என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    உங்கள் ஜெபத்தையும் கேட்க தேவன் வல்லவர். உங்கள் ஜெபத்தைக் கேட்டு உங்கள் குடும்ப வாழ்வை ஆசீர்வதிப்பார்.
    நம் அருமை ஆண்டவர் நம் ஜெபத்தைக் கேட்கிறவர். அன்னாளின் ஜெபத்தைக் கேட்டு குழந்தையை தந்தார். எசேக்கியா ராஜாவின் ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுத்தார். தானியேலின் ஜெபத்தைக் கேட்டார். தாவீதின் விண்ணப்பத்திற்கு செவி கொடுத்தார்... இப்படி வேதத்திலே தொடர்ந்து வாசிக்கிறோம்.

    உங்கள் ஜெபத்தையும் கேட்க தேவன் வல்லவர். உங்கள் ஜெபத்தைக் கேட்டு உங்கள் குடும்ப வாழ்வை ஆசீர்வதிப்பார். ஆனால் இன்னும் உங்கள் ஜெபம் ஒருவேளை கேட்கப்படாமல் இருந்தால், அதற்கு காரணம் என்ன என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்

    ‘உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது. உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது’. ஏசா. (59:2)

    தேவன் உங்கள் ஜெபத்தைக் கேட்கக்கூடாதபடி உங்கள் வாழ்விலும், உங்கள் குடும்ப வாழ்விலும் தேவன் வெறுக்கும் பாவங்களை அவரிடம் அறிக்கை செய்து, அந்த பாவத்தில் இருந்து விலகி இருந்தால், நிச்சயம் உங்கள் பாவங்களை ஆண்டவர் மன்னித்து உங்கள் ஜெபங்களைக் கேட்பார். உங்கள் ஜெபங் களுக்கு பதில் கொடுத்து உங்களை சந் தோஷப்படுத்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    ஒருமனப்பட்டு ஜெபியுங்கள்

    ‘உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்’. (மத்.18:19)

    பிரியமானவர்களே, நம் ஆண்டவர் ஒருமனப்பட்டு ஜெபிக்கிற ஜெபத்திற்கு உடனே பதில் கொடுப்பார். இந்த உலகத்திலே கணவனும், மனைவியும் ஒருமனப்பட்டு ஜெபித்தால் உங்கள் ஜெபத்தை கர்த்தர் கேட்பார். பிள்ளைகளுக்காக மற்றும் குடும்ப பிரச்சினைகளுக்காக நாம் ஒருமனப்பட்டு ஜெபித்தால் நிச்சயம் ஆண்டவர் பதில் கொடுப்பார்.

    வீட்டிலே எப்பொழுது பார்த்தாலும் வாக்குவாதம் பண்ணிக் கொண்டு, சண்டை போட்டுக்கொண்டு ஜெபித்தால் எப்படி ஜெபம் கேட்கப்படும்? உங்கள் வாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் ஒருமனதோடு ஜெபியுங்கள். உங்கள் வாழ்வில் அற்புதங்களைக் காண்பீர்கள்.

    சகோதரி கிறிஸ்டினா ராபின்சன்,

    ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை.
    குழந்தை வரம் அருளும் திருக்காவலூர் பெரியநாயகி மாதா கோவிலை பற்றி அறிந்து கொள்ளுவோம்.
    இக்கோயில் முதலில் மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் இருந்தது. 17 ம் நூற்றாண்டில் இத்தாலிய பாதிரியார் பெஸ்ஸி இரண்டு சுருபங்களை கொண்டுவந்தார்.அவர் தமிழ்நாடு முழுவதும் மத போதனையில் ஈடுபட்டார். கோணான்குப்பம் முதலில் ஏலகுருச்சி / திருக்காவலூர் என அழைக்கப்பட்டது. அவ்வாறு மத போதனையில் ஈடுபடும் போது ஏலகுருச்சி / திருக்காவலூர் காட்டு பகுதியில் ஒரு சுருபத்தை தவறவிட்டார்.
     
    அப்பொழுது கோனான்குப்பத்தில் காசிராயர் என்பவர் இருந்தார், அவருக்கு குழந்தைப்பேறு கிடையாது. அதற்காக அன்னையிடம் வேண்டினார், அன்னையோ நான் இப்பொழுது காட்டில் தான் இருக்கிறேன், என்னை கண்டிபிடித்து ஒரு ஆலயம் எழுப்பு, உனக்கு குழந்தை பிறக்கும் என்றாள். உடனே அவர் காட்டில் இருந்த சுருபத்தை கண்டுபிடித்து,சிறு ஆலயத்தை எழுப்பினார். அவருக்கு குழந்தையும் பிறந்தது.
     
