என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உவரி அந்தோணியார் ஆலய திருவிழா
    X

    உவரி அந்தோணியார் ஆலய திருவிழா

    உவரி அந்தோணியார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
    தென் தமிழகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் புகழ் பெற்றது, நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி அந்தோணியார் ஆலயம். இந்த ஆலயத்தில் அந்தோணியார் நினைவுநாளையொட்டி ஆண்டுதோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 13 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் ஆலயத்தில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் மறையுரையும் நடந்தது. 12-ம் திருநாளன்று இரவு சப்பர பவனி நடந்தது. 13-ம் திருநாளன்று காலையில் திருப்பலியும், அதனை தொடர்ந்து கொடி இறக்கமும் நடந்தது.

    அன்று இரவில் திவ்ய நற்கருணை பவனி, ஆசீர்வாத ஜெபம் முதலியவை நடைபெற்றது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் மற்றும் ஊர் பொதுமக்கள், நிதி குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×