள், அந்த நாட்டு (யூதேயா) ராஜா ஏரோதின் வீட்டுக்குப் போனார்கள்.
அரசாளப் போகிறவரின் பிறப்பின் அறிகுறிதான் அந்த நட்சத்திரம் என்றும், ராஜாவின் வீட்டில்தானே அடுத்ததாக வரும் ராஜா பிறப்பான் என்றும் ஞானிகள் கூற, அந்த நாட்டு அரசியலிலும் கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனென்றால், ஏரோது வீட்டில் அப்போது குழந்தை பிறந்திருக்கவில்லை.
அடுத்ததாக வரும் ராஜா எனக்குப் பிறக்காமல், வேறு எங்கு பிறந்தான் என்று தேட முற்பட, மீண்டும் யோசேப்புக்கும் மரியாளுக்கும் பிரச்சினைகள் முளைத்தன. அடுத்த ராஜா, தனது குடும்பத்தில் இருந்து வரவில்லை என்றால், தன் மீது மக்களிடம் இருக்கும் மரியாதை போய்விடும் என்ற அச்சத்தில், குழந்தை ஏசுவைக் கொல்ல திட்டம் தீட்டினான். ஆனால் குழந்தை இருக்கும் இடம் தெரியவில்லை.
இதை அறிந்த யோசேப்பு, குழந்தையையும் மரியாளையும் அழைத்துக் கொண்டு அடுத்த நாடான எகிப்துக்கு தப்பி ஓடினான். நடையாய் நடந்து செல்லும்போது, எவ்வளவு பயம் அவனை அலைக்கழித்திருக்கும். அறிமுகமானவர்கள் இல்லாத தேசத்தில் எப்படியெல்லாம் அவன் கஷ்டப்பட்டு சில காலம் வாழ்ந்திருப்பான்.
ஏசு என்று நினைத்து எத்தனையோ வேறு ஆண் குழந்தைகளை ஏரோது கொலை செய்யும்போது, எவ்வளவாய் யோசேப்பு மரியாளின் மனது துக்கப்பட்டிருக்கும். ஏரோதுவை இறைவன் முதலிலேயே ஏதாவது செய்து முடக்கியிருந்தால் இவ்வளவு அலைச்சல், மனஉளைச்சல் இருந்திருக்காதே என்றுகூட அவர்கள் நினைத்திருக்க முடியும்.
நமக்கு துன்பம் நேரிடும் போது பலரது எண்ணம் அப்படியாகத்தான் உள்ளது. துன்பத்துக்குக் காரணமானவர்கள் நீக்கப்படமாட்டார்களா, அதற்கு இறைவன் உதவி செய்யமாட்டாரா, என்ற கோணத்தில்தான் பலரும் ஜெபத்தை முன்வைக்கின்றனர். துன்பமே வந்துவிடக் கூடாது, அலைக்கழிப்பு இல்லாமலேயே வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதுதான் பலரது நோக்கமாக உள்ளது. ஆனால் பக்திக்கான வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல.
ஏசுவைக் கொலை செய்ய முயற்சித்த ஏரோது, இறைவன் சித்தம் வைத்த நாட்கள் வரை அரசனாகத்தான் வாழ்ந்தான். பின்னர் அவனது மகன் அர்கெலாயு அந்தப் பட்டத்துக்கு வந்தான். தன்னால் கொலை செய்யப்பட்ட ஆண் குழந்தைகளில், ராஜ நட்சத்திரத்தில் பிறந்த குழந்தையும் அடங்கியிருக்கும் என்றும் அதனால்தான் தனது மகனால் பட்டத்துக்கு வர முடிந்தது என்றும் ஏரோது நினைத்திருப்பான். அந்த நாட்டு மக்களும் ஏரோதின் அரசியலை அப்படித்தான் நினைத்திருப்பார்கள்.