    மக்கள் அனைவரும் வழிபட ஆரம்பித்தனர். இதை கேள்விப்பட்ட பாதிரியார் பெஸ்ஸி ஏலகுருச்சி / திருக்காவலூர் வந்து, தான் தவறவிட்ட சுருபத்தை கண்டு அளவில்லாத மகிழ்ச்சி அடைந்து அங்கேயே தங்கி பணிபுரிந்தார். ஏலகுருச்சி / திருக்காவலூர் என்ற பெயரை "கோணான்குப்பம்" என வழங்கினார். மேலும் தற்போதுள்ள ஆலயத்தை கட்டினார். 


     
    இரக்கமும் கருணையும் நிறைந்த பெரியநாயகி தாயே! வீரமாமுனிவரால் பாடி புகழப்பட்டவளே! விண்மீன்களால் அலங்கரிக்கபட்டவளே! கோணான்குப்பதில் வீற்றிருக்கும் உம திருவடி நாடி தேடி நம்பிக்கையுடன்,விசுவாசத்துடன் வரும் உம அடியார்களிடம் உள்ள உடல் ஆன்ம தாகத்தையும், ஏக்கத்தையும்,தேவைகளையும் கடைக்கண் பார்த்து உதவி புரிபவளே!
     
    உம் திருமைந்தன் யேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசுவீராக. நீவிர் பரிந்து பேசுவதால் இந்த ஆலயத்தில் இருக்கின்ற நோயாளிகள் எல்லாம் குணம் பெறுவார்களாக. எங்கள் ஒவ்வொருக்கும் உள்ள உடல்,ஆன்ம சுகம் கிடைப்பதாக. மகப்பேறு இல்லாதவர்களுக்கு மகப்பேறும், நல்ல வரன் வேண்டிவருவர்களுக்கு நல்ல வாழ்கை துணையும் கிடைப்பதாக. எங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும், உண்மையான அன்பும் குடிகொள்வதாக.
     
    படிக்கும் குழந்தைகளுக்கு நல்ல படிப்பும், வறுமையில் வாழ்வோருக்கு நல்ல வாழ்வும், வேலையற்றோருக்கு நல்லவேளையும் கிடைப்பதாக. முதியவர்களையும்,பெற்றோர்களையும், குழந்தைகளையும் விண்ணக ஆசிரால் நிரப்புவீரக.
     

    அந்தோணியார் ஆலய தேர்பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
    காரைக்கால் காமராஜர் சாலையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத்திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அலங்கார தேர் பவனி நடைபெற்றது.

    இதையொட்டி காரைக்கால் மாவட்ட பங்கு தந்தை ஆண்டணி லூர்து அடிகளார் சிறப்பு திருப்பலி நடத்தினார். இதனை தொடர்ந்து புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து தேர்பவனி தொடங்கியது.

    நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
    தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா பொருட்காட்சி 27–ந் தேதி தொடங்குகிறது.

    தூத்துக்குடியில் அமைந்துள்ள பனிமய மாதா ஆலய திருவிழாவினை முன்னிட்டு வரும் 27–ந் தேதி முதல் ஆகஸ்ட் 10–ந் தேதி வரை பொருட்காட்சி நடைபெற இருக்கிறது. இதனைமுன்னிட்டு பொருட்காட்சி அரங்கம் அமைப்பதற்கான பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு இஞ்ஞாசி தலைமை வகித்தார். ஒ.எல்.எஸ்.நண்பர்கள் பொருட்காட்சிக்குழு தலைவர் டென்சிங், செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் நிர்மலாரவி வரவேற்றார்.

    விழாவில் பனிமய மாதா ஆலய பங்குத்தந்தை லெரின்டிரோஸ் கலந்துகொண்டு பொருட் காட்சிக்கான பணிகளை ஜெபம் செய்து துவங்கி வைத்தார். இதில், பங்குமக்கள், பொருட்காட்சி குழு நிர்வாகிகள், உறுப்பினர் கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆன்மிக வெளிச்சத்தில் சிலுவை சுமப்பது என்பது, நமது சுய விருப்பங்களை வெறுத்து, இறை விருப்பத்தை நிறைவேற்றுவது மட்டுமே.
    இயேசுவுக்கு சிலுவை மரணம் தீர்ப்பானது. பாரமான சிலுவை ஒன்று வாங்கிவரப்பட்டது. அவமானச்சாவு யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறதோ அவர்களை அந்த சிலுவையில் கிடத்தி, கைகளை விரித்து மரத்தின் இரண்டு முனைகளிலும் வைத்து ஆணியால் அறைந்து, கால்களை கீழே இழுத்து இன்னொரு ஆணியால் அறைந்து தொங்க விடுவார்கள்.

    பூமியிலும் ஆகாயத்திலும் இல்லாமல் வருவோர் போவோரெல்லாம் பார்க்கும் விதமாக மலையில் அவர்களை சிலுவையில் சாகும் வரைத் தொங்க விடுவார்கள்.

