என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    ஒருவன் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் கடவுளும் அவனை மன்னிக்க மாட்டார்
    இரக்கம்ற்ற பணியாளன் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமாணக் கதையாகும். இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் லூக்கா17:3-4 இலும் மத்தேயு18:21-35 இலும் காணப்படுகிறது. இது இயேசுவின் சீடரான பேதுரு இயேசுவிடம் தன் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் தனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டப்போது பதிலாக கூறிய உவமையாகும். இது பாவ மன்னிப்பு பற்றியது.

    அரசர் ஒருவர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குறிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.

    உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து," என்னைப் பொறுத்தருள்க எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்" என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.
    இரக்கம்ற்ற பணியாளன்

    ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனரியம் (denarius) கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு," நீ பட்ட கடனைத் திருப்பித் தா" எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.

    ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் அரசனிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து," பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன்.

    நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லாவா? என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

    பொருள் :

    ஒருவன் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் கடவுளும் அவனை மன்னிக்க மாட்டார் என்பது கருத்தாகும்.
    இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனைகள் எந்த நோக்கத்திற்காக, குறிக்கோளுக்காக அவருக்கு ஏற்பட்டன என்ற கேள்விக்குப் பதில் பல விதங்களில் பல காலங்களில் தரப்பட்டுள்ளது.
    இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனைகள் எந்த நோக்கத்திற்காக, குறிக்கோளுக்காக அவருக்கு ஏற்பட்டன என்ற கேள்விக்குப் பதில் பல விதங்களில் பல காலங்களில் தரப்பட்டுள்ளது. மரபு வழி விளக்கம் இது: மூன்று சோதனைகள் வழியாக இயேசு மூன்று பாவங்களுக்கு உட்படுமாறு சோதிக்கப்பட்டார். ஆனால், அவர் தம்மைச் சோதித்த அலகையை முறியடித்து, சோதனைகளை வென்றார். அந்த மூன்று சோதனனைகள் இவை:

    அகங்காரம் என்னும் பாவம்: இயேசு உச்சியிலிருந்து குதித்தால் அவர் கீழே விழுந்துவிடாமல் கடவுளின் தூதர்கள் அவரைக் காக்க மாட்டார்களா என்னும் சோதனை வழி வெளிப்பட்டது.

    போசனப் பிரியம் (பெருந்தீனி விருப்பம்) என்னும் பாவம்: இயேசு கற்களை அப்பமாக மாற்றித் தம் பசியைத் தீர்க்க முடியாதா என்னும் சோதனை வழி வெளிப்பட்டது.

    பேராசை என்னும் பாவம்: உலக அரசுகள் மீது அதிகாரம் செலுத்தலாமே என்னும் சோதனை வழி வெளிப்பட்டது.

    நோன்பு இருந்த ஒருவர் தம் பசியை ஆற்ற முனைந்தால் அதை "பெருந்தீனி விருப்பம்" என்று கூற முடியாது என்பதால் அதை ஓர் உயர்வு நவிற்சி அணி எனலாம் என்று ஜோன்சு என்பவர் கருத்துத் தெரிவிக்கிறார்.

    பியோதர் தஸ்தயெவ்ஸ்கி என்னும் புதின ஆசிரியர் "கரமாசோவ் சகோதரர்கள்" என்னும் தம் புதினத்தின் ஒரு பாத்திரத்தின் வழி தருகின்ற விளக்கம் இது: இயேசு இவ்வுலகில் மெசியாவாக, மீட்பராக வந்தார். ஆனால் எத்தகைய மெசியா அவர்? அவர் கடவுளின் திருவுளத்திற்கு அமைந்து, அவரிடத்தில் நம்பிக்கை கொண்டவராகத் தமது பணியை ஆற்றுவாரா அல்லது தமது சொந்த விருப்பப்படி, அதிகாரத்தைக் கைப்பற்றி கொடுங்கோல் மன்னன் போல அரசுகளைக் கையகப்படுத்தி மக்களை ஒடுக்குவாரா? இது இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனை. அவர் முன்னிலையில் அதிகார மமதை ஒரு பக்கம் கீழ்ப்படிதல் மறுபக்கம் என்று இரு முடிவுகள் வைக்கப்பட்டன. அவர் எதைத் தேர்ந்தெடுப்பார்? - இதுவே இயேவுக்கு ஏற்பட்ட சோதனை. [17]

    எனவே, இயேசு எந்த முடிவைத் தேர்ந்தெடுக்கும்படி சோதிக்கப்பட்டார்?

    தமக்கு ஏற்படுகின்ற இன்னல்களிலிருந்து தம்மை விடுவிப்பது அவர் பணியா? (கற்களை அப்பமாக்கி உண்ணுவதற்கான சோதனை)
    எல்லாரும் காணும்படி மந்திர மாயஜால வித்தைகள் நிகழ்ந்த்தி மக்களைக் கவர்வது அவரது பணியா? (கோவில் முகட்டு உச்சியிலிருந்து கீழே குதித்தாலும் காயம் ஏற்படாமல் தப்பிக்க சோதனை) உரோமையரின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மக்களை விடுவிக்கின்ற அரசியல் விடுதலைப் போராளியாக அவர் மக்களுக்குத் தம்மைக் காட்டுவாரா? (உலக அரசுகள் மீது ஆட்சி அதிகாரம் பெறுவதற்கான சோதனை)

    ஜான் ஹவட் யோடர் (John Howard Yoder) என்பவர் எழுதிய “இயேசுவின் அரசியல்” (The Politics of Jesus) என்னும் நூலில் கூறுவது: இயேசு பாலைநிலத்தில் சந்தித்த சோதனைகள் பிற்காலத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் அரசியல் தலைவராக அவர் மாறும்படியாக அவருக்கு ஏற்பட்ட சோதனைகளின் முன் அறிவிப்புப் போல அமைந்தன. அச்சோதனைகள் கீழ்வருவன:

    இயேசு பாலைநிலத்தில் ஆயிரக் கணக்கான மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவு அளித்தார். ஐந்து அப்பங்களையும் சில மீன்களையும் பலுகச் செய்து அவர் மக்களுக்கு உணவளித்தார். உடனேயே மக்கள் அவரைத் தம் அரசராக ஆக்கிவிட முயன்றார்கள். அச்சோதனைக்கு இடம் கொடுப்பதா?