பெரும்பாலானோர் இப்படி நினைத்திருக்க, இறைவனின் சித்தம் வேறு விதத்தில் நடந்து முடிந்தது. ஆனால் ஏசுவைக் காப்பாற்ற யோசேப்பு மரியாள் கடுமையான பாதைகளை பொறுமையோடு கடந்து செல்ல வேண்டியதிருந்தது. ஏசு கூறிய போதனைகளைக் காப்பாற்றுவதற்கு நாமும் பொறுமையோடு துன்பங்களைச் சகிக்கிறோமா? அல்லது வேறு எதையோ ஆசீர்வாதம் என்று நினைத்து ஓடிக் கொண்டிருக்கிறோமா? சிந்திக்க வேண்டிய தருணம் இது.
இந்நூலில் காணப்படும் முக்கியக் கருத்து கிறிஸ்தவர் ஒருவர் தம் அன்றாடக் கடமைகளைப் பிழையின்றிச் செய்து முடிக்க வேண்டும் என்பதாகும்.
உண்மையான கிறிஸ்தவ வாழ்வு தன்னல மறுப்பையும் தூய வாழ்வையும் உள்ளடக்கியது (யாக் 1:1-27).
நம்பிக்கை, பிறரன்பு போன்றவை செயல்களில் காட்டப்பட வேண்டும். செயலற்ற நம்பிக்கை செத்த நம்பிக்கை (யாக் 2:1-26).
நாவை அடக்குதல், அமைதி வாழ்விற்கான ஆர்வம் ஆகியவை ஒருவரை ஞானியாகவும், தூயவராகவும் மாற்றுகின்றன (யாக் 3:1-18).
பாவம் பிளவின் காரணம்.
திருமுகத்தின் இறுதியில் அனைவருக்கும் எழுச்சியுரை தரப்படுகிறது (யாக் 4-5).
"என் சகோதர சகோதரிகளே,
மாட்சி மிக்க நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள்
ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள்.
பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும்
அழுக்குக் கந்தையணிந்த ஏழை ஒருவரும்
உங்கள் தொழுகைக் கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.
அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி
அவரைப் பார்த்து, "தயவுசெய்து இங்கே அமருங்கள்" என்று சொல்கிறீர்கள்.
ஏழையிடமோ, "அங்கே போய் நில்" என்றோ
அல்லது "என் கால்பக்கம் தரையில் உட்கார்" என்றோ சொல்கிறீர்கள்.
இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி,
தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா?
என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்:
உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை,
நம்பிக்கையில் செல்வர்களாகவும்
தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை
உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்து கொள்ளவில்லையா?
நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள்.
உங்களைக் கொடுமைப்படுத்தி நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வோர் யார்? செல்வர் அல்லவா?
கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள நற்பெயரைப் பழிப்பவர்களும் அவர்களல்லவா?
"உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!"
என்னும் இறையாட்சியின் சட்டம் மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது.
மாறாக, நீங்கள் ஆள்பார்த்துச் செயல்பட்டால் நீங்கள் செய்வது பாவம்;
நீங்கள் குற்றவாளிகளென அச்சட்டமே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும்."
"ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது,
அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல்
உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து,
"நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்;
பசியாற்றிக் கொள்ளுங்கள்;" என்பாரென்றால் அதனால் பயன் என்ன?
அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்."
யாக்கோபு 3:7-12
"காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் வாழ்வன
ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதர் அடக்கிவிடலாம்; அடக்கியும் உள்ளனர்.
ஆனால் நாவை அடக்க யாராலும் முடிவதில்லை.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது கொடியது;
சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது.
தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே;
கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே.
போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன.
என் சகோதர சகோதரிகளே, இவ்வாறு இருத்தலாகாது.
ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரக்குமா?
என் அன்பர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும்
திராட்சைச் செடி அத்திப் பழங்களையும் கொடுக்குமா?
அவ்வாறே, உப்பு நீர்ச் சுனையிலிருந்து நன்னீர் கிடைக்காது."
அந்த ஊரில் சக்கேயு என்னும் மனிதர் இருந்தார். அவர் வரி வசூலிப்பவர்களின் தலைவர். மிகப்பெரிய செல்வந்தர். வரி வசூலிக்கும் ஆயக்காரர்களை மக்கள் பாவிகளின் கூட்டம் என்று சொல்லி ஒதுக்கி வைத்திருந்தார்கள். அளவுக்கு அதிகமான வரியை வசூலித்தும், நேர்மைக்குப் புறம்பாகப் பணம் சம்பாதித்தும் தான் அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.