    சிலுவைச் சாவு யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறதோ, அவர்கள் தாங்களாகவே அந்த சிலுவையை தோளில் சுமந்து கொண்டு தங்கள் மரணம் நிகழப்போகும் இடம் வரை தூக்கிக்கொண்டு வரவேண்டும். ஒரு கொடுமையான சாவு. சாவு பற்றிய பயம் ஒருபுறம், அவமானம் ஒரு புறம், வலி ஒருபுறம் என சிலுவைச் சாவுக்குற்றவாளிகள் படும் அவஸ்தை விவரிக்கக் கூடியதல்ல.

    சிலுவையில் தொங்கவிட்டபின் மாலை வரை சிலுவையிலேயே தொங்கியும் முழுமையாய் இறக்காத மனிதர்களும் இருப்பார்கள். படைவீரர்கள் வந்து அவர்களுடைய கால்களை வெட்டி எறிவார்கள்.

    இயேசுவை கொல்கொதா என்று அழைக்கப்பட்ட மலையை நோக்கி நடக்க வைத்தார்கள். நடக்கவே வலுவில்லாத குற்றுயிரான நிலையில் இயேசு பாரமான சிலுவையைச் சுமந்து கொண்டு மலையை நோக்கி நடந்தார்.

    இயேசுவால் நடக்க முடியவில்லை. தடுமாறி விழுந்தார்.

    படைவீரர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த சாட்டையால் அவரை அடித்து எழுப்பினார்கள்.

    இயேசு அரண்மனை வளாகத்தை விட்டு வெளியே வந்தார்.

    இயேசுவின் போதனைகளில் ஈர்க்கப்பட்ட பாமர மக்கள் அவருக்காகக் கண்ணீர் விட்டார்கள்.

    அவர்களால் நம்ப முடியவில்லை. நேற்று வரை எல்லோருக்கும் பார்வை கொடுத்துக் கொண்டிருந்தவர், தொழுநோயாளிகளைக் குணமாக்கிக் கொண்டிருந்தவர், ஐந்து அப்பத்தை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தவர், சிங்கம் போல சீடர்களுடன் உலா வந்து கொண்டிருந்தவர் இன்று என்ன ஆயிற்று. அது இயேசு தானா அல்லது வேறு யாரோவா? தண்ணீரில் கூட தடுமாறாமல் நடந்தவர், தரையில் நடக்க முடியாமல் தடுமாறுகிறாரே! மக்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார்கள்

    இருபுறமும் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள்.

    ‘எருசலேம் மகளிரே... எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்’ இயேசு சொன்னார்.

    இயேசுவின் பார்வை கூட்டத்தில் ஒரு முகத்தில் பதிந்தது.

    அவருடைய தாயார்!

    எந்த ஒரு தாயால் தன் மகனை இந்த கோலத்தில் பார்க்க முடியும்? காலில் கல் இடித்து விட்டாலே கலங்கிப் போகும் தாய்மை மரணத்தைத் தோளிலேற்றி மகன் செல்வதை கண்டு கரையாமல் இருக்க முடியுமா?

    அந்தப் பார்வையைத் தாங்க முடியாத இயேசு தடுமாறித் தரையில் விழுந்தார். மீண்டும் எழுந்தார். தொடர்ந்து நடந்தார். இயேசுவால் நடக்க முடியவில்லை.  

    இயேசு மூன்றாவது முறையாகக் கீழே விழுந்தார். இனிமேல் எழும்புவதற்கு உடம்பில் வலு இல்லை.

    ‘இவனால் சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாது, என்ன செய்யலாம்?’

    ‘யாரையாவது பிடித்து சிலுவையைச் சுமக்கச் செய்வோம், இல்லையேல் இவன் மலையை அடையும் முன் மரணத்தை அடைந்துவிடுவான்’.

    படைவீரர்கள் பேசிக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அவர்களுடைய கண்களுக்குத் தட்டுப்பட்டார் திடகாத்திரமான ஒருவர்.

    ‘ஏய்... நீ யார்...’

    ‘நான் சீமோன். சீரேன் ஊரைச் சேர்ந்தவன். எனக்கு இந்த மனிதனைத் தெரியாது... நான் ஒன்றும் அறியாதவன்’ அவன் பயந்து நடுங்கினான்.

    ‘எங்கிருந்து வருகிறாய்?’

    ‘வயலில் வேலை செய்துவிட்டு வருகிறேன்’

    ‘சரி... சரி... வந்து இவனுடைய சிலுவையைச் சுமந்து கொண்டு வா...’

    ‘ஐயா... என்னை விட்டுவிடுங்கள். வேறு யாரையாவது அழையுங்கள்’ சீமோன் நழுவப் பார்த்தார்.