    இயேசு எருசலேம் கோவிலுக்குச் சென்று அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களை விரட்டியடித்தார். கோவில் மீது தமக்கு அதிகாரம் உண்டெனக் காட்டினார். அக்கட்டத்தில் அவருக்கு மக்களுடைய ஆதரவு தாராளமாக இருந்தது. ஓர் அரசியல் இயக்கத்தைத் தொடங்கிவிட்டால் என்ன என்ற விதத்தில் ஏற்பட்ட சோதனைக்கு இடம் கொடுப்பதா?

    இயேசு தாம் துன்பங்கள் அனுபவிக்குமுன் கெத்சமனி தோட்டத்தில் தந்தையை நோக்கி மன்றாடிக்கொண்டிருந்த வேளையில் அவரைக் கைதுசெய்ய வந்தவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வானதூதர்களின் படையை வரவழைக்கின்ற ஒரு சோதனை ஏற்பட்டது. அச்சோதனைக்கு இடம் கொடுப்பதா?

    இவ்வாறு இயேசுவின் சோதனைகளை விளக்குகிறார் யோடர்.
    இறைவன் தான் படைத்த எல்லாருக்குமே உலகில் வாழத்தேவையான அனைத்தையும் அவர் நிர்ணயித்தபடி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
    எதெல்லாம் நன்மையாகத் தெரிகிறதோ, அதையெல்லாம் பெற்று விட வேண்டும் என்பது மக்களிடம் இயல்பாக காணப்படும் எண்ணம். பெற்றுவிடக் கூடியதை, யாரையெல்லாமோ பிடித்து பெறுவதற்காக முயற்சிக்கின்றனர். பெற முடியாததற்காக, அவரவரின் இறைவனிடம் வேண்டுதல் வைக்கின்றனர். கிறிஸ்தவத்தைப் பொறுத்த அளவில், இறைவேண்டலுக்கு அடிப்படை தகுதி தேவைப்படுகிறது.

    இறைவன் தான் படைத்த எல்லாருக்குமே உலகில் வாழத்தேவையான அனைத்தையும் அவர் நிர்ணயித்தபடி கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இதில் பக்தன், பாவி, வேறு மதம், நாத்திகன் என்ற வகைப்பாடுகள் கிடையாது. பாவிகளுக்கும் அவர் வழியைக் காட்டுகிறார் (சங்.25;8).

    அந்த வகையில் இயல்பாகக் கிடைக்கும் நன்மைகள் என்பது வேறு, இறைவனால் அருளப்படும் நன்மைகள் என்பது வேறு. உலக ரீதியான தகுதிகள் இல்லை என்றால்கூட குறிப்பிட்ட சில நன்மைகளைப் பெற்றிருப்பது, இறைவன் அளிக்கும் நன்மை அல்லது ஆசீர்வாதமாக கருதலாம். ஆனால் இப்படிப்பட்ட நன்மைகள் வந்து சேர வேண்டுமென்றால், பக்திக்கான தகுதியை பக்தன் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். அது என்ன?

    மிகப்பெரிய செல்வந்தனாக இருந்த பக்திமான் யோபு, அனைத்து செல்வத்தையும் திடீரென இழந்ததோடு, உடல் நலனையும் இழந்ததால் உலகத்தில் வாழும் தகுதியை இழந்தவன்போல் காணப்பட்டான். செல்வச்செழிப்புடன் இருக்கும் உண்மை பக்தன், வாழத் தகுதியற்ற நிலையை அடைந்தாலும்கூட பக்தியில் இருந்து மாறவே மாட்டான் என்பது இறைவனின் கருத்தை யோபுவின் வாழ்க்கை பிரதிபலிக்கிறது.

    ஆனால் இந்த கருத்தை சாத்தான் எதிர்த்தான். தனது கருத்தை பக்தர்கள் அனைவருக்கும் உணர்த்துவதற்காக, யோபுவின் வாழ்க்கையை இறைவன் தேர்ந்தெடுத்தார். அனைத்து ரக துன்பங்களையும் அவன் வாழ்க்கையில் கொண்டு வர சாத்தானுக்கு இறைவன் அனுமதித்தார்.

    யோபு அனைத்து வகை துன்பங்களினாலும் கசக்கி பிழியப்பட்டான். வியாதியினால் உடல் நாறிப்போனாலும், அவன் கொண்ட பக்தியின் மணம் மாறவில்லை என்பதை உலகுக்குக் காட்டி, தனது கருத்தை இறைவன் நிலைநிறுத்தினார். வேதத்தில் யோபுவின் சம்பவம் எழுதப்பட்ட பிறகுதான், அவனுக்கு துன்பம் வந்ததற்கான காரணத்தின் பின்னணி உலகத்துக்கு புரிய வந்தது.

    அந்த உண்மையின் பின்னணி புரியாததால், யோபுவைப் பார்க்க வந்திருந்த அவனது நண்பர்கள், அவனுக்கு துன்பம் நேர்ந்த சம்பவத்தின் உண்மையைத் தொடாமல், ஆளாளுக்கு ஒரு கருத்தைக் கூறினார்கள். அவர்கள் கூறியதும் சத்தியம்தான் என்றாலும்கூட, யோபுவின் விஷயத்தில் அவை பொருத்த மானவை அல்ல. எனவேதான் யோபுவுக்கு நண்பர்கள் மேல் பகை ஏற்பட்டது (யோபு 27;5,7).

    யோபு பொதுவான கருத்தாகக் கூறாமல், ‘என் பகைவன், ஆகாதவன், என் விரோதி, அக்கிரமக்காரன்’ என்று அவர்களை தன்னுடன் இணைத்துப் பேசுவதை வைத்து, அவனிடமிருந்த பகையை அறியலாம். அறிமுகம் ஆகாதவர்களுடன் ஏற்படும் பகையைவிட, நன்றாகப் பழகினவர்களுடன் உருவாகும் பகை மிகக்கொடியது.

    அப்படிப்பட்ட பகையை இதயத்தில் வைத்துக் கொண்டு ஒருவன் தன்னை இறைபக்தன் என்று கூறிக்கொள்வது அபத்தம். ஏனென்றால், பகைக்கப்படுபவனை சபித்து, பக்திக்கான நிதானத்தை இழக்கச் செய்யும் சக்தி, பகைக்கு உண்டு.

    இறைவனைப் பற்றிய விஷயத்தில் நிதானத்தோடு சரியாகப் பேசியிருந்தாலும் (யோபு 42;7,8), நண்பர்களைப் பற்றிய விஷயத்தில் கடும் வார்த்தைகளை யோபு பேசியிருந்தான். எனவேதான் இரண்டு தரப்பினருக்கும் இடையே சமாதானத்தை உருவாக்க இறைவன் விரும்பினார்.

