என் மலர்
ஆன்மிகம்

தூய பேதுரு பவுல் ஆலய நூற்றாண்டு திருவிழா 20-ந் தேதி தொடங்குகிறது
கடியபட்டணம் தூய பேதுரு பவுல் ஆலய நூற்றாண்டு திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கடியபட்டணம் தூய பேதுரு பவுல் ஆலய நூற்றாண்டு திருவிழா 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி அன்றைய தினம் மாலை 4 மணிக்கு திருக்கொடி பவனியும், 6 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலியும் நடக்கிறது.
இதற்கு மறை மாவட்ட முதன்மை பணியாளர் சாலமோன் தலைமை தாங்குகிறார். கோட்டார் அருட்பணியாளர் குணபால் மறையுரையாற்றுகிறார். இரவு பக்த சபைகளின் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 2-ம் நாள் முதல் 6-ம் நாள் திருவிழா வரை தினமும் மாலை செபமாலை, திருப்பலி, இரவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
7-ம் நாள் காலை 5 மணிக்கு தூய ராயப்பர் சின்னப்பர் ஆலயத்தில் திருப்பலியும், 5.30 மணிக்கு புனித அந்தோணியார் ஆலயத்திலும், 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 10 மணிக்கு நற்கருணை ஆராதனை, மாலை நற்கருணை ஆசீர், இரவு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழாவும் நடக்கிறது. 8-ம் நாள் காலை நோயாளிக்கான சிறப்பு திருப்பலியும், 9-ம் நாள் மாலை இரவு 7 மணிக்கு வாணவேடிக்கையும், 7.30 மணிக்கு நூற்றாண்டு சிறப்பு தேர்ப்பவனியும் நடக்கிறது.
10-ம் நாள் காலை 5.30 மணிக்கு திருப்பலி, 7 மணிக்கு பெருவிழா திருப்பலியும் நடக்கிறது. இதில் கோட்டார் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். இரவில் நன்றி வழிபாடும், நற்கருணை ஆசீர் மற்றும் இன்னிசை கச்சேரி நடக்கிறது.
முன்னதாக நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 19-ந் தேதி காலை 10 மணிக்கு ‘புற்று நோயில்லா குமரி மாவட்டம் கடியபட்டணம்‘ என்ற தலைப்பில் 1000 பேர் பங்கேற்கும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் கரோலின் கீதா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை கிங்ஸ்லி ஜோன்ஸ், இணைபங்குதந்தை சைமன், பங்கு பேரவை தலைவர் ஜோசப் சுந்தர், செயலாளர் கார்மேலியன், பொருளாளர் மார்ட்டின் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

Next Story