    சிலுவையில் அறையப்படுபவர்கள் தான் சிலுவையைத் தூக்கிச் செல்வார்கள். தான் சிலுவையைத் தூக்கிச் சென்றால் அந்த அவமானம் தனக்கும் வருமே என்று பயந்தாரோ அல்லது தான் இயேசுவின் மறைமுக ஆதரவாளர் என்பதை படை வீரர்கள் அறிந்து கொண்டார்களோ என்ற பயமோ சீமோனை நழுவச்சொன்னது.

    அவர்கள் விடவில்லை. அவரைக் கட்டாயப்படுத்தி சிலுவையைச் சுமக்க வைத்தார்கள். இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமந்தான் சீமோன்!.

    பைபிளில் ஒரே ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டு, இயேசுவின் சிலுவையை சுமக்கும் பாக்கியத்தையும், அதன் மூலம் காலம் உள்ளவரை மக்களால் நினைவுகூரப்படக் கூடிய பாக்கியத்தையும் பெற்றார் இந்த சீரேன் சீமோன்.

    இயேசுவுக்காக சிலுவை சுமக்கத் தயாரா? ஆன்மிக வெளிச்சத்தில் சிலுவை சுமப்பது என்பது, நமது சுய விருப்பங்களை வெறுத்து, இறை விருப்பத்தை நிறைவேற்றுவது மட்டுமே.
    ஆண்டவர் ஞானிகளையும், திறமைசாலிகளையும், பணக்காரர்களையுமே தனது பணிக்காக தேர்ந்தெடுப்பார்.
    ஆண்டவர் ஞானிகளையும், திறமைசாலிகளையும், பணக்காரர்களையுமே தனது பணிக்காக தேர்ந்தெடுப்பார். அவர்களையே நேசிப்பார் என்ற தப்புக்கணக்கு பலரிடமும் இருக்கிறது. அப்படி அவர் நினைத்திருப்பாரேயானால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று சிந்தியுங்கள்.

    * கர்த்தர் மோசேயைத் தெரிந்து கொண்ட போது, மோசே தன்னுடைய இயலாமையை ஆண்டவரிடத்தில் விவரித்து, ""நான் வாக்குவல்லவன் அல்ல. நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்,'' என்றார். ஆனால், கர்த்தர் மோசேயைக் கொண்டு முழு இஸ்ரவேல் ஜனங்களையும் நாற்பது ஆண்டுகள் வழிநடத்த வல்லவராய் இருந்தார்.

    * கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியை அழைத்த போது, எரேமியா தன்னைத் தாழ்த்தி சொன்னது என்ன தெரியுமா? ஆ...கர்த்தராகிய ஆண்டவரே! இதோ! நான் பேச அறியேன். சிறுபிள்ளையாய் இருக்கிறேன்,'' என்றார். எனினும், கர்த்தர் தம் வார்த்தைகளை எரேமியாவின் வாயில் தந்து, தீர்க்கதரிசியாக்கி வல்லமையாகப் பயன்படுத்தினார்.

    * கர்த்தர் பேதுருவை அழைத்தபோது மீன் பிடித்துக் கொண்டு இருந்தார். படிப்பறிவு இல்லாத பேதுரு, ""ஆண்டவரே! நான் பாவியான மனுஷன் என்னை விட்டுப் போய்விடும்,'' என்றார். ஆனால், கர்த்தரோ பேதுருவை சீஷனாக்கி, ஆவிக்குரிய வரங்களைத் தந்து மாபெரும் அப்போஸ்தலக்கினார்.

    * மெதடிஸ்ட் ஆலயங்களை எல்லாம் நிறுவின ஜான்வெஸ்லி குள்ளமாய் இருந்தார். மற்றவர்களால் கேலி செய்யக்கூடிய நிலையில் இருந்தாலும், கர்த்தரோ அவரை அக்னி ஜுவாலையாய் வல்லமையாய் பயன்படுத்தினார்.

    * போதகர் டி.எல்.மூடி படிப்பறிவு இல்லாதவர். அவர் பேசும் ஆங்கிலத்தை அநேகர் கேலி செய்வதுண்டு. என்றாலும், அவருடைய ஊழியத்தினால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் லட்சக்கணக்கான பேர். இன்றைக்கும் கிறிஸ்தவ சரித்திரத்தில் அவருக்கு நீங்காத இடமுண்டு.

    * கொரியாவின் பால்யாங்கிசோ, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தவர். சயரோகத்தினால் பாதிக்கப்பட்டு ஒடுங்கிப்போய் இருந்தார். இருமி இருமி இளைத்து துரும்பானார். ஆனால், கர்த்தர் அவரை உயர்த்தி தெய்வீக மனுஷனாய் ஆசிர்வதித்தார்.