    யோபுவின் நண்பர்களிடம், ‘யோபுவின் இடத்துக்குப் போய் பலி செலுத்த வேண்டும். யோபு உங்களுக்காக வேண்டுதல் செய்யும்போது அவனின் முகத்தைப் பார்ப்பேன்’ என்று இறைவன் கூறினார் (யோபு 42;8). உள்ளத்தில் பகை வைத்திருந்தால் அது முகத்தில் தெரியவரும் என்பதால்தான் இறைவன் அப்படி குறிப்பிட்டார்.

    யோபு உத்தமன் என்பதால் உங்களுக்காக வேண்டும்போது, அதை நான் கேட்டு, உங்களை தண்டிக்கமாட்டேன் என்று முன்கூட்டியே அவனது நண்பர்களிடம் இறைவன் கூறினார். கடுமையான துன்பத்திலும் தன் மீதான பக்தியை விட்டுவிடாத யோபுவால், பக்திக்கு ஆகாத பகையை எளிதாக விட்டுவிட முடியும் என்பது இறைவனுக்கு தெரிந்திருந்த ஒன்றுதான்.

    நல்ல நட்பில் இருக்கும் நண்பர்களுக்காக வேண்டுதல் செய்வது மிக எளிது. இதற்காக இறைவன் தனியாக கட்டளையிடவோ, அந்த வேண்டுதலின்போது முகத்தைப் பார்க்கவோ தேவையில்லை. ஆனால் பகையாளிக்காக ஜெபிப்பது மிகமிகக் கடினம். எனது குடும்பத்தைவிட என்னை பகைப்பவனின் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று இதயப்பூர்வமான வேண்டுதலை, ஒரு உண்மையான கிறிஸ்தவ பக்தனால் மட்டுமே வைக்க முடியும். இப்படிப்பட்ட தூய இதயத்துக்குச் சொந்தக்காரனே, மற்றவனுக்காக வேண்டுதல் செய்யும் தகுதியை உடையவனாகிறான்.

    ஆனால், நண்பர்களுக்காக வேண்டுதல் செய்துவிட்டால், இறைவன் அவனது துன்பங்களை நீக்கிவிட்டு, இரட்டிப்பு ஆசீர்வாதத்தை அள்ளி வழங்குவார் என்று நுனிப்புல் போதனையை சிலர் பேசி வருகின்றனர். இதன்படி பார்த்தால், நண்பர்களின் தவறுகளுக்காக இறை வேண்டல் செய்துவிட்டு, யோபுபோல ஆசீர்வாதங்களை எல்லாருமே எளிதாகப் பெற்றுவிட முடியுமே.

    தன்னை துன்புறுத்துகிறவர்கள் யார்? எந்த சமுதாயத்தினர்? என்பதையெல்லாம் பார்க்காமல், இறைவனை நோக்கி அவர்களின் மன்னிப்புக்காக வேண்டிய ஸ்தேவானின் வேண்டுதல் கேட்கப்பட்டதால்தான், கொலையாளி சவுல், ஆன்மிகவாதி பவுலாக மாறினான் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

    தன்னிடம் இருந்து மன்னிப்பை பெற்ற பக்தன், தன்னைப்போல மற்றவர்களுக்கு மன்னிப்பை அருளுகிறானா, என்று அவனது முகத்தை பார்க்கிறவராக இறைவன் இருக்கிறார். நம் முகத்தில் இருப்பது பகையா? பாசமா?.

    இயேசு சந்தித்த மூன்றாம் சோதனை என்னவென்று பார்க்கலாம்.
    இறுதி சோதனையின் போது அலகை இயேசுவை “மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,” தன்னை வணங்கச் சொன்னது (மத்தேயு 4:8-9). இந்த “உயர்ந்த மலை” யாது என்பது குறித்துப் பல விளக்கங்கள் தரப்படுகின்றன. அவை:

    எருசலேம் நகரிலிருந்து எரிக்கோ நகருக்குச் சென்ற சாலையில் ஒரு சுண்ணாம்புக் கல் குன்று உள்ளது. அது “குவாராந்தானியா குன்று” என்று அழைக்கப்படுகிறது. அலகை இயேசுவை அக்குன்றின்மேல் நிறுத்தி சோதித்திருக்கலாம்.[21]

    ஜாண் கால்வின் இயேசுவை அலகை ஓர் “உயர்ந்த இடத்திற்குக் கொண்டுசென்று” உலக அரசுகளைக் காட்டி, அவரை சோதித்தது என்று கூறுகிறார். ஜெனீவா விவிலியம் அவ்வாறே மொழிபெயர்க்கிறது.

    ”உலக அரசுகள்” என்பது நிலப்பகுதியை அல்ல, மாறாக “உலகை ஆளுகின்ற அதிகாரம்” என்ற பொருளைக் குறிக்கிறது.

    ”உலக அரசுகள் அனைத்தையும்” அலகை காட்டியது என்னும்போது, இயேசுவின் காலத்தில் அக்கூற்று ஒரு சிறு நிலப்பகுதியையே குறித்தது. எனவே, அதை ஓர் உயர்ந்த இடத்திலிருந்து பார்க்க முடிந்தது. ஆயினும் அமெரிக்காக்கள் மற்றும் ஆஸ்திரேலியா பகுதி மக்களினங்களை இங்கு அடக்க முடியாது.

    ”உயர்ந்த குன்று” என்பதை எழுத்துக்கு எழுத்து பொருள் கொள்ளலாகாது. சோதனைகள் இயேசுவின் உள்ளத்தில் ஏற்பட்ட அனுபவங்களே. அந்த அனுபவங்களையே இயேசு ஓர் உவமை வழியாக எடுத்துக் கூறினார்.[22]

    இயேசு தன்முன்னால் விழுந்து தன்னை வணங்கினால் அவருக்கு உலக அரசுகளைக் கொடுப்பதாகக் கூறி, அலகை அவரை சோதித்தது (மத்தேயு 4:8-9).