சக்கேயுவுக்கு இயேசுவைக் காணவேண்டும் என்னும் ஆர்வம் மிகுந்தது. அவர் இயேசுவைப்பற்றி பலமுறை கேள்விப்பட்டிருக்கிறார். அவர் செய்திருக்கின்ற அதிசயச் செயல்களையும், பாவிகளையும், தன்னைப் போன்ற வரி வசூலிப்பவர்களையும் வெறுக்காத இயேசுவின் குணத்தையும் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தார். இயேசுவின் முக்கியச் சீடர்களில் ஒருவரான மத்தேயு ஒரு வரி வசூலிப்பாளராக இருந்தவர் என்பதையும் சக்கேயு அறிந்திருந்தார்.
சக்கேயு உயரம் குறைந்தவர். அதனால் அவரால் இயேசுவைக் காண முடியவில்லை. எனவே அவர் முன்னே ஓடி ஒரு அத்தி மரத்தில் ஏறினார். தனது பணக்காரத் தனத்தையெல்லாம் மாற்றி வைத்து விட்டு மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு ஏறினார். மரத்தின் உயரமான ஒரு கிளையில் அமர்ந்து கொண்டு அவர் தெருவை கவனித்துக் கொண்டே இருந்தார்.
இயேசு அந்தத் தெருவழியே வந்தார். இயேசு தூரத்திலிருந்து வருவதைக் கண்ட சக்கேயு மிகவும் மன மகிழ்ச்சியடைந்தார். அந்த மரத்தின் அருகே வந்ததும் இயேசு நின்றார். சக்கேயு தன்னைக் காண்பதற்காக மரத்தில் ஏறி நிற்கிறான் என்பதை இயேசு உள்ளத்தில் அறிந்தார். அவர் அத்திமரத்தின் அருகே வந்து சக்கேயுவை ஏறிட்டுப் பார்த்தார்.
‘சக்கேயுவே கீழே இறங்கி வா, இன்று நான் உன் வீட்டில் உணவருந்த வேண்டும்’ இயேசு சக்கேயுவின் பெயர் சொல்லி அழைக்க, சக்கேயு ஆச்சரியமடைந்தார். உடனே மரத்திலிருந்து கீழே இறங்கி வந்தார்.
‘என்ன இவர் இந்தப் பாவியின் வீட்டில் உணவருந்தப் போகிறாரா?’
‘இவன் ஊரறிந்த ஏமாற்றுக்காரனாயிற்றே... அது இயேசுவுக்குத் தெரியாதா?’
‘இவன் வீட்டிலெல்லாம் சென்றால் இவரை இறைவாக்கினர் என்று யாராவது மதிப்பார்களா?’
மக்கள் கூட்டத்தினர் முணுமுணுத்தார்கள்.
இயேசு கூட்டத்தினரின் பேச்சுக்களுக்குச் செவிகொடுக்காமல் சக்கேயுவின் வீட்டுக்குச் சென்றார். சக்கேயு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இயேசுவைக் காண முடியுமா என்னும் ஆவலில் இருந்தவருடைய வீட்டுக்கு இயேசுவே வந்திருக்கிறார்.
இயேசுவை அவர் நன்றாக உபசரித்தார். உணவருந்தி முடித்ததும் சக்கேயு அவருக்கு முன்பாகப் பணிந்து,
‘இயேசுவே என்னுடைய சொத்தில் பாதியை நான் இப்போதே ஏழைகளுக்கு வழங்குகிறேன், யாரையாவது ஏமாற்றி எதையாவது பறித்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திருப்பிச் செலுத்துகிறேன்’ என்றார்.
குள்ளமான மனிதர் சட்டென இதயத்தால் உயரமானார்.
‘இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று!’ இயேசு சொன்னார். சக்கேயு சிலிர்த்தார்.