    எனவே, தேவகுழந்தைகளான நாம், சாதாரண நிலையில் இருக்கிறோமே என வருந்தத் தேவையில்லை. கர்த்தரிடத்தில் நம்மை ஒப்புக் கொடுத்து விட்டால், அவர் நம்மை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்வார். நம்மைக் கனத்துக்குரிய பாத்திரமாக மாற்றுவார்.
    இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் திருத்தல 122–ம் ஆண்டு பெருவிழா தேர்பவனி நடந்தது.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு பிரசித்தி பெற்ற திரு இருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது. இந்த ஆலயத்தில் 122–ம் ஆண்டு திரு இருதய பெருவிழா கடந்த 24–ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    அதை தொடர்ந்து தினமும் இறை செய்திகள் வாசிக்கப்பட்டு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது.

    முக்கிய விழாவான மாதத்தின் முதல் வெள்ளி கூட்டு திருப்பலி திருவிழா அர்ச்சிப்பு நிகழ்ச்சி சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் திருத்தல அருட்பணியாளர் ரெமிஜியஸ் தலைமையில் மறை மாவட்ட பொருளர் அருட்தந்தை மைக்கேல்ராஜ், அருட்தந்தைகள் இளங்கேஸ்வரன், வின்சென்ட் அமல்ராஜ், ஜோசப் ஜான் கென்னடி ஆகியோர் சிறப்பு திருப்பலி பூஜையை நடத்தினார்கள்.

    அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு நன்றி செலுத்தும் திருப்பலி பூஜை, தேர்பவனி தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட மின்சார ரதத்தில் திரு இருதய ஆண்டவர் சொரூபம் அலங்கரிக்கப்பட்டு இடைக்காட்டூர் வீதிகளில் வலம் வந்தது.

    அதை தொடர்ந்து இன்று சனிக்கிழமை நற்கருணை பெருவிழா நடந்தது.

    விழாவில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான திரு பயணிகள் திரு இருதய ஆண்டவரை மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர். 10 நாட்கள் விழா ஏற்பாடுகளை திருத்தல அருட்பணியாளர் ரெமிஜியஸ் தலைமையில் இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கத்தினர், செல்ஸ் இளைஞர் பேரவையினர், பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்து இருந்த னர்.

    மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற 122–வது ஆண்டு விழா சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
    மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் புகழ்பெற்ற திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சிற்ப நுணுக்கத்துடன் கட்டப்பட்டதாகும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மாதந்தோறும் முதல் மற்றும் கடைசி வெள்ளிக்கிழமையில் நடைபெறும் சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்துகொள்வது தனிச்சிறப்பு. இதையொட்டி இந்த ஆண்டு 122–வது ஆண்டு விழா கடந்த மாதம் 24–ந்தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை ஆலயத்தில் திருப்பலி, நவநாள் நற்கருணை ஆராதனை விழா நடைபெற்றது. விழாவில் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் தலைமை தாங்கி சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியை நடத்தினார். ஆலயத்தின் வெளிப்பகுதியில் மெழுகுவர்த்தி சிற்றாலயத்தை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் அர்ச்சிப்பு செய்து திறந்து வைத்தார். இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து 33 அருட்தந்தையர்கள் கலந்துகொண்டனர்.

    விழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்டனர். ஆலயத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் மற்றும் இடைக்காட்டூர் திருத்தல அருட்பணியாளர் ரெமிஜியஸ் ஆகியோர் திருப்பலியில் கலந்துகொண்டவர்களுக்கு ஆசி வழங்கி சிறப்புரையாற்றினர்.

    விழா ஏற்பாடுகளை திருத்தல அருட்பணியாளர் ரெமிஜியஸ், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், மரியின் ஊழியர் அருட்சகோதரிகள் ஆகியோர் செய்திருந்தனர். விழாவையொட்டி மானாமதுரை போக்குவரத்து போலீசார் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    புகை, மது போன்ற தவறான பழக்கங்களை விட்டுவிட்டு பெற்றோருக்கு கீழ்படிந்து வாழுங்கள்.
    கீழ்படிதல் பற்றி விவிலியத்தில் தேடினால்.. இயேசுவின் கானா ஊர் திருமணம் தான் நினைவுக்கு வரும்...

    ‘அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள்’

    நாசரேத்திலிருந்து 13 கி.மீ. தூரத்திலிருந்த கானா என்ற ஊருக்கு, தம் குடும்பத்தாரோடும், சீடர்களோடும் ஒரு திருமண விருந்திற்குச் சென்றார், இயேசு. விருந்தில் ஏதோ சலசலப்பு இருப்பதை மரியாள் புரிந்துகொண்டார். விருந்தினர்களுக்கு கொடுக்க இருந்த திராட்சை ரசம் தீர்ந்துவிட்டதால் திருமண வீட்டார் பர பரப்பாக இருந்ததைப் பார்த்தார். அந்த காலத்தில், இதுபோன்ற சம்பவங்கள் திருமண வீட்டாருக்குப் பெரிய அவமானமாக அமைந்து விடும். மரியாளுக்கு அது கஷ்டமாக இருந்ததால், உதவிக்காக இயேசுவிடம் சென்றார்.