    அதற்கு இயேசு கொடுத்த பதில் இது: “அகன்று போ, சாத்தானே. ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” (மத்தேயு 4:10).
    இயேசு சந்தித்த இரண்டாம் சோதனை என்னவென்று பார்க்கலாம்.
    இயேசு சந்தித்த இரண்டாம் சோதனையில், அலகை இயேசுவை “திருநகரில் உள்ள கோவில்” உச்சிக்குக் கொண்டுசெல்வதாக உள்ளது. இதில் வருகின்ற “திருநகரம்” எருசலேம் என்றும், “கோவில்” என்பது “எருசலேம் நகர் கோவில்” என்றும் கிறித்தவர்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

    மத்தேயு நற்செய்தியில் “கோவில்” என்னும் சொல்வழக்கு 17 தடவை வருகிறது. அதில் ஒரு தடவை கூட “எருசலேம் கோவில்” என்று வெளிப்படையாகக் கூறப்படவில்லை. லூக்கா, நற்செய்தியில் தெளிவாக “எருசலேம் கோவில்” என்று கூறப்படுகிறது. அந்நற்செய்தியின் பெறுநரான “தியோபில்” யூத இனத்தவர் அல்ல என்பதால் அவருக்குத் தெளிவாகப் புரியும் அளவில் “எருசலேம் கோவில்” என்று எழுதப்பட்டதாகவும் அறிஞர் கருதுகின்றனர்.[20]

    கோவிலின் “உயர்ந்த பகுதிக்கு” இயேசுவை அலகை கொண்டு சென்றதாக நற்செய்திகள் கூறுகின்றன. இந்த “உயர்ந்த பகுதி” எதைக் குறிக்கிறது என்று தெளிவில்லை. இது கோவில் கட்டடத்தின் கூரையாக இருக்கலாம்; அல்லது “மதில் உச்சியாக” இருக்கலாம்; அல்லது வெளியே நீண்டு நிற்கின்ற கோவில் மூலையின் முகடாக இருக்கலாம்.[18]

    ”பின்னர் அலகை இயேசுவை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ‘நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; ‘உம்மைப் பாதுக்காக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்’ என்றும் ‘உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது’ என்றது.” (லூக்கா 4:9-11).

    ஆனால் இயேசுவோ அலகையின் சோதனைக்கு இசையவில்லை. அவர், கடவுள் தமக்குக் கையளித்த பணியைப் பிரமானிக்கமாக இறுதிவரை நிறைவேற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தார்.

    எனவே, இயேசு அலகைக்குத் தகுந்த பதில் கொடுத்தார். அப்பதிலும் விவிலியத்தின் நூலான இணைச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது: இயேசு அளித்த பதில்: “இயேசு அலகையிடம், “’உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ எனவும் எழுதியுள்ளதே” என்று சொன்னார்” (மத்தேயு 4:7).

    இறையரசில் நுழைய வேண்டுமென்றால் நம்மை நாமே ஆயத்தம் செய்து கொள்ளவேண்டும். தூய ஆவியானவர் எனும் எண்ணெய் நம்மிடம் இல்லாவிட்டால் நமது வாழ்க்கை அழிவுக்குள் சென்று விடும்.
    மாபெரும் திருமண விருந்து.

    மணமகன் அழைத்தல் என்பது அந்நாட்களில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்த ஒரு நிகழ்ச்சி. அதன்படி மணமகன் வரும்போது மணமகளின் தோழிகள் சிலர் கைகளில் எரியும் விளக்கை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

    இந்தத் திருமண விருந்திற்கு விளக்கை எடுத்துக் கொண்டு மணமகனை வரவேற்க பத்து தோழியர் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

    பத்துபேரும் மணமகளின் வீட்டுக்குக் குறித்த நேரத்தில் விளக்குகளோடு வந்து சேர்ந்தார்கள். ஆனால் அவர்களில் ஐந்துபேரிடம் விளக்கிற்குத் தேவையான எண்ணெய் இருக்கவில்லை. அவர்கள் அறிவிலிகளாக இருந்தார்கள். மற்ற ஐந்துபேரும் விளக்குகளுடன் தேவையான எண்ணெயையும் எடுத்துக் கொண்டு சென்றார்கள். அவர்கள் முன்மதி உடையவர்களாக இருந்தார்கள்.

    மணமகன் வெளியூரிலிருந்து வரவேண்டும். தாமதமாகிக் கொண்டே இருந்தது. இரவு நீண்ட நேரமாகிவிட்டதால் எல்லோரும் கிடைத்த இடத்தில் படுத்து உறங்கிவிட்டார்கள்.

    நள்ளிரவு, அவர்களுடைய அமைதியான நித்திரையைக் கலைத்தது அந்த அழைப்பு.

    ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’.

    தூங்கிக் கொண்டிருந்த தோழிகளை அந்தக் குரல் தட்டி எழுப்பியது.

    அவர்கள் எல்லோரும் எழுந்து தங்கள் விளக்கின் திரிகளைத் தூண்டிவிட்டு விளக்குகளைக் கொளுத்தினார்கள்.

    ஐந்து அறிவிலிகளின் விளக்குகளும் எண்ணெய் இல்லாததால் அணைந்து போயின.

    ‘ஐயோ.. எங்களுடைய விளக்குகள் அணைகின்றன. எங்களுக்குக் கொஞ்சம் எண்ணெய் கொடுங்கள்’  என்று அவர்கள் முன்மதி உடையவர்களிடம் கேட்டார்கள்.

    ‘அடடா.. நீங்கள் எண்ணெய் எடுத்து வரவில்லையா? எங்களிடம் இருக்கும் எண்ணெய் எங்களுக்கு மட்டும் தான் சரியாக இருக்கும். மன்னியுங்கள்’ முன்மதியுடைய அந்தப் பெண்கள் சொன்னார்கள்.

    ‘அப்படிச் சொல்லாதீர்கள். இருப்பதில் பாதியைக் கொடுங்கள். பகிர்ந்து கொள்வோம்...’ அவர்கள் கெஞ்சினார்கள்

    ‘இல்லை... நாங்கள் இருப்பதில் பாதியைக் கொடுத்தால் எங்கள் விளக்குகளும் அணையும், உங்களுக்கும் எண்ணெய் பற்றாமல் போகும். அதனால் நீங்கள் பேசாமல் வணிகர்களிடம் போய் எண்ணெயை வாங்கிக் கொள்ளுங்கள்’.

    ‘ஐயோ அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. மணமகன் வந்து விட்டார். தாமதமாகிவிடும்...’ அறிவிலிகள் பதட்டமானார்கள்.

    ‘இதெல்லாம் நீங்கள் முன்னமே யோசித்திருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கடைக்குச் சென்று எண்ணெய் வாங்கி வந்திருக்கலாம் அல்லவா? எங்களை மன்னியுங்கள். உங்களுக்கு எண்ணெய் தரும் பேச்சுக்கே இடமில்லை’ அவர்கள் உறுதியாய் சொல்ல அறிவிலிகள் எங்காவது எண்ணெய் கிடைக்குமா என்று வணிகர்களைத் தேடி ஓடினார்கள்.