இயேசு கூட்டத்தினரைப் பார்த்து, ‘இழந்தவற்றைத் தேடி மீட்கவே மானிட மகன் பூமிக்கு வந்திருக்கிறார். பிறர் குற்றவாளிகள் எனத்தீர்ப்பு அளிக்காதீர்கள். அப்போது நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் தான் உங்களுக்கும் அளக்கப்படும். இவரும் ஆபிரகாமின் மகனே!’ என்றார்.
சக்கேயுவின் வாழ்க்கை சில முக்கியமான பாடங்களை நமக்குக் கற்றுத் தருகிறது.
1. இயேசுவைக் காணவேண்டும் எனும் ஆர்வம் அவனுக்குள் இருந்தது.
2. ‘குள்ளன்’ எனும் தனது குறையைக் காரணம் காட்டி அவன் இயேசுவைச் சந்திப்பதை தவிர்க்கவில்லை.
3. வேறு நபர்கள் மூலமாக இயேசுவை அறிவதை விட நேரடியாக சந்திப்பதே மேல் என நினைத்தான்.
4. இயேசுவைச் சந்தித்ததும் அவரை வீட்டில் ஏற்றுக் கொண்டான். மாற்றத்தை மனதில் ஏற்றுக் கொண்டான்.
5 மாற்றம் என்பது செயலிலும் வெளிப்படவேண்டும் என்பதைப் புரிந்து செயல்பட்டான்.
6. மீட்பு என்பது பாவத்தின் அடர்த்தியைப் பொறுத்தல்ல, மன்னிப்பு கேட்கும் மனிதரைப் பொறுத்ததே என்பதைப் புரியவைத்தான்.
7. இயேசு வாழ்க்கையில் வந்தபின் செல்வங்கள்எல்லாம் அவனுக்கு முக்கியமற்றதாகி விட்டன.
8. சக்கேயு பெரிய செல்வந்தனாய் இருந்தார். செல்வர்கள் எப்படி விண்ணகம் செல்லலாம் என்பதை வாழ்க்கையில் விளக்கினார்.
9. இயேசு அந்த வழியாகச் சென்ற கடைசிப் பயணம் அது. கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே இயேசுவை பற்றிக் கொள்ளவேண்டும் என்பதை புரியவைத்தார்.
10. இயேசு நம்மைத் தேடி வந்து பெயர் சொல்லி அழைக்கிறார், அழைப்புக்கு செவிகொடுப்பதே நமது வேலை என்பதை கற்றுத் தருகிறார்.
இந்த பாடங்களையெல்லாம் சக்கேயுவின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்.
மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தில் தொடங்கிய இந்த தேர்பவனி ஜங்சன், தர்மன்நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு நற்கருணை ஆசி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை மற்றும் பங்கு பேரவையினர் செய்திருந்தனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை குழந்தை ஏசு ஆலய பங்கு தந்தை லாசர் சவரிமுத்து, கூனங்குறிச்சி பெரியநாயகி அன்னை மாதா ஆலய பங்கு தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோரின் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், தேர் பவனியும் நடைபெற்றது. பின்னர் நேற்று மாலை 6 மணிக்கு பெரியாகுறிச்சி ஆலய பங்கு தந்தை லாரன்ஸ், கூனங்குறிச்சி ஆலய பங்கு தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோர் தலைமையில் நவநாள் திருப்பலி ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கடலூர் ஆக்னஸ் குரு மடம் அதிபர் ரொசாரியோ, புனித பால் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் நிர்மல்ராஜ், கும்பகோணம் பங்கு தந்தை ரெஜிஸ், முகையூர் உதவி பங்கு தந்தை ஆரோக்கிய ஜான் ராபர்ட், கூனங்குறிச்சி பங்கு தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோரின் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியாரின் ஆடம்பர தேர் பவனி நடக்கிறது.
இந்த பவனியானது புனித அந்தோணியார் ஆலயத்தில் தொடங்கி கடலூர் மெயின்ரோடு வழியாக நெய்வேலி மேம்பாலம் வரை சென்று திரும்பி ஆலயத்தை வந்தடையும். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை கிறிஸ்துராஜ், வேதியர் தேவராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பங்குகுருக்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று இரவு நடந்தது. முன்னதாக நேற்று காலை 8 மணிக்கு கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து இரவில் தேர்பவனி நடந்தது. இதற்காக அந்தோணியார், சூசையப்பர், அன்னை தெரசா, மிக்கேல் அதிதூதர், சகாயமாதா, செபஸ்டியான், குழந்தை ஏசு உள்பட 15 தேர்கள் மின்விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. ஆலயம் முன்பு இருந்து தொடங்கிய தேர்பவனியை ஆலய பங்குகுரு ஜார்ஜ் தனசேகர் தொடங்கி வைத்தார்.