    ‘பரிமாறுவதற்கு அவர்களிடம் திராட்சை ரசம் இல்லை’ என்று இயேசுவிடம் சொன்னார். அதற்கு இயேசு, ‘பெண்மணியே! நீங்கள் சொல்லி நான் செய்ய வேண்டுமா?’ என்று பதிலளித்தார். அவருடைய வார்த்தைகள் மரியாதைக்குறைவாக இல்லாத போதிலும் அது மரியாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. மரியாளை இயேசு மென்மையாகக் கண்டித்தார். தம்முடைய ஊழியம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி தம் பரலோகபிதா யெகோவாவே தீர்மானிப்பார் என்பதை சொல்லாமல் சொன்னார்.

    மரியாள் மனத்தாழ்மையுள்ள பெண்ணாக இருந்ததால், தன் மகன் சொன்னதை உடனே ஏற்றுக்கொண்டார். திருமண விருந்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்களைப் பார்த்து, ‘அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படி செய்யுங்கள்’ என்றார். இனி, தான் சொல்கிறபடி மகன் நடக்க வேண்டும் என்றல்ல, மகன் சொல்கிறபடியே தானும் மற்றவர்களும் நடக்க வேண்டும் என்பதை மரியாளின் வார்த்தைகள் வெளிக்காட்டின.

    இருப்பினும் தாயின் வார்த்தைக்கு மதிப்பளித்து, தண்ணீரை சுவையான திராட்சை ரசமாக மாற்றி முதல் அற்புதத்தை நிகழ்த்தினார். பரம பிதாவின் உத்தரவு கிடைக்கப் பெறாவிட்டாலும், தாய் மரியாளின் உத்தரவு கிடைத்ததால் முதல் அற்புதத்தை செய்து காட்டினார். இது இயேசுவுடன் இருந்த சீடர்களின் விசுவாசத்தை அதிகரித்தது. கூடவே மரியாளும் மகன்மீது விசுவாசம் வைத்தார். இயேசுவை மகனாக மட்டுமல்ல, தன் எஜமானராகவும், மீட்பராகவும் பார்த்தார். மரியாள் தமக்குப் பக்கபலமாக இருந்ததற்காக இயேசுவும் சந்தோஷப்பட்டிருப்பார்.

    ஆகவே பெற்றோரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து வாழ பழகவேண்டும். இயேசு வழியில் நடந்து பெற்றோரின் வார்த்தைக்கு கீழ்படியுங்கள். அது உங்களை கிறிஸ்துவின் பாதையில் வழிநடத்தும்.

    மரியாளுக்குத் துக்கம் தொண்டையை அடைக்கிறது, வேதனையில் அவர் நிலைகுலைந்துபோகிறார். பல மணி நேரம் சித்திரவதைச் செய்யப்பட்டு இறந்துபோன தன் மகனின் அவலக்குரல் அவர் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. பட்டப்பகலில் அந்த இடம் முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. இப்போது பூமி அதிர்கிறது’ (மத்தேயு 27:45, 51).

    ‘இயேசுவின் மரணம், வேறு யாரையும் விட யெகோவாவைத்தான் (பரமபிதா) அதிகமாகப் பாதித் திருக்கும். யெகோவா துடிதுடித்துப் போவதை அவர் உலகிற்குக் காட்டுவதாக மரியாள் நினைத்திருக்கலாம். இருள் சூழ்ந்த கொல்கொதா என்ற இடத்தில், மரியாள் தன் மகனை நினைத்து சோகத்தில் மூழ்கியிருக்கிறார்’ (யோவான் 19:17, 25).

    மகனை பறிக்கொடுத்த வேதனை அவரை புலம்ப வைத்தது. மகனின் நினைவுகள் அவர் மனதில் அலைமோதின. 33 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவமும் மரியாளின் ஞாபகத்திற்கு வந்தது.

    ‘அப்போது, யோசேப்பும், மரியாளும் பச்சிளம் குழந்தையான இயேசுவை எருசலேமில் இருந்த ஆலயத்திற்குக் கொண்டுவந்தார்கள். அங்கே சிமியோன் என்பவர் கடவுளுடைய சக்தியால் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். இயேசுவைப் பற்றிய பல பிரமிப்பூட்டும் விஷயங்களை அவர் சொன்னார். அதனுடன் நீண்ட வாள் ஒன்று தன் உள்ளத்தில் ஊடுருவிச் செல்வதுபோல் மரியாள் ஒரு நாள் உணர்வார் என்பதையும் சொன்னார்’ (லூக்கா 2:25-35).