    இந்த ஐந்து தோழியரும் சென்று மணமகனை வரவேற்றார்கள். மணமகன் மணமகளின் தோழியரோடு சென்று திருமண மண்டபத்தில் நுழைய, மண்டபத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன.

    எண்ணெயை தேடிப்போன தோழியர் தெருவெங்கும் ஓடினார்கள். நள்ளிரவு நேரத்தில் அவர்களுக்கு எங்கும் எண்ணெய் கிடைக்கவில்லை. நீண்ட நேர அலைச்சலுக்குப் பின் எப்படியோ கொஞ்சம் எண்ணெய் பெற்றுக் கொண்ட கன்னியர்கள் மண வீட்டை நோக்கி ஓடினார்கள்.

    திருமண மண்டபம் அடைக்கப்பட்டிருந்தது. தோழியர் திகைத்தனர்.

    ‘ஐயா... யாராவது கதவைத் திறந்து விடுங்கள். நாங்கள் மணமகளின் தோழியர்’ அவர்கள் கத்தினார்கள். அவர்களுக்குக் கதவு திறந்து விடுவார் யாருமில்லை.

    அவர்களோ தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தார்கள்.

    மணமகன் அவர்களிடம் ‘நீங்கள் யார் என்பதே எனக்குத் தெரியாது. சும்மா நின்று கத்திக்கொண்டிருக்காமல் போய் விடுங்கள்’ என்றார்.

    ‘ஐயா.. நாங்கள் உம்மை எதிர்கொள்ள வேண்டிய கன்னியர்கள். விளக்கில் எண்ணெய் இல்லாததால் தாமதம் ஆகிவிட்டது. மன்னியுங்கள். கதவைத் திறந்து விடுங்கள்’ என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினார்கள் அந்த அறிவில்லாத கன்னியர்கள்.

    ‘இல்லை. உங்களை எனக்குத் தெரியாது. விழிப்பாய் இருக்காதவர்கள் வெளியே நிற்கவேண்டியது தான்’ மணமகன் உறுதியாக சொன்னார். மண மண்டபம் கோலாகலமாக இருக்க, விழிப்பாய் இல்லாதவர்கள் வெளியே தனித்திருந்து தங்கள் தவறுக்காக புலம்பி அழுதனர்.

    இறையரசில் நுழைய வேண்டுமென்றால் நம்மை நாமே ஆயத்தம் செய்து கொள்ளவேண்டும். தூய ஆவியானவர் எனும் எண்ணெய் நம்மிடம் இல்லாவிட்டால் நமது வாழ்க்கை அழிவுக்குள் சென்று விடும்.

    இயேசு சொன்னார், ‘விழிப்பாய் இருங்கள். தலைவன் எப்போது வேண்டுமானாலும், எந்த ஜாமத்தில் வேண்டுமானாலும் வீட்டை வந்தடையலாம். எனவே விழிப்பாய் இருங்கள். தலைவன் வரும்போது விழிப்பாய் இருக்கும் ஊழியன் பேறுபெற்றவன். அவனுக்கே தலைவனின்  சலுகைகள் கிடைக்கும்’.

    ‘திருடன் எந்த ஜாமத்தில் வருவான் என்பதை யாரும் அறிய முடியாது. அவன் வரும்போது விழிப்பாய் இருந்தால் வீட்டைக் காத்துக் கொள்ள முடியும்’.  

    முடிவு எப்போதுவேண்டுமானாலும் வரலாம், விழிப்பாய் இருப்பவர்களே இறையரசில் நுழைவார்கள் என்பதே  கற்றுக்கொள்ளும் பாடமாகும்.
    பாளையங்கோட்டை சவேரியார் ஆலயத்தில் நற்கருணை பவனி நடந்தது.
    பாளையங்கோட்டை சவேரியார் பேராலயத்தின் சார்பில் ஆண்டுதோறும் நற்கருணை பவனி, ஏசுவின் திருவுடல், திருரத்தப் பெருவிழா என்ற பெயரில் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான நற்கருணை பவனி நேற்று இரவில் பாளையங்கோட்டை அந்தோணியார் ஆலயத்தில் இருந்து தொடங்கியது. இதையொட்டி அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மறைமாவட்ட முதன்மை குரு சேவியர் டெரன்ஸ் தலைமையில் நடந்தது.

    பின்னர் அங்கிருந்து நற்கருணை பவனி தொடங்கி, சவேரியார் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த பவனியில் மறை மாவட்ட பொருளாளர் மோயிசன், சவேரியார் கலைமனைகளின் அதிபர் டெனியஸ் பொன்னையா மற்றும் பங்குத்தந்தைகள் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர். பவனி முடிந்த பிறகு சவேரியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும், நற்கருணை ஆசீரும் நடந்தது.
    எந்தெந்த சோதனைகளை இயேசு சந்தித்தார் என்று மாற்கு கூறவில்லை. மாறாக, மத்தேயுவும் லூக்காவும் அந்த சோதனைகள் யாவை என்று கூறுகின்றனர்:
    கடவுளின் தூய ஆவி இயேசுவை ஓர் பாலைநிலத்திற்குக் கொண்டுசெல்கிறார். அங்கு இயேசு நோன்பிருக்கிறார். அதே பாலைநிலப் பின்னணியில் தான் இயேசு அலைகயால் சோதிக்கப்படுகிறார்.[19]அலக்சாண்டர் ஜோண்சு என்பவர் தரும் தகவல் இது:

    இயேசு சோதிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்ற பாலைநிலம் எருசலேம் நகருக்கும் எரிகோ நகருக்கும் இடையே பரந்துகிடக்கின்ற, பாறைகள் நிறைந்த வனாந்தரப் பகுதி என்று ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே அடையாளம் காட்டப்பட்டு வருகிறது. அதில் “குவாராந்தானியா குன்று” (Mount Quarantania - பொருள்: நாற்பது நாள் தொடர்பான மலை) பகுதியில் இயேசு நோன்பிருந்தார்.

    பாலைநிலம் என்பது, யூத மரபில், மக்கள் வாழும் சமுதாயத்திற்குப் புறம்பே கிடக்கும் பாழடைந்த நிலமாகவும், அங்கே அலகைகள் உலவுவதாகவும் கருதப்பட்டது. லேவியர் 16:8-10 போன்ற சில பாடங்களில் “போக்கு ஆடு” என்று அழைக்கப்படுவதை சிலர் “அசாசேல்” என்னும் அலகையாயக் கொண்டு அது பாலைநிலத்தில் உலவியதாகக் கொண்டனர்.