மேட்டுக்காடு, ரெட்பீல்டு, ராமநாதபுரம் போலீஸ் நிலையம் வழியாக மீண்டும் ஆலயத்துக்கு சென்று தேர்பவனி முடிந்தது. இந்த தேர்பவனியில் அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
* உயிர்பெற்றெழுந்த இயேசு மேல்மாடியில் கூடியிருந்த தம் சீடர்களுக்குத் தோன்றினார்; அப்போது சீடர் தோமா அங்கே இல்லை. உயிர்பெற்றெழுந்த இயேசுவைத் தம் கைகளால் தொட்டுப்பார்த்தாலொழிய நம்பப்போவதில்லை என்று கூறிவிட்டார். எட்டு நாள்களுக்குப் பின் இயேசு மீண்டும் தோன்றியபோது தோமாவும் கூட இருந்தார்.
இயேசு சீடர்களை நோக்கி வழக்கம்போல, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்திய பிறகு, தோமாவை நோக்கி, "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார். இயேசுவைத் தம் கையால் தொடுவதற்குத் தோமாவுக்குத் துணிவு வரவில்லை.
மாறாக, தோமா இயேசுவைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்று கூறிப் பணிந்தார். இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார் (காண்க: யோவான் 20:24-29).
* எம்மாவு என்னும் ஊருக்குச் சென்றுகொண்டிருந்த சீடர்களுக்கு இயேசு தோன்றிய செய்தியை லூக்கா குறித்துள்ளார் (காண்க: லூக்கா 24:13-32).
* திபேரியக் கடல் (கலிலேயாக் கடல்/ஏரி) அருகே சீமோன் பேதுருவும் பிற சீடரும் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இயேசு அவர்களுக்குத் தோன்றி அவர்களை உறுதிப்படுத்தினார் (காண்க: யோவான் 21:1-23).
* இயேசு இறுதி முறையாகத் தோன்றியது அவர் உயிர்பெற்றெழுந்த நாற்பதாம் நாள் எனவும் அப்போது அவர் விண்ணேகினார் எனவும் லூக்கா குறித்துள்ளார் (காண்க: லூக்கா 24:44-49).
* கிறித்தவர்களைத் துன்புறுத்திய சவுல் என்பவருக்கு இயேசு தோன்றியதும், சவுல் மனமாற்றம் அடைந்து, பவுல் என்னும் புதிய பெயரோடு இயேசுவின் தீவிர சீடராக மாறியதும் திருத்தூதர் பணிகள் நூலிலும் பவுல் எழுதிய மடல்களிலும் குறிக்கப்பட்டுள்ளன.
* இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியைக் கிறித்தவர்கள் தம் சமய நம்பிக்கையின் மையமாகக் கருதுகிறார்கள். கடவுள் பெயரால் இவ்வுலகிற்கு வந்து, மக்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவர்கள் விண்ணக வாழ்வில் பங்கேற்க எத்தகைய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இயேசு தம் சொல்லாலும் செயலாலும் காட்டினார்.
சாவின்மீது தாம் வெற்றிகொண்டதுபோலவே தம்மை நம்பி ஏற்போர் அனைவரும் அவ்வெற்றியில் பங்கேற்பர் என இயேசு அறிவுறுத்தினார். புத்துயிர் பெற்ற இயேசு மனித வரலாற்றில் கடவுளின் வல்லமையாக இருந்து அவ்வரலாற்றை வழிநடத்துகிறார் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். இயேசுவை மீட்பராக ஏற்போர் கடவுளின் அன்பிலும் அரவணைப்பிலும் எந்நாளும் வாழ்வர் என்பது கிறித்தவ நம்பிக்கை.