    அந்த வார்த்தைகளின் அர்த்தம் மகனை இழந்தபோது தான் மரியாளுக்குப் புரிந்தது. பெற்ற பிள்ளைகளின் இழப்பை இதற்கு மேலும் விவரிக்க முடியாது. இன்றைய சமூகத்தில் தாய் பாசம் என்பது, வார்த்தையின் வெளிப்பாடாகவே இருக்கிறது. சில வீடுகளில் 10-ம் வகுப்பு வரை பெற்றோருக்கு கீழ்படிந்திருக்கும் பிள்ளைகள், அதற்கு மேல் தாய் தந்தையரை மதிப்பதில்லை. ஊதாரி நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டும், படிப்பில் நாட்டம் செலுத்தாமலும், வீண் வம்புகளில் அடி உதை படுவதுடன், சமூகத்தில் பெற்றோருக்கு இருக்கும் நன்மதிப்பையும் கெடுத்துவிடுகிறார்கள்.

    பிள்ளைகளின் உயிர் இழப்பு மட்டுமல்லாது, அவர்களின் ஒழுங்கீன செயல்பாடுகளும் பெற்றோரை பெரிதும் பாதிக்கிறது. புகைப்பழக்கம், மதுபழக்கம் போன்ற பிள்ளைகளின் தவறான செயல்களுக்காக பெற்றோர் வருந்துகிறார்கள். பிள்ளைகளை ஒழுக்கம் தவறி வளர்த்ததற்காக வேதனைப்படுகிறார்கள்.

    மரியாளை மட்டுமல்லாது.. தீய பழக்கங் களுக்கு அடிமையாகும் பிள்ளைகளின் தாய்மார்களின் உள்ளத்திலும், நீண்ட வாள் ஒன்று ஊடுருவிச் சென்று கொண்டு தான் இருக்கிறது.

    இயேசு இறக்கும் தருவாயிலும், தன்னுடைய தாயை சீடனின் பாதுகாப்பில் விட்டுச் சென்றார். அதுவரை மரியாளை சந்தோஷப்படுத்தி மட்டுமே பார்த்த இயேசு, இறந்த பிறகும் மகிழ்ச்சியாக வாழ வழிவகை ஏற் படுத்தினார். இதுவே உண்மையான தாய் பாசம். இதை இன்றைய தலைமுறையினர் உணரவேண்டும்.
    தினமும் இயேசு பிதாவை ஜெபிக்க எது நல்ல நேரம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
    அதிகாலையில் – தாவீது போல

    மத்தியானத்தில் – தானியேல் போல

    நள்ளிரவில் – பவுலும் சீலாவும் போல

    ஆபத்தில் – பேதுரு போல

    துக்கத்தில் – அன்னாளைப் போல

    வியாதி வருத்தங்களில் – யோபுவைப் போல

    சிறுவயதில் – சாமுவேல் போல

    இளமையில் – தீமோத்தேயு போல

    முதிர் வயதில் – சிமியோன் போல

    சாவிலும் – ஸ்தேவான் போல

    வேலையைத் தொடங்கும் போது – எலியேசர் போல

    வேலையை முடிக்கும் போது – சாலொமோன் போல

    எந்த வேளையிலும் – இயேசுவைப் போல

    “எப்போது வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்;
    எப்படி வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்;
    எங்கு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம் என்பதால்
    நம்மில் அநேகர் எப்போதுமே, எப்படியுமே, எங்குமே ஜெபிப்பதில்லை”
    மானாமதுரை அருகே இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் திருத்தலத்தின் 122–ம் ஆண்டு பெருவிழா நாளை மறுநாள் நடக்கிறது

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு பிரசித்தி பெற்ற திருஇருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது.

    மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு வெள்ளியாக கருதப்பட்டு பக்தர்களின் வேண்டுதலுக்காக கூட்டு திருப்பலி நடைபெற்று வருகிறது.

    இதில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு தோறும் திரு இருதய பெருவிழா 10 நாட் கள் நடைபெறும்.

    இந்த ஆண்டு திருவிழா கடந்த 24–ந்தேதி தேவாலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் லூர்து ராஜா கலந்து கொண்டு மறையுரை ஆற்றினார். முக்கிய விழாவான திரு இருதய ஆண்டவர் அலங்கார தேர்பவனி மற்றும் பெருவிழா நாளை மறுநாள் (1–ந்தேதி) நடைபெறுகிறது.

    அன்று காலை 7 மணிக்கு திருத்தலத்தில் திருஇருதய பெருவிழா திருப்பலி, நவநாள், நற்கருணை ஆராதனையுடன் தொடங்குகிறது. 

    அதைத்தொடர்ந்து 11 மணிக்கு திருவிழா திருப்பலி பூஜையை சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் இரக்கத்தின் தேற்றுபவர் நானே’ என்ற தலைப்பில் மறையுரை கூறி தொடங்கி வைக்கிறார். மாலை 6 மணிக்கு நிறைவு திருப்பலி நடக்கிறது. மின்விளக்கு அலங்கார தேர்ப்பவனியை சிவங்கை மறை மாவட்ட பொருளாளர் மைக்கேல் ராஜ் தொடங்கி வைக்கிறார்.