    வேறு சிலர், பாலைநிலத்தை இன்பவனமான ஏதேன் தோட்டத்தோடு தொடர்புபடுத்தியுள்ளனர். அவர்கள் கருத்துப்படி, முதல் மனிதரான ஆதாம் ஏதேன் தோட்டத்தில் இருந்ததுபோல, புது மனிதரும் புதிய ஆதாமுமான இயேசு பாலைவனத்தில் இருந்தார். இக்கருத்துக்கு மத்தேயு நற்செய்தியில் ஆதாரம் இல்லை என்று கூறி, அறிஞர்கள் மேற்கூறிய விளக்கத்தை ஏற்பதில்லை.

    பாலைநிலம் என்பது விவிலியத்தின் வேறு இடங்களோடு தொடர்பு படுத்தப்படுகிறது. அதாவது, இசுரயேல் மக்கள் நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் அலைந்து வழிநடந்தனர் (விடுதலைப் பயணம் நூல்). மோசேயும் பாலைநிலத்தில் பல நாள்களைக் கழித்தார். அந்த நிகழ்ச்சிகள் இயேசுவின் பாலைநில அனுபவத்திற்கு முன்காட்சிகள் போல் உள்ளன.[18]

    இயேசு தம்முடைய பசியைத் தீர்த்திட கற்களை அப்பமாக மாற்றலாமே என்று கூறி அலகை அவரை சோதிக்கிறது. அதற்காக அலகை இயேசுவை நோக்கி “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றது. ஆனால் இயேசு மறுமொழியாக, “மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்” என்று மறைநூலில் எழுதியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் (காண்க: திருப்பாடல்கள் 91:12). அலகையின் சோதனையை முறியடிக்கிறார் (மத்தேயு 4:1-4).
    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 6.30 மணிக்கு பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ் கொடியேற்றுகிறார். அதை தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீர், இரவு கலை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 10-ந் தேதி வரை இரவில் கலை நிகழ்ச்சிகள் வெவ்வேறு குழுவினர் சார்பில் நடைபெறுகிறது.

    11-ந்தேதி மாலை 6.30 மணிக்கு ரதவீதிகள் வழியாக நற்கருணை பவனி நடக்கிறது. 12-ந்தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருவிழா மாலை ஆராதனை, இரவு 9.30 மணிக்கு தேர்பவனி ஆகியவை நடைபெறுகிறது. 13-ந்தேதி காலை 5 மணிக்கு தேரில் வைத்து திருவிழா கூட்டு திருப்பலி, பகல் 2 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 7.30 மணிக்கு தேரில் நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலையில் வணக்க நாள் திருப்பலியும், மாலையில் ஜெபமாலையும், மறையுரையும், நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. வணக்கநாள் திருப்பலியை பள்ளிகள், பக்த சபையினர், பீடச்சிறுவர்கள், பாடகர் குழுவினர் ஆகியோர் சிறப்பிக்கின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ், உதவி பங்குத்தந்தை சூசைமணி, பங்குப்பேரவை துணைத்தலைவர் வின்சென்ட், செயலாளர் ஜோசப் பிளாரன்ஸ், இணைச்செயலாளர் மரிய செல்வம், பொருளாளர் டேவிட் ஜெயராஜ், பேரவை உறுப்பினர்கள் மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.
    ஒவ்வொரு நாளும் ஆண்டவர் தம் கிருபையினால் நம்மை வழிநடத்தி வந்திருக்கிறார்
    ஒவ்வொரு நாளும் ஆண்டவர் தம் கிருபையினால் நம்மை வழிநடத்தி வந்திருக்கிறார். அவருக்கு மகிமை உண்டாவதாக. இச்செய்தியில் தேவனுடைய சித்தத்திற்கு நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற தலைப்பில் உங்களுக்கு ஜெபத்தோடு எழுதுகிறேன்.

    தேவனுடைய சித்தத்தை அறியாமல் இன்று அநேகருடைய வாழ்க்கை கவலையும், கஷ்டமும் நிறைந்ததாக இருக்கிறதை நாம் அறிவோம். ஒவ்வொரு சிறிய காரியத்திலும் தேவனுடைய பரிபூரண சித்தத்தை நாம் அறிந்து செயல்பட வேண்டுமென கர்த்தர் விரும்புகிறார்.

    ‘நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது’. (யோவான் 4:34)

    மேற்கண்ட வசனத்தில் நம் அருமை ஆண்டவர் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றியதை நாம் காண்கிறோம். அவ்வண்ணமே நாமும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற வேண்டுமல்லவா?

    ‘அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார்’. (கலா 1:4)

    பிரியமானவர்களே! நமக்காக ஆண்டவர் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றியது போல் உங்கள் வாழ்வைக் குறித்த தேவ சித்தத்தை அறிந்து அதை நிறைவேற்றுவது தேவனுக்கு உகந்ததாகும்.

    துதிப்பது தேவ சித்தம்

    ‘எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள் அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது’. (தெச–5:18)

    தேவனுடைய பிள்ளையே! நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்திருக்கலாம், அறியாமலும் இருக்கலாம். ஆனால் நாம் எல்லாவற்றிற்காகவும் அவரை ஸ்தோத்தரிப்பது தேவ சித்தமாகும்.

    தேவனுக்கு ஸ்தோத்திரம் என்பது அவரை மகிமைப்படுத்துவது ஆகும். எப்படிப்பட்ட போராட்டங்கள் உங்களுக்குள் இருந்தாலும் அதற்காக தேவனைத் துதித்து பாருங்கள். துதிகளின் மத்தியில் வாசம் பண்ணும் நம் ஆண்டவர் உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் வாசம் பண்ணி உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார். ஆகவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆண்டவரைத் துதியுங்கள். அவருடைய கிருபையை புகழ்ந்து பாடுங்கள்.

    பொறுமையோடு இருப்பது தேவ சித்தம்

    ‘நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது’. (எபி 10:36)

    எனக்கன்பானவர்களே! நம்முடைய வாழ்வில் அவ்வப்போது சில இக்கட்டுகள் இடைஞ்சல்கள் வரும்போது சில தேவ பிள்ளைகள் தங்களுடைய விசுவாசத்தை நழுவ விட்டு அவிசுவாசமான வார்த்தைகளைப் பேசி தேவ கிருபையை இழந்து விடுகிறார்கள்.

    அதைப்போல குடும்ப வாழ்விலும் வாக்குத்தத்தம் பண்ணினவர் நிச்சயம் கிருபை செய்வார் என்ற நம்பிக்கையையும், தைரியத்தையும் இழந்து தவறான முடிவெடுக்கிறார்கள்.

