என் மலர்
ஆன்மிகம்

நாகை அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகை முதல் கடற்கரை சாலையில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
அதைதொடர்ந்து திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான பேர் கலந்து கொண்டனர். அதைதொடர்ந்து விழா நாட்களில் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, செபமாலை, நவநாள் செபம், சிறிய தேர் பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர் பவனி வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. அதைதொடர்ந்து 26-ந்தேதி ஆடம்பர கூட்டு பாடல் திருப்பலியும், தேர் பவனியும், மாலை கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Next Story