    2–ந்தேதி (சனிக்கிழமை) நற்கருணை பெருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு ஓரியூர் தூய அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி இளங் கேஸ்வரன் சிறப்பு திருப்பலி பூஜை நடத்துகிறார். மாலை 6 மணிக்கு செக்காலை பங்கு தந்தை வின்சென்ட் அமல்ராஜ், தேவகோட்டை ஆனந்தா கல்லூரி துணை முதல்வர் ஜோசப் ஜான் கென்னடி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    திருஇருதய பெருவிழா ஏற்பாடுகளை இடைக்காட்டுர் திருத்தல பணியாளர் ரெமிஜியஸ் மற்றும் இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளையோர் பேரவை, மரியின் ஊழியர்கள், பங்கு இறை மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    விழாவை முன்னிட்டு மதுரை, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள் என்னவென்று பார்க்கலாம்.
    1. வாழுங்கள், வாழ அனுமதியுங்கள்: நிம்மதியும், சந்தோஷமும்தான் வாழ்க்கையின் முதல் படி. வாழவேண்டும், மற்றவர்களை வாழ அனுமதிக்கவும் வேண்டும்.

    2. உதவுங்கள்: உங்களுடைய பணத்தையும், நேரத்தையும் தேவைப்படுகிறவர்களுக்காக செலவிடுங்கள். தேங்கிக்கிடக்கும் நீரைப்போன்று பணமும், நேரமும் அமைந்துவிடக்கூடாது. நம்மிடம் இருப்பதை எல்லாம் மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும்.

    3. அமைதி தவழட்டும்: பிரபல எழுத்தாளர் ஒருவர் சொன்னதுபோல், இளம் வயது ஆர்ப்பரிக்கும் அருவி போன்றது. முதுமைப் பருவம் அமைதியாக தவழ்ந்து செல்லும் நதியை போன்று மாறும். அதுபோல் அமைதியாகவும், நிதானமாகவும் வாழ்பவராகுக.

    4. ஓய்வில் மகிழ்ச்சி: பொருள்சார்ந்த கலாசாரம் தாங்க முடியாத மனஅழுத்தத்தையும் கொண்டு வருகிறது. அதனால் உங்கள் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிட்டு விளையாடுங்கள். குழந்தைகளுக்கு செலவிட வேண்டியது பணமல்ல, நேரம்.

    5. ஞாயிற்றுக்கிழமை குடும்பத்திற்கு: வாரத்தில் ஒருநாள் முழுவதும் தியானம், ஆராதனை, குடும்பவாழ்க்கை போன்றவைகளோடு, வாழ்க்கைக்கு தேவையான காரியங்களையும் மேற்கொள்ளவேண்டும். அதுதான் ஆரோக்கியமான வாழ்க்கை.

    6. இளைஞர்களுக்கு வேலை: போதைப் பொருள் உபயோகமும், தற்கொலையும் 25 வயதுக்கு கீழ் உள்ள வேலையில்லாத இளைஞர்களிடம்தான் அதிகம் இருக்கிறது. அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க நாம் எல்லாம் உதவ வேண்டும்.

    7. இயற்கைக்கு மரியாதை: காற்றில் மாசு கலக்காத, நதிகளை விஷமாக்காத, காடுகளை அழிக்காத வாழ்க்கை வாழவேண்டும். நம்மை சுற்றி பல்வேறுவிதமான நெருக்கடிகள் உருவாக, இயற்கையை நாம் மாசுபடுத்துவதுதான் காரணம்.

    8. தேவையற்றதில் இருந்து ஒதுங்குங்கள்: நம்மை கோபப்படுத்துகிறவர்கள் மீது புகார் செய்ய வேண்டியதில்லை. அவர்களிடம் இருந்து விலகிவிடுவதே சிறந்தது. வாழ்க்கை ஒவ்வொரு நாளும் பழைய கழிவுப் பொருட்களை நமது பாதை எங்கும் வீசி எறிகிறது. அந்த கழிவுகளை கழுவிவிடவேண்டும்.

    9. மதத்தை திணிக்கவேண்டாம்: நமது மதத்தை பற்றி சத்தமாக குரல் எழுப்ப வேண்டாம். மதத்திற்கு விரும்பி வருகிறவர்கள் வரட்டும். வாதபிரதிவாதங்கள் நடத்தி வரவேண்டியதில்லை.

    10. தேவை சமாதானம்: பத்து விஷயங்களும் நமது சந்தோஷத்திற்கும், சமாதானத்திற்குமானவை. சமாதானம்தான் நாம் பேசவேண்டிய மொழி.
    ×