    உதாரணமாக, சிலர் பொருளாதார காரியத்தில் கர்த்தர் எப்படியாகிலும் நமக்கு உதவி செய்வார் என்ற பொறுமையோடு இருக்காமலும், வாக்குத்தத்தத்தை நம்பாமலும் அவசரப்பட்டு கடன் வாங்கி தங்கள் காரியங்களை நிறைவேற்றுகிறார்கள். அதனால் வருகிற போராட்டங்களை மேற்கொள்ள முடியாமல் மிகவும் சோர்ந்து போய்விடுகிறார்கள்.

    பிள்ளைகள் வாழ்வில் தேவ சித்தம்

    ‘கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்’. (ஏசாயா 53:10)

    தேவனுடைய பிள்ளையே! ஆண்டவர் தம்முடைய சித்தத்தின்படியும், நமது மனவிருப்பத்தின்படியும் பிள்ளைகளை நமக்குக் கொடுக்கிறார். ஆனால் பிள்ளைகளை தேவனுக்கேற்ற விதத்தில் வளர்த்து அவர்கள் வாழ்க்கையில் தேவனுடைய சித்தம் இன்னதென்பதை அறிவது பெற்றோருடைய மிகப்பெரிய பொறுப்பாகும். குறிப்பாக பிள்ளைகளின் படிப்பு, ஆவிக்குரிய வாழ்க்கை, வேலை மற்றும் அவர்களுடைய எதிர்காலம் இவை அனைத்திற்காக பெற்றோர்கள் கருத்தாக அனுதினமும் ஜெபம் பண்ணி தேவசித்தத்திற்கு பிள்ளைகளை ஒப்புக் கொடுக்க வேண்டும். உலக மனிதர்கள் உலகப்பிரகாரமாய் தங்கள் காரியங்களை நடத்துவார்கள்.

    இயேசு சொன்னார்: ‘உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது’. (மத் 10:29)

    ஆகவே உங்கள் பிள்ளைகள் வாழ்வில் தேவனுடைய பரி பூரண சித்தம் நிறைவேற முற்றிலுமாய் உங்களை ஒப்புக்கொடுங்கள்.

    ஆகவே எனக்கன்பான தேவனுடைய பிள்ளைகளே! உங்கள் தனிப்பட்ட காரியங்கள், உங்கள் குடும்ப வாழ்க்கை, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எல்லாவற்றிலும் ஆண்டவர் ஆளுகை செய்து தமது தயவுள்ள சித்தத்தை நிறைவேற்ற முற்றிலுமாய் அர்ப்பணித்து விடுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வு ஆசீர்வாதமாக அமையும்.

    அப்போது ‘தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன். எனக்குச் சித்தமானவைகளை எல்லாம் அவன் செய்வான்’ (அப் 13:22) என்று அன்றைக்கு இவ்விதமாய் வாழ்த்தின ஆண்டவர் உங்களையும் வாழ்த்தி ஆசீர்வதிக்க வல்லவராயிருக்கிறார்.

    ‘கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்’ (சங்கீதம் 135:6)
    லூக்கா மற்றும் மத்தேயு இயேசுவின் சோதனை பற்றி எடுத்துக் கூறும் பகுதிகள் பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் வேற்றுமைகளையும் கொண்டுள்ளன.
    லூக்கா மற்றும் மத்தேயு இயேசுவின் சோதனை பற்றி எடுத்துக் கூறும் பகுதிகள் பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் வேற்றுமைகளையும் கொண்டுள்ளன. இரண்டு பாடங்களிலும் சோதனைகளை வரிசைப்படுத்தும் முறை வேறுபடுகிறது.

    இயேசு நாற்பது நாள் நோன்பிருந்த வேளையில் சோதிக்கப்பட்டதாக லூக்காவும், நாற்பது நாள் நோன்பிருந்த பிறகு சோதிக்கப்பட்டதாக மத்தேயுவும் கூறுகின்றனர். மாற்கு, லூக்கா, மத்தேயு ஆகிய மூவரும், இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலைநிலத்துக்குத் “தூய ஆவியால்” அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறுகின்றனர்.

    எந்தெந்த சோதனைகளை இயேசு சந்தித்தார் என்று மாற்கு கூறவில்லை. மாறாக, மத்தேயுவும் லூக்காவும் அந்த சோதனைகள் யாவை என்று கூறுகின்றனர்:

    * பசியுற்றிருந்த இயேசு கற்களை அப்பமாக மாற்றித் தம் பசியைத் தீர்த்துக்கொள்ளலாமே என்ற சோதனை;

    * அலகை இயேசுவை எருசலேம் கோவிலின் உயர்ந்த பகுதிக்குக் கொண்டுசென்று, அங்கிருந்து கீழே குதிக்குமாறும், அவ்வாறு செய்தால் அவர் கீழே விழுந்துவிடாமல் தம் தூதர்களை அனுப்பிக் கடவுள் காத்துக்கொள்வார் என்று விவிலியம் கூறுவதாகவும் எடுத்துச் சொல்லி, இயேசுவை சோதிக்கிறது.

    இங்கே அலகை திருப்பாடல்கள் 91:11-12 பகுதியை மேற்கோள் காட்டுகிறது. அப்பகுதி உண்மையில் கடவுள் தம்மை நம்புவோரை எப்போதுமே பாதுகாப்பார் என்று மட்டுமே கூறுகிறது. ஆனால் அலகையோ, கடவுளின் வல்லமையை வேண்டுமென்றே சோதிக்கும்படி இயேசுவைத் தூண்டுகிறது;

    * அலகை இயேசுவை ஓர் உயர்ந்த மலைக்கு இட்டுச் சென்று, உலக அரசுகளைக் காட்டி, இயேசு தன்னை விழுந்து வணங்கினால் அவற்றை அவருக்குக் கொடுப்பதாகக் கூறி சோதிக்கிறது.

    இயேசுவின் போதனைகளின்பால் ஈர்க்கப்பட்டவர்களில் நிக்கதேம் ஒருவர். பரிசேயரான அவர் இயேசுவின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டிருந்தார்.
    இயேசு வாழ்ந்த காலத்தில் பரிசேயர்கள் எனப்படும் குழுவினர் அவரை வெகுவாக எதிர்த்தனர். அவர்கள் சட்டங்களை மட்டுமே பிரதானமாகப் பார்த்தவர்கள். அவர்களுக்கு இயேசுவின் சட்டங்களைத் தாண்டிய அன்பின் போதனை பிடிப்பதில்லை. ஆனால் அவர்களில் இயேசுவின் போதனைகளின்பால் ஈர்க்கப்பட்டவர்களும் உண்டு.

    அவர்களில் ஒருவர் நிக்கதேம். பரிசேயரான அவர் இயேசுவின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டிருந்தார். ஒரு நாள் இரவில் அவர் இயேசுவைத் தேடி வந்தார்.

    ‘‘ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாம் அறிவோம். கடவுளின் அருளின்றி இப்படிப்பட்ட செயல்களை யாரும் செய்ய முடியாது’’ என்றார்.

    இயேசு அவருடைய புகழுரையில் மயங்கவில்லை. நேரடியாக நற்செய்தியை அவருக்கு வழங்கினார்.

    ‘‘இறையாட்சியைக் காண வேண்டுமானால், ஒருவன் மறுபடியும் பிறக்க வேண்டும்’’.

    அந்த செய்தி நிக்கதேமுக்குப் புதுமையாய் இருந்தது. ‘‘மறுபடியும் பிறப்பதா? பிறந்தபின் எப்படி ஒருவன் மீண்டும் தாயின் வயிற்றுக்குள் போக முடியும்?’’ என்று நிக்கதேம் கேட்டார்.

    ‘‘மறுபடி பிறப்பது தாயின் வயிற்றிலிருந்து அல்ல. தண்ணீராலும், தூய ஆவியாலும் பிறக்க வேண்டும்’’ –இயேசு சொன்னார்.

    நிக்கதேம் குழம்பினார். இயேசு தொடர்ந்தார், ‘‘மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர்’’ என்றார்.

    நிக்கதேம் இயேசுவின் போதனையை உற்றுக் கவனிக்க, அவர் தனது வருகையின் மையக்கருத்தைச் சொன்னார்.

    ‘‘தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்’’ என்று மீட்பின் செய்தியைச் சொன்னார் இயேசு.

    நிக்கதேம் குறித்த செய்திகளை யோவான் நற்செய்தியாளர் மட்டுமே தருகிறார். எனவே இந்த நிகழ்ச்சி யோவானின் வீட்டில் நடந்திருக்கலாம் என்பது விவிலிய அறிஞர்களின் கருத்து.

    இயேசுவைச் சந்திக்கும் முன் நிக்கதேம் அவரை ஒரு இறைவாக்கினர் என்றே கருதியிருந்தார். ஆனால் இயேசு வுடனான உரையாடல் அவருக்கு இயேசுவை மீட்பராக அடையாளம் காட்டியது.

    நாடெங்குமிருந்து தேர்வு செய்யப்பட்ட 70 பேரைக் கொண்ட ‘சனதரீம்’ எனும் அமைப்பின் உறுப்பினர் நிக்கதேம்.

    இயேசுவை கைது செய்ய வேண்டும் என பரிசேயர் கூட்டம் கர்ஜித்தபோது ‘ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?’ என தைரியமாக அவர்களிடம் எதிர்த்துப் பேசினார் நிக்கதேம். இயேசுவின் மரணத்தின் பிறகு அடக்க நிகழ்விலும் வெளிப்படையாகவே அதில் பங்குகொண்டார்.

    நிக்கதேம் துணிச்சல் மிக்கவர் என்பதையும், இயேசுவின் போதனைகளை உண்மையாகவே நேசித்தார் என்பதையும் இயேசு அறிந்திருந்தார். அதனால் தான் மற்ற பரிசேயர்களின் கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் இயேசு, நிக்கதேமின் சந்திப்பின் போது மிக முக்கியமான ‘‘மறு பிறப்பு’’ பற்றிய மறை உண்மைகளை விளக்கு கிறார்.

    நிக்கதேம் இயேசுவுக்கு ஆதரவாய் இருந்ததால் அவர் பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளானார். மிகப்பெரிய செல்வந்தராய் இருந்த அவருடைய பொருட்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. வறுமை உந்தித் தள்ள, அவரது மகள் குதிரைக்கு வைக்கும் உணவுகளில் சிந்தியவற்றை பொறுக்கி உண்டு வாழ்ந்து வந்தார். நிக்கதேம், பேதுரு யோவான் ஆகியோரிடம் திருமுழுக்கு பெற்று சாட்சியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து, எளிமையாக மரித்தார் போன்ற செய்திகளெல்லாம் ‘‘நிக்கதேம் நற்செய்தி’’ எனும் விவிலியத்தில் இடம் பெறாத தள்ளுபடி நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிக்கதேமின் வாழ்க்கை பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. அவற்றுள் முக்கியமானவை...

    1. அறியாமை இருளில் இருப்பவர்கள் ஆர்வத்தோடும், துணிச்சலோடும் இயேசுவிடம் வரும் போது வெளிச்சத்தின் விளக்கங்களைப் பெற்றுக் கொள்வார்கள்.

    2. உலகமே எதிர்த்து நின்றாலும், தனிநபராக இயேசு விடம் வருபவர்களை இயேசு அன்புடன் வரவேற்கிறார். அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்க்கை ரகசியங்களை விளக்குகிறார்.

    3. புறத்தூய்மை நீரால் அமையும், அகத் தூய்மை திரு முழுக்கினால் நிறைவேறும் என்பதே இயேசு சொல்லும் இரட்டை தூய்மையாதல்.

    4. இயேசுவின் போதனைகளை உலக அனுபவங்களைக் கொண்டு புரிய முயல்வது அறிவீனம்.

    5. தன்னை நம்பும் எவரும் அழியாமல் காப்பதற்காகவே இயேசு சிலுவையில் உயிர் விட்டார்.

    6. நிக்கதேம் மிகுந்த செல்வந்தராய் இருந்தார். அவருடைய சுயநல சிந்தனைகளை இயேசு விடுவித்திருந்தார்.

    7. சமய ஞானம் அதிகம் கொண்டவராய் இருந்த நிக்கதேம் தன்னைத் தாழ்த்திக் கொண்டு இயேசுவிடம் போதனை பெற வந்தார்.

    8. நிக்கதேமின் கேள்விகள் விமர்சன நோக்கில் இல்லாமல், ஆன்மிக வளர்ச்சிக்காகவே கேட்கப்பட்டன.

    9. உண்மையான போதனையைக் கேட்டதும், தனது பழைய மரபுகளை விட்டு விட நிக்கதேம் தயங்கவில்லை.

    10. அச்சம், தயக்கம், சூழ்நிலை அழுத்தம் என பல இடர் களுக்கு மத்தியிலும் இதயத்தில் கொழுந்துவிட்டெரியும் ஆன்மிக தாகம் கொண்டிருந்தார்.
    ×